Aggregator
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கருத்து படங்கள்
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
யானை – மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும் காலநிலை பேரழிவுகள் தீவு நாட்டின் சின்னமான வனவிலங்குகளை நெருக்கடியை நோக்கித் தள்ளுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 20,000 முதல் 27,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையின் யானைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக (சுமார் 6,000 முதல் 7,000 வரை) உள்ளது.
இருந்த போதிலும், இலங்கையில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் யானைகளின் விகிதம் இந்தியாவை விட மிக அதிகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் நடுப்பகுதி வரை 397 யானைகள் இறந்துள்ளன.
இது 2024 ஆம் ஆண்டில் 386 முதல் 388 இறப்புகள் பதிவாகியதைத் தொடர்ந்து வந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் நிலைமை மோசமான உச்சத்தை எட்டியது, இது 488 யானை இறப்புகளுடன் பதிவான மிக மோசமான ஆண்டாக உள்ளது.
பெரும்பாலான யானை இறப்புகள் மனித யானை மோதலால் தொடர்ந்து நிகழ்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், சட்டவிரோத மின்சார வேலிகள், ரயில் மோதல்கள் மற்றும் உணவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக யானைகள் கொல்லப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த ஆண்டு மட்டும், 71 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டன, 56 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்தன, 46 யானைகள் ரயில் விபத்துகளில் கொல்லப்பட்டன, 20 யானைகள் வெடி பொருட்களால் உயிரிழந்துள்ளன. இரண்டு யானைகள் விஷம் வைக்கப்பட்டு உயிரிழந்துள்ளன.
குறிப்பாக கவலையளிக்கும் ஒரு சம்பவத்தில், மிஹிந்தலையில் உள்ள சீப்புகுளம் பகுதியில் மூன்று நபர்களால் தீ வைக்கப்பட்ட பின்னர் ஒரு யானை கடந்த வாரம் கொல்லப்பட்டது.
ஏனைய யானைகளின் மரணங்கள் கைவிடப்பட்ட கிணறுகளில் வீழ்ந்து
ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
ஊடகங்களுக்குப் பேசிய அவர், மின்சார வேலிகள் சேதமடைந்ததால் யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறினார்.
மின்சார வேலி அமைப்பு முழுமையாக செயல்படவில்லை, மேலும் சில வனவிலங்கு பகுதிகள் இன்னும் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
வனவிலங்கு அமைச்சினால் பராமரிக்கப்படும் சுமார் 5,700 கிலோமீட்டர் மின்சார வேலிகளில், 838 கிலோ மீட்டர் வேலிகள் சூறாவளியால் சேதமடைந்தன, அவற்றில் பாதி இப்போது சரிசெய்யப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக நான்கு யானைக் குட்டிகள் இறந்ததாகவும், ஆறு மீட்கப்பட்டதாகவும் யானைப் பாதுகாப்பு பிரதிப் பணிப்பாளர் யு.எல். தௌபிக் தெரிவித்தார்.
மனித யானை மோதலைக் குறைப்பதற்கும் இலங்கையில் மீதமுள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கும் வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசரத் தேவையை இந்த அறிக்கையின் மூலமாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
மக்களையும் கிராம சேவகர்களையும் மோதவிடாதீர்கள் - பொதுமக்கள் ஆதங்கம்
மக்களையும் கிராம சேவகர்களையும் மோதவிடாதீர்கள் - பொதுமக்கள் ஆதங்கம்
மக்களையும் கிராம சேவகர்களையும் மோதவிடாதீர்கள் - பொதுமக்கள் ஆதங்கம்
26 Dec, 2025 | 03:33 PM
![]()
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபா நிதியால் கிராம சேவகர்களையும் மக்களையும் மோதவிடாதீர்கள் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மக்கள் தரப்பில் கூறப்படுவதாவது,
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என அரசாங்கத்தால் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பதிவுகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இரண்டாவது கட்டமாக அதே குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
25 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சிறிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த அனைவருக்கும் வழங்கப்பட்ட கொடுப்பனவு. அதே குடும்பத்திற்கு மீண்டும் 15ஆயிரம் ரூபா கொடுப்பதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்படாத, மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்த குடும்பங்களில் 3, 4 பிள்ளைகள் கூட கல்வி கற்கின்ற நிலை காணப்படுகிறது. அவர்கள் அந்த கொடுப்பனவுக்கு உள்வாங்கப்படாமல் போகின்ற சூழ்நிலை அங்கே காணப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன வகையில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது, அதேவேளை அந்த குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நிவாரணம் கிடைக்காத நிலையில் கிராம சேவகர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் முரண்படுகின்றனர். இந்த அனர்த்தத்தில் உத்தியோகத்தர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பணி புரிந்தார்கள். இந்நிலையில் இது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.
இந்த கொடுப்பனவு கிடைக்காத பல வறிய மாணவர்கள் மன வேதனைக்குள்ளும் தள்ளப்படக்கூடய சூழ்நிலை காணப்படுகிறது. எனவே இந்த கொடுப்பனவானது அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் வழங்கும்போது மாணவர்களுக்துள்ளும் மனஸ்தாபங்கள் ஏற்படாது.
இது குறித்து அரசாங்கமமும், அரச அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்க அதிபர் இதனை ஆளுநர் மட்டத்திற்கு கொண்டு சென்ற அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பனவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
கருத்து படங்கள்
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
26 Dec, 2025 | 01:19 PM
![]()
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதிகளில் நேற்று (25) வீசிய “கிறிஸ்மஸ் புயல்” மற்றும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று எழுந்ததால் “கிறிஸ்மஸ் புயல்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் காற்று, பனிப்பொழிவுக்கு சாத்தியமிருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
குறிப்பாக, தெற்கு கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் கனமழையும் மேற்கு மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, கிறிஸ்மஸ் புயல் கடுமையாக வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!
அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!
26 Dec 2025, 8:11 AM

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக PMK) பெயரை பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ், நாளிதழ்களில் ‘பொது விளம்பரம்’ மூலம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலில் கட்சிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளிதழ்களில் இன்று, டாக்டர் ராமதாஸ் ‘பொது விளம்பரம்’ மூலம் அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம்,
மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.
எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.
மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது.

மக்களே… ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் நீதியின் முழக்கம் – உண்மை மறைக்க முடியாது
இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 என்ற வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, உண்மையை சட்டத்தின் முன் நிறுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும்.
போலிக்கு சட்டத்தில் இடமில்லை: போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிமை கோரப்பட்ட முயற்சியும், அதனை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகளும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் நீதிமன்றம் தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளது.
உண்மை இன்று சட்டமாகியது: இந்தத் தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றும் அரசியல் – இனி இல்லை: நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது, மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயலாகும். இதனை மக்கள் அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காகவே, இந்த அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியிடப்படுகிறது.
இது ஒரு கட்சி அல்ல – இது ஒரு தியாக இயக்கம்: 1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி, மின்சாரம் இல்லாத காலம், சாலை இல்லாத கிராமங்கள், மேடு-பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராந்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன், 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன், தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் – நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள்.
தியாகத்தின் சொத்து – விற்பனைக்கு அல்ல: அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல.
முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?: எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை.
இது எச்சரிக்கை – அலட்சியம் அல்ல: மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.
நீதியை மீறினால் – விளைவுகள் கடுமையானவை: மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://minnambalam.com/pmk-ramadoss-issues-final-warning-to-anbumani/
அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!
யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ்
யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ்
யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ்
வெள்ளி, 26 டிசம்பர் 2025 07:41 AM

இலங்கை விவகாரத்தில் இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் அதிருப்திகள் காணப்பட்டாலும் அந்த விமர்சனங்களை செய்தவர்கள் கூட வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் தகைசார் பேராசிரியரருமான ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆராய்ந்து ஜி.எல்.பீரீஸ் அண்மையில் எழுதி வெளியிட்ட "இலங்கை அமைதி செயல்முறை ஒரு உள்பார்வை" எனும் நூலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நூலில், யுத்தம் பெருமளவில் பாதித்த தரப்பினராக பெண்களே உள்ளனர். மிகுந்த வேதனைக்கும் மன அழுத்தத்திற்கும் மத்தியில் அவர்களின் வாழ்க்கை வெகுவாக மாற்றமடைந்தது.
ஆண்கள் மத்தியில் மரணங்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல்கள் அதிகரித்தமையானது, விதவைகள் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அடிப்படை வாழ்வில் மாற்றங்களை வலிந்து திணித்தது. பொருளாதார சுமை அதிகரித்து அடக்குமுறையானது.
குடும்பங்களை வழிநடத்தும் கட்டாயத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அங்கு அதிகரித்தன. பொருளாதார நெருக்கடி மட்டுமே தனித்த அல்லது ஆதிக்கம் செலுத்தும் காரணியாக அங்கு இருக்கவில்லை.
முடிவற்ற பரவலான மற்றும் வாழ்க்கையை மாற்றும் தாக்கம் மற்றும் அழுத்தங்கள் ஊடுருவி, ஸ்தாபிக்கப்பட்டிருந்த சமூக நடத்தை முறைமைகளை அச்சுறுத்தும் காரணிகளாக அமைந்தன. தேவைகளே கண்டுபிடிப்புகளுக்கான தாயாகின்றன.
தைரியம் மற்றும் மீண்டெழும் தன்மைக்குத் தங்களைத் தாங்களே தகுதியானவர்களாக வௌிப்படுத்திக் கொண்ட பெண்கள், துரதிஷ்டத்திலிருந்து வாய்ப்பினை அரிதாகவே பயன்படுத்திக் கொண்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பாரம்பரிய உறவுகளின் ஆதரவின்றி பெண்கள் புதிய வாழ்க்கை முறையில் கடினமான சவால்களை எதிர்கொண்டனர்.
பொருளாதார வாழ்வாதாரத்திற்கும், கலாசார மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆதரவிற்கும் புதிய வழிகளைத் தேட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
இவை, பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவான சமூகக் கட்டமைப்பின் சுமையை குறைப்பதற்குப் பதிலாக, மேலும் அதிகரிக்கவே வழிவகுத்தன.
வாழ்வாதாரப் போராட்டத்தில், பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதனால் பாரம்பரிய மனப்பான்மையுள்ளவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான புரிதல் குறைந்ததால் புதிய சிந்தனையுடன் சமூகத்தை மறுசீரமைக்க வேண்டியேற்பட்டது. மறுகட்டமைப்பு மற்றும் அணுகுமுறைகளை மறுசீரமைக்கும் முழுமையான செயன்முறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியா ஒரு முக்கியமான காரணியாக இருந்தது.
கடந்த நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களிலும் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் கரிசனை அதிகரித்திருந்தது.
1987 ஆம் ஆண்டின் இந்தியா - இலங்கை உடன்படிக்கையில் இது தௌிவாக வெளிப்பட்டது.இது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு வழிகோலியது.
உள்நாட்டின் சூழ்நிலைகள், இந்தியாவை சமாதானச் செயன்முறையில் முக்கிய வகிபாகத்தை முன்நகர்த்துவதில் தடுத்த போதிலும் இந்தியா அந்த விடயத்தில் நீடித்த கரிசனையை எப்போதும் காண்பித்தது.
இந்திய அமைதிப்படை மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த பரவலான அதிருப்தி காணப்பட்ட போதிலும், இலங்கையில் பெரும்பான்மையினரிடமும் , இந்தியாவின் உறுதியான பங்குபற்றலை வரவேற்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடத்தக்களவில் இருந்தது.
நோர்வே, மத்தியஸ்தம் வகித்து மேற்கொண்ட சில நடவடிக்கைகளை விமர்சித்தவர்களும், வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை.
இலங்கையின் சூழலில் வெற்றிகரமான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இதன் சில கூறுகள் அவசியம் என்பதை உண்மையில் உணர்ந்தமை மிகுந்த சுவாரஸ்யமானது என்றுள்ளது.
இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை அலசி ஆராயும் முக்கிய நூலாக இவ் நூல் விளங்குவதுடன்
சமாதான கால அரசியலையும் வரலாற்றையும் பேராசிரியர்,சிரேஷ்ட அரசியல் ஆளுமை,சட்டவியல் அறிஞர் என்னும் பன்முக ஆளுமை கொண்ட ஒருவரின் குறிப்பேட்டிலிருந்து அறிய விரும்பும் அரசியல் வரலாற்றுத் துறை கல்வியியலாளர்கள், இராஜதந்திரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என்னும் அனைவருக்கும் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களை இந்த நூல் மீள் நினைவூட்டுகின்றது.
ஆங்கிலமொழியிலான இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சட்டபீடத்தின் தகைசார் பேராசிரியருமாவார்.
ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழம் உள்ளிட்ட உலகின் பல புகழ்பூத்த பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்த இலங்கையின் புகழ்பூத்த கல்விமான்களில் இவர் ஒருவராக திகழ்கின்றார்.
வௌிவிவகாரம், நீதி, அரசியலமைப்பு விவகாரம், இன விவகாரம், தேசிய ஒருமைப்பாடு, ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நாட்டின் அமைச்சரவையில் பதவி வகித்த சிரேஷ்ட அரசியல் ஆளுமையாகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.