![]() |
|
தன்வினை தன்னை சுடும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தன்வினை தன்னை சுடும் (/showthread.php?tid=3977) |
தன்வினை தன்னை சுடும் - SUNDHAL - 07-05-2005 திருமணம் செய்து கொள்ள நச்சரித்த காதலி முகத்தில் "ஆசிட்'டை வீசினான் கான்ஸ்டபிள் காதலன். ஆனால், காதலியோ, அவன் கையை தடுக்க, தடுமாறியவன், தன் முகத்திலேயே ஆசிட்டை ஊற்றிக் கொண்டு, முகம் வெந்து கவலைக்கிடமாக உள்ளான். ஆந்திரா ஐதராபாத் நகரில் அமீர்பேட் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி ரெட்டி. அவருக்கும், அனுராதா என்ற பெண் ணுக்கும் சில மாதங்களாக காதல். சக்கரவர்த்தி, போலீஸ் கான்ஸ்டபிளாக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு பிறந்தநாள் என்பதால், இருவரும் அமீர் பேட்டையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்றனர். இருவரும் சாப்பிட் டனர். அப்போது,"என் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க; அதனால நாம உடனே திருமணம் செய்துக்க வேணும்' என்று கூறியிருக்கிறார் அனுராதா. "இப்போதைக்கு அந்த பேச்சே வேண்டாம்; பிப்ரவரி மாதம் வரை இந்த பேச்சை எடுக்காதே' என்று சக்கரவர்த்தி கூறியிருக்கிறார். ஆனால், அனுராதா விடவில்லை. "இனியும் தள்ளிப் போட்டால், பெரும் பிரச்னை ஆகி விடும்; அதனால், இரண்டு மாதத்தில் நாம் திருமணம் செய்து கொண்டு விடலாம்' என்று கூறவே, காதலனுக்கு எரிச்சல் அதிகமானது. இருவருக்கும் ஏற்கனவே கடந்த சில வாரமாகவே, திருமணம் தொடர்பாக வாக்குவாதம் இருந்து வந்ததாம். அதனால், பிறந்தநாள் விருந்து என்ற பெயரில் அனுராதாவை வரவழைத்து சக்கரவர்த்தி அவளை தீர்த்துக்கட்ட பிளான் போட்டிருந்தது , பாவம் அந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாதே. ஆனால், காதலன் முகம் போகும் போக்கும், அவன் செய்கையும், அவளுக்கு திடீரென சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவள் சந்தேகித்தது போலவே அடுத்த நொடி நடந்தது அந்த பயங்கரம். பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்த காதலன், அதில் இருந்த "ஆசிட்'டை சடக்கென, அனுராதா முகத்தில் வீச முயன்றான். பாட்டிலை பார்த்த மாத்திரத்தில் அனுராதா, ஏதோ ஆபத்து என்று உணர்ந்து கொண்டு, காதலன் கையை தடுக்க முயன்றாள். இருவருக்கும் இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓட்டல் மாடியில் இருந்து மாடிப்படி அருகே வந்தபோது, பாட்டில் மூடியை காதலன் திறந்து விட்டான். அதில் இருந்த "ஆசிட்' வெளியே வரும் போது, அவன் கையை காதலி தட்டிவிட்டார். அதனால், அவன் கை தடுமாறி, பாட்டில் வீச்சில் தன் முகத்திலேயே ஆசிட்டை ஊற்றிக் கொள்ள நேர்ந்தது. முகத்தில் ஆசிட் பரவியதும், வெந்து போய் கதறினான் காதலன். அனுராதாவுக்கும் கையில் ஆசிட் காயம் ஏற்பட்டது. காதலன் முகம் வெந்த நிலையில், மாடிப்படிகளில் கதறியபடி ஓடினான். என்ன நடந்தது என்று வரவேற்பறையில் இருக்கும் ஊழியர்களுக்கு தெரியும் முன்பே, வாசலில் இருந்த ஒரு ஆட்டோவில் ஏறி போய்விட்டான். - அருவி - 07-05-2005 நாசமாப் போக ஏனய்யா புடிக்கலண்ணா பேசாம விலத்திட்றதுதானே. சும்மா மத்தவங்க முகங்களப் பழுதாக்கீண்டு. :evil: :evil: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: - Mathan - 07-05-2005 காதலியை காயப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது என்றால் மனதில் காதல் இல்லை என்றுதானே பொருள். அப்படி தன் மேல் காதல் இல்லாத தன்னை காயப்படுத்த துணிந்த நபரை திருமணம் செய்வதை விட வேறு யாரையாவது திருமணம் செய்தால் அந்த பெண் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். இனியாவது அந்த பெண் சரியான நபரை தெரிவு செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும். - MUGATHTHAR - 07-05-2005 இதிலை இருந்து என்ன தெரியுது பெண்கள் காதலுடன் ஓட்டலுக்கு போகும் போது காதலனின் பொக்கட்டுகளை நல்ல செக் பண்ணிய பின் செல்வது பாதுகாப்பானது - வினித் - 07-05-2005 Mugaththar ¸ÅÉõ ÀòÐ |