![]() |
|
சிம்ரனுக்கு ஆண் குழந்தை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சிம்ரனுக்கு ஆண் குழந்தை (/showthread.php?tid=4079) |
சிம்ரனுக்கு ஆண் குழந்தை - ¦ÀâÂôÒ - 06-14-2005 <img src='http://www.thehindu.com/thehindu/mp/2004/03/15/images/2004031501180101.jpg' border='0' alt='user posted image'> நடிகை சிம்ரனுக்கு டெல்லி மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக சிம்ரனின் கணவர் தீபக் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகை சிம்ரன், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் தீபக், டெல்லியை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு கிச்சா வயசு 16 படத்தில் மட்டும் நடித்தார். சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த வாய்ப்பை மறுத்தார். கணவருடன் டெல்லியில் வசித்து வந்த சிம்ரன், குழந்தை பிறந்த பிறகு தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து தீர்மானிப்பேன் என்று கூறியிருந்தார். இந் நிøலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிம்ரனுக்கு சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், ஆண் குழந்தை பிறந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் சிம்ரனின் கணவர் தீபக் கூறினார். சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் அவருக்கு போனில் வாழ்த்து தெரிவித்தனர். - Danklas - 06-14-2005 வாழ்த்துக்கள் பெரியப்பு சீ திபக் அண்ட் சிம்ஸ் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 09-07-2005 நன்றி ஏன் சிம்ரனின் குழந்தப் படத்தை போட்டால் பார்க்கலாம்? இருந்தாலும் வாழ்த்துக்கள் சொல்லிவிடுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |