![]() |
|
மைக்கல் ஜாக்சனுக்கு என்னாச்சு? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மைக்கல் ஜாக்சனுக்கு என்னாச்சு? (/showthread.php?tid=4007) |
மைக்கல் ஜாக்சனுக்கு என்னாச்சு? - Mathan - 06-30-2005 கறைபடிந்த பிம்பங்கள் களையப்படுமா? <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image052.jpg' border='0' alt='user posted image'> புகழ் தரும் மாiயையில் இருந்து மனிதனால் இலகுவில் விடுபடமுடிவதில்லை. புகழ் அவனுக்குத் தரும் போதை மயக்கத்தில் ஒருவனோ ஒருத்தியோ தலைகீழாக தன் வாழ்க்கையை அமைக்க முற்பட்டு விடுகின்றார்கள். புகழோடு பணமும் சேர மமதை தலைக்கேற, அவன் அவனாகவே இருக்கத் தவறி விடுகின்றான். அவன் அவனாக இருக்கத் தவறுவதால் அவனியில் அவசியமற்ற அல்லல்களுக்கும், மன வேதனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியவனாகின்றான். புகழின் உச்சியில் நிற்பவன் அகலபாதாளத்தில் தலைகுப்பற விழும் நிலையும் வந்து சேர்ந்து விடுகின்றது. அப்படி விழுந்தபின்புதான் காலங்கடந்த ஞானோதயம் அவனுக்கு வருகின்றது. புகழின் உச்சியில் வீறுநடை போட்டுக் கொண்டிருந்த உலக நாயகர்களில் ஒருவர்தான் பொப்பிசைச் சக்கரவர்த்தி என இன்று பலராலும் கொண்டாடப்படும் மைக்கல் ஜாக்ஸன் ஆவார். இவரது ஆட்டமும் பாட்டமும், துறுதுறுவென்ற மேடை நடனங்களும் வசீகரக் குரலும், உலகின் நாலாதிக்கிலும் முழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தன. <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image048.jpg' border='0' alt='user posted image'> இதே பாடகரின் தலையில் வந்து இடியொன்று திடீரென்று இறங்கியது. சிறு பிள்ளைகளுடனான துர்சகவாசம் இவருக்கு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டோடு அமெரிக்க அரசு வழக்கு தொடுத்தது. பலமுறை நீதிமன்ற வாசல் மிதித்தவருக்கு இப்பொழுது நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்திருக்கின்றது. இவர் குற்றமற்றவர் என்று ஜூரர்கள் ஏகமனதாகத் தீர்மானித்ததில் பழையபடி சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருக்கின்றார் பொப்பிசைச் சக்கரவர்த்தி. குற்றமற்றவர் என்று முடிவாகி விட்டது உண்மைதான். என்றாலும் இங்கே ஒரு கேள்வி பிற்க்கின்றது. தான் இழந்த முடியை மீண்டும் எப்படி இந்தப் பாடகர் பொப்பிசை உலகில் கைப்பற்றப்போகிறார் என்பதுதான் அற்தக் கேள்வி. கைப்பற்றுவாரா? அது சுலபமாக இருக்குமா? இதைப்பற்றி சற்றே விரிவாக ஆய்வு செய்யுமுன்பு இவரைப் பற்றிய பின்னணிக் கதைச் சுருக்கத்தைப் பற்றி சொல்வது இங்கே பலவற்றிற்கு விளக்கங்களை ஒருவேளை தரலாம். <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image049.jpg' border='0' alt='user posted image'> 80களில் புகழில் உச்சியில் இருந்தவர் இந்தப் பாடகர். நம்மை அசரவைக்கும் நடனத் திறன் பாடல்களை எழுதும் அபாரம் பலரையும் கவர்ந்திழுக்கும் வசீகரக் குரல் வித்தியாசமான முறையில் மேடையில் தோன்றுவது என்று பல அம்சங்கள் இவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைத் தேடித்தந்தன. THRILLER என்ற இவரது இசை அல்பம் இதுவரை தயாரிக்கப்பட்ட அல்பங்களில் அதிஅற்புதமானது என்று உலகமே வியக்கும் அளவிற்கு பெரும் கீர்த்தியைச் சம்பாதித்து. 26 மில்லியன் பிரதிகளை விற்று இந்த அல்பம் படைத்த அரும்பெரும் சாதனை காலத்தால் அழியாத ஒன்று. இசை உலகில் பெருமைக்குரிய கௌரவமாகக் கருதப்படும் Grammy எனப்படும் விருதில் எட்டை இந்த அல்பம் வென்றெடுத்தது என்று கூறும்போது இதன் மகத்துவம் சொல்லாமலே எவருக்கும் புரிந்து விடும். ஓர் உருக்குத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளி ஒருவரின் அதுவும் கறுப்பு அமெரிக்க இனத்தவரின் ஒரு மகன் இப்படியொரு உன்னத நிலையை வென்றெடுப்பது என்பது அசாதாராண சாதனை என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை. தனது ஐந்து வயதிலேயே தொழில்ரீதியாகப் பாட ஆரம்பித்து பின்பு 11 வயதில் தன் சகோதரர்களுடன் இணைந்து ஜாக்ஸன் 5 என்று ஒரு குழுவை உருவாக்கி, தொடர்ந்து மெல்ல மெல்ல தனியாகப் பாட ஆரம்பித்து பலரையும் கவரத் தொடங்கினார் இந்த இளம் பாடகர். <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image055.jpg' border='0' alt='user posted image'> இசை அல்பத்தில் இவரது பாடல் ஒன்று முதல் இடத்தைப் பிடித்தபோது இவருக்கு வயது 14 மட்டுமே. வயது என்பது சாதனைகளுக்கு ஒரு தடை அல்ல நமது இளம் சிறார்களும் முயன்றால் காலப்போக்கில் பலதைச் சாதிக்கலாம் என்பதற்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டியதில்லை. இப்படி வளர்ந்தவர்தான் இந்தப் பாடகர். <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image054.jpg' border='0' alt='user posted image'> ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல புகழின் போதை தலைக்கேறுவதால், பொல்லாத நிகழ்வுகள் வாழ்க்கையில் மூக்கை நுழைத்து விடுகின்றன. பொப்பிசைச் சக்கரவர்த்தி என்று இவரைத் தலையில் வைத்துக் கூத்தாடியவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் அடுத்தடுத்து சம்பவிக்கலாயின. கலிபோர்னியாவில் உள்ள இவரது Neverland என்ற பிரமாண்டமான பண்ணை பலவிதமான கிசுகிசுக்களை பரப்பலாயிற்று. குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட இந்தப் பண்ணையில் இவர் பிள்ளைகளைத் தன் இச்சைக்கு வடிகாலாகப் பயன்படுத்துகிறார் என்று ஒரு செய்தி 1993இல் கசிந்தது. பத்திரிகைகளுக்கும் மெல்ல நல்ல அவல் கிடைத்த கதையாயிற்று. புகழின் உச்சியில் இருந்தவர் நிலையும் ஆட்டம்காண ஆரம்பித்தது. முன்னொரு காலத்தில் இசையுலகின் மன்னர் என்று வர்ணிக்கப்ட்ட பிரபல்யமான பாடகர் எல்விஸ் பிரீஸ்லியின் சகோதரி லீசா மேரியை இவர் 1994இல் திருமணம் செய்தபோது பொப்இசை உலகம் வியந்தது. ஆனால் இரண்டு வருடங்கள் முழுதாக முடியுமுன்பு இந்தத் தம்பதிகளின் உறவில் முறிவு வந்தபோது வியந்த உலகம் அதிர்ந்தது. <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image051.jpg' border='0' alt='user posted image'> இதைத் தொடர்ந்து மருத்துவ தாதி ஒருவரை(Debbie Rowe) இவர் தன் மனைவியாக்கி இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்து உலகை இவர் மீண்டும் ஆச்சரியப்படுத்தினார். மூன்றாவது பிள்ளையொன்றை பேர்லின் நகர ஹாட்டல் ஒன்றின் சாரளம் வழியாகத் தலைகீழாகத் தூக்கிப்பிடித்து நின்ற இந்தப் பாடகர் உலகை மீண்டும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். இந்தப் பிள்ளையின் முகம் தெரியாத அம்மாவை இவர் இரகசியமாக்கிக் கொண்டார். <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image053.jpg' border='0' alt='user posted image'> 1995 இல் தன் இழந்த பெயரை நிலைநாட்டுவதில் இவர் குறியாக இருந்திருக்கின்றார். இதன் எதிரொலியாக History என்ற அல்பம் சந்தைப்படுத்தப்பட்டது. தனது சிலையொன்றை தேம்ஸ் நதியில் மிதக்கவிட்டு 30 மில்லியன் டாலர் தொகையை அள்ளி வீசி, தன் நிலையை உயர்த்திக் கொள்ள பல விளம்பர யுக்கதிகளை இவர் இக்காலகட்டத்தில் கையாண்டிருக்கின்றார். என்றாலும் இவரை உச்சியில் வைக்க விசிறிகள் தயாராக இல்லை. 2001இல் முதல் பத்து என்ற இடத்திற்குள் இவரால் வரமுடிந்ததே ஒழிய முதலாம் இடம் எட்டாக் கனியாகவே இருந்தது. <img src='http://www.puthumai.com/images/stories/ajg2/image050.jpg' border='0' alt='user posted image'> பழைய கதை இப்படியிருக்க, 14 வாரங்களாகத் தொடர்ந்த விசாரணை ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்பும் வெளியாகி இருக்கின்றது. கறைபடிந்தவர் என்று இதுகாலவரை பலருக்கும் தெரிந்தவர் சுமத்தப்பட்ட குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றார். 20 வருடங்கள் வரையிலான சிறைவாசத்தை இவர் அனுபவிக்கலாம் என்ற நிலையிலிருந்து இப்பொழுது இவர் விடுவிக்கப்ட்டு இருக்கின்றார். தன்னில் குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு அறிவித்தலையும் செவிமடுத்த போது, இந்த 46வயதுப் பாடகரின் கண்களில் நீர்மல்கி இருக்கி;ன்றது. அது ஆனந்தக் கண்ணீர் என்பது கண்கூடு. இவர் மீது சுமத்தபபட்ட 10 குற்றச்சாட்டுகளிலும் இருந்து இவர் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஒரு பாடகர் இவர் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் இவர் விசித்திரமான மனப்போக்குடையவர் என்றும் இவரை வர்ணிக்கின்றார்கள். அறுவைச் சிகிச்சை மூலம் தன் முகத்தை மாற்றித் தன் கோலத்தை மாற்றிக் கொண்ட இவருக்கு நிஜத்திலும் பல முகங்கள் இருக்கின்றன என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மில்லியன் கணக்காக தன் இசை அல்பங்களை விற்றுத் தீர்த்து, பணத்தில் புரண்ட இவர் பணமுடையில் இருக்கின்றார் என்றும் செய்திகள் வெளியாகத் தவறவில்லை. நீதிமன்ற விசாரணைகளின்போது, பலர் இவருக்கு எதிராகச் சாட்சியளித்தார்கள். இவர் தன் காம இச்சசையின் வடிகலாக சிறுவர்களை நாடினார் என்பதற்கு விசாரணகளில் சாட்சி சொல்லியவர்கள் பலர். ஆனால் தீர்ப்போ இவருக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. நீதிதேவதையின் கண்ணில் சாட்சிகள் சொல்லியதெல்லாம் சிருஷ்டிக்கப்பட்ட கதைகள் என்றாகி இருக்கின்றது. பரிசுத்தமான ஒரு குடிமகன் இந்தப் பாடகன் என்று நீதிதேவதை அடித்துச் சொல்லியிருக்கின்றது. உண்மைகள் புதைக்கப்பட்டு விட்டனவா அல்லது இவைதான் உண்மையா என்ற விவவாதத்திற்கு இடமேயில்லை. பல தரப்பு வயதினரைக் கொண்ட பத்து ஜூரர்கள் தீர்மானமாக எடுத்த முடிவை நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது. விழுந்தவர் இனி என்றெழுவார் என்பதே இன்றைய விவாதம். முகம் குப்பற விழுந்தவர்கள் பலர் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வாதாடிக் கொண்டு மீண்டும் முன்னேறிய கதைகள் பல இருக்கின்றன. வீம்புக்கு வாதாடிவிட்டு, விழுந்த நிலையிலேயே கிடந்தவர்கள் கதைகளும் இருக்கின்றன. அன்றைய பொப் சக்கரவர்த்தி கதை இனி எப்படி இருக்கும்? காலவெள்ள ஓட்டத்தில் காணத்தானே போகின்றோம். ஏ.ஜே.ஞானேந்திரன் - tamilini - 06-30-2005 அது சரி மைக்கல் ஜாக்சன். சத்திரசகிச்சை மூலம் தனது கறுப்பின அடையாளத்தை மாற்றியது பற்றி என்ன நினைக்கிறியள். :? நன்றி மதன் இணைப்பிற்கு - vasisutha - 06-30-2005 நன்றி மதன்.. அவர் கறுப்பாக இருக்கம் போது அழகாய் இருந்தது.. இப்ப பார்க்க சகிக்கவில்லை.. - Mathan - 06-30-2005 தன்னுடைய சொந்த அடையாளத்தில் மீது நம்பிக்கை இழந்து எப்போது வெள்ளையினத்தவர் போல தோற்றமளிக்க முயன்றாரோ அப்போதே அவர் தமது அடையாளத்தை இழந்துவிட்டார். அது தவிர படங்களை பார்க்கும் போது அவர் சத்திரசிகிச்சை மூலம் தனது உருவத்தை மாற்ற முன்பு உள்ள தோற்றம் தற்போதைய தோற்றத்தைவிட நன்றாக இருக்கின்றது. - tamilini - 06-30-2005 Quote:அவர் கறுப்பாக இருக்கம் போது அழகாய் இருந்தது..உண்மை தான் போல.. :wink: :? - Mathan - 06-30-2005 vasisutha Wrote:அவர் கறுப்பாக இருக்கம் போது அழகாய் இருந்தது.. அதே தான் - vasisutha - 06-30-2005 பழைய மைக்கேல் ஜக்ஸன் http://pochettescd.free.fr/images/m/Michae...iller-front.jpg - vasisutha - 06-30-2005 Mathan Wrote:தன்னுடைய சொந்த அடையாளத்தில் மீது நம்பிக்கை இழந்து எப்போது வெள்ளையினத்தவர் போல தோற்றமளிக்க முயன்றாரோ அப்போதே அவர் தமது அடையாளத்தை இழந்துவிட்டார். அது தவிர படங்களை பார்க்கும் போது அவர் சத்திரசிகிச்சை மூலம் தனது உருவத்தை மாற்ற முன்பு உள்ள தோற்றம் தற்போதைய தோற்றத்தைவிட நன்றாக இருக்கின்றது. அவரது இந்த மாற்றத்திற்கு மனரீதியிலான காரணங்களும் இருக்கலாம். சிறுவயதில் நிறவெறியாளர்களால் பாதிப்படைந்திருக்கலாம்.. அதுவே அவரது கறுப்புத் தோலின் மீதான அதீத வெறுப்பாகவும் வெளிப்பட்டிருக்கலாம்... - Mathan - 06-30-2005 இருக்கலாம் ஆனால் பாதிப்புகள் காரணமாக அடையாளத்தை மாற்றி வேறு யாரோ போல தோற்றமளிக்க முயலும் போது சொந்த அடையாளம் அழிந்து போகின்றது அல்லவா? அதுதவிர என்னதான் அடையாளத்தை மாற்றினாலும் வெள்ளையினம் இவர்களை கறுப்பினத்தாவராகவே பார்க்கும். அதேசமயம் அடையாளத்தை காண்பிக்க விரும்பாமையால் கறுப்பினத்தவர்களும் இவரை தங்களில் ஒருவராக நினைப்பதில்லை ஆக இரண்டு அடையாளமும் இல்லாமல் போகின்றது. - vasisutha - 06-30-2005 அது உண்மைதான் மதன் ... ஒரு தடவை பிபிசி பேட்டியின் போது மைக்கலின் மூக்கு கழன்று விழுந்ததாக கூறுகிறார்களே உண்மையா? :roll: - Mathan - 06-30-2005 பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்ப்பட்ட மூக்கு நுனி கழன்றது என்று படித்த ஞாபகம். அது பிபிசி பேட்டியின் போதா என்று தெரியவில்லை. |