26 Jun, 2025 | 03:01 PM

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி , மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (26) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் 43 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹெலியவின் குடும்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Virakesari.lk
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
26 Jun, 2025 | 05:15 PM
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று வியாழக்கிழமை (26) கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
தரமற்ற இம்யூனோ குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் இலங்கையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளில் அடிப்படையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவத்தின் பிரதான குற்றவாளிகளாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.
பிரதான குற்றவாளிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைக்காக 350க்கும் மேற்பட்ட சாட்சியாளர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக அயுசுலேட் பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் மருத்துவ வினியோக பிரிவின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் கபில விக்ரமநாயக்க, மருத்துவ வினியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாந்த்தனி சொலமன், கணக்காளர் ( விநியோகம்) நெரான் தனஞ்சய,கை இருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சிறி சந்ர குப்த, வைத்திய விநியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே தர்மசிறி ரத்னகுமார ஹேரத், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவசர கொள்முதல் நடவடிக்கைகள் குறித்த கொள்முதல் குழுவின் உறுப்பினர் வைத்தியர் ஜயநாத் புத்பிட்டிய, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, மருத்துவ வினியோகபிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் அரம்பேகெதர துஷித்த சுதர்ஷன ஆகியோர் சந்தேக நபர்களாக சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் தொடர்ந்தன.
சி.ஐ.டி.யினர் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதாக குற்றவியல் சட்டக் கோவையின் 120/3 ஆம் அத்தியாயம் பிரகாரம் அறிக்கைச் சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் முதல் சந்தேக நபரான பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ தொடர்ந்த்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் பிணையில் உள்ளனர்.
மேலும் கடந்த வாரம் இவ்வழக்கு மாளிகாந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது சி.ஐ.டி. அதிகாரிகளுடன் மன்றில் ஆஜரான பிரதி சொலசீட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம ஆய்வுக்காக வழங்கப்பட்ட மருந்த்து மாதிரிகளின் உள்ளடக்கம் குறித்து நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்து உப்பு நீர் மற்றும் பாக்டீரியாவால் மாசுபட்ட கரைசலை வழங்க அரசாங்கம் 14.44 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்த தரமற்ற மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான சி.ஐ.டி. விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.இது தொடர்பில் மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரமவுக்கு சி.ஐ.டி. குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் விதிவிதாங்களின் படி இறுதி அறிக்கையை கையளித்தது.
அதன்படி கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்கள் தொடர்புபட்டு தருவிக்கப்பட்ட தரமற்ற சுவாச நோயாளர்களுக்கு வழங்கபப்டும் ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷம் அடங்கிய பாக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஜெர்மனி நாட்டின் ஆய்வகத்திலிருந்து அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம மன்றில் தெரிவித்தார்.
இதனைவிட குறித்த விசாரணையுடன் தொடர்புபட்ட புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் ' ரிடொக்ஸி மெப்' எனும் மருந்தின் உள்ளடக்கத்தில் புற்று நோயுடன் போராடக் கூடிய எந்த புரோட்டினும் உள்ளடங்கியிருக்கவில்லை எனவும் வெறும் சோடியம் குளோரைட் மட்டுமே அதில் அடங்கியிருந்ததாகவும் அந்த ஆய்வு கூட அறிக்கைகள் உறுதி செய்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம குறிப்பிட்டார்.
இந்த பின்னிணயிலேயே இந்த விடயத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமும் நியமிக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முர்து பெர்ணான்டோ விடம் விடுத்த எழுத்து மூல வேண்டுகோளை பரிசீலித்து இந்த நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை நிரந்தர மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி இந்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மஹேன் வீரமன் அமாலி ரணவீர பிரதீப் அபேரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகளை கொண்டதாக பிரதம நீதியரசரால் பெயரிடப்பட்டுள்ளது.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தீங்கைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதிச் சேவை சட்டத்துக்குஇ 2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஒரு சிறப்பு வழக்காகக் கருதி நிரந்தர மூன்று பேர் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று சட்டமா அதிபர் கோரியிருந்தார்.
இதற்கமைய பிரதம நீதியரசர் நீதிபதிகளை நியமித்த நிலையில் சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்ச் செய்துள்ளார்.
தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக அயுசுலேட் பயோ டெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜனக பெர்ணான்டோ, சுகாதார அமைச்சின் மருத்துவ வினியோக பிரிவின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் கபில விக்ரமநாயக்கஇ மருத்துவ வினியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாந்த்தனி சொலமன் கணக்காளர் ( விநியோகம்) நெரான் தனஞ்சயஇகை இருப்பு கட்டுப்பாட்டாளர் சுஜித் குமாரஇ சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சிறி சந்ர குப்த வைத்திய விநியோக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே தர்மசிறி ரத்னகுமார ஹேரத்இ முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவசர கொள்முதல் நடவடிக்கைகள் குறித்த கொள்முதல் குழுவின் உறுப்பினர் வைத்தியர் ஜயநாத் புத்பிட்டியஇ சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க மருத்துவ வினியோகபிரிவின் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் அரம்பேகெதர துஷித்த சுதர்ஷன ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தொடர சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Virakesari.lk