![]() |
|
இனியாவது புரியும்!.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இனியாவது புரியும்!.. (/showthread.php?tid=4043) Pages:
1
2
|
இனியாவது புரியும்!.. - hari - 06-28-2005 <b>இனியாவது புரியும்!..</b> எதிரே,தெரி கிறதே-அது எமதாருயிர் ஈழம்! .............எதுநேரினும் அடைவோம்-அது எமைத்தாங்கிய ஞாலம்! மகிழ்வாய்த் தமிழ்க் குலம்வாழ்ந்திட மலர்கின்றது காலம்! ............. மண்மீதினில் இனிகேட்பது ஜெயபேரிகை மேளம்!... இனிதாம்எம(து) இனம்வாழ்ந்திட ஒருதாயகம் வேண்டும்! ............. இனி, தாழ்வது நடவாதென முடிவானது யாண்டும்! மனிதார்த்தமும் செயல்வீரமும் மலைமுகடுகள் தாண்டும்! ............. மணித்தமிழ்மகன் நிமிர்நன்னடை பயில்வான்,இனி மீண்டும்!... தலைநிமிர்வுகொள் தமிழா!ஒரு தனிக்காவியம் தீட்டு! ............. தாரணிதனில் போரணிபுகழ் நமதென்பதைக் காட்டு! விலைதருவது பொன்னுயிரெனும் உண்மையை நிலைநாட்டு! ............. விளைவது சுதந்திரமென்பதைப் பிழையற நினைவூட்டு! கருவானது கருகும்படி தமிழ்மானிடர் அழுது, ............. கடுவெந்தழல் படுவேள்வியில் விழுதூன்றிய பொழுது, உருவானது திருநாடென ஒருவாசகம் எழுது: ............. ஒளிஞாயிறு நமதாவதை உணர்வால்தினம் தொழுது! உலகானது பலகாலமும் இமைமூடிய துண்டு: ............. உரிமைக்குரல் விரும்பாதவர் செவிமூடிய துண்டு: இளகாதவன் புலைகாடையன் இழிதாண்டவம் கண்டு, ............. எமைவையகம் வரவேற்றது நடுமாண்மதி கொண்டு! செந்நீரொடு கண்ணீர்த்துளி தெளிதேசியம் புகலும்: ............. சிங்களவனின் வெங்களவினை எங்களைஇனி அகலும்! பொன்னீழமும் நன்னேயமும் பூங்காற்றொடு துயிலும்! ............. புதுப்பாட்டொலி தரும்,வைகறை தொறும்-சோலையின் குயிலும்! திருமண்ணொடு விதையாகிய அடலேறுகள் எண்ணம் ............. திடமாயினி நிறைவேறிடும் தமிழோர்விழி முன்னம்! தருமம்செறி சபையோர்திருச் சுடரேந்திய வண்ணம் ............. தமிழீழமும் திருஊர்வலம் வருவாள்:இது திண்ணம்! பணியாதது தமிழ்வேங்கையர் படையென்பது தெரியும்: ............. பகையாளனின் சதிவேலைகள் அடிவேரொடு சரியும்: தணியாதெனும் துணிவானது கடல்தாண்டியும் விரியும்: ............. தனியாவது தமிழீழமென்(று) இனியாவது புரியும்!... தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com ) - Mathan - 06-28-2005 கவிதைக்கு அறிய தந்தமைக்கு நன்றி ஹரி - Nitharsan - 06-28-2005 நன்றி ஹரி மற்றும் சூசைமிக்கேல் - tamilini - 06-28-2005 நன்றி மன்னர் அண்ணா கவிதையை இணைத்தமைக்கு.. - Niththila - 06-28-2005 நன்றி ஹரி அண்ணா கவிதையை இணைத்தமைக்கு - வெண்ணிலா - 06-29-2005 நன்றி மன்னா - hari - 06-29-2005 வெண்ணிலா நீங்கள் சொன்னமாதிரி கல்கிஷ்சை, ரத்மலானக்கு அதிவேக இணைப்பு வந்துவிட்டது. வெகுவிரைவில் எனக்கும் கிடைக்கும், - அருவி - 06-29-2005 கவிதைக்கு நன்றி ஹரியண்ணா - tamilini - 06-29-2005 Quote:வெண்ணிலா நீங்கள் சொன்னமாதிரி கல்கிஷ்சை, ரத்மலானக்கு அதிவேக இணைப்பு வந்துவிட்டது. வெகுவிரைவில் எனக்கும் கிடைக்கும்,வலு சந்தோசம் போல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 06-29-2005 சந்தோசம் தான்! ஆனால் தேவையான நேரம் கிடைக்கவில்லை! - வெண்ணிலா - 06-29-2005 hari Wrote:சந்தோசம் தான்! ஆனால் தேவையான நேரம் கிடைக்கவில்லை! ரொம்ப சந்தோஷம் அண்ணா. அண்ணி வந்ததால் இனிமேல் தங்களுக்கு தேவையில்லை என நினைக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 06-29-2005 அடடா.. பாத்தியளா அண்ணா அண்ணி வாறா என்றவுடன் எல்லாம் நல்லாய் நடக்கிறது. - kuruvikal - 06-29-2005 கவிதைக்கு நன்றி மன்னா..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அண்ணிக்கும் புரோட் பாண்டுக்கும் என்ன சம்பந்தம்...சும்மா சும்மா அண்ணியைச் சொல்லி மன்னரைக் குழப்பாதேங்க..மன்னா நீங்க ஸ்ரெடியா இருங்க...உதுகளை நம்பாம...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2005 ஒரு பெண்ணால நடந்தது என்று சொன்னா பொறுக்காதே நம்ம சீனியருக்கு :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-29-2005 பிறகு ஏதும் சிறு தீமை நடந்தால் கூட அதுவும் பெண்ணாலே என்று சொல்வதை விட குருவி சொன்னது போல சம்மந்தம் இல்லை என்பது நல்லதல்லவா? - வெண்ணிலா - 06-29-2005 tamilini Wrote:ஒரு பெண்ணால நடந்தது என்று சொன்னா பொறுக்காதே நம்ம சீனியருக்கு :wink: <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 06-29-2005 kuruvikal Wrote:கவிதைக்கு நன்றி மன்னா..! <!--emo&நான் எப்பவும் ஸ்ரெடிதான்! குருவிகளே நன்றி அறிவுரைக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 06-29-2005 vennila Wrote:ஏன் அண்ணி இன்டர்நெட் கனக்ஷனோடுதான் வருவாவா? :evil:hari Wrote:சந்தோசம் தான்! ஆனால் தேவையான நேரம் கிடைக்கவில்லை! - வெண்ணிலா - 06-30-2005 hari Wrote:vennila Wrote:ஏன் அண்ணி இன்டர்நெட் கனக்ஷனோடுதான் வருவாவா? :evil:hari Wrote:சந்தோசம் தான்! ஆனால் தேவையான நேரம் கிடைக்கவில்லை! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-30-2005 நன்றி மன்னா கவிதைக்கு |