Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 459 online users.
» 0 Member(s) | 457 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,441
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  இன்டர்நெட் என்ற ஆபத்தான இடம்
Posted by: vasisutha - 06-25-2005, 03:06 AM - Forum: இணையம் - Replies (3)

<b>இன்டர்நெட் என்ற ஆபத்தான இடம்</b>

சமீபத்தில் என் நண்பன் ஒருவனின் நச்சரிப்பு தாங்காமல் ZoneAlarm என்ற சாஃப்ட்வேரை என் விண்டோஸ் 98 கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தேன்.

ZoneAlarm ஒரு `ஃபயர்வால்' சாஃப்ட்வேர், இன்டர்நெட் இணைப்பு வைத்திருந்தால் உனக்கு அது நிச்சயம் தேவை என்றான். சைஸ் 2 எம்.பி. தான். டவுன்லோட் செய்து டபுள்க்ளிக் செய்ததும் தானாக இன்ஸ்டால் ஆனது.

கம்ப்யூட்டரை boot செய்தததும் அது திரையின் வலது மூலையில் சிஸ்டம் ட்ரேயில் உட்கார்ந்துகொண்டது. டயல் செய்து இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டர் பிரவுசரை இயக்கினேன்.

உடனே ட்ரேயிலிருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. "நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டர் என்ற புரோகிராம் இன்டர்நெட்டுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறது. அனுமதிக்கவா வேண்டாமா?" அனுமதித்தேன்.

<img src='http://www.webulagam.com/it/tips/images/2001_09/zalert.jpg' border='0' alt='user posted image'>

நான் இன்டர்நெட்டுடன் இணைத்த சில நிமிடங்களுக்குள் ஏராளமான எச்சரிக்கைகள் வந்தன. "211.xxx.xxx.xx என்ற ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்ள முயற்சி நடந்தது. FireWall அதைத் தடுத்துவிட்டது."

இந்த வகை எச்சரிக்கைகள் வந்த படி இருந்தன. ஒரு குறிப்பிட்ட முகவரியிலிருந்து 2 நிமிடத்தில் கிட்டத்தட்ட 80 தடவை தொடர்ந்து என் கம்ப்யூட்டரை ping செய்ய முயற்சி நடந்தது.

எனக்கு இந்த குறுகுறுப்பில் அப்படி ஒரு எச்சரிக்கை வந்தபோது More Info என்ற பட்டனைத் தட்டினேன். திறந்திருந்த நெட்ஸ்கேப் விண்டோவில் ஜோன் அலார்ம் புரோகிராமை உருவாக்கிய zonelabs.com ஒரு வலைப்பக்கம் வந்தது. அது எனக்கு வந்த எச்சரிக்கைக்கு விளக்கம்.

அந்தப் பக்கத்தில் சந்தேகத்திற்குரிய ஐ.பி. முகவரியும் அதற்குரிய கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கான வழியும் இருந்தது. அதன் மூலம் அந்த முகவரியை மோப்பம் பிடித்துப் பார்த்தால் அதிர்ச்சி! ஹாங்காங்கில் இருந்த ஒரு கம்ப்யூட்டர் மூலம் அந்தத் தாக்குதல் முயற்சி நடந்திருந்தது!

இதற்குப் பிறகு தைவான், சீனா, செக் குடியரசு, ரஷ்யா, கொரியா என்று உலகின் பல மூலைகளிலிருந்து என் கம்ப்யூட்டரைத் தாக்க முயற்சி நடந்து கொண்டிருந்ததை கவனித்து பயந்து போனேன்.

என் கம்ப்யூட்டரில் பெரிய ராணுவ ரகசியமோ விலை மதிக்க முடியாத சமாச்சாரங்களோ இல்லை. அது ஒரு சாதாரண விண்டோஸ் 98 பி.சி. அதை ஏன் கண்டவனெல்லாம் குறி வைக்கவேண்டும்? துப்பறிந்ததில் சில அதிர்ச்சியான விஷயங்கள் தெரிய வந்தன.

இந்த வருடம் பிப்ரவரியில் யாஹூ.காம், அமேஸான்.காம், ஈபே.காம், பய்.காம், சி.என்.என்.காம் போன்ற சில மிகப் பெரிய வெப்சைட்கள் சில மணி நேரங்கள் முடக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

டிஸ்ட்ரிப்யூட்டட் டினையல் ஆஃப் சர்வீஸ் ( DDoS ) என்ற தாக்குதல் முறை இதில் பயன்படுத்தப்பட்டது. தாக்குதலுக்கு ஆளான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 700 மில்லியன் டாலர் முதல் 15 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மெகா தாக்குதலை அரங்கேற்றிய ஊடுருவிகள் (crackers) அதற்கு கிட்டத்தட்ட 100 பர்சனல் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தினார்கள். நீங்களும் நானும் வைத்திருக்கிற மாதிரி சாதாரண விண்டோஸ் பி.சி.கள்.

ஊடுருவிகளின் டி.டி.ஓ.எஸ். டெக்னிக் இதுதான். போர்ட் ஸ்கேனர் (port scanners) எனப்படும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி ஒரு நெட்வொர்க்கை ஸ்கேன் செய்வார்கள். ஒரு பாதுகாப்பும் இல்லாத கம்ப்யூட்டர்களைக் கண்டுபிடித்து, அதில் என்ன ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது, எப்படி நுழையலாம் என்ற தகவல்களை ஸ்கேனர் அவர்களுக்குத் தரும்.

<img src='http://www.webulagam.com/it/tips/images/2001_09/nmap.gif' border='0' alt='user posted image'>

நோஞ்சான் கம்ப்யூட்டர்கள் எவை என்று கண்டுபிடித்ததும் DDoS தாக்குதலுக்கான சாஃப்ட்வேர்களை அதில் ஒளித்து வைப்பார்கள். ஊடுருவிகள் மத்தியில் Trin00, TFN போன்ற டி.டி.ஓ.எஸ். புரோகிராம்கள் மிக பிரபலம்'.

பிறகு அவர்கள் நினைத்த நேரத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்து தங்கள் டி.டி.ஓ.எஸ். சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் மூலம் குறிப்பிட்ட வெப்சைட்களை / கம்ப்யூட்டர்களைத் தாக்குவார்கள்.

டி.டி.ஓ.எஸ். என்றால்? ஒரு வெப்சைட் என்பது ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல் பக்கங்கள்தான். நீங்கள் ஒரு வெப்சைட்டுக்கு விஜயம் செய்யும்போது அந்த கம்ப்யூட்டரிடம் தகவல் கேட்டு உங்கள் கம்ப்யூட்டர் சில பாக்கெட்டுகளை (packets) அனுப்புகின்றன. இதுதான் இன்டர்நெட்டில் தகவல் பரிமாறப்படும் முறை.

டி.டி.ஓ.எஸ். சாஃப்ட்வேர்கள் தகவல் கேட்கும் போர்வையில் பிரம்மாண்டமான சைஸ் கொண்ட பாக்கெட்களை வெள்ளமாக அனுப்புகின்றன. இவ்வளவு தகவலைக் கையாள முடியாமல் வெப்சைட்டைக் கையாளும் வெப்சர்வர் படுத்துவிடுகிறது.

ஒரு வெப்சைட் பொதுவாக 1 நிமிடத்தில் உங்கள் பிரவுசரில் தெரிகிறது என்றால் அது தாக்குதலுக்கு ஆளாகும்போது உங்கள் பிரவுசருக்கு வந்து சேர பல நிமிடங்கள் அல்லது மணிக்கணக்கில் ஆகலாம். அதாவது தகவல் வெள்ளம் அதன் வெப்சர்வரை மிக மிக மெதுவாக செயல்பட வைக்கிறது, அல்லது செயலிழக்கச் செய்துவிடுகிறது.

<img src='http://www.webulagam.com/it/tips/images/2001_09/ddos.gif' border='0' alt='user posted image'>

யாஹூ, அமேஸான் வெப்சைட்களுக்கு நேர்ந்த கதி அதுதான். வழக்கமாக அந்த சைட்களை விஜயம் செய்பவர்கள் தாக்குதல் நடந்த அன்று சுமார் 90 நிமிடங்களுக்கு அவற்றைப் பார்க்க முடியவில்லை.

mafiaboy என்ற 15 வயது பள்ளி மாணவனின் கைங்கரியம் அது என்று பிறகு கண்டுபிடித்தார்கள். அவன் பயன்படுத்தியது பாதுகாப்பில்லாத சில அமெரிக்க பல்கலைக்கழக கம்ப்யூட்டர்கள்.

விஷயம் என்னவென்றால் நீங்கள் அப்பாவியாக சாலிட்டேர் ஆடிக் கொண்டிருக்கும்போதே எவனாவது ஒரு கம்ப்யூட்டர் கேப்மாறி உங்கள் கம்ப்யூட்டர் மூலம் இந்த மாதிரி வேலைகளை செய்துகொண்டிருப்பான்.

உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்ட ஈ-மெயில், டயல்-அப் பாஸ்வேர்ட்களைத் திருடி, அவற்றைப் பயன்படுத்தி உங்கள் ஈ-மெயிலைப் படிக்கலாம், க்ரெடிட் கார்டு நம்பரை சுடலாம், மை டாக்குமென்ட்ஸில் இருக்கும் அந்தரங்கமான ஃபைல்களை, பிசினஸ் தொடர்பான ஆவணங்களைப் படிக்கலாம் - பாதுககாப்பில்லாத கம்ப்யூட்டரில் எத்தனையோ அயோக்கியத்தனங்களை செய்ய முடியும்.
<img src='http://www.webulagam.com/it/tips/images/2001_09/firewall.gif' border='0' alt='user posted image'>
உங்கள் கம்ப்யூட்டர், கிரிமினல்களின் கைக்குப் போகாமல் இருக்க ஒரு வழி உண்டு. அதற்கு பெயர் "பர்சனல் ஃபயர்வால்."

ஃபயர்வால் என்பது வேண்டாத, ஆபத்தான தகவல்கள் / ஃபைல்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழையாமல் தடுக்கும் அரண்.

ஒரு ஃபயர்வால் இன்டர்நெட்டிலிருந்து வரும் தகவல்கள், உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இன்டர்நெட்டிற்கு அனுப்பப்படும் தகவல்கள் எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து அலசுகிறது.

ஈ-மெயிலில் வரும் சில ட்ரோஜன்கள், மாற்றான் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் டயல்-அப், ஈ-மெயில், நெட்வொர்க் பாஸ்வேர்ட்களைத் திருடி இன்டர்நெட் வழியாக அந்த ட்ரோஜனை எழுதியவனுக்கு அனுப்பும். ஃபயர்வால்கள் இதையும் தடுக்கும்.

இது போன்ற ஆபத்தான டி.எஸ்.எல். போன்ற அதிவேக இன்டர்நெட் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, சேர்ந்தாற்போல் பல மணி நேரம் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் சாதாரண டயல்-அப் பயனாளிகளுக்கும் உண்டு.
மும்பையைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மாயா பாலசுப்ரமணியனுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்தது. "நான்கு வாரங்களுக்கு முன் ஜோன் அலார்மை என் விண்டோஸ் மீ கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தேன். அதற்குப் பிறகு பல முறை எச்சரிக்கைகள் வந்துகொண்டே இருந்தன" என்கிறார் மாயா.

"ஒரு முறை kernel32.exe என்ற புரோகிராம் என் கம்ப்யூட்டரில் புக முயற்சி செய்தபோது என் ஃபயர்வால் அதைத் தடுத்தது. அது ஒரு ட்ரோஜன் என்று பிறகுதான் தெரிந்தது. பர்சனல் ஃபயர்வால்கள் ஒவ்வொரு பர்சனல் கம்ப்யூட்டருக்கும் அவசியம் எவ்வளவு அவசியம் என்று புரிந்துகொண்டேன்" என்கிறார் அவர்.

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வி. முரளீதரனும் ஆடித்தான் போயிருக்கிறார். "இப்படி ஒரு ஆபத்து இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களுக்குக் கூட ஆபத்து என்று என்னால் நம்ப முடியவில்லை" என்றார் அவர்.

"சமீபத்தில் என் கம்ப்யூட்டரில் ZoneAlarm, Sygate Personal Firewall, BlackIce Defender ஆகிய மூன்று ஃபயர்வால்களை இன்ஸ்டால் செய்து பார்த்தேன். இப்போது ஃபயர்வால் இல்லாமல் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது பற்றிக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது" என்கிறார் முரளீதரன்.

ஒரு பர்சனல் கம்ப்யூட்டரில் ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஃபயர்வால். Zone Labs நிறுவனத்தின் ZoneAlarm சைகேட்டின் Sygate Personal Firewall, Tiny Personal Firewall ஆகியவை இலவசமாகக் கிடைக்கின்றன.

பர்சனல் ஃபயர்வால்கள் முழுமையான பாதுகாப்பு தரும் என்று சொல்ல முடியாது. ZoneAlarm க்கு டிமிக்கி கொடுக்கக் கூட புரோகிராம்கள் இருக்கின்றன.

ஆனால் பொதுவாக ஒரு ஃபயர்வால் எழுப்பிய அரணைத் தாண்டி நுழைய நிஜமாகவே திறமையான ஊடுருவியாக இருக்கவேண்டும். டி.டி.ஓ.எஸ். கருவிகளைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம். எல்லாமே ஒரு சில க்ளிக்குகளில் முடிந்துவிடுகிறது.
எனவே புரோகிராமிங், நெட்வொர்க்கிங் தெரியாத டீனேஜ் இளைஞர்கள் கூட ரெடிமேட் சாஃப்ட்வேரை வைத்து மற்றவர்களுடைய கம்ப்யூட்டர்களில் கைவைக்கிறார்கள். இந்த மாதிரி விஷமிகளிடமிருந்து ஃபயர்வால்கள் உங்களைப் பாதுகாக்கும்.

உங்கள் கம்ப்யூட்டர் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது?

இங்கே பரிசோதித்துப் பாருங்கள். Arrow http://www.dslreports.com/scanஇந்த சைட் உங்கள் கம்ப்யூட்டரை ஊடுருவிகள் செய்வது போல் ஸ்கேன் செய்யும்.

(குறிப்பு: நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு பள்ளி / கல்லூரி / அலுவலக LAN-ல் இருந்தால் இதைப் பயன்படுத்தவேண்டாம். அநாவசிய சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்).

webulagam.com

Print this item

  கொபி அனான், கனேடிய அரசு வரவேற்பு
Posted by: vasisutha - 06-25-2005, 02:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

பொதுக்கட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் கைச்சாத்திட்டுள்ளதை ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் வரவேற்றுள்ளார்.


நியூயோர்க்கில் நேற்று வெள்ளிக்கிழமை (24.06.05) கொபி அனானின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை:

ஆழிப்பேரலை நிவாரணப் பகிர்விற்கான பொதுக்கட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் கைச்சாத்திட்டுள்ளது குறித்து செயலாளர் நாயகம் மகிழ்ச்சியடைந்துள்ளார்

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது. அனைத்துத் தரப்பினரையும் இணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இப்பொதுக்கட்டமைப்பை உருவாக்கிய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை பாராட்டியுள்ளார். மக்களின் தேவைகளை உடனடியாக அனைத்துத் தரப்பினரும் நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

இப்பொதுக்கட்டமைப்பின் குழுக்களில் முஸ்லிம் சிறுபான்மையினரும் இணைக்கப்பட்டுள்ளதை செயலாளர் நாயகம் கொபி அனான் வரவேற்றுள்ளார். ஆழிப்பேரலையால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து முழுமையாக சிறிலங்கா மீள்வதற்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும் என்றும் செயலாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் பியரி பெட்டிக்ரியூ மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் அய்லென் கரோல் ஆகியோர் கூறியதாவது:

இப்பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டதை வரவேற்கிறோம். இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதியில் மீளமைப்புத் திட்டப் பணிகளின் தேவைகளையும் அவற்றுக்கான அங்கீகாரத்தையும் பணிகளை கண்காணிப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் மேற்கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட முடியும்.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக உறுதியான நிலைப்பாடுடன் சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முஸ்லிம் தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். முடங்கி நிற்கும் அமைதிப் பேச்சுகளுக்கு இப்பொதுக்கட்டமைப்பானது உந்துசக்தியாக அமையும் என்று கனேடிய அரசு நம்பிக்கை கொள்கிறது.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் வெளிப்படையாகவும், செழுமையாகவும், சமமான பகிர்வுடனும் மேற்கொள்ளப்பட இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய காரணியாக விளங்கும். இருப்பினும் இலங்கையின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலை குறித்து நாம் கவலை கொள்கிறோம். இந்த ஒப்பந்தம் ஒரு சாதகமான நிலையை உருவாக்கக் கூடும் என கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர்

thanks to puthinam.com

Print this item

  வருந்துகின்றோம்
Posted by: yarlmohan - 06-24-2005, 11:56 PM - Forum: களம் பற்றி - Replies (66)

இன்று காலையில் யாழ் இணையம் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகியதன் காரணத்தினால் அனைத்து கோப்புகளையும் இழக்க வேண்டிதாகி விட்டது. இதன் காரணமாக தற்காலிகமாக முதல் பக்கம் இயங்காது. அத்துடன் இங்கு களத்தில் எதுவித convert களும், template களும் இணைக்கப்படவில்லை. தற்காலிகமாக http://www.suratha.com/reader.htm என்னும் முகவரியில் உள்ள பொங்குதமிழினைப் பாவித்து கருத்துக்களை இங்கு இணைக்கலாம்.

அத்துடன் கருத்துக்களத்தில் கடந்த 10 நாட்களுக்குரிய அனைத்துவிடயங்களும் இணைக்கப்பட்டது. இதன்மூலம் களப்பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

Print this item

  சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்
Posted by: hari - 06-14-2005, 10:27 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

சிலி நாட்டில் பயங்கர பூகம்பம்: அந்தமானிலும் நிலநடுக்கம்
ஜூன் 14, 2005

சாண்டியகோ போர்ட்பிளேர்:

தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று காலை மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்த பூகம்பத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பலர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.


நாட்டின் வட பகுதியில் பொலிவியா, பெரு நாட்டு எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட இந்தோனேஷிய நில நடுக்கத்துக்கு (9.0) பின் ஏற்பட்டுள்ள 3வது மிகப் பெரிய பூகம்பம் இது என அமெரிக்க பூகம்பவியல் மையம் அறிவித்துள்ளது. (இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிலேயே கடந்த மார்ச் 28ம் தேதி உண்டானது.)

இன்றைய சிலி நாட்டு சக்தி வாய்ந்த பூகம்பத்தால் அமெரிக்காவின் ஹவாய் கடலோரப் பகுதியில் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பரவியது. ஆனால், கடலடியில் நிலநடுக்கம் ஏற்படாததால் சுனாமிக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது.

பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் உடைந்து விழுந்தன. இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று தெரியவில்லை.

இந் நிலையில் இன்று அந்தமான் நிகோபார் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Print this item

  சிம்ரனுக்கு ஆண் குழந்தை
Posted by: ¦ÀâÂôÒ - 06-14-2005, 02:12 AM - Forum: சினிமா - Replies (2)

<img src='http://www.thehindu.com/thehindu/mp/2004/03/15/images/2004031501180101.jpg' border='0' alt='user posted image'>
நடிகை சிம்ரனுக்கு டெல்லி மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக சிம்ரனின் கணவர் தீபக் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகை சிம்ரன், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் தீபக், டெல்லியை சேர்ந்தவர்.

திருமணத்துக்கு பிறகு கிச்சா வயசு 16 படத்தில் மட்டும் நடித்தார். சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த வாய்ப்பை மறுத்தார்.

கணவருடன் டெல்லியில் வசித்து வந்த சிம்ரன், குழந்தை பிறந்த பிறகு தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து தீர்மானிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந் நிøலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிம்ரனுக்கு சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், ஆண் குழந்தை பிறந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் சிம்ரனின் கணவர் தீபக் கூறினார்.

சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் அவருக்கு போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

Print this item

  Michael Jackson's verdict
Posted by: Raguvaran - 06-14-2005, 12:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<b>Michael Jackson's verdict</b>

count1, not guilty
count2, not guilty
count3, not guilty
count4, not guilty
count5, not guilty
count6, not guilty
count7, not guilty
count8, not guilty
count9, not guilty
count10,not guilty

Michael Jackson has been found not guilty of all counts of charges.

Print this item

  கடி ஜோக்
Posted by: Mathan - 06-14-2005, 12:04 AM - Forum: நகைச்சுவை - Replies (359)

[size=13]இந்த தலைப்பில் கடி ஜோக்குகளை இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். முதல் கடி ஜோக்குடன் (?) ஆரம்பித்து வைக்கிறேன்.

காதலர்கள் ஏன் எப்போதும் பொய் பேசுறாங்க?

Print this item

  Vannakkam Ellorukkum
Posted by: tamilt - 06-13-2005, 10:15 PM - Forum: அறிமுகம் - Replies (19)

வணக்கம் வணக்கம் யாழ் வலயில் சிக்யிய நெத்தலி நான் கய்யோ கய்யோ வந்ததும் தொடங்கிடான்டா HI HI HI ennakku nalla tamil kathaikka teriyum but eluthurathu maranthu kondae pohuthu Cry enna seya velinadu endu padika kilamburathu appuram english,frenhc,dutch endu ella pasaiyayum kathukondu tamila maranthudurathu ithuthanae nadakuthu naan mattum enna vithi vilakka enna??
Im a little boy poha poha en vayasu neengalae solveenga...

Print this item

  புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வி அவசியமா?
Posted by: வியாசன் - 06-13-2005, 09:18 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (16)

வாரம் ஒரு விடயம் ஆராய்வோம் என்ற கேள்விக்கு பலரின் ஆதரவு கிடைத்தமையால் இந்த வாரம் புலம் பெயர் நாட்டில் குழந்தைகளுக்கு தமிழ் கல்வி அவசியமா? என்ற தலைப்பை ஆரம்பிக்கின்றேன்.
நாங்கள் எடுத்துக்கொள்ளும் தலைப்புக்கள் யாராவது ஒருவருக்காவது பிரயோசனப்படவேண்டும். தயவு செய்து யாரும் இங்கு தேவையற்ற உரையாடல்களை வைக்காதீர்கள்.

இந்த தலைப்பை ஒழுங்கு படுத்தி தரவேண்டிய பொறுப்பை எங்கள் மதனிடம் ஒப்படைத்துக்கொண்டு

புலம் பெயர் நாட்டில் குழந்தைகள் தமிழ் கற்கவேண்டிய அவசியம் பற்றி பலர் தெரிந்து கொள்வதில்லை சுவிற்சலாந்து நாட்டில் இரண்டு மாநிலங்களில் தமிழ் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன்.
உங்கள் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கூறலாம்

Print this item

  கினனஸ் உலக சாதனை
Posted by: ¦ÀâÂôÒ - 06-13-2005, 05:50 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (37)

<b>சுரேஷ் ஜோக்கிம்
</b><img src='http://img296.echo.cx/img296/6383/fro17pn.jpg' border='0' alt='user posted image'>

யாழ்ப்பாணம் -இளவாலையை பிறப்பிடமாகக் கொண்ட சுரேஷ் ஜோக்கிம் தொடர்ச்சியாக 100 மணிநேரம் `பௌலிங்' விளையாடி புதியகின்னஸ் உலகசாதனை யொன்றை நேற்று நிலை நாட்டியுள்ளார். இச்சாத னையை நிலை நாட்டும் முயற்சியின் போது உடைந்த பந்து களுடன் காண ப்படுகிறார்.
கனடாவில் நிறைவேற்றப்பட்ட இக்கினனஸ் உலக சாதனை அவரது 30 ஆவது சாதனை யாகும்.

Print this item