நாகர்கோவில் படுகொலை

1995-09-22 அன்று 39 பள்ளிச்சிறார்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

கேரளா உணவு வகைகள்

1 month 3 weeks ago
பாரம்பரிய கேரள மீன் குழம்பு / Traditional Kerala Fish Curry தேவையான பொருட்கள்: மீன் – அரைக்கிலோ தேங்காய் எண்ணெய் – 2 – 3 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 இஞ்சி துருவல் அல்லது இடித்தது – 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 12 நறுக்கியது தக்காளி நறுக்கியது – 1 குடம்புளி ஊறவைத்தது – 2 அல்லது சாதாரண புளி – எலுமிச்சையளவு மிளகாய்த்தூள் – 1 1/2 – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் ஒரு கப் அரைக்கவும் அல்லது தேங்காய்ப்பால் –ஒரு கப் உப்பு – தேவைக்கு கருவேப்பிலை – 2 இணுக்கு. செய்முறை: முதலில் மண் சட்டியில் தேங்காய் எண்ணை காயவைத்து வெந்தயம் சேர்த்து சிவந்ததும் இஞ்சி சேர்த்து பிறகு வெங்காயம், பச்சை மிள்காய் சேர்த்து சிவக்க வறுத்து அதில் தக்காளி சேர்க்கவும். மேலும் 3 நிமிடம் வதக்கி மஞ்சள்,மிளகாய் தூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கியதும்,தேவைக்கு புளி தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவைக்கு, தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதி வந்ததும் மீனை சேர்க்கணும். பிறகு மூடி போட்டு தீயை குறைத்து ஐந்தே நிமிடம் தான் கடைசியாக தீயை அணைத்து விட்டு கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமா சேர்க்கணும். மூடி வைக்கவும்.எண்ணெய் எல்லாம் மேலே வந்து விடும். இது சுலபமான பாரம்பரிய கேரளா மீன் குழம்பு.சுவை அருமையா இருக்கும். காலையில் செய்து வைத்து விட்டால் மதியத்துக்குள் புளி இறங்கிடும் பின் புளியை தூக்கி போட்டுடலாம்.கொடம்புளி இல்லையென்றால் தேவைக்கு சாதாப்புளியும் கரைத்து செய்யலாம். http://asiyaomar.blogspot.com

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன….

1 month 3 weeks ago
கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன…. வடமாகாண சபை கலைக்கப்பட்ட பின் இந்த திட்டத்தை ஆளுநர் நிறைவேற்றி வைப்பார் – முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன்… தலைவர் அவர்களே, நீண்ட காலமாக எனக்குப் பரீட்சயமான சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி இந்திரா சமரசிங்க அவர்களே, எனது அன்பு மாணவர் திரு.இராஜகுலேந்திரன் அவர்களே, எனது மற்றொரு அன்பு மாணவன் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அவர்களே! சிரேஷ்ட பொருளாளர் பிரதி சட்டவரைஞர் திரு.செல்வகுணபாலன் அவர்களே, கௌரவ அதிதிகளே, விசேட அதிதிகளே, எனதருமை சட்ட மாணவ மாணவியரே! பல வருடங்களின் பின் சட்டக் கல்லூரி நிகழ்வொன்றில் பங்குபற்றுகின்றேன். உங்கள் நக்கீரம் இதழுக்கு வருடா வருடம் கட்டுரைகள் எழுதி அனுப்பிய காலம் இருந்தது. அரசியலுக்குள் நுழைந்ததும் என்னை அறிவுடையோர் பட்டியலில் இருந்து நீங்கள் அவிழ்த்து விட்டீர்களோ அல்லது நானாகவே கழன்று கொண்டேனோ நினைவில்லை! என்னுடைய முதல் ஐந்தாண்டு அரசியல் வாழ்க்கை முடியுந்தறுவாயில் என்னை நீங்கள் அழைத்ததில் இருந்து மீண்டும் என்னை அறிவுடையோர் பட்டியலுக்குள் ஏற்கச் சித்தமாய் இருக்கின்றீர்கள் என்பது புலனாகியுள்ளது. நான் சட்ட மாணவர் தலைவராக இருந்த வருடத்தில் தான் அதாவது 1963ல்த் தான் உங்கள் இந்து மகா சபை உதித்தது. சாவகச்சேரியில் பின்னர் சட்டத்தரணி தொழிலை பார்த்த ஏ.மயில்வானகம் என்ற அப்போதைய சட்ட மாணவரே உங்கள் முதல்த் தலைவராக இருந்தார். செயலாளராக இருந்தவர் தி.யோகநாதன் அவர்கள். நான் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் இருவரும் என் முன்னிலையில் வழக்குகளில் ஆஜராகி இருந்தனர். இப்பொழுது இருவருமே எம்முடன் இல்லை. அன்றைய காலத்தையும் உங்களையும் இணைக்கும் பாலமாக நான் என்னைக் காண்கின்றேன். இவ்வாறு இணைக்கும் காலகட்டத்தையே வரலாறு என்ற கண் கொண்டு பார்ப்பார்கள் அறிஞர்கள். சரித்திரம் என்ற பாடம் எமது மாணவ பருவத்தில் எமது பாட விதானத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாம் இலத்தீன் மொழி படித்தோம். சிலர் இலத்தீனையும் கிரேக்க மொழிகளையும் படித்தார்கள். சிலர் சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளைத் தத்தமது தாய் மொழிகளுடன் சேர்த்துக் கற்றார்கள். அம் மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் வரலாற்றையே முதன்மைப்படுத்தின. இவற்றைவிட புராதன இலங்கையின் வரலாறு, நவீன இலங்கையின் வரலாறு, ஐரோப்பிய வரலாறு என்று சரித்திரம் பல பாடங்களாகக் கற்பிக்கப்பட்டது. ஆனால் 1960களில் படிப்படியாக சரித்திரம் பற்றிய அறிவு குறையத் தொடங்கியது. அதற்குப் பதிலாக மாணவ மாணவியரிடையே விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவை முதன்மை பெறத் தொடங்கின. காரணம் சரித்திர அறிவு, மொழியறிவு போன்றவை விரைவானதும் வளமானதுமான வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர முடியாது போனமையே. வெள்ளையர் காலத்தில் மூன்று ‘R’ கள் பயிற்றப்பட்டன. வாசித்தல் (Reading), எழுதுதல் (Writing), மற்றும் எண்கணிதம் (Arithmetic) ஆகியனவே அவை. அந்தப் பாடங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலிகிதர்களாக வெள்ளையர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு வேலையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. காலம் போகப் போக மூன்று ‘சு’ கள் போதாமல் போயிற்று. வரலாறும் தேவையற்றதாகிவிட்டது. 1966ல் 17507 பேர் மேல் வகுப்புகளில் சரித்திரம் படித்திருந்தார்கள் எனின் 1990ல் 1981 பேரே சரித்திரம் படிக்க முன்வந்தார்கள். இப்பொழுது எத்தனை பேர் சரித்திரத்தை ஒரு பாடமாக மேல்படிப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று நான் அறியேன். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரையிலான கால சரித்திரத்தை எத்தனை பேர் அறிவார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி.அவற்றை ஏன் அறிய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். எமது பாரம்பரியம் பற்றி, வரலாறு பற்றி, சரித்திரம் பற்றி சரியாகவோ தவறாகவோ நாம் அறிந்திருக்கும் அறிவு தான் எம்மை மறைமுகமாக இன்றும் ஆட்டிப்படைக்கின்றன. அந்த அறிவு தவறுடையதாக இருந்தால் நாம் மற்றவர்களால் வழிநடத்தப்படுவோம். அத்துடன் மற்றவர்களின் சரித்திரம் குறைகள் உடையதாக இருந்தால் அவற்றின் குறைகளை மறைத்துத் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களை அவர்கள் பரப்பச் செய்ய எமது அசட்டையினம், அறிவின்மை உதவி புரிவன. இன்று அது தான் இந்த நாட்டில் நடைபெறுகின்றது. எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்துள்ளது.ஆகவே வரலாறு பற்றிய அறிவு எமது மாணவ மாணவியர்க்கு மிகவும் அவசியம் என்பதையே எடுத்துச் சொல்ல வருகின்றேன். அதைப் பாடமாகப் படிக்காவிடினும் உங்கள் பரந்த அறிவினுள் பகுதியாகவேனும் புகுத்தி வைத்தல் நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன். 1948 தொடக்கம் இன்று வரையில் 70 வருடங்களுக்கு இலங்கையில் நடைபெற்றவையும் வரலாறே. அது அரசியலாக இருக்கலாம்; சமூகவியலாக இருக்கலாம்; பொருளாதாரம் பற்றியதாக இருக்கலாம். இந்த காலகட்டத்தின் ஒரு பார்வையாளராக நான் இருந்துள்ளேன் என்பதையே பாலமென நான் முன்னர் குறிப்பிட்டேன். இந்த அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அண்மைக்கால சரித்திரத்தை உற்றுப் பார்க்கும் போது தமிழ் மக்கள் இன்று வரையில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள் என்பது புலப்படும். வெள்ளையர் காலத்தில் 1920 வரையில் இந் நாட்டின் அரசியல் அரங்கில் கொடிகட்டிப் பறந்த தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் இலங்கைக்கு மாறிய போது இருதரப்பாருக்கும் இடையேயான உடன்பாட்டில் பங்கு கொள்ளவில்லை. ஏற்கனவே சேர் பொன்னம்பலம் அருணாசலத்துடன் எழுத்து மூல உடன்படிக்கை வைத்திருந்துங் கூட பதவி தமது கைக்கு வந்ததும் எவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்தினர் அவரை ஏமாற்றினார்களோ அதே போல் சுதந்திரத்தின் போதும் நடந்தது. அதிகார மாற்றம் பிரித்தானிய குடியேற்ற நாட்டுக்கும் டி.எஸ்.சேனாநாயக தலைமையிலான உயர் குடி சிங்களக் குழுவொன்றின் இடையேயுந்தான் நடைபெற்றது. இருவரும் தமது நல உரித்துக்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். தமிழர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அங்கு தான் தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றியதான சிந்தனைகள் கைவிட்டுப் போயின. ஆனால் இந்த உடன்பாட்டின் அடிப்படையில்த் தான் சிங்கள மக்கள் அதிகாரத்தைத் தமது கைகளுக்கு முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்கள். ஆனால் வெள்ளையர் போனதும் நாங்கள் அதிகாரத்தைப் பகிர்வோம் என்று தமிழ்த் தலைவர்களிடம் கூறியே அதிகார மாற்றத்தைச் செயல்ப்படுத்தினார்கள். எனினும் அதிகாரம் கைக்கு வந்ததும் முற்றிலும் மாறினார்கள்; பெரும்பான்மையினத் தலைவர்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதே போல்த்தான் அண்மையில் தற்போதைய அரசாங்கமும் எமது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது. 2016ல் அரசியல்த் தீர்வொன்று வரும் என்று எண்ணிய நாம் 2018ல் கூட தீர்வை நோக்கிய வண்ணமே இருக்கின்றோம். கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! கயிறைக் கையில் எடுத்துக் காத்திருப்பவர்கள் தான் தமிழ்த் தலைவர்கள். கயிறைக் கொடுத்து மேலே உங்களை இழுத்துச் செல்வோம் என்பார்கள் கயிறு கொடுப்பவர்கள். கடைசியில் கயிறு மட்டுமே கைக்கு வரும். கை கொடுத்து மேல் எழுப்ப மாட்டார்கள். சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறுபான்மையினரிடம் டி.எஸ்.சேனாநாயக அவர்கள் கோரிய போது அவர் பின்வருமாறான ஒரு உறுதி மொழியை அளித்தார் – ‘இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பிலும் என் சொந்தச் சார்பிலும் சிறுபான்மையினருக்கு ஒரு உறுதி மொழி அளிக்கின்றேன். சுதந்திர இலங்கையில் எம் பொருட்டு எந்தவிதமான பாதிப்புக்கும் நீங்கள் முகம் கொடுக்க மாட்டீர்கள்’ என்றார். இலங்கைத் தமிழர்களிடம் அவர் தனித்துவமாகக் கேட்டார் ‘இலண்டனில் இருந்து நீங்கள் ஆளப்பட விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திர இலங்கையில் இலங்கையர் என்ற முறையில் எம்முடன் சேர்ந்து ஆள விரும்புகின்றீர்களா?’ என்று. ‘சுதந்திர’ இலங்கையின் முதல் பிரதம மந்திரியாக அதன் பின் பதவி ஏற்ற பின் உடனேயே அவர் செய்த முதற்காரியம் 10 இலட்சம் மலையக மக்களின் உரித்துக்களைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியமையே. பெரும்பான்மைத் தலைமைத்துவம் இன்று வரையில் என்னவாறு நடந்து கொண்டு வருகின்றது என்பது சரித்திரத்தின் மூலமே அறிகின்றோம். அதாவது சுதந்திர காலந்தொடக்கம் இன்று வரையிலான அண்மைய கால சரித்திரத்தின் வாயிலாக அறிகின்றோம். இவை பற்றித் தெரியாவிட்டால் மேலும் மேலும் நாம் ஏமாற்றப்படுவோம். 1975ம் ஆண்டில் அவர் இறக்க சில வருடங்களுக்கு முன் வால்டர் ஷ்வார்ட்ஸ் Walter Shwartz என்றவருக்கு காலஞ்சென்ற தந்தை செல்வா பின்வருமாறு கூறியிருந்தார். ‘நாங்கள் செய்த அடிப்படைத் தவறு பிரித்தானியர் எம்மை விட்டு ஏகும் போது அவர்களிடம் நாம் எமது சுதந்திரத்தைக் கோராமையே’ என்றார். அப்பொழுது நாம் எம்மை வடகிழக்காகப் பிரித்து சிந்திக்காமையே நாம் எமக்கு சுதந்திரம் கேட்காததன் காரணம். அப்போது தெற்கில் இருந்த சிங்களவர்களும் தமிழர்களும் மிக அன்னியோன்யமாகப் பழகி வந்தார்கள். 1926ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய S.W.R.D பண்டாரநாயக்க அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அதனை எதிர்த்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான். பண்டாரநாயக்க அவர்கள் தமிழரும் சிங்களவரும் தத்தமது இடங்களில் இருந்து வாழ்வதே உகந்தது என்று கண்டு சமஷ்டி முறையை முன் வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கண்டியச் சிங்களவரும் சமஷ்டி முறையையே நாடினார்கள். ஒரு வேளை தமிழ் மக்கள் வெள்ளையர் காலத்தில் அதிகம் சலுகை பெற்று தெற்கில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அவர்களை வடகிழக்கிற்கு அனுப்ப இவ்வாறான ஒரு கருத்தை திரு.பண்டாரநாயக்கா அவர்கள் முன்வைத்தாரோ நானறியேன். ஆனால் தமிழர்கள் அந்தக் காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் தமக்குக் கிடைத்திருந்த நற்சலுகைகளைக் கருத்தில் வைத்து அது தொடர்ந்து தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் சமஷ்டியை எதிர்த்திருக்கலாம். அப்போது ‘ஈழம்’ என்ற கருத்து தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கவில்லை. ஆனால் இன்று அதே பெரும்பான்மையினச் சமூகம் சமஷ்டி தர முடியாது என்று கூக்குரல் இடுகின்றார்கள். என்ன நடந்தது என்று பார்த்தோமானால் சுமார் 1920 வரையில் சிங்கள மக்கள் தம்மைத் தமிழ் அரசியல்த் தலைவர்கள் வழி நடத்திச் செல்வதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் முத்துக்குமாரசுவாமி போன்ற தலைவர்களை அதுவரையில் ஏற்றிருந்தார்கள். சிங்கள மக்கள் சார்பில் 1915ல் இலண்டன் போய் வந்த இராமநாதனை தேரில் வைத்துத் தாமே இழுத்துப் போனார்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள். ஆனால் 1920ல் சுயாட்சி தரப்போவதாக பிரித்தானியர் அறிவித்த பின்னர் சிங்களவர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதை எம்மவர் காலம் கடந்தே உணர்ந்து கொண்டார்கள். தமது ஆதிக்கம் இனி மும்முரமடைய வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பெரும்பான்மையின அரசியல் தலைவர்களால் காய்கள் நகர்த்தப்பட்டன. அப்பொழுதே இந்நாடு பௌத்த சிங்களவருடையது, மற்றவர்கள் எம்மை அண்டி வாழ வேண்டுமே ஒளிய எமது ஆதிக்கத்திற்கு அப்பால்பட்டு வாழ விடக் கூடாது என்ற எண்ணம் உதிக்கத் தொடங்கி விட்டது. அதனால்த்தான் 1930களிலேயே Pan Sinhala எனப்படும் சிங்களவர் மட்டும் அதிகாரம் பெற்ற அரசவை ஆக்கப்பட்டது. கௌரவ D.S. சேனாநாயக்கவிற்கு அதற்கான அடி எடுத்துக் கொடுத்தது கணிதப் பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் என்று கூறப்படுகிறது. அதே திரு.சி.சுந்தரலிங்கந் தான் ஈழம் கோரிய அடங்காத் தமிழன் என்று பின்னர் அழைக்கப்பட்டார். ஏமாற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றம் அது. முன்னர் சேர் பொன்னம்பலம் அருணாச்சலமும் ஏமாற்றப்பட்டதும் இலங்கைத் தமிழர் பேரவையை தொடக்கியிருந்தார். ஆகவே ஏமாற்றப்பட்ட பின்னர் எமக்கு ஏற்பட்ட பட்டறிவே எமது அரசியலை இன்று வரையில் நிர்ணயித்து வருகின்றது. நாமாக நிர்ணயித்த ஒரு நோக்கை இலக்கை அடைய நாம் முனையவில்லை. ஆனால் அவ்வாறான இலக்கையடைய ஆயுதங்கள் எடுக்கப்பட்டும் இன்று அவை மௌனிக்கப்பட்ட நிலையில் உள்ளன. நாம் தொடர்ந்து பட்டறிவின் பாற்பட்டே காய்களை நகர்த்தி வருகின்றோம். அன்று பெரும்பான்மையினத் தலைவர்களிடம் பறிகொடுத்த எமது அதிகாரங்களை இன்றுவரையில் நாங்கள் திரும்பப் பெறவில்லை. வெள்ளையர் இடம் இருந்து சுதந்திரம் பெற சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து நடவடிக்கையில் இறங்கியிருப்பினும் வெற்றிக் கம்பத்துக்குக் கிட்ட வருகையில் சிங்களத் தலைவர்கள் எம்மைத் தள்ளிவிட்டு முன்னேறியமையே சரித்திரம். அதன்பின் எம்மை வலுவிழக்கச் செய்ய சிங்களத் தலைவர்களால் நடாத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இங்கு விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். 1956ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டம், 1970 களில் கல்வியில் தரப்படுத்தல் முறை, வடகிழக்கு மாகாணங்களில் வலுவான சிங்களக் குடியேற்றம், பெருவாரியாகத் தமிழ் அரச அலுவலர்களை அரச சேவையை விட்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுத்தமை, வன்முறைக் கலாச்சரத்தை 1974ம் ஆண்டு அகில உலகத் தமிழ் மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த போது நடைமுறைப்படுத்தியது என்று பலதையுஞ் சொல்லலாம். அவற்றை விட 1958,1977, 1983ம் ஆண்டுகளிலும் இன்னும் சில வருடங்களிலும் தமிழருக்கு எதிராக நடந்த கலவரங்களையும் குறிப்பிடலாம். இன்னும் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் வகையில் நடைபெற்று வந்துள்ளன, வருகின்றன. அவற்றை மாற்றி ஒரு பகுத்தறிவுள்ள அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் ஒன்று கூடி சிந்திக்கவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தினர் கட்சி பேதமில்லாமல் தமது குறிக்கோளில் மிகத் திடமாக இருந்து வருகின்றார்கள். அடுத்து அவர்களின் நகர்வு எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கூட அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றோம் நாம். அவர்களோ படிப்படியாகத் தங்கள் குறிக்கோள்களில் முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். இதைக் கூறுவதால்த் தான் நான் என் கட்சியில் வேண்டாதவனாகப் பார்க்கப்படுகின்றேன். ஆனால் உண்மையை அலசிப் பாருங்கள். நீங்கள் சட்ட மாணவ மாணவியர். இது உங்களுக்கு விளங்க வேண்டும். ஆயுதமேந்திய எம் இளைஞர்களுக்குப் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டியதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி கண்டார்கள். பயங்கரவாதம் என்பதற்கும், சட்டப்படி வன் செயல்களாகக் கணிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று இன்னமும் சரியாக அர்த்தம் தரப்படவில்லை. பொதுவாக பயங்கரவாதம் என்பது நிதி, அரசியல், சமய காரணங்களுக்காக அல்லது வெறுமனே மக்கள் மனதில் பீதியைக் கிளப்ப வேண்டுமென்றே கண்மூடித்தனமாக வன்முறையைப் பாவிப்பதையே குறிக்கின்றது. 1981 தொடக்கம் 1989 வரையில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனல்ட் ரேகன் (Ronald Reagan) காலத்தில்த்தான் பயங்கரவாதம் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றது. அதன் பின்னர் 2001ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதம் 11ந் திகதிய இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்களின் பின்னர் குறித்த சொல் பலராலும் பாவிக்கப்பட்டது. தமக்கு வேண்டாதவர்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவது அரசியல்வாதிகளிடையே பிரசித்தி பெற்றது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சட்டம் வன்முறையில் ஈடுபடுபவரைத் தண்டிக்கின்றது. ஆனால் பயங்கரவாதம் என்றவுடன் தண்டனையானது தரம் கடந்துவிடுகிறது. அரசியல் வெறுப்பு, குரோதம் போன்றவை உட்புகுந்து மரண தண்டனையிலும் பார்க்கக் கொடிய தண்டனையை நிகழ்த்த அது பற்றிய சட்டங்கள் இடமளித்து நிற்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகள் கேட்டவன் என்ற முறையில் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டப்படுபவர்களுக்கு நடைபெற்றவற்றை நான் ஓரளவு அறிந்தவன். ஒழுக்க நடத்தைக்கு மாறானது பயங்கரவாதம் என்ற எண்ணம் உலாவிவர அதை மனதிற்கெடுத்து தமிழ் மக்களின் உரிமைகள் கேட்ட போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டி, இலங்கைத் தமிழர்களின் பறிக்கப்பட்ட உரிமை பற்றிப் பேசுபவர்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுத்து தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் எம் இனத்தவர்களை வேண்டாதவர்கள், வெறுப்பு மிக்கவர்கள், வன்முறையாளர்கள் என்று அடையாளம் காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளன. தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றிப் பேசினால் அவர் ஒரு பயங்கரவாதி என்று இன்றும் அடையாளப்படுத்தப்படுகின்றார். அல்லது எப்படி ஆயுதமேந்திய பிரபாகரனுடன் என்னை ஒப்பிட்டு என்னையும் பயங்கரவாதி என்கின்றார்கள்? இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் மற்றவருடன் தர்க்கிக்க முடியாவிட்டால் அவன் ஒரு பைத்தியம் என்பார்கள். அப்படித் தான் இந்தப் பயங்கரவாதி என்ற சொல். இப்போ அது ஒரு இழிவான சொல்லாக மாறியுள்ளது. சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் ரீதியான கோரிக்கைகளை மழுங்கடிக்க இவ்வாறான வார்த்தைகளைப் பாவித்து இவை போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து அவற்றில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் முக்கியமாக போரானது இலங்கையில் முடிவுக்கு வந்த பின், தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் புறக்கணித்து வருவதையும் அரசியல் ரீதியாக அவர்களை அடக்கியாள எத்தனிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதைச் சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறவில்லை. ‘புலிகளின் போர் பயங்கரவாதத்தின் எதிரொலி என்றிருந்தோம். ஆனால் இப்பொழுது உண்மையை உணர்கின்றோம். தொடர்ந்து தமிழ் மக்களின் உரித்துக்களைப் புறக்கணித்ததன் காரணமாகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’ என்று கூறி அண்மைய வரலாற்றைப் படித்தறிந்து வருகின்றார்கள் சர்வதேசத்து மனித உரிமையாளர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அந்தப் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் ஓய்ந்த பின் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு இதுவரையில் அவை செய்யவில்லை. வெறும் கட்டுமாண புனரமைப்பையே அரசாங்கம் மனமுவந்து செய்து வருகின்றது என்ற உண்மையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. வரும் காலத்தில் இந்த செயற்பாடு உக்கிரமாகத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ஐ.நா.மனித உரிமை சபையில் ஒன்றிணைந்த பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்துவதிலிருந்து நழுவ எத்தனிப்பது இதுவரை காலமும் தமிழ்த் தலைவர்கள் தொடர் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் பற்றிக் கூறியதை ருசுப்படுத்துவதாக அமைகின்றது என்ற உண்மை வெளியாகி வருகின்றது. உலக அரங்கில் தொடர் இலங்கை அரசாங்கங்களின் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் ரீதியாக ஒருமித்த கோரிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து முன்வைக்காது காலந் தாழ்த்துவது எமக்குப் பாதகமாக அமையப் போகின்றது. நேற்றைய தினம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் பார்த்தேன். வடகிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்றிருந்தார். அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலு இழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்பதே. இந்த தொடர் குழப்பநிலையை எமக்கிடையே ஏற்படுத்துவதிலும் சிங்கள அரசியல்த் தலைவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். தனிப்பட்ட சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு நல்கி அவர்களைத் தம்பால் ஈர்க்க எத்தனித்து இதுவரையில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டியுள்ளது. இதனால்த்தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் தமது பகைமையுணர்வுகளை மூட்டை கட்டிவிட்டு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக ஒரு பொதுவான அரசியல் தீர்வைக் கோர வேண்டும் என்று கருத்து வெளியிட்டு வருகின்றோம். அந்தப் பொதுவான கோரிக்கை தான் சமஷ்டி அரசாங்கம் என்பது. சமஷ்டி என்றவுடன் அது பிரிவினை என்று சிங்கள மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் நிலை நாட்டியுள்ளார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய புரிந்துணர்வு சிங்களப் பொது மக்களைச் சென்றடையாமையே சமஷ்டியை தொடர்ந்து வரும் பெரும்பான்மை அரசாங்கங்கள் எதிர்ப்பதன் காரணம். தாம் சமஷ்டி பற்றிய உண்மையை மக்களுக்கு உணர்த்தினால் தம்மைத் துரோகிகள் என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்களோ என்று கவலைப்படுகின்றார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய பொய் கூறிய சிங்கள அரசியல்த் தலைவர்கள் அது பற்றிய உண்மையைக் கூறத் தயங்குகின்றார்கள். அதற்காகத் தான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்களத் தலைவர்களிடம் கோரி வருகின்றேன். சில காலத்திற்கு முன்னர் நடந்த ஒன்பது மாகாண முதலமைச்சர்கள் மகாநாட்டில் வடமத்திய மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் பின்வருமாறு ஜனாதிபதி சிறிசேனா அவர்கள் முன் எடுத்துரைத்தார். ‘எமக்கு நூறுவீதம் அதிகாரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்’ என்று அவர் கூறினார். முழுமையான அதிகாரப் பகிர்வு ஒரு சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ்த் தான் நடைமுறைப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவருக்கு வேண்டாதிருந்தது. சமஷ்டியின் உள்ளடக்கமும் உள்நோக்கமும் அவருக்கு எந்தவித இடர்பாட்டினையும் கொடுக்கவில்லை. சமஷ்டி பற்றி தமிழர்களிடையே இரு விதமான எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள். ஒருசாரார் சமஷ்டி கிடைக்காது; ஆகவே வேறேதேனும் பொறிமுறையை நாங்கள் மாற்றாக உருவாக்க முனைவோம் என்கின்றார்கள். இன்னொருசாரார் ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். இரண்டாம் பிரிவினுள் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்கள் பலர் இடம் பெறுகின்றார்கள். சமூகத்தின் உயர் மட்டச் சிங்களத், தமிழ், முஸ்லிம் தலைவர்களுடன் தாம் மிக நெருக்கமாகப் பழகிவருவதால் அவர்களைக் கொண்டு நாடு பூராகவும் எதனையுந் தாம் செய்விக்கலாம் என்ற ஒரு இறுமாப்பு அவர்களிடையே காணப்படுவதை நான் அவதானித்துள்ளேன். முக்கியமாகச் சில முறையற்ற செயல்த்திட்டங்களை இவ்வாறானவர்கள் மாகாணங்களுக்குக் கொண்டு வரும் போது மாகாண அரசாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால் ‘பார்த்தீர்களா? இந்தப் பல்லில்லாத 13வது திருத்தச் சட்டத்தின் கீழேயே இவ்வளவு பந்தா காட்டுகின்றார்கள் என்றால் உண்மையான சமஷ்டி கிடைத்தால் என்னவெல்லாம் இவர்கள் சொல்வார்கள்?’ என்று கூறி ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். அதிகமாக இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்களே. சமஷ்டி கிடைக்காது என்பதால் சமஷ்டியை வெறுப்பது எமது கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. ஆனால் அந்த வெறுப்பு சமஷ்டிக்கு எதிரானதல்ல. சமஷ்டியை ஆதரித்தவர்களுக்கு எதிரானது. தமிழர்களை வெறுத்தவர்கள் அவர்கள். தமிழர்கள் சமஷ்டி கேட்டதால் சமஷ்டியையும் வெறுத்தார்கள். சமஷ்டி என்பது ஒரு நாகரீக நவிலல் அல்ல. அது அத்தியாவசியமானது என்பதை இங்கு கூற விரும்புகின்றேன். வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மை மக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்து மொழியால், கலாசாரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறுபட்டவர்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின்படி ஒரு மனிதக்குழுமம் ஆவார்கள். அவர்களுக்கென்று ஒரு நீண்டசரித்திரம் உண்டு. வேடர்களுட் பட இவ்விரு மாகாண மக்களுமே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டில் வழக்குக்கு வரமுன் சிங்களம் பேசியோர் இருக்கவில்லை. ஆகவே வெள்ளையர்கள் நாட்டை 1833ம் ஆண்டில் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் போது இருதரப்பட்ட மக்களை அல்லது கண்டிய சிங்களவரையும் தனியாகச் சேர்த்தால் மூன்று விதமான மக்கள் குழுமங்களை இணைத்தார்கள். இன்று பெரும்பான்மையோர் அரசாங்கங்கள் கண்டிய சிங்களவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து சிங்கள மக்களை ஒன்றிணைத்துள்ளார்கள். அடுத்து வடகிழக்கைத் தம் வசமாக்க பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன? சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரளவிற்குப் பாதுகாக்கப்படும். இதனால்த்தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது. ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்திவிடும். ஆதிக்கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள். வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும். அன்றைய சிங்கள மக்கட் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கட் தலைவர்களும் கடைப் பிடித்து வருகின்றார்கள். ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பது. கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந் நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டும். இன்றைய தினம் எனக்கு மகிழ்வைத் தருகின்றது. எனது கருத்துக்களை வருங்காலத் தலைவர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் திருப்தி அடைந்து, அழைத்தமைக்கு நன்றி கூறி நான் என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன். நன்றி வணக்கம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம் இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் இந்து மகா சபை நக்கீரம் இதழ் வெளியீடு உள்ளடங்கலான கலை விழா 2018 29.07.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் கருத்தரங்க கூடத்தில் ‘அன்றும் இன்றும்’ எனும் பொருள் பற்றிய பிரதம அதிதியுரை குருர் ப்ரம்மா…. http://globaltamilnews.net/2018/89833/

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன….

1 month 3 weeks ago
கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன….

 

 

வடமாகாண சபை கலைக்கப்பட்ட பின் இந்த திட்டத்தை  ஆளுநர் நிறைவேற்றி வைப்பார் – முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன்…

 

 

vikki.png

தலைவர் அவர்களே, நீண்ட காலமாக எனக்குப் பரீட்சயமான சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி இந்திரா சமரசிங்க அவர்களே, எனது அன்பு மாணவர் திரு.இராஜகுலேந்திரன் அவர்களே, எனது மற்றொரு அன்பு மாணவன் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அவர்களே! சிரேஷ்ட பொருளாளர் பிரதி சட்டவரைஞர் திரு.செல்வகுணபாலன் அவர்களே, கௌரவ அதிதிகளே, விசேட அதிதிகளே, எனதருமை சட்ட மாணவ மாணவியரே!

பல வருடங்களின் பின் சட்டக் கல்லூரி நிகழ்வொன்றில் பங்குபற்றுகின்றேன். உங்கள் நக்கீரம் இதழுக்கு வருடா வருடம் கட்டுரைகள் எழுதி அனுப்பிய காலம் இருந்தது. அரசியலுக்குள் நுழைந்ததும் என்னை அறிவுடையோர் பட்டியலில் இருந்து நீங்கள் அவிழ்த்து விட்டீர்களோ அல்லது நானாகவே கழன்று கொண்டேனோ நினைவில்லை! என்னுடைய முதல் ஐந்தாண்டு அரசியல் வாழ்க்கை முடியுந்தறுவாயில் என்னை நீங்கள் அழைத்ததில் இருந்து மீண்டும் என்னை அறிவுடையோர் பட்டியலுக்குள் ஏற்கச் சித்தமாய் இருக்கின்றீர்கள் என்பது புலனாகியுள்ளது.

நான் சட்ட மாணவர் தலைவராக இருந்த வருடத்தில் தான் அதாவது 1963ல்த் தான் உங்கள் இந்து மகா சபை உதித்தது. சாவகச்சேரியில் பின்னர் சட்டத்தரணி தொழிலை பார்த்த ஏ.மயில்வானகம் என்ற அப்போதைய சட்ட மாணவரே உங்கள் முதல்த் தலைவராக இருந்தார். செயலாளராக இருந்தவர் தி.யோகநாதன் அவர்கள். நான் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் இருவரும் என் முன்னிலையில் வழக்குகளில் ஆஜராகி இருந்தனர். இப்பொழுது இருவருமே எம்முடன் இல்லை.

அன்றைய காலத்தையும் உங்களையும் இணைக்கும் பாலமாக நான் என்னைக் காண்கின்றேன். இவ்வாறு இணைக்கும் காலகட்டத்தையே வரலாறு என்ற கண் கொண்டு பார்ப்பார்கள் அறிஞர்கள். சரித்திரம் என்ற பாடம் எமது மாணவ பருவத்தில் எமது பாட விதானத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாம் இலத்தீன் மொழி படித்தோம். சிலர் இலத்தீனையும் கிரேக்க மொழிகளையும் படித்தார்கள். சிலர் சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளைத் தத்தமது தாய் மொழிகளுடன் சேர்த்துக் கற்றார்கள். அம் மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் வரலாற்றையே முதன்மைப்படுத்தின. இவற்றைவிட புராதன இலங்கையின் வரலாறு, நவீன இலங்கையின் வரலாறு, ஐரோப்பிய வரலாறு என்று சரித்திரம் பல பாடங்களாகக் கற்பிக்கப்பட்டது.

ஆனால் 1960களில் படிப்படியாக சரித்திரம் பற்றிய அறிவு குறையத் தொடங்கியது. அதற்குப் பதிலாக மாணவ மாணவியரிடையே விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவை முதன்மை பெறத் தொடங்கின. காரணம் சரித்திர அறிவு, மொழியறிவு போன்றவை விரைவானதும் வளமானதுமான வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர முடியாது போனமையே. வெள்ளையர் காலத்தில் மூன்று ‘R’ கள் பயிற்றப்பட்டன. வாசித்தல் (Reading), எழுதுதல் (Writing),  மற்றும் எண்கணிதம் (Arithmetic)  ஆகியனவே அவை. அந்தப் பாடங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலிகிதர்களாக வெள்ளையர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு வேலையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. காலம் போகப் போக மூன்று ‘சு’ கள் போதாமல் போயிற்று. வரலாறும் தேவையற்றதாகிவிட்டது. 1966ல் 17507 பேர் மேல் வகுப்புகளில் சரித்திரம் படித்திருந்தார்கள் எனின் 1990ல் 1981 பேரே சரித்திரம் படிக்க முன்வந்தார்கள்.

இப்பொழுது எத்தனை பேர் சரித்திரத்தை ஒரு பாடமாக மேல்படிப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று நான் அறியேன். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரையிலான கால சரித்திரத்தை எத்தனை பேர் அறிவார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி.அவற்றை ஏன் அறிய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். எமது பாரம்பரியம் பற்றி, வரலாறு பற்றி, சரித்திரம் பற்றி சரியாகவோ தவறாகவோ நாம் அறிந்திருக்கும் அறிவு தான் எம்மை மறைமுகமாக இன்றும் ஆட்டிப்படைக்கின்றன. அந்த அறிவு தவறுடையதாக இருந்தால் நாம் மற்றவர்களால் வழிநடத்தப்படுவோம். அத்துடன் மற்றவர்களின் சரித்திரம் குறைகள் உடையதாக இருந்தால் அவற்றின் குறைகளை மறைத்துத் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களை அவர்கள் பரப்பச் செய்ய எமது அசட்டையினம், அறிவின்மை உதவி புரிவன. இன்று அது தான் இந்த நாட்டில் நடைபெறுகின்றது. எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்துள்ளது.ஆகவே வரலாறு பற்றிய அறிவு எமது மாணவ மாணவியர்க்கு மிகவும் அவசியம் என்பதையே எடுத்துச் சொல்ல வருகின்றேன். அதைப் பாடமாகப் படிக்காவிடினும் உங்கள் பரந்த அறிவினுள் பகுதியாகவேனும் புகுத்தி வைத்தல் நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

1948 தொடக்கம் இன்று வரையில் 70 வருடங்களுக்கு இலங்கையில் நடைபெற்றவையும் வரலாறே. அது அரசியலாக இருக்கலாம்; சமூகவியலாக இருக்கலாம்; பொருளாதாரம் பற்றியதாக இருக்கலாம். இந்த காலகட்டத்தின் ஒரு பார்வையாளராக நான் இருந்துள்ளேன் என்பதையே பாலமென நான் முன்னர் குறிப்பிட்டேன். இந்த அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அண்மைக்கால சரித்திரத்தை உற்றுப் பார்க்கும் போது தமிழ் மக்கள் இன்று வரையில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள் என்பது புலப்படும்.

வெள்ளையர் காலத்தில் 1920 வரையில் இந் நாட்டின் அரசியல் அரங்கில் கொடிகட்டிப் பறந்த தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் இலங்கைக்கு மாறிய போது இருதரப்பாருக்கும் இடையேயான உடன்பாட்டில் பங்கு கொள்ளவில்லை. ஏற்கனவே சேர் பொன்னம்பலம் அருணாசலத்துடன் எழுத்து மூல உடன்படிக்கை வைத்திருந்துங் கூட பதவி தமது கைக்கு வந்ததும் எவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்தினர் அவரை ஏமாற்றினார்களோ அதே போல் சுதந்திரத்தின் போதும் நடந்தது. அதிகார மாற்றம் பிரித்தானிய குடியேற்ற நாட்டுக்கும் டி.எஸ்.சேனாநாயக தலைமையிலான உயர் குடி சிங்களக் குழுவொன்றின் இடையேயுந்தான் நடைபெற்றது. இருவரும் தமது நல உரித்துக்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். தமிழர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அங்கு தான் தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றியதான சிந்தனைகள் கைவிட்டுப் போயின. ஆனால் இந்த உடன்பாட்டின் அடிப்படையில்த் தான் சிங்கள மக்கள் அதிகாரத்தைத் தமது கைகளுக்கு முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்கள். ஆனால் வெள்ளையர் போனதும் நாங்கள் அதிகாரத்தைப் பகிர்வோம் என்று தமிழ்த் தலைவர்களிடம் கூறியே அதிகார மாற்றத்தைச் செயல்ப்படுத்தினார்கள். எனினும் அதிகாரம் கைக்கு வந்ததும் முற்றிலும் மாறினார்கள்; பெரும்பான்மையினத் தலைவர்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதே போல்த்தான் அண்மையில் தற்போதைய அரசாங்கமும் எமது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது. 2016ல் அரசியல்த் தீர்வொன்று வரும் என்று எண்ணிய நாம் 2018ல் கூட தீர்வை நோக்கிய வண்ணமே இருக்கின்றோம். கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! கயிறைக் கையில் எடுத்துக் காத்திருப்பவர்கள் தான் தமிழ்த் தலைவர்கள். கயிறைக் கொடுத்து மேலே உங்களை இழுத்துச் செல்வோம் என்பார்கள் கயிறு கொடுப்பவர்கள். கடைசியில் கயிறு மட்டுமே கைக்கு வரும். கை கொடுத்து மேல் எழுப்ப மாட்டார்கள். சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறுபான்மையினரிடம் டி.எஸ்.சேனாநாயக அவர்கள் கோரிய போது அவர் பின்வருமாறான ஒரு உறுதி மொழியை அளித்தார் – ‘இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பிலும் என் சொந்தச் சார்பிலும் சிறுபான்மையினருக்கு ஒரு உறுதி மொழி அளிக்கின்றேன். சுதந்திர இலங்கையில் எம் பொருட்டு எந்தவிதமான பாதிப்புக்கும் நீங்கள் முகம் கொடுக்க மாட்டீர்கள்’ என்றார்.

இலங்கைத் தமிழர்களிடம் அவர் தனித்துவமாகக் கேட்டார் ‘இலண்டனில் இருந்து நீங்கள் ஆளப்பட விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திர இலங்கையில் இலங்கையர் என்ற முறையில் எம்முடன் சேர்ந்து ஆள விரும்புகின்றீர்களா?’ என்று. ‘சுதந்திர’ இலங்கையின் முதல் பிரதம மந்திரியாக அதன் பின் பதவி ஏற்ற பின் உடனேயே அவர் செய்த முதற்காரியம் 10 இலட்சம் மலையக மக்களின் உரித்துக்களைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியமையே.

பெரும்பான்மைத் தலைமைத்துவம் இன்று வரையில் என்னவாறு நடந்து கொண்டு வருகின்றது என்பது சரித்திரத்தின் மூலமே அறிகின்றோம். அதாவது சுதந்திர காலந்தொடக்கம் இன்று வரையிலான அண்மைய கால சரித்திரத்தின் வாயிலாக அறிகின்றோம். இவை பற்றித் தெரியாவிட்டால் மேலும் மேலும் நாம் ஏமாற்றப்படுவோம். 1975ம் ஆண்டில் அவர் இறக்க சில வருடங்களுக்கு முன் வால்டர் ஷ்வார்ட்ஸ் Walter Shwartz  என்றவருக்கு காலஞ்சென்ற தந்தை செல்வா பின்வருமாறு கூறியிருந்தார். ‘நாங்கள் செய்த அடிப்படைத் தவறு பிரித்தானியர் எம்மை விட்டு ஏகும் போது அவர்களிடம் நாம் எமது சுதந்திரத்தைக் கோராமையே’ என்றார். அப்பொழுது நாம் எம்மை வடகிழக்காகப் பிரித்து சிந்திக்காமையே நாம் எமக்கு சுதந்திரம் கேட்காததன் காரணம். அப்போது தெற்கில் இருந்த சிங்களவர்களும் தமிழர்களும் மிக அன்னியோன்யமாகப் பழகி வந்தார்கள்.

1926ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய S.W.R.D பண்டாரநாயக்க அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அதனை எதிர்த்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான். பண்டாரநாயக்க அவர்கள் தமிழரும் சிங்களவரும் தத்தமது இடங்களில் இருந்து வாழ்வதே உகந்தது என்று கண்டு சமஷ்டி முறையை முன் வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கண்டியச் சிங்களவரும் சமஷ்டி முறையையே நாடினார்கள்.

ஒரு வேளை தமிழ் மக்கள் வெள்ளையர் காலத்தில் அதிகம் சலுகை பெற்று தெற்கில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அவர்களை வடகிழக்கிற்கு அனுப்ப இவ்வாறான ஒரு கருத்தை திரு.பண்டாரநாயக்கா அவர்கள் முன்வைத்தாரோ நானறியேன். ஆனால் தமிழர்கள் அந்தக் காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் தமக்குக் கிடைத்திருந்த நற்சலுகைகளைக் கருத்தில் வைத்து அது தொடர்ந்து தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் சமஷ்டியை எதிர்த்திருக்கலாம். அப்போது ‘ஈழம்’ என்ற கருத்து தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கவில்லை. ஆனால் இன்று அதே பெரும்பான்மையினச் சமூகம் சமஷ்டி தர முடியாது என்று கூக்குரல் இடுகின்றார்கள்.

என்ன நடந்தது என்று பார்த்தோமானால் சுமார் 1920 வரையில் சிங்கள மக்கள் தம்மைத் தமிழ் அரசியல்த் தலைவர்கள் வழி நடத்திச் செல்வதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் முத்துக்குமாரசுவாமி போன்ற தலைவர்களை அதுவரையில் ஏற்றிருந்தார்கள். சிங்கள மக்கள் சார்பில் 1915ல் இலண்டன் போய் வந்த இராமநாதனை தேரில் வைத்துத் தாமே இழுத்துப் போனார்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள். ஆனால் 1920ல் சுயாட்சி தரப்போவதாக பிரித்தானியர் அறிவித்த பின்னர் சிங்களவர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதை எம்மவர் காலம் கடந்தே உணர்ந்து கொண்டார்கள். தமது ஆதிக்கம் இனி மும்முரமடைய வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பெரும்பான்மையின அரசியல் தலைவர்களால் காய்கள் நகர்த்தப்பட்டன. அப்பொழுதே இந்நாடு பௌத்த சிங்களவருடையது, மற்றவர்கள் எம்மை அண்டி வாழ வேண்டுமே ஒளிய எமது ஆதிக்கத்திற்கு அப்பால்பட்டு வாழ விடக் கூடாது என்ற எண்ணம் உதிக்கத் தொடங்கி விட்டது. அதனால்த்தான் 1930களிலேயே Pan Sinhala எனப்படும் சிங்களவர் மட்டும் அதிகாரம் பெற்ற அரசவை ஆக்கப்பட்டது.

கௌரவ D.S. சேனாநாயக்கவிற்கு அதற்கான அடி எடுத்துக் கொடுத்தது கணிதப் பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் என்று கூறப்படுகிறது. அதே திரு.சி.சுந்தரலிங்கந் தான் ஈழம் கோரிய அடங்காத் தமிழன் என்று பின்னர் அழைக்கப்பட்டார். ஏமாற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றம் அது. முன்னர் சேர் பொன்னம்பலம் அருணாச்சலமும் ஏமாற்றப்பட்டதும் இலங்கைத் தமிழர் பேரவையை தொடக்கியிருந்தார். ஆகவே ஏமாற்றப்பட்ட பின்னர் எமக்கு ஏற்பட்ட பட்டறிவே எமது அரசியலை இன்று வரையில் நிர்ணயித்து வருகின்றது. நாமாக நிர்ணயித்த ஒரு நோக்கை இலக்கை அடைய நாம் முனையவில்லை. ஆனால் அவ்வாறான இலக்கையடைய ஆயுதங்கள் எடுக்கப்பட்டும் இன்று அவை மௌனிக்கப்பட்ட நிலையில் உள்ளன. நாம் தொடர்ந்து பட்டறிவின் பாற்பட்டே காய்களை நகர்த்தி வருகின்றோம்.

அன்று பெரும்பான்மையினத் தலைவர்களிடம் பறிகொடுத்த எமது அதிகாரங்களை இன்றுவரையில் நாங்கள் திரும்பப் பெறவில்லை. வெள்ளையர் இடம் இருந்து சுதந்திரம் பெற சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து நடவடிக்கையில் இறங்கியிருப்பினும் வெற்றிக் கம்பத்துக்குக் கிட்ட வருகையில் சிங்களத் தலைவர்கள் எம்மைத் தள்ளிவிட்டு முன்னேறியமையே சரித்திரம். அதன்பின் எம்மை வலுவிழக்கச் செய்ய சிங்களத் தலைவர்களால் நடாத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இங்கு விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். 1956ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டம், 1970 களில் கல்வியில் தரப்படுத்தல் முறை, வடகிழக்கு மாகாணங்களில் வலுவான சிங்களக் குடியேற்றம், பெருவாரியாகத் தமிழ் அரச அலுவலர்களை அரச சேவையை விட்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுத்தமை, வன்முறைக் கலாச்சரத்தை 1974ம் ஆண்டு அகில உலகத் தமிழ் மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த போது நடைமுறைப்படுத்தியது என்று பலதையுஞ் சொல்லலாம். அவற்றை விட 1958,1977, 1983ம் ஆண்டுகளிலும் இன்னும் சில வருடங்களிலும் தமிழருக்கு எதிராக நடந்த கலவரங்களையும் குறிப்பிடலாம். இன்னும் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் வகையில் நடைபெற்று வந்துள்ளன, வருகின்றன. அவற்றை மாற்றி ஒரு பகுத்தறிவுள்ள அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் ஒன்று கூடி சிந்திக்கவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தினர் கட்சி பேதமில்லாமல் தமது குறிக்கோளில் மிகத் திடமாக இருந்து வருகின்றார்கள். அடுத்து அவர்களின் நகர்வு எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கூட அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றோம் நாம். அவர்களோ படிப்படியாகத் தங்கள் குறிக்கோள்களில் முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். இதைக் கூறுவதால்த் தான் நான் என் கட்சியில் வேண்டாதவனாகப் பார்க்கப்படுகின்றேன். ஆனால் உண்மையை அலசிப் பாருங்கள். நீங்கள் சட்ட மாணவ மாணவியர். இது உங்களுக்கு விளங்க வேண்டும்.

ஆயுதமேந்திய எம் இளைஞர்களுக்குப் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டியதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி கண்டார்கள். பயங்கரவாதம் என்பதற்கும், சட்டப்படி வன் செயல்களாகக் கணிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று இன்னமும் சரியாக அர்த்தம் தரப்படவில்லை. பொதுவாக பயங்கரவாதம் என்பது நிதி, அரசியல், சமய காரணங்களுக்காக அல்லது வெறுமனே மக்கள் மனதில் பீதியைக் கிளப்ப வேண்டுமென்றே கண்மூடித்தனமாக வன்முறையைப் பாவிப்பதையே குறிக்கின்றது. 1981 தொடக்கம் 1989 வரையில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனல்ட் ரேகன் (Ronald Reagan)  காலத்தில்த்தான் பயங்கரவாதம் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றது. அதன் பின்னர் 2001ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதம் 11ந் திகதிய இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்களின் பின்னர் குறித்த சொல் பலராலும் பாவிக்கப்பட்டது. தமக்கு வேண்டாதவர்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவது அரசியல்வாதிகளிடையே பிரசித்தி பெற்றது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சட்டம் வன்முறையில் ஈடுபடுபவரைத் தண்டிக்கின்றது. ஆனால் பயங்கரவாதம் என்றவுடன் தண்டனையானது தரம் கடந்துவிடுகிறது. அரசியல் வெறுப்பு, குரோதம் போன்றவை உட்புகுந்து மரண தண்டனையிலும் பார்க்கக் கொடிய தண்டனையை நிகழ்த்த அது பற்றிய சட்டங்கள் இடமளித்து நிற்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகள் கேட்டவன் என்ற முறையில் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டப்படுபவர்களுக்கு நடைபெற்றவற்றை நான் ஓரளவு அறிந்தவன். ஒழுக்க நடத்தைக்கு மாறானது பயங்கரவாதம் என்ற எண்ணம் உலாவிவர அதை மனதிற்கெடுத்து தமிழ் மக்களின் உரிமைகள் கேட்ட போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டி, இலங்கைத் தமிழர்களின் பறிக்கப்பட்ட உரிமை பற்றிப் பேசுபவர்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுத்து தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் எம் இனத்தவர்களை வேண்டாதவர்கள், வெறுப்பு மிக்கவர்கள், வன்முறையாளர்கள் என்று அடையாளம் காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளன.

தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றிப் பேசினால் அவர் ஒரு பயங்கரவாதி என்று இன்றும் அடையாளப்படுத்தப்படுகின்றார். அல்லது எப்படி ஆயுதமேந்திய பிரபாகரனுடன் என்னை ஒப்பிட்டு என்னையும் பயங்கரவாதி என்கின்றார்கள்? இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் மற்றவருடன் தர்க்கிக்க முடியாவிட்டால் அவன் ஒரு பைத்தியம் என்பார்கள். அப்படித் தான் இந்தப் பயங்கரவாதி என்ற சொல். இப்போ அது ஒரு இழிவான சொல்லாக மாறியுள்ளது. சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் ரீதியான கோரிக்கைகளை மழுங்கடிக்க இவ்வாறான வார்த்தைகளைப் பாவித்து இவை போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து அவற்றில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.

ஆனால் அண்மைக் காலங்களில் முக்கியமாக போரானது இலங்கையில் முடிவுக்கு வந்த பின், தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் புறக்கணித்து வருவதையும் அரசியல் ரீதியாக அவர்களை அடக்கியாள எத்தனிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதைச் சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறவில்லை. ‘புலிகளின் போர் பயங்கரவாதத்தின் எதிரொலி என்றிருந்தோம். ஆனால் இப்பொழுது உண்மையை உணர்கின்றோம். தொடர்ந்து தமிழ் மக்களின் உரித்துக்களைப் புறக்கணித்ததன் காரணமாகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’ என்று கூறி அண்மைய வரலாற்றைப் படித்தறிந்து வருகின்றார்கள் சர்வதேசத்து மனித உரிமையாளர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அந்தப் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் ஓய்ந்த பின் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு இதுவரையில் அவை செய்யவில்லை. வெறும் கட்டுமாண புனரமைப்பையே அரசாங்கம் மனமுவந்து செய்து வருகின்றது என்ற உண்மையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது.

வரும் காலத்தில் இந்த செயற்பாடு உக்கிரமாகத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ஐ.நா.மனித உரிமை சபையில் ஒன்றிணைந்த பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்துவதிலிருந்து நழுவ எத்தனிப்பது இதுவரை காலமும் தமிழ்த் தலைவர்கள் தொடர் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் பற்றிக் கூறியதை ருசுப்படுத்துவதாக அமைகின்றது என்ற உண்மை வெளியாகி வருகின்றது. உலக அரங்கில் தொடர் இலங்கை அரசாங்கங்களின் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் ரீதியாக ஒருமித்த கோரிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து முன்வைக்காது காலந் தாழ்த்துவது எமக்குப் பாதகமாக அமையப் போகின்றது.

நேற்றைய தினம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் பார்த்தேன். வடகிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்றிருந்தார். அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலு இழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்பதே.

இந்த தொடர் குழப்பநிலையை எமக்கிடையே ஏற்படுத்துவதிலும் சிங்கள அரசியல்த் தலைவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். தனிப்பட்ட சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு நல்கி அவர்களைத் தம்பால் ஈர்க்க எத்தனித்து இதுவரையில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டியுள்ளது. இதனால்த்தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் தமது பகைமையுணர்வுகளை மூட்டை கட்டிவிட்டு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக ஒரு பொதுவான அரசியல் தீர்வைக் கோர வேண்டும் என்று கருத்து வெளியிட்டு வருகின்றோம். அந்தப் பொதுவான கோரிக்கை தான் சமஷ்டி அரசாங்கம் என்பது.

சமஷ்டி என்றவுடன் அது பிரிவினை என்று சிங்கள மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் நிலை நாட்டியுள்ளார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய புரிந்துணர்வு சிங்களப் பொது மக்களைச் சென்றடையாமையே சமஷ்டியை தொடர்ந்து வரும் பெரும்பான்மை அரசாங்கங்கள் எதிர்ப்பதன் காரணம். தாம் சமஷ்டி பற்றிய உண்மையை மக்களுக்கு உணர்த்தினால் தம்மைத் துரோகிகள் என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்களோ என்று கவலைப்படுகின்றார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய பொய் கூறிய சிங்கள அரசியல்த் தலைவர்கள் அது பற்றிய உண்மையைக் கூறத் தயங்குகின்றார்கள். அதற்காகத் தான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்களத் தலைவர்களிடம் கோரி வருகின்றேன். சில காலத்திற்கு முன்னர் நடந்த ஒன்பது மாகாண முதலமைச்சர்கள் மகாநாட்டில் வடமத்திய மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் பின்வருமாறு ஜனாதிபதி சிறிசேனா அவர்கள் முன் எடுத்துரைத்தார். ‘எமக்கு நூறுவீதம் அதிகாரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்’ என்று அவர் கூறினார். முழுமையான அதிகாரப் பகிர்வு ஒரு சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ்த் தான் நடைமுறைப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவருக்கு வேண்டாதிருந்தது. சமஷ்டியின் உள்ளடக்கமும் உள்நோக்கமும் அவருக்கு எந்தவித இடர்பாட்டினையும் கொடுக்கவில்லை.

சமஷ்டி பற்றி தமிழர்களிடையே இரு விதமான எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள். ஒருசாரார் சமஷ்டி கிடைக்காது; ஆகவே வேறேதேனும் பொறிமுறையை நாங்கள் மாற்றாக உருவாக்க முனைவோம் என்கின்றார்கள். இன்னொருசாரார் ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். இரண்டாம் பிரிவினுள் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்கள் பலர் இடம் பெறுகின்றார்கள். சமூகத்தின் உயர் மட்டச் சிங்களத், தமிழ், முஸ்லிம் தலைவர்களுடன் தாம் மிக நெருக்கமாகப் பழகிவருவதால் அவர்களைக் கொண்டு நாடு பூராகவும் எதனையுந் தாம் செய்விக்கலாம் என்ற ஒரு இறுமாப்பு அவர்களிடையே காணப்படுவதை நான் அவதானித்துள்ளேன். முக்கியமாகச் சில முறையற்ற செயல்த்திட்டங்களை இவ்வாறானவர்கள் மாகாணங்களுக்குக் கொண்டு வரும் போது மாகாண அரசாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால் ‘பார்த்தீர்களா? இந்தப் பல்லில்லாத 13வது திருத்தச் சட்டத்தின் கீழேயே இவ்வளவு பந்தா காட்டுகின்றார்கள் என்றால் உண்மையான சமஷ்டி கிடைத்தால் என்னவெல்லாம் இவர்கள் சொல்வார்கள்?’ என்று கூறி ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். அதிகமாக இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்களே.

சமஷ்டி கிடைக்காது என்பதால் சமஷ்டியை வெறுப்பது எமது கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. ஆனால் அந்த வெறுப்பு சமஷ்டிக்கு எதிரானதல்ல. சமஷ்டியை ஆதரித்தவர்களுக்கு எதிரானது. தமிழர்களை வெறுத்தவர்கள் அவர்கள். தமிழர்கள் சமஷ்டி கேட்டதால் சமஷ்டியையும் வெறுத்தார்கள். சமஷ்டி என்பது ஒரு நாகரீக நவிலல் அல்ல. அது அத்தியாவசியமானது என்பதை இங்கு கூற விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மை மக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்து மொழியால், கலாசாரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறுபட்டவர்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின்படி ஒரு மனிதக்குழுமம் ஆவார்கள். அவர்களுக்கென்று ஒரு நீண்டசரித்திரம் உண்டு. வேடர்களுட் பட இவ்விரு மாகாண மக்களுமே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டில் வழக்குக்கு வரமுன் சிங்களம் பேசியோர் இருக்கவில்லை. ஆகவே வெள்ளையர்கள் நாட்டை 1833ம் ஆண்டில் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் போது இருதரப்பட்ட மக்களை அல்லது கண்டிய சிங்களவரையும் தனியாகச் சேர்த்தால் மூன்று விதமான மக்கள் குழுமங்களை இணைத்தார்கள். இன்று பெரும்பான்மையோர் அரசாங்கங்கள் கண்டிய சிங்களவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து சிங்கள மக்களை ஒன்றிணைத்துள்ளார்கள். அடுத்து வடகிழக்கைத் தம் வசமாக்க பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன? சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரளவிற்குப் பாதுகாக்கப்படும். இதனால்த்தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது. ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்திவிடும். ஆதிக்கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள். வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.
அன்றைய சிங்கள மக்கட் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கட் தலைவர்களும் கடைப் பிடித்து வருகின்றார்கள். ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பிருக்கின்றது.

ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பது. கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகின்றது.
ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.

சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந் நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டும். இன்றைய தினம் எனக்கு மகிழ்வைத் தருகின்றது. எனது கருத்துக்களை வருங்காலத் தலைவர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் திருப்தி அடைந்து, அழைத்தமைக்கு நன்றி கூறி நான் என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

இலங்கை சட்டக் கல்லூரி
சட்ட மாணவர் இந்து மகா சபை
நக்கீரம் இதழ் வெளியீடு
உள்ளடங்கலான கலை விழா 2018
29.07.2018 அன்று காலை 9.30 மணிக்கு
வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் கருத்தரங்க கூடத்தில்
‘அன்றும் இன்றும்’
எனும் பொருள் பற்றிய
பிரதம அதிதியுரை
குருர் ப்ரம்மா….

http://globaltamilnews.net/2018/89833/

ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!

1 month 3 weeks ago
தீர்க்க தரிசனம்!... ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-18: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் வரும் பாடலுக்காக நான் சென்சார் அதிகாரியைப் பார்த்துக் கேட்டதற்குக் காரணம் ஒன்றுண்டு. "நமது கொடி' என்ற வார்த்தையை சென்சார் வெட்டிவிட்டால் என்ன செய்வது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னபோது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். "எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்கு வாலி எழுதிய ஒரு பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டாமலே ஒலிப்பதிவு செய்து விட்டார்களாம். இருந்தாலும் படமாக்கப்படுவதற்கு முன்பு சென்சார் அதிகாரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டார்களாம் கம்பெனியின் பொறுப்பாளர்கள். தயாரிப்பாளர் நாகிரெட்டி, அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் உடன் இருந்திருக்கிறார்கள். நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் - இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் இதுதான் வாலி அந்தக் காட்சிக்கு எழுதிய பல்லவி, அதை சென்சார் அதிகாரி மாற்றச் சொல்லிவிட்டார். அதன் பின் நாகிரெட்டி அவர்கள் வாலியை அழைத்து வேறு பல்லவி எழுதச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அதன்பிறகு எழுதுகிறேன் என்று எம்.ஜி.ஆரைச் சந்தித்து நிகழ்ந்ததைச் சொல்லியிருக்கிறார் வாலி. ""இது ரொம்ப அக்கிரமம்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். ""ஆம் அண்ணா. நம்ம படம் என்றால் சென்சார் ரொம்ப அக்கிரமம்தான் செய்கிறார்கள்'' என்று வாலி சொல்ல, ""நான் சென்சாரைச் சொல்லவில்லை வாலி, நீங்கள் எழுதிய வரிகளைத்தான் அக்கிரமம் என்கிறேன்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டு அவரே விளக்கியிருக்கிறார். "மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. "நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்' என்று நான் பாடினால் இருக்கின்ற இந்த ஆட்சியில் ஏழைகள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் வரும்? இதை எப்படி சென்சார் அனுமதிப்பார்கள்? ஏன் இந்தப் பாடலை என்னிடம் காட்டவில்லை''யென்று கோபப்பட்டிருக்கிறார். அதன் பிறகு மாற்றி எழுதப்பட்ட பாடல் தான்... நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்ற பாடல். இதை விளக்கமாக எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்ன காரணத்தால் தான் பாடல் ஒலிப்பதிவிற்கு முன்பே நாமும் நாம் எழுதிய பாடலை சென்சார் அதிகாரியிடம் காட்டி சம்மதம் பெற்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அப்போது சென்சார் அதிகாரியாக இருந்த ராகவனிடம் காட்டி ஒப்புதல் பெற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் "துக்ளக்' பத்திரிகையில் "எனக்குள் எம்.ஜி.ஆர்.' என்று வாலி எழுதிய கட்டுரையிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அது புத்தகமாகவும் வந்திருக்கிறது. என்னுடைய இந்தப் பாடல் ஈழத்தமிழர்கள் மிகவும் விரும்பும் பாடல். அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியை உண்டாக்கிய பாடல் என்று கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக கனடா நாட்டு வானொலியில் பணியாற்றும் ஒரு நண்பர் அடிக்கடி இதைக் கூறுவார். பாடல் இதுதான். தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்... ஒற்றுமையால் பகைவர்களை ஓடவைப்போம் உழைப்பாலே நம்நாட்டை உயர்த்தி வைப்போம்... என்று தொடங்கி கோட்டையிலே நமதுகொடி பறந்திட வேண்டும் கொள்கைவீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்... புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும் பொதுவுடைமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்... என்று தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும். வீரம் உண்டு வெற்றி உண்டு விளையாடும் களம் இங்கே உண்டு வா வா என் தோழா... என்று வருகின்ற இறுதிச் சரணத்தில், பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும் புலியினம் நீயெனில் பொருதிட வாராய்... என்றொருவரி வரும். இந்த வரியைச் சொன்னவரே எம்.ஜி.ஆர்.தான். இதற்குப் பதில் வேறொன்று எழுதியிருந்தேன். அதை மாற்றிச் சொல்லி இந்த வரியைச் சொன்னவர் அவர்தான். அவர் சொல்லும் போது "புலியினம் நீயெனில் போருக்கு வாராய்' என்று தான் அவர் சொன்னார். ""எங்கள் பாண்டிய நாட்டுப் பகுதியில் போருக்கு வா என்று சொல்வதற்குப் பதில் பொருதிப் பார்ப்போம் வா என்று சொல்கிற பழக்கம் உண்டு. அதனால் பொருதிட வாராய் என்று வைத்துக் கொள்ளலாம்'' என்றேன். அவரும் சரியென்று சொல்லிவிட்டார். அதனால் "பொருதிட வாராய்' என்று எழுதினேன். விடுதலைப் புலிகளின் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது சில காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடலுக்கு இலங்கை அரசு தடை விதித்தது என்று கேள்விப் பட்டேன். இப்போது இல்லை. நமது அகில இந்திய வானொலியில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்களை ஒலிபரப்புவதில்லை. அதுபோல் தொலைக்காட்சியிலும் அவர் சம்பந்தப்பட்ட படங்களையோ அல்லது அவரை நினைவு கூர்வதுபோல் வருகிற பேட்டிகளையோ ஒளிபரப்புவதில்லை. இவர்கள் ஒளிபரப்பாவிட்டால் தியேட்டர் களில் அவர் நடித்த படத்தைப் பார்க்க மாட்டார்களா? அல்லது பிரச்சாரக் கேசட்டுகளில் பாடல் களைக் கேட்கமாட்டார்களா? இதைக் கேட்டுத் தான் மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்றால் இல்லை. தேவையில்லாத விதிமுறைகளையெல்லாம் தேவையைப் போல் வைத்துக் கொண்டிருக்கிறது வானொலியும், தொலைக்காட்சியும். நான் தனியார் தொலைக்காட்சியைச் சொல்லவில்லை. சென்னைத் தொலைக்காட்சி அதாவது தூர்தர்ஷனைச் சொல்லுகிறேன். இதை மாற்ற வேண்டும். அரசாங்கமே ஒவ்வொரு கட்சிக்கும் இவ்வளவு நேரம் என்று பிரச்சாரத்திற்காக தொலைக்காட்சியில் இடம் ஒதுக்கும் போது, அரசியல் சம்பந்தமுள்ள நடிகர்கள் படங்களை மட்டும் ஏன் தடைசெய்ய வேண்டும்? இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் எழுதினேன். அதில் ஒன்றுதான் மேற்கண்ட பாடல். அந்தப் பாடலைப் பற்றி ஒரு கூட்டத்தில் அமைச்சர் காளிமுத்து பேசினார். எம்.ஜி.ஆரும் மேடையில் அமர்ந்திருந்தார். ""கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்று தலைவர் படத்தில் முத்துலிங்கம் பாடல் எழுதியிருந்தார். அவர் எழுதியது போல் கோட்டையிலே நமது கொடிதான் இன்று பறந்து கொண்டிருக்கிறது. கவிஞர்களின் தீர்க்க தரிசனம் பலிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு'' என்று பேசினார். அவையோர் கையொலி செய்தனர். எம்.ஜி.ஆர். சிரித்தபடி அதை வரவேற்றார். அந்தப் படத்தில் நான் எழுதிய மற்றொரு பாடல். வீரமகன் போராட வெற்றிமகள் பூச்சூட மானம் ஒரு வாழ்வாக வாழ்வுநதி தேனாக முன்னேறுவோம் நம்நாட்டையே முன்னேற்றுவோம்... என்ற பாடலும் மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு - புகழ் மணத்தோடு கதிர்போல வாழிய நீடு சங்கம் கண்ட சரித்திரநாடு - எங்கள் சந்தனத் தமிழுக்கு வேறேது ஈடு என்றொரு நாட்டியப் பாடலும் எழுதினேன். "அன்புக்கு நானடிமை' என்ற பாடலைப் போலவே "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை' என்ற பாடலும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல். பட விநியோகஸ்தர்களுக்கு இந்தப் பாடலையும், பி.எஸ். வீரப்பாவோடு போடும் சண்டைக் காட்சியையும் மட்டுமே எம்.ஜி.ஆர். காண்பிக்கச் செய்தார். (இன்னும் தவழும்) http://www.dinamani.com

ஒருநிமிடக் கதை : கடனே வேணாம்!

1 month 3 weeks ago
ஒருநிமிடக் கதை : கடனே வேணாம்! ஒருக்களித்து மூடி இருந்த கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. சத்தமில்லாமல் கதவைச் சாத்தினாள். உள்ளே பெரியவர் நிறுத்தி நிதானமாக மூச்சிழுத்துக் கொண்டிருந்தார். கண்கள் மூடியபடி இருக்க, அது தூக்கத்தையோ, மயக்கத்தையோ காட்டின. பக்கத்து ஸ்டூலில் அமர்ந்தபடி கதவை மறுபடியும் பார்த்து உறுதி செய்து கொண்டாள். கைப்பேசியை கைப்பையிலிருந்து எடுத்து ஆன் செய்தாள். டிடிங் என்று அது ஆன் ஆகிற ஓசை பொன்னுசாமியின் நாயனம் கேட்டது போல் ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. கதவை மறுபடியும் பார்த்தாள். யாரும் வரவில்லை ”ஹலோ.... ” அன்றும் இப்படித்தான். அவள் ஹலோ சொல்லிவிட்டு காத்திருக்கும் நேரத்தில் மருமகள் வந்து விட்டாள். ’’யேய்...பேரு என்ன...ராணியா கோணியா...இதப்பாரு, உங்க ஏஜென்சியிலே மொதக்கா சொல்லி இருக்கம். இங்கே வந்து நாள் முழுக்க போனை நோண்டுறது, கெக்கேபிக்கேன்னு சத்தம் போட்டுப் பேசுறது, தூங்கி வழியுறது இதெல்லாம் கூடாதுன்னு. சொல்லட்டுமா இப்புடிச் செய்யிறேனு! ஜாக்கிரதை, வேல போயிடும். இன்னும் ஒருமுறை போன் கையிலே பாத்தேன்னு வையி...அம்புட்டுதான்.’’ "ஹலோ....யாரு ரோஜா அம்மாங்களா...." " ஹலோ... ஹலோ....யாரு அது...ஹலோ யாரு பேசறீங்க..." எதிர்புறம் மிகவும் சத்தமாக பேசப்படும் குரல் வெளியே கேட்டுவிடக்கூடும். "அம்மா, நாந்தான்மா உங்க பக்கத்து வூட்டு ராணி. ரோஜா இல்லீங்களா?" " ஓ...நீயாடி...எப்புடி இருக்க? ரோஜா குளிச்சிகிட்டு இல்ல இருக்கு...ஆமா...எங்கேடி போனே நீயி. உங்க அப்பா இழுத்துகிட்டு கிடக்காரு. நீ காசு பாக்க மெட்ராசுக்குப் போயிட்ட..." " ரோஜாம்மா, நானு இப்ப நிறைய நேரம் பேசமுடியாது. அண்ணி போனை எடுக்க மாட்டேங்குறாங்க. அண்ணனும்தான். அதான் அப்பா எப்படி இருக்காரு.. ?" "இதப்பாருடி கூத்த? .அப்பா நலம் விசாரிக்க நேரமில்லையாமுல்ல! ரொம்ப சரிதான் உங்க அண்ணி சொன்னது..." " அய்யோ...அப்பா எப்படி இருக்காரு?" " ஆங்.. இந்த அவசதத்துக்கு குறைச்சல் இல்ல...மூத்திரம் பெஞ்சு அதுலயே பொறண்டு கிடக்காரு...சொந்த மக ஒனக்கில்லாத அக்கறை வந்தவளுக்கு என்னாத்துக்கு? அதான், கேட்டி இல்ல, சோறு தண்ணி கொடுக்க ஆள் இல்ல, ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ எடுத்துப் போட நாதி இல்ல. கேட்டுக்க...நானு போய் பார்க்கப் போனேன்...நாத்தம் கொடலைப் புடுங்குது..." பெரியவர் முகம் லேசான சுருக்கத்தோடு கால்கள் மேலும் கீழும் அசைந்தன. ஒண்ணுக்கு எடுக்கத்தான் இப்படிச் செய்வார். "ரோஜா அம்மா.... வேலை வந்திடுச்சு...அப்புறமா பேசுறேன்..." போனைக் கட் செய்து ஜாக்கிரதையாக ஸ்விட்ச் ஆப் செய்து கைப்பையில் வைத்தாள். "அம்மாடி ராணி, எனக்கு ஒரு சத்தியம் நீ செய்யோனும். இதப்பாரு உன் அண்ணா, வீட்டு மேலே கடன் வாங்கித்தான் எனக்கு இந்த ஆபரேசனை செஞ்சிருக்கான். அதனால, நீ மதராசுக்குப் போயி நிறைய சம்பாதிச்சு அந்தக் கடனை அடைக்கணும். உங்க அண்ணி என்னை எப்படி பாத்துகிட்டாலும் சரி. இருந்த ஒரே வீட்டையும் தின்னுட்டுப் போயிட்டான் கிழவன்னு பேச்சு எனக்கு வரக்கூடாது. வேற எந்தக்காரணம் காட்டியும் இங்கே வரக்கூடாது...செய்வியா? " மெதுவாக டையப்பரைக்கழட்டி எடுத்தாள். அங்கேயும் இங்கேயும் அசைந்ததால் படுக்கை வரை ஈரம் பரவி இருந்தது. "தாத்தா.... மெதுவா திருப்பி படுக்க வைக்கிறேன். அசையாம படுங்க, பெட்ஷீட்டை மாத்திடுறேன்..." என்றாள் டெட்டால் பாட்டிலை கையில் எடுத்தபடி. அந்த மனிதரின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீர், தலையணையை நனைத்திருந்தது. https://www.kamadenu.in

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு

1 month 3 weeks ago
இந்த நேரத்தில் கூட ஒரு மனிதனை நோக்கி இவ்வளவு காழ்ப்புணர்வு வருகிறது என்றால். அந்த மனிதனின் கடந்த கால வாழ்வுதான் காரணமாகும் என்றுதான் நான் முழுமையாக நம்புகிறேன்.

அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள்

1 month 3 weeks ago
அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள் கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு இத்தாலியின் ஏ.எஸ். ரோமா கழகத்தில் இருந்து பிரேசில் வீரர் அலிசன் பெக்கரை லிவர்பூல் கழகம் வாங்கியுள்ளது. கோல்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பரிமாற்றக் கட்டணங்கள் பற்றி இனி பார்ப்போம். ப்ரீமியர் லீக் உட்பட பெரும்பாலான உடன்படிக்கைகள் இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருக்கின்றன. யூரோ நாணயத்தில் மில்லியன்களாலான அந்தப் பட்டியல் கீழ்வருமாறு, 1. அலிசன் பெக்கர் – 73 மில்லியன் யூரோ (ரோமாவில் இருந்து லிவர்பூல், 2018) பிரேசில் கழகமான இன்டர்நேசனலில் மூன்று ஆண்டுகள் திறமையை வெளிப்படுத்திய அலிசன் அந்த கழகம் கேம்பியனோடோ கவுச்சோ சீரி A1 தொடரை தொடர்ந்து நான்கு ஆணடுகள் வெல்ல உதவினார். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு அவரை ரோமா கழகம் வாங்கியது. கோல்காப்பாளர் ஒருவருக்கான அதிக தொகையை பெற்ற பியான்லிக் பப்போனின் 16 ஆண்டு சாதனையை முறியடித்து அலிசனை வாங்க லிவர்பூல் முன்வந்தது. அண்மையில் முடிவுற்ற பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அவர் பிரேசில் அணிக்காக சோபித்திருந்தார். ரோமா அணிக்காக அலிசன் எந்த கிண்ணமும் வெல்லாதபோதும் இத்தாலியில் விளையாடிய காலத்தில் அவரது சாதனைகள் லிவர்பூல் ரசிகர்களுக்கு உற்சாகம் தருவதாக உள்ளது. 2017/18 இல் ஐரோப்பாவின் 5 லீக்குகளிலும் அலிசன் இரண்டாவது சிறந்த கோல் தடுப்பாளராக உள்ளார். 80.1% உடன் உள்ள அவர் அட்லெடிகோ மெட்ரிட்டின் ஜான் ஒப்லக்கிற்கு மாத்திரமே பின்னிற்கிறார். 2017/18 சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிகபட்சமாக அலிசன் ரோமா கழகத்திற்கு 47 கோல் தடுப்புகளை செய்துள்ளார். இதன் மூலம் அந்த அணி தொடரின் அரையிறுதி வரை முன்னேற உதவினார். 2017/18 பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் குழாமிலும் அவர் இடம்பெற்றார். சீரி A1 தொடரில் அலிசன் 17 போட்டிகளில் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார். இது இந்த தொடரில் இரண்டாவது சிறந்த கோல்காப்பாகும். அதேபோன்று அவர் பிரேசில் அணிக்காக 30 போட்டிகளில் 20 இல் எதிரணிக்கு எந்த கோலும் விட்டுக்கொடுக்கவில்லை. 2. கியான்லிக் பப்போன் (Gianluigi Buffon) – 52.8 மில்லியன் யூரோ (பார்மாவில் இருந்து ஜுவாண்டஸ், 2001) 2001 ஆம் ஆண்டு பார்மா கழகத்தில் இருந்து ஜுவாண்டஸ் கழகத்தால் 52.8 மில்லியன் யூரோவுக்கு பப்போன் வாங்கப்பட்டபோது, கோல்காப்பாளர் ஒருவர் இத்தனை விலைக்கு வாங்கப்படுவது அதுவரை அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. 23 வயதாக இருந்த பப்போன் இத்தாலியின் பார்மா கழகத்திற்கு 2000/01 பருவத்தில் அபார திறமையை வெளிக்காட்டி அந்த அணி சீரி A1 தொடரில் 4ஆவது இடத்தை பிடிக்க உதவினார். அதேபோன்று கோப்பா இத்தாலி தொடரில் அந்த அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கோல்காப்பாளர் மட்டுமல்ல எந்த ஒரு வீரருக்கும் செலவிடப்பட்ட அதிக தொகையாக இது இருந்ததோடு, அந்த விலைக்கு ஏற்ப பப்போன் தனது திறமையை வெளிப்படுத்தி ஜுவாண்டஸ் அணியில் 17 ஆண்டுகள் ஆடினார். இதன்போது அந்த அணி 10 தடவைகள் சீரி A1 தொடரை வென்றதோடு கோப்பா இத்தாலியை 5 முறைகளும், சுப்பர் கிண்ணத்தை 6 தடவைகளும், சம்பியன்ஸ் லீக்கில் 6 தடவைகள் இரண்டாவது இடத்தையும் பெற்றது. இத்தாலி உலகக் கிண்ணத்தை வென்ற அதே 2006 ஆம் ஆண்டு ஜுவாண்டஸ் அணி ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கியது இத்தாலி கால்பந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த அணி சீரி B க்கு தரமிறக்கப்பட்டது. எவ்வாறாயினும் அந்த அணியின் ஏனைய முன்னணி வீரர்கள் போலன்றி பப்போன் இரண்டாம் தரத்திலும் கூட ஜுவாண்டஸ் அணியில் நீடித்தார். எனினும் சீரி B தொடரை வென்ற அந்த அணி அடுத்த பருவத்திலேயே தரமுயர்த்தப்பட்டது. அணி தரமிறக்கப்பட்டிருந்தபோதும் அந்த அணியில் இருந்து வெளியேறாமல் நிலைத்திருந்த பப்போன், ஜுவாண்டஸ் கழக வரலாற்றில் ஆதரவாளர்களிடம் அதிக அன்பை பெற்ற வீரராக மாறினார். 3. எடர்சன் மொராஸ் – 40 மில்லியன் யூரோ (பென்பிகாவில் இருந்து மன்செஸ்டர் சிட்டி, 2017) சாவோ போலோவின் அதிக நம்பிக்கை தரும் இளம் வீரராக இருந்த எடர்சன் போர்த்துக்கல்லின் இரண்டாவது தரத்தின் ரிபிராவோ கழகத்தில் இணைந்தார். அந்த கழகத்தில் 3 பருவங்கள் ஆடிய அவர் மிகப்பெரிய நகர்வாக எஸ்.எல். பெனிபிகாவுடன் இணைந்தார். பெனிபிகாவில் எடர்சனின் கடைசி பருவத்தில் (2016/17) அந்த அணி லீக் மற்றும் கிண்ணம் இரண்டையும் வெல்ல உதவிய அவர், மன்செஸ்டர் கழக முகாமையாளர் பெப் கார்டியோலாவினால் ஈர்க்கப்பட்டார். இது ப்ரீமியர் லீக்கில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அப்போது சாதனை படைக்க காரணமானது. பந்தை வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் திறமை மிக்கவராக எடர்சன் பார்க்கப்படுகிறார். அவர் பந்தை கட்டுப்படுத்தி பதில் தாக்குதல் ஒன்றை தொடுக்கும் வகையில் பந்தை வழங்குவதில் பிரசித்தமானவர். கார்டியோலாவின் ஆட்ட பாணிக்கு பொருத்தமானவராக எடர்சன் செயற்பட அது அந்த அணி ப்ரிமியர் லீக் பட்டத்தை இலகுவாக வெல்ல உதவியது. 4. ஜோர்டன் பிக்போர்ட் – 34 மில்லியன் யூரோ (சண்டர்லான்ட்டில் இருந்து எவர்டன், 2017) சண்டர்லான்ட் அணி 2016/17 பருவ ப்ரிமியர் லீக் தொடரில் மோசமாக ஆடி பின்தள்ளப்பட்டபோதும், பிக்போர்ட் அந்த அணியில் திறமையை காட்டிய ஒருசில வீரர்களில் ஒருவர். அவர் அந்த பருவத்தில் இரண்டாவது அதிக கோல் தடுப்புகளை செய்த வீரராவார். அவர் மொத்தம் 135 கோல் தடுப்புகளை செய்தார். எவர்டன் 34 மில்லயின் யூரோவுக்கு அவரை வாங்கியபோது பலரும் இமைகளை உயர்த்திப் பார்த்தனர். ஆனால் பிக்போர்ட் தான் பெறுமதியானவன் என்பதை நிரூபித்து எவர்டன் பின்னடைவை சந்தித்த பருவத்திலும் சோபித்தார். இந்த சந்தர்ப்பத்தை தனது பெயரை மிளிரச் செய்வதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். இதன் மூலம் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியின் முதல் நிலை கோல்காப்பாளராக அவர் தேர்வானார். அவரது இணைப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதும், பிக்போர்ட் மீண்டும் ஒருமுறை அந்த சவாலுக்கு சிறப்பாக முகம்கொடுத்து ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்காக போட்டியை வெல்லும் பல கோல் தடுப்புகளையும் செய்து காட்டினார். 5. மனுவேல் நோயர் – 30 மில்லியன் யூரோ (எப்.சி. ஸ்சல்க் 04 இல் இருந்து பெயர்ன் முனிச், 2011) பெயர்ன் கழகம் 30 மில்லியன் யூரோ என்ற பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யும் முன்னர் நோயர் ஐந்து ஆண்டுகள் ஸ்சல்க் கழகத்தில் கழித்தார். இந்த தொகைக்கு அவர் பேரம் பேசப்பட்டது சரியே என்பதை நிரூபிக்கும் வகையில் அபார திறமையை வெளிக்காட்டிய நோயர் உலகின் மிகச் சிறந்த கோல்காப்பாளராக மாறினார். கழக மட்டத்தில் பெயர்ன் முனிச் வெற்றிகளை குவிக்க அவர் தன்னாளான அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தினார். ஜெர்மனியின் பிரதான கோல்காப்பாளராக மாறிய அவர் 2014 இல் ஜெர்மனி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியபோது அவர் தங்கக் கையுறையை வென்றார். பெனால்டி எல்லைக்குள் எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராகவும், பந்துகளை தடுக்கும் திறமையாலும் ‘ஸ்வீப்பர் கீப்பர்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறார். பெனால்டி எல்லைக்கு வெளியே தயக்கமின்றி வந்து சவால் விடக்கூடியவராகவும் அவர் உள்ளார். 6. பிரான்சிஸ்கோ டோல்டோ – 26.5 மில்லியன் யூரோ (பியோரன்டினாவில் இருந்து இன்டார் மிலான், 2001) அந்த காலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரர்களில் ஒருவராக டோல்டோ இடம்பிடித்தார். பியோரன்டினாவில் எட்டு ஆண்டுகள் இருந்த அவர் கோப்பா இத்தாலியாவை இரண்டு தடவைகளும் சுப்பர்கோப்பா இத்தாலியானாவை ஒருமுறையும் வெல்ல உதவினார். இதனைத் தொடர்ந்தே அவர் இன்டர் மிலான் அணியால் வாங்கப்பட்டார். பெரும் தொகைக்கு ஒப்பந்தமான டோல்டோ இன்டர் மிலானில் 9 ஆண்டுகள் கழித்தார். இதன்போது அவர் அந்தக் கழகத்திற்காக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கை 2010 ஆம் ஆண்டு வென்றதோடு சீரி A தொடரை ஐந்து தடவைகளும் கிண்ணத்திற்கான பட்டத்தை ஆறு தடவைகளும் வென்றார். தனது கழகத்தில் இருந்து இன்டர் மிலானுக்கு சென்றபோதும் பியோரன்டினா கழகம் தனது கௌரவத்திற்குரிய வீரராக அவரை இணைத்ததோடு அந்த அணியின் அனைத்து காலத்திற்குமான பதினொரு வீரர்கள் அணியிலும் அவரை உள்ளடக்கியது. 7. டேவிட் டி கீ – 25 மில்லியன் யூரோ (அட்லடிகோ மெட்ரிட்டில் இருந்து மன்செஸ்டர் யுனைடட், 2011) எட்வின் வான் டர் செர்ருக்கு பதில் சேர் அலெக்ஸ் பெர்குசனால் டீ கீ வாங்கப்பட்டபோது 20 வயது வீரருக்கு அது பெரும் தொகையாக இருந்தது. தனது பெரும் தொகைக்கு ஏற்ப திறமையை வெளிக்காட்டுவதில் அவர் கடும் போராட்டத்தை சந்தித்தார். சில ஆண்டுகள் பின்தங்கி இருந்தபோதும் சேர் அலெக்சின் நம்பிக்கையை வீணடிக்காமல் தற்போது சிறப்பாக ஆடும் டி கீ கடந்த சில பருவங்களாக ப்ரீமியர் லீக்கின் சிறந்த கோல்காப்பாளராக இருந்து வருகிறார். உலகின் சிறந்த கோல்காப்பாளரான மனுவேல் நோயரின் கௌரவத்தை இவர் தட்டிப்பறிப்பார் என்று பலரும் நம்புகின்றனர். மன்சஸ்டருக்காக ப்ரீமியர் லீக், எப்.ஏ. கிண்ணம் மற்றும் லீக் கிண்ணத்தை ஒருமுறை வென்றிருக்கும் டி கீ 2016/17 பருவத்தில் அந்த அணிக்காக ஐரோப்பிய லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார். 8. பெர்ன்ட் லெனோ – 25 மில்லியன் யூரோ (பெயர்ன் லெவர்கூசனில் இருந்து ஆர்சனல், 2018) லெவர்கூசனில் குறிப்பிடும்படியாக திறமையை வெளிப்படுத்திய லெனோ ஆர்சனல் முகாமையாளராக யுனை எமரி பொறுப்பேற்ற பின் அந்த அணியில் ஒப்பந்தம் செய்த முதல் வீரர்களில் ஒருவராவார். பெயர்ன் லெவர்கூசன் அணியில் 7 ஆண்டுகள் கழித்த லெனோ அந்த கழகத்திற்காக 200 இற்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். எனவே ஆர்சனலின் முதல் நிலை கோல்காப்பாளரான பீட்டர் கெச்சின் இடத்தை அவர் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சனல் ரசிகர்களுக்கு லெனோ மீதான எதிர்பார்ப்புகள் அதிகம். 2017 பிஃபா கொன்படரேசன் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி அணியில் பெர்ன்ட் லெனோவும் இடம்பெற்றார். 9. அலெக்ஸ் மெரட் – 22 மில்லியன் யூரோ (யுடினசேயில் இருந்து நபோலி, 2018) ஏ.சி. மிலான் கழகத்திற்கு சென்ற பெபே ரெய்னாவுக்கு பதில் தற்போதைய வீரர் பரிமாற்றத்தில் S.P.A.L. கழகத்தில் இருந்து 21 வயது மெரட்டை நபோலி அணி வாங்கியது. எனினும் கழகத்திற்காக தனது முதல் பயிற்சி முகாமிலேயே கையில் முறிவு ஏற்பட்ட நிலையில் அந்த 21 வயது வீரரின் திறமையை பார்ப்பதற்கு நபோலி ரசிகர்கள் சற்று காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். 10. செபஸ்டியன் பிரெய் – 21 மில்லியன் யூரோ (இன்டர்நெசினலில் இருந்து பர்மா, 2001) வெளியேறும் கிகி பப்போனுக்கு பதில் பர்மா அணியால் வாங்கப்படுவதற்கு முன்னர் மூன்று ஆண்டுகள் இன்டர் மிலானில் கழித்தார். எனினும் ஐந்து ஆண்டுகள் பர்மா அணிக்காக ஆடிய பிரெய் அந்த அணிக்காக தனது முதல் பருவத்திலேயே கோப்பா இத்தாலியை வென்றார். அதிக விலைபோன ஏனைய வீரர்கள் அங்கேலோ பெருசி – 19 மில்லியன் யூரோ (ஜுவாண்டஸ் – இன்டர்நெசினல், 1999) கிளவ்டியோ ப்ராவோ – 18 மில்லியன் யூரோ (பார்சிலோனா – மன்செஸ்டர் சிட்டி, 2016) செஸ்பர் சிலசன் – 15 மில்லியன் யூரோ (அஜக்ஸ் – பார்சிலோனா, 2016) ஜான் ஒப்லக் – 15 மில்லியன் யூரோ (பென்பிகா – அட்லடிகோ மெட்ரிட், 2014) பெட்ர் செச் – 10 மில்லியன் யூரோ (செல்சி – ஆர்சனல், 2015) http://www.thepapare.com/

அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள்

1 month 3 weeks ago
அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள்

 

 

Goal-keepers-696x464.jpg
 

கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு இத்தாலியின் ஏ.எஸ். ரோமா கழகத்தில் இருந்து பிரேசில் வீரர் அலிசன் பெக்கரை லிவர்பூல் கழகம் வாங்கியுள்ளது. கோல்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பரிமாற்றக் கட்டணங்கள் பற்றி இனி பார்ப்போம்.

ப்ரீமியர் லீக் உட்பட பெரும்பாலான உடன்படிக்கைகள் இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருக்கின்றன. யூரோ நாணயத்தில் மில்லியன்களாலான அந்தப் பட்டியல் கீழ்வருமாறு,

1. அலிசன் பெக்கர் – 73 மில்லியன் யூரோ (ரோமாவில் இருந்து லிவர்பூல்,  2018)

பிரேசில் கழகமான இன்டர்நேசனலில் மூன்று ஆண்டுகள் திறமையை வெளிப்படுத்திய அலிசன் அந்த கழகம் கேம்பியனோடோ கவுச்சோ சீரி A1 தொடரை தொடர்ந்து நான்கு ஆணடுகள் வெல்ல உதவினார். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு அவரை ரோமா கழகம் வாங்கியது.

கோல்காப்பாளர் ஒருவருக்கான அதிக தொகையை பெற்ற பியான்லிக் பப்போனின் 16 ஆண்டு சாதனையை முறியடித்து அலிசனை வாங்க லிவர்பூல் முன்வந்தது. அண்மையில் முடிவுற்ற பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அவர் பிரேசில் அணிக்காக சோபித்திருந்தார்.

 

 

 

ரோமா அணிக்காக அலிசன் எந்த கிண்ணமும் வெல்லாதபோதும் இத்தாலியில் விளையாடிய காலத்தில் அவரது சாதனைகள் லிவர்பூல் ரசிகர்களுக்கு உற்சாகம் தருவதாக உள்ளது. 2017/18 இல் ஐரோப்பாவின் 5 லீக்குகளிலும் அலிசன் இரண்டாவது சிறந்த கோல் தடுப்பாளராக உள்ளார். 80.1% உடன் உள்ள அவர் அட்லெடிகோ மெட்ரிட்டின் ஜான் ஒப்லக்கிற்கு மாத்திரமே பின்னிற்கிறார்.   

2017/18 சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிகபட்சமாக அலிசன் ரோமா கழகத்திற்கு 47 கோல் தடுப்புகளை செய்துள்ளார். இதன் மூலம் அந்த அணி தொடரின் அரையிறுதி வரை முன்னேற உதவினார். 2017/18 பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் குழாமிலும் அவர் இடம்பெற்றார்.     

சீரி A1 தொடரில் அலிசன் 17 போட்டிகளில் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார். இது இந்த தொடரில் இரண்டாவது சிறந்த கோல்காப்பாகும். அதேபோன்று அவர் பிரேசில் அணிக்காக 30 போட்டிகளில் 20 இல் எதிரணிக்கு எந்த கோலும் விட்டுக்கொடுக்கவில்லை.   

2. கியான்லிக் பப்போன் (Gianluigi Buffon) – 52.8 மில்லியன் யூரோ (பார்மாவில் இருந்து ஜுவாண்டஸ், 2001)

2001 ஆம் ஆண்டு பார்மா கழகத்தில் இருந்து ஜுவாண்டஸ் கழகத்தால் 52.8 மில்லியன் யூரோவுக்கு பப்போன் வாங்கப்பட்டபோது, கோல்காப்பாளர் ஒருவர் இத்தனை விலைக்கு வாங்கப்படுவது அதுவரை அறியப்படாத ஒன்றாகவே இருந்தது.

23 வயதாக இருந்த பப்போன் இத்தாலியின் பார்மா கழகத்திற்கு 2000/01 பருவத்தில் அபார திறமையை வெளிக்காட்டி அந்த அணி சீரி A1 தொடரில் 4ஆவது இடத்தை பிடிக்க உதவினார். அதேபோன்று கோப்பா இத்தாலி தொடரில் அந்த அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.

2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கோல்காப்பாளர் மட்டுமல்ல எந்த ஒரு வீரருக்கும் செலவிடப்பட்ட அதிக தொகையாக இது இருந்ததோடு, அந்த விலைக்கு ஏற்ப பப்போன் தனது திறமையை வெளிப்படுத்தி ஜுவாண்டஸ் அணியில் 17 ஆண்டுகள் ஆடினார். இதன்போது அந்த அணி 10 தடவைகள் சீரி A1 தொடரை வென்றதோடு கோப்பா இத்தாலியை 5 முறைகளும், சுப்பர் கிண்ணத்தை 6 தடவைகளும், சம்பியன்ஸ் லீக்கில் 6 தடவைகள் இரண்டாவது இடத்தையும் பெற்றது.   

இத்தாலி உலகக் கிண்ணத்தை வென்ற அதே 2006 ஆம் ஆண்டு  ஜுவாண்டஸ் அணி ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கியது இத்தாலி கால்பந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த அணி சீரி B க்கு தரமிறக்கப்பட்டது.  

எவ்வாறாயினும் அந்த அணியின் ஏனைய முன்னணி வீரர்கள் போலன்றி பப்போன் இரண்டாம் தரத்திலும் கூட ஜுவாண்டஸ் அணியில் நீடித்தார். எனினும் சீரி B தொடரை வென்ற அந்த அணி அடுத்த பருவத்திலேயே தரமுயர்த்தப்பட்டது. அணி தரமிறக்கப்பட்டிருந்தபோதும் அந்த அணியில் இருந்து வெளியேறாமல் நிலைத்திருந்த பப்போன், ஜுவாண்டஸ் கழக வரலாற்றில் ஆதரவாளர்களிடம் அதிக அன்பை பெற்ற வீரராக மாறினார்.

3. எடர்சன் மொராஸ் – 40 மில்லியன் யூரோ (பென்பிகாவில் இருந்து மன்செஸ்டர் சிட்டி, 2017)

சாவோ போலோவின் அதிக நம்பிக்கை தரும் இளம் வீரராக இருந்த எடர்சன் போர்த்துக்கல்லின் இரண்டாவது தரத்தின் ரிபிராவோ கழகத்தில் இணைந்தார். அந்த கழகத்தில் 3 பருவங்கள் ஆடிய அவர் மிகப்பெரிய நகர்வாக எஸ்.எல். பெனிபிகாவுடன் இணைந்தார்.

 

 

 

பெனிபிகாவில் எடர்சனின் கடைசி பருவத்தில் (2016/17) அந்த அணி லீக் மற்றும் கிண்ணம் இரண்டையும் வெல்ல உதவிய அவர், மன்செஸ்டர் கழக முகாமையாளர் பெப் கார்டியோலாவினால் ஈர்க்கப்பட்டார். இது ப்ரீமியர் லீக்கில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அப்போது சாதனை படைக்க காரணமானது.

பந்தை வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் திறமை மிக்கவராக எடர்சன் பார்க்கப்படுகிறார். அவர் பந்தை கட்டுப்படுத்தி பதில் தாக்குதல் ஒன்றை தொடுக்கும் வகையில் பந்தை வழங்குவதில் பிரசித்தமானவர்.   

கார்டியோலாவின் ஆட்ட பாணிக்கு பொருத்தமானவராக எடர்சன் செயற்பட அது அந்த அணி ப்ரிமியர் லீக் பட்டத்தை இலகுவாக வெல்ல உதவியது.

4. ஜோர்டன் பிக்போர்ட் – 34 மில்லியன் யூரோ (சண்டர்லான்ட்டில் இருந்து எவர்டன், 2017)

சண்டர்லான்ட் அணி 2016/17 பருவ ப்ரிமியர் லீக் தொடரில் மோசமாக ஆடி பின்தள்ளப்பட்டபோதும், பிக்போர்ட் அந்த அணியில் திறமையை காட்டிய ஒருசில வீரர்களில் ஒருவர். அவர் அந்த பருவத்தில் இரண்டாவது அதிக கோல் தடுப்புகளை செய்த வீரராவார். அவர் மொத்தம் 135 கோல் தடுப்புகளை செய்தார்.  

எவர்டன் 34 மில்லயின் யூரோவுக்கு அவரை வாங்கியபோது பலரும் இமைகளை உயர்த்திப் பார்த்தனர். ஆனால் பிக்போர்ட் தான் பெறுமதியானவன் என்பதை நிரூபித்து எவர்டன் பின்னடைவை சந்தித்த பருவத்திலும் சோபித்தார்.

இந்த சந்தர்ப்பத்தை தனது பெயரை மிளிரச் செய்வதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். இதன் மூலம் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து அணியின் முதல் நிலை கோல்காப்பாளராக அவர் தேர்வானார்.  

அவரது இணைப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதும், பிக்போர்ட் மீண்டும் ஒருமுறை அந்த சவாலுக்கு சிறப்பாக முகம்கொடுத்து ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்காக போட்டியை வெல்லும் பல கோல் தடுப்புகளையும் செய்து காட்டினார்.

5. மனுவேல் நோயர் – 30 மில்லியன் யூரோ (எப்.சி. ஸ்சல்க் 04 இல் இருந்து பெயர்ன் முனிச், 2011)

பெயர்ன் கழகம் 30 மில்லியன் யூரோ என்ற பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யும் முன்னர் நோயர் ஐந்து ஆண்டுகள் ஸ்சல்க் கழகத்தில் கழித்தார். இந்த தொகைக்கு அவர் பேரம் பேசப்பட்டது சரியே என்பதை நிரூபிக்கும் வகையில் அபார திறமையை வெளிக்காட்டிய நோயர் உலகின் மிகச் சிறந்த கோல்காப்பாளராக மாறினார். கழக மட்டத்தில் பெயர்ன் முனிச் வெற்றிகளை குவிக்க அவர் தன்னாளான அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தினார்.  

ஜெர்மனியின் பிரதான கோல்காப்பாளராக மாறிய அவர் 2014 இல் ஜெர்மனி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியபோது அவர் தங்கக் கையுறையை வென்றார்.

பெனால்டி எல்லைக்குள் எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராகவும், பந்துகளை தடுக்கும் திறமையாலும் ‘ஸ்வீப்பர் கீப்பர்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறார். பெனால்டி எல்லைக்கு வெளியே தயக்கமின்றி வந்து சவால் விடக்கூடியவராகவும் அவர் உள்ளார்.

6. பிரான்சிஸ்கோ டோல்டோ – 26.5 மில்லியன் யூரோ (பியோரன்டினாவில் இருந்து இன்டார் மிலான், 2001)

அந்த காலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரர்களில் ஒருவராக டோல்டோ இடம்பிடித்தார். பியோரன்டினாவில் எட்டு ஆண்டுகள் இருந்த அவர் கோப்பா இத்தாலியாவை இரண்டு தடவைகளும் சுப்பர்கோப்பா இத்தாலியானாவை ஒருமுறையும் வெல்ல உதவினார். இதனைத் தொடர்ந்தே அவர் இன்டர் மிலான் அணியால் வாங்கப்பட்டார்.

 

 

பெரும் தொகைக்கு ஒப்பந்தமான டோல்டோ இன்டர் மிலானில் 9 ஆண்டுகள் கழித்தார். இதன்போது அவர் அந்தக் கழகத்திற்காக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கை 2010 ஆம் ஆண்டு வென்றதோடு சீரி A தொடரை ஐந்து தடவைகளும் கிண்ணத்திற்கான பட்டத்தை ஆறு தடவைகளும் வென்றார்.

தனது கழகத்தில் இருந்து இன்டர் மிலானுக்கு சென்றபோதும் பியோரன்டினா கழகம் தனது கௌரவத்திற்குரிய வீரராக அவரை இணைத்ததோடு அந்த அணியின் அனைத்து காலத்திற்குமான பதினொரு வீரர்கள் அணியிலும் அவரை உள்ளடக்கியது.

7. டேவிட் டி கீ – 25 மில்லியன் யூரோ (அட்லடிகோ மெட்ரிட்டில் இருந்து மன்செஸ்டர் யுனைடட், 2011)

எட்வின் வான் டர் செர்ருக்கு பதில் சேர் அலெக்ஸ் பெர்குசனால் டீ கீ வாங்கப்பட்டபோது 20 வயது வீரருக்கு அது பெரும் தொகையாக இருந்தது. தனது பெரும் தொகைக்கு ஏற்ப திறமையை வெளிக்காட்டுவதில் அவர் கடும் போராட்டத்தை சந்தித்தார்.

சில ஆண்டுகள் பின்தங்கி இருந்தபோதும் சேர் அலெக்சின் நம்பிக்கையை வீணடிக்காமல் தற்போது சிறப்பாக ஆடும் டி கீ கடந்த சில பருவங்களாக ப்ரீமியர் லீக்கின் சிறந்த கோல்காப்பாளராக இருந்து வருகிறார். உலகின் சிறந்த கோல்காப்பாளரான மனுவேல் நோயரின் கௌரவத்தை இவர் தட்டிப்பறிப்பார் என்று பலரும் நம்புகின்றனர்.

மன்சஸ்டருக்காக ப்ரீமியர் லீக், எப்.ஏ. கிண்ணம் மற்றும் லீக் கிண்ணத்தை ஒருமுறை வென்றிருக்கும் டி கீ 2016/17 பருவத்தில் அந்த அணிக்காக ஐரோப்பிய லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

8. பெர்ன்ட் லெனோ – 25 மில்லியன் யூரோ (பெயர்ன் லெவர்கூசனில் இருந்து ஆர்சனல், 2018)

லெவர்கூசனில் குறிப்பிடும்படியாக திறமையை வெளிப்படுத்திய லெனோ ஆர்சனல் முகாமையாளராக யுனை எமரி பொறுப்பேற்ற பின் அந்த அணியில் ஒப்பந்தம் செய்த முதல் வீரர்களில் ஒருவராவார்.

பெயர்ன் லெவர்கூசன் அணியில் 7 ஆண்டுகள் கழித்த லெனோ அந்த கழகத்திற்காக 200 இற்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். எனவே ஆர்சனலின் முதல் நிலை கோல்காப்பாளரான பீட்டர் கெச்சின் இடத்தை அவர் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சனல் ரசிகர்களுக்கு லெனோ மீதான எதிர்பார்ப்புகள் அதிகம்.  

2017 பிஃபா கொன்படரேசன் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி அணியில் பெர்ன்ட் லெனோவும் இடம்பெற்றார்.

9. அலெக்ஸ் மெரட் – 22 மில்லியன் யூரோ (யுடினசேயில் இருந்து நபோலி, 2018)

ஏ.சி. மிலான் கழகத்திற்கு சென்ற பெபே ரெய்னாவுக்கு பதில் தற்போதைய வீரர் பரிமாற்றத்தில் S.P.A.L.  கழகத்தில் இருந்து 21 வயது மெரட்டை நபோலி அணி வாங்கியது. எனினும் கழகத்திற்காக தனது முதல் பயிற்சி முகாமிலேயே கையில் முறிவு ஏற்பட்ட நிலையில் அந்த 21 வயது வீரரின் திறமையை பார்ப்பதற்கு நபோலி ரசிகர்கள் சற்று காலம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

10. செபஸ்டியன் பிரெய் – 21 மில்லியன் யூரோ (இன்டர்நெசினலில் இருந்து பர்மா, 2001)

வெளியேறும் கிகி பப்போனுக்கு பதில் பர்மா அணியால் வாங்கப்படுவதற்கு முன்னர் மூன்று ஆண்டுகள் இன்டர் மிலானில் கழித்தார். எனினும் ஐந்து ஆண்டுகள் பர்மா அணிக்காக ஆடிய பிரெய் அந்த அணிக்காக தனது முதல் பருவத்திலேயே கோப்பா இத்தாலியை வென்றார்.

அதிக விலைபோன ஏனைய வீரர்கள்

  • அங்கேலோ பெருசி – 19 மில்லியன் யூரோ (ஜுவாண்டஸ் – இன்டர்நெசினல், 1999)
  • கிளவ்டியோ ப்ராவோ – 18 மில்லியன் யூரோ (பார்சிலோனா – மன்செஸ்டர் சிட்டி, 2016)
  • செஸ்பர் சிலசன் – 15 மில்லியன் யூரோ (அஜக்ஸ் – பார்சிலோனா, 2016)
  • ஜான் ஒப்லக் – 15 மில்லியன் யூரோ (பென்பிகா – அட்லடிகோ மெட்ரிட், 2014)
  • பெட்ர் செச் – 10 மில்லியன் யூரோ (செல்சி – ஆர்சனல், 2015)

http://www.thepapare.com/

தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல்

1 month 3 weeks ago
தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல் -கபில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும், அத­னுடன் சேர்ந்து கொண்டு தமது மக்­க­ளுக்கு வச­தி­களை செய்து கொடுக்­கி­றார்கள், ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்ப்பு அர­சியல் நடத்­தியே காலத்தைக் கடத்­து­கி­றார்கள் என்று அவர் உதா­ர­ணமும் காட்­டி­யி­ருந்தார். “தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்­வதில் தான் அக்­க­றை­யாக இருக்­கி­றார்­களே தவிர, தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்­ணு­வ­தில்லை. இவர்­களின் சண்­டையால் தான் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டி­யதும் கூட கிடைக்­காமல் போகி­றது” ஆக மொத்­தத்தில், இந்தச் சட்டப் போராட்டம் முடிய முன்­னரே, வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடிந்து விடப் போகி­றது. அது­வரை மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் குழப்பம் நீடிக்­கவே போகி­றது. இந்த வழக்கு முடியும் போது, அதன் பலா­ப­லனை அனு­ப­விக்க இரண்டு பேருமே அதி­காரப் பத­வியில் இருப்­பார்­களா என்ற சந்­தே­கமும் இருக்­கி­றது. முத­லா­வது வடக்கு மாகா­ண­ ச­பையின் ஆயுட் காலம் இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குள் முடியப் போகின்ற நிலையில், இதனை முன்­வைத்து தமிழ் அர­சியல் தரப்­புகள் போடு­கின்ற ஆட்டம் சாதா­ரண மக்­களின் சகிப்­புத்­தன்­மையை சோதிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது. கடந்த வாரம் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே யாழ்ப்­பா­ணத்தில் ஒரு பாட­சாலை நிகழ்வில் உரை­யாற்­றிய போது, “தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்­வதில் தான் அக்­க­றை­யாக இருக்­கி­றார்­களே தவிர, தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்­ணு­வ­தில்லை. இவர்­களின் சண்­டையால் தான் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டி­யதும் கூட கிடைக்­காமல் போகி­றது” என்று கூறி­யி­ருந்தார். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும், அத­னுடன் சேர்ந்து கொண்டு தமது மக்­க­ளுக்கு வச­தி­களை செய்து கொடுக்­கி­றார்கள், ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்ப்பு அர­சியல் நடத்­தியே காலத்தைக் கடத்­து­கி­றார்கள் என்று அவர் உதா­ர­ணமும் காட்­டி­யி­ருந்தார். வடக்கு மாகாண ஆளு­ந­ராக சில ஆண்­டுகள் பணி­யாற்­றிய அனு­பவம் அவ­ருக்கு உள்­ளது. தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் உள்ள நட்பும் அவ­ருக்கு இந்தக் கருத்தை வெளி­யிடும் சூழலை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது. அவ­ரது இந்தக் கருத்தில் பல முரண்­பா­டுகள் இருந்­தாலும், ஒன்றை மட்டும் ஒப்­புக்­கொண்டு தான் ஆக வேண்டும். அதா­வது தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமக்குள் சண்­டை­போட்டுக் காலத்­தையும் ,காரி­யத்­தையும் கெடுத்துக் கொள்­வதில் கூடுதல் அக்­கறை செலுத்­து­கி­றார்கள் என்­பதே அது. இதனை ஒரு சிங்­கள அர­சி­யல்­வாதி யாழ்ப்­பா­ணத்தில் வந்து சொல்லும் நிலை வந்­தி­ருப்­ப­தற்­காக தமிழ் அர­சி­யல்­வா­திகள் வெட்கித் தலை குனிந்து கொள்ளத் தான் வேண்டும். வடக்கு மாகாண சபை விட­யத்தை வைத்துக் கொண்டே, இந்த விட­யங்­களைப் பார்ப்­பது பொருத்­த­மா­ன­தாகப் படு­கி­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக – பதவி நீக்­கப்­பட்ட அமைச்சர் டெனீஸ்­வரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்­தி­ருந்தார். அந்த வழக்கில், டெனீஸ்­வ­ரனை பதவி நீக்கம் செய்த உத்­த­ரவு செல்­லு­ப­டி­யா­னது அல்ல என்றும் , அவர் இன்­னமும் பத­வியில் நீடிக்­கிறார் என்றே நீதி­மன்றம் கரு­து­கி­றது எனவும், ஒரு உத்­த­ரவை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கி­யது. ஒரு மாதத்­துக்கு முன்­ன­தாக இந்த உத்­த­ரவை வழங்­கியும், இது­வரை டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ராக செயற்­பட முத­ல­மைச்சர் அனு­ம­திக்­க­வில்லை. டெனீஸ்­வரன் அமைச்­ச­ர­வையின் உறுப்­பி­ன­ராக இருக்­கிறார் என்­பதை, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உறுதி செய்து விட்­டது. முத­ல­மைச்சர் உள்­ளிட்ட 5 பேர் தான் ஒரு மாகாண அமைச்­ச­ர­வையில் இருக்க முடியும். இந்த நிலையில் நீதி­மன்ற உத்­த­ரவை அடுத்து, உங்­க­ளுடன் அமைச்­ச­ர­வையில் எத்­தனை பேர் இருக்­கி­றீர்கள் அவர்­களின் விப­ரங்­களைத் தாருங்கள் என்று ஆளுநர் கடிதம் அனுப்­பியும் முத­ல­மைச்சர் அதற்குச் சரி­யாகப் பதி­ல­ளிக்­க­வில்லை. ஏனென்றால், டெனீஸ்­வ­ரனை விலக்கி அமைச்­சர்கள் பட்­டி­யலைக் கொடுத்தால் நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்­தது ஆகி விடும். அவ­ரையும் சேர்த்துக் கொடுத்தால், அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­தாகி விடும். அதனால், மேல்­மு­றை­யீடு என்று காரணம் காட்டி முத­ல­மைச்சர் இழுத்­த­டிக்க, ஆளு­நரோ, தனது அனு­ம­தி­யின்றி மாகாண அமைச்­ச­ர­வையைக் கூட்டக் கூடாது என்று உத்­த­ரவு போட்­டி­ருக்­கிறார். அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தான் திட்­டங்கள் குறித்து முடிவு எடுக்­கப்­பட வேண்டும். அனு­ம­திகள் பெறப்­பட வேண்டும். இதனால் பல வாரங்­க­ளாக அமைச்­ச­ர­வையைக் கூட்ட முடி­யாத நிலையில் முத­ல­மைச்சர் இருக்­கிறார். எப்­ப­டியும் கடந்த வியா­ழக்­கி­ழமை உச்ச நீதி­மன்­றத்தின் மூலம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தீர்ப்­புக்கு தடை­உத்­த­ரவு பெற்று விடலாம் என்று எதிர்­பார்த்த முத­ல­மைச்­ச­ருக்கு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது ஏமாற்­றத்­தையே அளித்­தி­ருக்கும். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அதற்­குள்­ளாகத் தனது உத்­த­ரவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்­லையேல், குறைந்­த­பட்சம் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் அடுத்த தவணை வரை இதே நிலை நீடிக்க வேண்டும். இதனால் மாகாண அரசின் செயற்­பா­டு­களில் தேக்கம் ஏற்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும், டெனீஸ்­வ­ரனும் தமக்­கி­டை­யி­லான ஈகோ பிரச்­சி­னைக்­கா­கவே இந்தச் சட்ட மோதலில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள். தாம் தவறு செய்­ய­வில்லை என்றும், மறு­த­ரப்பே தவ­றி­ழைத்­தது என்றும் நிரூ­பிக்­கவே இரண்டு தரப்­பி­னரும் முட்டி மோது­கின்­றனர். யாரா­வது ஒரு தரப்பு விட்டு விலகிப் போகு­மாறு ஆலோ­சனை கூறும் நிலையில் தமிழர் தரப்பில் மதிப்­புக்­கு­ரிய எவரும் இல்­லா­ததும் ஒரு குறையே. இரண்டு பேருமே, தமது அதி­கா­ரத்தை நிரூ­பிப்­ப­தற்­காக நடத்தும் சட்டப் போராட்டம், மாகா­ண­ச­பையின் அதி­கா­ரத்தை இன்னும் மட்­டுப்­ப­டுத்தக் கூடிய நிலையை ஏற்­ப­டுத்தும் ஆபத்தும் இருக்­கி­றது. முத­ல­மைச்­சரின் அதி­கா­ரத்தை குறைத்து, ஆளு­நரின் அதி­கா­ரத்தை அதி­கப்­ப­டுத்தும் உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்பு வெளி­யானால், அதன் ஆபத்தை அனு­ப­விக்கப் போவது தமிழ் மக்கள் தான். இந்த நிலையை உணர்ந்து தான் போலும், டெனீஸ்­வரன் ஆரம்­பத்­தி­லேயே தாம் மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று நிரூ­பிக்­கவே இந்த வழக்கைத் தொடர்ந்­த­தாக நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார். பின்னர் ஒரு கட்­டத்தில் அவர், முத­ல­மைச்சர் தனது தவறை ஏற்றுக் கொண்டால், வழக்கில் இருந்து விலகி விடுவேன் என்றும் கூறி­யி­ருந்தார். ஆக மொத்­தத்தில், இந்தச் சட்டப் போராட்டம் முடிய முன்­னரே, வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடிந்து விடப் போகி­றது. அது­வரை மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் குழப்பம் நீடிக்­கவே போகி­றது. இந்த வழக்கு முடியும் போது, அதன் பலா­ப­லனை அனு­ப­விக்க இரண்டு பேருமே அதி­காரப் பத­வியில் இருப்­பார்­களா என்ற சந்­தே­கமும் இருக்­கி­றது. அப்­ப­டி­யான நிலை ஏற்­பட்டால், மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடிந்த பின்னர் - இந்த வழக்கில் வெற்­றியைப் பெற்று இவர்கள் எதனைச் சாதிக்கப் போகி­றார்கள் என்றும் தெரி­ய­வில்லை. ஆனால் , அது­வரை வடக்கு மாகாண மக்­க­ளுக்கு மாகா­ண­ச­பையின் ஊடாக முழு­மை­யான பணி­களை ஆற்ற முடி­யாத நிலை தான் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதற்குத் தானா இவர்கள் ஆசைப்­பட்­டார்கள்? வடக்கு மாகா­ண­சபை வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­ட­வில்லை என்ற தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மத்­தியில், இந்த வழக்கு வேறு அதன் செயற்­பா­டு­க­ளுக்கு முடக்­கத்தை ஏற்­ப­டுத்தும் சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இதன் பாதிப்­பு­களை முத­ல­மைச்­சரோ, அமைச்­சரோ எதிர்­கொள்ளப் போவ­தில்லை. அவர்கள் தமக்­கு­ரிய ஊதியம், வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்றுக் கொள்­வார்கள். ஆனால், சபையின் செயற்­பா­டு­களில் ஏற்­படும் பாதிப்­பு­களால் சாதா­ரண மக்­க­ளுக்­கான திட்­டங்கள் தான் தொய்வு காணும். அது அவர்­களைத் தான் பாதிக்கும். வடக்கு மாகாண சபை உருப்­ப­டி­யாக எதையும் செய்­ய­வில்லை என்று குற்­றம்­சாட்டும், டக்ளஸ் தேவா­னந்தா போன்­ற­வர்கள், அடுத்த முறை சபையின் அதி­காரம் தமக்குக் கிடைத்தால், வடக்கை சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம் என்று இப்­போதே தம்­பட்டம் அடிக்கத் தொடங்கி விட்­டார்கள். அதா­வது மாகாண சபைக்கு தற்­போ­துள்ள அதி­கா­ரங்­களைக் கொண்டே வடக்கை அபி­வி­ருத்தி செய்ய முடியும் என்று காண்­பிப்போம், என்­பது அவர்­களின் வாக்­கு­றுதி. ஆனால் முத­ல­மைச்­சரோ, ஆரம்­பத்தில் இருந்தே மாகாண அர­சு­களின் அதி­காரப் போதா­மையை தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்­தவர். இதனை ஒரு ஓட்டைப் பாத்­திரம் என்று தான் அவர் கூறி வந்­தி­ருக்­கிறார். அத்­த­கைய ஓட்டைப் பாத்­தி­ரத்தில், நீர் நிரப்பும் வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்திக் கொள்­வதை விட, அதில் உள்ள ஓட்­டையை இன்னும் பெரி­தாக்கும் வேலையைத் தான் இப்­போது முத­ல­மைச்­சரும், டெனீஸ்­வ­ரனும் செய்து கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­த­நி­லையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார், “முத­ல­மைச்சர் நான்கு ஆண்­டு­க­ளாக மாகா­ண­சபை அதி­கா­ர­மற்­றது என்று கூறி வந்தார். அதனை ஒரு வழக்கின் மூலம் நிரூ­பித்­தி­ருக்­கிறார் டெனீஸ்­வரன் என்று பாராட்டுத் தெரி­வித்­தி­ருக்­கிறார். அத்­துடன் அவர் நிற்­க­வில்லை. அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் நாங்­களும் போட்­டி­யிடப் போகிறோம், எங்­க­ளையும் ஆட்­சியில் அமர்த்தி, மாகாண சபைக்கு அதி­காரம் ஒன்­று­மில்லை என்று நிரூ­பிக்க வாய்ப்புத் தர வேண்டும் என்று அவர் கூறி­யுள்ள கருத்து வேடிக்­கை­யா­னது. மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் திட்­டங்­களை செய்து கொடுப்போம் என்று வாக்­கு­றுதி கொடுப்­பது தான் வழக்­க­மான அர­சியல். ஆனால், மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று காட்­டு­வ­தற்கு, தமக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று கோரு­வதை என்­ன­வென்று கூறு­வது? விக்­னேஸ்­வ­ரனும், டெனீஸ்­வ­ரனும் மாகா­ண­ச­பைக்கு அதி­கா­ர­மில்லை என்று நிரூ­பித்து விட்­டார்கள் என்­பதை ஒப்­புக்­கொள்ளும் கஜேந்­தி­ர­குமார், தானும் அதனைத் தான் நிரூ­பிக்கப் போகிறேன் என்று கூறப்­ப­டு­வது அபத்தம். மாகாண சபை தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்றும் ஒரு கட்­ட­மைப்பு அல்ல. அதற்கு போதிய அதி­கா­ரங்­களும் இல்லை. டக்ளஸ் தேவா­னந்தா மாத்­திரம் தான் திருப்­தி­யான ஒன்­றாக இதனை ஏற்றுக் கொள்­கிறார். மற்­றைய எல்­லோரும், மாகாண சபையின் அதி­கா­ரங்கள் போதாது என்று தான் கூறு­கி­றார்கள். அதனால் தான் அதற்கு மேலான ஒரு அரசியல் தீர்வு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை விளங்கிக் கொள்ளாதது போல, மாகாணசபைக்கு அதிகாரமில்லை என்று நிரூபிக்கப் போவதாக கிளம்பியிருக்கிறார் கஜேந்திர குமார். ஒரு நீண்ட ஆயுதப் போராட்டம், அதனால் ஏற்பட்ட அழிவுகளைச் சந்தித்த மக்களுக்கு ,கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு நல்லதைச் செய்ய வேண்டியது தான் இப்போது முக்கியம். ஒரு பக்கத்தில் அரசியல் உரிமைக்கான போராட்டம் நடக்க, கிடைத்துள்ள அதிகாரங்களை வைத்து மக்களுக்கு நல்லதைச் செய்ய முனைவது தான் முக்கியம். அதை விடுத்து, கஜேந்திர குமார் தரப்பு இப்போதே அதிகார மல்லுக்கட்டலுக்கு தாம் தயாராகிறோம் என்று காட்ட முனைகிறது. இந்தச் சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால், ஆளுநர் றெஜினோல்ட் குரே, தமிழ் அரசியல்வாதிகள் பற்றிக் கூறிய கணிப்பை முற்றிலும் தவறானது என்று தூக்கியெறிந்து விட முடியாது. http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-29#page-4

தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல்

1 month 3 weeks ago
தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல்
S-04Page1Image0002-121eb85eb915262ac38cf38adbfa4e458f10c23d.jpg

 

-கபில்

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும், அத­னுடன் சேர்ந்து கொண்டு தமது மக்­க­ளுக்கு வச­தி­களை செய்து கொடுக்­கி­றார்கள், ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்ப்பு அர­சியல் நடத்­தியே காலத்தைக் கடத்­து­கி­றார்கள் என்று அவர் உதா­ர­ணமும் காட்­டி­யி­ருந்தார்.

 

“தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்­வதில் தான் அக்­க­றை­யாக இருக்­கி­றார்­களே தவிர, தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்­ணு­வ­தில்லை. இவர்­களின் சண்­டையால் தான் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டி­யதும் கூட கிடைக்­காமல் போகி­றது”

ஆக மொத்­தத்தில், இந்தச் சட்டப் போராட்டம் முடிய முன்­னரே, வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடிந்து விடப் போகி­றது. அது­வரை மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் குழப்பம் நீடிக்­கவே போகி­றது. இந்த வழக்கு முடியும் போது, அதன் பலா­ப­லனை அனு­ப­விக்க இரண்டு பேருமே அதி­காரப் பத­வியில் இருப்­பார்­களா என்ற சந்­தே­கமும்  இருக்­கி­றது.  

முத­லா­வது வடக்கு மாகா­ண­ ச­பையின் ஆயுட் காலம் இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குள் முடியப் போகின்ற நிலையில், இதனை முன்­வைத்து தமிழ் அர­சியல் தரப்­புகள் போடு­கின்ற ஆட்டம் சாதா­ரண மக்­களின் சகிப்­புத்­தன்­மையை சோதிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது. 

கடந்த வாரம் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே யாழ்ப்­பா­ணத்தில் ஒரு பாட­சாலை நிகழ்வில் உரை­யாற்­றிய போது, “தமிழ் அர­சி­யல்­வா­திகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்­வதில் தான் அக்­க­றை­யாக இருக்­கி­றார்­களே தவிர, தமிழ் மக்­க­ளுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்­ணு­வ­தில்லை. இவர்­களின் சண்­டையால் தான் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டி­யதும் கூட கிடைக்­காமல் போகி­றது” என்று கூறி­யி­ருந்தார்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், எந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தாலும், அத­னுடன் சேர்ந்து கொண்டு தமது மக்­க­ளுக்கு வச­தி­களை செய்து கொடுக்­கி­றார்கள், ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் எதிர்ப்பு அர­சியல் நடத்­தியே காலத்தைக் கடத்­து­கி­றார்கள் என்று அவர் உதா­ர­ணமும் காட்­டி­யி­ருந்தார்.

வடக்கு மாகாண ஆளு­ந­ராக சில ஆண்­டுகள் பணி­யாற்­றிய அனு­பவம் அவ­ருக்கு உள்­ளது. தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் உள்ள நட்பும் அவ­ருக்கு இந்தக் கருத்தை வெளி­யிடும் சூழலை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது.

அவ­ரது இந்தக் கருத்தில் பல முரண்­பா­டுகள் இருந்­தாலும், ஒன்றை மட்டும் ஒப்­புக்­கொண்டு தான் ஆக வேண்டும். அதா­வது தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமக்குள் சண்­டை­போட்டுக் காலத்­தையும் ,காரி­யத்­தையும் கெடுத்துக் கொள்­வதில் கூடுதல் அக்­கறை செலுத்­து­கி­றார்கள் என்­பதே அது.

இதனை ஒரு சிங்­கள அர­சி­யல்­வாதி யாழ்ப்­பா­ணத்தில் வந்து சொல்லும் நிலை வந்­தி­ருப்­ப­தற்­காக தமிழ் அர­சி­யல்­வா­திகள் வெட்கித் தலை குனிந்து கொள்ளத் தான் வேண்டும்.

வடக்கு மாகாண சபை விட­யத்தை வைத்துக் கொண்டே, இந்த விட­யங்­களைப் பார்ப்­பது பொருத்­த­மா­ன­தாகப் படு­கி­றது.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக – பதவி நீக்­கப்­பட்ட அமைச்சர் டெனீஸ்­வரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

அந்த வழக்கில், டெனீஸ்­வ­ரனை பதவி நீக்கம் செய்த உத்­த­ரவு செல்­லு­ப­டி­யா­னது அல்ல என்றும் , அவர் இன்­னமும் பத­வியில் நீடிக்­கிறார் என்றே நீதி­மன்றம் கரு­து­கி­றது எனவும், ஒரு உத்­த­ரவை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கி­யது.

ஒரு மாதத்­துக்கு முன்­ன­தாக இந்த உத்­த­ரவை வழங்­கியும், இது­வரை டெனீஸ்­வ­ரனை அமைச்­ச­ராக செயற்­பட முத­ல­மைச்சர் அனு­ம­திக்­க­வில்லை.

டெனீஸ்­வரன் அமைச்­ச­ர­வையின் உறுப்­பி­ன­ராக இருக்­கிறார் என்­பதை, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உறுதி செய்து விட்­டது. முத­ல­மைச்சர் உள்­ளிட்ட 5 பேர் தான் ஒரு மாகாண அமைச்­ச­ர­வையில் இருக்க முடியும். இந்த நிலையில் நீதி­மன்ற உத்­த­ரவை அடுத்து, உங்­க­ளுடன் அமைச்­ச­ர­வையில் எத்­தனை பேர் இருக்­கி­றீர்கள் அவர்­களின் விப­ரங்­களைத் தாருங்கள் என்று ஆளுநர் கடிதம் அனுப்­பியும் முத­ல­மைச்சர் அதற்குச் சரி­யாகப் பதி­ல­ளிக்­க­வில்லை.

ஏனென்றால், டெனீஸ்­வ­ரனை விலக்கி அமைச்­சர்கள் பட்­டி­யலைக் கொடுத்தால் நீதி­மன்றத் தீர்ப்பை அவ­ம­தித்­தது ஆகி விடும். அவ­ரையும் சேர்த்துக் கொடுத்தால், அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­தாகி விடும்.

அதனால், மேல்­மு­றை­யீடு என்று காரணம் காட்டி முத­ல­மைச்சர் இழுத்­த­டிக்க, ஆளு­நரோ, தனது அனு­ம­தி­யின்றி மாகாண அமைச்­ச­ர­வையைக் கூட்டக் கூடாது என்று உத்­த­ரவு போட்­டி­ருக்­கிறார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தான் திட்­டங்கள் குறித்து முடிவு எடுக்­கப்­பட வேண்டும். அனு­ம­திகள் பெறப்­பட வேண்டும். இதனால் பல வாரங்­க­ளாக அமைச்­ச­ர­வையைக் கூட்ட முடி­யாத நிலையில் முத­ல­மைச்சர் இருக்­கிறார்.

எப்­ப­டியும் கடந்த வியா­ழக்­கி­ழமை உச்ச நீதி­மன்­றத்தின் மூலம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தீர்ப்­புக்கு தடை­உத்­த­ரவு பெற்று விடலாம் என்று எதிர்­பார்த்த முத­ல­மைச்­ச­ருக்கு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது ஏமாற்­றத்­தையே அளித்­தி­ருக்கும்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அதற்­குள்­ளாகத் தனது உத்­த­ரவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்­லையேல், குறைந்­த­பட்சம் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் அடுத்த தவணை வரை இதே நிலை நீடிக்க வேண்டும்.

இதனால் மாகாண அரசின் செயற்­பா­டு­களில் தேக்கம் ஏற்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும், டெனீஸ்­வ­ரனும் தமக்­கி­டை­யி­லான ஈகோ பிரச்­சி­னைக்­கா­கவே இந்தச் சட்ட மோதலில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள். தாம் தவறு செய்­ய­வில்லை என்றும், மறு­த­ரப்பே தவ­றி­ழைத்­தது என்றும் நிரூ­பிக்­கவே இரண்டு தரப்­பி­னரும் முட்டி மோது­கின்­றனர்.

யாரா­வது ஒரு தரப்பு விட்டு விலகிப் போகு­மாறு ஆலோ­சனை கூறும் நிலையில் தமிழர் தரப்பில் மதிப்­புக்­கு­ரிய எவரும் இல்­லா­ததும் ஒரு குறையே.

இரண்டு பேருமே, தமது அதி­கா­ரத்தை நிரூ­பிப்­ப­தற்­காக நடத்தும் சட்டப் போராட்டம், மாகா­ண­ச­பையின் அதி­கா­ரத்தை இன்னும் மட்­டுப்­ப­டுத்தக் கூடிய நிலையை ஏற்­ப­டுத்தும் ஆபத்தும் இருக்­கி­றது.

முத­ல­மைச்­சரின் அதி­கா­ரத்தை குறைத்து, ஆளு­நரின் அதி­கா­ரத்தை அதி­கப்­ப­டுத்தும் உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்பு வெளி­யானால், அதன் ஆபத்தை அனு­ப­விக்கப் போவது தமிழ் மக்கள் தான்.

இந்த நிலையை உணர்ந்து தான் போலும், டெனீஸ்­வரன் ஆரம்­பத்­தி­லேயே தாம் மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று நிரூ­பிக்­கவே இந்த வழக்கைத் தொடர்ந்­த­தாக நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

பின்னர் ஒரு கட்­டத்தில் அவர், முத­ல­மைச்சர் தனது தவறை ஏற்றுக் கொண்டால், வழக்கில் இருந்து விலகி விடுவேன் என்றும் கூறி­யி­ருந்தார்.

ஆக மொத்­தத்தில், இந்தச் சட்டப் போராட்டம் முடிய முன்­னரே, வடக்கு மாகாண சபையின் பத­விக்­காலம் முடிந்து விடப் போகி­றது. அது­வரை மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் குழப்பம் நீடிக்­கவே போகி­றது.

இந்த வழக்கு முடியும் போது, அதன் பலா­ப­லனை அனு­ப­விக்க இரண்டு பேருமே அதி­காரப் பத­வியில் இருப்­பார்­களா என்ற சந்­தே­கமும் இருக்­கி­றது.

அப்­ப­டி­யான நிலை ஏற்­பட்டால், மாகா­ண­ச­பையின் பத­விக்­காலம் முடிந்த பின்னர் - இந்த வழக்கில் வெற்­றியைப் பெற்று இவர்கள் எதனைச் சாதிக்கப் போகி­றார்கள் என்றும் தெரி­ய­வில்லை.

ஆனால் , அது­வரை வடக்கு மாகாண மக்­க­ளுக்கு மாகா­ண­ச­பையின் ஊடாக முழு­மை­யான பணி­களை ஆற்ற முடி­யாத நிலை தான் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதற்குத் தானா இவர்கள் ஆசைப்­பட்­டார்கள்?

வடக்கு மாகா­ண­சபை வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­ட­வில்லை என்ற தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மத்­தியில், இந்த வழக்கு வேறு அதன் செயற்­பா­டு­க­ளுக்கு முடக்­கத்தை ஏற்­ப­டுத்தும் சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இதன் பாதிப்­பு­களை முத­ல­மைச்­சரோ, அமைச்­சரோ எதிர்­கொள்ளப் போவ­தில்லை. அவர்கள் தமக்­கு­ரிய ஊதியம், வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்றுக் கொள்­வார்கள். ஆனால், சபையின் செயற்­பா­டு­களில் ஏற்­படும் பாதிப்­பு­களால் சாதா­ரண மக்­க­ளுக்­கான திட்­டங்கள் தான் தொய்வு காணும். அது அவர்­களைத் தான் பாதிக்கும்.

வடக்கு மாகாண சபை உருப்­ப­டி­யாக எதையும் செய்­ய­வில்லை என்று குற்­றம்­சாட்டும், டக்ளஸ் தேவா­னந்தா போன்­ற­வர்கள், அடுத்த முறை சபையின் அதி­காரம் தமக்குக் கிடைத்தால், வடக்கை சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம் என்று இப்­போதே தம்­பட்டம் அடிக்கத் தொடங்கி விட்­டார்கள்.

அதா­வது மாகாண சபைக்கு தற்­போ­துள்ள அதி­கா­ரங்­களைக் கொண்டே வடக்கை அபி­வி­ருத்தி செய்ய முடியும் என்று காண்­பிப்போம், என்­பது அவர்­களின் வாக்­கு­றுதி.

ஆனால் முத­ல­மைச்­சரோ, ஆரம்­பத்தில் இருந்தே மாகாண அர­சு­களின் அதி­காரப் போதா­மையை தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்­தவர். இதனை ஒரு ஓட்டைப் பாத்­திரம் என்று தான் அவர் கூறி வந்­தி­ருக்­கிறார்.

அத்­த­கைய ஓட்டைப் பாத்­தி­ரத்தில், நீர் நிரப்பும் வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்திக் கொள்­வதை விட, அதில் உள்ள ஓட்­டையை இன்னும் பெரி­தாக்கும் வேலையைத் தான் இப்­போது முத­ல­மைச்­சரும், டெனீஸ்­வ­ரனும் செய்து கொண்­டி­ருக்­கின்­றனர்.

இந்­த­நி­லையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார், “முத­ல­மைச்சர் நான்கு ஆண்­டு­க­ளாக மாகா­ண­சபை அதி­கா­ர­மற்­றது என்று கூறி வந்தார். அதனை ஒரு வழக்கின் மூலம் நிரூ­பித்­தி­ருக்­கிறார் டெனீஸ்­வரன் என்று பாராட்டுத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­துடன் அவர் நிற்­க­வில்லை. அடுத்த மாகா­ண­சபைத் தேர்­தலில் நாங்­களும் போட்­டி­யிடப் போகிறோம், எங்­க­ளையும் ஆட்­சியில் அமர்த்தி, மாகாண சபைக்கு அதி­காரம் ஒன்­று­மில்லை என்று நிரூ­பிக்க வாய்ப்புத் தர வேண்டும் என்று அவர் கூறி­யுள்ள கருத்து வேடிக்­கை­யா­னது.

மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் திட்­டங்­களை செய்து கொடுப்போம் என்று வாக்­கு­றுதி கொடுப்­பது தான் வழக்­க­மான அர­சியல்.

ஆனால், மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று காட்­டு­வ­தற்கு, தமக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று கோரு­வதை என்­ன­வென்று கூறு­வது?

விக்­னேஸ்­வ­ரனும், டெனீஸ்­வ­ரனும் மாகா­ண­ச­பைக்கு அதி­கா­ர­மில்லை என்று நிரூ­பித்து விட்­டார்கள் என்­பதை ஒப்­புக்­கொள்ளும் கஜேந்­தி­ர­குமார், தானும் அதனைத் தான் நிரூ­பிக்கப் போகிறேன் என்று கூறப்­ப­டு­வது அபத்தம்.

மாகாண சபை தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்றும் ஒரு கட்­ட­மைப்பு அல்ல. அதற்கு போதிய அதி­கா­ரங்­களும் இல்லை. டக்ளஸ் தேவா­னந்தா மாத்­திரம் தான் திருப்­தி­யான ஒன்­றாக இதனை ஏற்றுக் கொள்­கிறார்.

மற்­றைய எல்­லோரும், மாகாண சபையின் அதி­கா­ரங்கள் போதாது என்று தான் கூறு­கி­றார்கள். அதனால் தான் அதற்கு மேலான ஒரு அரசியல் தீர்வு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை விளங்கிக் கொள்ளாதது போல, மாகாணசபைக்கு அதிகாரமில்லை என்று நிரூபிக்கப் போவதாக கிளம்பியிருக்கிறார் கஜேந்திர குமார்.

ஒரு நீண்ட ஆயுதப் போராட்டம், அதனால் ஏற்பட்ட அழிவுகளைச் சந்தித்த மக்களுக்கு ,கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு நல்லதைச் செய்ய வேண்டியது தான் இப்போது முக்கியம். ஒரு பக்கத்தில் அரசியல் உரிமைக்கான போராட்டம் நடக்க, கிடைத்துள்ள அதிகாரங்களை வைத்து மக்களுக்கு நல்லதைச் செய்ய முனைவது தான் முக்கியம்.

அதை விடுத்து, கஜேந்திர குமார் தரப்பு இப்போதே அதிகார மல்லுக்கட்டலுக்கு தாம் தயாராகிறோம் என்று காட்ட முனைகிறது.

இந்தச் சூழ்நிலைகளை வைத்துப் பார்த்தால், ஆளுநர் றெஜினோல்ட் குரே, தமிழ் அரசியல்வாதிகள் பற்றிக் கூறிய கணிப்பை முற்றிலும் தவறானது என்று தூக்கியெறிந்து விட முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-29#page-4

3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

1 month 3 weeks ago
9 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி: மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம் சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் தமிம் இக்பால் - படம் உதவி: ட்விட்டர் தமிம் இக்பாலின் அபார சதத்தால், செயின்ட் கிட்ஸ் நகரில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது வங்கதேசம் அணி. கடந்த 9 ஆண்டுகளுக்குப்பின், ஆசிய கண்டத்துக்கு பின் வெளியே, வங்கதேசம் அணி வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், மேற்கிந்தியத்தீவுகளில் வங்கதேசம் வெல்லும் 2-வது ஒருநாள் தொடர் மற்றும் ஒட்டுமொத்தமாக அந்த அணிக்கு எதிராக வங்கதேசம் வெல்லும் 3-வது தொடர் இதுவாகும். இதன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தோல்வி கடந்த 4-வது ஆண்டாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மேற்கிந்தியத்தீவுகள் அணி, எந்த நாட்டுக்கு எதிராகவும் எந்த தொடரையும் வெல்ல முடியாமல் திணறிவருகிறது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 124 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். தமிம் இக்பால் இந்த ஒருநாள் தொடரில் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். இவரின் சதமே வங்கதேசம் அணி இமாலய ஸ்கோரை எட்டவும், வெற்றி பெறவும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை இக்பால் பெற்றார். டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக வங்கதேசம் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 302 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. வங்கதேசம் தரப்பில் தமிம் இக்பால், இமானுல் ஹக் ஆட்டத்தைத் தொடங்கினர். இமானுல் ஹக் 10 ரன்களில் நடையைக் கட்டினார். 2-வது விக்கெட்டுக்கு வந்த சகிப் அல்ஹசன், இக்பாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். சிறப்பாக ஆடிய இக்பால் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தபோது, 37 ரன்களில் சகிப் அல்ஹசன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முஸ்பிகுர் ரஹிம் 12 ரன்களில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு மகமதுல்லாவுடன் சேர்ந்தார் இக்பால். இருவரும் ரன்களை வேகமாகச் சேர்த்தனர். 120 பந்துகளில் தமிம் இக்பால் இந்த தொடரில் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். அடுத்து சில நிமிடங்கள் நீடித்த அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மோர்தசா 36 ரன்கள் ,சபிர் ரஹ்மான் 12 ரன்களில் வெளியேறினார்கள். அதிரடியாக ஆடிய மகமதுல்லா 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் மகமதுல்லா 67 ரன்களுடனும், ஹூசைன் 11ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் நர்ஸ், ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 302 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்தியத்தீவுகள் வீர்கள் கெயில், லிவிஸ் களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். 53 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு சேர்த்த நிலையில், லீவிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹோப், கெயிலுடன் இணைந்தார். அதிரடியாக பேட் செய்த கெயில் அதிரடியாக பேட் செய்த கெயில் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். 66 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து கெயில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். ஹோப் 94 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார். நடுவரிசையில் களமிறங்கிய ஹெட்மேயர் 30 ரன்கள், ஆன்ட்ரூ பாவெல் 4 ரன்களில் வெளியேறினார். டி20 போட்டி போன்று அதிரடியாக ஆடிய ரிக்கார்டோ பாவெல் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், இவருக்கு உறுதுணையாக பேட் செய்ய அடுத்தடுத்துவீரர்கள் இல்லை. ஜேஸன் ஹோல்டர் 9 ரன்களில் வெளியேறினார். நர்ஸ் 5 ரன்களுடனும், பாவெல் 44பந்துகளில் 71 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச வீரர் மோர்தாசை பாராட்டும் சகவீரர் 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்தது. வங்கதேசம் தரப்பில் மோர்தசா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். https://tamil.thehindu.com/sports/article24546035.ece

இளமை புதுமை பல்சுவை

1 month 3 weeks ago
இணையத்தை கலக்கும் தோனியின் புது ஹேர்ஸ்டைல் - யாருடைய ஐடியா இது? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புது ஹேர்ஸ்டைல் அவரது ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர், அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரர், அணியை வழிநடத்தி செல்வதில் வல்லவர், சாதனைகளின் நாயகன் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதே போல ஒருநாள் தொடரை வென்று இங்கிலாந்து வெற்றிவாகை சூடியது. இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு இந்தியா திரும்பினார். இந்நிலையில் நாடு திரும்பியதும் ஹெர்ஸ்டைலை மாற்றியுள்ளார் தோனி. அவருடைய இந்த புதிய ஹெர்ஸ்டைல் முதலில் இன்ஸ்டாகிராமில் பரவத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும், வைரலாக பரவி வருகிறது. தோனியின் இந்த மாற்றத்தை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சமீபத்தில் வெள்ளை தாடியுடன் `சால்ட் அன் பெப்பர்' லூக்கில் வலம் வந்த தோனி தற்போது, வி ஷேப் ஹெர்ஸ்டைலுக்கு மாறியிருப்பது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தான் இந்த புது ஹெர்ஸ்டைலை பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். https://www.vikatan.com

யாழ்அச்சுவேலியில் இராணுவத்தினர் தேர் இழுத்தனர் – (படங்கள் இணைப்பு)

1 month 3 weeks ago
எங்கட சொந்தக்காரர் இன்னும் அழகாக இருப்பினம்😘 வரணியில JCB மெஷினில் கட்டி இழுத்ததைவிட இராணுவத்தை இழுக்கவிட்டது நல்லதுதானே. தமிழர்களிடம் இன நல்லிணக்கம் வந்தாலும் சாதி நல்லிணக்கம் வராது! சித்திவிநாயர் உலாப் போக எவர் இழுத்தாலும் ஏற்றுக்கொள்வார்!

யாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு

1 month 3 weeks ago
யாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவரே இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பிரதி மேயர் தன்னை அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பிலையே தன்னை பிரதி மேயர் அச்சுறுத்தினார் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/37477

யாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு

1 month 3 weeks ago
யாழ். பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு

 

 

யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவரே இன்றைய தினம்  யாழ்.பொலிஸ் நிலையத்தில் பிரதி மேயர் தன்னை அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்துள்ளார். 

38072353_10209948151135111_9487680209671

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்  அது தொடர்பிலையே தன்னை பிரதி மேயர் அச்சுறுத்தினார் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/37477

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர்

1 month 3 weeks ago
யாழ் சமூகம் சார்ந்த அடிப்படை தெளிவு உங்களிடம் அறவே இல்லை. ஆவா குழு முதன்மையான ஆக்கப்டுகிறதே தவிர முதன்மையாக அங்கு இல்லை. யார் அதை இயக்குகிறார்கள் .... ஏன் இயக்குகிறார்கள் என்பதே உங்களுக்கு புரியாது. ஒரு ஆவாவை வைத்துதான் ஒரு 1000 வருட சமூகத்தை நீங்கள் தப்பாக எடைபோடுகிறீர்கள். என்பதை நேரிடையாக எழுதி மனதை புண்படுத்தாமல் விடுவோம் என்று மறைமுகமாக எழுதினாலும் உங்களுக்கு புரியுதில்லை. கோவிலை காப்பாத்த போனீர்கள் ..... இறுதியில் நீங்களும் திறவுங்கோ என்கிறீர்கள் சாதியால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றீர்கள்....... ஒரு ஆவா ஆக கூடி ஒரு 10 வால்வெட்டை செய்திருக்கும் எதோ சர்வதேச இராணுவ ரேஞ்சில் வந்து யாழில் தரை இறங்கிய மாதிரி எழுதுறீங்கள். கொஞ்சம் என்றாலும் லாஜிக்காக எழுதினால்தான் பதில் எழுத முடியும். இப்போதும் திரும்பவும் நான் இங்கு எழுதுவது வடக்கில் 90 வீதமான வாழ் வெட்டுக்கள் எனக்கு தெரிந்து 70-80 தொடங்கி இப்போ வரை சாதி அடிப்படையை கொண்டவையே. உங்களுக்கு யாழுக்கு வாழ் கத்தி எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாது.

யாழில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகனை கத்தியால் தாக்கிய தந்தை

1 month 3 weeks ago
சொந்த மகனையே தனது மதத்தில் வைத்தருக்க முடியாத அற்ப நிலையில்தான் தந்தையின் மதம் இருக்கிறது. அப்படி ஒரு மத்தை பின்பற்றியதற்காக தந்தைதான் தீக்குளிக்க வேண்டும் .... மாறிய மகனை ஏன் வெட்டினார் ? இது கூட தந்தை இவளவு காலமும் காடைபிடித்த மதம் சார்ந்து சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. தந்தையின் மதம் வாள்வெட்டு கத்தி குத்து போன்ற கொடூர மன நிலையில் மனிதர்களை வளர்க்கும் மதமாக இருக்குமோ என்ற அச்சமே எனக்கு வருகிறது. இந்த இடத்தில்தான் தமிழர்களை கொண்டுபோய் விடும் தந்தையின் மதம் என்று நான் இங்கு 10 வருடம் முன்பு எழுதிய போது .... அதை இந்து மத எதிர்ப்பு கருத்தாக பார்த்து என்னை திட்டி தீர்த்தார்கள். இனி யாரை திட்டுவார்கள் என்றுதான் புரியவில்லை?