வாழும் புலம்

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

11 hours 47 minutes ago

New-Project-1-15.jpg?resize=600%2C300&ss

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1451646

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி

3 days 2 hours ago

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்

Published By: Vishnu

28 Oct, 2025 | 08:17 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான 'இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்' எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட சட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டிருக்கும் மேற்படி தீர்மானத்தில் 'ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், மிகமோசமான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை அத்தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை ஐக்கிய நாடுகள் இனவழிப்புப் பிரகடனத்தின்படி இனவழிப்பாகக் கருதமுடியுமா என்பது பற்றி சர்வதேச கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆராயுமாறு சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு, சுவிற்ஸர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி பல தசாப்தகாலமாக அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை உள்வாங்கக்கூடியவகையில் மிகத்தெளிவான மனித உரிமைகள்சார் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டுக்கொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

மேலும் வருடாந்தம் மேமாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று நடைபெறும் நிகழ்வு உள்ளிட்ட நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சுவிற்ஸர்லாந்தில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பும், நீதியும் உறுதிப்படுத்தப்படும் வரை அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்புவது தவிர்க்கப்படவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/228926

இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்: நீதிக்குப் பதிலாக தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையே ஊக்குவிக்கிறது - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

4 days 2 hours ago

27 Oct, 2025 | 06:18 PM

image

(நா.தனுஜா)

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வி.ரவிகுமார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இப்புதிய தீர்மானமானது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

அத்தோடு 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படை காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியிருப்பதுடன், தமிழர் தாயகத்தில் பல தசாப்த காலமாக அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டவரும் வன்முறைகளுடன் கூடிய இனவழிப்பின் கூறுகளை முழுமையாகப் புறக்கணித்திருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று 1956 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சட்டத்துக்கு முரணான கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெற்றுவருவதைக் காண்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை வசம் 120,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ள போதிலும், இப்புதிய தீர்மானம் தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதாக அதில் விசனம் வெளியிடப்பட்டிருப்பதுடன் நம்பகத்தன்மையும், சுயாதீனத்துவமும் அற்ற உள்ளகப்பொறிமுறைகளிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை 'ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திடம் சாட்சியம் அளிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அதுகுறித்த இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே அதனை வழங்குகின்றனர். அவ்வாறிருக்கையில் மேற்படி சாட்சியங்கள் இலங்கையின் அரச கட்டமைப்புக்களுக்கு அனுப்பப்படுமாயின், அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு வழிவகுப்பதுடன் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைவடையச்செய்யும்' என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/228824

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

5 days 20 hours ago

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on October 23, 2025 by சமர்வீரன்

342 0

K800_IMG_4047-300x225.jpgயேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது.

அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது.

நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது.

K800_IMG_3911.jpg

K800_IMG_3908.jpg

K800_IMG_3912.jpg

K800_IMG_3914.jpg

K800_IMG_3955.jpg

K800_IMG_3956.jpg

K800_IMG_4047.jpg

K800_IMG_3915.jpg

QKMP3513.jpg

FJIR2655.jpg

LNCF4789.jpg

XTAS2169.jpg

XTIF3381.jpg

NDDV5467.jpg

XBHP1592.jpg

CMWE8159.jpg

CMWE8159-1.jpg

QRYI5917.jpg

VNGF0866.jpg

XTSN2311.jpg

EZNG0331.jpg

XHSZ2436.jpg

PFLL8463.jpg

XJYK1850.jpg

XLAX3417.jpg

K800_LNCF4789.jpg

K800_XHDU1293.jpg

GBDH7282.jpg

XPAE6833.jpg

K800_QKMP3513.jpg

K800_IZAP5402.jpg

K800_NTHU2536.jpg

K800_XHDU1293.jpg

K800_FJIR2655.jpg

K800_LNCF4789.jpg

K800_UGRW1986.jpg

K800_XTAS2169.jpg

K800_XTIF3381.jpg

K800_LIWN2571.jpg

K800_NDDV5467.jpg

K800_XBHP1592.jpg

K800_PYPF4416.jpg

K800_RKKQ5293.jpg

K800_CMWE8159.jpg

K800_EJRS3148.jpg

K800_PMVU5554.jpg

K800_QRYI5917.jpg

K800_HFLI5021.jpg

K800_JVGW1872.jpg

K800_VNGF0866.jpg

K800_XTSN2311.jpg

K800_EZNG0331.jpg

K800_XHSZ2436.jpg

K800_HTZG0369.jpg

K800_XAJB6791.jpg

K800_WYGG5820.jpg

K800_XBGR9137.jpg

K800_PAAA0397.jpg

K800_QUQW3632.jpg

K800_VEVT7872.jpg

K800_MWBF5053.jpg

K800_UCRP7334.jpg

K800_NZJX5538.jpg

K800_ADUO8593.jpg

K800_CYAP3445.jpg

K800_KZVI0011.jpg

K800_PUVM3272.jpg

K800_EDIU8195.jpg

K800_BPDH0793.jpg

K800_LUPT0838.jpg

K800_XUHR9433.jpg

K800_EKUZ1046.jpg

K800_GIKZ3824.jpg

K800_HYAF4076.jpg

K800_HTGN2283.jpg

K800_NONQ4884.jpg

K800_RMCI4048.jpg

K800_MBMO9762.jpg

K800_NEXL4153.jpg

K800_OPML6297.jpg

K800_OZII3836.jpg

K800_PDTF4045.jpg

K800_PFLL8463.jpg

K800_RHQY6343.jpg

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_5b4

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_5ae

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_0f7

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_667

WhatsApp-Bild-2025-10-23-um-18.03.05_8bd

https://www.kuriyeedu.com/?p=704009

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 weeks 4 days ago

பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை.

இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது.

இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளனர்.

பிரித்தானிய திறைசேரி, இன்னும் பல நிறுவனக்களுக்கும் இவர்கள் பல மில்லியன் ஆப்பை செருகி உள்ளனர்.

நிறுவனதின் சொத்து 150 மில்லியனை கோர்ட் முடக்கி உள்ளது. ஆனால் இது இவர்களின் கடனில் 10% மட்டுமே.

இவர்களின் நீச்சல்தடாகம், சோனா, ஸ்பா வசதிகளுடனான, வேபிரிஜ் எனும் அதீத செல்வந்தர் வாழும் இடத்தில் உள்ள 5 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்கபோட்டுள்ளனராம்.

இவர்கள் இலங்கைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

(மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 )

https://www.theguardian.com/business/2025/sep/04/uk-court-freezes-150m-of-assets-of-collapsed-prax-lindsey-oil-refinery-owner

https://www.theguardian.com/business/2025/aug/20/loan-irregularities-collapse-prax-lindsey-oil-refinery

https://finance.yahoo.com/news/couple-behind-doomed-oil-refinery-070000350.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAEZhFmvvT-Q_g2dpoByQb88U5CLGaHOs6eKHVGfyQG1TemU60KuopVeWlK8Pp3WXx84mkZfOJIrh-0HKWxKKfgRoGpVoDqH6WCvCC4ao7KTBMevyKJB03V1x2Cp9ffzD-DfoN8KWJl9XRKg70LBfxjSEJ1YSS131b2y_Xb6pIJLd

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம்

2 weeks 5 days ago

பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.

போலியான திருமணம்

பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் | Migrant Deported Sham Marriage Applies

சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார்.

குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்துள்ள அந்த பாகிஸ்தானியருக்கு தொடர்புடைய ஸ்லோவாக்கியா இளம் பெண்ணுடன் பிள்ளைகளும் உள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பொருட்டு, வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களில் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொள்ளும் குழுவில் நசீர் கலீல் என்பவரும் ஒருவர் என வெளிச்சத்திற்கு வந்தது.

ஸ்லோவாக்கிய பெண்ணுடன் சட்டத்திற்கு உட்பட்டு மீண்டும் திருமணம் முடிந்த ஓராண்டுக்கு பிறகு, 2019ல் நசீர் கலீல் பாகிஸ்தானிற்கு நாடுகடத்தப்பட்டார். மட்டுமின்றி, பிரித்தானியாவில் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கு குறித்த பெண்ணிற்கு காலவரையற்ற விடுப்பு வழங்கப்பட்ட பிறகு அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்தே, குடும்ப விசா மூலம் இங்கிலாந்து திரும்புவதற்கான முயற்சியில் அவரது சட்டத்தரணிகள் உள்விவகார அலுவலகத்திற்கு புதிய விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளனர்.

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் | Migrant Deported Sham Marriage Applies

மட்டுமின்றி, பிரித்தானியாவில் வசிக்கும் பொருட்டு அந்த பாகிஸ்தானியர் சட்ட அமைப்பைப் பல வழிகளில் பயன்படுத்தியுள்ளார். நசீர் கலீலுக்கு விசா உத்தரவாதம் அளிப்பவர் அவரை விட இரண்டு தசாப்தங்கள் இளையவர், மேலும் பாடசாலை மாணவியாக இருந்தபோது அந்த நபரின் போலியான திருமணத்திற்கு இலக்கானவர்.

சட்டப்பூர்வ உரிமை

2012 ஆம் ஆண்டு ரோச்டேலில் உள்ள குடும்பத்தைப் பார்க்க கலீல் முதன்முதலில் பிரித்தானியாவிற்கு வந்தார். ஆரம்பத்தில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் சிறிது காலம் தங்க அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட காலம் கடந்தும் அவர் பிரித்தானியாவில் தங்கியிருந்தார். மட்டுமின்றி, பாகிஸ்தானில் உள்ள தமது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் | Migrant Deported Sham Marriage Applies

தொடர்ந்து நடந்த விசாரணையில், ஸ்லோவாக்கியா சிறுமிக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் திருமணமும் நடந்துள்ளது.

அதன் பின்னர் கலீல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள இயக்க சுதந்திரச் சட்டங்களை மேற்கோள் காட்டி, பிரித்தானியாவில் தங்குவதற்கு தனக்கு சட்டப்பூர்வ உரிமை இருப்பதாக குறிப்பிட்டு ஸ்லோவாக்கியா இளம் பெண்ணுடன் நடந்த திருமண ஆவணங்களைப் பயன்படுத்த முயன்றார்.

மட்டுமின்றி, 2016ல் அவர் நாடுகடத்தப்படும் போது பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் வாதிட்டுள்ளார்.

தற்போது மீண்டும் குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் தற்போது உள்விவகார செயலாளர் ஷபானா மஹ்மூத் வசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lankasri News
No image previewபோலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித...
பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்டபுலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்க...

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

2 weeks 5 days ago

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

  1. October 10, 2025

Sivavathani_Daughter_Wedding_03-768x1024

சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது.

சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன.

வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர்.

இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும்.

சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது.

ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள்.

எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்).

https://www.thesamnet.co.uk/?p=113593

தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!

3 weeks 2 days ago

download-7.jpg?resize=300%2C168&ssl=1

தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார்.

சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருந்தன.

இந்த விடுமுறை மூலம் அரசு பொதுக் கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலத்துக்கு கவின் நியூசம் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி இனி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1449893

சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் - சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு

1 month 1 week ago

Published By: Vishnu

19 Sep, 2025 | 05:36 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் ஜுலி டுபே கக்னன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஸ்ரீ ஞானேஸ்வரன் (நிகழ்நிலை முறைமையில்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் உள்ளகப்பொறிமுறைகள் மூலமாகவன்றி, சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக மாத்திரமே இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியும் என்ற விடயத்தைப் பொதுவாக வலியுறுத்தினர்.

அதன்படி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சுட்டிக்காட்டிய ருக்ஷா சிவானந்தன், உள்நாட்டில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையொன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் தப்பிப்பிழைத்தோரின் நம்பிக்கையை வென்றெடுத்ததும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்கக்கூடியதும், தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதுமான சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் வழக்குத்தொடரல் பொறிமுறையை விரைவாக ஸ்தாபிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.

அதேவேளை நிகழ்நிலை முறைமையில் உரையாற்றிய வடமாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன், 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பு யுத்தம், இனவழிப்பு கலவரம், இனப்படுகொலை, அரச அனுசரணையுடனான கண்காணிப்பு, ஒடுக்குமுறை, அத்துமீறல், கைது, வன்முறை, சித்திரவதை, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள், காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்ததுடன் அவை இப்போதும் தொடர்வதாக விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது நம்பகத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணைப்பொறிமுறையொன்று உடனடியாக நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இதுகுறித்து கருத்துரைத்த சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், தமிழ்மக்களின் மீண்டெழும் தன்மையைப் பாராட்டியதுடன் நீதிக்கான தொடர் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தோடு இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஐ.நாவின் முயற்சியை அங்கீகரித்த அவர், இருப்பினும் சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் என்றார்.

மேலும் ஆதாரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட முழுமையான வழக்கு கோப்புகளை தயாரிக்கவேண்டிய முக்கிய வகிபாகத்தை தமிழ்ச்சமூகம் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலைன் வேனர், பல்வேறு தேசிய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஊடாக தமிழர்களின் நீதியைக்கோரும் செயன்முறை தொடரவேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்ததாக, 'பொறுப்புக்கூறல் சார்ந்த முயற்சிகளை சீராக வடிவமைப்பதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், தப்பிப்பிழைத்தோருக்கும் முக்கிய பங்குண்டு. குறிப்பாக சான்றுகளை ஆவணப்படுத்துவதிலும், நீதியை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முன்னரங்கில் நின்று பணியாற்றுகின்றனர்' என சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/225465

இரண்டு வருடங்ளுக்கு ஆணையை நீடியுங்கள் ; பொறுப்புக்கூறல் தொடர்பில் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக இணைந்து வேண்டுகோள்

1 month 2 weeks ago

16 Sep, 2025 | 09:02 AM

image

நா.தனுஜா

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் உங்களால் ஆரம்பிக்கபட்டிருக்கும் நிலையில், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடிய வகையில் வலுவானதொரு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு வரவேற்கத்தக்கது எனினும், அத்தகைய கட்டமைப்பொன்றை ஸ்தாபித்து, அதனை முழுமையாக இயங்கச்செய்வதற்கு மாதங்களோ அல்லது வருடங்களோ ஆகலாம். 

அதுமாத்திரமன்றி அதனைச் செய்வதற்கான போதுமான அரசியல் தன்முனைப்பு வெளிக்காட்டப்படவேண்டும். அத்தோடு சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் எனக் கூறுவது மாத்திரம் போதுமானதன்று. மாறாக அதுகுறித்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இதுவரையில் குறைந்தபட்சம் சுமார் 10 வெவ்வேறு ஆணைக்குழுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரும் கூட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் உள்ளகப்பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட தரப்பினரும், அவர்களது குடும்பத்தினரும், இழப்புக்களுக்கு முகங்கொடுத்த சமூகத்தினரும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப்பேணி வந்திருக்கிறார்கள். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவிகளுடன் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் எவையும் அடையப்படாத நிலையில், இம்முன்மொழிவு மீண்டுமொரு தோல்விக்கே வழிவகுக்கும்.

அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பு என்பன நம்பத்தகுந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு மிக அவசியமானவையாகும். எனினும் அவரை தற்போது நடைமுறையில் இல்லை.

மாறாக நீதியைக்கோரிப் போராடுபவர்கள் அரசாங்கத்தினதும், பாதுகாப்புத்தரப்பினரதும் தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.  எனவே 2015 ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட செயற்திறன்மிக்க சர்வதேச பங்கேற்பின்றி, தனித்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஆதரவையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தமுடியாது. 

கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கடந்தகால மீறல்கள் தொடர்பிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் ஊடாகக் கண்டறியப்பட்டன.

இருப்பினும் உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைக்கான நம்பத்தன்மையை சிறுபான்மையின மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தவறிவிட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://www.virakesari.lk/article/225193

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

1 month 3 weeks ago

Published By: Priyatharshan

10 Sep, 2025 | 08:34 AM

image

பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து  இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன.

சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

2024 செப்டம்பர், நவம்பர், 2025 மே மாதங்களில் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களைத் இந்த தீர்மானம் வரவேற்றுள்ளது.

அத்துடன், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது.

அனைத்துத் தரப்பினராலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை அது கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. 

எனவே, இச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அதனை நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல வழக்கு விசாரணைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து தீர்மானத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க அகழ்வதற்குத் தேவையான நிதி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும் இலங்கை அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதையும், சுதந்திரமான சட்டவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தீர்மானம் வரவேற்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் நீட்டிக்கவும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை எதிர்கால அமர்வுகளில் சமர்ப்பிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது. 

https://www.virakesari.lk/article/224686

தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரிக்கையை ஆதரிக்கிறோம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவிப்பு

1 month 3 weeks ago

09 Sep, 2025 | 09:23 PM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுயாதீன விசாரணையையும், உண்மையான பொறுப்புக்கூறலையும் கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு வட கரோலினா ஒரு வீடாக இருப்பதனையிட்டுப் பெருமிதமடைவதாகவும், இந்த மனிதப்புதைகுழி அகழ்வை அடுத்து அதுபற்றித் தன்னைத் தொடர்புகொண்டு பேசிய தனது தொகுதி மக்களை நினைத்துப்பார்ப்பதாகவும் காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரோஸ் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தான் ஆதரிப்பதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224676

ஐ.ஓ.எம் அனுசரணையுடன் விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

1 month 3 weeks ago

விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:30 AM

image

(நா.தனுஜா)

நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வுகாணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

அத்தோடு இச்செயற்திட்டத்தின்கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத்தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.

மேலும் இச்செயற்திட்டத்தின் ஊடாக வட, கிழக்கில் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல்,  படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், எல்லைகளை உரியவாறு மீள்நிர்ணயிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/224244

இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்துக்கான சான்றாகிறது செம்மணி ; இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரையுங்கள் - இணை நாடுகளுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகப் பரிந்துரை

1 month 4 weeks ago

02 Sep, 2025 | 06:00 PM

image

(நா.தனுஜா)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான கூறுகளை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணையனுசரணை நாடுகளுக்கு கூட்டாகப் பரிந்துரைத்துள்ளன.

இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை, புதுடில்லி தமிழ்ச்சங்கம், ஜேர்மனி தமிழர் கொள்கைப் பேரவை, சுவிட்ஸர்லாந்து தமிழ் நடவடிக்கைக் குழு என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ஜேர்மனி, நெதர்லாந்து, கனடா, அயர்லாந்து, தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து, மொரீஸியஸ் ஆகிய நாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் 18 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைந்து இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள், பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைத்திருக்கும் பரிந்துரை ஆவணத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை கடந்த ஏழு தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பிலும், போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களிலும் ஈடுபட்டிருப்பதுடன் அதன் விளைவாக சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு அகதிகளாகத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கிறது. சாட்சியங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், ஆக்கபூர்வமான முறையில் இழப்பீடுகளை வழங்கல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தக்கூடியவகையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய 3 பிரதான விடயங்களை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கையைக் கோரும் வகையில் எதிர்வரும் இம்மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை வரைவு அமையவேண்டும்.

குறிப்பாக அண்மையில் யாழ். செம்மணியிலும், திருகோணமலையின் சம்பூரிலும், மன்னாரிலும் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவை உள்ளடங்கலாக அங்கு அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்களும் இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கத்துக்கான வலுவான ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. எனவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை 1948 தொடக்கம் இப்போது வரை நிகழ்த்தப்பட்ட சகல அட்டூழியங்கள் தொடர்பிலும் ஆதாரங்களை திரட்டும் வகையில் விரிவுபடுத்தப்படவேண்டும்.

அதேபோன்று இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உடனடியாகப் பாரப்படுத்துவதற்கு அவசியமான வலுவான ஆதாரங்களுடன்கூடிய 15 - 20 முக்கிய வழக்குகளை அடையாளம் காணவேண்டும்.

அடுத்ததாக இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைத்தல், உலகளாவிய நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்தல், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை ஒன்றை ஸ்தாபிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஐ.நா பொதுச்சபைக்குப் பரிந்துரைக்கப்படல் என்பவற்றுக்கான கூறுகள் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படவேண்டும்.

அத்தோடு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், தமிழர் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணித்தல், மீள்குடியேற்றம், நிலையான வாழ்வாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஐ.நா நிபுணர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடைக்கால உள்ளகக் கட்டமைப்பொன்று நிறுவப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224054

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

2 months ago

7bd69738-01e2-46e5-bbca-779b5d60d270.jpg

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

7bd69738-01e2-46e5-bbca-779b5d60d270.jpg?resize=600%2C450&ssl=1

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும் எனவும், இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

f4ee3c2d-2789-4886-a4b9-294593b61c01.jpg?resize=600%2C450&ssl=1

https://athavannews.com/2025/1445381

செம்மணிக்கான நீதியை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் - பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு புலம்பெயர் தமிழர்கள் மகஜர்

2 months 1 week ago

20 AUG, 2025 | 01:58 PM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் அதேவேளை அம்மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

செம்மணி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரிட்டனின் ஆதரவைக்கோரி பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இம்மகஜரில் கையெழுத்திட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களும், தப்பிப்பிழைத்தவர்களும், தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் பிரதிநிதிகளுமாகிய நாம், அண்மையில் தமிழர் தாயகத்தில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உங்களுக்கு இந்த மகஜரை எழுதுகிறோம்.

அரச அனுசரணையுடனான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாம் ஏற்கனவே அறிந்திருந்த உண்மை, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியின் ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

செம்மணிப்படுகொலை என்பது தனியொரு குற்றச்செயல் அல்ல. மாறாக அது நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டத்தின் ஓரங்கமேயாகும்.

நாம் பல தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களாவோம். 

இன்று நாம் எமக்காக மாத்திரமன்றி, நீதியோ, நினைவுகூரலோ, அங்கீகாரமோ இன்றிப் புதைக்கப்பட்ட மற்றும் அமைதிப்படுத்தப்பட்ட சகலருக்காகவும் குரல் எழுப்புகிறோம்.

எமது அமைப்பானது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதையும், தமிழீழத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதையும் இலக்காகக்கொண்டு தொடர்ச்சியாகப் பணியாற்றிவருகிறோம். 

அதன் நீட்சியாக இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதேவேளை இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். இருப்பினும் அந்நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவையன்று என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு தொடர்கிறது என்பதற்கான சான்றாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றல், செம்மணி விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவரல், செம்மணி உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவிடம் வலியுறுத்தல், செம்மணிப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தல், தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தல், செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்கல், தமிழர்களை இலக்குவைத்துத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் நில அபகரிப்புக்களைக் கண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும். 

https://www.virakesari.lk/article/222932

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை

2 months 1 week ago

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை

20 August 2025

1755659870_7566490_hirunews.jpg

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன.

பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு கடிதம் ஒன்றின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இதனை குறிப்பிட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தமைக்காக இலங்கையை அந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.

அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான பேரவையின் இயலாமை குறித்து அந்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 1998 ஆம் ஆம் ஆண்டு கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில், செம்மணியில் 300–400 உடல்கள் இராணுவ உத்தரவால் புதைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். எனினும், 1999 ஆம் ஆண்டு 15 உடல்கள் மட்டுமே தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது செம்மணியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன்,சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

அதேநேரம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன.

பிரித்தானியர்கள் 1948 ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது, அவர்கள் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர்.

அவர்கள் தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த கடிதம் மூலம் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சந்தேகிக்கப்படும் புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் விசாரணைகளை ஆதரித்தல், ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயத்தை நிறுவ அழுத்தம் கொடுத்தல், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, ஐ.நா.வின் கண்காணிப்பில் சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த அமைப்புகள் முன்வைத்துள்ளன.

https://hirunews.lk/tm/415520/demand-to-recognize-the-eelam-tamil-struggle-as-an-unresolved-decolonization-issue

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை

2 months 2 weeks ago

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை

Published By: RAJEEBAN

12 AUG, 2025 | 02:20 PM

image

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? என பிரித்தானிய தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ் மக்களின் நிலமான மணலாற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக தமிழ் பிராந்தியமான மணல் ஆறு கடந்த பல தசாப்தங்களாக ஒரு சோகமான மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் துடிப்பான தமிழ் கிராமமாக இருந்த இது வளர்ச்சி என்ற போர்வையில் வலுக்கட்டாயமாக மறுபெயரிடப்பட்டு சிங்களமக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரு ஓயா நீர்ப்பாசனத் திட்டம் மூலம் 1988 ஏப்ரல் 16 அன்று இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் மணல் ஆறு என்ற பெயரை வேலி ஓயா என்ற சிங்களப் பெயராக அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டது. இது வெறும் மறுபெயரிடுதல் அல்ல - இது பிராந்தியத்தின் மக்கள்தொகை மற்றும் கலாச்சார அடையாளத்தை மாற்றுவதற்கான ஒரு பரந்த மற்றும் கணக்கிடப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்

கட்டாய இடப்பெயர்வு மற்றும் வன்முறை

1984 டிசம்பர் 1 முதல் 15 வரை முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் அமைந்துள்ள தமிழ் கிராமங்களில் ஒருங்கிணைந்த படுகொலைகள் நடத்தப்பட்டன. இந்தக் கொடூரமான தாக்குதல்கள் தமிழ் பொதுமக்களை குறிவைத்தன, அவர்களில் பலர் பல நூற்றாண்டுகள் பழமையான நிலத்துடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர் மேலும் இப்பகுதியில் அரசால் ஆதரிக்கப்படும் சிங்களக் குடியேற்றம் தீவிரமாகத் தொடங்கியது.

அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேறிகள் கொண்டுவரப்பட்டனர். இலங்கை இராணுவத்தால் பெரிதும் பாதுகாக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் பூர்வீக மக்கள் வறுமையில் வாடினர். அவர்களின் நிலங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அணுகுவதில் அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  போன்ற கொடூரமான சட்டங்களின் பயன்பாடு அத்தகைய செயல்களுக்கும் தண்டனையிலிருந்து விலக்குக்கும் சட்டப்பூர்வ மறைப்பை வழங்கியது.

மக்கள்தொகை மாற்றம் மற்றும் முறையான காலனித்துவம்

1980 களில் இருந்து குறிப்பாக 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் அரசு ஆதரவுடன் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. சிங்களக் குடியேற்றங்கள் எண்ணிக்கையிலும் உள்கட்டமைப்பிலும் வளர்ந்துள்ளன. அதே நேரத்தில் தமிழ் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டவை வளங்கள் குறைவாக உள்ளன மேலும் பெரும்பாலும் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றன அல்லது கண்காணிக்கப்படுகின்றன.

மக்கள்தொகை வரைபடங்கள் (கீழே இணைக்கப்பட்டுள்ளன) 2015 இல் பெரும்பான்மையான தமிழர் பகுதியான வெலி ஓயாவின் தற்போதைய நிலைக்கு ஆபத்தான மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன - பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு மற்றும் காலனித்துவத்தின் காட்சி பிரதிநிதித்துவம்.

தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது?

நமது மொழி நமது நிலம் நமது எதிர்காலம்

நிலம் என்பது வெறும் மண் அல்ல - அது கலாச்சாரம் அடையாளம் நினைவகம் மற்றும் எதிர்காலம். நமது நிலத்தின் அரிப்பு நமது மொழி மதம் மற்றும் வாழ்க்கை முறையின் உயிர்வாழ்வை நேரடியாக பாதிக்கிறது.

கடந்த 77 ஆண்டுகளில் நாம் அதிகமாக இழந்துவிட்டோம். இப்போது எழுந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நமது நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் நமது தமிழ் தாயகத்தைப் பாதுகாக்கவும் பொக்கிஷமாகக் கருதவும் நீதியைக் கோரவும் நாம் ஒன்றிணைய வேண்டும் - நாளை அல்ல அடுத்த ஆண்டு அல்ல - இப்போதே.

https://www.virakesari.lk/article/222399

குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை

2 months 3 weeks ago

இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார்.

இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார்.

அகதிகள் முகாம் 

இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,"1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன்.

குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை | Surya Agaram Foundation Eelam Tamil Woman

சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றிற்கு எங்களை அழைத்து சென்றார்கள். பாடசாலை படிப்பை முடித்த பின்னர், குடியுரிமை இல்லாததால் பட்டபடிப்பு படிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும், அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் மூலம் படித்து பட்டம் பெற்று சட்டத்தரணியாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு பல இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.  

https://tamilwin.com/article/surya-agaram-foundation-eelam-tamil-woman-1754475351

செம்மணி மனித புதைகுழி - சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெற வேண்டும் - உமா குமரன்

2 months 3 weeks ago

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் - உமா குமரன்

Published By: RAJEEBAN

06 AUG, 2025 | 11:51 AM

image

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு.

அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.

பிரிட்டன் மனித புதைகுழிதொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன்.

இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன்.

அதனை வாசித்துக்கொண்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.. சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து நமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும்.

நாடாளுமன்றம் திரும்பியதும் நான் அவரைத் தொடர்புகொள்வேன்.

https://www.virakesari.lk/article/221936

Checked
Fri, 10/31/2025 - 17:25
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed