Yarl Forum
சுறா வறை சாப்பிட விருப்பமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சுறா வறை சாப்பிட விருப்பமா? (/showthread.php?tid=4005)

சுறா வறை சாப்பிட விருப்பமா? - vasisutha - 07-01-2005

<b>சுறா வறை</b>

தேவையானவை:

சுறா: 500 கிராம்

சின்ன வெங்காயம்: 250 கிராம்

தேங்காய்ப்புூ: 1 கப்

செத்தல் மிளகாய்: 5

மிளகுத்தூள்: 1 தே.கரண்டி

மஞ்சள் தூள்: 1 தே.கரண்டி

சின்ன சீரகத்தூள் 2 தே.கரண்டி

ஒலிவ் எண்ணெய்: 3 மேசைக்கரண்டி

உப்பு..கறிவேப்பிலை: தேவையான அளவு

செய்முறை:

சுறாவை நன்றாக கழுவி ஓரளவு பெரிய துண்டுகளாக
வெட்டி ஒரு சட்டியில் போட்டு கொஞ்சம் உப்பு மஞ்சள்தூள்
மிளகுத்தூள் போட்டு மூடி..தண்ணீர் விடாமல் நன்றாக அவித்து
எடுக்கவும்..

சுறா அவிந்ததும் அதன் தோல் எலும்புகளை நீக்கிவிட்டு
உதிர்த்து எடுக்கவும்..

வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக வெட்டி வையுங்கள்..
செத்தல்மிளகாயை சிறிய துண்டுகளாக
வெட்டுங்கள்
ஒரு சட்டியில் 3 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய் விட்டு
அது சூடாகியதும் கடுகு பெருஞ்சீரகம் செத்தல்மிளாகாய்
போட்டு வெங்காயத்தையும் போட்டு வதக்குங்கள்..

வெங்காயம் ஓரளவு வதங்கி வரும்போது மஞ்சள் தூள் போட்டு
கிளறி உதிர்த்து வைத்த சுறாவையும் போட்டு நன்றாக கிளறுங்கள்..
சிவந்து வரும்போது தேங்காய்ப்புூ..சீரகத்தூள் கறிவேப்பிலை.. தேவையான அளவு
உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் கிளறவும்..

சுறா வறை ரெடி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பி.குறிப்பு:உறைப்பு அதிகம் தேவை என்பவர்கள் மிளகாய்தூள் சேர்க்கலாம்

- SUNDHAL - 07-01-2005

சாப்பிட விருப்பம் ஆனா செய்றது தான் கஷ்ட்டம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 07-01-2005

Quote:சாப்பிட விருப்பம் ஆனா செய்றது தான் கஷ்டம்
யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம்

உந்த விளையாட்டுதானே எல்லோருக்கும் தெரியுமே.........செய்து பழகச் சொல்லித்தான் தம்பி இதுகளை இங்கை போடுறது சுண்டல் அவிக்கத் தெரியுற உமக்கு சுறா அவிக்கத் தெரியாதா?????

- கீதா - 08-27-2005

SUNDHAL Wrote:சாப்பிட விருப்பம் ஆனா செய்றது தான் கஷ்ட்டம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனக்கும் தான் செய்ய பஞ்சி செய்து தந்தால் நல்லாய் சாப்பிடுவேன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- கீதா - 08-27-2005

அது சரி வாசி அண்ணா உங்கள் மனைவி புன்னியம் செய்தவா ? எல்லாமே நீங்கள் செய்து கொடுப்பிங்கள்

- Rasikai - 08-27-2005

jothika Wrote:அது சரி வாசி அண்ணா உங்கள் மனைவி புன்னியம் செய்தவா ? எல்லாமே நீங்கள் செய்து கொடுப்பிங்கள்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vishnu - 08-27-2005

Rasikai Wrote:

வசிக்கு திருமண மாகிவிட்டதா.. எனக்கு தெரியாது.. :roll:

- கீதா - 08-27-2005

quote="Vishnu"]
Rasikai Wrote:
jothika Wrote:அது சரி வாசி அண்ணா உங்கள் மனைவி புன்னியம் செய்தவா ? எல்லாமே நீங்கள் செய்து கொடுப்பிங்கள்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வசிக்கு திருமண மாகிவிட்டதா.. எனக்கு தெரியாது.. :roll:[/quote]

சமைக்க தெரிந்தவர் ?கலியானம் கட்டாமல் இருப்பாரா என்னவோ