Yarl Forum
எக்ஸ்ரேயைப் பார்த்து சாவியை வடிவமைத்தவர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: எக்ஸ்ரேயைப் பார்த்து சாவியை வடிவமைத்தவர் (/showthread.php?tid=4018)



எக்ஸ்ரேயைப் பார்த்து சாவியை வடிவமைத்தவர் - SUNDHAL - 06-30-2005

அமெரிக்காவில் நெப்ராஸ்கா நகரைச் சேர்ந்தவர் ஆர்தர் ரிச்சர்ட்சன். இவர் தன் நண்பனின் வாகனத்தின் சாவியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டாக அவர் சாவியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். ஆனால் தற்செயலாக அதை அவர் விழுங்கி விட்டார்.

டாக்டரிடம் சென்று நடந்ததைக் கூறினார். அவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார். வயிற்றில் சாவி இருந்த இடத்தைப் பார்த்ததும் அதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று டாக்டர் கூறினார்.

ஆனால் வாகனத்துக்குச் சொந்தக்காரருக்கு சாவி தேவைப்பட்டது. எனவே ரிச்சர்ட்சன் எக்ஸ்ரேயை எடுத்துக் கொண்டு பூட்டுக்குச் சாவி போடுபவரிடம் சென்றார். எக்ஸ்ரேயைப் பார்த்து அவர் சாவி செய்தார். எக்ஸ்ரேயைப் பார்த்து சாவி செய்தது இதுதான் முதல் முறை என்று சாவி செய்தவர் கூறினார்.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->