| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 464 online users. » 0 Member(s) | 462 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,558
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| ஜந்து கேள்விகள் உங்களிடம் |
|
Posted by: MUGATHTHAR - 06-29-2005, 04:43 PM - Forum: போட்டிகள்
- Replies (32)
|
 |
<b>ஜந்து கேள்விகள் உங்களிடம்</b>
இதில் நீங்கள் எழுதும் கருத்துக்கள் முழுக்க முழுக்க உங்களின் சுய கருத்தாக் இருப்பது விரும்பத்தக்கது.எல்லோரும் சீரியஸாகத்தான் எழுதவேண்டுமென்றில்லை. நகைச்சுவையாகவோ மற்றைய கருத்துக்களை கலாய்ப்பதாகக் கூட இருக்கலாம் (இதற்காக மற்றவர்களை தாக்கி எழுத வேண்டும் என்றில்லை) சும்மா ஜாலிக்குத் தானே.
<b>வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.......</b>
இப்போ உலக அழகி ஆணழகன் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள் அதில் அவர்களின் உடலழகு . திறமையை விட இறுதியாக அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படும் அதற்கு அவர்கள் கூறும் பதில்களும் புள்ளிகளாக சேர்க்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள் அதேபோலத்தான் இங்கும் 5 கேள்விகள் உள்ளன. நீங்கள் இதற்குரிய பதிலை சுருக்கமாக 2 . 3 வரிகளில் மட்டும் எழுதினால் போதும் உங்கள் பதிலை வைத்து அடுத்த உலக அழகி . ஆணழகன் போட்டிகளுக்கு உங்களை அனுப்புவதற்கு முகத்தார் சிபார்சு செய்யவுள்ளார். இதற்கு வயதெல்லை இல்லாததால் யாரும் எழுதலாம் (சின்னப்பு . சாத்திரி தூள் கிளப்புங்கய்யா)
<b>கேள்விள் </b>:
1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
2. ஆண்களுக்கு அழகு என்ன?
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
|
|
|
| இலங்கை பெண் சின்னத்திரையில் |
|
Posted by: Mathan - 06-29-2005, 04:35 PM - Forum: சினிமா
- Replies (3)
|
 |
இலங்கை பெண் சின்னத்திரையில்
<img src='http://www.dinakaran.co.in/vasantham/article/2005/jun/30/Page-2.jpg' border='0' alt='user posted image'>
சிதம்பர ரகசியம் தொடரில் ஐயங்கார் வீட்டு அழகியாக நடிக்கிற அபிராமிக்குப் பூர்வீகம், இலங்கையில் சர்ச்சைக்குரிய ஜாப்ப்னா. சின்ன வயசுலேர்ந்தே டான்ஸ், தியேட்டர்னு என் ஈடுபாடு கலைத் துறைல வேர் விட்டது. சிலோன்ல நடக்கிற விசேஷமான தமிழ் தினப் போட்டில தொடர்ந்து மூணு வருஷங்கள் சிறந்த டான்ஸருக்கான அவார்ட் வாங்கியிருக்கேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டான்ஸ் டிராமா, நவீன நாடகம்னு என் எல்லை விரிய ஆரம்பிச்சது. அங்க என் நடிப்பையும், திறமையையும் பார்த்துட்டு, தமிழ் சேனல் கள்லேர்ந்து நிறைய வாய்ப்புகள் டான்ஸ், டிராமானு நான் பிரபலமா இருந்தாலும், சினிமா, சீரியல்ல நடிக்க அனுமதிக்கிற அளவுக்கு வீட்ல யாருக்கும் பரந்த மனசில்லை. அப்புறம் என் காதலர் (இப்ப கணவர்) காண்டிபன்கிட்ட அனுமதி கேட்டேன். நான் நடிக்க அவர் ஓ.கே. சொன்னார். அந்த நேரம் பார்த்து நாகா சாரோட அறிமுகம் கிடைச்சது. நம்பிக்கையே இல்லாம என் ஃபோட்டோ கொடுத்துட்டு வந்தா, கொஞ்ச நாள்லேயே …சதம்பர ரகசியம் தொடரில நடிக்க அழைப்பு* நம்பவே முடியலை. சிலோன் பெண்ணான எனக்கு அதுல பிராமண பாஷை பேசி நடிக்கிற கேரக்டர். பிரமாதமான அனுபவம். இப்ப மெல்ல என் பேர் வெளிய தெரிய ஆரம் பிச்சுப் பரவலா நிறைய சீரியல்ல கூப்பிடறாங்க.
செலக்டிவா நடிக்க ஆரம்பிச்சிருக்கேன் என்கிறவருக்கு இந்தியா எந்தளவுக்குப் பிடித்திருக்கிறதாம்?
இந்தியா ஓ.கேதான். ஆனா என் ஹஸ்பெண்ட் ஸ்ரீலங்கால வேலை பார்க்கிறார். கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகுது. ரெண்டு மாசம் இங்கயும், ரெண்டு மாசம் சிலோன்லயுமா போயிட்டிருக்கு. அது மட்டும் தான் இப்போதைக்குக் கஷ்டம் என்கிறார் அபிராமி.
நன்றி - தினகரன்
|
|
|
| மகளுக்கு விசா கோரி நளினி வழக்கு |
|
Posted by: Mathan - 06-29-2005, 02:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மகளுக்கு விசா கோரி நளினி வழக்கு
சென்னை:
இலங்கையில் உள்ள தனது மகள் ஆருத்ரா தன்னையும், தனது கணவரையும் பார்க்க வருவதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி எப்போது விடுதலை ஆவார் என்பது தெளிவாக தெரியாத நிலை உள்ளது.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி எனக்கும் ஸ்ரீதரன் என்ற முருகனுக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நானும், எனது கணவரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோம். அந்த சமயத்தில் நான் கருவுற்றிருந்தேன்.
கடந்த 1992ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. சென்னையில் இக்குழந்தை பிறந்ததால் இது இந்தியப் பிரஜையாகும். எனது குழந்தையின் பெயர் மெகரா என்ற ஆரூத்ரா.
கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி எனக்கும், எனது கணவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் கருணை மனுவையடுத்து எனது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறையில் இருந்து வருகிறேன்.
எனது மகள் ஆரூத்ரா 6 வயதாகும் வரை என்னுடன் தான் இருந்தாள். அதன் பின்னர் எனது மாமியார் கடந்த 1997ம் ஆண்டு ஆரூத்ராவை இலங்கைக்கு அழைத்துச் சென்று விட்டார்.
தற்போது ஆரூத்ரா பூப்பெய்தி உள்ளார். எனவே என்னையும், எனது கணவரையும் பார்க்க விரும்புகிறார். இதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா கோரி மனு செய்துள்ளார். கடந்த2004ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியே அவர் விண்ணப்பம் கொடுத்தும் இன்னும் விசா கொடுக்கப்படவில்லை.
ஆரூத்ரா இந்தியா வருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அவர் இந்தியப் பிரஜை. எனவே உடனடியாக அவருக்கு விசா கொடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று நளினி தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.டி.தினகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
தட்ஸ் தமிழ்
|
|
|
| கருத்துக்களில் மாற்றங்கள் |
|
Posted by: Mathan - 06-29-2005, 11:50 AM - Forum: களம் பற்றி
- Replies (543)
|
 |
<b>"பாலசுப்ரமணியம்(S.P.<!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo--> சொல்கிறார்"</b> எனும் தலைப்பு <b>கவிதை</b> பகுதியிலிருந்து <b>திரை</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
|
|
|
| பாலசுப்ரமணியம்(S.P.B) சொல்கிறார் |
|
Posted by: SUNDHAL - 06-29-2005, 11:30 AM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
என்ஜPனியர் ஆக நினைத்து பாடகர் ஆகி விட்டேன் என்று எஸ்.பி.பி. கூறினார்.
நான் திரை இசை உலகிற்கு வரும்பொழுது எனது குரல் முதிர்ச்சியாகவில்லை என்று எல்லோரும் கூறினார்கள். பின்னர் 2 வருடம் பயிற்சிக்கு பின்னர் 1966 டிசம்பர் 15ந்தேதி கோதண்டபாணி அவர்களால் ஸ்ரீ ஸ்ரீ மாpயாதை ராமண்ணா என்னும் தெலுங்கு திரைப்படத்தில் முதலில் பாடினேன். பின்னர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதனிடம் பாடி காட்டியபோது தமிழ் கற்றுக்கொண்டு வா என்று கூறிவிட்டார். நானும் எனது தமிழ் நண்பர்களுடன் பேசிப் பேசியே இரண்டு வருடம் தமிழ் கற்றுக்கொண்டேன். தமிழ் பழகிய பின்பு நான் பாடிய முதல் பாடல் ஓட்டல் ரம்பா அது வெளிவரவில்லை.
பின்னர் விடாப்பிடியுடன் இருந்து சாந்தி நிலையம் படத்தில் பாடினேன். இன்று சிறந்த பின்னணி பாடகர் என்ற பெயர் இருந்தபோதிலும் ஒரு என்ஜpனீயர் என்ற பெயர் இல்லாதது வருந்தமாகவே உள்ளது. மனிதனாய் பிறந்த நான், இறந்த பின்னும் நல்ல மனிதனாய் இருந்தான் பாலு, என பிறர் சொல்லும்படி வாழ நினைக்கிறேன்.
|
|
|
| படித்ததும் பிடித்தது |
|
Posted by: SUNDHAL - 06-29-2005, 08:48 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
காதல் ஒரு ஆச்சரியம்!
* அஞ்சல் அட்டை மாதிரி
திறந்தே இருக்கிறேன்
நீ படிக்கும்படியாக...
தபால் உறையாக
நீ
மூடியே இருக்கிறாய்
நான் தவிக்கும்படியாக!
* காதல் ஒரு ஆச்சரியம்...
அறுபத்திரெண்டு கிலோ எடையை
அந்தரத்தில்
மிதக்க விட்டிருக்கிறது!
* கூட்டமாய் இரை தேடுகிற
கோவில் புறாக்களின்
குணம் இல்லை உனக்கு...
பட்டாம்பூச்சியாக
நீ
தனித்தே பறப்பது
பிடித்திருக்கிறது எனக்கு!
* வானம் பார்த்திருக்கும்
ஏழை விவசாயி போல
எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன்;
பருவ மழையே
எப்போது பெய்வாய் நீ?
* கல்கி அவதாரத்தில்
கடவுள் வைத்த
காலடி போல
கவனமாகத்தான் நடக்கிறாய்...
அது சரி –
எல்லா அடியையும்
ஏன்
என் தலையில் வைக்கிறாய்!
* உண்ட மயக்கத்து
உறக்கமாக இருந்தாலும்
ஒவ்வொரு தடவையும்
உன் முகத்தை
மனக்கண்ணில்
பார்த்து விட்டுத்தான் படுக்கிறேன்;
அதுவே
நீண்ட உறக்கமாகிப் போனாலும்
கடைசியாய் கண்டது
உன் முகமாக இருக்கட்டும்!
க.சந்திரகலா, அதங்கோடு
|
|
|
| கழுதை பால் |
|
Posted by: SUNDHAL - 06-29-2005, 08:11 AM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
இன்றும் கிராமப்புறங்களில் பிறந்த குழந்தைக்கு கழுதைப் பால் கொடுத்தால் அது நன்றாகப் பேசும். அதன் எதிர்காலம் நன்றாக அமையும் என்று கூறுவதை கேள்விபட்டிருப்பீர்கள்.
* கழுதைப் பாலைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஐதராபாத் அரசு ஆயுர்வேதக் கல்லுõரி> தமது ஆய்வுக் குறிப்பில் "குழந்தைகளுக்கு கழுதைப் பால் மிகச் சிறந்த உணவு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
*குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் அரைக் கரண்டி என்ற அளவில் கழுதைப் பாலைக் கொடுத்து வந்தால் அக்குழந்தையின் சுவாச உறுப்புகள் நல்ல பலம் பெற்று விரிவடைவதோடு> உறுப்புகளும் நல்ல முறையில் இயங்கும்.
* கழுதைப் பால் பல ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மார்புச் சளிக்கு கழுதைப் பாலே மிகச் சிறந்த உணவு. இதை எப்படித்தான் நம் முன்னோர்கள் அறிந்து கொண்டார்களோ... சரியான கில்லாடி ஐயா அவர்கள்.
|
|
|
| நல்ல Idea வா இருக்கே |
|
Posted by: SUNDHAL - 06-29-2005, 07:23 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
தப்பு செய்தவர்கள் தண்டனை பெறுவது உறுதி. அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க ஒருசிலர் மாற்று வழியை கையாளுகின்றனர்.
இத்தாலிய நாட்டு சட்டப்படி ஒரு கர்ப்பிணி பெண் தண்டிக்கப்பட கூடாது. எனவே பெண் குற்றவாளிகள் அவசரம் அவசரமாக அங்கே கர்ப்பிணி ஆகிவிடுகி றார்கள். ஒரு சில பெண்கள் திரும்ப திரும்ப கர்ப்பிணியாகி தண்டனையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள்.
|
|
|
| Trafalgar கடற்போர் |
|
Posted by: Mathan - 06-29-2005, 06:20 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
பிரிட்டிஷ் கடற்படை வெற்றியின் 200 ஆண்டுகள்
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_trafalgar_200/img/10.jpg' border='0' alt='user posted image'>
Trafalgar ல் நடைபெற்ற கடற்போர் ஒரு முக்கியம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. பிரிட்டிஷ் கடல் படை போர்த் திறனின் உச்சகட்டம். இந்த வெற்றியின் மூலம் பிரிட்டன் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு உலக வல்லரசாகத் திகழ அடித்தளமிட்ட ஒரு நிகழ்வு. ஆனால், இன்று பிரிட்டனின் தெற்குக் கடற்பகுதியில் நடைபெறும் சர்வதேச கப்பற்படை அணிவகுப்பு கடலின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதாகவும், நவீன கால கப்பற்படை பலத்திற்கு சிறப்பு கூட்டுவதாகவும் சித்தரிக்கப்படுகின்றது.
இருந்த போதும், இராக்கின் தெருக்களில் நடைபெறும் கிளர்ச்சி, ஆஃப்கானிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் நடைபெறும் உலக மட்டத்திலான பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் போன்றவற்றைப் பார்க்கையில் இன்றைய காலகட்டத்தில் கப்பற்படைகளுக்கு முக்கியத்துவம், அர்த்தமிருக்கிறதா என்ன? விமானப் படை பல்வேறு பரிணாமங்களில் வளர்ந்த பின்னும், தொழிற் புரட்சிக்குப் பின்னும் கப்பற் படையின் முக்கியத்துவம் குறைந்துதான் போனது என்பதில் ஐயமில்லை.
இதனால் கப்பற் படை பலத்தைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சாம்ராஜ்யங்கள் முடிந்து போய் புதிய கண்டம் சார்ந்த சக்திகள் உருவெடுத்தன. ஆனாலும், உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இன்னும் கடல் வழியாகத்தான் நடத்தப்படுகிறது.
<img src='http://www.bbc.co.uk/history/war/trafalgar_waterloo/images/trafalgar_nelson_nmm.jpg' border='0' alt='user posted image'>
<b>பிரிட்டிஷ் கடற்படைத் தளபதி நெல்சன்</b>
தங்களின் சக்தியை வெளிக்காட்டவும், உலகின் தொலைதூர பிரதேசங்களில் வல்லரசுகளின் அல்லது நாடுகளின் கப்பற்படைத் தளங்கள் குறைந்து போன நிலையில் அப் பகுதிகளில் நிலை கொண்டு தங்களது நலன்களை பாதுகாக்க கப்பற்படைகள் மிக முக்கிய பங்காற்றும் என கப்பற்படைத் தளபதிகள் வாதிடுகின்றனர்.
உலகில் எங்கேனும் சர்வதே நெருக்கடி ஒன்று ஏற்படும் நிலையில், அமெரிக்க அதிபர் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா, நெருக்கடியான பகுதி மிக அருகே நம்முடைய விமானந் தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றனவா என்பதுதானாம். இதை அமெரிக்கக் கப்பற்படையினர் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வர். இன்று உலக அளவில் மிக வல்லமை படைத்த, மிக நவீன கப்பற்படை அமெரிக்காவிடம்தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் மிகப் பெரிய கப்பற்படையினை வைத்திருந்த ரஷியாவின் பலம் இப்பொழுது குறைந்து விட்டது. ஒரு கால கட்டத்தில் மிகப் பெரிய கப்பற்படையாக விளங்கிய பிரிட்டனின் கப்பற்படையின் பலம் குறைந்து போனாலும், ஒருவேளை பிரான்ஸ், ஜப்பான் போன்ற இரண்டாம் மட்ட கப்பற்படை சக்தியாக விளங்கக் கூடும். ஆனால், அமெரிக்கக் கப்பற்படையின் பலத்தோடு ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிதல்ல என்றுதான் கூற வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க கப்பற்படையினை பலப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளையுடைய வளர்ந்து வரும் கப்பற்படை சக்திகளான இந்தியா போன்ற நாடுகள் மீதும் அதிக அளவு கவனம் செலுத்தப்படுகிறது. பிரிட்டனில் நடைபெறும் கப்பற்படைக் கப்பல்களின் அணிவகுப்பில் இந்தியா பங்கு பெற்கிறது ஆனால், சீனா இடம் பெறவில்லை.
BBC Tamil
|
|
|
| அணுஇணைவு அணுசக்தி (Nuclear fusion) |
|
Posted by: Mathan - 06-29-2005, 05:47 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (10)
|
 |
புதிய வகை அணு உலை பிரான்ஸில்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41237000/jpg/_41237181_nuclear_reactor_203.jpg' border='0' alt='user posted image'>
<b>மிகச் சவாலான ஒரு சோதனை</b>
அணுஇணைவு அதாவது ப்யூஷன் முறையிலான புதிய வகை அணு உலை ஒன்றை எங்கே நிறுவுவது என்பது பற்றி பிரான்சுக்கும் ஜப்பானுக்கும் இடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவந்த போட்டியில் பிரான்ஸ் வெற்றி கண்டிருக்கிறது.
அணுசக்தியில் இரண்டு வகை உண்டு ஒன்று கதிரியக்கத்தை வெளியிட வல்ல யுரேனியம் போன்ற கன உலோகங்களின் அணுக்களைப் பிளப்பதால் வரும் அணுசக்தி. இந்த அடிப்படையில்தான் தற்போதைய அணுஉலைகள் இயங்குகின்றன, அணுகுண்டுகளும் இப்படித்தான் வெடிக்க வல்லவை.
இதைத் தவிர அணுசக்தி வரும் இன்னொரு வழி உண்டு. அது சூரியனில் சக்தி உருவாகும் விதம். அணு இணைவு, அதாவது, மிகச் சிறியதான ஹைட்ரஜன் வாயுவின் ஓரகத்தனிம அணுக்களை உராய்வித்து இணையவைக்கும் போது அவற்றிலிருந்து ஹீலியம் என்ற அடுத்த கட்ட வாயு மூலகம் தோன்றுகிறது.
ஹீலியம் மட்டுமல்ல, ஒன்றரை கோடி டிகிரி சென்டிகிரேட் அளவு பெரும் வெப்பம் தோன்றுகிறது. பயங்கர வெப்ப நிலையில் உள்ள இந்த வாயுவை, ப்ளாஸ்மா என்கிறார்கள். இந்த வெப்பத்தை வைத்துத்தான் சூரிய ஒளி வருகிறது.
சூரியனில் நடப்பது போன்று ஒரு உலையை பூமிக்கிரகத்திலேயே அமைக்க முடியுமா? அமைத்தால் அதிலிருந்து வரும் வெப்பத்தை வைத்து மின்சக்தி தயாரிக்க முடியுமல்லவா - இதுகுறித்த பரிசோதனைகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/sci_nat_iter___the_next_generation_fusion_reactor/img/laun.jpg' border='0' alt='user posted image'>
<b>சூரியனில் சக்தி உருவாகும் விதம்</b>
ஆனால் அதில் உருவாகும் வெப்ப வாயுவைக் கையாள்வதில் தான் சிக்கல். இந்த அளவு வெப்பத்தைத் தாங்கும் அளவிலான பொருட்களுக்கு எங்கே போவது? அதற்கான பிரத்தியேக ஆராய்ச்சி தற்போது நடந்துவருகிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன.
சூரியனைப் போல அணுஇணைவு முறையில் அணுசக்தி தயாரிக்க முற்படும் இந்த உலை பிரான்ஸ் நாட்டின் மார்சேய் நகருக்கு அருகே அமைக்கப்படும் என்று இன்று ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இன்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா, உள்ளிட்ட ஆறு நாடுகள் நடத்திய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
BBC Tamil
|
|
|
|