![]() |
|
எங்கள் நிலை எண்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: எங்கள் நிலை எண்ன? (/showthread.php?tid=3980) |
எங்கள் நிலை எண்ன? - SUNDHAL - 07-04-2005 வடமராட்சியிலிருந்து ஒரு துடிப்பான வாசகி,மனம்நொந்து ஒரு விவகாரத்தை இப்பத்திக்கு எழுதியிருக்கிறார். வடபகுதியில் படித்த இளைஞர்கள் பலரும் தங்களுக்குப் புலம் பெயர் மணப்பெண்கள் தேவையென விளம்பரம் செய்கிறார்கள். தரகர்களையும் நாடி தங்களின் இவ்விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். `படித்த இளைஞர்கள் எல்லாரும் புலம்பெயர் பெண்களையே தேடிக் கொண்டிருந்தால், தமிழ் மண்ணையே நம்பிவாழும் எங்கள் கதி என்ன ஐயா?' என்று கேட்கிறார் இந்த மங்கை. புலம்பெயர்ந்தோர், தரகர்களுக்குப் பணத்தை அள்ளி வீசுவதாலும், இந்த மண்ணே தஞ்சமென்று வாழும் வசதியற்ற இளம் பெண்களுக்கு விமோசனமே கிடைப்பதில்லை. ஆகவே, புலம் பெயர் மணப்பெண்களைத் தேடும் இளைஞர்கள், சொந்த மண்ணில் கோரிக்கையற்றுக் கிடக்கும் இளம் பெண்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்கிறார் இவர். இந்தக் குரல் இளைஞர்களின் நெஞ்சத்தைத் தொடுமா? THANKS: THINAKURAL - Malalai - 07-04-2005 என்ன சுண்டல் அண்ணா சொல்றியள் ...அங்கை இருந்து தானே இறக்குமதி நடக்குது.....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 07-05-2005 ம்...சுண்டல் நீங்கள் பதிந்த தினக்குரல் செய்திபோல இன்னோர் விடையமும் இருக்கு. இங்கு தண்ணி தம்மு..கர்சான் கஞ்சா என்று எல்லாம் அடிச்சிட்டு தங்களுக்கு தமிழ் கலர்சாரம் தெரிந்த பெண்கள் தேவை என்று தரகர்களுக்கு அது எங்க!? ஊரில இருக்கும் தரகர்களிடம் மன்றாடும் இங்கிரக்கும் ஊதாரிகள் பற்றியும் சற்று சிந்திக்கனும். அங்க பாவம் பெடியல்....அதோட நம்ம நாட்டில் இப்போது சீதனம் எனும்....வியாபாரம் தான் நல்ல வியாபாரம்... காரணம் புலம்பெயர்ந்தவர்கள் தானாம் அதுவும் சுவிஸ்...லண்டன் போன்ற நாடுகளிலிலும்ஓமான் பொன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் தானம்... அண்மையில் நாடு சென்று வந்த நண்பர் சொன்னார். நாங்கள் அங்கு இருப்பவர்களிடம் (எல்லோரிடமும் அல்ல) கடன் வேண்டலாம் என்று இது உண்மையே நாங்கள் இஙட்கு தொடர்மாடிகளிலும்....நிலவறைகளிலும் வசிக்கையில் சிங்கப்புூர் வடிவமைப்பில் வீடு...சுவிஸ்வடிவமைப்பில் வீடு என்று அங்கு கட்டுகிறார்களாம். அதற்க்கு எங்கள் புகலிடத்து ஜீவன்கள் அல்லி க் கொடுக்கிறார்களாம்....இப்படி கனகக் பார்க்கலாம்....... - Nitharsan - 07-05-2005 இன்றைய தாயக நிலைப்படி ஒரு வைத்திய(ர்)ருக்கான சீதனம்(விலை): முப்பது தொடக்கம் ஐம்பது லட்சம் ஆசிரியர்,மற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு: அதாவது 15000 தொடக்கம் 20000 சம்பளம் எடுப்பவர்களுக்கு:.....பதினைந்து தொடக்கம் முப்பது கிராமசேவகர்.. சங்க முகாமையாளர்...தனியார் நிறுவனங்கள்...மற்றும்....10000+ எடுப்பவர்க(ள்)ளுக்கு.......எட்டுத் தொடக்கம் பதினைந்து சாதாரண கூலி வேலை அதாவது நாளொன்நுக்கு 350 வீதம்..சில நேரம் வேலை கிடைக்கும் சில நேரம் கிடைக்காது.... மூன்று தொடக்கம் பத்து லட்சம் சீதனத்தை விரும்பாமல் பெண் வீட்டில் கேட்காமல் பெண் வீட்டார் அவரக்கு கொடுப்பது...ஐம்பது ஆயிரம் முதல் 3 மூன்று லட்சம் இது பொய்யோ அல்லது கட்டுக்கதையோ அல்ல உண்மை... - வெண்ணிலா - 07-05-2005 புலத்தில் இருப்போர் எவ்வளவு கேட்கிறார்கள் என்று சொல்லவில்லையே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 07-05-2005 நன்றிகள் நிதர்சன் தகவல்களுக்கு சீதனம் வாங்காமல் கல்யாணம் சென்ஞ்சாலும் சனம் ஒரு மாதிரி கதைக்குங்களாம் என்டு சீதனம் வாங்கினவ சொல்லிச்சினம்
- SUNDHAL - 07-05-2005 vennila Wrote:புலத்தில் இருப்போர் எவ்வளவு கேட்கிறார்கள் என்று சொல்லவில்லையே. <!--emo& எவ்வளவு கேக்கினமோ தெரியல ஆனால் காசோட கொழும்புல ஒரு வீடும் கேக்கினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 07-05-2005 என்ன கோதாரியப்பனே நாம எழுத நினைக்கிறத உடன வந்து யாராவது எழுதிப்போடுறாங்க. :evil: :evil: அதுசரி நான் எழுத நினைத்தது என்னவென்றால் இங்கு புலத்தில் யாரும் நம்மமாதிரி பசங்க எல்லா பெண்களோடும் சுத்திப்போட்டு கல்யாணம் என்றவுடன் இங்கே இருக்கிற பெண் வேண்டாம் இலங்கையில வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஏனென்று கேட்டால் அவர்களின் பதில் 'இஞ்ச பெட்டையள் சரியில்லை". ஏனய்யா இஞ்சத்தை பெட்டையள பழுதாக்கிறத நீங்க தானே! உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்க அது நீங்க இல்லையென்று. இப்பிடித்தான் பாருங்கோ ஒருநாள் எனது வேலைத்தளத்தில், இலங்கைக்குப் போய் <span style='color:orange'>திருமணம் முடித்து ஒருகிழமையால் இங்க வந்து அவருக்கு ஒரு பெண் தேவையாம். அதுவும் ஓரு தமிழ்ப்பெண் வேண்டுமாம் (கடைசிப் பந்தியை நாகரீகம் கருதி எழுதவேண்டாம் என்றுதான் நினைத்தேன்; ஆனாலும் பொறுக்க முடியல).</span> - narathar - 07-05-2005 சீதனம் வாங்காமல் கலியாணம் செய்த பல இழைன்ச்சரைத் தெரியும் புலத்திலும்,ஈழத்திலும் ,இப் பழக்கம் குறைந்து வருகிறது என்றே நினைய்க்கிறேன், மற்றவர்கள் என்ன சொல்கிறீர்கள். - Niththila - 07-05-2005 அப்ப ஒரு கோடி இருந்தா இரண்டு டொக்டர்களை வாங்கலாமா மார்க்கெட் இன்னும் கூடேக்க லாபத்துக்கு விக்கலாம் தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரும் இருந்தா சொல்லுங்கோ :wink: சமீபத்தில எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் யாழில ஒரு டொக்டர் மாப்பிளையை நிதர்சன் அண்ணா சொன்ன மாதிரி 50 லச்சமும் கொழும்பில ஒரு வீடும் கொடுத்து வாங்கினவ :evil: அது சரி இது பற்றி மற்றவையும் எழுதலாமே ஒரு வகையில பார்க்கும் போது தமிழ் சமுதாயத்தில சீதன் இருக்கிறது பெண்களிற்கு பரம்பரை சொத்திலுள்ள உரிமைமையை பாதுகாக்குது ஆனா அதுக்காக அண்ணைமார் தம்பிமார் உழைப்பில சீதனம் எதிர் பார்க்கிறவையை நிக்க வைச்சுதான் சுடோணும் :evil: :evil: :evil: நீங்க என்ன சொல்லுறியள் - kuruvikal - 07-05-2005 உங்கள் எல்லோரின் கருத்துப்படி பார்த்தா..தாயகத்தில் சீதனத்தைத் தீர்மானிக்கிறது..படிப்பும் பட்டமும் பதவியும்...என்பது தெளிவு...! சிறீலங்காவில் படிப்பவருக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது...அந்தப் பட்டம் படிப்பவருக்குச் சொந்தமில்லை...அரசுக்குச் சொந்தம்...அது மக்கள் சொத்து...! எனவே அங்கு படிப்பைக் காட்டி சீதனம் வாங்கும் படித்த முட்டாள்களிடம் அதைப் பறிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்...இதில் புலிகளும் சிறீலங்கா அரசும் இணைந்து செயற்படும் போது... இவை தானா கட்டுப்பாட்டுக்குள் வரும்...சனம் தானாத் திருந்தும் என்று பார்த்திருக்கிறது சில விடயங்களில் முட்டாள் தனம்..! புலத்தில் சீதனம் வாங்காம இளைஞர்கள் திருமணம் செய்யக்காரணம்...புலத்தில் பெண்களுக்கு உள்ள அதிக சமூகச் சுதந்திரமும்... அது குடும்பங்களில் செய்யும் செல்வாக்குமே அன்றி வேறில்லை...! அந்தகைய சூழலில் ஆண்கள் பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீதனம் வாங்குவதை தவர்க்கின்றனர்....அது முற்றிலும் ஒரு சுயநல எண்ணமே அன்றி சீதனத்தின் மீதான உண்மையான மனமாற்றமாகத் தெரியவில்லை...மிகச் சிலரே உண்மையில் சீதனத்தை அருவருப்பாக எண்ணி...ஆணுக்குப் பெண் வாழ்க்கைத் துணையே அன்றி விலை கொடுத்து வாங்கி வைக்கும் பண்டம் அல்ல என்று புரிந்து செயற்படுகின்றனர்...! இதில் வேடிக்கை என்ன தெரியுமா...புலத்தில் உள்ள சில பெண்கள் தாங்களே உழைத்து சம்பாதித்து அதைக்காட்டி தாயகத்தில் மணமகன் தேடும் நிலையை எய்தி இருப்பதுதான்....! இது தவறா சரியா..நீங்கள் தான் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்...! மேலே உள்ள தகவலின் படி தாயகப் பெண்ணின் மன ஆதங்கம் என்று தாயக ஆண்கள் புலத்துப் பெண்களைத் தேடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருக்கிறது... புலத்து ஆண்கள் கடந்த 15 வருடத்துக்கும் மேலாக இறக்குமதி செய்த தாயகத்துப் பெண்களின் தொகையோடு ஒப்பிடும் போது அது சிறிய அளவே...அப்போதெல்லாம் ஏன் இந்தப் பெண்கள் தாயக இளைஞர்களுக்காக குரல் கொடுக்கவில்லை..??! உண்மையில் புலத்தில் தமிழ் பெண்கள் ஆண்களை விட எண்ணிக்கையில் குறைவு... தாயகத்தில் அப்படியல்ல...பெண்களின் தொகை ஆண்களை விட அதிகம்...எனவே அங்கு ஆண்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் காரணம் உள்ளது என்பதை சமூகம் உணர்ந்து தாயகப் பெண்களுக்கு தாயக ஆண்கள் துணையாக அமைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...! புலத்து ஆண்கள் புலத்துப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் ஆதங்கத்துக்கு மிகக் குறைந்தளவு தீர்வாக அமைய முடியும்...!
- Mathan - 07-05-2005 kuruvikal Wrote:உங்கள் எல்லோரின் கருத்துப்படி பார்த்தா..தாயகத்தில் சீதனத்தைத் தீர்மானிக்கிறது..படிப்பும் பட்டமும் பதவியும்...என்பது தெளிவு...! உண்மை. பட்டமும் பதவியும் கூட சீதனம் கூடி கொண்டே போகும். அதிலும் இலங்கையில் அரச பதவிக்கு சீதனம் அதிகம் என்றார்கள். இப்போது தனியார் துறையில் சம்பளம் அதிகமாகிவிட்ட பின்பு மாறிவிட்டதோ தெரியலை. kuruvikal Wrote:சிறீலங்காவில் படிப்பவருக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது...அந்தப் பட்டம் படிப்பவருக்குச் சொந்தமில்லை...அரசுக்குச் சொந்தம்...அது மக்கள் சொத்து...! எனவே அங்கு படிப்பைக் காட்டி சீதனம் வாங்கும் படித்த முட்டாள்களிடம் அதைப் பறிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்...இதில் புலிகளும் சிறீலங்கா அரசும் இணைந்து செயற்படும் போது... இவை தானா கட்டுப்பாட்டுக்குள் வரும்...சனம் தானாத் திருந்தும் என்று பார்த்திருக்கிறது சில விடயங்களில் முட்டாள் தனம்..! இந்த விசயத்தில் அதுவும் தற்போதைய சூழலில் சட்டம் கொண்டுவராமல் திருத்த முடியாது போல் தான் இருக்கிறது. தாயக பெண்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலை மூலம் சொந்த காலில் நிற்க கூடிய நிலை வரும் போது கூடுதல் விழிப்புணர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. - SUNDHAL - 07-05-2005 Niththila Wrote: அதென்ன நிக்க வைச்சு சுடுறது? ஒட விட்டு சுட்டா என்ன? :twisted: - stalin - 07-05-2005 சீதனத்தை நிர்ணயிக்கின்ற காரணிகள் பட்டம் படிப்பு அரசாங்க உத்தியோகம் முக்கிய பங்கு வகித்தன. இங்கு அரச உத்தியோகத்திலுள்ளவர்களை அதிகம் சீதனம் கொடுத்து திருமணம் செய்ய விரும்புவதற்க்கு காரணம் ஒரு வித பாதுகாப்பு பென்சன் போன்ற உத்தரவாரங்களால்----கோழி மேய்த்தாலும் கவர்ணமென்ற் உத்தியோகம் இருக்கோணுமென்று டச்சு காலத்திருந்திலே யே சொல்லிவருவார்கள் என்று கூறுவார்கள் பெரும் தனவந்தர்களே பெரும் சீதனம் கொடுத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் டொக்டர் என்ஜினியரகள் என்பவர்களை போட்டிப்போட்டு வாங்க முற்பட்டார்கள் இது பண்டமாக மாறி கிராக்கி ஏற்பட்டது. போர் உக்கிரம் பெறுமுன் குடாநாட்டு மனபாவம் தலை விரித்தாடியிருந்து. ஆனையிறவு தாண்டி திருமணம் செய்யமாட்டாததன்மை சொத்துக்கள் சொந்த பந்தங்களை விட்டுப்போக்கூடாதன்பதும் கூட சீதனத்தை நிர்ணயிக்கின்ற காரணிகளாக இருந்தன .டச்சுக்காரர் அறிமுகப்படுத்தப்பட்ட தாய்வழி சொத்து முறை மூலம் வரும் சீதன முறமை பெணளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக நித்திலா கூறியிருந்தார் அதே நேரம் ஆண்களுக்கும் முதிசம் என்ற மூறைமையடாக ஆண்களுக்கும் வழ்கப்படடிருக்கிறது.டச்சுகாரர் உருவாக்கிய தேச வழமைச்சட்டத்தினால் தமிழருக்கு சட்ட்த்தில் பாதுகாப்பு அழித்திருக்கிறது என்று அநேகர் கூறுவார்ள். மறு பக்கத்தில் உந்த தேச வழமைச்சட்டம் தான் சீதனத்தை ஊக்குவி்த்ததோ என்று ஜயப்டுகிறேன். - stalin - 07-05-2005 SUNDHAL Wrote:நன்றிகள் நிதர்சன் தகவல்களுக்குசீதனம் வாங்காமால் கட்டுறார் -----சில வேளை மு்க்கியமான இடத்திலை பிழையோ என்று கதைப்பினெமென்று அப்படியா------------------ - MUGATHTHAR - 07-05-2005 பிள்ளையள் இந்த விசயத்தைப்பற்றி ஏற்கனவே ஒருபகுதிலை கதைத்திருக்கிறோம்அப்ப இந்த முகத்தானின் டயறியைக்கூட காட்டியிருந்தன் மாப்பிளைமாரின் ரேட் நிலவரத்தை........யாழுக்கு ஏற்பட்ட சுனாமிலை அடிபட்டுப்போச்சுதோ தெரியலை என்ரை அனுபவத்திலை சொல்லுறன் எத்தனையோ வெளிநாட்டுப் பெடியள் சீதனம் வாங்காம கட்டுறத்திற்கு முன்னுக்கு வாராங்கள் ஆனா இந்த பெம்பிளை வீட்டுக்காரர் பவுஸ் காட்டவேண்டும் எண்டு சொல்லி சீதனத்தை அள்ளிக் கொடுக்கினம் இப்பிடியான ஆட்களிட்டை தயவுதாட்சணியம் பாக்கப் படாது நல்லாக் கறந்திடனும் உண்டையிலேயே கஸ்டப் படுகிறபிள்ளைகளிடம் சீதனம் எதிர் பார்ப்பது தப்புத்தான் ஆனா இப்ப வெளிநாட்டிலை இருக்கிறவனை விட ஊரிலை சனம் அந்தமாதிரித் திரியுதுகள் இப்ப நாட்டிலை சமாதானமும் இருக்கிறதாலை படிச்ச மாப்பிளைகளுக்கு நல்ல டிமாண்ட் அவங்கடை ரேட்டைக் கூட்டினதே எங்கடை சனம்தான் - Jude - 07-06-2005 நோய்க்கு தீர்வு காணாமல் நோய்க்குறிகளுக்கு தீர்வுகாணுவது போல தான் சீதன பிரச்சினைக்கு பலரும் சொல்லும் தீர்வு எனக்கு படுகிறது. சீதனம் சட்டரீதியாக ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது (தமிழீழ பிரதேசத்தில்). ஆனால் இந்த நிலையில் பணத்தில் குறியாக இருப்பவர்கள் வெளிப்படையாகவே நல்ல பணம் படைத்த குடும்பத்து பெண்களை மட்டுமே திருமணம் செய்வதன் மூலம் சட்டத்தடைகளை தவிர்த்து பணத்தின் வசதிகளை திருமணம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அடிப்படையில் சந்தைவாய்ப்புள்ள எந்த சரக்கும் அதற்கு தட்டுப்பாடுள்ளவரை விலை ஏறிக்கொண்டே போகும் என்பதும் அதனை தடுக்க முயற்சிக்கும் எந்த வரைமுறையும் காலப்போக்கில் பலனளிக்காமல் போகும் என்பதும் உணரப்படும். ஆக, சீதனப்பிரச்சினை நோய்க்குறியானால் நோயென்ன? திருமணத்தை திடீர் பணக்காரராகும் வழியாக பார்ப்பதுதான் இங்கு நோய். இந்த நோய் முற்றக் காரணம், நோயின் தாக்கங்கள் மக்களுக்கு தெரியாமல் பணம் மட்டும் தெரிவதே. திருமணத்தின் பின் மகிழ்ச்சியாக வாழ்பவர்களில் எத்தனை வீதமானவர்கள் இந்த திடீர் பணக்காரராகும் திருமணத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள் என்று யாராவது ஆய்வு செய்தார்களா? மனமுடைந்து நாளும் பொழுதும் நாயும் புூனையுமாக வாழும் எத்தனைவீதம் இந்த திடீர் பணக்காரராகும் திருமணத்தால் குடும்பங்களானவை? இவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தி, கதையாக, கட்டுரையாக, வாழ்க்கை வரலாறுகளாக, இந்த லொட்டரி திருமணங்களையும், மனம் விரும்பி, உனக்கு நானும் எனக்கு நீயும் தான் இனி வாழ்வு என்று உயிருக்கு உயிராகி வாழும் திருமணங்களையும் ஒப்பிட்டு நாம் எமது ஊடகங்களில் மக்கள் மனதில் படுமாறு திரும்பத் திரும்ப உரத்து ஓங்கி சொன்னோமா? அடிப்படையில் நான் சொல்வதெல்லாம் இளைஞர்கள் பெண்களை அவர்கள் தமது மனநிலை போக்கு பழக்கவழக்கங்களுக்கு பொருத்தமானவரா என்று பார்த்து திருமணம் செய்யும் பண்பாடு எமது சமுதாயத்தில் வழக்குக்கு வர வேண்டும். பெண்களும் பட்டம் பதவிகளை விட்டு ஆண்களின் போக்கு பழக்க வழக்கங்கள் மனநிலை தமக்கு பொருந்துமா என்பதை பார்த்து திருமணம் செய்யும் பண்பாடு வரவேண்டும். பெண்ணின் பெற்றோரும் ஆணின் பெற்றோரும் இவையே திருமணத்துக்கு முக்கியம் பணத்துக்கும் பட்டத்துக்கும் திருமணம் செய்வோர் அறிவற்ற பிற்போக்கான மூடர் என்று குறைவாக பார்க்கும் பண்பாடு சமுதாயத்தில் உருவாக வேண்டும். உண்மையில் இப்படியாக பார்க்கும் பண்பட்ட மக்கள் எம் மத்தியில் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் குறைவு. பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களுக்கு திருமணத்தின் போது அவர்கள் எதை ஏற்றுக்கொள்ளலாம் எதை ஏற்றுக்கொள்ளக் கூடாது? ஏன்? சரியான துணையை தேர்ந்து கொள்வது எப்படி? போன்ற விடயங்கள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். உயர்வகுப்பில் கற்றுக் கொள்ளாமல் பாடசாலையை விட்டு வெளியேறிய பின் யார் கற்றுக் கொடுக்கிறார்கள்? - ஈழத்துளி - 07-06-2005 காசேதான் கடவுளடா - அது தமிழருக்கு நன்கு தெரியுமடா வாழ்க்கையில் காசுழைத்தல் நல்ல விடயம் வாழ்க்கையே காசுக்காக என்றால் அது ஆகாத விடயம் திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிப்பது மிக மிக கடினம் - Niththila - 07-06-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-06-2005 யூட்டின் கருத்தும் கவனிக்கத்தக்க பல நல்ல விடயங்களைக் கொண்டிருக்கிறது...! |