Yarl Forum
தாய் அன்பு பெரியது என்று கூறுபவர்களே இதைப்படிங்க முதல்ல - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: தாய் அன்பு பெரியது என்று கூறுபவர்களே இதைப்படிங்க முதல்ல (/showthread.php?tid=4020)



தாய் அன்பு பெரியது என்று கூறுபவர்களே இதைப்படிங்க முதல்ல - SUNDHAL - 06-29-2005

உடல் உறுப்புகளை விற்று மகனின் சிகிச்சைக்குப் பணம் திரட்ட தற்கொலை செய்துகொள்ள முயன்றார் ஒரு தந்தை.

இச்சம்பவம் சீனாவில் நடைபெற்றது. ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன் ஜிங் (41). இவரது மகன் கடுமையான ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தின் வறுமை காரணமாக மகனுக்கு சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லை.

இதனால் தான் தற்கொலை செய்து தனது உறுப்புகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மகனுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டார் சன். பெய்ஜிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியபோது விரிவான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார்.

ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் சரியான நேரத்தில் இதைப் பார்த்து விட்டனர். அருகில் இருந்த மருத்துவமனையில் சன் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.