| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 266 online users. » 0 Member(s) | 263 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| கிட்னியை திருட முடியுமா? |
|
Posted by: hari - 07-04-2005, 04:19 AM - Forum: மருத்துவம்
- Replies (3)
|
 |
<b>கிட்னியை திருட முடியுமா?
Dr.ரவிச்சந்திரன், MD.,DM., </b>
--------------------------------------------------------------------------------
<b>* இன்று …கிட்னி பெயிலியர் அதிகரித்து வர காரணம் என்ன? </b>
முன்பு உண்ணும் உணவும் இயற்கையாக இருந்தது, உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக இருந்தது. விதவிதமான குளிர் பானங்கள், பீசா, மேரி பிரவுன் என்று அயல்நாட்டு துரித உணவு வகைகள், செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள், சுத்தமற்ற குடிநீர் எல்லாமும் இன்று மனிதனின் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன. எனவே சிறு நீரகம் அழுக்கான இரத்தத்தை சுத்தப்படுத்த திணறுகிறது. ஆக இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில் சிறுநீரகம் மெல்ல, மெல்ல பாதிப்படைய ஆரம்பித்து விடும்.
சிறுநீரகத்தின் பணி- இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையாகும். உணவுப் பொருளின் மூலம் இரத்தத்தில் சேரும் அழுக்கு மட்டும் …கிட்னி பெயிலியருக்கு† காரணம் என்றhலும் கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், தீவிர சர்க்கரை நோய் போன்றவை காரணமாகவும் கிட்னி செயல் இழக்கலாம்.
<b>* உணவில் உப்பு அதிகம் சேருவதும்... சிறுநீரக செயல் இழக்க காரணமாகுமா? </b>
பொதுவாக உப்பில் 4 வகை உள்ளன. அவை சோடியம் (சாப்பாட்டு உப்பு), பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகும். இதில் நமது உடம் பிற்கு ஒரு நாளைக்கு 1.5 கிராம் உப்பு, (சோடியம்) போதுமானது. ஆனால் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியத்தைவிட விலை மலிவு, எளிதில் கிடைக்கும். மற்றும் சுவை சம்பந்தப்பட்ட காரணங்களால் சோடியம் உப்பையே நாம் அதிகம் பயன் படுத்துகிறேhம். தினமும் 1.5 கிராமிற்கு அதிகமாகவே உணவின் மூலம் நம் உடம்பில் உப்பு சேருகிறது. முன்பெல்லாம் வியர்வை, சிறுநீர் வழியாக தானாகவே இந்த உப்பு (சோடியம்) உடம்பிலிருந்து வெளியேறி விடும். இன்று வியர்வைக்கு வழியே இல்லை. எனவே மிதமிஞ்சிய உப்பு இரத்தத்தில் சேர்ந்து விடுகிறது. எனவே உப்பை அதிகம் அளவில் உண்பதும் சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாகிறது. குறிப்பாக கல் உப்பைவிட ரீபைண்ட் உப்பில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளது என்பது பலருக்குத் தெரிவதே இல்லை.
<b>* சிறுநீரக பாதிப்பை மருந்து மாத்திரையினால் மட்டும் குணப்படுத்த முடியாதா?</b>
கிட்னி பாதிப்பின் ஆரம்ப நிலையில் மருந்து மாத்திரையிலேயே குணப்படுத்தி விடலாம். ஆனால் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக …எந்த வலியும், உபத்திரவமும்† நோயாளிக்குத் தெரியாததினால் ஆரம்ப நிலையில் இதனை எவரும் கவனிப்ப தில்லை. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் என்று மருத்துவரிடம் சென்றhல் அந்த மருத்துவர்களும் …சிறுநீரக பரிசோதனையை† வலியுறுத்துவதில்லை. எனவேதான் முழுதுமாக கிட்னி பெயிலியரான பின்னரே நெப்ராலஜp (சிறுநீரக நிபுணர்) டாக்டரிடம் வருகிறhர்கள்.
<b>* உறவினர் மட்டும்தான் சிறுநீரகத்தை தானமாகத் தர முடியுமா? </b>
இன்றைய நாளில் யார் வேண்டுமானாலும் சிறுநீரகத்தை தானமாகத் தரலாம். உறவினர்- உறவினரல்லாதவர் எவரும் கொடுக்கலாம். முன்பு கிட்னி தானம் தருபவருக்கும், கிட்னி பெயிலியர் நோயாளிக்கும் இரத்தப் பொருத்தம், திசுப் பொருத்தம் இருந்தால்தான் கிட்னியை தானமாகத் தரமுடியும். ஆனால் இன்று எந்த இரத்த வகை, எந்த திசு வகையினரும் யாருக்கும் சிறு நீரகத்தை தானமாகத் தரலாம். ஆனால் பணத்திற்காகவோ, கட்டாயப்படுத்தியோ கிட்னியை தானமாகப் பெறக்கூடாது.
<b>* டயாலிஸிஸ் என்பது என்ன? </b>
சிறுநீரகம் ஒரு வடிகட்டியை போல செயல்பட்டு இரத்தத்தை தொடர்ந்து சுத்தப்படுத்துகிறது. கிட்னி செயல் இழக்கும்போது இரத்தத்தில் அழுக்கு சேர ஆரம்பிக்கும். இந்த அழுக்கை செயற்கை முறையில் எந்திரம் மூலம் இரத்தத்திலிருந்து அகற்றுவதற்கு பெயர்தான் டயாலிஸிஸ் எனப்படும்.
இப்போது புழக்கத்தில் ஹுமோ டயாலிஸிஸ் எனும் மெஷின் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்கும் முறையும், பெரிடோனியல் டயாலிஸிஸ் எனும் வயிற்றில் இருக்கும் ஜவ்வுப் பகுதியை தண்ணீர் செலுத்தி சுத்தப்படுத்தும் முறையும் உள்ளது.
<b>* டயாலிஸிஸ் எத்தனை நாளைக்கு ஒரு தடவை தேவை? </b>
சரியாகச் சொல்ல வேண்டுமெனில் கிட்னி பெயிலியர் ஆனவர் தினமும் டயாலிஸிஸ் செய்துகொள்வது தான் சரியானது. ஆனால் செலவு அதிகமாகும். இருப்பினும் அவசியம் வாரம் 3 தடவை டயாலிஸிஸ் உயிர் வாழத் தேவைப்படும்.
<b>* கிட்னி பெயிலியருக்கு நிரந்தர தீர்வு என்ன? </b>
கிட்னியை தானமாகப் பெற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதுதான் நிரந்தரமான தீர்வாகும். எதிர் காலத்தில் ஜுனோ டிரான்ஸ் பிளாண்ட் எனும் விலங்குகளிலிருந்து உறுப்பை எடுத்து பொருத்துதல், செயல் இழந்த உறுப்பை மறுசீரமைப்பு செய்யும் ரீ-ஜெனரேட்டிவ் மெடிசன் போன்ற நவீன மருத்துவ வசதிகள் வரலாம்.
<b>* ஹhர்ட் அட்டாக், சர்க்கரை நோய், காச நோய்... போல கிட்னி பெயிலியர் குறித்த விழிப்புணர்வின்மைக்கு என்ன காரணம்? </b>
காச நோய், எய்ட்ஸ், கேன்சர்... போன்றவை உயிர்கொல்லி நோய் பட்டியலில் கொண்டு வரப்பட்டு உலக அளவில் நிதியு தவி கிடைக்கப் பெறுகிறது. கிட்னி பெயிலியர் உயிர் கொல்லி நோய் பிரிவில் வந்தால்தான் கிட்னி செயல் இழக்காமல் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான (பிரிவென்ஷன்) நிதி உதவி கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிக்கு சிறுநீரில் உப்பு அதிகம் போகிறதா? சிறுநீரகத்தை கவனியுங்கள்*
கர்ப்ப காலத்தில் சிறு நீரில் உப்பு வெளியேறுகிறதா? சிறுநீரகத்தை பரிசோதியுங்கள்*
கண்ணில் ரெடினோபதியா? சிறு நீரகத்தையும் டெஸ்ட் பண்ணுங்கள்...
என்று பிரச்சாரம் செய்யலாம். இதன் மூலம் விழிப்புணர்ச்சி உருவாகும்.
<b>* கிட்னியை திருட முடியுமா? இது போன்ற சர்ச்சைகள் வருவதற்கு
காரணம் என்ன? </b>
கிட்னி பெயிலியர் ஆன நோயாளி, கிட்னி தானம் செய்பவர், டாக்டர், மருத்துவமனை நான்கு பேரின் ஒத்துழைப்புடன்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இதில் அதிகம் நன்மை அடைபவர் நோயாளியே.
பின்னாட்களில் கிட்னி தானத்தில் சிக்கல் ஏற்பட்டால் நோயாளி, தானம் தந்தவர் இருவரையும் விட்டு விட்டு மருத்துவரை மட்டும் குற்றம் சுமத்தும் Nழல்தான் இங்கு உள்ளது. அதனால்தான் இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. உண்மை யில் ஒருவரின் சம்மதம் இல்லாமல் மருத்துவர்கள் சிறுநீரகத்தை தானமாக பெற முயற்சிக்கவே மாட்டார்கள். அது எவ்வளவு சட்டச் சிக்கலுக்குரியது என்று அவர்களுக்கும் தெரியும். சம்மதத்துடன் கிட்னியை தானம் தந்தவரே பின்னாட்களில் மாற்றி பேசுகிற நிலைமையில்தான் …கிட்னி திருட்டு† என்கின்ற செய்தி பரபரப்பாகிறது. கூர்ந்து பார்த்தால் அதில் உண்மையிருக்காது.
<b>* அதிக செக்ஸ் ஈடுபாடு, சுய இன்பம் போன்றவற்றhல் கிட்னி பாதிப்படையுமா? </b>
நமது உடம்பின் நோக்கமே சாப்பாடும் இன்னொரு உயிரை உருவாக்கலும்தான். நாம் சாப்பிடும் சாப்பாடோ ரசாயன கலப்பாகிவிட்டது. பொதுவாக செக்ஸில் ஈடுபடும்போது உடம்பில் எதிர்ப்பு சக்தி குறையும். அப்போது வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவி கிட்னி பாதிப்படையலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக, காம களியாட்டங்களில் ஈடுபடுவோருக்குத்தான் இந்நிலைமை ஏற்படும். சுய இன்பத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்பது போலி மருத்துவர்கள் எழுப்பிய கட்டுக் கதை நம்பாதீர்கள்.
<b>* சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க என்ன ஆலோசனை? </b>
உடம்பின் நிலை, அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.
ஜங்க் ஃபுட், பீசா போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும். உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும். வியர்வை வெளியேற உடற்பயிற்சி அவசியம்.
தானியங்களை ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.
Dr..ரவிச்சந்திரன், MD.,DM.,
செயிண்ட் தாமஸ் மருத்துவமனை,
5,105, டிபன்ஸ் காலனி சாலை,
சென்னை-16.
போன்„ 22349446, 55490197.
|
|
|
| மக்களிடமிருந்து புலிகள் எதிர்பார்த்திருக்கும் பதில் |
|
Posted by: hari - 07-04-2005, 02:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>மக்களிடமிருந்து புலிகள் எதிர்பார்த்திருக்கும் பதில்</b>
* தமிமீழம் கேட்டு,
சமஷ்டி கேட்டு,
இடைக்கால நிர்வாகம் கேட்டு,
பொதுக்கட்டமைப்பு கேட்டு...
3 வருடத்தில் நடந்த கீழிறக்கம்...
<b>வவுனியாவில் புதுவை உரை</b>
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" வெளியீட்டு விழாவில் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆற்றிய உரை.
"மீண்டும் நாமெல்லோரும் கூடி இப்படியான ஒரு விழாவில் சேருவோமோ என்பது சந்தேகம். ஏனெனில், இன்றைய அரசியல் நிலைவரம் அப்படி. இதைச் சொல்வதன் மூலம் நான் ஒரு அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற கருத்தை எத்தனிக்கவில்லை.
என்னைப் பொறுத்த அளவில் எதிர்காலம் எல்லோரும் கூடிக் களிக்கும் காலமாய் இராதோ என்று நினைக்கிறேன். இதனை அச்சப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை. அல்லது எனக்கு எதிர்வரும் யுத்த காலம் கண்ணில் தெரிகிறது என்று (முந்திரிகை கொட்டை) போல வெடிக்கவும் இல்லை. ஆனால், இப் பொழுதுதான் அறிந்தேன்,இராணுவம் எமது விழாவில் கட்டிய தேசியக் கொடியை இறக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது. (போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினரும் அன்று தேசியக் கொடியை படம் பிடித்தார்கள்)
உண்மையில் எமது தேசியக் கொடியை ஏற்றுவது அவர்களது `அரை ஞாண் கொடி' யில் ஏற்றியது போல நினைக்கிறார்கள். புறுபுறுக்கிறார்கள். (சபைசிரிப்பு)
தமிழர்களுடைய விழாவில் தமிழர்களுடைய தேசியக் கொடி (புலிக்கொடி) யை ஏற்றுவதற்கே இவ்வளவு சிரமம் என்று சொன்னால், இதுவே கடைசி விழாவென்று ஏன் சொல்லக்கூடாது(!).
எங்கள் எல்லோரையுமே அவர்கள் நினைக்கிறார்கள் ஒரு `பேய்க்கிளாத்தி'கள் என்று. எனக்குப் பிடிக்காதது அதுதான்.
நாங்கள் `தீச்சுவாலை'யை, வென்றதன் பின்பு கேட்டது` தமிழ் ஈழம்'. பின்னர் எமக்கு பிரச்சினை இல்லாத ஒன்று என்று `சமஷ்டி' யை காட்டினார்கள். அதனை உடனே நாங்கள் (விடுதலைப் புலிகள்) ஒப்புக் கொள்ளவில்லை. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் என்றோம். சமஷ்டி தொடர்பாக தெளிவாக ஒரு அறிக்கை விட்டதன் பின்பு தான் நாம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.
நாம் `நட்டாமுட்டித் தனம்' செய்து கொண்டு இப்போ நிற்கவில்லை. நாங்கள் சமஷ்டியை ஏற்றுக் கொண்டு தன்னாட்சியை ஏற்றுக் கொண்டு பரிபூரணமாக தன்னாட்சியை ஏற்றுக் கொண்டதோடு மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதைத்தான் விரும்பினோம், மனப்பூர்வமாக.
அதன் பின்பு அவர்கள் (அரசாங்கம்) சொன்னார்கள் அதனை பின்னர் யோசிப்போம். இப்பொழுது இடைக்காலம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு அன்ரன் பாலசிங்கம் குழுவினர் ஜப்பான் போய் மரம் நட்டு `நட்புறவு மரம்' (சபை - சிரிப்பு)நட்டு திரும்பி வந்தார்கள். அப்பொழுது இடைக்கால நிர்வாகம் என்றார்கள் (அரசு).
இடைக்கால நிர்வாகம் என்று பேசிக் கொண்டிருக்கையில் தான் (இந்த போக்கறந்தது) கடல்கோள் வந்தது. அது ஆட்களை மட்டும் அழிக்க வில்லை (!)
பின்னர் பொதுக் கட்டமைப்பு என்றார்கள். மூன்று வருடத்துக்குள் நடந்த கீழிறக்கம் இது. தமிழீழம் கேட்டு, சமஷ்டி கேட்டு, இடைக்கால நிர்வாகம் கேட்டு, பொதுக் கட்டமைப்பு கேட்டு அதோடு நிற்கவில்லை எமது போராட்டம். அதற்கிடையில் புத்தர் சிலைப் போராட்டம். எங்கே வந்து நிற்கிறோம். எமது நிலைமையை சற்று யோசிக்க வேண்டும்.
எம்மை அவர்கள் `பேய்க்கிளாத்திகள்' என்று நினைக்கிறார்கள். இது அவர்கள் (அரசு) எடுக்கும் முடிவு அல்ல இதற்கு பின்பு பல பேர் இருக்கிறார்கள் (வெளிநாடுகள்)
எமக்காக பேசுகிறார்கள் என்று சொல்பவர்கள் எமக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். எமக்கு உதவி செய்ய வருபவர்கள் போல் வருபவர்களும் எமக்கு எதிராகவே இருக்கிறார்கள். எமக்கு ஏதாவது பெற்றுத் தருவதாக சொல்பவர்களும் எமக்கு எதிராகவே இயங்குகிறார்கள். எல்லோரும் எங்களை ஒரு `ஒழுக்குக்கு வைத்த சட்டிகளாக' ஆக்கிப் போட்டார்கள். (மேலே பார்த்தபடி வந்து விழுவதை மட்டும் எதிர்பார்த்ததாக) தயவு செய்து அவர்களிடம் நாம் கேட்பது. எந்த இடத்தில் இருந்து..... (யுத்தம் ஆரம்பிப்பது) அதனை விடுதலைப் புலிகளிடம் விட்டு விடாதீர்கள்.
விடுதலைப் புலிகள் (யுத்தத்தை) ஆரம்பித்தால் சொல்வார்கள் எதற்கும் விடுதலைப் புலிகள் விடமாட்டார்கள் என்று. ஏழு முறை இந்த அவப் பெயர் (யுத்தம் ஆரம்பித்தார்கள் என்ற) வந்திருக்கிறது எங்களுக்கு. எட்டாவது முறையும் இந்த அவப்பெயர் எங்களுக்கு (விடுதலைப் புலிகளுக்கு) வேண்டாம்.
எங்களைத் தாங்கி நிற்கும் எமது மக்கள் எந்த இடத்தில் இருந்து ஆரம்பிப்பது என்பதனை சொல்ல வேண்டும் (யுத்தத்தை). அதற்கு பின்னர் தான் நாம் முடிவெடுப்போம்.
திம்பு பேச்சு வார்த்தைக்கு எல்லா இயக்கமும் போனதன் பின்பு மருதனார்மடத்தில் இருந்து யாழ்ப்பாணம் கம்பஸ் வரைக்கும் ஒரு ஊர்வலம் போனது. அப்பொழுது எல்.ரீ.ரீ.ஈ. உட்பட எந்த இயக்கமும் இல்லை. எல்லாம் பேச்சுவார்த்தைக்கு போய்விட்டது.
தன்னெழுச்சியாக மக்கள் எழுந்த அந்த ஊர்வலம் பிரமாண்டமானதாக இருந்தது. அந்த ஊர்வலத்தின் கோஷம் இது தான் `ஏமாற்றப் போகிறார்கள் பேச்சு வார்த்தைக்கு போகாதீர்கள்'. அது ஒரு பேரெழுச்சி.
அதனுடைய வீடியோ கொப்பி இன்னும் என்னிடம் இருக்கிறது. அந்த ஊர்வலத்தில் ஆறாயிரம் ஏழாயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள்.
ஏலவே (பேச்சு வார்த்தைகள் உடைந்தது) பல முன்னுதாரணம் எங்களுக்கு முன்பு இருக்கிறது. நான் இதில் நின்று ஒரு யுத்தப் பிரகடனம் செய்யவில்லை. அப்படி நினைக்காதீர்கள். அந்த தொழிலும் எனக்கு இல்லை.
ஆனால், நாங்கள் இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு எதனை விட்டு விட்டு போகப் போகிறோம்.
எமது தமிழ் மக்கள் தமது சிந்தனையை மாற்ற வேண்டும். எல்லோரும் எண்ணுகிறார்கள் தங்கள் தங்களுடைய காலம் முடிந்தால் சரி என்று. அது பெரிய கொடுமை.
மக்கள் ஏதோ அமைதியாக இருந்தால் சரி என்று நினைக்கிறார்கள். மக்களுடைய எண்ணம் பொதுக் கட்டமைப்பு இல்லாவிடினும் அதற்கு கீழே கொடுத்தாலும் சரி, போதும் என்று இருக்கிறது. (மக்கள் தன்னிலை எண்ணங்களில் இருந்து மீள வேண்டும்)
காலம் நீடித்தால் பெரிய ஆபத்து. தருவதை தாருங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலைக்கு எமது இனம் வரும். ஏனெனில், எமது இனம் அப்படியான இனம். நேற்று நடந்ததை இன்று மறந்து விடுவோம் நாம். இது மிகவும் கவலைக்குரியது.
அவர்களுக்கு இந்த மறதி நன்றாக விளங்கி விட்டது. சந்திரிகாவுக்கு எமது மறதி தொடர்பான நம்பிக்கை இருக்கிறது. (இது எனது கருத்து). இன்னும் இரண்டு வருடத்துக்கு இந்தக் காலத்தை (யுத்தமுமில்லாத சமாதானமுமில்லாத) இழுத்துக் கொண்டு போவதற்கு அவர் விரும்புகிறார். எனவே, இந்தக் கால தாமதம் தமிழர்களுடைய சுய உணர்வுகளை அதல பாதாளத்துக்கு கொண்டு போய்விடும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு உங்களிடம் இருந்து ஒரு பதிலை எதிர்பார்த்து நிற்கிறது. (இப்பொழுது விடுதலைப் புலிகளின் சார்பாக கதைக்கிறேன்) தமிழ் மக்களின் மன நிலை என்ன? எமக்குத் தெரியவேண்டும். சில இடங்களில் தமிழ் மக்கள் தமது மனக்கிளர்ச்சியினை சொல்கிறார்கள். வடமராட்சியில் சொன்னார்கள் `போரை உடனடியாக ஆரம்பிக்கும்படி' ஊர்காவற்றுறையில் எண்ணாயிரம் தமிழர் கூடி சொன்னார்கள்' போரை உடனடியாக ஆரம்பிக்கும்படி,.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு தங்களது கருத்தைச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். வவுனியா மக்களும் தமது கருத்தைச் சொல்ல வேண்டும். பெரிய சொற்களான `தமிழீழம்' , `தனிநாடு' என்ற சொற்களை(!) சொல்ல விரும்பவில்லை. எமக்கான விடுதலை வேண்டும். விடுதலை எப்படியாக இருக்கும்! தென்னிலங்கையில் சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் அனுபவிக்கிறார்களே அவ்வளவும் எமக்கு வேண்டும். வேறெதுவுமில்லை.
விடுதலை என்றால் அச்சமில்லாமல் உலாவுதல், யாருக்கும் அஞ்சாமல் கருத்துச் சொல்வது, நான் எனக்கு வேண்டிய வாழ்வை எழுதியபடி சாவது, என்னைப் போல் மற்றவரை நேசிப்பது, மற்றவருக்கு கிடைப்பது அனைத்தும் எனக்கு கிடைக்கச் செய்வது. இப்படி விடுதலையின் எல்லை பரந்தது.
எமக்கு இப்பொழுது வேண்டியது எல்லாம் ஷ்ரீ லங்காவில் இருக்கும் மக்களெல்லாம் ஒரே அளவாக வாழ்வது. சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்றில்லாமல் ஒரே அளவாக வாழ்வது. அது போதும் முதலில். தருவீர்களா? நாம் எல்லாவற்றையும் விடத் தயாராக இருக்கிறோம். இருக்கிற `ஆட்லெறி'களையும் இழுத்துக் கொண்டு வந்து விடுகிறோம். `பிளேன்' என்கிறீர்கள் தருகிறோம். தருவீர்களா! (அரசே!)
சந்திரிகா வாழ்கின்ற வாழ்வு எங்களாலும் வாழ முடியுமா? தனி ஈழம் வேண்டாம். ஒன்றும் வேண்டாம். சரி சமமாக இந்த நாட்டில் வாழ்வதற்கு ஒரு உரிமையை தருவீர்களென்றால் போதும்.
தெரியவில்லையே! அப்படி ஒரு நல்ல நிமித்தமும் தெரியவில்லையே! ஒரு ஒளியும் தெரியவில்லையே! பொதுக் கட்டமைப்புக்கே இவ்வளவு `குத்திமுறிப்பு' என்றால் எப்படி எங்களுக்கு விடுதலை தருவார்கள்? இந்த முத்தையா மண்டபத்தில் புலிக் கொடியை ஏற்றுவதற்கே எமக்கு உரிமையில்லையென்றால் ... எமது நிலை என்ன?
தினக்குரல்
|
|
|
| நிழல் யுத்தம் |
|
Posted by: hari - 07-04-2005, 02:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>நிழல் யுத்தம் நேரடி யுத்தமாக மாற்றமடையும் சாத்தியம்?</b>
* படையினரின் சதித் திட்டங்களும் புலிகள் விதித்துள்ள காலக்கெடுவும்
தங்களது பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசுக்கு விடுதலைப் புலிகள் விதித்துள்ள காலக்கெடு, நாட்டில் மீண்டுமொரு போரைத் தோற்றுவித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கில் அண்மைக் காலமாக புலிகளின் முக்கியஸ்தர்களும் போராளிகளும் இலக்கு வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே விடுதலைப் புலிகள் இந்தக் காலக்கெடுவை விதித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிக்கந்தைக்கு சமீபமாக செவனப்பிட்டி பகுதியில், இராணுவத்தினரின் பாதுகாப்புடன் பஸ் ஒன்றில் சென்றுகொண்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட புலிப் போராளிகளை இலக்கு வைத்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், போராளிகள் சென்ற பஸ்ஸின் சாரதியின் மதிநுட்பத்தால் போராளிகள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பினர். இல்லையேல் சக்திமிக்க அந்தக் கண்ணிவெடி அனைவரையும் பலியெடுத்திருக்கும்.
கிளிநொச்சியிலிருந்து தரைவழியாக மட்டக்களப்புக்குச் சென்ற போராளிகளின் பஸ் மீதே பிற்பகல் 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இந்தப் பகுதியில் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதையடுத்து இந்த வீதியில் படையினரின் 24 மணிநேர பாதுகாப்பு இருந்த நிலையிலேயே, வீதியோரத்தில் கண்ணிவெடி புதைக்கப்பட்டு புலிகளின் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெலிக்கந்தை பகுதியிலேயே முன்னர் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து அவர் மட்டக்களப்பு செல்கையிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று அவர் படையினரது பாதுகாப்பின்றி சென்றபோது தாக்கப்பட்டார். ஆனால், கடந்தவாரம் படையினரின் பாதுகாப்புடனும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரது வழித்துணையுடன் சென்றவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் குழியொன்று வெட்டப்பட்டு மூடப்பட்டிருப்பதை அவதானித்த பஸ் சாரதி அதனை விலத்திச் சென்ற பின்பே, அதிலிருந்த சக்திமிக்க கண்ணிவெடி வெடித்துள்ளது. பழுதடைந்திருந்த அந்த வீதியில் பஸ் செல்வதாயின் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மேலாகத்தான் செல்லவேண்டும். ஆனால், அந்த இடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால் வாகனச் சாரதி அவ்விடத்தை விலத்திச் சென்றதால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.
அன்றைய தினம் அவ்வீதியூடாக புலிகளின் பயணம் நடைபெறுவது மிக மிக இரகசியமாகவேயிருந்தது. படையினருக்கு மட்டுமே இதுபற்றித் தெரிந்திருந்தது. கண்காணிப்புக் குழுவின் வற்புறுத்தலின் பேரில் அவ்வீதியில் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், அன்றைய தினமே வீதியோரத்தில் குழிதோண்டப்பட்டு பட்டப் பகலில், பாதுகாப்பு நிறைந்த வீதியில் கண்ணிவெடி புதைக்கப்பட்டு `ரிமோட் கொன்ரோலர்' மூலம், சற்று தூரத்திலிருந்து அது வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
கௌசல்யனின் பயணமும் மிக மிக இரகசியமாகவே இருந்தது. சோதனை நிலையத்தில் தனது விபரத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கௌசல்யனின் பயண விபரம் படையினருக்குத் தெரிய வந்தது. ஆனாலும், சம்பவம் நடைபெற்ற பின், உடல்களை பார்த்த பின்னர்தான் அது கௌசல்யனுடையது எனத்தெரிய வந்ததாகவும் தங்களுக்கு அறிவிக்காது சென்றதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதுபோனதாகவும் படைத்தரப்பு கூறியிருந்தது.
ஆனால், படையினர் வழங்கிய தகவலின் பேரிலேயே தேசவிரோதக் கும்பல்கள் கௌசல்யனை இலக்கு வைத்ததாக புலிகள் கடும் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தனர். இதற்கான ஆதாரங்களையும் தெரிவித்திருந்தனர். அதேபோன்றுதான், கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களின் பயணத்திற்கு முன்பாக, வெலிக்கந்தை பகுதியில் வைத்து தங்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் நடைபெறுவதாக புலிகள் கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவித்ததையடுத்து அவர்களது பயணத் திகதி மாற்றப்பட்டது.
படையினரின் உதவியுடன்தான் தாக்குதல் நடைபெறத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதைப் புலிகளின் புலனாய்வாளர்கள் தெரிவித்திருந்ததால், புலிகளின் பயண ஏற்பாட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி, புலிகள் செல்லும் பஸ்ஸில் படையினரும் சேர்ந்து செல்லவேண்டுமெனப் புலிகளின் தலைமைப் பீடம் வலியுறுத்தியதால் கண்காணிப்புக் குழுவும் இதனை ஏற்றுக்கொண்டு இந்தப் பயணத்திற்கு இவ்வாறானதொரு ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும், இறுதிநேரத்தில் புலிகள் பயணம் செய்த அந்த பஸ்ஸில் படையினர் சேர்ந்துசெல்ல மறுத்துவிட்டனர். இதனால், புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் உட்பட 40 போராளிகள் மட்டுமே சென்றனர். பஸ்ஸின் முன்புறமும், பின்புறமும் படையினரின் வாகனங்களும், கண்காணிப்புக் குழுவினரின் வாகனங்களும் சென்றபோதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு நிறைந்த அந்த வீதியில் படையினர் 24 மணிநேரமும் நிறுத்தப்பட்டிருக்கையில் பட்டப்பகலில் அங்கு எப்படி கண்ணிவெடி புதைக்கப்பட்டது? வீதியோரத்தில் புதிதாக குழியொன்று வெட்டப்பட்டு மூடப்பட்டிருப்பதை புலிகளின் பஸ் சாரதியால் அவதானிக்க முடிந்துள்ளதால், அதற்கு முன் அப்பகுதியில் நடமாடிய படையினரால் ஏன் அதனை அவதானிக்க முடியாது போனது?
புலிகளின் பஸ்ஸில் படையினரும் சேர்ந்து செல்வதன் மூலம் புலிகளின் சந்தேகங்களை நிவர்த்திக்க முடியுமென இணக்கம் காணப்பட்ட பின்னரும் கடைசிநேரத்தில் ஏன் படையினர் புலிகளின் பஸ்ஸில் செல்ல மறுத்தனர்?. படையினருக்கு மட்டுமே தெரிந்த புலிகளின் பயணத்தை எப்படி ஏனையவர்களால் அறிய முடிந்தது? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
ஆனாலும், தங்கள் பயணங்களைத் தடுப்பதற்காகப் படையினரே திட்டமிட்டு தேசவிரோதக் கும்பல்களைப் பயன்படுத்தி தங்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் புலிகள் கடும் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். அத்துடன் ஏற்கனவே அவ்வீதியில் வைத்துத் தங்கள் மீது தாக்குதலை நடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளதாகவும், புலிகள் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்திருந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தச் சம்பவத்தை கண்காணிப்புக் குழுவினர் நேரில் அவதானித்துள்ளனர்.இந்தச் சம்பவம் புலிகளை மட்டுமல்லாது கண்காணிப்புக் குழுவினரையும் சீற்றமடையவைத்துள்ளதுடன், தங்கள் மீதான தாக்குதல் குறித்து புலிகள் எவர் மீது குற்றஞ்சாட்டுகிறார்களோ அந்தக் குற்றச்சாட்டு சரிதானென்பதையும் கண்காணிப்புக் குழுவினருக்கு உணரவைத்துள்ளது.
தங்கள் மீதான நிழல் யுத்தம் நேரடி யுத்தமாக மாற்றம் பெற்று வருவதை உணர்ந்ததால் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். தங்களின் பயணப் போக்குவரத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த இருவார காலக்கெடுவை விதித்துள்ளனர்.
இது போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து (இருதரப்பில்) ஒரு தரப்பு விலகுவதற்காக முன்னறிவித்தல் கொடுக்கும் கால எல்லையாகக் கூட கருதலாமென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட கருணாவின் கிளர்ச்சியை இந்த அரசும் படைத் தரப்பும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. கருணாவின் பலம் என்னவென்பது உலகமறிந்த உண்மை. கருணா குழுவின் பெயரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே புலிகளுக்கெதிராக நிழல் யுத்தம் நடத்துவதை அனைவரும் அறிவர்.
சீருடை அணிந்தால் இராணுவம், சீருடை அணியாவிட்டால் அது கருணா குழுவெனக் கூறுமளவிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு எப்படிச் செயல்படுகிறதென்பதை புலிகள் தினமும் கூறி வருகின்றனர்.
மூன்று வருடத்திற்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துடன், தென்பகுதிச் சிங்களவர் புலிகளின் பலத்தை மறந்து விட்டனர். தனி நாடொன்றுக்காக தற்கொலைப் படையினருடன் புலிகள் 20 வருடங்களாக சிங்கள தேசத்தை அதிர வைத்ததை அவர்கள் மறந்து விட்டனர்.
இன்று கடல்கோள் அனர்த்த நிவாரணத்திற்காக, கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்திற்குள் மேற்கொள்ளப்படும் மீள் நிர்மாணப் பணிகளுக்காக அவர்கள் போராடுவதை சிங்கள தேசம் தவறாக எடை போட்டுள்ளது.
இந்தப் போர்நிறுத்த உடன்பாடென்பது, தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வைக்கப்பட்ட ஆப்பென அப்போது தமிழ் மக்கள் நினைக்கவில்லை. ஆனால், சிங்கள தேசம் இன்று எல்லாவற்றையும் மறந்து, சாதாரண பொதுக் கட்டமைப்புக்கே தமிழர்கள் கையேந்த வேண்டுமென இறுமாப்புடன் கூறுவதை சகித்துக் கொள்ள முடியாது, தமிழரின் பலத்தை மீண்டும் காட்ட யுத்தத்திற்கு செல்லுமாறு புலிகளுக்கு ஆணையிடுகின்றனர்.
மீண்டுமொரு யுத்தத்தின் மூலம் தமிழர் பலத்தை நிரூபித்துத் தான் பொதுக் கட்டமைப்பைப் பெற வேண்டுமா என்ற கேள்வியையும் தமிழ் மக்கள் எழுப்புகின்றனர். அதேநேரம், யுத்தமின்றி இனி எதனையும் பெற முடியாதென்பதை, யுத்தம் நடைபெற்ற காலத்தை விட போர்நிறுத்த (சமாதான) காலத்தில் தமிழ் மக்கள் நன்குணர்ந்து விட்டனர்.
போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் ஏற்பட்ட சமாதானச் சூழ்நிலையானது தென் பகுதிக்கே முற்று முழுதாகச் சாதகமாயுள்ளது. வடக்கு, கிழக்கு இன்றும் யுத்தச் சூழ்நிலையிலேயே உள்ளது. கிழக்கில் இடம்பெறும் நிழல் யுத்தத்தால், அங்கு கொலைகள் நடைபெறாத நாளேயில்லை. வடக்குடன் புலிகளை முடக்கி கிழக்கைப் பிரித்து விடும் நோக்கில் போர் நிறுத்த காலத்தில் இந்த நிழல் யுத்தம் தொடர்கிறது.
போர்நிறுத்த உடன்பாட்டின் மூலம், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால், இன்றோ கிழக்கில், புலிகளால் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியே வர முடிவதில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் புலிகள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள். புலிகளின் அலுவலகங்கள் மீது தினமும் தாக்குதல்கள் நடக்கிறது. புலிகளின் ஆதரவாளர்கள் கொல்லப்படுகிறார்கள். புலிகளின் பிரசாரங்களை முறியடிப்பதற்காக அவர்களது பத்திரிகையின் (ஈழநாதம்) விநியோகஸ்தர் கொல்லப்பட்டுள்ளார்.
வடக்கிலிருந்து - கிழக்கிற்கோ அல்லது கிழக்கிலிருந்து - வடக்கிற்கோ புலிகளின் தலைவர்களோ அல்லது போராளிகளோ செல்ல முடியாத அபாயகரமான சூழ்நிலை இந்தச் சமாதான காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலிகளின் தலைமைப்பீடத்துடன் கிழக்கு மாகாணத் தலைவர்களின் சந்திப்புகளை துண்டித்து, கிழக்கில் புலிகளை அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முடக்கி விடுவதுடன் கருணா குழுவென்ற பெயரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் ஊடுருவி புலிகள் மீது தாக்குதல்களை நடத்தும் முயற்சிகளும் தொடர்கின்றன.
போர் நிறுத்த உடன்படிக்கை மூலம், புலிகள் கடலுக்குள் இறங்குவது தடுக்கப்பட்டுள்ளதால் அவர்களால் கடல் வழிப் பயணத்தையும் மேற்கொள்ள முடியாதுள்ளது. வான் வழிப் பயணத்துக்குக் கூட மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. தரை வழிப் பயணமென்பது, இப்போது ஒரு தாக்குதலுமில்லாது நடைபெறுவதில்லை. இதனால் புலிகளின் எதிர்காலப் போக்குவரத்து எப்படியிருக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமாதானப் பேச்சுகளோ அல்லது சமாதானத் தீர்வோ இன்றி சமாதானச் சூழ்நிலை வீணாகிவிட்டது. சிறுபான்மையாகி விட்டதொரு அரசைக் கொண்டு இந்த நாட்டில் ஆட்சி நடத்தக் கூடிய பலத்தை போர் நிறுத்த உடன்பாடு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.
தென் பகுதியில் வீதிகளில் இறங்கி தமிழர்களுக்கு எதிராகப் போராடும் பலத்தை இந்தச் சமாதானச் சூழ்நிலை புத்த பிக்குகளுக்கும் வழங்கியுள்ளது. தமிழர்களுக்கெதிராக போர் தொடுப்பதற்காக தங்களுடன் வந்திணையுமாறு முப்படையினருக்கும் ஜே.வி.பி.யும் அழைப்பு விடுகின்றது.
இவையெல்லாவற்றுக்கும் இந்தச் சமாதான சூழ்நிலை காரணமாகி விட்டதால் தங்கள் எதிர்காலப் பயணம் குறித்து புலிகள் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்து விட்டனர். மாதத்தில் இரு பாதுகாப்பான பயணத்திற்கான ஏற்பாட்டையாவது செய்யுமாறு புலிகள் விநயமாகக் கேட்டுள்ளனர். ஆனாலும், இதற்கு இரு வார கால அவகாசம் கொடுத்துள்ளனர். அதற்குள் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாவிடின், போர் நடைபெற்ற காலத்தில் எப்படிப் போக்குவரத்துச் செய்தோமோ அவ்வாறு போக்குவரத்து செய்வோமென புலிகள் உறுதிபடக் கூறி விட்டனர்.
வடக்கு - கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே பெருமளவு கடற் பரப்புள்ளது. முன்னர் புலிகள் தங்கள் போக்குவரத்தை பெரும்பாலும் கடல் வழியாக மேற்கொண்டனர். புலிகளின் தரை வழிப் பயணத்திற்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாவிடின், இனி அவர்கள் முன்னரைப் போல் கடல் வழியைப் பயன்படுத்துவர். அதனைத் தடுக்க கடற்படையினர் முற்பட்டால் கடற் சமர் தொடங்கும்.
தரை வழியாக முன்னரைப் போல் பயணம் செய்ய முயலும் புலிகளை இராணுவத்தினர் தடுக்க முற்பட்டால் புலிகளும் தாக்குதல் தொடுப்பர். அதேநேரம், உடன்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தங்களது போக்குவரத்தைப் படையினர் முடக்கிவிட்டு அவர்களை சுதந்திரமாக நடமாட விடமாட்டோமெனவும் புலிகள் எச்சரித்துள்ளதால், இராணுவத்தினர் மீது இனி தாக்குதல் தொடுக்கப்படுமென்பதையும் புலிகள் மறைமுகமாக எச்சரித்துள்ளனர்.
தங்கள் பாதுகாப்பான போக்குவரத்திற்காக தங்களது விமானப் படை உட்பட முப்படைகளையும் பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே புலிகள் எச்சரித்ததன் மூலம், அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்கள் வான் படையும் தயாராகி விட்டதை அவர்கள் உலகிற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் புலிகளின் இரு வார காலக்கெடுவானது போரொன்றை நோக்கியதாகவே கருதப்படுகிறது. கிழக்கில் படையினர் மேற்கொள்ளும் நிழல் போர் முடிவுக்கு வருமா? என்பதை இந்தக் காலக்கெடு மூலம் புலிகள் அறிய முற்பட்டுள்ளனர். அது மறுக்கப்படுமானால் இரு வாரத்தின் பின்னர் ஒரு நிஜப் போர் உருவாகுவதைத் தடுக்கவே முடியாது.
தினக்குரல்
|
|
|
| Pinnacle வீடீயோ தொகுப்பு கற்றுக்கொள்வோம் |
|
Posted by: வியாசன் - 07-03-2005, 11:27 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (67)
|
 |
நண்பர்களே நான் இதை சுயமாகத்தான் கற்றுக்கொண்டேன். ஆதலால் ஏதாவது தவறுகள் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். யாராவது சுட்டிக்காட்டினால் என்னையும் திருத்திக்கொள்வேன். இங்கு பயன்படுத்திக்கொள்வது Pinnacle Studio Plus
இது இறுதியாக வந்த பதிப்பு. இதில் பின்னணி காட்சிகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த மென்பொருள் இலகுவாக புரிந்துகொள்ளமுடியும்
இவற்றை பயன்படுத்த Hardware தேவையில்லை Fireware
உங்கள் கணனியில் இருந்தால் போதும்.
இது அறிமுகம்
<img src='http://img217.imageshack.us/img217/66/unbenannt7fs.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| அதிவேக உந்துருளி படையணி |
|
Posted by: hari - 07-03-2005, 04:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
<b>அதிவேக உந்துருளி படையணியின் பயிற்சிப் பாசறை நிறைவு நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு </b>
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளில் ஒன்றான இம்ரான் பாண்டியன் படையணியின் அதிவேக உந்துருளி படைஅணியின் இரண்டாவது அணி இன்று தனது பயிற்சிப் பாசறையை நிறைவு செய்துள்ளது. வன்னியில் பிரத்தியேகமான இடம்மொன்றில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு படையணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவின் போது அதிவேக உந்துருளி படையணியின் சாகச நிகழ்வுகள் மற்றும் தாக்குதல் ஒத்திகை என்பன இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகள், சிறப்புத் தளபதிகள், துறைசார் பொறுப்பாளர்கள், போராளிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade1_1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.net/images/stories/July2005/Unthuruli_brigade7.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| செல்போனில் நடந்த புதுமை திருமணம் |
|
Posted by: SUNDHAL - 07-03-2005, 01:00 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (13)
|
 |
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமையா பானு நசீர் அகமது (22).
இவருக்கும் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா நகரைச் சேர்ந்த ஆசிப்கான் ஜ-கிர்கான் என்ப வருக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டு இருந்தது.
குஜராத் மாநிலத்தில் மணமகன் வீட்டில் திருமண விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் குஜராத் மாநிலத்தில் ஒரு வாரகாலமாக வரலாறு காணாத மழை செய்து வருவ தால் மணமகள் வீட்டார் குஜ ராத் மாநிலத்துக்குள் நுழைய முடியவில்லை.
வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. மழை ஓய்வு விடும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் திருமண நாளான நேற்று வரை மழை விடவில்லை.
என்றாலும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவதில் மணமகள் வீட்டார் உறுதி யுடன் இருந்தனர். அப்போது அவர்களுக்கு செல்போனில் பேசி திருமணம் செய்தால் என்ன என்று புது யோசனை தோன்றியது.
மணமகன் வீட்டில் காஜி ஒருவர் திருமண விழாவை நடத்தினார். காஜியார் செல் போன் மூலம் உறுதிமொழி களை சொல்ல அதை மணமகள் வீட்டார் மறுமுனையில் திரும்ப சொல்லி உறுதி எடுத்துக் கொண்டனர்.
மணமகன் வீட்டில் சாட்சியாக 2 பேரும், ஒரு வக்கீலும் வந்திருந்தனர். அரை மணி நேரத்தில் திருமண நிகழ்ச்சி முடிந்தது.
மணமகனும், மணமகளும் சந்திக்காமலேயே புதுமையான முறையில் திருமணம் நடந்தது.
மழை ஓய்ந்த பின்பு மண மகனும், மணகளும் சந்தித்துக் கொள்ள ஏற்பாட செய்யப் பட்டு உள்ளது.
முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி திருமண விருந்து அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
|
|
|
| ராகங்களுக்கும் பலன் உண்டு |
|
Posted by: SUNDHAL - 07-03-2005, 06:23 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
விதியோடு விளையாடும் ராகங்களே! விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே!
கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்தில் உயிரைக் காக்கும் ராகம் பற்றிய ஒரு பாடலில் இப்படி எழுதியிருப்பார்.
நிஜமாகவே இசைக்கு என்ன வல்லமை? நோய்தீர்க்குமா? கவலை போக்குமா?
கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகங்கள் ஒவ்வொன்றுமே நற்பலன்களை தருவதாகவே அமைந்திருக்கிறது. எந்த ராகம் எந்த மாதிரி பலன் தருகிறது, பார்ப்போமா...
ராகங்கள் பலன்கள்
நீலாம்பரி: அழுகின்ற குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைக்கும்.
ஸ்ரீராகம்: பகல் உணவு உண்ட பின் கேட்டால் சுலபாக ஜீரணமாகும்.
சாமா: மனக்கலக்கத்தின் போது கேட்டால் மன அமைதி கிடைக்கும்.
பூபாளம்,: மலய மாருதம் விடியற்காலையில் கேட்டால் உற்சாகம் தானாகப் பிறக்கும்
அஸாவேரி: தலைவலியைப் போக்கும்
கரகரப் பிரிய: பசியை மறக்கச் செய்யும்
பைரவி: காச நோயை தீர்க்கும்
தோடி: ஆஸ்துமாவை குணப்படுத்தும்
ஹிந்தோளம்: வாதம், கப நோய்களை கட்டுப்படுத்தும்
ஸாரங்கா: பித்தக் கொதிப்பை தணிக்கும்.
<b>திருமண வீடுகளில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கூட ஒவ்வொரு ராகம் உண்டு. நாதஸ்வர இசையில் இந்த ராகத்தை வாசிப்பார்கள்.</b>
திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிக்கப்படும் ராகங்கள்
மாப்பிள்ளை அழைப்பிற்கு 1. கல்யாணி
புறப்படும் போது 2.சங்கராபரணம்
ஜானவாச ஊர்வலத்தில் 1. தோடி, 2.காம்போதி, 3.கரகரபிரியா
திருமணக்கூடத்தில் நிச்சயதார்த்தம் நடக்கும் போது 1. கனடா, 2.அடானா, 3.பியாகடை
காலையில் 1. கேதாரம், 2.பூபாளம், 3.பிலஹரி
முகூர்த்தத்திற்கு முன்பு 1. தன்யாசி, 2.நாராயணி
முகூர்த்தம் நடக்கும் போது நாட்டைக்குறிஞ்சி
தாலி கட்டும் சமயத்தில் ஆனந்த பைரவி
|
|
|
| ஒரு உண்மை தெரிய வேண்டும் |
|
Posted by: sathiri - 07-02-2005, 11:59 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (62)
|
 |
ஒரு உண்மை தெரிய வேண்டும் ஐரோப்பிய அவலத்தில் இணைத்த செய்தியொன்று சிலநிமிடங்களின் பின்னர் எவ்வித அறிவித்தலுமின்றி காணாமல் போயுள்ளது அச்செய்தியை நீக்கியதற்கான அறிவித்தலை மோகனே அல்லது வேறு மட்டிறுத்தினரோ அறிய தரவில்லை இதே செய்தியை முன்னர் போட்ட சில மணி நேரத்தில்தான் யாழ் களம் தாக்குதலுக்குள்ளானது . நிலவன் என்பவர்(யேர்மனி)) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார். ஆனால் களத்தை தாக்கியவர்கள் களத்தில்தான் நல்ல பிள்ளைகளாக வலம் வருகின்றனர் அது யாரென்று பின்னர் பாக்கலாம் முதலில் எனது கருத்து யாரால் ஏன் நீக்கபட்டது என்று மட்டிறுத்தினர்களோ அல்லது மோகனோ அறிய தரவும்.அதைவிட நான் கோவித்து கொண்டு யாழை விட்டு போய்விடுவேன் என்றும் எதிர்பார்க்க வேண்டாம் உண்மை கிடைக்கும்வரை போராடுவேன்
|
|
|
|