Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 572 online users.
» 0 Member(s) | 570 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,757
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  இனியாவது புரியும்!..
Posted by: hari - 06-28-2005, 11:44 AM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

<b>இனியாவது புரியும்!..</b>


எதிரே,தெரி கிறதே-அது எமதாருயிர் ஈழம்!
.............எதுநேரினும் அடைவோம்-அது எமைத்தாங்கிய ஞாலம்!
மகிழ்வாய்த் தமிழ்க் குலம்வாழ்ந்திட மலர்கின்றது காலம்!
............. மண்மீதினில் இனிகேட்பது ஜெயபேரிகை மேளம்!...

இனிதாம்எம(து) இனம்வாழ்ந்திட ஒருதாயகம் வேண்டும்!
............. இனி, தாழ்வது நடவாதென முடிவானது யாண்டும்!
மனிதார்த்தமும் செயல்வீரமும் மலைமுகடுகள் தாண்டும்!
............. மணித்தமிழ்மகன் நிமிர்நன்னடை பயில்வான்,இனி மீண்டும்!...

தலைநிமிர்வுகொள் தமிழா!ஒரு தனிக்காவியம் தீட்டு!
............. தாரணிதனில் போரணிபுகழ் நமதென்பதைக் காட்டு!
விலைதருவது பொன்னுயிரெனும் உண்மையை நிலைநாட்டு!
............. விளைவது சுதந்திரமென்பதைப் பிழையற நினைவூட்டு!

கருவானது கருகும்படி தமிழ்மானிடர் அழுது,
............. கடுவெந்தழல் படுவேள்வியில் விழுதூன்றிய பொழுது,
உருவானது திருநாடென ஒருவாசகம் எழுது:
............. ஒளிஞாயிறு நமதாவதை உணர்வால்தினம் தொழுது!

உலகானது பலகாலமும் இமைமூடிய துண்டு:
............. உரிமைக்குரல் விரும்பாதவர் செவிமூடிய துண்டு:
இளகாதவன் புலைகாடையன் இழிதாண்டவம் கண்டு,
............. எமைவையகம் வரவேற்றது நடுமாண்மதி கொண்டு!

செந்நீரொடு கண்ணீர்த்துளி தெளிதேசியம் புகலும்:
............. சிங்களவனின் வெங்களவினை எங்களைஇனி அகலும்!
பொன்னீழமும் நன்னேயமும் பூங்காற்றொடு துயிலும்!
............. புதுப்பாட்டொலி தரும்,வைகறை தொறும்-சோலையின் குயிலும்!

திருமண்ணொடு விதையாகிய அடலேறுகள் எண்ணம்
............. திடமாயினி நிறைவேறிடும் தமிழோர்விழி முன்னம்!
தருமம்செறி சபையோர்திருச் சுடரேந்திய வண்ணம்
............. தமிழீழமும் திருஊர்வலம் வருவாள்:இது திண்ணம்!

பணியாதது தமிழ்வேங்கையர் படையென்பது தெரியும்:
............. பகையாளனின் சதிவேலைகள் அடிவேரொடு சரியும்:
தணியாதெனும் துணிவானது கடல்தாண்டியும் விரியும்:
............. தனியாவது தமிழீழமென்(று) இனியாவது புரியும்!...

தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )

Print this item

  பருத்தித்துறை வடை
Posted by: stalin - 06-28-2005, 11:05 AM - Forum: சமையல் - Replies (9)

பருத்தித்துறை வடை செய்முறை யாருக்கும் தெரியுமா... பலபாகங்களில் செய்யும் வடைக்கும் பருத்தித்துறை வடைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பருத்தித்துறை அப்பம் தோசை செய்முறைமையும் மற்றைய பகுதிகளில் செய்பவர்களிலும் வித்தியாசமானது.பருத்திதுறை வெள்ளையப்பத்தின் சுவை அலாதியானது . காலம் காலமாக அப்பகுதி மக்கள் தொழில் மூறை ரகசியமாய் பாதுகாத்து வந்தார்கள். ஆனால் இன்று பலபேருக்கு தெரியுமென்று நினைக்கிறேன்...நாவலியூர் சோமசுந்தரப்புலவர் கூட பருத்தித்துறை வடையை புகழ்ந்து பாடலில் எழுதியுள்ளார்-------------------------------------------இந்த செய்மூறை விளக்கம் தெரிந்தவர்கள் யாராவாது கூறுவீர்களா------------------------------------------------------------------------ஸ்ராலின்

Print this item

  தமிழர் கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது
Posted by: SUNDHAL - 06-28-2005, 05:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கையில் தமிழர் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்து வருவதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொழும்புப் பல்கலைக்கழக கல்விப் பிரிவின் தேசிய கல்வி மதிப்பீட்டு ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய் வின் முடிவுகள் இத்தகவலைச் சுட்டி நிற்கின்றன.
உலக வங்கி அறிக்கையிலும் இது சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தொடர்ந்து வந்த போர்ச்சூழல், இடம் பெயர்வு, கல்வியில் சமவாய்;ப்பின்மை, பாரபட்சம், இடைவிலகல் போன்ற இன் னோரன்ன காரணங்கள் கூறப்படுகின்றன.
தமிழ் மொழிமூல நடைமுறையில் தமி ழர்களின் வீதம் குறைவடைந்துசெல்வதா கவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கல்வியமைச்சில் பெருந்தோட்டப் பாட சாலைகள் பிரிவு, முஸ்லிம் பாடசாலைகள் பிரிவு என்று இருப்பது போன்று தமிழ்ப் பாடசாலைகளுக்கென்று ஒரு பிரிவு இது வரை ஏற்படுத்தப்படாதிருப்பது தமிழ்க் கல்வி உலகில் அதிர்ச்சிக்குள்ளான விடயமே.
தமிழ்க் கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டுமென தமிழர் ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியாக கோரிவருவது குறிப்பிடத் தக்கது.
Thanks:www.uthayan.com

Print this item

  மகளை கற்பழித்தவனை உயிருடன் கொளுத்தினாள்
Posted by: SUNDHAL - 06-28-2005, 04:26 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

ஸ்பெயின் நாட்டில் பெனிஜு ஜார் நகரைச் சேர்ந்தவன் அன்டோனியோ காஸ்மே வெலாஸ்கோ. இவன் அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண்ணை கற்பழித்தான். இதற்காக கைது செய்யப்பட்ட அவனுக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயிலில் இருந்து பரோலில் வெளிவந்த அவன். கற்பழிக்கப் பட்ட பெண்ணின் தாயாரை ரோட்டில் பார்த்தான். ``உன் மகள் எப்படி இருக்கிறாள்'' என்று கேட்டு கேலி செய்தான். இதனால் ஆத்திரம் அடைந் தாள். அவன் மதுபான விடுதிக் குள் நுழைந்தான். வீட்டுக்குச் சென்று மண்எண்ணை பாட் டிலை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணும் மதுபான விடுதிக்குள் நுழைந்தாள். அவன் மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தாள். இதில் காயம் அடைந்த அவன் இறந்து போனான். அவள் கைது செய் யப்பட்டாள். அவள் கோர்ட் டில் ஆஜர் செய்யப்பட்ட போது அவளைக் காண பெரும் கூட் டம் கூடி விட்டது. கூட்டத்தினர் அவளைப் பாராட்டினர். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  dv
Posted by: விது - 06-28-2005, 04:21 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (25)

¿ñÀ÷¸ðÌ Å½ì¸õ ±É즸¡Õ ¯¾Å¢ §¾¨Å ¸ÁáŢøþÕóÐ dv ø ¯ûÇ¢Èì¸õ ¦ºöÔõ§À¡Ð ´Ä¢¨Â ¾ÎôÀÐ ±ôÀÊ ²ý¦¿É¢ø ±ÉÐ ¦Áý¦À¡ÕÄ¢ø ´Ä¢ì¸Ä¨Å ¦ºöÔõ§À¡Ð þÃñÎõ §º÷óÐ ÅÕ¸¢ÈÐ ¾Â× ¦ºöÐ ¯¾×í¸û.

Print this item

  சிறுவர்களுக்கான மென்பொருட்கள் இரண்டு
Posted by: hari - 06-28-2005, 03:07 AM - Forum: கணினி - Replies (33)

அருமையான சிறுவர்களுக்கான இரண்டு மென்பொருட்களை எனது இணையத்தில் தரவேற்றி இணைத்துள்ளேன், விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்து பார்க்கவும்!
ஒன்று,(talk it )கதைக்கும் மென்பொருள் இதில் நாங்கள் விரும்பிய சொல்லையோ, வசனத்தையோ கொடுத்து எங்களுக்கு விரும்பிய குரலில் (ஆண்,பெண்,குழந்தை,முதியோர்...) ஒலிக்கசெய்யமுடியும், சிறிய நல்ல பொழுதுபோக்கு மென்பொருள், ஆங்கில உச்சரிப்பும் இதன்மூலம் கற்கமுடியும்!

<img src='http://img294.echo.cx/img294/9136/talkit16zz.gif' border='0' alt='user posted image'>

இரண்டு, பல இசைக்கருவிகளை வாசிக்க கூடிய ஒரு இசை வென்பொருள், வயலின், பியானோ,புல்லாங்குழல்,கிட்டார்...போன்ற பல இசைக்கருவிகள். நல்ல பொழுதுபோக்கு வென்பொருள்,
<img src='http://img297.echo.cx/img297/2576/hari9hv.png' border='0' alt='user posted image'>


இரண்டும் கணனியில் பதியவேண்டியதில்லை, தரவிறக்கம் செய்து நேரடியாக பயன்படுத்தலாம்!
http://www.freewebs.com/harirajendran/downloads.htm
www.puthuvai.tk

Print this item

  உண்மையா..?
Posted by: tamilini - 06-27-2005, 04:03 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

[Image: my.php?image=picture0017ut.jpg]

இந்த படத்தில இருப்பது ஒரு 10 வயசு குழந்தையாம். சோமாலியாவில் தாய் குர் ஆன் படிச்சிட்டிருக்கையில் ரீவீயைப்போட்டு சத்தமாய் பாத்திட்டிரு இருக்கயைில அதை குறைக்க சொல்லி தாய் கேக்க செய்யாமல் குர் ஆனை காலால் தட்டியதால் அந்த குழந்தை இப்படி உருமாறியதாம். உண்மையா. யாரும் கேள்விப்பட்டீர்களா..?? யாருக்கும் சோமாலி தெரிந்தால் வாசிச்சு சொல்லுங்கள்.

www.dayniile.com

Print this item

  கொள்ளையடித்த இடத்தில் வேலை கேட்ட கொள்ளைக்காரன்
Posted by: SUNDHAL - 06-27-2005, 01:36 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

அமெரிக்காவில் சூதாட்டத்துக்குப் பேர்போன லாஸ்வேகாஸ் நகரைச் சேர்ந்தவன் அலெஜாண்ட்ரோ மார்ட்டினாஸ். 23 வயதான இவன் ஒரு பீசா விற்கும் ஓட்டலுக்குச் சென்றான். பீசாவுக்கு ஆர்டர் கொடுத்தான். அது வருவதற்குள் வேலை கேட்டு விண்ணப்பம் ஒன்றை நிரப்பினான். அதைக் கொடுப்பதற்கு முன்பு துப்பாக்கியை காட்டி கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைக் கேட்டான். ஓட்டல் ஊழியரும் கல்லாவில் இருந்த 9 ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு அவன் ஓடிவிட்டான். வேலை கேட்க அவன் எழுதிய விண்ணப்பம் அவன் உட்கார்ந்திருந்த மேஜையிலேயே இருந்தது. அதை வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்.

சரியான கெட்டிகாரன் என்ன <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  பொதுகட்டமைப்பை இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன?
Posted by: adithadi - 06-27-2005, 01:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

விடுதலைப்புலிகளின் உண்மையான, துடிப்பான செயல்லாக்கம் காரணத்தால் இஸ்லாமிய தமிழர்கள் புலிகளை ஆதரிவித்து விடுவார்கள் என்னும் பயம் காரணமா?

அரசியல் ஆதாயம் தேடும் இனவாத கட்சிகளை மக்கள் அடிஉதை கொடுத்து வீட்டிற்கு அனுப்புவார்கள்.

Print this item

  ஆந்திர ஜெயலலிதா ஆக ஆசையா?
Posted by: தூயா - 06-27-2005, 12:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஆந்திர ஜெயலலிதா ஆக ஆசையா?



அரசியலில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் விஜயசாந்தி!

அதிரடி ஆக்ஷன் ஹீரோயின்,தல்லி தெலுங்கானா என தனி ஆவர்த்தனம் பண்ணக் கிளம்ப... ஆந்திரத்தின் அத்தனை அரசியல்வாதிகளும் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.


ஹைதராபாத்தின் புறநகரான உப்பல் குறுக்குச் சாலையில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அத்தனை உயரத்தில் நின்றபடி ஜெய் தெலுங்கானா! என கோஷம் போட ஏரியாவே அலறுகிறது... ஜெய் ஜெய் தெலுங்கானா!

ஆமாம், தெலுங்கானா எனத் தனி மாநிலம் கேட்கிறார் விஜயசாந்தி!


கட்கேசர் என்ற ஊரில், விஜயசாந்தியைப் பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம். என் உயிர் போனாலும் தனித் தெலுங்கானா கொள்கையைத் தாங்கிப் பிடிப்பேன். உங்களின் துணையோடு தனி மாநிலத்தை அமைத்தே தீருவேன்! என்கிறார் ஆவேசமான குரலில். கூட்டத்தில் விசில் பறக்கிறது. ஏழெட்டு டஜன் கார்கள் பின்தொடர, பயணம் தொடர்கிறது. ரொம்பவே உணர்ச்சிப் பிழம்பாக இருந்த விஜயசாந்தியிடம் பேசுகிறோம்...
தெலுங்கானா என்பது ஆந்திராவின் சுதந்திரப் போராட்டம்! தனி மாநிலம் கேட்கிறோம் எனபதை ஏதோ பிரிவினைப் பிரச்னை என்று பார்க்காதீர்கள். இது இந்த மண்ணின் ஜீவாதாரப் பிரச்னை. சினிமாவில் பிஸியாக இருந்த சமயத்திலேயே, தனித் தெலுங்கானாவுக்காகப் போராடுவது என்று முடிவெடுத்தேன். ஆனால், ஒரு சாதாரண நடிகையால் அவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்த முடியுமா? எனவே, முதல் கட்டமாக என் ரசிகர்கள் படையை யுவசேனா என்ற பெயரில் ஆரம்பித்தேன். பிறகு, பி.ஜே.பி&யில் சேர்ந்தேன். பெரிய பதவிகளைக் கொடுத்தார்கள். ஆனால், என் கனவான தனித் தெலுங்கானாவை மட்டும் கண்டுகொள்ளவில்லை. இனியும் காலம் தாழ்த்துவது நான் பிறந்த தெலுங்கானாவுக்குச் செய்யும் துரோகம் என்று முடிவு செய்து, இதோ புறப்பட்டுவிட்டேன், தல்லி தெலுங்கானா என்ற அமைப்பின் தலைவி யாக! என்கிறார் எமோஷனலாக.


ÔÔசென்னையில் பிறந்த நீங்கள் எப்படித் தனித் தெலுங்கானாவுக்காக ஆந்திரத்தில் போராட முடியும்?ÕÕ

நான் தெலுங்கானா மகள்தான். நான் பிறந்தது சென்னையாக இருக்க லாம். ஆனால், என் அம்மா வரலட்சுமி பிறந்தது ராமண்ணகூடத்தில்தான். என் தாத்தா சேஷாவதாரம், பாட்டி மானஸாபாய் இருவரும் அந்தக் காலத்தில் ராமண்ணகூடத்தில் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்கள்.

பயத்தில் தவிக்கிற சந்திரபாபு நாயுடுதான் இந்த மாதிரியான கேள்விகளை எல்லாம் எழுப்பிக் கொண்டு இருக்கிறார். அவர்தான் என் முதல் எதிரி. ஏனென்றால் அவர் எங்கள் தெலுங்கானாவின் எதிரி. கடந்த முறை அவர் பி.ஜே.பி|யோடு கூட்டு வைத்திருந்தபோது, தனித் தெலுங்கானா கிடைக்காமல் இருப்பதற்கு வேண்டிய அத்தனை காரியங்களையும் செய்தார். பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய தெலுங்கானா பகுதியில் எண்பது சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள். தெருவைச் சுத்தம் செய்வது, ஓட்டல்களில் மேஜை, நாற்காலிகளைத் துடைப்பது, எடுபிடி களாக, கூலிகளாக என்று அடிமைகளாக வாழ்கிறார்கள். தெலுங்கானாவின் மூன்றே கால் கோடி மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகவும், அவர்களுக்கு சமூக நீதி கிடைக்கவுமே இப்போது நான் களத்தில் இறங்கி உள்ளேன். இதில் என் உயிர் போனாலும் கவலையில்லை. என் லட்சியத்தை அடையாமல் ஓய மாட்டேன் என்கிறார் ஆவேசம் கொப்பளிக்க!


அடுத்து, தெலுங்கானா பகுதியின் முக்கிய நகரமான வாரங்கல் நோக்கி விரைகிறது கார்.

ÔÔஉதாரண முதல்வர் என்று பாராட்டப்பட்டவர் சந்திரபாபு நாயுடு. ஆனால், அவர்தான் உங்கள் முதல் எதிரி என்கிறீர்கள். அவரது ப்ளஸ், மைனஸ் என்ன?ÕÕ

அரசுப் பணத்தில் சுய விளம்பரம் தேடிக்கொள்வது எப்படி என்பதற்கு அவரிடம் ஐடியா கேட்கலாம். பொய்களைக்கூட மக்களிடம் கூசாமல் நிஜம்போல் பேசும் மன தைரியம்தான் அவரது ப்ளஸ் பாயின்ட். ஹைதராபாத் தவிர, ஆந்திராவின் எந்தப் பகுதியையும் கண்டுகொள்ளாமல் கம்ப்யூட்டரே கதி என்று ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக அரசுப் பணத்தில் ஊரை வலம் வந்தவர் அவர்!


|விஜயசாந்தி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே போலீஸ் அதிகாரிகள் குறுக்கிட்டு, ‘‘இனி, நீங்கள் போகப் போகும் பாதை எல்லாம் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. துப்பாக்கி தாங்கிய எங்கள் வீரர்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பார்கள். உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு முக்கியம்’’ என்கிறார்கள்.

ÔÔஆந்திராவில் நக்ஸலைட்டுகளை அடக்கவே முடியாதா?ÕÕ என்கிற நம்மைப் பார்த்து பளிச்செனச் சிரிக்கிறார் விஜயசாந்தி.

‘‘நக்ஸலைட்டுகளை தேசத் துரோகிகள் என்று சொல்லி, என்கௌன்ட்டர்கள் மூலம் பல அப்பாவிகளைக் கொன்று குவிக்கிறது காங்கிரஸ் அரசு. பேச்சுவார்த்தை என்று நக்ஸலைட்டுகளை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அழைத்து விட்டு, இப்போது ‘ஆயுதங்களைக் கீழே போட்டால்தான் பேச்சு வார்த்தை’ என்று முரண்டு பிடிக்கிறார். உண்மையில், பிரச்னை ஆயுதங்கள் அல்ல. பேச்சு வார்த்தை நடத்த மனம் இல்லாததுதான்!

தெலுங்கானாவில் பரவியிருக்கும் நக்ஸலைட்டுகளின் கோரிக்கைகள் என்ன என்பதைச் செவி கொடுத்துக் கேட்பதுதான் அரசின் கடமை. இதை இந்த அரசு செய்யவில்லை. தினம் தினம் தெலுங்கானாவில் வேலை இன்மை, பசி, பட்டினியால் ஒவ்வொருவரும் நக்ஸல்பாதைக்குத் திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது. இது சமூக, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னை. போலீஸை வைத்துக்கொண்டு துப்பாக்கிகள் மூலம் நக்ஸல் பிரச்னையை ஆந்திர அரசு கையாள்கிறது. இதற்குப் பலன் கிடைக்கப் போவதில்லை!’’ என்று விஜயசாந்தி சொல்லி முடிக்க, முலுகு என்ற ஊர் வந்திருந்தது.

ÔÔமக்கள் போராட்டம் மூலம் தனித் தெலுங்கானா என்பது உங்கள் கோஷமாக இருக்கிறது. அப்படியானால், தற்போதைய மத்திய அரசில் மிக முக்கியக் கட்சியாக இருக்கும் தி.மு.க|வின் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உங்கள் கோரிக்கையைச் சொல்வீர்களா?ÕÕ

‘‘தனித் தெலுங்கானா வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏற்கெனவே சந்திரசேகர ராவ் ‘தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி’ என்கிற கட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார். தனித் தெலுங்கானா வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றைக் கருணாநிதியிடம் கொடுத்து, அதற்காக ஆதரவு தரும்படி கேட்டார். ஆனால், கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில் நான் கருணாநிதியைச் சந்திப்பதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது!’’

நாலாபக்கமும் மலைகள் சூழ அத்துவானக் காட்டில் அமைந்திருந்த ஒரு கோயிலில், சாமக்கா என்கிற கிராம தேவதை வீற்றிருக்கிறாள். தெலுங்கானா மக்களுக்கு இஷ்ட தெய்வம் சாமக்கா. ஒரு மணி நேரம் இந்தக் கோயிலில் பிரார்த்தித்த பின்பு, ஊர்வலம் ராமண்ணகூடம் நோக்கிப் புறப்படுகிறது.

ÔÔஆக, ஆந்திரத்து ஜெயலலிதா ஆவதுதான் ஆசையா?ÕÕ என விஜய சாந்தியிடம் கடைசிக் கேள்வியை வீசுகிறோம்.

‘‘எனது அரசியல் ஆசான் அம்மாதான்! அவர் உலக அளவில் அரசியல் செய்யும் தகுதி உடையவர். இந்தியப் பிரதமராகும் எல்லாத் தகுதிகளும் அவருக்கு உண்டு. அவ்வளவு பெரிய தலைவியுடன் என்னை ஒப்பிடுவதே தவறு. அவர் வழியில் என் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தனிப்பெரும் தலைவி யாக உருவெடுப்பார். அப்போது, ஜெயலலிதாவின் தயவு இல்லாமல் யாரும் டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாது. அந்தச் சமயத்தில், அவரைச் சந்தித்து எங்கள் தெலுங்கானா கோரிக்கையை முன்வைப்பேன். அவர் எங்களுக்குக் கண்டிப்பாக உதவுவார்!’’ என்பவர், சற்றுப் பின்னால் திரும்பி,

‘‘அதோ பாருங்கள்... அங்கு ஒரு மலை தெரிகிறதல்லவா? அந்த மலைமீது ஏறிப் பார்த்தாலே, சத்தீஸ்கர் நன்றாகத் தெரியும். எங்களுக்குப் பக்கத்திலேயே புதிதாக ஒரு மாநிலம் உதயமாகியிருக்கிறது.

ஆனால், நேரு காலத்தில் தெலுங்கானாவும் ஆந்திராவும் தனித்தனியாகத்தான் இருந்தன. ‘ரெண்டு மாநில மக்களும் ஒரே மொழி பேசுகிறீர்கள். ரெண்டு பேரும் கணவன்|மனைவியாகச் சேர்ந்து இருங்கள். பிரச்னை ஏதாவது இருந்தால், விவாகரத்து கொடுத்துப் பிரித்துவிடுவோம்’ என்று இரு மாநில இணைப்பின்போது குறிப்பிட்டாராம் நேரு. அவர் சொன்னதைப் போல விவாகரத்துக்கான நேரம் வந்து விட்டது. கணவன்|மனைவியைப் பிரிப்பதுதான் அவரவர் எதிர் காலத்துக்கு நல்லது! என்கிறார் விஜயசாந்தி அழுத்தமான குரலில்.

அப்படியே இன்னொரு ஜெயலலிதா!







நன்றி - விகடன்

Print this item