Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 463 online users.
» 0 Member(s) | 461 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,558
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  ஐம்பதிலும் அழகாய் இருக்க ...
Posted by: Mathan - 06-30-2005, 01:06 PM - Forum: மருத்துவம் - Replies (4)

ஐம்பதிலும் அழகாய் இருக்க ...

<img src='http://www.puthumai.com/images/stories/commen/legs1.jpg' border='0' alt='user posted image'>

வாரம் தோறும் வயதாகிறது.... உண்மையிலும் இது நிஜம்தானே? ஆனால் நமக்கு வயதானாலும் ஒன்றும் தப்பில்லை... மனசும் நம்முடைய தினசரி செயல்பாடுகளும் சரியாக இருந்தால் ஐம்பதென்ன... எண்பதானாலும் இளமையான தோற்றத்துடன் வாழமுடியும்.
இதோ அதற்கான சில டிப்ஸ்கள்:

இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் டை உபயோகியுங்கள்... கறுப்பு நிற உங்கள் தலைமுடியையும் மீசையையும் நீங்கள் கண்ணாடியில் பார்க்கிற போது உங்களுக்கும் உற்சாகம் பிறக்கும். டை உபயோகப்படுத்த துவங்கியதும் தவறாமல் உபயோகப்படுத்துங்கள். அதிலும் கெமிக்கல் முறையில் தயாரிக்கும் டையை உபயோகப்படுத்தினால் தோல்வியாதி, அலர்ஜி, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் டை உபயோகிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

அடுத்து கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் டி.வி. பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள் முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே அந்த கருவலையத்தை தவிர்க்கும் விதமாக ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

அடுத்து முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள்.

அடுத்து கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் மஞ்சள் பற்றை போடுங்கள் அல்லது கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். இதனால் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

அடுத்து முதுமையில் கன்னங்களில் குழி விழுவது இயற்கைதான் ஆனால் இதையும் நம்மால் தடுத்துவிடமுடியும். தினமும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைகுடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள்.

அடுத்து உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும்.

அந்த உடல் ஆரோக்கியம் வேண்டுமானால்.. விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு குறைந்த பட்சம் நான்கு கிலோ மீட்டர் தூரமாவது நடைபயிற்சி செய்யுங்கள்.

நடைபயிற்சியால் உடலிலுள்ள உறுப்புகள் உற்சாகம் பெறும் நரம்பு மண்டலம் நீரடையும், வயிற்று பிரச்னைகள் தீரும். இரத்தக்கொதிப்பு, நீரழிவு கட்டுப்படும்.

அடுத்து உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்...’’ கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள்.

காதல் உணர்வு உங்களை இளமையாக வைத்திருக்கும் என்பதால் மனைவியை காதலியுங்கள். உங்கள் மனைவியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ரசியுங்கள், கொலுசு சத்தம், சிரிப்பு, உடையணியும் பாங்கு என எல்லாவற்றையும் ரசியுங்கள் கூடவே பாராட்டுங்கள்.

<img src='http://www.puthumai.com/images/stories/love/love001.jpg' border='0' alt='user posted image'>

வாரத்திற்கு ஒரு முறையாவது கோயில்கள், சுற்றுலா தலங்கள் என குடும்பத்துடன் சென்று வாருங்கள். அந்த மனநிலை உங்களுக்குள் இருக்கும் இறுக்கத்தை துரத்தி மனதை உற்சாகப்படுத்தும்.

மனைவியுடன் தனிமையில் மனம்விட்டு நிறைய விஷயங்கள் பேசுங்கள். ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள்ள தவறுகளை சுட்டிக் காட்டி தெளிவு நிலைபெறுங்கள். அது உங்களுக்குள் இருக்கும் காம்ப்ளக்ஸை விலக்கி புத்துணர்ச்சியை தரும்.

உடல் உறவு என்பது மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்திருக்கும் என்பதால் வாரத்திற்கு நான்கு முறையாவது மனைவியுடன் உடல்உறவு வைத்துக் கொள்ளுங்கள்.

யோகாசனம், மெடிடேஷன் போன்றவற்றை உங்கள் வாழ்நாளில் ஒரு அங்கமாக கடைபிடியுங்கள்.

இதெல்லாம் நீங்கள் மேற்கொண்டாலே ஐம்பதிலும் இருபது வயது இளைஞனாக தோற்றமளிப்பீர்கள்.

Puthumai

Print this item

  அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?:
Posted by: வெண்ணிலா - 06-30-2005, 12:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?: தமிழ்ச்செல்வன் விளக்கம்
சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 2 வார காலக்கெடு விதித்துள்ளது ஏன் என்பது குறித்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.


கிளிநொச்சியில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர், சிறிலங்காவிற்கான நோர்வே பிரதித் தூதுவர் ஆகியோரை இன்று தமிழ்ச்செல்வன் சந்தித்தார்.

இச்சந்திப்புக்குப் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630010.JPG' border='0' alt='user posted image'>


கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரையும் அனுசரணையாளர்கள் என்ற வகையில் நோர்வேயின் சிறிலங்காவிற்கான பதில் தூதரையும் சந்தித்தோம்.

அண்மையில் போராளிகள், பொறுப்பாளர்கள் பயண ஒழுங்குக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூறி எமது போராளிகளைச் சதிவலைக்குள் சிக்கவைத்து கொல்வதற்கு எடுத்த முயற்சி தொடர்பாகத்தான் தான் இன்றைய சந்திப்பில் விவாதித்தோம்.

இது தொடர்பாக எமது தலைமைப் பீடத்தின் இறுக்கமான நிலைப்பாட்டையும் அதிருப்தியையும் தெரிவித்திருக்கிறோம்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் தொடருமானால் தொடர்ந்து இந்த போர் நிறுத்தச் சூழலை தக்க வைப்பதோ யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு ஏற்ப நாம் நடந்து கொள்வதோ சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறும்.

<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630006.JPG' border='0' alt='user posted image'>

எமது தலைமைப் பீடம் எடுத்திருக்கின்ற இறுக்கமான உறுதியான நிலைப்பாட்டை இன்றைய சந்திப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

எமது போராளிகள், பொறுப்பாளர்கள் பயணம் செய்கின்ற போது இராணுவ புலனாய்வு அமைப்பும் அவர்களின் துணையோடு இயங்கும் ஆயுதக்குழுக்களும் இணைந்து கொலை வெறித் தாக்குதல்களை செய்யப் போகிறார்கள் என்று ஏற்கனவே எமது புலனாய்வு அமைப்பு மூலம் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலை கண்காணிப்புக்குழுவினரிடம் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் எமது போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டு, பாதுகாப்பு சரியாக உறுதிப்படுத்தப்பட்டு அதன் பின்னர் கண்காணிப்புக்குழு, படைத்தரப்பு, அரசுத்தரப்பு ஆகியோரது முழு உத்தரவாதம் பெறப்பட்டது. இதன் பின்னர்தான் எங்கள் போராளிகளின் பயணம் நடந்தது.

பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் எச்சரிக்கப்பட்ட நிலையிலும் எமது போராளிகள் பயணம் செய்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தாக்குதல் நெருக்கடி நிலைகளை உருவாக்கும் தாக்குதலாக அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து எமது நிலையை நாம் இன்று விளக்கியிருக்கிறோம்.

சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிற எமது போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு வார காலம் நாம் கால அவகாசம் கொடுத்து இருக்கிறோம்.


<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630007.JPG' border='0' alt='user posted image'>

இனியும் உயிராபத்துகள் ஏற்படாது என்று சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் இருவார காலத்துக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி எமது போராளிகள் எமது தாயகப் பிரதேசத்தில் எந்தவித ஆபத்துக்களும் இன்றி சுதந்திரமாக நடமாடலாம். அதை உத்தரவாதப்படுத்த வேண்டியது சிறிலங்கா படைத்தரப்பாகும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட இரண்டு தரப்பு என்ற வகையில் சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் படைத்தரப்பும் சிறிலங்கா அரசும்தான் போராளிகளின் பாதுகாப்ப்பை உத்தரவாதம் செய்யவேண்டும்.

எமது போராளிகள் பயணம் செய்கின்றபோது கண்காணிப்புக்குழுவும் இராணுவமும் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவித உயிராபத்துக்களும் ஏற்படாத உத்தரவாதம் எமக்கு தரவேண்டும்.

மாதாந்தம் இரு பயண ஒழுங்குகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630008.JPG' border='0' alt='user posted image'>

எமது போராளிகள், பொறுப்பாளர்கள் பயணம் செய்து எமது தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளாவிட்டால் நாம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை போணுவது சிக்கலாக இருக்கும்.

சிறிலங்கா படைத்தரப்போ அரசாங்கமோ இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி பயண ஒழுங்குகளை செய்யத் தவறினால், எமது போக்குவரத்துக்களை முடக்குமானால் எமது போராகளிளோ, பொறுப்பாளர்களோ வழமை போல அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் எமது போக்குவரத்துக்களை எப்படி முன்னெடுத்தோமோ அந்த நடைமுறைக்குள் இறங்குவதை தவிரவேறு வழியில்லை.

ஆகவே சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பேணவேண்டும். அமைதிவழியில் பிரச்சனை தீர்வு காணவேண்டும் என்ற அர்பணிப்பு இருக்குமானால் யுத்த நிறுத்த உடன்பாட்டில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

இதில் இழுத்தடிப்புக்களை செய்து நிலைமைகளை மோசமடைய செய்வார்களானால் தொடர்ந்து பொறுமை காத்துக் கொண்டிருக்க முடியாது.

இன்றைய சந்திப்பில் எமது போராளிகளுக்கான பாதுகாப்பான பயணத்துக்குரிய பரிந்துரைகளையும் செய்திருக்கிறோம்.

<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630009.JPG' border='0' alt='user posted image'>

கேள்வி: போராளிகள் பயண ஒழுங்கிற்கு மட்டும்தான் இந்த கால அவகாசமா? அல்லது யுத்த நிறுத்த உடன்பாட்டை பேணுவதற்கான கால அவகாசத்தையும் விடுத்துள்ளீர்களா?

பதில்: போராளிகளின் பயண ஒழுங்குதான் இன்றைய சந்திப்பில் முக்கியமாக பேசப்பட்டது. போராளிகள் கொல்லப்படுகின்ற போது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் அற்ற விடயமாக உள்ளது.

எங்களுடைய போராளிகளின் பயணம் முடக்கப்படுகின்றபோது இராணுவத்தினுடைய போக்குவரத்தையும் முடக்கும் வழிவகையை கையாள நாம் நிர்பந்திக்கப்படுவோம். அப்படியானால் யுத்த நிறுத்த உடன்படிக்கை சீர்குலைவுக்கு உட்படும். அதேபோன்று யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்ட நடைமுறைகளை உறுதியாக வலியுறுத்தியுள்ளோம்.

யுத்த நிறுத்த உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்பு நிலையைக்கொண்டு வருவதற்கு உரிய நடைமுறைகள் தொடர்பாகவும் வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கு அரசும் படைத்தரப்பும் தீர்க்கமான முடிவு எடுக்க முயலவேண்டும். மக்கள் கொந்தளிப்பான நிலைக்குள் தள்ளப்பட்டு உள்ளார்கள். ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள்,வெகுஜனப் போராட்டங்கள் மூலம் தீர்வைத் தேடி முயற்சி செய்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையையும் இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

கேள்வி: இரண்டு வார கால அவகாசம் என்பது இன்றிலிருந்தா?

பதில்: இன்றிலிருந்து இரண்டு வார கால அவகாசம் கொடுத்து இருக்கின்றோம். இரண்டு வார கால அவகாசத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் சிறிலங்கா அரசு.

யுத்த நிறுத்த உடன்பாட்டை பேணுவதற்கு சிறிலங்கா அரசு தயாராக இருக்கிறதா? என்பதை அவர்கள் அறிவிக்க வேண்டும்.

நாம் புதிய கோரிக்கையை முன்வைக்கவில்லை. யுத்த நிறுத்த உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையையும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்த நடைமுறைகளையும் செய்யுமாறுதான் கேட்டுக்கொள்கிறோம்.

இராணுவப் பயணத்தை முடக்க நேரிடும்

கேள்வி: வாய்மொழி உத்தரவதாமா? எழுத்துப்பூர்வமான உத்தரவாதமா? எதைக் கேட்டுள்ளீர்கள்?

பதில்: இருவகையிலான உத்தரவையும் கேட்டு இருக்கிறோம். ஆகவே இது தொடர்பாக இரண்டு வார காலத்துக்குள் பதில் தரவேண்டும்.

இல்லாவிட்டால் நாம் வழமைபோன்று போக்குவரத்து ஒழுங்குகளை செய்யவேண்டும். பயணம் செய்கின்ற போது படைத்தரப்பு இடைமறித்து நெருக்கடிகளை கொடுக்குமாக இருந்தால் இராணுவத்தினரின் போக்குவரத்துக்களை முடக்கும் நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்படுவோம்.

இந்த நிலைமையை சுட்டிக்காட்டியுள்ளோம். இரண்டு வார காலத்துக்குள் இதற்கான முடிவை தருமாறு கூறியுள்ளோம். சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பேணுவதா? இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

கேள்வி: யுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் இரண்டு வார காலம்தான் தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: அப்படியும் நினைக்கலாம். எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு காலத்துக்குள் அதற்கான முடிவை கேட்டு இருக்கிறோம். இல்லாவிட்டால் எமது உறுதியான நிலைப்பாட்டை இரண்டு வார காலத்துக்குள் தெரிவிப்போம்.

நடைமுறைகளை நாம் விளக்கி கூறியுள்ளோம். எமது போராளிகள் முடங்கி இருக்க முடியாது. எமது போராகளிகள் சுதந்திரமாக நடமாட வேண்டும். எமது தளபதிகள், பொறுப்பாளர்கள் எமது தலைமைப்பீடத்துடன் அடிக்கடி கலந்துரையாட வேண்டும். ஒழுங்குபடுத்தல்களை செய்யவேண்டும். அல்லாவிட்டால் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உள்ள விடயங்களை பேணுவது எமக்கு சிக்கலாக இருக்கும்.

நாம் சுயமாக எமது பயணத்தை மேற்கொள்வது தவிர்க்கமுடியாது என்பதை இன்றைய சந்திப்பில் விளக்கியுள்ளோம்.

இரண்டு தேசங்கள்-இரண்டு அதிகார மையங்கள்

கேள்வி: பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்டதன் மூலம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசு ஏற்றிருப்பதாக அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது தொடர்பாக?

பதில்: அவர்கள் சொல்வதில் உண்மையிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் என்பது இன்று இருக்கின்ற அரசாங்கம் என்பதை நாம் நிராகரிக்க முடியாது.

ஆனால் இங்கு இரண்டு தேசங்கள் உள்ளன. ஆகவே தமிழர்களுடைய தேசம், தமிழர்களுடைய பிரதிநிதிகள் யார் என்பதை அரசு ஏற்றால் சரி.

இரண்டு தேசங்களில் உள்ள அதிகார மையங்களை ஏற்றுக் கொண்டதினால்தான் பொதுக்கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ஆகவே இரண்டு அதிகார மையங்கள் இருக்கிறது என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன். இதில் தவறு இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.

பொதுக்கட்டமைப்பை விரைந்து செயல்படுத்துக

கேள்வி: பொதுக்கட்டமைப்பு தொடர்பான வேலைத் திட்டங்கள் எப்போது தொடங்கும்?

பதில்: அது பற்றியும் இன்று சுட்டிக்காட்டினோம். முக்கியமாக கண்காணிப்புக்குழுத் தலைவரையும் நோர்வே அனுசரணையாளர்களையும் அழைத்ததன் நோக்கம் இன்றுள்ள பாராதூரமான நிலைமைகளை விளக்குவதற்காகத்தான்.

ஆகவே இன்றுள்ள நிலைமைகள் சீர் செய்யப்படாவிட்டால் எல்லாமே சீர்குலையும் என்பதுதான் இன்றுள்ள யதார்த்த நிலைமை. அதை இன்று நாம் வெளிப்படுத்தியதோடு பொதுக்கட்டமைப்பு நடைமுறைக்கு விரைவாக கொண்டு வரவேண்டும். ஒப்பம் இடுவதோ இணக்கப்பாட்டை தெரியப்படுத்துவதோ முக்கியமில்லை. இதை மக்கள் ஒரு போதும் நம்பப் போவதில்லை. மிகவிரைவில் பொதுக்கட்டமைப்பு வேலைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான சூழலை சிறிலங்கா அரசு விரைந்து உருவாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

கேள்வி: பொதுக்கட்டமைப்பு அங்கத்தவர் பெயர் விபரம் தெரியப்படுத்துள்ளீர்களா?

பதில்: விரைவில் கையளிக்கவுள்ளோம். ஓரிரு தினங்களில் எமது தாயகத்தின் மீள்கட்டுமானத்திற்கான நிதியத்தின் காப்பாளாராக செயற்பட போகின்ற உலக வங்கியோடு பேசவிருக்கிறோம். அப்பேச்சு முடிந்தபின் எமது நிலைப்பாட்டை அனுசரணையாளர்களுக்கு தெரிவிக்கவுள்ளோம்.

நிலைமைகள் சீரடைகின்ற போது முஸ்லிம்களுடன் பேச்சு

கேள்வி: பொதுக்கட்டமைப்பு தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுக்கள் நடத்தும் திட்டம் உள்ளதா?

பதில்: தற்போது உள்ள நிலைமைகளில் யுத்த நிறுத்த உடன்படிக்கையே நெருக்கடி நிலை அடைந்து செல்கிறது. கள நிலைமைகள் மோசம் அடைந்து செல்கின்றன. சிறிலங்கா அரசும் படைகளும் நெருக்கடி நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றனர். அவற்றுக்குள் தீர்வு காணவேண்டும்.

நிலைமைகள் சீரடைகின்ற போது முஸ்லிம் சமூகத்துடன் நாம் பேசுவோம். எமது தாயகப் பிரதேசத்தில் என்ன வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் முஸ்லிம் சமூகத்தை இணைத்து கொள்வதும் இணைந்து கொள்வதும் யதார்த்தம்.

கால ஓட்டத்தில் வேலை திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்ற போது முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை செய்வோம்.

கேள்வி: இராணுவத்தினரை தம்முடன் இணைந்து பணியாற்ற ஜே.வி.பி. அழைப்பு விடுத்திருப்பது தொடர்பாக?

பதில்: அது தொடர்பாக நீங்கள் ஜே.வி.பியை தான் கேட்கவேண்டும். சிறிலங்கா இராணுவம் எடுக்கிற முடிவில் சிறிலங்காவில் ஏற்படப்போகின்ற அரசியல் மாற்றங்களும் அடங்கியுள்ளன.





நன்றி புதினம்

Print this item

  Three soldiers killed in suspected rebel ambush in eastern
Posted by: வினித் - 06-30-2005, 07:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

Suspected Tamil rebels ambushed a motorized rickshaw in eastern Sri Lanka Thursday, killing three Sri Lankan army intelligence officers riding in the vehicle, the defense ministry said.

No details were immediately available, but an officer who responded to a phone call at the Military Media Unit said the Liberation Tigers of Tamileelam were suspected in the attack. Media unit members are not authorized to give their names.

The area has seen an increase in killing since the Tamil Tigers split into two opposing factions last year.

Since then, there has been sporadic fighting among the two rebel groups and government troops. But the three soldiers killed Thursday would represent the worst attack against Sri Lankan troops in months.

The 2002 cease-fire, brokered by Norway, halted fighting in the two-decade civil war between the Tigers and the government that had killed about 65,000 people. Subsequent peace talks have been deadlocked over rebel demands for wide autonomy. The government and the rebels signed a deal Friday to share international tsunami aid

Print this item

  எங்கே போகுது திரையுலக நடிகைகள் வாழ்வு..!
Posted by: kuruvikal - 06-30-2005, 07:06 AM - Forum: சினிமா - Replies (18)

<b>நடிகர் சதீஷ்டன் விரைவில் திருமணம் சீதா </b>

<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/Seetha200.jpg' border='0' alt='user posted image'>

டிவி நடிகர் சதீஷை விரைவில் திருமணம் செய்யப்போவதாக நடிகை சீதா அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகர் சதீஷûக்கும், நடிகை சீதாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சீதாவிடமிருந்து பார்த்திபன் விலகினார். இருவரும் விவாகரத்தும் பெற்றனர்.

இந் நிலையில் நடிகர் சதீஷûக்கு "காதல் வளர்த்தேன்' படத்தில் சீதா வாய்ப்பு கேட்டதாகவும், முதலில் வாய்ப்பு தருவதாக கூறி விட்டு பின்னர் தர மறுத்ததால், இயக்குனர் கலா புதியவனுக்கும், சீதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை ஆபாச வார்த்தைகளால் கலா புதியவன் திட்டியதாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சீதா புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந் நிலையில், தனக்கும், கலா புதியவனுக்கும் இடையிலான பிரச்சினை தீர்ந்து விட்டதாக சீதா கூறினார்.மேலும் நடிகர் சதீஷûக்காக தான் வாய்ப்பு கேட்கவில்லை என்றும் சீதா கூறினார்.

இதுதொடர்பாக சீதா கூறுகையில், நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போனதில்லை. வாய்ப்புகள் தான் என்னைத் தேடி வந்துள்ளன. அதேபோல யாருக்காகவும் நான் சிபாரிசு செய்வதில்லை. காதல் வளர்த்தேன் படத்திற்கு இயக்குனர் கலா புதியவனையே நான் தான் சிபாரிசு செய்தேன்.

கலா புதியவனின் சொந்த பெயர் சீனிவாசன். இந்தப் பெயரில் தான் அவரை நான் அழைப்பேன். என் கையினால் அவருக்கு சோறு போட்டிருக்கிறேன். டைரக்டராக முடியவில்லையே என்று வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு நான் தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன்.

காதல் வளர்த்தேன் தயாரிப்பாளர் ஹயாத் என் குடும்ப நண்பர் என்பதால் நான் சொன்னதும் கலா புதியவனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அப்படி இருக்க நான் நடிகர் சதிஷýக்கு சிபாரிசு செய்வதாக வெளியான தகவலில் சற்றும் உண்மை இல்லை. அவருக்கு சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. காதல் வளர்த்தேன் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள்.

4 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அட்வான்ஸும் கொடுத்தார்கள். பின்னர் திடீரென 15 நாட்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். ஆனால் ஒப்பந்தம் செய்தபடி 4 நாட்கள் மட்டும் தான் நடிப்பேன். அதற்கு மேல் நடிக்க முடியாது என்று கூறினேன்.

அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டேன். இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் கலா புதியவன், தொலைபேசியில் ஆபாசமாக பேசி திட்டினார், மிரட்டினார்.

இதனால் நான் போலீஸில் புகார் செய்தேன். இதனால் பயந்து போன கலா புதியவன் சமரசத்திற்கு வந்தார். இதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து சமரசம் நடந்தது. எனது தம்பியை என் சார்பில் அங்கு அனுப்பினேன். அங்கு இயக்குனர் சமாதானத்திற்கு ஒத்துக் கொண்டார். அத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறினார்.

இந் நிலையில் நடிகர் சதீஷை 2வது திருமணம் செய்யப்போவதாக சீதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சதீஷை நான் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

இதற்கு எனக்கு சிறிது டைம் வேண்டும். சதீஷ் குடும்பம் அவரை விட்டுப் பிரிந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. முறைப்படி அவர் விவாகரத்து வாங்கினாரா என்று தெரியவில்லை.

இவற்றையெல்லாம் உறுதி செய்த பின்னர் நானும் சதீஷûம் திருமணம் செய்து கொள்வது குறித்து முறைப்படி அறிவிப்பேன் என்றார் சீதா.

<b>thatstamil.com</b>

Print this item

  இப்படியும் காதலாம்...?!
Posted by: kuruvikal - 06-30-2005, 06:59 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (12)

<b>44 வயது பேராசியருடன் வாழ 19 வயது மாணவிக்கு கோர்ட் அனுமதி!</b>

சென்னை:

44 வயதான கல்லூரிப் பேராசியரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்ட 19 வயது மாணவி, அவரது விருப்பப்படி காதல் கணவருடன் வாழ சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் பூர்ணிமா. 19 வயதான பூர்ணிமா, சேலத்தில் உள்ள நேஷனல் கம்ப்யூட்டர் அகாடமியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பில் படித்து வந்தார்.

பூர்ணிமாவுக்கும், தர்மபுரி மாவட்டம் தங்காபுதூரைச் சேர்ந்த பழனியப்பன் என்ற கல்லூரி பேராசியருக்கும் காதல் ஏற்பட்டது. பழனியப்பனுக்கு 44 வயது. ஏற்கனவே சகுந்தலா என்ற பெண்ணுடன் கல்யாணமாகி அவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.

இருப்பினும் சகுந்தலாவின் வீட்டார் பழனியப்பன் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு தொடர்ந்ததால், கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந் நிலையில், பழனியப்பனின் வயது, அவரது குடும்பப் பின்னணி குறித்து கவலைப்படாமல் அவரை தொடர்ந்து காதலித்து வந்த பூர்ணிமா, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி பழனியப்பனுடன் சென்றார்.

இதையடுத்து பூர்ணிமாவின் தந்தை அர்ஜூன் லால்சிங், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகளை பழனியப்பன் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாகவும், பிப்ரவரி 17ம் தேதி முதல் தனது மகளைக் காணவில்லை என்றும், அவரை பழனியப்பனிடமிருந்து மீட்டுக் கொடுக்குமாறும் கோயிருந்தார்.

இதுதொடர்பாக இருவரையும் கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பூர்ணிமாவைக் கண்டுபிடித்தனர்.

அவர் நேற்று (புதன்கிழமை) நீதிபதிகள் சதாசிவம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் பூர்ணிமா கூறுகையில், நான் விரும்பித் தான் பழனியப்பனுடன் சேர்ந்து வாழ்கிறேன். நாங்கள் இருவரும் பிப்ரவரி 18ம் தேதி மாணியம்பாடி என்ற ஊரில் உள்ள கோவிலில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்டோம்.

ஆனால் கல்யாணத்தை முறைப்படி இன்னும் பதிவு செய்து கொள்ளவில்லை. எனக்கு பழனியப்பனை சிறு வயதிலிருந்தே தெரியும், அதாவது நான் 9வது வகுப்பு படித்து வந்த நாள் முதலே தெரியும். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததால் தான் காதலித்தேன்.

பழனியப்பனின் குடும்பப் பின்னணி, அவரது வயது குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் மீது எனக்கு தூய காதல் ஏற்பட்டதால் இவை எல்லாம் எனது கண்ணில் படவில்லை. நான் அவருடன் தான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். என்னை யாரும் மிரட்டவில்லை, கடத்தவில்லை.

பழனியப்பனுடன் வாழ்ந்தால் தான் எனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். எனவே என்னை அவருடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றார் பூர்ணிமா.

இதையடுத்து பழனியப்பனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரும், பூர்ணிமா தனது மனைவி என்றும் அவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். பூர்ணிமாவின் வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதிகள், இதற்கு மேல் இந்த வழக்கில் எதுவும் இல்லை.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணே மிகத் தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டார். கோவிலில் கல்யாணம் செய்து கொண்டதற்கான ரசீதையும் காட்டியுள்ளார். இருவரும் மனமொத்துத் தான் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. பெண் கடத்தப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.

எனவே ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மாணவி பூர்ணிமா, பழனியப்பனுடன் சேர்ந்து வாழலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பூர்ணிமாவும், பழனியப்பனும் சந்தோஷமாக நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர்.

thatstamil.com

Print this item

  எக்ஸ்ரேயைப் பார்த்து சாவியை வடிவமைத்தவர்
Posted by: SUNDHAL - 06-30-2005, 01:26 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

அமெரிக்காவில் நெப்ராஸ்கா நகரைச் சேர்ந்தவர் ஆர்தர் ரிச்சர்ட்சன். இவர் தன் நண்பனின் வாகனத்தின் சாவியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டாக அவர் சாவியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். ஆனால் தற்செயலாக அதை அவர் விழுங்கி விட்டார்.

டாக்டரிடம் சென்று நடந்ததைக் கூறினார். அவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார். வயிற்றில் சாவி இருந்த இடத்தைப் பார்த்ததும் அதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று டாக்டர் கூறினார்.

ஆனால் வாகனத்துக்குச் சொந்தக்காரருக்கு சாவி தேவைப்பட்டது. எனவே ரிச்சர்ட்சன் எக்ஸ்ரேயை எடுத்துக் கொண்டு பூட்டுக்குச் சாவி போடுபவரிடம் சென்றார். எக்ஸ்ரேயைப் பார்த்து அவர் சாவி செய்தார். எக்ஸ்ரேயைப் பார்த்து சாவி செய்தது இதுதான் முதல் முறை என்று சாவி செய்தவர் கூறினார்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  சுனாமி பற்றிய ஒளிப்படங்கள் சில
Posted by: ஊமை - 06-29-2005, 10:01 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

ஆசிய கண்டத்தில் சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 186 நாட்கள் முடிவடைந்தாலும் அந்த நினைவுகள் என்றென்றும் எம் நெஞ்சங்களை விட்டு நீங்காது.

ஆழிப்பேரலையின் ஒளிப்படம்

மலேசியாவில் இடம்பெற்ற பேரலை

தாய்லாந்து கராபி நகரின் ஒளிப்படம்

இலங்கையில் சுனாமி 01

இலங்கையில் சுனாமி 02

புகெற் பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட ஒளிப்படம்

<img src='http://img282.echo.cx/img282/1987/bg8sl.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img282.echo.cx/img282/2435/mandavarbg3ua.gif' border='0' alt='user posted image'>

Print this item

  தாய் அன்பு பெரியது என்று கூறுபவர்களே இதைப்படிங்க முதல்ல
Posted by: SUNDHAL - 06-29-2005, 05:29 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

உடல் உறுப்புகளை விற்று மகனின் சிகிச்சைக்குப் பணம் திரட்ட தற்கொலை செய்துகொள்ள முயன்றார் ஒரு தந்தை.

இச்சம்பவம் சீனாவில் நடைபெற்றது. ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன் ஜிங் (41). இவரது மகன் கடுமையான ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தின் வறுமை காரணமாக மகனுக்கு சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லை.

இதனால் தான் தற்கொலை செய்து தனது உறுப்புகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மகனுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டார் சன். பெய்ஜிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியபோது விரிவான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார்.

ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் சரியான நேரத்தில் இதைப் பார்த்து விட்டனர். அருகில் இருந்த மருத்துவமனையில் சன் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Print this item

  மொழிமாற்றி
Posted by: yalie - 06-29-2005, 05:03 PM - Forum: இணையம் - Replies (2)

வணக்கம்
தமிழில் உள்ள பல எழுத்துருக்களில் உள்ள விடயங்களை நேரடியாக 'பாமினி" எழுத்துருவுக்கு மாற்ற ஏதாவது வழியிருக்கின்றதா?
அதே போல் ஆங்கிலத்தில் அல்லது ஃபிரெஞ்சு மொழியில் உள்ள விடயங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கூடிய வழி ஏதாவது இருக்கின்றதா என தயவு செய்து விடயம் அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்!!
நன்றி !!
தயவு செய்து உதவுங்கள்

Print this item

  ஆதிமனிதன் யார்?
Posted by: அனிதா - 06-29-2005, 05:01 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

<img src='http://img272.echo.cx/img272/9275/renlei1cc.jpg' border='0' alt='user posted image'>
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று நாம் நமது மரபுவழியைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கின்றோமே.
முதல் மனிதன் எங்கே தோன்றினான்?
அவன் எப்படிப்பட்டவனாக இருந்தான்?
அவனுடைய உயரம் என்ன?
இதெல்லாம் நமக்குத் தெரியுமா?
இந்தப் புவியில் மனிதனின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் GREAT RIFT VALLY எனப்படும் மகாப் பிளவு பள்ளத்தாக்குப் பகுதியில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்று பொதுவாக நம்பப்படுகின்றது. இந்தப் பள்ளத்தாக்கில் தான் எதியோப்பியாவும் கீன்யாவும் உள்ளன. இப்பகுதியில் சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனிதன் இருந்ததாகக் கருதப்படுகின்றது. அவனுடைய எலும்புகளின் புதைபடிவுகள் 2002ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன.


மத்திய பிரான்சில் உள்ள பாயிட்டியர்ஸ் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் புருனெட் என்பவரின் தலைமையிலான குழு புதைப்படிவுகளில் கிடைத்த முதல் மனிதனின் தாடை எலும்புகளையும் பற்களையும் ஒருங்கிணைத்து மண்டை ஓட்டை முழுமைப் படுத்தியுள்ளது. துமாய் எனப்படும் இந்த புதைபடிவத்திற்குச் சொந்தக் காரரான மனிதன் தான் ஆதிமனிதனாக இருக்க முடியும் என்று பிரெஞ்சு அறிஞர்கள் உறுதியாகக் கருதுகின்றனர். சாத் பாலைவனத்தில் கிடைத்த இந்த எலும்புப் புதைபடிவுகள் மற்ற பிராணிகனின் படிவுகளுடன் கிடந்தன. அந்த விலங்குகளின் காலம் 70 லட்சம் ஆண்டுகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிபுணர்கள் துமாய் மண்டை ஓடு மிகச் சின்னதாக இருக்கின்றது. இதற்குள் மனித மூளை அடங்கியிருக்க முடியாது என்கின்றனர். மேலும் மண்டை ஓட்டின் அளவை வைத்துப் பார்க்கும் போது அதன் உடைமையாளரின் உயரம் 1.2 மீட்டர் தான் இருக்க முடியும். இது ஒரு நடக்கும் சிம்பன்ஸியின் உயரம் தான் என்று கூறுகின்றனர். ஆகவே துமாய் புதைப்படிவை ஆதிமனிதனுக்கு உரியது என்று பட்டம் கட்டிவிடக் கூடாது என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் துமாய் படிவுகள் ஆதி மனிதனுக்கு உரியவைதான் என்று உறுதிப்படக் கூறுவோர். இயற்கை எனும் ஒரு பிரிட்டிஷ் அறிவியல் ஏட்டில் இரண்டு கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். 3 டி எனப்படும் முப்பரிமாண கணிணி மூலம் மறுஉருவாக்கம் செய்து கொரில்லா மற்றும் சிம்பன்ஸிகளின் மண்டை ஓடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது மண்டை ஓட்டின் கோணங்களும் கொள்ளளவும் அது ஆதிமனிதனுக்குரிய புதைபடிவுதான் ஆப்பிரிக்க குரங்கிற்கு உரியதல்ல என்று முடிவு கட்டியுள்ளனர் கிறிஸ்டோபர் டோலிகோபஃர் தலைமையிலான நிபுணர்கள். மேலும் இந்த துமாய் மனிதன் 0.6 மீட்டர் உயரத்துடனே கூட நிமிர்ந்து நடக்க முடிந்தது என்கின்றனர். இது போல குரங்குகளால் நடக்க முடியாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். பாலைவனத்தின் வடபகுதியில் கிடைத்த பற்கள் மற்றும் தாடை எலும்புத் துண்டுகளின் புதைபடிவுகள் ஆப்பிரிக்கக் குரங்குகளின் அமைப்பில் இருந்து மாறுபடுகின்றன என்று மைக்கேல் புருடனெட் கண்டுபிடித்துள்ளார்.

Print this item