Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
ஒரு உண்மை தெரிய வேண்டும் ஐரோப்பிய அவலத்தில் இணைத்த செய்தியொன்று சிலநிமிடங்களின் பின்னர் எவ்வித அறிவித்தலுமின்றி காணாமல் போயுள்ளது அச்செய்தியை நீக்கியதற்கான அறிவித்தலை மோகனே அல்லது வேறு மட்டிறுத்தினரோ அறிய தரவில்லை இதே செய்தியை முன்னர் போட்ட சில மணி நேரத்தில்தான் யாழ் களம் தாக்குதலுக்குள்ளானது . நிலவன் என்பவர்(யேர்மனி)) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார். ஆனால் களத்தை தாக்கியவர்கள் களத்தில்தான் நல்ல பிள்ளைகளாக வலம் வருகின்றனர் அது யாரென்று பின்னர் பாக்கலாம் முதலில் எனது கருத்து யாரால் ஏன் நீக்கபட்டது என்று மட்டிறுத்தினர்களோ அல்லது மோகனோ அறிய தரவும்.அதைவிட நான் கோவித்து கொண்டு யாழை விட்டு போய்விடுவேன் என்றும் எதிர்பார்க்க வேண்டாம் உண்மை கிடைக்கும்வரை போராடுவேன்
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
இங்கு என்ன நடக்குறது என்பதை மோகன் விளக்க வேண்டும் ,அல்லாது விடின் இது வீண் சன்டைகளிக்கும் ,சந்தேகங்களுக்குமே வழிவகுக்கும்.
ஒருவரின் கருத்து நீக்கப்படுகிறது என்றால் அதற்கான நியாயம் களம் பற்றிய பகுதியில் கொடுபடவேண்டும் என்பது
கள நியதிகளில் ஒன்றல்லவா?
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
நன்றிகள் யாழினி மற்றவர்களின் பதிலையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
yalini Wrote:Quote:நிலவன் என்பவர்(கனடா) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார்.
அந்த கருத்தை நான் தான் நீக்கினேன் அதனால் தான். அப்படிப்போட்டேன்.
யாழினி மேடம்... அதை ஏன் நீங்கினீங்கள் என்பதை களத்தில் சொல்லி இருக்கனுமே...ஏன் சொல்லேல்ல...அதற்குத்தான் தனி ஒரு தலைப்பு இருக்கே...!

hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:யாழினி மேடம்... அதை ஏன் நீங்கினீங்கள் என்பதை களத்தில் சொல்லி இருக்கனுமே...ஏன் சொல்லேல்ல...அதற்குத்தான் தனி ஒரு தலைப்பு இருக்கே...!
அது ரகசியம் ஆக்கும்.. அதுதான் சொல்லலல போல :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
நிலவன் என்ற பெயரில் துரோக இணையங்களில் இருந்து பல செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தன. இப்போது அவை தூக்கப்பட்டுள்ளன. நல்ல விடயம்தான். எனினும் நிலவன் தற்போதும் கருத்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெளிவு படுத்தவும்.
நிலவன் தான் ஒரு கருத்துக்களம் ஆரம்பித்து இருந்தார். அதில் எழுத எவரும் முன்வரவில்லை என்ற ஆத்திரத்தில் யாழில் புலிகளுக்கு எதிரான செய்திகளை வெட்டி ஒட்டியதாகவே நான் கருதுகின்றேன். இவை மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது போலத்தான் தெரிகின்றது. :?:
<b> . .</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
sathiri Wrote:நிலவன் என்பவர்(யேர்மனி)) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது.
சாத்திரி அந்த நிலவனின் கருத்தை நீக்கிய பின்பு யாழினி தான் கருத்து தணிக்கை செய்யப்பட்டதாக நிலவனின் கருத்து இருந்த இடத்தில் எழுதியிருக்கின்றார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:yalini Wrote:Quote:நிலவன் என்பவர்(கனடா) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார்.
அந்த கருத்தை நான் தான் நீக்கினேன் அதனால் தான். அப்படிப்போட்டேன்.
யாழினி மேடம்... அதை ஏன் நீங்கினீங்கள் என்பதை களத்தில் சொல்லி இருக்கனுமே...ஏன் சொல்லேல்ல...அதற்குத்தான் தனி ஒரு தலைப்பு இருக்கே...!
hock: :roll: 
குருவி நேற்று நிலவன் பல இடங்களிலும் சில தடை செய்யப்பட்ட செய்திகளை இணைத்திருந்தமையால் அவை உடனுக்குடன் நீக்கப்பட்டன. அவை வேண்டுமென்றே ஒட்டப்பட்ட செய்திகளாக இருந்தமையால் வீண்விவாதங்களை தவிர்க்கவும் அப்படி ஒட்டியவர்களின் நோக்கம் நிறைவேறாமல் செய்யவும் காரணம் எழுதவில்லை. அது போலவே யாழினி தனது பகுதியில் தணிக்கை செய்யப்பட்டவை குறித்தும் காரணம் எழுதவில்லை. காரணம் எழுதாமையால் ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kirubans Wrote:நிலவன் என்ற பெயரில் துரோக இணையங்களில் இருந்து பல செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தன. இப்போது அவை தூக்கப்பட்டுள்ளன. நல்ல விடயம்தான். எனினும் நிலவன் தற்போதும் கருத்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெளிவு படுத்தவும்.
நிலவன் தான் ஒரு கருத்துக்களம் ஆரம்பித்து இருந்தார். அதில் எழுத எவரும் முன்வரவில்லை என்ற ஆத்திரத்தில் யாழில் புலிகளுக்கு எதிரான செய்திகளை வெட்டி ஒட்டியதாகவே நான் கருதுகின்றேன். இவை மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது போலத்தான் தெரிகின்றது. :?:
நிலவனின் கருத்துகளில் நேற்று திடீர் மாற்றம் தென்பட்டது. அவர் வழமையாக எழுதுவது போல் அன்றி வித்தியாசமாக இருந்தது. நேற்று அவர் இணைத்த செய்திகள்/கருத்துக்கள் உடனுக்குடன் தணிக்கை செய்யப்பட்டன. அதன் பின்பு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட நிலவன் தன்னுடைய பாவனை சொல் மற்றும் பழைய மின்னஞ்சல் முகவரிகளை சிலர் களவாடி விட்டதாகவும் அப்படி தான் எழுதவில்லை என்றும் சொன்னார். எது எப்படியோ நிலவன் என்ற பாவனை பெயர் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Mathan எழுதியது:
நிலவனின் கருத்துகளில் நேற்று திடீர் மாற்றம் தென்பட்டது. அவர் வழமையாக எழுதுவது போல் அன்றி வித்தியாசமாக இருந்தது. நேற்று அவர் இணைத்த செய்திகள்/கருத்துக்கள் உடனுக்குடன் தணிக்கை செய்யப்பட்டன. அதன் பின்பு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட நிலவன் தன்னுடைய பாவனை சொல் மற்றும் பழைய மின்னஞ்சல் முகவரிகளை சிலர் களவாடி விட்டதாகவும் அப்படி தான் எழுதவில்லை என்றும் சொன்னார். எது எப்படியோ நிலவன் என்ற பாவனை பெயர் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அப்படி பாவனை சொல் களவாட முடியும?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
களத்தில் என்னதான் நடக்கிறது நமக்கு ஒன்றுமே புரியவில்லை.... இதற்குத்தான் தமிழில் அழகான பழமொழி உண்டு வைக்கோற்பட்டறை நாய் என்று.... இப்பழமொழி சரியா என நீங்கள்தான் கூறவேண்டும்
____________________________________________________________
[size=18]'' நாம் வாழ வேண்டும் என்றால்
நம் இனம்வாழ வேண்டும்
நம் இனம் வாழ வேண்டும் என்றால்
நம் மொழி சிறப்புற வேண்டும் ""
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathan Wrote:kuruvikal Wrote:yalini Wrote:Quote:நிலவன் என்பவர்(கனடா) யாழினி நீக்கியதாக அந்த பக்கத்தில் போட்டிருக்கிறார் ஒருமட்டிறுத்தினரின் பெயரை பாவித்து செய்தி நீக்கபட்டுள்ளது என்று என்று ஒரு மட்டிறுத்தினரின் பெயரை துஸ்பிரயோகம் செய்யும் உரிமையை யார் அவருக்கு கொடுத்தது. அதைவிட அவர் யாழ் களத்தை நோர்வேயிலிருந்து சேது தான் தாக்கினார் என்றும் செய்திகளை பரப்புகிறார்.
அந்த கருத்தை நான் தான் நீக்கினேன் அதனால் தான். அப்படிப்போட்டேன்.
யாழினி மேடம்... அதை ஏன் நீங்கினீங்கள் என்பதை களத்தில் சொல்லி இருக்கனுமே...ஏன் சொல்லேல்ல...அதற்குத்தான் தனி ஒரு தலைப்பு இருக்கே...!
hock: :roll: 
குருவி நேற்று நிலவன் பல இடங்களிலும் சில தடை செய்யப்பட்ட செய்திகளை இணைத்திருந்தமையால் அவை உடனுக்குடன் நீக்கப்பட்டன. அவை வேண்டுமென்றே ஒட்டப்பட்ட செய்திகளாக இருந்தமையால் வீண்விவாதங்களை தவிர்க்கவும் அப்படி ஒட்டியவர்களின் நோக்கம் நிறைவேறாமல் செய்யவும் காரணம் எழுதவில்லை. அது போலவே யாழினி தனது பகுதியில் தணிக்கை செய்யப்பட்டவை குறித்தும் காரணம் எழுதவில்லை. காரணம் எழுதாமையால் ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகின்றேன்.
யாழினி...திருத்தத்தின் பின்னர் தான் எழுதியதை வேறுபடுத்திக் (நிற எழுத்துக்கள் மூலமாகவோ...இல்ல வேறுபட்ட எழுத்து வடிவத்தின் மூலமாகவோ...!) காட்டி இருந்தால் சாத்திருக்கு குழப்பம் வந்திருக்காது....!
களத்தில் நீக்கப்படும் கருத்துக்களுக்கு இயன்றவரை காரணம் சொல்லப்படும் என்பது ஏற்கப்பட்டு...அதெற்கென ஒரு தனித் தலைப்பு வழங்கப்பட்டிருக்குது....! நிலவனின் கருத்துக்கள் என்ன... சாத்திரியின் கருத்துக்கள் என்ன... குருவிகளின் கருத்துக்கள் என்ன.... எந்த அங்கத்தவரின் கருத்தாயினும் இன்ன காரணத்துக்காகத்தான் நீக்கப்படுகின்றது இல்ல நீங்கப்பட இருக்கிறது என்பதை தோழமையுடன் அறியத் தருவது... களத்தின் மீது கருத்தெழுதும் ஆர்வம் குறையாது தடுக்கப்படவும்... இக் கருத்துக்கள் தொடர்பில் களத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கள உறவுகள் மதிப்பிடவும் வாய்ப்பாக அமையும் என்பது எமது தாழ்மையான கருத்து...!
எது எப்படியோ....சிரமம் பாராது மதன் தந்த விளக்கங்களுக்கு நன்றிகள்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
விளக்கத்திற்கு நன்றி மதன் யாழினி வழைமைபோல் சிவப்பு நிறத்தை பாவித்திருந்தால் நான் குழம்பியிருக்க மாட்டன் ஏனெனில் நிலவன் என்று வருபவர் ஒரு குளப்பவாதி அவர் யாழில் மட்டுமல்ல வேறு தளங்களிலும் இப்படியான விழையாட்டைதான் செய்கிறார் அதைவிடஅவரை பற்றி இன்னமும் சொல்லலாம் ஆனால் அவை பின்னர் அவலத்தில் வரும் எனது கருத்துகள் எப்படி மாயமானது என்பதே எனக்கு இப்போ தெரிய வேண்டும்
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
களத்தை தாக்கியவர்கள் களத்தில் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள் என்ற கூற்றை சாத்தியார் கூறியூள்ளார்---------------------------சாத்திரியார் அவர்கட்கு தாழ்மையான வேண்டுகோள் ஒன்று. யாரென்று தெளிவுபடத்தவண்டும் அல்லாவிடின் ஒருவித அச்சஉணர்வுடன் தான் கருத்தாடா வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிருக்கிறோம். களத்தில் கருத்துகளால் அடிபட்டு சிறிது ஒருபடி மேல் சென்று கோபித்து அடிபட்டுக்கொண்டாலும் அவர்களுடன் பலகாலம் பழகிய நண்பர்கள் போன்ற உணர்வு தான் இரு்க்கிறது. இந்தவிடயம் பற்றி சாத்திரியார் அவர்கள் தெளிவுபடத்தவேண்டும அல்லது சாத்திரியார் அவர்களின் கூ்ற்றுப்பற்றி கள நிர்வாகம்உனடியாக தெளிவுபடுத்தண்டமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்------------------------------ஸ்ராலின்
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நான் நினைக்கிறேன் மோகன் களத்தில் கூடுதல் கவனமெடுப்பது நல்லது! இங்கு பல மர்மமாகவே நடைபெறுகின்றன.
* கண் இமைக்கும் நேரத்தில் கருத்துக்கள் காணாமல் போகின்றன போய் விடுகின்றன!
* சில சமயங்களில் உரிய காரணங்களெல்லாமல் கருத்துக்கள் எங்கேயாவது கொண்டுபோய் முடக்கப்பட்டு விடுகின்றன!
ஏன்! ஏன்!! ஏன்!!! ........
அதைவிட பல முகமூடிகள் இங்கு உலாவுகின்றன! தேசியத்தலைவனின் படத்தைப் போட்டு இவர் யாரென்று கேட்பவரும்??? உண்மைச் செய்திகள் தருகின்றோம் எனும் பெயரில் வெட்டி ஒட்டி திரிபவர்களும்(இவர்கள் முன்பு "ஈ, இலையான், கராட்டி, ..." என்பவற்றிலிருந்தும் வெட்டியொட்டியவர்களாம்)??? சமாதான குரலோடு இங்கு திரிபவர்களும்??? ........... என்று யாழ் கள வளர்ச்சியில்???? அக்கறையுடைய ஒரு கும்பலே இங்கு உலாவுகின்றது!
....
" "
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
veenanavan Wrote:Mathan Wrote:நிலவனின் கருத்துகளில் நேற்று திடீர் மாற்றம் தென்பட்டது. அவர் வழமையாக எழுதுவது போல் அன்றி வித்தியாசமாக இருந்தது. நேற்று அவர் இணைத்த செய்திகள்/கருத்துக்கள் உடனுக்குடன் தணிக்கை செய்யப்பட்டன. அதன் பின்பு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட நிலவன் தன்னுடைய பாவனை சொல் மற்றும் பழைய மின்னஞ்சல் முகவரிகளை சிலர் களவாடி விட்டதாகவும் அப்படி தான் எழுதவில்லை என்றும் சொன்னார். எது எப்படியோ நிலவன் என்ற பாவனை பெயர் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அப்படி பாவனை சொல் களவாட முடியும?
அவருடைய பாவனை சொல் என்று நான் குறிப்பிட வந்தது Password ஐ அதனை கடவுச்சொல் என்றே நான் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவருடைய மின்னஞ்சலை களவாடி அதன் மூலம் கடவுச்சொல் களவாடப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம். எது எப்படியோ என்ன நடந்தது என்று அவருக்கு தான் தெரிந்திருக்கும். அவர் தன்னுடைய கடவுச்சொல் களவாடப்பட்டுவிட்டது என்றும் அந்த கருத்துகளுக்கு தான் பொறுப்பாளி அல்ல என்றும் கூறினார் அதனையே உங்களுக்கு அறிய தந்துள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சில விடயங்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம். சென்றமுறை குருவி விடயத்தில் பிரைச்சினைகள் ஏற்பட்டபோது சில உறுதி மொழிகள் சில மட்டுறுத்தினர்களால் வழங்கப்பட்டன. அவை இவ்வளவு சீக்கிரம் காற்றில் விடப்படுமென்பதும் தெரிந்த விடயம் தான். மட்டுறுத்தினர்களாய்ப் பார்த்துத் திருந்தினால்த்தான் களம் உருப்படும். திருந்துவார்களா?????????????
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
திருந்தட்டும் பாப்போம். ஆனால் யாழ் இணையத்துக்கு யாழ் இணையத்துக்காலைதான் எதிரியள்.
ஆனால் எனது கருத்து அழிந்ததுதான் மாயமானது. சரி பறவாயில்லை. இனிமேல் சாத்திரி எல்லாக்கரத்தையும் பதிஞ்சு எடுத்திட்டுத்தான் களத்திலை போடுறது.