Yarl Forum
காலண்டரில் கண்ட முத்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: காலண்டரில் கண்ட முத்துக்கள் (/showthread.php?tid=4064)

Pages: 1 2


காலண்டரில் கண்ட முத்துக்கள் - SUNDHAL - 06-26-2005

திங்கள் : துணிவு இல்லையேல் வாய்மை இல்லை.வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.

செவ்வாய் : சான்றோர்கள் குற்றத்தைத் தான் பார்ப்பார்கள்.குற்றவாளி களைப் பார்க்க மாட்டார்கள்.

புதன்: துன்பத்தில் இருக்கும் ஏழை கூப்பிடாவிட்டாலும் உடனே போய் பார்.ஆனால் செல்வத்தில் இருப்பவன் கூப்பிடாமல் நீயாக போகதே.

வியாழன்: நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்,

வெள்ளி: உண்மையே பேசுங்கள். ஏனெனில் உண்மையே பக்திக்கு வழி காட்டுகிறது.

சனி: அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.

ஞாயிறு: ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன்


- Nitharsan - 06-27-2005

நன்றி சுண்டல்...
சுண்டலை சுத்தி பேப்பர்ல கொடுத்தா நீங்கள் பேப்பர்ல இருக்கிற பொன்மொழிகளை படிக்கிறீங்களாக்கும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 06-27-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 06-27-2005

நன்றி சுண்டல் அண்ணா


- Mathan - 06-27-2005

நன்றி சுண்டல்

Nitharsan Wrote:சுண்டலை சுத்தி பேப்பர்ல கொடுத்தா நீங்கள் பேப்பர்ல இருக்கிற பொன்மொழிகளை படிக்கிறீங்களாக்கும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சிலசமயங்களில் சுவாரசியமான சில செய்திகள் இப்படி பொருட்களை சுற்றி வரும் பேப்பரில் படித்திருக்கின்றேன்


- வெண்ணிலா - 06-27-2005

Quote:ஞாயிறு: ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன்


அப்படியானவன் யார்? :?:


- SUNDHAL - 06-27-2005

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன் வாழ்வு சிறக்காது.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: காலண்டரில் கண்ட முத்துக்கள் - Malalai - 06-27-2005

SUNDHAL Wrote:வியாழன்: நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்,

அப்டிங்கிறிங்க சுண்டல் அண்ணா? நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- kuruvikal - 06-27-2005

இதென்ன பிறந்த கிழமைப் பலன்களா... சிந்திக்க உதவுது...இது எல்லாம் ஒருவனுக்குள் அடங்கி இருந்தால்...அவனே ஒரு வரம்..சா வாரம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- SUNDHAL - 08-09-2005

[b]திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு

செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.

புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.

சனி: அனிபளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.

ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.


- Jenany - 08-09-2005

<!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->நன்றி சுண்டல்...  
சுண்டலை சுத்தி பேப்பர்ல கொடுத்தா நீங்கள் பேப்பர்ல இருக்கிற பொன்மொழிகளை படிக்கிறீங்களாக்கும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Jenany - 08-09-2005

நன்றி சுண்டல்...அறிய தந்தமைக்கு....


- Rasikai - 08-09-2005

நன்றி சுண்டல் தகவலுக்கு


- shobana - 08-09-2005

அண்ணா இது விளங்கல ஏன் கிழமையோட சேர்த்து எழுதி இருக்கிறீங்க என்று??


- அருவி - 08-10-2005

சோபனா தலைப்பைப் பாருங்கள் புரியும்


Re: காலண்டரில் கண்ட முத்துக்கள் - Mind-Reader - 08-11-2005

<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->திங்கள் : துணிவு இல்லையேல் வாய்மை இல்லை.வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.

செவ்வாய் : சான்றோர்கள் குற்றத்தைத் தான் பார்ப்பார்கள்.குற்றவாளி களைப் பார்க்க மாட்டார்கள்.

புதன்: துன்பத்தில் இருக்கும் ஏழை கூப்பிடாவிட்டாலும் உடனே போய் பார்.ஆனால் செல்வத்தில் இருப்பவன் கூப்பிடாமல் நீயாக போகதே.

வியாழன்: நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்,

வெள்ளி: உண்மையே பேசுங்கள். ஏனெனில் உண்மையே பக்திக்கு வழி காட்டுகிறது.

சனி: அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.

ஞாயிறு: ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சுண்டல் ஞாயிற்று கிழமையை பொன்மொழியை நீங்கள் முழுமையாக முடிக்க வில்லை


- SUNDHAL - 08-11-2005

<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன் வாழ்வு சிறக்காது.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அதான் முடிச்சாச்சே :oops:


- ப்ரியசகி - 08-19-2005

நல்லா இருக்கு...
ஆனால் இது என்ன ஒவ்வொரு நாளும் நாங்கள் இதை மனசில கொண்டு நடக்க வேணுமா? :roll:


- SUNDHAL - 08-21-2005

திங்கள் : தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கிறார்கள்.

செவ்வாய் : பேசும் முன்பாக இருமுறை சிந்திக்கவும்.

புதன் : ஒரு முறை கூட சிரிக்காமல் கழித்த நாளே, வீணாகக்கழித்த நாளாகும்.

வியாழன் : சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறமையின் உயிர்நாடி.

வெள்ளி : மக்களுடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றுவதுதான்புரட்சி.

சனி : பணம் வரும்போது இரண்டு கால்கள். போகும் போது 100 கால்கள்.

ஞாயிறு : தன்மானமே ஒழுக்கத்திற்கு அடிப்படை.


- vimalan - 08-21-2005

திங்கள் : அதிகமாகப் பேசுவதனால் மட்டுமே ஒருவன் அறிஞன் ஆகி விட முடியாது.

செவ்வாய் : நீ துன்பமுறக் காரணம் எதுவாக இருந்தாலும் நீ பிறருக்கு துன்பம் தராதே.

புதன் : மனிதன் தீமையை நன்மையாலும் கோபத்தை அன்பாலும் வெல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வியாழன் : பிறரை வெல்வதை விட தன்னைத்தானே வென்றுகொள்வது மேலானது.

வெள்ளி : சுத்தமும் அசுத்தமும் அவனவன் செயலே.

சனி : நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப் போல உள்ளத்தை அமைதியாக வைத்திருங்கள்.

ஞாயிறு : :roll: :roll: :roll: