Aggregator

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3  21 FEB, 2024 | 09:28 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என   தேசிய சுதந்திர முன்னணியின்   தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல்   வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில்  பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து  மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத  நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு  தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் ஹரின் பிரனாந்து  அண்மையில் இந்தியாவுக்கு சென்று 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து  இந்தியாவில் ஆற்றிய உரையை  ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை.

தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார்.

டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச்  மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக  மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள்.  பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே  பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார்.

அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள்  ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு  வழங்குவார்கள்.

நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து  ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது 'எதனையும் குறிப்பிட முடியாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர்  தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/176922

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச

1 month 3 weeks ago
20 FEB, 2024 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை எந்தளவுக்கு நியாயமானது. சுயாதீனம் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டதை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது 'மத்திய வங்கியின் புதிய சட்டத்துக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், அது மத்திய வங்கியின் சுயாதீனம்' என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார். மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் தீர்மானம் எடுக்க இடமளிக்க கூடாது என்பதற்காகவே 'புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளை உணவை உட்கொள்வதில் போராடுகிறார்கள். வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் திண்டாடுகிறார்கள். இவ்வாறான பின்னணியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது. கரண்டி தம் கையில் இருப்பதால் மத்திய வங்கி எண்ணம் போல் உணவை பரிமாறிக் கொள்கிறது. ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படும் சூழலே மத்திய வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/176889

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச

1 month 3 weeks ago
20 FEB, 2024 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்புக்கு  மத்தியில் மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை  எந்தளவுக்கு நியாயமானது.

சுயாதீனம் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு  சம்பளம் அதிகரிக்கப்பட்டதை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது 'மத்திய வங்கியின் புதிய சட்டத்துக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், அது மத்திய வங்கியின் சுயாதீனம்' என்றும்  அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் தீர்மானம் எடுக்க இடமளிக்க கூடாது என்பதற்காகவே 'புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்.

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளை உணவை உட்கொள்வதில் போராடுகிறார்கள். வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் திண்டாடுகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது.

கரண்டி தம் கையில் இருப்பதால் மத்திய வங்கி எண்ணம் போல் உணவை பரிமாறிக் கொள்கிறது. ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படும் சூழலே மத்திய வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/176889

முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!

1 month 3 weeks ago
ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!

1 month 3 weeks ago
13 ஐ அமுல்ப் படுத்துமாறு இந்தியா கொடுக்கும் அழுத்தம் இலங்கைக்கு சுகமளிக்கும் மசாஜ் போல் இருப்பதால் 13 ஐ அமுல்ப்படுத்தி அந்த மசாஜ் சுகத்தை இலங்கை இரக்க விரும்பவில்லைப் போலும். 😂

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
படு கொலை செய்யப்பட்ட அத்த 600 பொலிசாரும் யுத்தத்தில் ஈடுபட்டு சரணடைந்தவர்கள் அல்ல. சமாதான பேச்சுவார்தை நடந்த சம காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களை புலிகள் சுற்றி வளைத்த போது அன்றைய ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த உத்தியோகஸ்தர்களே. “நீங்கள் சரணடையுங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உங்களை வெளியே கொண்டுவர தாம் நடவடிக்கை எடுக்கிறோம்”, என்ற உறுதி மொழியோடு கிழக்கு பொலிஸ் அத்தியட்சகருக்கு ஜனாதிபதி பிரேமதாச விசேட பணிப்புரையை விடுத்திருந்தார். கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது. கருணா இயக்கத்தை விட்டு வெளியேறும் வரை அதற்காக தண்டிக்கப்படாதது தலைமையின் உத்தரவின் படியே அது நடந்தது என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
சனநாயகம்தான் திறம் என்பார்கள். மேற்கின் கொள்கைகள்தான் better என்று கூறுவர. மேற்கிலேயே வசிப்பார்கள். ஆனால் மேற்கால் வெறுக்கப்படும், நாகரீக சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத அரசியல் தனிமனிதப் ப்டுகொலைகளை வரவேற்பார்கள். போற்றுவார்கள். வாழ்த்துவார்கள். ஆனால் தனிமனிதப் ப்டுகொலைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை மட்டுமல்ல, அவை எமக்குத் தீங்கானவை எனக் கூறுவோரை துரோகி என முத்திரை குத்துவர். ஒண்ணுமே புரியல உல்கத்துல. 😩

இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்

1 month 3 weeks ago
யூலி சங் ..இன்னும் டின்னர் அரேஞ்ச் பண்ணவில்லைப்போல...இந்திய நாணயமே புழக்கத்தில் வந்திட்டுது ..இந்த மனுசன் எங்கையப்பா இருக்குது..

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

1 month 3 weeks ago
இதே அந்தோனியார்தான் மன்னார் தள்ளாடியிலும் இருக்கிறார் , இன்னும் கொச்சிக்கடையிலும் இருக்கிறார். இங்கெல்லாம்போய் கும்பிடலாம்தானே? அங்குஏதும் விஸேடம் என்றால் அதை செய்யலாம்.

குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்

1 month 3 weeks ago
பாவம் மக்கள் போராடி ஓய்ந்து விடடார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை. தமிழ் தலைமையே அடிபிடி பட்டுக்கொண்டு இருக்கும்போது இனி இதுதான் நிலைமை. இதுதான் சந்தர்ப்பம் என்று அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். தமிழ் தலைமைகள் நீதிமன்ற படி ஏறி திரியவேண்டியதுதான் அவர்கள் தங்கள் காரியத்தை நடத்துகிறார்கள். இனியென்ன கருத்து களத்தில் எழுதி தள்ள வேண்டியதுதான்.

முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!

1 month 3 weeks ago
தங்கத்தை வாங்கினவன், எடுத்தவன் எல்லாம் தங்கத்தோடு உலகம் முழுவதும் வசதி வாழ்க்கை வாழ்கிறான். இந்த பயித்தியங்கள் எல்லாம் தங்கம் தங்கம் எண்டு நிலத்தை பிளக்குதுகள். பாவம், எத்தனை நாளைக்குத்தான் இப்படியே நேர காலத்தை, பணத்தை வீணாக்க போகிறார்களோ தெரியவில்லை.

இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு

1 month 3 weeks ago
சுரண்டுவது வேறு , கொள்ளையடிப்பது வேறு. இந்திய மீனவர்கள் இப்போது கடத்தி கொள்ளையர்களாக மாறி விடடார்கள். கொள்ளையடித்தல் மட்டும் பரவாயில்லை அங்குள்ள மீன் உட்பதியாகும் பாறைகளெல்லாவற்றையும் அடியோடு நாசமாகி விட்டு செல்லுகிறார்கள். அவர்களது பகுதியில் மீன்கள் இல்லாமல் போவதட்கு முக்கிய காரணமே இதுதான். இலங்கை கடட்படை இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இப்படி எழுதினால் துரோகி படடம் கிடைத்தாலும் கிடைக்கும்.