| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 431 online users. » 0 Member(s) | 428 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,441
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| காலண்டரில் கண்ட முத்துக்கள் |
|
Posted by: SUNDHAL - 06-26-2005, 11:21 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (26)
|
 |
திங்கள் : துணிவு இல்லையேல் வாய்மை இல்லை.வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.
செவ்வாய் : சான்றோர்கள் குற்றத்தைத் தான் பார்ப்பார்கள்.குற்றவாளி களைப் பார்க்க மாட்டார்கள்.
புதன்: துன்பத்தில் இருக்கும் ஏழை கூப்பிடாவிட்டாலும் உடனே போய் பார்.ஆனால் செல்வத்தில் இருப்பவன் கூப்பிடாமல் நீயாக போகதே.
வியாழன்: நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்,
வெள்ளி: உண்மையே பேசுங்கள். ஏனெனில் உண்மையே பக்திக்கு வழி காட்டுகிறது.
சனி: அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
ஞாயிறு: ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன்
|
|
|
| புலிகளின் பலம் எந்த நிலையிலுள்ளது? |
|
Posted by: adsharan - 06-26-2005, 09:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
* படைத்தரப்பினரும் இனவாதிகளும் பரப்பும் தகவல்களில் உண்மையுள்ளதா?
சுதந்திரக் கட்சி - ஜே.வி.பி. கூட்டணி முறிவடைந்துவிட்டதால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு, சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. எதிர்க்கட்சிகளின் துணையின்றி ஆட்சி செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு ஜனாதிபதி சந்திரிகா தள்ளப்பட்டு விட்டார். இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்பில் ஸ்திரமற்றதொரு நிலைமையை உருவாக்கியுள்ளது.
இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்த காலம் முதல், ஜே.வி.பி. இனவாதத்தையே கக்கி வந்தது. காலத்திற்கு காலம் இலங்கையில் இனவாதங்கள் வெவ்வேறு முகங்களில் வெளிப்பட்டன. இந்த இனவாதம் இம்முறை ஜே.வி.பி.யின் முகத்தின் மூலம் வெளிப்பட்டது. எனினும், இனவாதத்தில் தோல்வி கண்டுள்ள ஜே.வி.பி., நாட்டைக் குழப்பும் வகையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடுமென எச்சரிக்கப்படுகிறது.
நாட்டில் இருமுறை மிக மோசமான ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ஜே.வி.பி.யிடமிருந்து ஆயுதங்கள் களையப்படவில்லை. அடையாள ஆயுதக் கையளிப்பே நடைபெற்றது. இன்றும் ஜே.வி.பி.செல்வாக்குச் செலுத்துமளவிற்கு ஆயுதப் படைகளின் கட்டமைப்பில் ஓட்டைகளுள்ளன. ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் மக்களை அடக்கி ஆளும் நோக்கத்தைக் கொண்டிருந்தது மட்டுமல்லாது, விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்து விட வேண்டுமென்பதில் ஜே.வி.பி. ஆர்வம் காட்டியது.
ஜனாதிபதி சந்திரிகா கூட புலிகளைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில் நீண்டகாலமாக முனைப்புக் காட்டி வருபவர். 1994 இல் முதன் முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அவரது செயற்பாடுகள் விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில் தீவிரமாயிருந்தது. இன்றும் கூட, போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் புலிகளுக்கெதிரான நிழல் யுத்தம் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசியுடனேயே நடைபெறுகின்றதென்பதில் எதுவித சந்தேகமுமில்லை.
அதேநேரம், புலிகளுக்கிடையிலான கருணாவின் கிளர்ச்சி புலிகளை நன்கு பலவீனப்படுத்திவிட்டதாகவும் சாதாரண பொதுக் கட்டமைப்பு விடயத்திலேயே தீவிர ஆர்வம் காட்டும் புலிகள், போர் ஒன்றுக்கு முகங்கொடுப்பதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் படைத்தரப்பு கூறி வருகின்றது.
புலிகள் பலம்மிக்கவர்களென்றால், 25 வருடங்களாக நடைபெறும் இந்தப் போரில் வெற்றி கண்டு அவர்களால் ஏன் இன்னமும் இலக்கை அடைய முடியவில்லையென இராணுவத்தரப்பு கேள்வியெழுப்புகிறது. படையினரிலும் பார்க்க பலம் குறைந்தே அவர்கள் காணப்படுவதாகவும் கருணாவின் கிளர்ச்சி அவர்களை மேலும் பலவீனமடையச் செய்துவிட்டதால் மீண்டுமொரு போருக்கு அவர்களால் உடனடியாகச் செல்ல முடியாதென்றும் படைத்தரப்பு கூறுகின்றது.
போர்நிறுத்த உடன்பாட்டின் மூலம் போர்நிறுத்தப்பட்டதே தவிர இன்றுவரை சமாதானத்தை உருவாக்கும் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. யுத்தமுமின்றி சமாதானப் பேச்சுகளுமின்றி தற்போதுள்ள சூழ்நிலையொன்றையே அரசு விரும்புகிறது. தமிழ் மக்கள் தான் தங்கள் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் குதித்தவர்களென்பதால், போருமற்ற சமாதானமுமற்ற இவ்வாறான சூழல் தொடர்ந்துமிருப்பதை விரும்பவில்லை.
ஆனாலும், அவர்கள் மீண்டுமொரு போருக்கு அவசரம் காட்டாத போதிலும் போருக்கானதொரு சூழல் மிக வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சாதாரண பொதுக்கட்டமைப்புக்காக ஒரு ஆட்சியே கவிழும் நிலை உருவாகியுள்ளதால் இனப்பிரச்சினைக்கு இனிவரும் காலங்களில் சமாதானப் பேச்சுக்களூடாக தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.
அதேநேரம், மீண்டுமொரு போருக்கான சூழ்நிலைகள் மிக வேகமாக உருவாகி வருகின்றன. கிழக்கில் இடம்பெறும் நிழல் யுத்தம் ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதுடன் தற்போதைய போர் நிறுத்த காலத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை தொடர்வதில் படைத்தரப்பு ஆர்வம் காட்டி வருவதாக புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன், புலிகள் பலவீனமாக இருக்கின்றார்களென்பது, படையினர் தங்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் பிரசாரமென்பதும் நன்கு தெரியும்.
வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளூடாக தங்கள் போராளிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு அரசு உத்தரவாதமளிக்கத் தவறினால் தங்களது தரைப் படை, கடற்படை, வான் படையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்குமென புலிகள் பகிரங்கமாகக் கூறுமளவிற்கு பலமடைந்திருப்பதையே இது காட்டுகிறது.
1995 இல் இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றியதும், புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் கதி அதோ கதிதானென அரசும் படைத்தரப்பும் பிரசாரங்கள் செய்தன. ஆனால், நடந்ததோ வேறு கதை. புலிகள் பற்றி தப்புக் கணக்கு போடப்பட்டதை 1995 இற்குப் பின்னர் தான் அரசும், படையினரும் சிங்கள மக்களும் உணர்ந்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாடு வீழும்வரை புலிகளின் பெரும்பலம் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தது. அப்போது குடாநாட்டைச் சுற்றி வளைத்து படையினர் இருந்தனர். ஆனால், குடாநாட்டை படையினர் கைப்பற்றியதும், உள்ளேயிருந்த புலிகள் வெளியே வர வெளியே இருந்த படையினர் உள்ளே சென்று முடங்கினர். குடாநாட்டை புலிகள் சுற்றி வளைத்தனர்.
1995 இல் குடாநாட்டு வீழ்ச்சியுடன் புலிகள் பலவீனமடையவுமில்லை, மிக நீண்டகாலப் போரினால் களைப்படையவுமில்லை என்பது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் புலிகள் எழுச்சி பெற்றனர் என்றால் கூட அது மிகையல்ல.
1996 இல் முல்லைத்தீவு படைத்தளத்தை கைப்பற்றினர். 1997 இல், வன்னியை இரண்டாக ஊடறுக்க மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குரு படை நடவடிக்கையை ஒரு வருட காலத்திற்குள் மேல் சளைக்காது சமரிட்டு 1998 இல் அதனை முறியடித்தனர். அந்தாண்டு பிற்பகுதியில், கிளிநொச்சி நகரை படையினர் வசமிருந்து கைப்பற்றினர்.
ஜெயசிக்குரு படை நடவடிக்கை மூலம் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பெரும் பகுதியை 1999 இல் ஓயாத அலைகள் படை நடவடிக்கை மூலம் மீட்டு ஓமந்தை வரை சென்றனர். 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற்றி உலகையே அதிசயிக்க வைத்தனர்.
1991 இல் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்ற புலிகள் மிகக் கடும் முயற்சியை மேற்கொண்ட போதும் ஆனையிறவு படைத்தள முற்றுகையை படையினர் முறியடித்து புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தனர். ஆனாலும், அந்தப் படைத்தளத்தையே மீண்டும் முற்றுகையிட்டு 2000 ஆம் ஆண்டில் அதனைக் கைப்பற்றியதன் மூலம், புலிகள் தோற்கடிக்கப்பட முடியாததொரு அமைப்பென்பதை பறைசாற்றினர்.
ஆனையிறவு படைத்தள வீழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. 1991 இல் யாழ்ப்பாணக் குடாநாடு புலிகள் வசமிருந்தபோது, அதன் நுழைவாயிலான ஆனையிறவை புலிகளால் கைப்பற்ற முடியவில்லை. குடாநாடு தங்கள் வசமில்லாதபோதும், ஆனையிறவு முற்றுகையை அன்று படையினரால் முறியடிக்க முடிந்தது.
ஆனால், யாழ்ப்பாணக் குடாநாடு தங்கள் வசமில்லாத போது ஆனையிறவை புலிகளால் பிடிக்க முடிந்தது. குடாநாடு தங்கள் வசமிருந்தபோதும் படையினரால் ஆனையிறவுப் படைத்தளத்தைத் தக்க வைக்க முடியவில்லை. இவ்வாறு போரியல் வரலாற்றிலேயே புலிகளின் ஆனையிறவுச் சமர் வியத்தகு சாதனைகள் படைத்தன.
ஆனையிறவை கைப்பற்றிய புலிகள் யாழ்.குடாநாட்டினுள் புகுந்து யாழ் நகர நுழைவாசல் வரை சென்றனர். ஆனாலும் சில மாற்றங்களால் குடாநாட்டின் பல பகுதிகளைப் புலிகள் பின்னர் கைவிட நேர்ந்தது. இவ்வேளையில் தான் 2000 ஆம் ஆண்டு பிற்பகுதியில், ஆனையிறவை மீளக் கைப்பற்றுவதற்காக தென்மராட்சியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட `அக்கினிச் சுவாலை' படையெடுப்பை, படையினருக்கு மிகப் பெரும் இழப்பையேற்படுத்தி புலிகள் முறியடித்தனர்.
இதன் பின்னர் தான் புலிகளின் பலம் பற்றிய உண்மை நிலையை படைத்தரப்பும் அரசும் அறிந்து கொண்டன. புலிகள் பலவீனமடைந்துள்ளார்களெனத் தாங்கள் போட்டது தப்புக் கணக்கென்பதையும் அப்போது அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
புலிகளின் பலத்தின் அடிப்படையில் தான் பின்னர் போர்நிறுத்த உடன்பாடே உருவானது. இலங்கையில் இரு தேசங்களிருப்பதை இந்த உடன்பாடு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் எல்லையிடப்பட்ட போது இந்த உடன்பாட்டின் மூலம் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களும் எல்லையிடப்பட்டன.
1980 களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை முறியடித்து அவர்களை ஆயுதபலத்தின் மூலம் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸா வெற்றி கண்டபோது 1995 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றி தானும் பெரும் வீராங்கனையென ஜனாதிபதி சந்திரிகா நிரூபிக்க முயன்றார்.
அதேநேரம் வடக்கு, கிழக்கு யுத்தத்தில் கிழக்கை தங்கள் வசம் வைத்திருந்தால் போதும் வடக்கை பின்னர் பார்த்துக் கொள்ளலாமெனப் போர்த் தந்திரம் வகுத்துச் செயற்பட்டவர்கள் முன்னைய ஐ.தே.க ஆட்சியாளர்கள். ஆனால், கிழக்கைக் கைவிட்டாலும் பரவாயில்லை வடக்கை தம் வசம் வைத்திருக்க வேண்டுமெனச் செயற்பட்டவர் ஜனாதிபதி சந்திரிகா.
ஆனாலும், வடக்கு-கிழக்கிலிருந்து முற்றாக படையினரை வெளியேற்றி தமிழர்களின் தாயகப் பகுதியை முற்று முழுதாகத் தம் வசம் வைத்திருக்க வேண்டுமென்பதில் இன்றும் புலிகள் குறியாகவுள்ளனர். இந்த நிலையில் தான், இனவாதம் பேசி புலிகளைப் போருக்கழைத்தவாறு ஆட்சியில் பங்கெடுத்த ஜே.வி.பி. அரசிலிருந்து விலகிக் கொள்ள, அடுத்து என்னவென்றதொரு கேள்வி எழுந்துள்ளது.
இந்த இனவாத செயற்பாட்டால் மீண்டுமொரு போருக்கான அடித்தளமிடப்பட்டு விட்டது. ஆனாலும், வான்படை, கடற்படை, தரைப்படை பலத்தின் மூலம் தங்கள் சக்தியை விடுதலைப்புலிகள் மீண்டும் வெளிப்படுத்துவரென்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. கருணாவின் பிளவு புலிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி விட்டதாகத் தெற்கில் பிரசாரங்கள் செய்யப்படும் நிலையில் தான் புலிகளின் விமானப் படைப்பலம் பற்றி அரசு அலறியடிக்கிறது. அண்டை நாடுகளும் உதவிக்கு ஓடோடி வருகின்றன.
சாதாரண பொதுக் கட்டமைப்பானது நாட்டின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டி விட்டது. இதற்கே இந்த நிலைமையென்றால் இனப் பிரச்சினைத் தீர்வு, சமாதான வழியில் கிடைக்குமென்பதை நினைத்துப் பார்க்கத் தேவையில்லை. சுமார் 25 வருட காலப் போரால் ஏற்பட்ட அழிவுகளையும் இழப்புகளையும் புரிந்து கொள்ளும் நிலையில் இனவாதிகளில்லை.
அரசிலிருந்து விலகியதன் மூலம் ஜே.வி.பி. தோல்வி கண்டாலும் இனவாதத்தை அவர்கள் மிக மோசமாக வளர்த்துள்ளனர். அவர்களுக்குப் பின்னால் அணி திரள மிகப் பெரும் கூட்டமுள்ளது. அதன் பார்வையெல்லாம் தமிழ் மக்கள் மீதே திரும்பியுள்ளது. அதேநேரம், சிறுபான்மை அரசைக் கொண்டு நடத்துவதில் ஜனாதிபதி பெரும் நெருக்கடியை எதிர்கொள்வார். மீண்டுமொரு தேர்தலென்பது நிச்சயமாகிவிட்டது.
வரப்போகும் தேர்தலில் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகளவில் பெற்றால் அது சிறுபான்மை மக்களுக்கே பெரும் பாதிப்பாகும். தனது 2 ஆவது பதவிக் காலத்தின் முடிவிலிருப்பதால் ஜனாதிபதி சந்திரிகா சில துணிச்சலான முடிவுகளை எடுக்கலாம். ஆனால், அது பெரும் பயன்களைத் தராது. ஆட்சிக் கவிழ்ப்புக்கான காரணமென்ன என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், அடுத்து என்ன என்பதையும் அவர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
thinikkural
|
|
|
| மூத்த குழந்தைகள் மக்குகளா? |
|
Posted by: SUNDHAL - 06-26-2005, 09:15 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (88)
|
 |
மூத்த குழந்தைகள் எல்லாம் எப்போதுமே மந்தமாகத்தான் இருப்பார்கள், இளைய குழந்தைகள்தான் சுட்டிகள் என பலர் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மையா என்றhல் இல்லை.. சரி, அப்படியானால் ஏன் முதல் குழந்தைகள் அப்படி காணப்படுகிறhர்கள். அவர்கள் பெற்றேhரைப் போல பொறுப்பு உணர்ச்சி உள்ளவர்கள், ஒழுங்கு முறைகளை பின்பற்றுபவர்கள், வீட்டுச் Nழலை சார்ந்து நடப்பவர்கள்.. இதனால்தான் அப்படி இருக்கிறhர்கள் என்கின்றன ஆய்வுகள். இரண்டாவது பிறக்கும் குழந்தைகள் எப்போதுமே விவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். கடைசி குழந்தை முதலில் பிறக்கும் குழந்தைகளைவிட பலவீனமானது என்பதால் நகைச்சுவை போன்ற உணர்வு கொண்டதாக இருக்கும். இதனால்தான் மற்றவர்களை கவர நினைத்து nஜhக்கர் போல நடந்துகொள்ளும்.
முதல் குழந்தைக்கு அடுத்த குழந்தைகள் மற்றும் கடைசிக் குழந்தை ஆகியவை வெளியில் தங்களை ஒரு முக்கியப் புள்ளியாக வெளிப்படுத்தும். ஏன் தெரியுமா? தங்களுக்கு ஒரு பேக் ரவுண்டு இருப்பதால்தான்.
|
|
|
| "நாய்களுக்கு நடுக்கடலிலும் .........."! |
|
Posted by: கறுணா - 06-26-2005, 07:35 AM - Forum: புலம்
- Replies (1)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஓம் ஓமோம் ஓம் ஈழ்பதீஸ் உண்டியல் ஜெயதேவா நாமுக!
ஐயோ அய்யய்யோ ஐயோ! மாற்றுக்கருத்து கிங்குகள்! என்ன யாழ் இணையம் மீது தாக்குதல் நடாத்தியுள்ளீர்களாம்????? கிரேட்! கிரேட்!! வாழ்க்கையில் சாதிக்காததை சாதித்துப் போட்டீர்களாம்!!
இங்கைதான் நிமலராசன் முதல் சிவராம் வரை உங்கள் வீரங்களை காட்டி வந்தீர்கள் என்று பார்த்தால், உங்கையும் வீரதீரங்களை காட்ட ஆரம்பித்திருக்கிறீங்களாம்! நீங்கள் இங்கிருந்து செய்ததெல்லாம் உலகறியும்! கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று உருவிய வீரர்கலல்லவா!!!
உங்கு போயும் கடவுள் றோவின் அருளினால் ஈ, இலையான். தண்ணி, சக்கல், கராட்டி, ... எண்டு ஒரு நாலு இணயங்களாம்!!!!!!!, தூசனப் புரட்சியில் தொடங்கியிருக்கும் வானொலி ஒன்றாம்!
வேறென்ன செய்ய முடியும்?? இங்கு வந்து அடிபட முடியுமா?? இல்லை நானூறென்ன நாற்பதைச் சேர்த்து ஒரு ஊர்வலம் நடாத்த முடியுமா?? இல்லை உங்கேயாவது மக்களுக்கு முன் செல்ல முடியுமா???
பலே! பலே!! உங்கே போயும் எங்கேயாவது ஆள் தெரியாத இடத்திலிருந்து கொண்டு நாலே நாலு சேர்ந்து வீர வசனங்களும், ஆள்கடத்தல்களும், களவுகளும், பொம்பளைச் சேட்டைகளும், ......, உண்டியல் செய்து வரும் உங்கள் உங்கள் நாலை நினைக்க ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது .......
<b>"நாயானதையாம் எங்கேயாவது தம்பல் தண்ணீக்கை விட்டாலும் நக்கித்தானாம் குடிக்கும், மாறாக சமுத்திரத்திற்குள் விட்டாலும் அதே நக்கள்தானாம்" .......</b>
அப்படி உங்களுக்கு உந்த ஐரோப்பிய, கனேடிய புலங்களென்ன வேறொரு லோகத்திலையும் கொண்டுபோய் விட்டாலும் அந்த இரத்தத்தில் ஊறியதை மாற்ற முடியாது!!!!!!!
<b>சில சமயங்களில் நாயும் திருந்தி விடும்!! ஆனால் உங்கள் நாலை அந்த ஆண்டவனாலும்.....??????????????</b>
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
| புலிகளின் இராஜதந்திரத்துக்கு.... |
|
Posted by: hari - 06-26-2005, 04:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>புலிகளின் இராஜதந்திரத்துக்கு
கிடைத்திருக்கும் வெற்றி இது! </b>
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டுமானத் துக்கான பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது. இனி என்ன, ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்க ளின் வாழ்வில் வசந்தம் வீசும், அவர்களின் அவலம் தீரும், அன்றாடப் பிரச்சினைகள் அகன்றுவிடும் என்றெல்லாம் கருதலாமா? அப்படிக் கருதுவோமானால் அது வெறும் பகற்கனவே; அர்த்தமற்ற நினைப்பே.
ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் போக்கைத் துலாம்பர மாக அறிந்துகொண்டவர்களுக்கு இதுவிடயத்தில் உண்மை நிலை யைப் புரிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல.
அப்படியானால் இவ்வளவு காலம் பேசி, இவ்வளவு இழு பட்டு, இந்தப் பொதுக்கட்டமைப்பில் ஒப்பமிட்டதால் தமிழர் தரப்புக்கு என்ன நன்மை? யாது பயன்? - என்ற கேள்விகள் எழுவது இயல்பானதே.
பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்தும்படி சர்வதேச சமூகம் - அமெரிக்கா முதல் ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய சமூ கம் வரை பல தரப்பும் - கொடுத்த பெரும் அழுத்தங்களுக் கும் மத்தியிலும் ஆறுமாத காலம் இதை இழுத்தடித்து, தென்னிலங்கையில் பௌத்த, சிங்களப் பேரினவாதத்தை இதற்கு எதிராகத் தூண்டிவிட்டு, அதற்கு வாய்ப்பான கள நிலைமையை ஏற்படுத்தி, இப்போது ஒப்புக்கு இந்த ஒப்பந் தத்திற்கு இணங்கியிருக்கிறார் ஜனாதிபதி குமாரதுங்க.
ஒப்பந்தத்துக்கு இணங்குவதற்கு அவர் காட்டிய பின் னடிப்பும், இழுபறியும் இந்த ஒப்பந்த வாசகங்களை நடை முறைப்படுத்துவதில் அவருக்கு இருக்கக் கூடிய ஈடுபாட்டை எமக்குத் தெளிவுபடுத்தும். தவிரவும் ஒப்பந்தத்துக்குத் தெற்கில் காட்டப்படும் கடும் எதிர்ப்பும் அதன் காரணமாக அரசுத் தரப்பு சிறுபான்மையாக இருக்கின்ற நிலைமையும் ஒப்பந்தத்தை அரசு எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தும் என்பதைத் துலாம்பரப்படுத்துகிறது.
ஆகவே, இந்த ஒப்பந்தம் மூலம், ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற நமது உடன்பிறப்புகளின் அவலம் நீக்கப்பட்டு விடும் என்றோ, அவர்களின் வாழ்க்கை வழமைக்குத் திரும் பும் என்றோ நாம் நம்புவதில் நியாயம் இல்லை.
ஆனாலும், இந்த ஒப்பந்தம் மூலம் சில இராஜதந்திர வெற்றிகளைத் தமிழர் தரப்பு ஈட்டியிருப்பதையும் நாம் மறக் கக்கூடாது. இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை அரசுத் தரப்பை இணங்க வைத்ததன் மூலம் ஆழிப்பேரலையால் பாதிப்புற்றோரின் துயர்துடைக்கப்படாவிட்டாலும் சில அடிப் படை விடயங்களில் தமிழர் தரப்புக்கு அங்கீகாரத்தைப்பெற வைத்திருக்கின்றார்கள் இவ்விடயத்தைத் தந்திரோபாயமா கக் கையாண்ட புலிகளின் பிரதிநிதிகள்.
சரியோ, பிழையோ சிங்கள அரசுத்தரப்புக்கு அப்பால் தமிழ்ப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக் கும் - ஒரு தனிநாட்டுக்கான கட்டமைப்புடன் இயங்கும் - புலிகள் அமைப்பு களத்தில் இருப்பதையும், அதனோடு இணங்கிச் செயற்படுவதன் மூலமே இப்பிராந்தியத்தில் நிவா ரண, அபிவிருத்தி, புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதையும் சர்வதேச சமூகம் யதார்த்தபூர்வமாக ஏற்றுக்கொள்ளவும் -
அதனடிப்படையில் புலிகளை அங்கீகரித்து, ஏற்று அவர் களோடு ஓர் உடன்பாட்டுக்கு வரும்படி இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச சமூகம் வற்புறுத்தவும் -
செய்திருக்கிறார்கள் இவ்விடயத்தைக் கையாண்ட புலிக ளின் அரசியல் விவகாரக் குழுவினர்.
ஏற்கனவே, இலங்கைத் தமிழர்களின் ஏகபிரதிநிதி களாக - அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக- விடுதலைப் புலி களை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசு ஏற்று, புலிகளோடு ஒப்பந்தம் செய்திருந்தது.
அப்போது அதைக் குறை கூறிக்கொண்டிருந்த ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்கவும் அவரது கட்சியினரும் இப் போது இந்த ஒப்பந்தத்தில் புலிகளோடு ஒப்பமிட்டதன் மூலம் அந்த யதார்த்தத்தை அவர்களும் ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.
ஆகவே, பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் மூலம் ஆழிப்; பேரலையால் பாதிப்புற்றோரின் அவலம் நீங்குமோ, இல் லையோ என்ற நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் அதன் மூலம் ஈழத்தமிழர்களின் - ஏக அதிகாரபூர்வ - பிரதிநிதிகள் யார் என்பது சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் பெரும்பான்மை யினரின் இரண்டு பெரும் கட்சிகளின் மட்டத்திலும் ஏற்று அங்கீகரித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, பாதிப்புற்ற மக்களுக்கான சர்வதேச உதவிகள் சிங்கள அரசின் மத்திய வங்கிக்கோ அல்லது திறைசேரிக்கோ செல்லாமல் புலிகளின் செல்வாக்குள்ள ஓரமைப்பின் வழிகாட்டுதலில் சர்வதேச அமைப்பு ஒன்றின் கட்டுக்காவலில் - நேரடியாக அந்த மக்களுக்குச் செல்லும் ஒரு கொள்கைத் திட்டத்துக்கு இலங்கை அரசையும் ஜனாதிபதியையும் எழுத்தில் இணங்க வைத்திருக்கிறார்கள் புலிகள். இது நடைமுறைப்படுத்தப்படுமா, செயலில் நிறை வேறுமா என்றெல்லாம் கேட்கப்பட்டாலும், இந்த ஏற்பாட் டுக்கு கொள்கைரீதியிலேனும் இலங்கை அரசை இணங்க வைத்தது - சம்மதிக்கச் செய்தது - தமிழர் தரப்புக்கும், புலிகளின் இராஜதந்திரத்துக்கும் ஒரு பெருவெற்றியாகும்.
இரண்டு தசாப்தகால யுத்தத்தினால் பாதிப்புற்று தமது உடைமைகள், சொத்துகள், நிலபுலன்கள், உறவுகளை இழந்து அன்றாட ஜீவனோபாயத்துக்கு வழியின்றி பல்லாயிரம் தமிழர்கள் நலன்புரி நிலையங்களில் இன்னும் வாழ்கின்றார்கள். ஆழிப்பேரலை அகதிகளை விட இவர்களின் எண்ணிக்கை யும் பாதிப்பும் அதிகம்.
இவர்களுக்கான ஒரு புனர்வாழ்வுத் திட்டமோ அல்லது இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளோ நடைமுறைக்காகப் பரிசீலிக்கப்படும்போது, திறைசேரி ஊடாக அல்லாமல் தமிழர் தரப்புக்கு நேரடியாக நிதி கிடைக்கும் ஓர் ஏற்பாட்டுக்கு அரசை இனிக் குழப்பமின்றி இணங்க வைக்கமுடியும்.
அதற்கு நல்ல முன் உதாரணமாக இந்தப் பொதுக்கட் டமைப்பு உடன்பாட்டு ஏற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த வகையில் பார்த்தால் பொதுக்கட்டமைப்பு உடன்பாடு அதன் நோக்கத்துக்கான விடயங்களில் தமிழ ருக்கு அதிக நன்மை எதனையும் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தாவிட்டாலும் அதை உருவாக்குவது தொடர்பான விடயத்தில் புலிகளின் இராஜதந்திரம் பெரு வெற்றியீட்டியிருக் கிறது என்பது மட்டும் தெளிவு.
<b>ஆசிரியர் தலையங்கம்- உதயன்</b>
|
|
|
| நாம் பங்குபற்றிய நடகங்கள். |
|
Posted by: KULAKADDAN - 06-26-2005, 12:01 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (18)
|
 |
[b]கள உறவுகளே நீங்கள் பாடசாலையில் படித்த போதோ அல்லது வேறு எங்கேனுமோ நாடகங்கள் நடிதிருந்தால் அவற்றைபற்றி பகிர்ந்துகொள்ளலாமே.
நான் நடித்த நாடகங்களைப் பற்றி தருகிறேன்.
பாடசாலையில் படித்த காலத்தில் குழுக்களிடையிலான போட்டிக்காக நான்கு நாடகங்களில் பங்குபற்றியிருக்கிறேன். பாடசாலை என்ற உடன் நீங்கள் நினைக்கக்கூடாது ஏதொ ஆயிரம் இரண்டயிரம் பேர் படித்தோம் என்று. கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர் படித்திருப்போம். அப்ப வருடா வருடம் நாங்கள் மூன்று பிரிவா பிரிந்து இரண்டு வாரகாலத்துக்கு போட்டிகள் நடத்துவோம். அதில விளையாடு , கவிதை, கதை ,நாடகம் ,பட்டிமன்றம் ,என பல போடிகள் இருக்கும். விளையாட்டு போட்டிகளில போட்டிபோடாமலே வென்ற சந்தர்பங்களும் உண்டு.
நாடகம் அப்படியல்ல மூன்று குழுவும் போட்டிக்கு வரும்.
போட்டிக்கு நிபந்தனையாக வெளியில் யாரது துணையும் பெறப்பட க்கூடாது என்பது இருந்தது. ஆக்கங்கள் அனைத்தும் எமது சொந்தமாக இருக்க வேண்டும்.அதில் இசைக்கு மாட்டும் விதிவிலக்கு.நூற்றியிருபதுபேரில் ஆரும் ஒராளுக்கு மட்டும் தான் இசைக்கருவி வாசிக்க தெரிந்திருக்கும் அவரால் அனைத்து குழுவுக்கும் வாசிக்க முடியது என்பதால் அதுக்கு மாட்டும் விதிவிலக்கு.
அத்துடன் நாடகத்துக்கான நேர அளவு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே.
எங்கள் நாடகங்கள் எல்லாம் அப்பப நடக்கிற நாட்டு நடப்ப பற்றியதா தான் இருக்கும்.
நாடகத்துக்கு பெயர் வைக்கிறதற்கென்று நாங்கள் சில எடுகோள்கள் வைத்திருந்தோம்.
பெயர் புரியாதமாதிரி இருக்கவேணும்
யாரும் முன்னர் அப்படி பெயர்வைதிருக்கக்கூடாது
புதுமையா கவர்ச்சியா இருக்க வேணும். இப்படியான எடுகோள்களுக்கமைய தான் பெயர்வைததால் பெயர்களை ஞாபகப்படுத்தமுடியவில்லை.
நாடகங்களின் கருப்பொருள் மத்திரம் ஞாபகத்தில் உண்டு.
முதன் முதலில் நடித்த நாடகம் எம்மைப் பொறுதளவில் குறியீட்டு நாடகம்.
அதில் ஒரு கடலோரக்கிராமத்து மக்கள் தமகென ஒரு வெளிச்சவீடு வேண்டும் என கட்டமுயல்கிறார்கள். அம்முயற்சியில் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், இடப்பெயர்வுகள், என காட்சிப்படுத்தல் அமைந்திருந்தது. கடலுக்குபோன கணவன் திரும்பிவராது துயருறும் ஒரு பெண் , இடம்பெயரும் குடும்பம்,வெளிச்சவீடு கட்டுவதை குழப்பும் சக்திகள், ஒரு Narator என பாத்திரபடைப்புக்கள் அமைந்திருந்தது. அதில் வரும் இடம்பெயர்வுகாட்சியில் ஒருமுறை மேடையின் குறுக்காக நடந்து போய்வந்தேன். என்னை பொறுத்தவரை எமது காட்சிப்படுதல்கள் சிறப்பாக அமையவில்லை.உண்மையில் நாம் சித்தரிக்க முனைந்தது எமது நாட்டு பிரச்சனையையே.
போட்டியில் எமது நாடகம் இரண்டாம் இடம் பெற்றது. மூன்று பேர் போட்டியிடு அதில் இரண்டாவதா வருவது பெரியவிசயமில்லை தானெ.
முதலிடம் பெற்ற நாடகம் புலத்தில ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து கஷ்டப்படும் ஒரு இளைஞனின் நாளந்த வாழ்க்கையை மேடையின் ஒருபுறமும் கொழும்பில் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் அவனது குடும்பத்தினரது வாழ்க்கையை மறுபுறமும் சித்தரித்திருந்தனர். அவர்களது கட்சிப்படுத்தல் மிக நன்றாக அமைந்திருந்தாது.
அடுத்தவருடம் அனைத்து குழுவினரும் தாம் நாடகம் போட முடியாது என சொல்லியதால், போட்டியாக வைக்காது பரிசில் நாளுக்கு அனைத்து குழுவில இருப்பவார்களிலும் நடிக்கவிருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாடகம் போட்டொம்.
அந்த நாடகத்தின் பெயர் ஒன்று + ஒன்று சமனில்லை இரண்டு.
அதில் மேடையில் இரண்டு வெவ்வேறு வாழ் பிரதேசங்களில் உள்ள மக்களை சுட்டியிருந்தோம். ஒருபிரதேசத்தில் வசதிகளோடு ,இருப்போர் மறுபுறத்தில அவலப்படும் தமது மக்களை பற்றிய சிந்தனையற்று இருப்பதையும் காட்ட முயன்றொம். அதில் பாடசாலை மாணவனாக வேடம் எற்றிருந்தேன்.
<img src='http://img250.echo.cx/img250/8800/dramaedi14jr.jpg' border='0' alt='user posted image'>
மூன்றாவது வருடத்தில் அப்போது நடந்த பண்டாரவளை பிந்துனுவேவ முகாமில் நடந்த படுகொலையை மையமாக வைத்து குறியீட்டு நாடகமாக் நடிதிருந்தோம். நடிப்பதற்கு போதுமான ஆட்கள் இல்லாததல் ஒருவரே வேறு வேறு காட்சிகளில் வெவ்வேறு பாதிரங்களில் தோன்றவேண்டிய தேவை இருந்தது. அதில் நான் கைதி என சுட்டக்கூடிய பாத்திரத்திலும், கடைசியாக் கொள்ளிக்குடம் கோண்டு வரும் முகம் தெரியாது மூடப்பட்ட ஒரு உருவத்துக்கும் தோன்றி இருந்தேன்.
அவ்வருடம் எமது நடகம் வெற்றிபேற்றது. நடுவர்களும் எமது நாடகத்தரம் மிகவும் உயர்வாக இருப்பதாக பாராட்டினார்கள். எமது நாடகத்துக்கு வருடா வருடம் நடுவர்களாக ஒரே நபர்களெ அழைக்கப்பட்டு வந்தத்தால் அவர்களுக்கு எமது முன்னெற்றம் பற்றி கூறமுடிந்தது. பின்னர் இந்த நாடகம் நிதிசேகரிப்புக்காக பல முன் பின் சேர்க்கைகளுடன் மேடையேற்றப்பட்டது. ஆனால் அதில் என்னால் பங்குபற்றமுடியவில்லை. அப்போது எனது கல்விசெயற்பாட்டுக்காக வெளியூர் சென்றிருந்தேன்.இந்த நாடகத்தைப்பற்றிவிரிவாக எழுதவிரும்புவதால் பின்னர் எழுதுகிறேன்.
நான்காவது வருடபோட்டியில் அப்போதைய சூழ்நிலையில் இருந்த நாட்டு நடப்பான முதன் முதலாக நோர்வே நடுநிலையாளராக சந்திரிக்காவால் அழைக்கப்பட்டதும் எரிக் சொல்ஹெய்ம் அங்கும் இங்கும் மாறிமாறி அலைந்தும் ஒன்றும் நடைபெறாது அழைத்த சந்திரிக்கவாலேயே திருப்பிஅனுப்பப்பட்டதையும் கருப்பொருளாக வைத்து குறியீடும் சாதாரண நாடக பாணியும் கலந்து ஒரு நாடகம் நடித்தோம். அந்நடகத்தில் நான் எரிக் சொல்ஹெய்ம் எனகருதத்தக்க வேடத்தில் தோன்றியிருந்தேன். அத்துடன் இராணுவக்கட்டுபாட்டு பிரதேசத்தில் மக்கள் படும் அவலம் அவர்கள் மீது இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் ,யாழ் பல்கலைகழகத்துக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லாதபோதும் தம்மைத்தாமே யாழ் பல்கலைகழகத்தின் மனித உரிமைக்கான ஆசிரியர் குழு எனும் அரசின் கூலிக்காக மாரடிக்கும் ஒன்றோ இரண்டு நபர்களை சுட்டும் பாத்திரப்படைப்புக்களுடன் அந்நாடகத்தை மேடையேற்றியிருந்தோம். எமது நாடகமே முதலாவதாக தெரிவுசெயப்பட்டது.
<img src='http://img250.echo.cx/img250/7619/dramaedit27ji.jpg' border='0' alt='user posted image'>
எம்மில் யாருக்கும் நாடகம் எப்படி இருக்கவேண்டும் என்று எதுவும் தெரியாது. எமக்கு பழகுவதற்கு கிடைப்பது ஒருவாரம் மாட்டுமே. ஒருமணிதியாலம் ஒத்திகை பார்ப்பொடு மேடை ஏற்றுவோம். எமது நோக்கமெல்லம் நாடம் என்று போட்டிக்கு ஏதோ ஒன்றை போட்டாக வேண்டும் என்பதே. ஆயினும் எமது பிந்துனுவேவா படுகொலையை பற்றிபோட்ட நாடகம் நாடக நடுவர்களால் பெரிதும் பாரட்டப்பட்டது எமக்கு மிகுந்த மகிழ்வைத்தந்தது.
|
|
|
| ஞாபகம் வருதே ஞாபகம் வருதே |
|
Posted by: KULAKADDAN - 06-25-2005, 07:43 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (38)
|
 |
<b>இத்தலைப்பில் முகத்தார் ஆரம்பித்திருந்தார். அதில் எதுவும் எழுதவில்லை. இப்ப ஒரு சிறு வயது ஞாபகத்தை இடுகிறேன். பழைய பகுதிகள் மீள கிடைக்கும் போது இரண்டையும் சேர்க்கலாம்.</b>
<b>ஆண் பூ பெண் பூ பார்ப்பதெப்படி</b>
<img src='http://img23.echo.cx/img23/2207/sp135ge0nn.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img23.echo.cx/img23/1749/mosquitoontridaxthumb14fz14va.jpg' border='0' alt='user posted image'>
இந்த பூவை உங்கள் யாருக்கும் தெரியுமா? எப்படி ஆண் பூவையும் பெண் பூவையும் பிரித்தறிவீர்கள். யாரும் மகரந்த கூட்டையும் குறி சூலகம் இரண்டையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அதி மேதாவித்தனமாக சொன்னால் ஆள் அவுட்.
நான் சொல்லப்போகும் முறையை கவனமாக பின் பற்றினால் இலகுவாக அறியலாம்.
பூவை நீண்ட காம்புடன் கொய்து கொள்ளுங்கள். பூவின் அடியும் காம்பும் இணையுமிடத்தில் பெருவிரலாலும் சுண்டுவிரலாலும் பிடித்து காம்பிலிருந்து பூவை துண்டியுங்கள் அப்போது பூ துள்ளி விழுந்தால் ஆண் பூ மெதுவாக விழுந்தால் பெண் பூ.
இப்படி தாங்க நாங்கள் முதலாம் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது கீழே காட்டப்பட்ட பூவில் ஆண் பூ பெண் பூ கண்டு பிடிக்கிறனாங்கள்.
நாங்கள் அப்ப எதிரில் இருக்கும் ஓராளிட்டை பூவை தயாராய் விரல்களுக்கை வைத்துக்கொண்டு கேள்வி கேட்பம். அவர் ஆண் பூ எண்டால் மெதுவாய் நுள்ளி மெதுவாய் விழ வைச்சு இல்லை இது பெண் பூ நீ சொன்னது பிழை எண்டுவம்.
முதலில் போட்ட பூ இங்க இப்ப நிறம்ப பூத்திருக்கு. அதை பாக்க பழைய ஞாபகங்கள் வந்திட்டுது. ஆனால் அது நம்ம ஊரில உள்ளது இல்லை. அதே தாவர குடும்பத்தை சேர்ந்த வேறு தாவரம்.இரண்டாவதா உள்ளது நம்ம ஊரில உள்ளது.
உங்களில யாருக்கும் இப்படி பார்த்து அனுபவம்.
குறிப்பு:
உண்மையில் இது பல பூக்களை கொண்ட பூந்துணர். இதில ஆயிரத்துக்கு மேற்பட்ட பூக்கள் உள்ளன.
|
|
|
| பொது கட்டமைப்பு கையெழுத்தானது ! |
|
Posted by: AJeevan - 06-25-2005, 06:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
<b>ஜே.வி.பி. கறுப்பு கொடியுடன் கூச்சல் குழப்பம் விவதம் நடக்கமுடியாமல் சபை ஒத்திவைப்பு பொதுக்கட்டமைப்பு ஆவணம் குறித்து எம்.பி.க்களிடையே காரசாரமான வாய்த்தர்க்கம்</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/20050625/images/2506vdp1.jpg' border='0' alt='user posted image'>
பிரசுரிக்கப்பட்டது
25.06.2005 12.00 AM
(அ. நிக்ஸன், ஆர்.பிரியதர்ஷினி)
ஜே.வி.பி. எம்.பி.க்களின் கூச்சல், குழப்பம் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு மத்தியில் நேற்றுக் காலை சுனாமி நிவாரணத்துக்கான பொதுக்கட்டமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜே.வி.பி. எம்.பி.க்கள் தொடர்ந்தும் சபை நடவடிக்கைகளை நடத்த விடாது பெரும் களேபரத்தில் ஈடுபட்டமையினால் பொதுக்கட்டமைப்பு மீது விவாதம் நடத்தப்படாமலேயே சபை நடவடிக்கையை சபாநாயகர் லொக்கு பண்டார அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமை போன்று எம். பி. க்களுக்கான வாய் மூல கேள்வி நேரம் முடிவடைந்ததும் 9.45 மணியளவில் பொதுக் கட்டமைப்பு ஆவணம் தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த எழுந்தார். அப்போது ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும், கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார்.
பொதுக்கட்டமைப்பில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவ்வாறு கைச்சாத்திட்ட நிலையில் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை சபையில் சமர்ப்பித்து ஏன் விவாதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி தனது ஒழுங்குப் பிரச்சினையை அவர் முன் வைத்தார்.
அதற்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதிலளிக்க முற்பட்டபோது அதனை ஏற்றுக் கொள்ளாத ஜே.வி.பி. எம்.பி.க்கள் தங்களது மேசைக்கு கீழ்பக்கமாக ஒளித்து வைத்திருந்த கறுப்புக் கொடிகளை எடுத்து கைகளில் ஏந்திய வண்ணம் சபை நடுவாக வந்து நின்று சத்தமிட்டனர். தமிழ் இராஜ்ஜியத்தை உருவாக்கும் பொதுக்கட்டமைப்பை கிழித்தெறிவோம் என கோஷமிட்டனர்.ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிராக ஜே.வி.பி. எம்.பி.க்கள் உரக்க சத்தமிட்டு கோஷம் எழுப்பி குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்ததற்கும் மத்தியில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொதுக்கட்டமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கவுரையை நிகழ்த்தினார்.
ஆனால், ஜே.வி.பி. எம்.பி.க்கள் அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் ஒலி வாங்கிக்கு அருகாக வந்து நின்று புலி பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தமா என சத்தமிட்டு அமைச்சரை பேசவிடாது தடுத்தனர். சபையில் நாகரிகமாக செயற்படுங்கள் என சபாநாயகர் கேட்டுக் கொண்டார். கூச்சல் குழப்பத்தினால் சபை அதிர்ந்தது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபாநாயகர் சபையை 9.47 மணியளவில் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
எம்.பி. க்களிடையே வாய்த்தர்க்கம்
சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்னரும் சபை நடுவாக நின்று ஜே.வி.பி. எம்.பி. க்கள் சத்தமிட்டனர். தகாத வார்த்தைகளினால் ஜனாதிபதியையும் விடுதலைப் புலிகளையும் ஏசினர்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் டி.எம். ஜயரட்ன கையை உயர்த்தி புலிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம். எங்களுக்கு பொதுக் கட்டமைப்பு வேண்டும் என சத்தமிட்டார்.
அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, பிரதியமைச்சர் மகிந்தானந்த அழுத்கமே ஆகியோர் ஜே.வி.பி. எம்.பி.க்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்தனர். தகாத வார்த்தைகளும் பரிமாறப்பட்டன.
நடனமாடிய அமைச்சர்
ஜே.வி.பி. எம்.பி.க்களின் தகாத வார்த்தைப் பிரயோகங்களை சகித்துக் கொள்ள முடியாத அமைச்சர் டி.எம். ஜயரட்ன தனது ஆசனத்திலிருந்து எழுந்து வந்து சபாநாயகர் ஆசனத்திற்கு அருகாக நின்று இரு கைகளையும் மாறி மாறி உயர்த்தி நடனமாடி ஜே.வி.பி. எம்.பி.க்களின் கோஷங்களுக்கு எதிர்க் கோஷமிட்டார்.
"பொதுக்கட்டமைப்பு', "பொதுக்கட்டமைப்பு' என்று உரக்கக் கூறி சத்தமிட்டுக் கொண்டு நடனமாடிய அமைச்சர் நாட்டையழித்தது ஜே.வி.பி. எனவும் கோஷமிட்டார். ஜே.வி.பி. யின் அஞ்சான் உம்மா எம்.பி.யை பார்த்து உம்மா, உம்மா என்று அழைத்துக் கொண்டு நடனமாடினார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி. க்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். ஜாதிக்க ஹெல உறுமயவின் பிக்கு எம்.பி.க்கள் தமது ஆசனங்களில் அமர்ந்தவாறு ஜே.வி.பி.யின் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழீழம் வாழ்கவெல்க
அதற்கிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று ஜே.வி.பி. களின் கோஷங்களுக்கு மத்தியில் தமிழீழம் வாழ்க வெல்க என சத்தமிட்டனர். பொதுக்கட்டமைப்பு தமிழீழத்தின் முதற்படி எனவும் கோஷமிட்டனர்.
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. க்களான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, கனகசபை, அம்பாறை மாவட்ட எம்.பி. பத்மநாதன், யாழ்.மாவட்ட எம்.பி.க்களான பத்மினி சிதம்பரநாதன், சிவநேசன் ஆகியோர் ஜே.வி.பி. எம்.பி. க்களுக்கு ஆவேசம் ஊட்டும் வகையில் சத்தமிட்டனர். கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மேற்படி எம்.பி.க்களை அமைதியாக இருக்குமாறு கையை அசைத்து உத்தரவிட்டார்.
சபை மீண்டும் கூடியது
சபை மீண்டும் 10.18 இற்கு கூடியது. அமைச்சர் மைத்திரி பால சிறிசேன மீண்டும் பேச எழுந்தார். அப்போது ஜே.வி.பி. விடாது தடுத்தனர். அமைதியாக இருங்கள் என சபாநாயகர் கூறினார். பொதுக்கட்டமைப்பை கிழித்தெறியும் வரை அமைதியாக இருக்க மாட்டோம் என ஜே.வி.பி. க்கள் சத்தமிட்டனர். பிரபாகரனுக்காக நாங்கள் அமைதியாக இருப்பதா? எனவும் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.
அந்தவேளை கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுந்து சபாநாயகரிடம் ஏதோ கூற முற்பட்டார்.
பொதுக் கட்டமைப்பு
சமர்ப்பிப்பு
அதற்கிடையே பொதுக்கட்டமைப்பை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்தார். கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை விளங்கப்படுத்தி அதில் உள்ளவற்றை வாசிக்க முடியாது என சபாநாயகரிடம் அமைச்சர் சொன்னார்.
அந்த வேளை அமைச்சருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு வழங்கினர். அமைச்சர்களான டி.எம்.ஐயரட்ன, மில்ரோய் பெர்னாண்டோ, ஜெயராஜ், பெர்னாண்டோ புள்ளே, பிரதி அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே ஆகியோர் ஜே.வி.பி. எம்.பிக்கள் அருகில் நெருங்காத வகையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சூழ்ந்து கொண்டனர்.
அந்த வேளையில் ஒலிவாங்கியை சரிப்படுத்திய அமைச்சர் பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை இந்த சபையில் சமர்ப்பிப்பதாக அறிவித்தார். அப்போது ஜே.வி.பி. எம்.பி.க்களும் மேற்படி அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் இழுபறிப்பட்டனர். அதற்கிடையில் பொதுக்கட்டமைப்பு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை சபை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
ஆவணத்தை கிழித்தெறிந்த விமல்
வீரவன்ச எம்.பி.
அந்த வேளையில் ஆத்திரமடைந்த விமல் வீரவன்ச எம்.பி. தனது கையில் வைத்திருந்த பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் முகத்தில் கிழித்தெறிந்தார். சபையில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கையில்:
சபையை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். அந்தவேளை மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை விமல் வீரவன்ச எம்.பி. முன் வைத்தார்.
பிரதமர் ஏன் வரவில்லை
பொதுக்கட்டமைப்பு ஆவணத்தை ஏன் பிரதமர் சமர்ப்பிக்கவில்லை. ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட போது ஏன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சபையில் இருக்கவில்லையென தனது ஒழுங்கு பிரச்சினையில் விமல் வீரவன்ச எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு அரச தரப்பிலிருந்து பதிலளிக்க வில்லை. சபை முதல்வர் ஆவணத்தை சமர்ப்பித்துவிட்டார்தானே பின்னர் எதற்காக பிரதமரை கேட்கிறீர்கள்? என சபாநாயகர் கேள்வி எழுப்பியதுடன் நிலைமையை விளங்கப்படுத்தினார்.
நீங்கள் அமைதியாக இருந்தால்தானே எதற்கும் சரியான விளக்கத்தை தர முடியும் எனவும் சபாநாயகர் ஜே.வி.பி. எம். பி. க்களைப் பார்த்து கூறினார்.
அப்போது சபாநாயகருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
சபை ஒத்திவைப்பு
அதேவேளை சபையை ஒத்திவைக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சபை அடுத்த மாதம் 5 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதனையடுத்து சபை கலைந்தது.
ஆனாலும், ஜே.வி.பி. எம்.பிக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும் சபை நடுவாக
நின்று வாய்த்தர்க்கம் புரிந்தனர். படைக்கல சேவிதர் செங்கோலை எடுத்துச் செல்வதற்குக் கூட இடமளிக்காதவகையில் சபை நடுவாக நின்று எம்.பி.க்கள் வாய்த்தர்க்கம் புரிந்தனர். உதவி படைக்கல சேவிதர்களின் பாதுகாப்புடன் படைக்கல சேவிதர் செங்கோலை எடுத்துச் சென்றார்.
முஸ்லிம் எம்.பி.க்கள் வாய்த்தர்க்கம்
அவை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அம்பாறை மாவட்ட எம்.பி.யுமான ரவூப் ஹக்கீமுக்கும் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீனுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் "வாயை பொத்து' என சபை நடுவில் நின்று சத்தமிட்டனர். பைஸல் ஹாசீம் எம்.பி.யும் சத்தமிட்டார். அப்போது ஐ.தே.க.வின் களுத்துறை மாவட்ட எம்.பி.யும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான மகிந்த சமரசிங்க ரவூப் ஹக்கீம் எம்.பி.யை சமாதானப்படுத்தினார்.
அதேவேளை, ஜே.வி.பி. எம்.பி.க்கள் சர்ச்சை ஏற்படுத்திய போது இடையிடையே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபைக்குள் வந்து சென்றார்.
காலை 9.30 மணியளவில் சபை ஆரம்பமான போது சபைக்குள் வந்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விமல் வீரவன்ச எம்.பி. ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைக்க முற்பட்டபோது தனது ஆசனத்திலிருந்து எழுந்து சபைக்கு வெளியே சென்று விட்டார். சபை ஒத்திவைக்கப்படும் வரை பிரதமர் சபைக்கு வரவேயில்லை.
<b>பொதுக்கட்டமைப்பு கைச்சாத்து
அரச தரப்பில் ஜெயசிங்கவும் புலிகள் தரப்பில் ரஞ்சன்லாலும் கையொப்பம்</b>
பிரசுரிக்கப்பட்டது 25.06.2005 12.00 AM (எஸ்.என்.ஆர். பிள்ளை)
சுனாமி நிவாரணம் தொடர்பான பொதுக்கட்டமைப்பில் நேற்று அரசாங்க தரப்பும், விடுதலைப் புலிகள் தரப்பும் கைச்சாத்திட்டுள்ளன. அரசாங்க தரப்பில் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ். ஜயசிங்கவும், விடுதலைப் புலிகளின் தரப்பில் திட்டமிடல் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் ரஞ்சன் லால் ஆகியோர் கையொப்பமிட்டனர். நேற்று முற்பகல் அரசாங்க தரப்பில் ஜயசிங்க பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திட்டார். இதனையடுத்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் கான்ஸ் பிராஸ்கர் குறித்த ஆவணத்தை விமானப் படையினரது ஹெலிகொப்டரில் கிளிநொச்சிக்கு எடுத்துச் சென்றார். கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நோர்வே தூதுவர் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமி ழ்ச்செல்வனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புலிகளின் சமாதான செயலகத்தில் மடையவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே தெரிவித்தார்.
பொதுக் கட்டமைப்பு குறித்து சுதந்திர கட்சி செயலாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொதுக் கட்டமைப்புக் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்க நேற்று மாலை தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஊடகவியலாளர் மாநõடு நடத்தப்பட்டது. மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுக் கட்டமைப்பு தொடர்பான விவாதம் மீண்டும் நடைபெறுமா எனக் கேட்ட போதே அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மேற்கண்டவாறு பதிலளித்தார்.பொதுக் கட்டமைப்பு குறித்து ஒத்திவைப்பு விவாதம் நடத்த நாம் 9 மணி நேரம் ஒதுக்கி இருந்தோம். விவாதத்தில் 60 வீதத்தை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கி இருந்தோம். ஆனால் அந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ள மக்கள் விடுதலை முன்னணி தவறிவிட்டது. ஆகையால் மீண்டும் ஒரு விவாதம் நடத்தப்படமாட்டாது. மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை விட்டு வெளியேறியதால் அரசாங்கம் பலவீனமடையவில்லை. ஜனாதிபதி தேர்தல் வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்குப் பின் அரசாங்கம் மாறுமா? என்பது குறித்து கூற முடியாது.
ஜனாதிபதித் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையாளர் தீர்மானிப்பார்.
Veerakesari
|
|
|
|