Yarl Forum
Trafalgar கடற்போர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: Trafalgar கடற்போர் (/showthread.php?tid=4031)



Trafalgar கடற்போர் - Mathan - 06-29-2005

பிரிட்டிஷ் கடற்படை வெற்றியின் 200 ஆண்டுகள்

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_trafalgar_200/img/10.jpg' border='0' alt='user posted image'>

Trafalgar ல் நடைபெற்ற கடற்போர் ஒரு முக்கியம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. பிரிட்டிஷ் கடல் படை போர்த் திறனின் உச்சகட்டம். இந்த வெற்றியின் மூலம் பிரிட்டன் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு உலக வல்லரசாகத் திகழ அடித்தளமிட்ட ஒரு நிகழ்வு. ஆனால், இன்று பிரிட்டனின் தெற்குக் கடற்பகுதியில் நடைபெறும் சர்வதேச கப்பற்படை அணிவகுப்பு கடலின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதாகவும், நவீன கால கப்பற்படை பலத்திற்கு சிறப்பு கூட்டுவதாகவும் சித்தரிக்கப்படுகின்றது.

இருந்த போதும், இராக்கின் தெருக்களில் நடைபெறும் கிளர்ச்சி, ஆஃப்கானிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் நடைபெறும் உலக மட்டத்திலான பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் போன்றவற்றைப் பார்க்கையில் இன்றைய காலகட்டத்தில் கப்பற்படைகளுக்கு முக்கியத்துவம், அர்த்தமிருக்கிறதா என்ன? விமானப் படை பல்வேறு பரிணாமங்களில் வளர்ந்த பின்னும், தொழிற் புரட்சிக்குப் பின்னும் கப்பற் படையின் முக்கியத்துவம் குறைந்துதான் போனது என்பதில் ஐயமில்லை.

இதனால் கப்பற் படை பலத்தைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சாம்ராஜ்யங்கள் முடிந்து போய் புதிய கண்டம் சார்ந்த சக்திகள் உருவெடுத்தன. ஆனாலும், உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இன்னும் கடல் வழியாகத்தான் நடத்தப்படுகிறது.

<img src='http://www.bbc.co.uk/history/war/trafalgar_waterloo/images/trafalgar_nelson_nmm.jpg' border='0' alt='user posted image'>
<b>பிரிட்டிஷ் கடற்படைத் தளபதி நெல்சன்</b>

தங்களின் சக்தியை வெளிக்காட்டவும், உலகின் தொலைதூர பிரதேசங்களில் வல்லரசுகளின் அல்லது நாடுகளின் கப்பற்படைத் தளங்கள் குறைந்து போன நிலையில் அப் பகுதிகளில் நிலை கொண்டு தங்களது நலன்களை பாதுகாக்க கப்பற்படைகள் மிக முக்கிய பங்காற்றும் என கப்பற்படைத் தளபதிகள் வாதிடுகின்றனர்.

உலகில் எங்கேனும் சர்வதே நெருக்கடி ஒன்று ஏற்படும் நிலையில், அமெரிக்க அதிபர் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா, நெருக்கடியான பகுதி மிக அருகே நம்முடைய விமானந் தாங்கிக் கப்பல்கள் இருக்கின்றனவா என்பதுதானாம். இதை அமெரிக்கக் கப்பற்படையினர் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வர். இன்று உலக அளவில் மிக வல்லமை படைத்த, மிக நவீன கப்பற்படை அமெரிக்காவிடம்தான் இருக்கிறது.

ஒரு காலத்தில் மிகப் பெரிய கப்பற்படையினை வைத்திருந்த ரஷியாவின் பலம் இப்பொழுது குறைந்து விட்டது. ஒரு கால கட்டத்தில் மிகப் பெரிய கப்பற்படையாக விளங்கிய பிரிட்டனின் கப்பற்படையின் பலம் குறைந்து போனாலும், ஒருவேளை பிரான்ஸ், ஜப்பான் போன்ற இரண்டாம் மட்ட கப்பற்படை சக்தியாக விளங்கக் கூடும். ஆனால், அமெரிக்கக் கப்பற்படையின் பலத்தோடு ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிதல்ல என்றுதான் கூற வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க கப்பற்படையினை பலப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளையுடைய வளர்ந்து வரும் கப்பற்படை சக்திகளான இந்தியா போன்ற நாடுகள் மீதும் அதிக அளவு கவனம் செலுத்தப்படுகிறது. பிரிட்டனில் நடைபெறும் கப்பற்படைக் கப்பல்களின் அணிவகுப்பில் இந்தியா பங்கு பெற்கிறது ஆனால், சீனா இடம் பெறவில்லை.

BBC Tamil


- Mathan - 06-29-2005

Portsmouth பகுதி கடற்படை அணிவகுப்பு புகைப்படங்கள் சில

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_trafalgar_200/img/1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_trafalgar_200/img/2.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_trafalgar_200/img/4.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 06-29-2005

<img src='http://www.nmm.ac.uk/upload/img/NN-Logo.jpg' border='0' alt='user posted image'>

<b>இந்த யுத்தத்துடன் தொடர்புடைய இரண்டு ஹீரோக்களான நெல்சன் மற்றும் நெப்போலியனில் கண்காட்சி 7 July தொடக்கம் National Maritime Museumஇல் நடைபெற இருக்கின்றது, மேலதிக விபரங்கள் கீழே உள்ள இணைப்பில் கிடைக்கும்</b>

http://www.nmm.ac.uk/server/show/conWebDoc.15503


- Niththila - 06-29-2005

தகவலுக்கு நன்றி மதன் அண்ணா


- tamilini - 06-29-2005

நன்றி மதன். ரீவியில் பார்க்க அழகாய் இருந்தது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 06-29-2005

மதன் சொல்லித்தான் இப்படி ஒன்று நடந்ததே தெரியும்.. :roll: :roll:
நன்றி மதன்