| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 267 online users. » 0 Member(s) | 264 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| முகத்தார் பகிடி |
|
Posted by: narathar - 07-05-2005, 11:43 AM - Forum: நகைச்சுவை
- Replies (634)
|
 |
முகத்தார்:என்னப்பா இவை இப்படி மூச்சிரைக்க ஓடுகினம்?
சாத்திரி:இது ஓட்டப்போட்டி ,யாரு முதலா வாறாரோ அவருக்குப் பரிசு.
முகத்தார்:அப்ப முதலா வாறவருக்குத் தான் பரிசெண்டா ,மற்றவையெல்லாம் ஏன் ஓடுகினம்?
|
|
|
| ஆசிரியரின் காரை எரித்த மாணவர்கள் |
|
Posted by: SUNDHAL - 07-05-2005, 07:05 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
கூடுதல் மார்க் வாங்குவதற்காக ஆசிரியரின் காரை எரித்த மாணவர்கள்
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள அல்டைன் சீனியர் உயர்நிலைப்பள்ளியில் ரசாயன ஆசிரியையாக வேலை செய்பவர் ட்ரமேஷா பாக்ஸ் வயது 32. கார் திருட்டுப்போய் விட்டதாக இவர் போலீசில் புகார் செய்தார். 12 நாட்களுக்கு பிறகு அந்தக்கார் எரிந்து கிடந்தது.
இந்தக்கார் திருட்டுப்போவதற்கு முன்பே பாக்ஸ் ஒரு புதிய காரை விலைக்கு வாங்கினார்.
கார் திருட்டுப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி, காரை பாக்ஸ் கூறிய தன் பேரில் அவரது மாணவர்கள் தான் திருடி தீ வைத்தனர் என்பது தெரியவந்தது. இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து பணம் பெறுவதற்காக இந்த மோசடியை பாக்ஸ் செய்தார்.
ரசாயனப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்குப் போதுமான மார்க்பெறுவதற் காக மாணவர்கள் டார்வின் அரியாஸ் வயது 17, ரோஜர் ஜனா (18) ஆகிய 2 பேரும் ஆசிரியை பாக்ஸ்சொன்னபடி காரைத்திருடி, எரித்தது விசாரணை யில் தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் ரசாயனப்பாடத்தில் ஆண்டுமுழுவதும் நடந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தனர். ஆனால் இறுதித் தேர்வில் பாஸ் மார்க்கை விட கூடுதல் மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
இதெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த 2 பேர் மீதும் ஆசிரியை பாக்ஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது
|
|
|
| தன்வினை தன்னை சுடும் |
|
Posted by: SUNDHAL - 07-05-2005, 04:22 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
திருமணம் செய்து கொள்ள நச்சரித்த காதலி முகத்தில் "ஆசிட்'டை வீசினான் கான்ஸ்டபிள் காதலன். ஆனால், காதலியோ, அவன் கையை தடுக்க, தடுமாறியவன், தன் முகத்திலேயே ஆசிட்டை ஊற்றிக் கொண்டு, முகம் வெந்து கவலைக்கிடமாக உள்ளான்.
ஆந்திரா ஐதராபாத் நகரில் அமீர்பேட் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி ரெட்டி. அவருக்கும், அனுராதா என்ற பெண் ணுக்கும் சில மாதங்களாக காதல். சக்கரவர்த்தி, போலீஸ் கான்ஸ்டபிளாக உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு பிறந்தநாள் என்பதால், இருவரும் அமீர் பேட்டையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றனர். இருவரும் சாப்பிட் டனர்.
அப்போது,"என் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க; அதனால நாம உடனே திருமணம் செய்துக்க வேணும்' என்று கூறியிருக்கிறார் அனுராதா.
"இப்போதைக்கு அந்த பேச்சே வேண்டாம்; பிப்ரவரி மாதம் வரை இந்த பேச்சை எடுக்காதே' என்று சக்கரவர்த்தி கூறியிருக்கிறார். ஆனால், அனுராதா விடவில்லை.
"இனியும் தள்ளிப் போட்டால், பெரும் பிரச்னை ஆகி விடும்; அதனால், இரண்டு மாதத்தில் நாம் திருமணம் செய்து கொண்டு விடலாம்' என்று கூறவே, காதலனுக்கு எரிச்சல் அதிகமானது.
இருவருக்கும் ஏற்கனவே கடந்த சில வாரமாகவே, திருமணம் தொடர்பாக வாக்குவாதம் இருந்து வந்ததாம். அதனால், பிறந்தநாள் விருந்து என்ற பெயரில் அனுராதாவை வரவழைத்து சக்கரவர்த்தி அவளை தீர்த்துக்கட்ட பிளான் போட்டிருந்தது , பாவம் அந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாதே.
ஆனால், காதலன் முகம் போகும் போக்கும், அவன் செய்கையும், அவளுக்கு திடீரென சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவள் சந்தேகித்தது போலவே அடுத்த நொடி நடந்தது அந்த பயங்கரம். பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்த காதலன், அதில் இருந்த "ஆசிட்'டை சடக்கென, அனுராதா முகத்தில் வீச முயன்றான்.
பாட்டிலை பார்த்த மாத்திரத்தில் அனுராதா, ஏதோ ஆபத்து என்று உணர்ந்து கொண்டு, காதலன் கையை தடுக்க முயன்றாள். இருவருக்கும் இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓட்டல் மாடியில் இருந்து மாடிப்படி அருகே வந்தபோது, பாட்டில் மூடியை காதலன் திறந்து விட்டான். அதில் இருந்த "ஆசிட்' வெளியே வரும் போது, அவன் கையை காதலி தட்டிவிட்டார். அதனால், அவன் கை தடுமாறி, பாட்டில் வீச்சில் தன் முகத்திலேயே ஆசிட்டை ஊற்றிக் கொள்ள நேர்ந்தது.
முகத்தில் ஆசிட் பரவியதும், வெந்து போய் கதறினான் காதலன். அனுராதாவுக்கும் கையில் ஆசிட் காயம் ஏற்பட்டது. காதலன் முகம் வெந்த நிலையில், மாடிப்படிகளில் கதறியபடி ஓடினான். என்ன நடந்தது என்று வரவேற்பறையில் இருக்கும் ஊழியர்களுக்கு தெரியும் முன்பே, வாசலில் இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி போய்விட்டான்.
|
|
|
| ஏல விற்பனையில் தகராறு |
|
Posted by: hari - 07-05-2005, 03:37 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (15)
|
 |
<b>ஏல விற்பனையில் தகராறு துப்பாக்கி சூடுவரை சென்றது</b>
மட்டக்களப்பு சித்தாண்டி <span style='color:red'>முருகன் கோயிலுக்கு நேர்த்தியாக வந்த கோழிகளை நேற்று முன்தினம் ஏல விற்பனை செய்து கொண்டிருந்த போது இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் முறுகல் நிலை முற்றித் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பின்பு கைக்குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றது. இதன்போது சித்தாண்டியைச் சேர்ந்த இரத்தினசாமி சங்கரன் (30), என்பவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</span>
|
|
|
| போர்நிறுத்தக் காலம் !! |
|
Posted by: hari - 07-05-2005, 02:48 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<b>போர்நிறுத்தக் காலம் !!</b>
மூன்றாண்டு முடிந்திருக்கும் போர்நிறுத்தக் காலம்:
முடிவிலாது தொடர்வதுவோ முறைகேட்டின்; காலம்....
தான்தோன்றித் தனமான சதிகளின் பொற்காலம்...
தமிழனுக்கு என்றுவரும் நல்லதொரு காலம்?...
சண்டைதனை நிறுத்திடலாம் என்பதொரு சாக்கில்,
சமாதானம் கொண்டுவந்தார் தென்னிலங்கை நாட்டில்!
இன்றுவரை மாற்றமில்லை சிங்களனின் போக்கில் -
எந்தவொரு பயனுமில்லை அமைதியென்ற பேச்சில்!
அமைதியெனும் பேர்தனிலே ஒப்பந்தம் செய்தார்:
அருந்தமிழர் அழியத்தான் தீப்பந்தம் செய்தார்!
மமதையுடன் நமக்கெதிராய்ச் சதிவலைகள் நெய்தார்:
மாமடையர் ஒருபோதும் அமைதிநிலை எய்தார்!
சாவடிகள் அமைக்கின்றார், காவல்என்ற பேரில்:
சதிசெய்து மிரட்டுகின்றார் தமிழர்தமை நேரில்:
நாவடக்கம் அற்றகுலம் நாம்பிறந்த ஊரில்
நமையடக்க வந்ததுபார்! தமிழ்க்குலம் கண்ணீரில்!
இடையிடையே படையினர்தம் கைவரிசை கண்டோம்:
எழுத்துலக மறவர்தமை இழந்து தவிக்கின்றோம்:
உடைமைமீட்க வழிகளின்றி உள்ளமெலாம் வெந்தோம்:
உமிகளைப்போய் நெல்மணிகள் எனநினைத்துக் கொண்டோம்!
நமதில்லம் காணியெலாம் இன்னொருவன் பேட்டை -
நம்வீட்டு முற்றத்தே அந்நியனின் கோட்டை -
எமைவளர்த்த பூமியெங்கும் எமதர்மன் மேடை -
எமதுதமிழ்த் திண்ணைகளில் காடையனின் வாடை!
வெட்டவெளிப் பொட்டலிலும் வெறியர்களின் கொட்டம்:
வீதிதொறும் தீதுதரும் சிப்பாய்கள் வட்டம்:
மட்டரகப் பிக்குகளின் மழுங்குமதிச் சட்டம்:
மனிதநேயப் படுகொலையின் உச்சநிலைக் கட்டம்!
இதன்பெயர்தான் அமைதியென்று எப்படிநாம் சொல்வோம்?
இதுதொடர்ந்தால் நம்குறையை யாரிடம்போய்ச் சொல்வோம்?
மதம்பிடித்த மதவெறியை எங்ஙனம்யாம் வெல்வோம்?
மானமோடு சுதந்திரத்தின் தடத்தில்என்று செல்வோம்?...
சீர்திருத்தம் என்பதெலாம் சிங்களர்க்குத் தானோ?
செந்தமிழன் காலமெல்லாம் கொத்தடிமை தானோ?
போர்நிறுத்தம் என்பதெலாம் கண்துடைப்பு தானோ?
பொறுமைகாக்கும் தமிழன், இனி பொங்கியெழத் தானோ?
வெங்கொடுமை விட்டுவிட்டுத் தொடருகின்ற தம்மா!
விதவிதமாய்ச் சூழ்ச்சிகளும் படருகின்ற தம்மா!
அங்குமிங்கும் தமிழ்உயிர்கள் நித்தம் வீழுதம்மா!
அமைதியெனும் சொல் இருந்து என்ன வாழுதம்மா?;
தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)
|
|
|
| எங்கள் நிலை எண்ன? |
|
Posted by: SUNDHAL - 07-04-2005, 04:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (71)
|
 |
வடமராட்சியிலிருந்து ஒரு துடிப்பான வாசகி,மனம்நொந்து ஒரு விவகாரத்தை இப்பத்திக்கு எழுதியிருக்கிறார்.
வடபகுதியில் படித்த இளைஞர்கள் பலரும் தங்களுக்குப் புலம் பெயர் மணப்பெண்கள் தேவையென விளம்பரம் செய்கிறார்கள். தரகர்களையும் நாடி தங்களின் இவ்விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். `படித்த இளைஞர்கள் எல்லாரும் புலம்பெயர் பெண்களையே தேடிக் கொண்டிருந்தால், தமிழ் மண்ணையே நம்பிவாழும் எங்கள் கதி என்ன ஐயா?' என்று கேட்கிறார் இந்த மங்கை.
புலம்பெயர்ந்தோர், தரகர்களுக்குப் பணத்தை அள்ளி வீசுவதாலும், இந்த மண்ணே தஞ்சமென்று வாழும் வசதியற்ற இளம் பெண்களுக்கு விமோசனமே கிடைப்பதில்லை. ஆகவே, புலம் பெயர் மணப்பெண்களைத் தேடும் இளைஞர்கள், சொந்த மண்ணில் கோரிக்கையற்றுக் கிடக்கும் இளம் பெண்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்கிறார் இவர்.
இந்தக் குரல் இளைஞர்களின் நெஞ்சத்தைத் தொடுமா?
THANKS: THINAKURAL
|
|
|
| வாழ்க்கை |
|
Posted by: வெண்ணிலா - 07-04-2005, 01:08 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (11)
|
 |
வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள்
வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள்
வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்
வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்
வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்
வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்துகொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடைகாணுங்கள்
வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப்பிடியுங்கள்
|
|
|
| கவிதைத் தோட்டத்தில் பறித்த கவி |
|
Posted by: kuruvikal - 07-04-2005, 11:31 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (51)
|
 |
<b>ஆண் (பெண்) இனமே..
எதிர்கால திட்டம் இல்லாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) படிச்ச பட்டம்
என்ன கேட்கிறாய்
மூங்கில்போல் ஒல்லியான நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) குண்டு என்று
விலகிச் செல்கிறாய்
வளரத் தெரியாமல் உயர்ந்த நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) கட்டை என்று
கூறி நீ விலகிறாய்
சிறு பிள்ளைச்சத்து இல்லாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
அவளுக்குள்ள (அவனுக்குள்ள) மொத்தச் சொத்து
என்ன என வினாவுகிறாய்
நடுவீதியின் தார் போன்ற நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பெண்ணின் (ஆணின்) நிறம்
போதாது வருந்துகிறாய்
அறிவில்லாத மிருகம் போன்ற நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பெண்ணின் (ஆணின்) சாதி என்ன என
பிறரிடம் அறிகிறாய்
மனிதனின் பணிவு தெரியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு) அடக்கமானவளா (அடங்கக் கூடியவனா)
என அறியப் பார்க்கிறாய்
பண்பிற்கு அர்த்தம் தெரியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
அப்பெண்ணின் (ஆணின்) அன்பு
தெரியாமல் விலகிறாய்
மனதின் வலிகள் அறியாத நீ
பொண்ணு (ஆணு) பார்க்க வந்து
பொண்ணு (ஆணு)பிடிக்கலை என
நேரில் சொல்லும் பேய்</b>
[ வைஷ்ணவி ]
நன்றி வைஷ்ணவி...மற்றும் கவிதைத் தோட்டத்து கவிதன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இன்றும் குறிப்புப் பார்த்து, சாதி பார்த்து, இடம் பார்த்து, பணம் பார்த்து, சொத்துப் பார்த்து, நிறம் பார்த்து, படிப்புப் பார்த்து, அழகு பார்த்து, பீ ஆர் பார்த்து, நாடு பார்த்து, பொண்ணு என்ன பையனே பார்க்கும் நிலை எமது சமூகத்தில் இருக்கு...!
இக்கவி இவ்வடிவத்தில் வந்திருக்கிற...பொண்ணு பார்ப்பது தொடர்பில்...பையன்கள் பார்த்து பொண்ணுகளும் வேண்டாம் எனும் நிலையும் சர்வ சாதாரணம் தானே...தாயகப் பையங்களை தாயகப் பெண்களே பீ ஆரு (PR) க்காக நிராகரிக்கும் நிலை இன்று சாதாரணம்....அந்தச் சோகங்களையும் இந்தச் சமயத்தில் முனவைக்க விரும்புகின்றோம்..!
இக்கவி தொடர்பில் உங்க விமர்சனங்களையும் கவி வகுத்தவருக்கு உங்க பாராட்டுக்களையும் அளியுங்கள்..! மன்னிக்கவும் வைஷ்ணவி...உங்கள் கவிதைக்குள் இடைச்செருகல் செய்ததற்கு...அதுவும் யதார்த்தமே இன்று..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
|
|