![]() |
|
நாம் பங்குபற்றிய நடகங்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: நாம் பங்குபற்றிய நடகங்கள். (/showthread.php?tid=4069) |
நாம் பங்குபற்றிய நடகங்கள். - KULAKADDAN - 06-26-2005 [b]கள உறவுகளே நீங்கள் பாடசாலையில் படித்த போதோ அல்லது வேறு எங்கேனுமோ நாடகங்கள் நடிதிருந்தால் அவற்றைபற்றி பகிர்ந்துகொள்ளலாமே. நான் நடித்த நாடகங்களைப் பற்றி தருகிறேன். பாடசாலையில் படித்த காலத்தில் குழுக்களிடையிலான போட்டிக்காக நான்கு நாடகங்களில் பங்குபற்றியிருக்கிறேன். பாடசாலை என்ற உடன் நீங்கள் நினைக்கக்கூடாது ஏதொ ஆயிரம் இரண்டயிரம் பேர் படித்தோம் என்று. கிட்டத்தட்ட நூற்றி இருபது பேர் படித்திருப்போம். அப்ப வருடா வருடம் நாங்கள் மூன்று பிரிவா பிரிந்து இரண்டு வாரகாலத்துக்கு போட்டிகள் நடத்துவோம். அதில விளையாடு , கவிதை, கதை ,நாடகம் ,பட்டிமன்றம் ,என பல போடிகள் இருக்கும். விளையாட்டு போட்டிகளில போட்டிபோடாமலே வென்ற சந்தர்பங்களும் உண்டு. நாடகம் அப்படியல்ல மூன்று குழுவும் போட்டிக்கு வரும். போட்டிக்கு நிபந்தனையாக வெளியில் யாரது துணையும் பெறப்பட க்கூடாது என்பது இருந்தது. ஆக்கங்கள் அனைத்தும் எமது சொந்தமாக இருக்க வேண்டும்.அதில் இசைக்கு மாட்டும் விதிவிலக்கு.நூற்றியிருபதுபேரில் ஆரும் ஒராளுக்கு மட்டும் தான் இசைக்கருவி வாசிக்க தெரிந்திருக்கும் அவரால் அனைத்து குழுவுக்கும் வாசிக்க முடியது என்பதால் அதுக்கு மாட்டும் விதிவிலக்கு. அத்துடன் நாடகத்துக்கான நேர அளவு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. எங்கள் நாடகங்கள் எல்லாம் அப்பப நடக்கிற நாட்டு நடப்ப பற்றியதா தான் இருக்கும். நாடகத்துக்கு பெயர் வைக்கிறதற்கென்று நாங்கள் சில எடுகோள்கள் வைத்திருந்தோம். பெயர் புரியாதமாதிரி இருக்கவேணும் யாரும் முன்னர் அப்படி பெயர்வைதிருக்கக்கூடாது புதுமையா கவர்ச்சியா இருக்க வேணும். இப்படியான எடுகோள்களுக்கமைய தான் பெயர்வைததால் பெயர்களை ஞாபகப்படுத்தமுடியவில்லை. நாடகங்களின் கருப்பொருள் மத்திரம் ஞாபகத்தில் உண்டு. முதன் முதலில் நடித்த நாடகம் எம்மைப் பொறுதளவில் குறியீட்டு நாடகம். அதில் ஒரு கடலோரக்கிராமத்து மக்கள் தமகென ஒரு வெளிச்சவீடு வேண்டும் என கட்டமுயல்கிறார்கள். அம்முயற்சியில் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், இடப்பெயர்வுகள், என காட்சிப்படுத்தல் அமைந்திருந்தது. கடலுக்குபோன கணவன் திரும்பிவராது துயருறும் ஒரு பெண் , இடம்பெயரும் குடும்பம்,வெளிச்சவீடு கட்டுவதை குழப்பும் சக்திகள், ஒரு Narator என பாத்திரபடைப்புக்கள் அமைந்திருந்தது. அதில் வரும் இடம்பெயர்வுகாட்சியில் ஒருமுறை மேடையின் குறுக்காக நடந்து போய்வந்தேன். என்னை பொறுத்தவரை எமது காட்சிப்படுதல்கள் சிறப்பாக அமையவில்லை.உண்மையில் நாம் சித்தரிக்க முனைந்தது எமது நாட்டு பிரச்சனையையே. போட்டியில் எமது நாடகம் இரண்டாம் இடம் பெற்றது. மூன்று பேர் போட்டியிடு அதில் இரண்டாவதா வருவது பெரியவிசயமில்லை தானெ. முதலிடம் பெற்ற நாடகம் புலத்தில ஒன்றுக்கு இரண்டு வேலைசெய்து கஷ்டப்படும் ஒரு இளைஞனின் நாளந்த வாழ்க்கையை மேடையின் ஒருபுறமும் கொழும்பில் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் அவனது குடும்பத்தினரது வாழ்க்கையை மறுபுறமும் சித்தரித்திருந்தனர். அவர்களது கட்சிப்படுத்தல் மிக நன்றாக அமைந்திருந்தாது. அடுத்தவருடம் அனைத்து குழுவினரும் தாம் நாடகம் போட முடியாது என சொல்லியதால், போட்டியாக வைக்காது பரிசில் நாளுக்கு அனைத்து குழுவில இருப்பவார்களிலும் நடிக்கவிருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நாடகம் போட்டொம். அந்த நாடகத்தின் பெயர் ஒன்று + ஒன்று சமனில்லை இரண்டு. அதில் மேடையில் இரண்டு வெவ்வேறு வாழ் பிரதேசங்களில் உள்ள மக்களை சுட்டியிருந்தோம். ஒருபிரதேசத்தில் வசதிகளோடு ,இருப்போர் மறுபுறத்தில அவலப்படும் தமது மக்களை பற்றிய சிந்தனையற்று இருப்பதையும் காட்ட முயன்றொம். அதில் பாடசாலை மாணவனாக வேடம் எற்றிருந்தேன். <img src='http://img250.echo.cx/img250/8800/dramaedi14jr.jpg' border='0' alt='user posted image'> மூன்றாவது வருடத்தில் அப்போது நடந்த பண்டாரவளை பிந்துனுவேவ முகாமில் நடந்த படுகொலையை மையமாக வைத்து குறியீட்டு நாடகமாக் நடிதிருந்தோம். நடிப்பதற்கு போதுமான ஆட்கள் இல்லாததல் ஒருவரே வேறு வேறு காட்சிகளில் வெவ்வேறு பாதிரங்களில் தோன்றவேண்டிய தேவை இருந்தது. அதில் நான் கைதி என சுட்டக்கூடிய பாத்திரத்திலும், கடைசியாக் கொள்ளிக்குடம் கோண்டு வரும் முகம் தெரியாது மூடப்பட்ட ஒரு உருவத்துக்கும் தோன்றி இருந்தேன். அவ்வருடம் எமது நடகம் வெற்றிபேற்றது. நடுவர்களும் எமது நாடகத்தரம் மிகவும் உயர்வாக இருப்பதாக பாராட்டினார்கள். எமது நாடகத்துக்கு வருடா வருடம் நடுவர்களாக ஒரே நபர்களெ அழைக்கப்பட்டு வந்தத்தால் அவர்களுக்கு எமது முன்னெற்றம் பற்றி கூறமுடிந்தது. பின்னர் இந்த நாடகம் நிதிசேகரிப்புக்காக பல முன் பின் சேர்க்கைகளுடன் மேடையேற்றப்பட்டது. ஆனால் அதில் என்னால் பங்குபற்றமுடியவில்லை. அப்போது எனது கல்விசெயற்பாட்டுக்காக வெளியூர் சென்றிருந்தேன்.இந்த நாடகத்தைப்பற்றிவிரிவாக எழுதவிரும்புவதால் பின்னர் எழுதுகிறேன். நான்காவது வருடபோட்டியில் அப்போதைய சூழ்நிலையில் இருந்த நாட்டு நடப்பான முதன் முதலாக நோர்வே நடுநிலையாளராக சந்திரிக்காவால் அழைக்கப்பட்டதும் எரிக் சொல்ஹெய்ம் அங்கும் இங்கும் மாறிமாறி அலைந்தும் ஒன்றும் நடைபெறாது அழைத்த சந்திரிக்கவாலேயே திருப்பிஅனுப்பப்பட்டதையும் கருப்பொருளாக வைத்து குறியீடும் சாதாரண நாடக பாணியும் கலந்து ஒரு நாடகம் நடித்தோம். அந்நடகத்தில் நான் எரிக் சொல்ஹெய்ம் எனகருதத்தக்க வேடத்தில் தோன்றியிருந்தேன். அத்துடன் இராணுவக்கட்டுபாட்டு பிரதேசத்தில் மக்கள் படும் அவலம் அவர்கள் மீது இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் ,யாழ் பல்கலைகழகத்துக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லாதபோதும் தம்மைத்தாமே யாழ் பல்கலைகழகத்தின் மனித உரிமைக்கான ஆசிரியர் குழு எனும் அரசின் கூலிக்காக மாரடிக்கும் ஒன்றோ இரண்டு நபர்களை சுட்டும் பாத்திரப்படைப்புக்களுடன் அந்நாடகத்தை மேடையேற்றியிருந்தோம். எமது நாடகமே முதலாவதாக தெரிவுசெயப்பட்டது. <img src='http://img250.echo.cx/img250/7619/dramaedit27ji.jpg' border='0' alt='user posted image'> எம்மில் யாருக்கும் நாடகம் எப்படி இருக்கவேண்டும் என்று எதுவும் தெரியாது. எமக்கு பழகுவதற்கு கிடைப்பது ஒருவாரம் மாட்டுமே. ஒருமணிதியாலம் ஒத்திகை பார்ப்பொடு மேடை ஏற்றுவோம். எமது நோக்கமெல்லம் நாடம் என்று போட்டிக்கு ஏதோ ஒன்றை போட்டாக வேண்டும் என்பதே. ஆயினும் எமது பிந்துனுவேவா படுகொலையை பற்றிபோட்ட நாடகம் நாடக நடுவர்களால் பெரிதும் பாரட்டப்பட்டது எமக்கு மிகுந்த மகிழ்வைத்தந்தது. - kavithan - 06-26-2005 நன்றி குழைஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- hari - 06-26-2005 நன்றி - இளைஞன் - 06-26-2005 நன்றி குழைக்காட்டான். நல்ல முயற்சி. அங்கு நீங்கள் காட்டிய உங்கள் திறமைகளை இங்கு புலத்திலும் காட்டக்கூயதாக உள்ளதா? சந்தர்ப்பங்கள் உள்ளதா? - KULAKADDAN - 06-26-2005 நன்றி....இங்கா? இல்லை இளைஞன். பல எழுத்துபிழைகள் இருந்தன. முடிந்தளவு திருத்தியுள்ளேன். இன்னும் இருந்தால் சொல்லுங்கள். - sathiri - 06-26-2005 யாழில்90களில் எங்கும்அரங்கேறிய அஸ்த்தமனத்தில் ஒரு உதயம் யாராவது பார்த்திருக்கிறீர்களா?? முலக்கதை சாத்திரி எனது நன்பன் ஒருவனின் உதவியுடன் வசனமெழுதி நாடக மாக்கினோம் அதனை படமாக்கும் ஒரு யோசனையும் உள்ளது வசதி கிடைத்தால் செய்யலாம் இந்திய இராணுவத்தினரின் அனியாயத்தை தோலுரித்த நாடகம் அதன் வெற்றி அதைபார்த் பலர் கடைசி காட்சியில் விம்மியழுதனர் - SUNDHAL - 06-26-2005 வாழ்த்துக்கள் சாத்திரி அந்த நாடகத்தை நீங்கள் திரை வடிவமாக கொன்டுவருவதற்கு கள உறவுகளின் உதவி தேவைப்படின் செய்வதற்கு காத்து இருக்கின்றோம். - KULAKADDAN - 06-27-2005 <!--QuoteBegin-sathiri+-->QUOTE(sathiri)<!--QuoteEBegin-->யாழில்90களில் எங்கும்அரங்கேறிய அஸ்த்தமனத்தில் ஒரு உதயம் யாராவது பார்த்திருக்கிறீர்களா?? முலக்கதை சாத்திரி எனது நன்பன் ஒருவனின் உதவியுடன் வசனமெழுதி நாடக மாக்கினோம் அதனை படமாக்கும் ஒரு யோசனையும் உள்ளது வசதி கிடைத்தால் செய்யலாம் இந்திய இராணுவத்தினரின் அனியாயத்தை தோலுரித்த நாடகம் அதன் வெற்றி அதைபார்த் பலர் கடைசி காட்சியில் விம்மியழுதனர்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லை சாத்திரியாரே அப்போ நாங்கள் சின்ன பையன்கள். பார்க்க கிடைக்கவில்லை.இல்லை பார்த்தும் தற்போது ஞாபகம் வரவிலலையோ தெரியவில்லை. - AJeevan - 06-27-2005 நல்லதொரு பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். இப்படி இலைமறையாய் இருக்கும் கலைஞர்கள் பலவித நெருக்குதல்களால் புலத்தில் தொடர முடியாமல் இருக்கிறது என்றே கருதுகிறேன். தொடர்ந்து எழுதும் போது பலருக்கு ஏதாவது விமோனசம் உண்டாகலாம். - Mathan - 06-27-2005 குளம் உங்கள் நாடக அனுபவத்தை அறிய தந்தமைக்கு நன்றி. - kuruvikal - 06-27-2005 குளக்காட்டான் உங்கள் பதிவை உங்கள் குடிலில் பார்த்தோம்.. வியந்தோம்..அருமை...! நல்ல முயற்சிகள் செய்திருக்கிறீர்கள்.. புலத்திலும் தொடரலாமே...!
- KULAKADDAN - 06-27-2005 நன்றி...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Nitharsan - 06-27-2005 நன்றி குளக்காட்டன் உங்கள் அனுபவத்தை இங்கே பதிவு செய்து மற்றவர்களையும் பதீவு செய்யவேண்டும் என்று ஆர்வமூட்டியதற்க்கு... Re: நாம் பங்குபற்றிய நடகங்கள். - KULAKADDAN - 12-31-2005 KULAKADDAN Wrote:[ <img src='http://img511.imageshack.us/img511/3489/scan79gh.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img511.imageshack.us/img511/2200/scan91mu.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img511.imageshack.us/img511/5695/scan69el.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img511.imageshack.us/img511/1583/scan89zg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img511.imageshack.us/img511/9123/scan52hi.jpg' border='0' alt='user posted image'> <b>பழசை தூசி தட்டி கொண்டுவந்திருக்கிறன்</b>. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <b>இப்ப தான் உந்த நாடகம் பற்றின சில படங்கள் கிடைத்தது. </b> - Rasikai - 12-31-2005 நன்றி குளம். உங்கள் நாடக படங்கள் அழகாக இருக்கின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆமா இதுல எது நீங்கள்?? :roll:
- KULAKADDAN - 12-31-2005 Rasikai Wrote:நன்றி குளம். உங்கள் நாடக படங்கள் அழகாக இருக்கின்றது <!--emo& மூன்றாவது படத்தை தவிர மிகுதி அனைத்திலும் நான் உள்ளேன் ரசிகை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- நர்மதா - 12-31-2005 குளக்காட்டான் இந்த நாடகம் எங்கு நடந்தது ( வவுனியாவிலையா) - Rasikai - 01-01-2006 KULAKADDAN Wrote:மூன்றாவது படத்தை தவிர மிகுதி அனைத்திலும் நான் உள்ளேன் ரசிகை <!--emo& ஓ வடிவா இருக்கிறியள் நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-01-2006 ஜயையோ!!! ஒரு படத்திலும் குளக்கோட்டான் அண்ணாவின் முகத்தைக் காணோம். :roll: :roll: |