| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 458 online users. » 0 Member(s) | 455 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வித்தகக் கவிஞர் |
|
Posted by: SUNDHAL - 07-01-2005, 09:34 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
திரைப்படப் பாடல் ஆசிரியரும், கவிஞருமான பா. விஜய்க்கு, "வித்தகக் கவிஞர்' என்ற விருதை திமுக தலைவர் மு. கருணாநிதி வழங்கினார்.
பா. விஜய்யின் கவிதை நூல்களை சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டபோது இப் பட்டத்தை வழங்குவதாக அவர் அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞானி என்ற பட்டம் கொடுத்தேன். கவிஞர் வாலிக்கு காவியக் கவிஞர் என்ற பட்டமும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இசைஞானி பட்டமும், கவிஞர் வைரமுத்துவுக்கு கவிப் பேரரசு பட்டமும் அளித்தேன்.
பொள்ளாச்சியில் பொதுக் கூட்டத்தில் கண்ணதாசன் ஆற்றிய உரையைக் கேட்டு, அவர் இனி கவிஞர் கண்ணதாசன் என்று பட்டம் கொடுத்தேன்.
இதெல்லாம் இன்னும் நீடிக்கின்றன. அந்த வகையில் விஜய்க்கு வித்தகக் கவிஞர் என்ற பட்டத்தை அறிவிக்கிறேன்.
வித்தகம் என்ற சொல்லுக்கு ஞானம், கல்வி, செம்மை, திறன் என்றெல்லாம் பல பொருள்கள் உள்ளன. எல்லாமே சிறப்பைக் குறிப்பிடும் பொருள்கள். விஜய் எழுதிய 12 கவிதை நூல்களையும் படித்துப் பார்த்ததில் இந்தப் பட்டத்தைத் தருகிறேன்.
நான் கைராசிக்காரனா இல்லையா என்று தெரியாது. ஆனால், இப்படி பட்டம் வழங்குவதில் எனக்கு வாய் ராசி உண்டு என்றார் அவர்.
|
|
|
| பாரதி கண்ட புதுமை பெண் |
|
Posted by: SUNDHAL - 07-01-2005, 09:25 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
மணமகன் குடித்துவிட்டு தாமதமாக வந்ததால், திருமணத்தை நிறுத்தினார் மணமகள்.
இச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் கோதோபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
பலர் வற்புறுத்தியபோதும், தனது முடிவை மாற்றிக் கொள்ள மணப்பெண் மறுத்துவிட்டார். அவருக்கு ஆதரவாக அவருடைய கிராமத்தினரும் குரல் கொடுத்தனர்.
மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை பிடித்து வைத்துக் கொண்டனர். வரதட்சிணையாகக் கொடுத்த பொருள்களை திருப்பித் தந்த பிறகே அவர்களை விடுவித்தனர்.
|
|
|
| இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம் |
|
Posted by: vasisutha - 06-30-2005, 04:55 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
<b>இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம்
ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும்</b>
இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்படி அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும்.
<i>ராணுவ மந்திரி</i>
இந்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி அமெரிக்கா சென்று இருக்கிறார். வாஷிங்டன் நகரில் உள்ள, அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகத்தில், அமெரிக்க ராணுவ மந்திரி டோனால்டு ரம்ஸ்பீல்டை, பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.
இருவரும், இரு நாட்டு ராணுவ உறவு பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு பலப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
<i>ஒப்பந்தம் கையெழுத்து</i>
இதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ``இந்தியா - அமெரிக்கா ராணுவ உறவு" ஒப்பந்தத்தில் இருநாட்டு ராணுவ மந்திரிகளும் கையெழுத்திட்டனர்.
இதன்படி இரு நாடுகளும் ஏவுகணை தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். அதி நவீன அமெரிக்க தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும்.
ராணுவ தளவாட மற்றும் கருவிகள் கூட்டு உற்பத்தியும் செயல்படுத்தப்படும். ராணுவ தளவாட சோதனை மதிப்பீடு ஆகியவையும் கூட்டாக செய்யப்படும்.
ராணுவ தளவாட கொள்முதல் செய்யவும், இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. ராணுவ வளர்ச்சி, ஆராய்ச்சி, கடற்படை விமானிகளுக்கு பயிற்சி ஆகியவையும் நடைமுறைப்படுத்தப் படும்.
<i>தீவிரவாதம்</i>
தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் கூட்டாக சேர்ந்து செயல்படவும், தரை வழியாகவும், வான் வழியாகவும், கடல் வழியாகவும் தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவும், இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இநத ஒப்பந்தம் பற்றி ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்காவுடன் நாங்கள் செய்து கொண்ட ராணுவ ஒப் பந்தத்தையும், ரஷிய உறவையும் இணைத்து பேசக் கூடாது.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்று தெரிவித்து இருக்கிறோம்.
இந்த ஒப்பந்தத்தால் இருநாடுகளும் பலன்பெறும்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
<i>மன்மோகன்சிங் பயணம்</i>
பிரதமர் மன்மோகன்சிங் வருகிற ஜுலை 18-ந் தேதி அமெ ரிக்காவுக்கு 3 நாள் பயணமாக செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி புஷ் உடன் பேச்சு நடத்துகிறார்.
அவரது பயணத்துக்கு முன்னதாக இந்தியா - அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செய்தி: தினத்தந்தி
|
|
|
| மைக்கல் ஜாக்சனுக்கு என்னாச்சு? |
|
Posted by: Mathan - 06-30-2005, 04:00 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (10)
|
 |
கறைபடிந்த பிம்பங்கள் களையப்படுமா?
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image052.jpg' border='0' alt='user posted image'>
புகழ் தரும் மாiயையில் இருந்து மனிதனால் இலகுவில் விடுபடமுடிவதில்லை. புகழ் அவனுக்குத் தரும் போதை மயக்கத்தில் ஒருவனோ ஒருத்தியோ தலைகீழாக தன் வாழ்க்கையை அமைக்க முற்பட்டு விடுகின்றார்கள். புகழோடு பணமும் சேர மமதை தலைக்கேற, அவன் அவனாகவே இருக்கத் தவறி விடுகின்றான். அவன் அவனாக இருக்கத் தவறுவதால் அவனியில் அவசியமற்ற அல்லல்களுக்கும், மன வேதனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியவனாகின்றான். புகழின் உச்சியில் நிற்பவன் அகலபாதாளத்தில் தலைகுப்பற விழும் நிலையும் வந்து சேர்ந்து விடுகின்றது. அப்படி விழுந்தபின்புதான் காலங்கடந்த ஞானோதயம் அவனுக்கு வருகின்றது.
புகழின் உச்சியில் வீறுநடை போட்டுக் கொண்டிருந்த உலக நாயகர்களில் ஒருவர்தான் பொப்பிசைச் சக்கரவர்த்தி என இன்று பலராலும் கொண்டாடப்படும் மைக்கல் ஜாக்ஸன் ஆவார். இவரது ஆட்டமும் பாட்டமும், துறுதுறுவென்ற மேடை நடனங்களும் வசீகரக் குரலும், உலகின் நாலாதிக்கிலும் முழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தன.
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image048.jpg' border='0' alt='user posted image'>
இதே பாடகரின் தலையில் வந்து இடியொன்று திடீரென்று இறங்கியது. சிறு பிள்ளைகளுடனான துர்சகவாசம் இவருக்கு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டோடு அமெரிக்க அரசு வழக்கு தொடுத்தது. பலமுறை நீதிமன்ற வாசல் மிதித்தவருக்கு இப்பொழுது நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்திருக்கின்றது. இவர் குற்றமற்றவர் என்று ஜூரர்கள் ஏகமனதாகத் தீர்மானித்ததில் பழையபடி சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருக்கின்றார் பொப்பிசைச் சக்கரவர்த்தி.
குற்றமற்றவர் என்று முடிவாகி விட்டது உண்மைதான். என்றாலும் இங்கே ஒரு கேள்வி பிற்க்கின்றது. தான் இழந்த முடியை மீண்டும் எப்படி இந்தப் பாடகர் பொப்பிசை உலகில் கைப்பற்றப்போகிறார் என்பதுதான் அற்தக் கேள்வி.
கைப்பற்றுவாரா? அது சுலபமாக இருக்குமா?
இதைப்பற்றி சற்றே விரிவாக ஆய்வு செய்யுமுன்பு இவரைப் பற்றிய பின்னணிக் கதைச் சுருக்கத்தைப் பற்றி சொல்வது இங்கே பலவற்றிற்கு விளக்கங்களை ஒருவேளை தரலாம்.
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image049.jpg' border='0' alt='user posted image'>
80களில் புகழில் உச்சியில் இருந்தவர் இந்தப் பாடகர். நம்மை அசரவைக்கும் நடனத் திறன் பாடல்களை எழுதும் அபாரம் பலரையும் கவர்ந்திழுக்கும் வசீகரக் குரல் வித்தியாசமான முறையில் மேடையில் தோன்றுவது என்று பல அம்சங்கள் இவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைத் தேடித்தந்தன. THRILLER என்ற இவரது இசை அல்பம் இதுவரை தயாரிக்கப்பட்ட அல்பங்களில் அதிஅற்புதமானது என்று உலகமே வியக்கும் அளவிற்கு பெரும் கீர்த்தியைச் சம்பாதித்து. 26 மில்லியன் பிரதிகளை விற்று இந்த அல்பம் படைத்த அரும்பெரும் சாதனை காலத்தால் அழியாத ஒன்று. இசை உலகில் பெருமைக்குரிய கௌரவமாகக் கருதப்படும் Grammy எனப்படும் விருதில் எட்டை இந்த அல்பம் வென்றெடுத்தது என்று கூறும்போது இதன் மகத்துவம் சொல்லாமலே எவருக்கும் புரிந்து விடும்.
ஓர் உருக்குத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளி ஒருவரின் அதுவும் கறுப்பு அமெரிக்க இனத்தவரின் ஒரு மகன் இப்படியொரு உன்னத நிலையை வென்றெடுப்பது என்பது அசாதாராண சாதனை என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை. தனது ஐந்து வயதிலேயே தொழில்ரீதியாகப் பாட ஆரம்பித்து பின்பு 11 வயதில் தன் சகோதரர்களுடன் இணைந்து ஜாக்ஸன் 5 என்று ஒரு குழுவை உருவாக்கி, தொடர்ந்து மெல்ல மெல்ல தனியாகப் பாட ஆரம்பித்து பலரையும் கவரத் தொடங்கினார் இந்த இளம் பாடகர்.
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image055.jpg' border='0' alt='user posted image'>
இசை அல்பத்தில் இவரது பாடல் ஒன்று முதல் இடத்தைப் பிடித்தபோது இவருக்கு வயது 14 மட்டுமே. வயது என்பது சாதனைகளுக்கு ஒரு தடை அல்ல நமது இளம் சிறார்களும் முயன்றால் காலப்போக்கில் பலதைச் சாதிக்கலாம் என்பதற்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டியதில்லை. இப்படி வளர்ந்தவர்தான் இந்தப் பாடகர்.
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image054.jpg' border='0' alt='user posted image'>
ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல புகழின் போதை தலைக்கேறுவதால், பொல்லாத நிகழ்வுகள் வாழ்க்கையில் மூக்கை நுழைத்து விடுகின்றன.
பொப்பிசைச் சக்கரவர்த்தி என்று இவரைத் தலையில் வைத்துக் கூத்தாடியவர்கள்
முகம் சுளிக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் அடுத்தடுத்து சம்பவிக்கலாயின.
கலிபோர்னியாவில் உள்ள இவரது Neverland என்ற பிரமாண்டமான பண்ணை பலவிதமான கிசுகிசுக்களை பரப்பலாயிற்று. குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட இந்தப் பண்ணையில் இவர் பிள்ளைகளைத் தன் இச்சைக்கு வடிகாலாகப் பயன்படுத்துகிறார் என்று ஒரு செய்தி 1993இல் கசிந்தது. பத்திரிகைகளுக்கும் மெல்ல நல்ல அவல் கிடைத்த கதையாயிற்று.
புகழின் உச்சியில் இருந்தவர் நிலையும் ஆட்டம்காண ஆரம்பித்தது.
முன்னொரு காலத்தில் இசையுலகின் மன்னர் என்று வர்ணிக்கப்ட்ட பிரபல்யமான பாடகர் எல்விஸ் பிரீஸ்லியின் சகோதரி லீசா மேரியை இவர் 1994இல் திருமணம் செய்தபோது பொப்இசை உலகம் வியந்தது. ஆனால் இரண்டு வருடங்கள் முழுதாக முடியுமுன்பு இந்தத் தம்பதிகளின் உறவில் முறிவு வந்தபோது வியந்த உலகம் அதிர்ந்தது.
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image051.jpg' border='0' alt='user posted image'>
இதைத் தொடர்ந்து மருத்துவ தாதி ஒருவரை(Debbie Rowe) இவர் தன் மனைவியாக்கி இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்து உலகை இவர் மீண்டும் ஆச்சரியப்படுத்தினார். மூன்றாவது பிள்ளையொன்றை பேர்லின் நகர ஹாட்டல் ஒன்றின் சாரளம் வழியாகத் தலைகீழாகத் தூக்கிப்பிடித்து நின்ற இந்தப் பாடகர் உலகை மீண்டும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். இந்தப் பிள்ளையின் முகம் தெரியாத அம்மாவை இவர் இரகசியமாக்கிக் கொண்டார்.
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image053.jpg' border='0' alt='user posted image'>
1995 இல் தன் இழந்த பெயரை நிலைநாட்டுவதில் இவர் குறியாக இருந்திருக்கின்றார்.
இதன் எதிரொலியாக History என்ற அல்பம் சந்தைப்படுத்தப்பட்டது. தனது சிலையொன்றை தேம்ஸ் நதியில் மிதக்கவிட்டு 30 மில்லியன் டாலர் தொகையை அள்ளி வீசி, தன் நிலையை உயர்த்திக் கொள்ள பல விளம்பர யுக்கதிகளை இவர்
இக்காலகட்டத்தில் கையாண்டிருக்கின்றார்.
என்றாலும் இவரை உச்சியில் வைக்க விசிறிகள் தயாராக இல்லை. 2001இல் முதல் பத்து என்ற இடத்திற்குள் இவரால் வரமுடிந்ததே ஒழிய முதலாம் இடம் எட்டாக் கனியாகவே இருந்தது.
<img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image050.jpg' border='0' alt='user posted image'>
பழைய கதை இப்படியிருக்க, 14 வாரங்களாகத் தொடர்ந்த விசாரணை ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பும் வெளியாகி இருக்கின்றது. கறைபடிந்தவர் என்று இதுகாலவரை பலருக்கும் தெரிந்தவர் சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றார். 20 வருடங்கள் வரையிலான சிறைவாசத்தை இவர் அனுபவிக்கலாம் என்ற நிலையிலிருந்து இப்பொழுது இவர் விடுவிக்கப்ட்டு
இருக்கின்றார். தன்னில் குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு அறிவித்தலையும் செவிமடுத்த போது, இந்த 46வயதுப் பாடகரின் கண்களில் நீர்மல்கி இருக்கி;ன்றது. அது ஆனந்தக் கண்ணீர் என்பது கண்கூடு. இவர் மீது சுமத்தபபட்ட 10 குற்றச்சாட்டுகளிலும் இருந்து இவர் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஒரு பாடகர் இவர் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் இவர் விசித்திரமான மனப்போக்குடையவர் என்றும் இவரை வர்ணிக்கின்றார்கள். அறுவைச் சிகிச்சை மூலம் தன் முகத்தை மாற்றித் தன் கோலத்தை மாற்றிக் கொண்ட இவருக்கு நிஜத்திலும் பல முகங்கள் இருக்கின்றன என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மில்லியன் கணக்காக தன் இசை அல்பங்களை விற்றுத் தீர்த்து, பணத்தில் புரண்ட இவர் பணமுடையில் இருக்கின்றார் என்றும் செய்திகள் வெளியாகத் தவறவில்லை.
நீதிமன்ற விசாரணைகளின்போது, பலர் இவருக்கு எதிராகச் சாட்சியளித்தார்கள். இவர் தன் காம இச்சசையின் வடிகலாக சிறுவர்களை நாடினார் என்பதற்கு விசாரணகளில் சாட்சி சொல்லியவர்கள் பலர். ஆனால் தீர்ப்போ இவருக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. நீதிதேவதையின் கண்ணில் சாட்சிகள் சொல்லியதெல்லாம் சிருஷ்டிக்கப்பட்ட கதைகள் என்றாகி இருக்கின்றது. பரிசுத்தமான ஒரு குடிமகன்
இந்தப் பாடகன் என்று நீதிதேவதை அடித்துச் சொல்லியிருக்கின்றது.
உண்மைகள் புதைக்கப்பட்டு விட்டனவா அல்லது இவைதான் உண்மையா என்ற விவவாதத்திற்கு இடமேயில்லை. பல தரப்பு வயதினரைக் கொண்ட பத்து ஜூரர்கள் தீர்மானமாக எடுத்த முடிவை நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.
விழுந்தவர் இனி என்றெழுவார் என்பதே இன்றைய விவாதம். முகம் குப்பற விழுந்தவர்கள் பலர் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வாதாடிக் கொண்டு மீண்டும் முன்னேறிய கதைகள் பல இருக்கின்றன. வீம்புக்கு வாதாடிவிட்டு, விழுந்த நிலையிலேயே கிடந்தவர்கள் கதைகளும் இருக்கின்றன. அன்றைய பொப் சக்கரவர்த்தி கதை இனி எப்படி இருக்கும்? காலவெள்ள ஓட்டத்தில் காணத்தானே போகின்றோம்.
ஏ.ஜே.ஞானேந்திரன்
|
|
|
| முயலின் தற்கொலை முயற்சிகள் |
|
Posted by: vasisutha - 06-30-2005, 03:39 PM - Forum: நகைச்சுவை
- Replies (61)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><b>முயலின் தற்கொலை முயற்சிகள்</b></span>
படம்1
<img src='http://img233.imageshack.us/img233/5748/1769bp.jpg' border='0' alt='user posted image'>
படம்2
<img src='http://img233.imageshack.us/img233/3677/1779nx.jpg' border='0' alt='user posted image'>
படம்3
<img src='http://img233.imageshack.us/img233/6355/1831im.jpg' border='0' alt='user posted image'>
படம்4
<img src='http://img233.imageshack.us/img233/2503/1842qv.jpg' border='0' alt='user posted image'>
படம்5
<img src='http://img233.imageshack.us/img233/5952/2022kz.jpg' border='0' alt='user posted image'>
படம்6
<img src='http://img233.imageshack.us/img233/7236/2088sm.jpg' border='0' alt='user posted image'>
படம்7
<img src='http://img233.imageshack.us/img233/4634/042sf5cx.jpg' border='0' alt='user posted image'>
படம்8
<img src='http://img233.imageshack.us/img233/4656/096ym3fr.jpg' border='0' alt='user posted image'>
படம்9
<img src='http://img233.imageshack.us/img233/5494/0118od7zf.jpg' border='0' alt='user posted image'>
படம்10
<img src='http://img233.imageshack.us/img233/3975/0205fb4op.jpg' border='0' alt='user posted image'>
படம்11
<img src='http://img233.imageshack.us/img233/3329/0330id4xt.jpg' border='0' alt='user posted image'>
படம்12
<img src='http://img233.imageshack.us/img233/7549/clockbunny4ka.jpg' border='0' alt='user posted image'>
Thanks to:
unix.rulez.org
|
|
|
| கணணி - பழசும் புதுசும் |
|
Posted by: Mathan - 06-30-2005, 03:26 PM - Forum: கணினி
- Replies (7)
|
 |
கணணி - பழசும் புதுசும்
40களின் 'ENIAC' திட்ட கணினியைதான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.
<img src='http://i.i.com.com/cnwk.1d/i/ne/p/2005/eniac.cyber_500x409.jpg' border='0' alt='user posted image'>
இது, 50களில் பிரபலமான எம்.ஐ.டியின் 'Whirlwind I' கணினியின் நினைவகப் பகுதி.
<img src='http://i.i.com.com/cnwk.1d/i/ne/p/2005/lot101WWi_450x595.jpg' border='0' alt='user posted image'>
இது தற்போதைய 'Mac Mini'. இரு உள்ளங்கைகளில் அடங்கி விடுகிறது பாருங்கள்!
<img src='http://i.i.com.com/cnwk.1d/i/ne/p/2005/012605macmini.jpg' border='0' alt='user posted image'>
நன்றி! : சிநெட் நியூஸ் மற்றும் வானம்பாடி வலைப்பதிவு
|
|
|
| கையெழுத்தில் தலையெழுத்து. |
|
Posted by: SUNDHAL - 06-30-2005, 01:52 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (21)
|
 |
இது சாத்திரம் இல்லை உளவியல் நிபுணர்கள் வெளியிடும் தகவல்கள். என்னவென்றhல், உங்கள் கையெழுத்தை வைத்தே நீங்கள் எப்படிப் பட்டவர் என்பதை கூறிவிடலாம் என்பதே.
1) பெரிய எழுத்தாக எழுதுபவர் பேரார்வம் உள்ளவராக இருப்பார். இவருக்கு அதிக நம்பிக்கை இருக்கும்.
2) சிறிய எழுத்துக்களாக எழுதுபவர் எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்.
3) வலப்பக்கம் சாய்த்து எழுதுபவர் எதிர்கால வாழ்வில் இன்பமாக இருப்பார்.
4) இடப்பக்கமாக சாய்த்து எழுதுபவர் பயந்த சுபாவமும், நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துபவராகவும் இருப்பார்
5) எழுத்தினை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுபவர் எந்தக் காரியத்திலும் அசாதாரண துணிச்சலைக் காட்டுவார்.
6) கிறுக்கலாக எழுதுபவர் மனக்குழப்பம் உள்ளவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துபவர்.
7) கட்டமாக எழுதுபவர் ஆடம்பரப் பிரியர். வட்டமாக முடிப்பவர் பயந்த சுபாவம் உள்ளவர். ஆனால் திறமைசாலி.
நீங்கள் இதில் எந்த ரகம்?
|
|
|
| கொழுத்தும் வெய்யிலில் வேலை வாங்க கூடாது |
|
Posted by: SUNDHAL - 06-30-2005, 01:28 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் களப்பணியாளர்களை வேலை வாங்கக்கூடாது என்று ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அமீரகத்தில் கோடைகாலம். 113 டிகிரி வெயில் கொளுத்தும். அப்போது தொழில் நிறுவனங்கள் தங்களது களப்பணியாளர்களை மதியம் 12- 30 முதல் மாலை 4-30 மணிவரை வேலை செய்யச் சொல்லக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் நலம் மற்றும் சமூக விவகாரத்துறை அமைச்சர் அலி பின் அப்துல்லா அல் ஹாபி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில் மேலும் கூறியிருப்பதாவது:
தொழில் நிறுவனங்களில் காலை ஷிப்ட் ஐந்து மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். பகல் 12-30க்கு மேல் பணி நேரத்தை நீட்டிக்கக்கூடாது. அதுபோல் அடுத்த ஷிப்ட் மாலை 4-30 மணிக்கு முன்பாக தொடங்கக் கூடாது.
அரபு அமீரகத்தில் களப்பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியர்கள். இந்த தொழிலாளர்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பகல் முழுவதும் (சுட்டெரிக்கும் வெயிலில்) கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகப் புகார் வந்துள்ளது. இது போன்ற மனிதநேயமற்ற செயல்களை எங்கள் அரசாங்கம் அனுமதிக்காது.
மேலும் தொழிலாளர்களின் வேலை நேரம் எட்டு மணி நேரம். அதற்கு மேலும் அவர்கள் பணி செய்ய நேரிட்டால் அதை அதிக நேரப்பணியாக (ஓவர் டைம்) கணக்கிடப்படவேண்டும். அதற்குத் தனியாக ஊதியமும் வழங்க வேண்டும். இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
|
|
|
|