![]() |
|
கொபி அனான், கனேடிய அரசு வரவேற்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கொபி அனான், கனேடிய அரசு வரவேற்பு (/showthread.php?tid=4076) |
கொபி அனான், கனேடிய அரசு வரவேற்பு - vasisutha - 06-25-2005 பொதுக்கட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் கைச்சாத்திட்டுள்ளதை ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் வரவேற்றுள்ளார். நியூயோர்க்கில் நேற்று வெள்ளிக்கிழமை (24.06.05) கொபி அனானின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை: ஆழிப்பேரலை நிவாரணப் பகிர்விற்கான பொதுக்கட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் கைச்சாத்திட்டுள்ளது குறித்து செயலாளர் நாயகம் மகிழ்ச்சியடைந்துள்ளார் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது. அனைத்துத் தரப்பினரையும் இணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இப்பொதுக்கட்டமைப்பை உருவாக்கிய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை பாராட்டியுள்ளார். மக்களின் தேவைகளை உடனடியாக அனைத்துத் தரப்பினரும் நிறைவேற்ற வேண்டியது அவசியம். இப்பொதுக்கட்டமைப்பின் குழுக்களில் முஸ்லிம் சிறுபான்மையினரும் இணைக்கப்பட்டுள்ளதை செயலாளர் நாயகம் கொபி அனான் வரவேற்றுள்ளார். ஆழிப்பேரலையால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து முழுமையாக சிறிலங்கா மீள்வதற்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும் என்றும் செயலாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சர் பியரி பெட்டிக்ரியூ மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் அய்லென் கரோல் ஆகியோர் கூறியதாவது: இப்பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டதை வரவேற்கிறோம். இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதியில் மீளமைப்புத் திட்டப் பணிகளின் தேவைகளையும் அவற்றுக்கான அங்கீகாரத்தையும் பணிகளை கண்காணிப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் மேற்கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட முடியும். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக உறுதியான நிலைப்பாடுடன் சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முஸ்லிம் தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். முடங்கி நிற்கும் அமைதிப் பேச்சுகளுக்கு இப்பொதுக்கட்டமைப்பானது உந்துசக்தியாக அமையும் என்று கனேடிய அரசு நம்பிக்கை கொள்கிறது. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் வெளிப்படையாகவும், செழுமையாகவும், சமமான பகிர்வுடனும் மேற்கொள்ளப்பட இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய காரணியாக விளங்கும். இருப்பினும் இலங்கையின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் நிலை குறித்து நாம் கவலை கொள்கிறோம். இந்த ஒப்பந்தம் ஒரு சாதகமான நிலையை உருவாக்கக் கூடும் என கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர் thanks to puthinam.com - Nitharsan - 06-25-2005 தகவலுக்கு நன்றி வசி |