Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
மீண்டும் தற்காலிகமாக உடனடியாக இயங்கவைத்தமைக்கு நன்றி அண்ணா.. நல்லவனுக்கு பல எதிரிகள் எப்பவும் இருப்பார்கள்... எதுவிதமான இலாபமும் இன்றி சொந்த முதலில் இயங்கிக் கொண்டிருக்கும் யாழ் தளத்துக்கு எதிராக நேரடியாக ஒரு தளத்தை உருவாக்கி வளர்த்து தம் திறனைக்காட்டி இருக்காலாம் ஆனால் தம் கையாலாக தனத்தை பாவித்து யாழை அபகரிக்க பார்த்திருக்கிறார்கள். இவர்கள் என்றும் திருந்தப் போவது இல்லை . அவர்கள் செய்லைகளை உடனடியாக முறியடித்து, உங்கள் வேலைகளுக்கு மத்தியிலும் யாழை உடனடியாக இயங்கவைப்பது என்பது மிகப் பெரிய விடயம். அவ்வாறு செயற்பட்ட உங்களுக்கு எம் கள உறவுகள் சார்பில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
[b][size=18]
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
யாழ் இணையத்தை செயலிழக்க செய்தவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. யாழ் இணையம் என்றும் தொடர்ந்து இயங்கும். யாழ் இணையத்தை மீண்டும் முழுமையாகக் கட்டியெழுப்புவதில் களஉறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து மோகன் அண்ணாவிற்கு ஆதரவு வழங்குவோம்.
[b][size=18]விழ விழ எழுவோம்
விழுந்துநாம் கிடவோம்
விழ விழ எழுவோம்
விழிகளில் பொறியுடன்
விழ விழ எழுவோம்
நெஞ்சினில் துணிவுடன்
விழ விழ எழுவோம்
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
மோகன் அண்ணா.. மீண்டு(ம்) வந்ததில் மிகவும் மகிழ்ச்சி.
இதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க நாங்கள் இருக்கிறோம்...
எல்லாம் அழிந்ததால் என்ன நட்டம்?
கள உறவுகளை அழிக்க முடியுமா?????????
அவர்கள் சண்டை போட்டாலும் இங்குதானே எம்முடன்
இருக்கிறார்கள்.
மீண்டும் புதிய கருத்துகளால் களம் பொலிவுறும்..
இளைஞன் சொன்னது போல விழ விழ எழுவோம்..
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மீண்டும் களத்தை இயங்க செய்ததுக்கு நன்றிகள் மோகன் அண்ணா! கவலைப்படவேண்டாம், நாங்கள் எப்பொழுதும் உங்களுக்கு பலமாக இருப்போம்! விசமிகளின் நோக்கங்கள் நிறைவேறாதபடி மீண்டும் யாழை பலமாக கட்டியெழுப்புவோம்!
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
மதியம் (கனடாவில்) களத்திற்க்கு வந்தபோது அது சேவரினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு சென்றது.நான் ஏதோ தொழிநுட்ப பிரச்சினை என்று எண்ணி விட்டேன்.....
யாழ் களத்தின் வளர்ச்சியை பொறுக்காதவர்களும்...
நல்ல விடையங்களை அறிவதை கருத்தாடுவதை நசுக்கவும் இப்படியான சூழ்ச்சிகள் மூலம் சதி செய்யும் எவராலும் இலக்கை அடைய முடியாது....
நாம் உங்களோடு எந்நேரமும் இருப்போம்...
எதிர்புகளுக்கு முகம் கொடுத்து..
சவால்களை சந்திப்பினும் எப்போதும் உங்களை விட்டு நாங்கள் செல்ல மாட்டோம்....
யாரோ ஒருவர் சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன்
[size=18]எதிர்ப்புக்கள் எம்மை தொடருகின்றது என்றால் நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம்
எது எப்படியோ உடனேயே களத்தை பாவனைக்கு கொண்டு வந்த மேகன் அண்ணாவுக்கும் யாழ் இணைய தொழிநுட்ப வல்லுனர்களுக்கும் எனது மனமார்ந்து நன்றிகள்...

Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
யாழ் களம் வேலை செய்யாத போது ஏதோ திருத்தம் என்று இருந்துவிட்டேன்.
ஆனால் இப்போதுதான் தெரிந்தது நண்பர்களின் வேலையென
இது ஒருவரின் முறையாக இருக்ககலாகாது.
காற்றை தடுக்க முயலாதீர்கள்
அது எங்கும் வியாபிக்கும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[size=14]எமது தாய்க் களமான யாழ் களம் செயலிழந்தது கண்டு மிக மனவருத்தமும் வேதனையும் அடைந்தோம்...!
மீண்டும் யாழ் களம் புதுப்பொலிவுடன் இயங்க வாழ்த்துவதோடு கள உறவுகள் அனைவரும் அதற்கு விரைந்து ஒத்துழைப்போமாக..!
களத்தைத் தாக்க யாழ் இணைய எதிரிகள் தெரிவு செய்த காலம் குருவிகளுக்கு பொல்லாத காலம்..அதுமட்டுமன்றி யாழ் இணையம் மற்றும் களத்தின் மீதான இந்த இணையத் தாக்குதல் சந்தர்ப்பம் பார்த்து திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது..! மோகன் அண்ணா இது தொடர்பில் மேலும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்..!
[b]யாழ் இணையம் மற்றும் களத்தின் மீதான இணையத் தாக்குதலுக்கும் களத்தில் குருவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுகளுக்கும் குருவிகள் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
[b]என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்...!

Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
களம் நேற்று காலை செயலிழந்ததை அடுத்து மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் பலர் தொடர்பு கொண்டு என்ன நடந்தது ஏன் யாழ் வேலை செய்யவில்லை என்று தவிப்புடன் கேட்டனர். இது அவர்கள் யாழுடன் மனதளவில் எவ்வளவு இணைந்திருக்கின்றார்கள் என்பதை காட்டுகின்றது. இப்படியான யாழ் களத்தை செயலிழக்க செய்யவேண்டும் என்றும் சிலர் நினைக்கிறார்களே, அவர்களை என்னவென்று சொல்வது? எது எப்படியோ யாழ் களத்திற்கு இப்படியான தாக்குதல்கள் புதிதல்ல. முன்பெல்லாம் யாழ் களம் எப்படி அழிவிலிருந்து மீண்டதோ அதேபோல் சாம்பலில் இருந்து இந்த பீனிக்ஸ் பறவை உயிர்தெழும்.
கருத்துகளத்தின் அடிப்படை கட்டமைப்பை குறுகிய கால அவகாசத்தில் கட்டியெழுப்பிய மோகன் அண்ணாவிற்கும் நலம் விசாரித்த கள உறவுகளுக்கும் நன்றிகள்.
மோகன் அண்ணா மனம் தளராமல் யாழ் இணையத்தின் அனைத்து பாகங்களையும் மீள கட்டியெழுப்புங்கள். உங்களுக்கு ஆதரவாக அனைத்து கள உறுப்பினர்களும் இருக்கின்றோம்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மோகன் அண்ணா இந்த தளத்தில் லாப நோக்கம் ஏதும் இன்றி சொந்த பணத்தை செலவு செய்து நடாத்தி வருகின்றார். மனதை சோர்வடைய வைக்கும் இந்த நேரத்தில் கள உறுப்பினர்களின் அன்பான் ஆதரவான உற்சாகமூட்டும் வார்த்தைகள் களத்தை மீண்டும் கட்டியெழுப்ப மோகன் அண்ணாவிற்கு அசாத்திய பலத்தை கொடுக்கும். ஆகவே கள உறுப்பினர்கள் உங்கள் ஆதரவை வார்த்தைகளால் மோகன் அண்ணாவிற்கு தெரிவியுங்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
இந்த ஈனச்செயலால் தாம் ஒரு முதுகெலும்பற்ற கோழைகள் என்பதை செய்தவர்கள் நிரூபித்து உள்ளனர். கருத்தால் கருத்தை வெல்ல முடியாதவனும் முகத்துக்கு நேரே வந்து பேசமுடியாதவனுமே முதுகிலே குத்துபவன் . நீங்கள் எங்கிருந்தாலும் நன்றாக வாழுங்கள். தமிழன் விழ விழ எழுபவன் அதனால் நாம் இதனை எல்லாம் ஒரு பெரிய விடையமாக எடுக்கப்போவதில்லை. ஏனெனில் நிறைய காய்க்கும் மரத்துக்குத் தான் அதிகம் கல்லெறி விழும் .கல்லெறி விழுகிறதே என்று நினைக்காமல் மறுபடியும் அந்த மரம் காய்க்கும் அது போலவே மோகன் அண்ணாவும் ஏனைய மட்டுறுத்தினர் நண்பர்களும் ஏனைய கள உறவுகளும் யாழை மீண்டும் கட்டி எழுப்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க யாழ்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[size=13]வணக்கம் குருவி,
நேற்று முன் தினம் களத்தில் நடைபெற்ற கருத்து மோதல்கள் நடைபெற்ற சமயம் நான் களம் வராததால் உங்களுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை அதனை அறிந்து கொஞ்ச நேரத்தில் களம் செயலிழந்து விட்டது. அதனை சாதாரணமாக களத்தில் நடக்கும் ஊடல் என்று சொல்லலாம். அதை வைத்து நீங்கள் களத்தில் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கள உறவுகள் யாரும் கனவிலும் நினைக்க மாட்டார்கள். எனவே வருத்தம் வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைத்து மோகன் அண்ணாவிற்கு நம்முடைய ஆதரவை அளித்து களத்தை அழிக்க நினைக்கும் விசமிகளுக்கு எதிராக போராடுவோம். நாம் வழக்கம் போல் கருத்துகளத்தில் கருத்தாடுவதே அந்த விசமிகளிக்கு கிடைக்கும் முதல் தோல்வியாக இருக்கட்டும்.
நட்புடன்
மதன்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கள உறவுகளுக்கு ம் பொறுபாளர்களுக்கும் வணக்கம்.
நேற்றூ காலையில் ஒருமுறை களத்தை பார்வை இட்டுவிட்டு இரவு வந்து மீண்டும் திறக்க முயற்சித்தால் முடியவில்லை. சேவைவழங்கியின் பக்கத்துக்கு போனதை பார்த்துவிட்டு என்ன பிரச்சனை என குழம்பி போனேன். பின்னர் தான் தெரியவந்ததௌ தாக்குதலுக்கு உள்ளானவிசயம். ஓரே கவலையாக போய் விட்டது. முகம் தெரியாத பல உறவுகளை தனிப்பட்ட தொட்டர்புகள் இல்லமலே போதுகுடையின் கீழ் இணைத்தது யாழ் களம்.
இது மிகவும் கோழைத்தனமான் செயல். தமக்கு விருப்பமானால் தாகுதல் நடததியவர்களும் ஆரம்பிக்கவேண்டியது தானெ.
மீண்டும் களத்தை விரைவில் இயங்கவைத்த மோகன் அண்ணாவுக்கு பாரட்டுக்களும் நன்றியும்.
களவுறவுகள் என்றும் தங்கள் பக்கமே.

Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]யாழ் களம் அன்னைக்கு ஒத்தது... உறவுகளைப் பிரிந்து வாழும் எங்களுக்கு உறவானது... அந்நிய சூழலுக்குள் அன்னையின் சூழலைக் காட்டியது.. அதன் அன்புறவுகள் என்பவர்களும் எங்கள் சொந்தங்கள் போன்றவர்களே அதில் எப்போதும் சந்தேகம் தேவையில்லை..!
கருத்து வேறுபாடுகள் எங்கும் சகஜம்..அது கணத்தோடு தோன்றி கணத்தோடு மறைவது..அதை எப்போதும் நாம் மனதிருத்துவதில்லை...! தமிழும் நட்பும் அன்பும் இருக்கும் வரை எந்த சக்தியாலும் எங்கள் யாரையும் பிரிக்க முடியாது.. எங்கள் யாழ் இணைய அன்னையைச் சீரழிக்க முடியாது...!
நண்பர்கள் வலைஞனும் மதனும் காட்டிய நம்பிக்கை போன்று கள உறவுகள் எங்கள் மீதும் களம் மீதும் தமிழ் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் இயன்றவரை எப்போதும் காப்போம்...! இப்போ யாழின் மீட்சிக்கு மோகன் அண்ணாவுக்கு தோள் கொடுப்போம்.. அவர் பல தடைகளைத் தாண்டி வந்தவர்..இந்தத் தடைகளையும் தகர்த்து வர நாம் எல்லோரும் துணை இருப்போம்..!
நன்றி..!
என்றும் நட்புடன் அன்பின் குருவிகள்..!

Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
களம் மீண்டும் புதுப்பொலிவுடன் வரும் என்பதில் முழுநம்பிக்கை உண்டு. விஷமிகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க எல்லோரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும்.

Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Meendum puthupolivudan vara enathu oththulaippu enrum undu. ( Ennal tamilil elutha mudiyamal ullathu)
Vasampu