06-28-2005, 11:44 AM
<b>இனியாவது புரியும்!..</b>
எதிரே,தெரி கிறதே-அது எமதாருயிர் ஈழம்!
.............எதுநேரினும் அடைவோம்-அது எமைத்தாங்கிய ஞாலம்!
மகிழ்வாய்த் தமிழ்க் குலம்வாழ்ந்திட மலர்கின்றது காலம்!
............. மண்மீதினில் இனிகேட்பது ஜெயபேரிகை மேளம்!...
இனிதாம்எம(து) இனம்வாழ்ந்திட ஒருதாயகம் வேண்டும்!
............. இனி, தாழ்வது நடவாதென முடிவானது யாண்டும்!
மனிதார்த்தமும் செயல்வீரமும் மலைமுகடுகள் தாண்டும்!
............. மணித்தமிழ்மகன் நிமிர்நன்னடை பயில்வான்,இனி மீண்டும்!...
தலைநிமிர்வுகொள் தமிழா!ஒரு தனிக்காவியம் தீட்டு!
............. தாரணிதனில் போரணிபுகழ் நமதென்பதைக் காட்டு!
விலைதருவது பொன்னுயிரெனும் உண்மையை நிலைநாட்டு!
............. விளைவது சுதந்திரமென்பதைப் பிழையற நினைவூட்டு!
கருவானது கருகும்படி தமிழ்மானிடர் அழுது,
............. கடுவெந்தழல் படுவேள்வியில் விழுதூன்றிய பொழுது,
உருவானது திருநாடென ஒருவாசகம் எழுது:
............. ஒளிஞாயிறு நமதாவதை உணர்வால்தினம் தொழுது!
உலகானது பலகாலமும் இமைமூடிய துண்டு:
............. உரிமைக்குரல் விரும்பாதவர் செவிமூடிய துண்டு:
இளகாதவன் புலைகாடையன் இழிதாண்டவம் கண்டு,
............. எமைவையகம் வரவேற்றது நடுமாண்மதி கொண்டு!
செந்நீரொடு கண்ணீர்த்துளி தெளிதேசியம் புகலும்:
............. சிங்களவனின் வெங்களவினை எங்களைஇனி அகலும்!
பொன்னீழமும் நன்னேயமும் பூங்காற்றொடு துயிலும்!
............. புதுப்பாட்டொலி தரும்,வைகறை தொறும்-சோலையின் குயிலும்!
திருமண்ணொடு விதையாகிய அடலேறுகள் எண்ணம்
............. திடமாயினி நிறைவேறிடும் தமிழோர்விழி முன்னம்!
தருமம்செறி சபையோர்திருச் சுடரேந்திய வண்ணம்
............. தமிழீழமும் திருஊர்வலம் வருவாள்:இது திண்ணம்!
பணியாதது தமிழ்வேங்கையர் படையென்பது தெரியும்:
............. பகையாளனின் சதிவேலைகள் அடிவேரொடு சரியும்:
தணியாதெனும் துணிவானது கடல்தாண்டியும் விரியும்:
............. தனியாவது தமிழீழமென்(று) இனியாவது புரியும்!...
தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->