Yarl Forum
பாரதி கண்ட புதுமை பெண் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பாரதி கண்ட புதுமை பெண் (/showthread.php?tid=4004)



பாரதி கண்ட புதுமை பெண் - SUNDHAL - 07-01-2005

மணமகன் குடித்துவிட்டு தாமதமாக வந்ததால், திருமணத்தை நிறுத்தினார் மணமகள்.

இச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் கோதோபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பலர் வற்புறுத்தியபோதும், தனது முடிவை மாற்றிக் கொள்ள மணப்பெண் மறுத்துவிட்டார். அவருக்கு ஆதரவாக அவருடைய கிராமத்தினரும் குரல் கொடுத்தனர்.

மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை பிடித்து வைத்துக் கொண்டனர். வரதட்சிணையாகக் கொடுத்த பொருள்களை திருப்பித் தந்த பிறகே அவர்களை விடுவித்தனர்.


- aswini2005 - 07-01-2005

பாரதி புதுமைப்பெண்ணைக் கனவுகாண பதுமைப்பெண்களாகவே பெண்கள் ஆக்கப்பட்டிருந்தனர். ஈழப்பெண்களைக் கண்டபின்னே உலகப்பெண்ணின் உய்வு உண்டாயிற்று. இது புதுமையல்ல ஈழப்பெண்ணின் புரட்சியால் ஏற்பட்ட மாற்றம்.
இந்தியாவில் பெண்கள் பற்றி சிந்தனைகளும் பெண்கள் சிந்திக்க வேண்டியதுமாக நிறைய விடயங்கள் இருக்கின்றன. அங்கு மாற்றங்கள் நிறையவே வரவும் வேண்டியுள்ளது.


- அருவி - 07-02-2005

மாற்றங்கள் சமூகத்திற்கு பயனுள்ளவையாக இருக்கவேண்டும்


- kuruvikal - 07-02-2005

[quote=Aruvi]<b>மாற்றங்கள் சமூகத்திற்கு பயனுள்ளவையாக இருக்கவேண்டும்</b>

அருவியின் நிலைப்பாடே குருவிகளதும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Thala - 07-02-2005

மணமகள் ஒண்டும் சீதணம் குடுக்க கூடதெண்டு புரட்ச்சி செய்யேல்ல குடிகார மாப்பிள்ளை வேண்டாம் எண்டும் சொன்னதா இல்லை, கல்யாணவீட்டுக்கே குடிச்சிட்டு வந்தா?... எதிர்காலம் பற்றிய பயத்தால பிள்ளை மாட்டன் எண்டு சொல்லி இருக்கலாம். இதுல பாரதியின் புதுமை பெண் எப்படி எண்டுதான் விளங்கேல்ல..


- tamilini - 07-02-2005

Quote:மணமகள் ஒண்டும் சீதணம் குடுக்க கூடதெண்டு புரட்ச்சி செய்யேல்ல குடிகார மாப்பிள்ளை வேண்டாம் எண்டும் சொன்னதா இல்லை, கல்யாணவீட்டுக்கே குடிச்சிட்டு வந்தா?... எதிர்காலம் பற்றிய பயத்தால பிள்ளை மாட்டன் எண்டு சொல்லி இருக்கலாம். இதுல பாரதியின் புதுமை பெண் எப்படி எண்டுதான் விளங்கேல்ல..
அது தானே முதலில சீதனம் கொடுக்காமல் விட்டிருக்கணும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 07-02-2005

சீதனம் கொடுத்ததாலை தான் அந்த காசுலை கொஞ்சம் அடிச்சிட்டு வந்திருக்கும் அந்தாள்... :wink: