| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 573 online users. » 0 Member(s) | 571 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,757
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| பேரெழுச்சியுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சென்னை உண்ணாநிலை அ |
|
Posted by: adsharan - 06-28-2005, 07:13 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் இன்று பாரிய உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர்.
சென்னை தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 10.30 மணிக்கு இந்த உண்ணாநிலை அறப்போர் தொடங்கியது.
முதலில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் இந்த உண்ணாநிலை அறப்போருக்கு முன்னிலை வகிக்குமாறு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழின உணர்வாளர் புதுக்கோட்டை பாவாணன் ஆகியோரை கேட்டுக்கொண்டர்.
இன்றைய உண்ணாநிலை அறப்போர் ஏன் நடத்தப்படுகிறது, இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தால் தமிழீழத் தமிழர்களுக்கு ஏற்படப் போகும் துன்ப துயரங்கள் குறித்து சுருக்கமாக ஒரு அறிமுக உரையாற்றிய தொல். திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசனை இப்போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்ற அழைப்பு விடுத்தார்.
உண்ணாநிலை அறப்போரை தொடங்கி வைத்துப் பேசிய பெ. மணியரசன், சிறிலங்காவிற்கு எந்த நாட்டிடமிருந்தும் ஆபத்து இல்லாத சூழ்நிலையில் எதற்காக இந்திய அரசு இராணுவ ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது? ஒட்டுமொத்த தமிழினத்தை அழிப்பதற்காக, முதலில் தமிழீழத் தமிழினத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டுத் தமிழனையும் அழிக்கவே இந்திய-சிறிலங்கா இராணுவ கூட்டுறவு ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவசியம் எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்த இராணுவ ஒப்பந்தங்களுக்கு முன்னதாக இந்திய-சிறிலங்கா இராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு இருநாடுகளும் ஏற்கனவே இராணுவ பரிமாற்றங்களை செய்து கொண்டு இருக்கின்றன என்றும் தெரிவித்த அவர், சிங்களப் பேரினவாதிகளை தமது கட்சி மாநாடுகளில் பங்கேற்க வைத்த இந்திய இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் செயலை வன்மையாகக் கண்டித்தார். இந்தியாவின் இச் செயலால் இலங்கையில் இன்னொரு போர் மூண்டால் தமிழீழக் குடியரசு உருவாவது நிச்சயம் அது இந்தியாவில் தனித்தமிழ்நாடு உருவாக விதை விதைக்கும் என்றும் எச்சரித்தார்.
இயக்குநர் சீமான் பேசுகையில், இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் ஏற்பட்டால் தமிழ்நாடு காஸ்மீராவது தவிர்க்க இயலாதது. நாங்கள் இந்தியாவுடன் இருப்பதா இல்லையா என்பதை இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்த பிரச்சனை மூலம் இந்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
பின்னர் இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இம்முழக்கங்களை தொல். திருமாவளவன் எழுப்ப குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் உரத்து முழக்கமிட்டனர்.
வீரவணக்கம் வீரவணக்கம் ஈழ விடுதலை களத்திலே இன்னுயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம். கைவிடு கைவிடு இந்திய அரசே இந்திய அரசே இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்தைக் கைவிடு. அனுமதியோம் அனுமதியோம் சிங்களவருக்கு ஆதரவாக தமிழருக்கு எதிராக செயல்பட அனுமதியோம் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் விண்ணதிர எழுப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து பேசிய ஓவியர் வீரசந்தானம், தமிழீழத்தில் அனைத்துத் துறைகளும் உருவாக்கப்பட்டு மிகச் சிறந்த நிர்வாகம் அங்கே நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகளில் படிக்கிறோம். தமிழீழம் என்பது அங்கீகரிக்கப்படாத ஒரு நாடாக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழலில் இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தச் செய்தி எங்கள் நெஞ்சை படபடவைக்கிறது. ஏனென்றால் எங்கள் கண்முன்னே குதறப்பட்ட குட்டிமணி முன்தெரிகிறார்... அதனால் எங்கள் நெஞ்சுபடபடக்கிறது. தமிழர்களே உரத்து குரல்கொடுத்து இந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவோம் என்றார்.
முனைவர் தமிழப்பன் உரையாற்றுகையில், முப்படைகளுடன் வலுவான நிலையில் இருக்கும் தமிழீழ இராணுவத்துடன் இந்தியப் படைகள் மோதும் நிலை ஏற்பட்டால் இந்தியப் படைகள் தோற்பது உறுதி. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்றார்.
தமிழீழத்தில் அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய புதுவை மணிகண்டன், பொறுத்தது போதும் பொங்கியெழு தலைவா என்று தமிழீழத் தமிழர்கள் குரல் கொடுக்கும் அளவிற்கு தலைவரின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் பொறுமையை சோதிப்பவர்களே! விரைவிலேயே தமிழரின் கொடி ஐ.நா. மன்றத்தில் பறக்கும் என்று கூறினார்.
அடுத்துப் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் முன்னாள் தமிழ்நாட்டு அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், சிறிலங்கா அரசின் பேச்சைக் கேட்டு இந்திய ராணுவத்தை அனுப்பி அடிவாங்கியது இந்திய அரசு. அதனால் சூடு, சொரணையுள்ள ஒரு அரசாக இந்திய அரசு இருக்குமானால் மீண்டும் சிறிலங்காவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் அப்படியான ஒப்பந்தம் ஏற்படுகிற போது அதன் கோபம், ஆத்திரம் தமிழ்நாட்டில் எதிரொலிப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும் என்றும் எச்சரித்தார்.
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும் மூத்த பெரியாரியல்வாதியுமான வே. ஆனைமுத்து உரையாற்றுகையில், இந்தப் பிரச்சனையை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழரின் நியாயத்தை எடுத்துச் செல்லும் வகையில் நாம் செயல்பட வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தி தமிழ் மக்களிடத்தில் மீண்டும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு உரையாற்றுகையில் இந்த இராணுவ ஒப்பந்த்தின் பின்னணி குறித்து வரலாற்றுச் செய்திகளோடு விளக்கினார்.
அவர் பேசுகையில்,
முன்னைய ராஜீவ் காலத்து இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை. அந்த ஒப்பந்தங்கள் மூலமே ஆயுதங்களை இவர்கள் பெற முடியும். பிறகு ஏன் புதிய ஒப்பந்தம் என்கிறீர்களா?
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எத்தணை ஆண்டுகாலம் இப்படி போரை நீட்டிக்கப்போகிறீர்கள்? என்று..அதற்குப் பதிலளித்த தலைவர் பிரபாகரன், எமது தலைமுறை மட்டுமல்ல. அடுத்த தலைமுறையும் போராடும். தொடர்ந்து போராடும்...சிங்களவன் களைத்து ஓய்ந்து போய் அவர்கள் தனியரசாகவே இருந்துவிடட்டும் என்கிற நிலை வரை போராட்டம் தொடரும் என்றார்.
ஆம், இப்போது சிங்களவர்கள் களைத்துப்போய் உள்ளார்கள். இனப்பிரச்;சனைக்குத் தீர்வு காண்பதிலே விருப்பம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிறிலங்கா குடியரசுத் தலைவர் சந்திரிகாவோ, சிங்களவர்களே நீங்கள் கவலைப்படாதீர்.. நமக்கு இந்தியா இருக்கிறது. இதோ இராணுவ ஒப்பந்தம் போடப்போகிறோம். ஓய்ந்துவிடாதீர்கள். தொடர்ந்து போராடுங்கள் என்று உற்சாகமூட்டவே இந்த புதிய ஒப்பந்தம் என்றார்.
பாவலர் அறிவுமதி பேசுகையில், ஆழிப்பேரலை சீற்றத்தின் போது முதல் அலை வந்து அள்ளிக்கொண்டு போனது. அடுத்த அலை வருவதற்குள் தமிழ் மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் காப்பாறினார்கள். ஆழிப்பேரலையை காரணமாக வைத்து உதவிகளும் போனது. உளவு அமைப்புகளும் போயின. அவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டு வந்தார்கள். அங்கே தனியரசு ஒன்று நடக்கிறது என்கிற உண்மையை உணர்ந்து கொண்டு வந்தார்கள். மக்களுக்காக போராளிகள் என்ற நிலை மாறி இப்போது மக்களே போராளிகளாக அங்கு இருக்கிறார்கள். 80களில் ஒரு பிரபாகரன் இருந்தார். இப்போது ஒவ்வொரு போராளியும் பிரபாகரனாக, பிராபகரியாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தன்முனைப்புத் தலைவர்கள் இங்கே இருக்க தன்னைப் போலவே அத்தனை தகுதிகளையும் கொண்ட போராளிகளாக அத்தணை பேரையும் தலைவர் பிரபாகரன் வளர்த்தெடுத்து இருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதியை நேசிக்கிறார்கள். உலக அறமன்றங்கள் உண்மையை உச்சரிக்கத் தொடங்கும் போது ஏ...அகிம்சை தேசமே ஆயுதங்களை நீ ஏன் வழங்குகிறாய்... டில்லியின் தென்வளாகத்துக்கு ஒற்றை விழுக்காட்டு பார்ப்பனர்களின் குரல் இப்போது இந்தியக் குரலாக இருக்கிறது. தேர்தல் பாதையில் டில்லி நாடாளுமன்றம் செல்லுகிறவர்கள் இப்போது வாய்திறந்தாக வேண்டும். அவர்கள் இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க வேண்டும். நீங்கள் ஆயுதங்களை எப்படித்தான் குவித்துக் கொடுத்தாலும் அது எங்கள் போராளிகளிடத்தில் போய்த்தான் சேரும். அமெரிக்காக்காரன் என்ன எந்தப் படைக்காரன் வந்தாலும் அரசியல், போர் ஆற்றல் பெற்ற எங்கள் தலைவன் பிரபாகரனிடத்தில் தோற்றுத்தான் போவீர்கள் என்று கூறினார்.
ஓவியர் புகழேந்தி உரையாற்றுகையில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவு களத்தைத் தமிழீழத் தமிழர்கள் மலைபோல் நம்பி இருக்கிறார்கள். தாங்கள் அனாதைகள் ஆக்கிவிடப்பட்டோமோ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. தங்களது பிரச்சனையில் தமிழகம் கை கழுவிட்டதாக கருதுகிறார்கள். அந்த மக்களுக்கு ஆதரவாக நம் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்க வேண்டும். சிங்களவர்களுடனான ஒப்பந்தத்தை நாம் தடுத்தாக வேண்டும் என்றார்.
இறுதியாக நிறைவுரையாற்றிய தொல். திருமாவளவன், தமிழ்நாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்டது, தியாக தீபம் திலீபன் உண்ணாநிலை அறப்போர் ஆகியவற்றை விளக்கிப் பேசினார்.
தமிழ்நாட்டில் தமிழீழத் தமிழர் பற்றி பேசுவதும், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்துப் பேசுவதும் தமிழர்கள் செய்கிற பாரிய குற்றம் என்கிற உணர்ச்சியை தமிழனுக்குள் திணித்துவிட்டார்கள். அதை உடைத்தெடுப்போம். இந்த உண்ணாநிலை அறப்போருடன் நாம் கலைந்துவிடக் கூடாது. இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்தை தடுக்கும் வரை போராட எங்களது அய்யா பழ. நெடுமாறன் அவர்களது வழிகாட்டலை நாங்கள் கோருகிறோம்.
இந்த ஒப்பந்ததின் பாரிய விளைவுகளை எடுத்துரைக்கும் வகையில் இந்திய தலைமை அமைச்சர், இந்திய குடியரசுத் தலைவர் ஆகியோரை தமிழ்நாட்டுத் தமிழர்கள் குழு நேரில் சந்திப்பது போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளை அய்யா பழ.நெடுமாறனின் வழிகாட்டுதலோடு மேற்கொள்வோம் என்று கூறினார்.
உண்ணாநிலை அறப்போரை மாலை 6.00 மணிக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மருத்துவர் நா.சேதுரமான், பழ.நெடுமாறனுக்கு பழச்சாறு அளித்து முடித்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சிந்தனையாளர் பேரவையின் சா. சந்திரேசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் இராசேந்திர சோழன், தமிழர் தேசிய இயக்கத்தின் அன்புதென்னரசன், மக்கள் பாவலர் இன்குலாப், விடுதலைச் சிறுத்தைகள் இணை பொதுச் செயலாளர் செல்வப்பெருந்தகை, மறுமலர்ச்சி திமுகவின் வழக்கறிஞர் சிவசங்கரன், முகம் மாமணி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தமிழீழத் தேசியத் தலைவரின் சர்வதேச ஊடகவியலாளர் நேர்காணலையொட்டி சென்னை ஆனந்த் திரையரங்கில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பழ. நெடுமாறன் அவர்கள் நடத்திய நிகழ்ச்சிதான் தமிழீழ விடுதலை ஆதரவுக்கான இறுதி நிகழ்ச்சி. அடுத்து பொடா சட்டம் ஏவிவிடப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலை ஆதரவுக் குரல் முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் மீண்டும் நீறுபூத்த நெருப்பாய் இருந்த தமிழ்நாட்டின் உணர்வு வெடித்துக் கிளம்பியுள்ளது என்றால் மிகையில்லை.
தமிழீழத் தனியரசு கட்டமைப்பு குறித்த அனைத்துத் தகவல்களையும் நாளாந்த தமிழீழ நிகழ்வுகளையும் மேடையில் உரையாற்றிய தலைவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். தமிழீழம் மலர்ந்துவிட்டது. அதை ஊடகங்கள் மறைத்துக்கொண்டு இருக்கின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தினார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக வருங்கால தலைமுறையினரே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதும், தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரை உச்சரிக்கப்பட்ட பொழுதெல்லாம் உற்சாகக் குரல் எழுப்பி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
உண்ணாநிலை அறப்போர் நிகழ்விடத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த புத்தகக் கடைகளிலும் தமிழீழ விடுதலை ஆதரவு ஏடுகளும் நூல்களும் நிறையவே விற்பனைக்கு வைக்கப்பட்டன.
உண்ணாநிலை மேடை, அதைச் சுற்றி அமர்ந்திருந்த கூட்டம் வரத்தொடங்கிய அதிகமான கூட்டத்தால் சாலையின் எதிர்ப்புறத்தே கொளுத்தும் வெயிலிலும் நாற்காலிகளில் உட்கார்ந்து இருந்தனர். சாலையின் இருபுறங்களிலும் இந்த உண்ணாநிலை அறப்போர் நடந்ததால் மக்களிடம் இப்பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதில் ஜய்யமில்லை.
பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களும் உண்ணாநிலை அறப்போரை பதிவு செய்துகொண்டனர்
puthinam
|
|
|
| சிறுவன் வயிற்றில் வளர்ந்த கரு |
|
Posted by: SUNDHAL - 06-28-2005, 05:57 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
வங்காள தேசத்தில் 7 வயது சிறுவனுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதாக புகார் செய்தான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவன் வயிற்றுப் பகுதியில் பாதி வளர்ந்த நிலையில் கரு இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அவனது தாயார் முன்பு கருவுற்றபோது இரட்டை குழந்தை களுக்கான 2 கரு உருவாகி அவற்றில் ஒன்று மற்றெhரு கருவுக்குள் நுழைந்தது. முதல் கருதான் இப்போதைய சிறுவன். ஆனால் அவனுள் நுழைந்த கருவும் வளர்ந்து கொண்டே இருந்தது. தலை தவிர மற்ற உறுப்புகள் அந்த கருவில் வளர்ந்து வந்தன. 2 கிலோ எடை வரை வளர்ந்த அந்த கரு இப்போது அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் சிறுவனுக்கு குழந்தை பிறந்துள்ளது என பரவிய வதந்தி கேட்டு மருத்துவமனையில் குவிந்தனர்.
|
|
|
| மதுவை அதிகம் அருந்தும் ஆஸ்திரேலியா |
|
Posted by: SUNDHAL - 06-28-2005, 05:55 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
ஆஸ்திரேலியா நாட்டினர் பொதுவாக பீ;ர் மதுவைத்தான் அதிகம் விரும்பி குடிப்பார்கள் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்;தில் சர்வேயில் அவர்கள் பீர் மதுவை விட அதிக போதை தரும் ஒயின் மற்றும் ஸ்பிhpட் மது வகைகளை அதிகம் அருந்துவது தொpய வந்துள்ளது. இதற்குக் காரணம் ஒயின் மது இப்போது ஆஸ்திரேலியாவில் மிக தாராளமாகக் கிடைக்கிறது. மேலும் ஸ்பிhpட் வகை மது பானங்களும் அங்கு அதிக அளவில் கிடைக்கிறது. அங்கு வயதான வர்கள் நீரை விட ஒயின் வகைகளை இப்போது அதிகம் விரும்பத் தொடங்கி உள்ளனர். இளைஞர்களும் ஸ்பிhpட் வகைகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுகின்றனர். ஆனாலும் அமொpக்கர்கள், நியூசிலாந்துக்காரர்கள், பினலாந்து, ஸ்பெயின், கனடா மற்றும் டச்சு நாட்டுக்காரர்களை விட ஆஸ்திரேலியர்கள் தான் அதிக அளவில் பீர் அருந்து கிறhர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியர் களை விட பிhpட்டன், அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திhpயா நாட்டினர் கூடுதலாக பீர் அருந்துகிறhர்கள்.
|
|
|
| நெஞ்சம் மறக்குமா |
|
Posted by: தூயா - 06-28-2005, 05:03 PM - Forum: தமிழீழம்
- Replies (28)
|
 |
எம் தமிழீழ எழுச்சிபாடல் வரிகளை இங்கே எழுதலாம். அந்த பாடலின் வரலாறையும் மறவாமல் தெரிந்தால் எழுதுங்கள்.
முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
நெஞ்சம் மறக்குமா * 3
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை நெஞ்சம் மறக்குமா
குமரப்பா
புலேந்தி
அப்துல்லா
ரகு
நளன்
பழனி
மிரேஸ்
ரெஜினால்
தவக்குமார்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்...
எங்கள் தலைவர்கள்
எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா
கண்கள் மூடி
எங்கள் புலிகள் மாண்ட
கதையை சொல்லவா?
தங்க தமிழ் ஈழ விடுலைகாண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள, இந்திய அரசின் சதியால்
நஞ்சை குடித்தாரே
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...
ஈழதமிழன் தமிழீழ கடலில்
போனால் பிடிப்பானாம்
இந்திய உதவி கொண்டே
தமிழனின் வாழ்வை முடிப்பானாம்
ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே
ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே
வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...
|
|
|
| அறிவியல் ஆயிரம் செய்யும் |
|
Posted by: Mathan - 06-28-2005, 03:41 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
அறிவியல் ஆயிரம் செய்யும்
பொதுவாக மனித இனத்துக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு உண்டு. நாம் எவ்வாறு உருவானோம், எப்படி உருவானோம் என்பதைப் பல்லாயிரம் ஆண்டுகளாகவே அறிய முயன்று கொண்டே இருக்கிறது. மனிதத் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் இன்றைக்கும் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை அறிவியற் சிந்தனைகள் வந்துபோதும் கூட அறிவியலாளர் டார்வினின் தத்துவம் தான் காலம் கடந்து நிற்கிறது.
அந்த மனிதத் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும், நமது மூத்த பெற்றோர் யார் என்பதையும் இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலத்தின் தொடக்கம் நிகழ்ந்ததாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இன்றைக்கு உலகம் முழுவதும் விரிந்து பரவியுள்ள 600 கோடி மனிதக் கூட்டத்திற்கு ஆதிப் பெற்றோர் யார் என்பதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.
காட்டு விலங்குகளைப் போராடி வீழ்த்தி, அவற்றைக் கையால் கிழித்து அப்படியே சாப்பிட்டு பேச்சு வழக்கு சிறிதும் இல்லாமல், ஊளையிட்டுக் கொண்டே, கருமை நிறத் தோலுடன் பலம் கொண்ட மதயானையின் திடத்தோடு ஆபிரிக்கா காடுகளில் அலைந்து திரிந்தவள்தான் நமது மூத்த தாய். இற்றைத் தலைமுறையிலிருந்து சரியாக பத்தாயிரமாவது தலைமுறையைச் சேர்ந்தவள்தான் இந்தக் கறுப்பினப் பெண். எளிய முறையில் சொல்வதானால் இவள் நமக்கெல்லாம் `பெரும் பாட்டி'.
"இன்று உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், தனித்தனியாய் உருவானவை என்ற கார்ல்டன் கூன் என்பாரின் கூற்றை, தற்போதைய மரபணுத் தொழில் நுட்பம் தகர்த்து நொறுக்கியிருக்கிறது. மனித உடலிலுள்ள செல்களைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். அச்செல்லின் உட்கருவிலுள்ள குரோமோசோம்கள், அதற்கு உள்ளே இருக்கின்ற மரபணுக்கள் என்று நமது உடல், பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது செல்களின் மரபணுக்களில் இருக்கின்ற டி.என்.ஏ. மூலக்கூறுதான் நமது ஆதித் தாய் யார் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
நமது உடலின் செல்லில் இருக்கின்ற மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ.தான் நமது நிறம் கை கால் அளவு, முக அமைப்பு இன்னபிறவற்றைத் தீர்மானிக்கிறது. இந்த டி.என்.ஏ.மூலக்கூறை நமது தாய் தந்தை இருவரும் நமக்கு வழங்குகின்றனர். ஆனால் செல்லின் உட் பகுதியில் உள்ள சைட்டோபிளாசத்தில் மைட்டோகாண்டிரியா என்றழைக்கப்படுகின்ற பகுதியில் மற்றொரு டி.என்.ஏ. காணப்படுகிறது. இதனை மை.டி.என்.ஏ. என்றழைக்கின்றனர்.
இந்த மை.டி.என்.ஏ.வை. தாயார் மட்டுமே வழங்க முடியும். இதில் தான் நமது ஆதித் தாய் குறித்த செய்தி பொதிந்து கிடக்கிறது. இன்று உலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்குள்ளும் காணப்படும் இந்த மை.டி.என்.ஏ.மூலக்கூறை வைத்துத்தான் `அவ்வா', "அவ்வை", `ஈவ்' என்று அழைக்கப்படுகின்ற, `ஏவாளைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வியத்தகு அறிவியல் விந்தை, மரபணுத் தொழில்நுட்பப் புரட்சியால் விளைந்த சாதனை.
இந்த உண்மையை அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஸ்டோன்கிங், கேன், வில்சன்மார்க் ஆகியோர் கண்டறிந்து உலகிற்குப் பறைசாற்றியுள்ளனர். சரி, நமது மூத்த தாயைக் கண்டுபிடித்தவர்கள், தந்தையைக் கண்டுபிடித்துவிட்டார்களா? என்ற கேள்வி எழும். நேர்மையான கேள்வி.
நமது ஒவ்வொரு உடலிலும் 23 சோடி குரோமோசோம்கள் உள்ளன. கடைசியாக உள்ள ஒரு சோடி குரோமோசோம்கள் பெண்ணுக்கு XY என்றும், ஆணுக்கு XX என்றும் இருக்கும். இவைதான் ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும். பால் நிர்ணயக் குரோமோசோம்கள் ஆணுக்கென்றே சிறப்பாக அமைந்துள்ள வகுரோமோசோம், தலைமுறை தலைமுறையாக எந்தவித மாற்றமுமில்லாமல் இருந்து வருகிறது. டாக்டர் லுகோட் என்ற அறிவியலாளர், பல நாடுகளில் வாழும் ஆண்களின் ஙு குரோமோசோம்களிலுள்ள டி.என். ஏ.வை ஆய்ந்து பார்த்தார். இந்த டி.என்.ஏ. ஆபிரிக்காவில் வாழும் `அகா' என்ற பழங்குடியினரோடு ஒத்துப்போகிறது என்ற உண்மையைக் கண்டறிந்துள்ளார். அந்த டி.என்.ஏ.வின் வயதைக் கணக்கிட்டுப் பார்த்ததில் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தனது ஆராய்ச்சியின் முடிவாக வெளியிட்டுள்ளார். ஆக மனித குலத்தின் தொடக்கம் ஆப்பிரிக்காவில்தான் நிகழ்ந்தது என்பதும், நமது ஆதிப் பெற்றோர்கள் கறுப்பினத்தவரைச் சேர்ந்தவர்கள் என்பதும், புதுமையான செய்தி.
பல்வேறு இன, மொழி, சாதி, மத வேறுபாடுகளோடு பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனித இனம் `நாமெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள்' என்பதை ஏதோ இன்னும் உணர மறுக்கிறது. இந்த உண்மையை நாம் உணர மறுப்பதால்தான் இட ஒதுக்கீடு கேட்டு பெண்கள் காலங்காலமாய்ப் போராட வேண்டிய அவலம். இன்னும் சில ஆண்டுகளில் உலகம் மற்றொரு போராட்டத்திற்குத் தயாராகப் போகிறது. "புரதம் வேண்டும் புரதம் வேண்டும்" என்ற கலகக்குரல் இனி உலக நாடுகளில் எழக்கூடும். அந்த அளவிற்கு குழந்தைகள் உட்பட அனைவரும் புரதப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியிருக்கிறது.
நமது அன்றாட உணவில் கிடைக்கும் புரதசத்துக் குறைவால் உடல் வளர்ச்சியும், மூளைவளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்திய நாட்டில் மட்டும் 70 விழுக்காடு குழந்தைகள் புரதச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இறைச்சியில் அதிக அளவு புரதம் கிடைத்தாலும், அதை உண்ணுகின்ற அளவு மிகக் குறைவாகவே உள்ளது. பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றில் அதிகளவு புரதமிருந்தாலும் பெரும்பாலான மக்கள் இவற்றை உண்ண முடிவதில்லை. காரணம் விளைச்சல் குறைவு அல்லது விலை அதிகம். பயறு வகைகளும் மிகக் குறைந்த அளவே உற்பத்தியாகின்றன.
தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவும் வழங்க வேண்டும். அதேசமயத்தில் பற்றாக்குறையின்றி புரதசத்தும் அளிக்க வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? ஜப்பான் நாடு நமக்கு வழிகாட்டுகிறது. தங்கள் நாட்டின் புரதப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்நாடு 62 ஆயிரம் ஹெக்டேர் கடல் பரப்பில் தற்போது கடல்பாசிகளைப் பயிர் செய்து வருகிறது.
கடல்பாசி இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் தரத்திலும், அளவிலும், நிறைந்த புரதச் சத்துகளைக் கொண்டவை. இறைச்சி உணவிற்கு ஒப்பான புரதம் இந்தப் பாசித் தாவரத்தில் இருக்கின்ற காரணத்தால் ஜப்பானியர்களின் தினசரி உணவு வகைகளில் இதுவும் ஒன்று.
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரை இருப்பதால் கடலில் இந்தப் பாசியைப் பயிர் செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இனி வருங்காலத்தில் நமது உணவுத் தேவைக்கு போதுமான வளமாக கடல்பாசிதான் இருக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகளை நாம் இப்போதிருந்தே தொடங்கினால் எதிர்காலத் தலைமுறையின் உணவுப் பற்றாக்குறையை மட்டுமல்லாமல், புரதப் பற்றாக்குறையையும் போக்க முடியும்.
அருகே அண்ட முடியாத சூரியனைப் படம்பிடித்து, காந்தப்புயல் உட்பட அங்கே நிகழும் அனைத்து மாற்றங்களையும் துல்லியமாகத் தெரிவிக்கிறது நமது அறிவியல். கோள்களையெல்லாம் உருவாக்கும் ஒளிமயமான நெபுலாவைக்கூட படம்பிடிக்கும் அளவிற்கு, மகத்தான வளர்ச்சியை பெற்றுள்ள மனித இனம், பல்வேறு மூடநம்பிக்கைகளில் தன்னை போர்த்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
பகுத்தறிவைத் தரக்கூடிய அறிவியலறிவுதான் இந்த உலகத்தின் இப்போதைய தேவை. அணுவில் தொடங்கி அண்டவெளி வரை எங்கும் நிறைந்துள்ள அறிவியல், ஆக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும். மக்களின் நலனையும், பூவுலகின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். `எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு, இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.' அந்த நிலை அறிவியலால் மட்டுமே உருவாக முடியும்.
Thinakural
|
|
|
| நயன்தாரா |
|
Posted by: Mathan - 06-28-2005, 03:35 PM - Forum: சினிமா
- Replies (25)
|
 |
நயன்தாரா!
<img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/nayan-400a.jpg' border='0' alt='user posted image'>
ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம்.
ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார்.
இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு' படத்தில் "முத்தப் புரட்சி' உள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார்.
இது தவிர சிம்புவின் "வல்லவன்', "கிளாமர் சேட்டைக்காரன்' எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போகிறார்.
இப்படியாக கவர்ச்சி வலம் வந்து கொண்டுள்ள நயன்தாரா, விஜய்யின் "சிவகாசி' படத்தில் "கிளாமர்தாரா'வாக அவதாரம் பூண்டுள்ளாராம். இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. மாறாக சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்யப் போகிறாராம்.
முன்னணி நாயகி ஒருவரை ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட சிவகாசி யூனிட் யோசித் வந்தது. யாரைப் போட்டுத் தாக்கலாம் என யோசித்தபோது அந்த யோசனையில் வந்து நயன்தாரா விழுந்துள்ளார்.
அணுகி கேட்டபோது, உடனே ஓ.கே. என்று சொல்லி யூனிட்டை குஷிப்படுத்தியுள்ளார். கொஞ்சம் கிளாமர் கூடுதலாக இருக்கும், பரவாயில்லீங்களா என்று மெதுவாக கேட்டுள்ளனர். அதனாலென்ன ஒத்தப் பாட்டுன்னாலே அப்படித்தானே இருக்கம் என்று மிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார் நயன்.
போதாதா! உடனே பெரிய தொகையை சம்பளமாக பேசி புக் செய்து விட்டார்கள். நாயகியாக நடிப்பதற்கு வாங்குவதற்கு ஈடான சம்பளத்தை நயன்தாரா இந்தப் பாட்டுக்காக பெற்றுள்ளாராம்.
விஜய்யுடன் ஆட வேண்டும் என்பதால், அவ்வப்போது டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறாராம் நயன்தாரா. இந்தப் பாட்டுக்குப் பின் சிம்ரன் இடத்தை நிச்சயமாக பிடித்து பீல்டில் இருக்கும் "பீலா நாயகி'களை வீட்டுக்கு அனுப்புவேன் பாருங்கோ என்று இப்போதே பெருமிதமாக கூறி வருகிறாராம் நயன்தாரா.
thats tamil
|
|
|
| ஜே.வி.பியின் புதிய கூட்டமைப்பில் இணைய 4 கட்சிகள் முடிவு |
|
Posted by: MUGATHTHAR - 06-28-2005, 02:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஆழிப்பேரலை நிவாரண சபைக்கு எதிராக ஜே.வி.பியுடன் இணைந்து புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்த நான்கு முஸ்லிம் கட்சிகள் நேற்று திங்கட்கிழமை முடிவு செய்துள்ளன.
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜே.வி.பியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கஇ பொதுச் செயலாளர் டில்வின் சில்வாஇ பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோருக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நேற்று நுகேகொடையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஜனநாயக ஐக்கிய கூட்டணியைச் சேர்ந்த ரசீர் அகமட்இ எம்.ஐ.உதுமா லெப்பைஇ மாகாண சபை உறுப்பினர் ஏ.எப்.எம். முஸம்மில்இ ஐக்கிய முஸ்லிம் மக்கள் முன்னணியின் நாசர் மௌலானாஇ என். நவுஸர்இ சிறிலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் மற்றும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரே ஜே.வி.பி பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
இதற்கமைய எதிர்காலத்தில் பொதுக்கட்டமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை எல்லோரும் இணைந்து மேற்கொள்ளவும்இ பொதுக்கட்டமைப்பிற்கெதிராக மக்கள் கருத்துக்களை கட்டியெழுப்பவும் இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
எதிர்க்காலத்தில் ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் இந்த புதிய கூட்டணியில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் தெரிவித்துள்ளார்
புதினம்
|
|
|
| ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே விவாகரத்து |
|
Posted by: தூயா - 06-28-2005, 12:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே விவாகரத்து
சிட்னி ஜூன் 27:& ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தமது 10 ஆண்டுகால மணவாழ்க்கையை முறித்துக் கொண்டுள்ளார்.
ஷேன் வார்னே மீது புதிதாக எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுகளையடுத்து வார்னேவும், அவரது மனைவி சிமோனும் ஒருவரையருவர் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றில் வார்னேவின் புதிய செக்ஸ் குற்றச்சாட்டுகளைக் குறித்து ஒரு கட்டுரை வெளிவருவதையடுத்து இருவரும் விவாகரத்து முடிவு எடுத்ததாக ஆஸ்திரேலியப் பத்திரிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளன.
ÔÔநாங்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறோம் என்பதை உங்களுக்கு வருத்ததுடன் தெரிவிக்கிறேன். எனினும் நானும், சிமோனும் நல்ல நண்பர்களாக எங்களது மூன்று குழந்தைகளுக்காகத் தொடர்வோம்ÔÔ என்று ஷேன் வார்னே தெரிவித்தார்.
ஏற்கனவே கிரிக்கெட் உலகின் கெட்ட பையன் என்று பெயரெடுத்துள்ள ஷேன் வார்னே மீது நர்ஸிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசியது, கிரிக்கெட் விளையாடும்போது போதை மருந்து உபயோகித்ததால் 12 மாதம் கிரிக்கெட் விளையாடத் தடை என்று வரிசையாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- &பாலாஜி
vikatan
|
|
|
|