![]() |
|
ஆசிரியரின் காரை எரித்த மாணவர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஆசிரியரின் காரை எரித்த மாணவர்கள் (/showthread.php?tid=3976) |
ஆசிரியரின் காரை எரித்த மாணவர்கள் - SUNDHAL - 07-05-2005 கூடுதல் மார்க் வாங்குவதற்காக ஆசிரியரின் காரை எரித்த மாணவர்கள் அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள அல்டைன் சீனியர் உயர்நிலைப்பள்ளியில் ரசாயன ஆசிரியையாக வேலை செய்பவர் ட்ரமேஷா பாக்ஸ் வயது 32. கார் திருட்டுப்போய் விட்டதாக இவர் போலீசில் புகார் செய்தார். 12 நாட்களுக்கு பிறகு அந்தக்கார் எரிந்து கிடந்தது. இந்தக்கார் திருட்டுப்போவதற்கு முன்பே பாக்ஸ் ஒரு புதிய காரை விலைக்கு வாங்கினார். கார் திருட்டுப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி, காரை பாக்ஸ் கூறிய தன் பேரில் அவரது மாணவர்கள் தான் திருடி தீ வைத்தனர் என்பது தெரியவந்தது. இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து பணம் பெறுவதற்காக இந்த மோசடியை பாக்ஸ் செய்தார். ரசாயனப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்குப் போதுமான மார்க்பெறுவதற் காக மாணவர்கள் டார்வின் அரியாஸ் வயது 17, ரோஜர் ஜனா (18) ஆகிய 2 பேரும் ஆசிரியை பாக்ஸ்சொன்னபடி காரைத்திருடி, எரித்தது விசாரணை யில் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் ரசாயனப்பாடத்தில் ஆண்டுமுழுவதும் நடந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தனர். ஆனால் இறுதித் தேர்வில் பாஸ் மார்க்கை விட கூடுதல் மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றனர். இதெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த 2 பேர் மீதும் ஆசிரியை பாக்ஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது |