![]() |
|
பருத்தித்துறை வடை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பருத்தித்துறை வடை (/showthread.php?tid=4044) |
பருத்தித்துறை வடை - stalin - 06-28-2005 பருத்தித்துறை வடை செய்முறை யாருக்கும் தெரியுமா... பலபாகங்களில் செய்யும் வடைக்கும் பருத்தித்துறை வடைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பருத்தித்துறை அப்பம் தோசை செய்முறைமையும் மற்றைய பகுதிகளில் செய்பவர்களிலும் வித்தியாசமானது.பருத்திதுறை வெள்ளையப்பத்தின் சுவை அலாதியானது . காலம் காலமாக அப்பகுதி மக்கள் தொழில் மூறை ரகசியமாய் பாதுகாத்து வந்தார்கள். ஆனால் இன்று பலபேருக்கு தெரியுமென்று நினைக்கிறேன்...நாவலியூர் சோமசுந்தரப்புலவர் கூட பருத்தித்துறை வடையை புகழ்ந்து பாடலில் எழுதியுள்ளார்-------------------------------------------இந்த செய்மூறை விளக்கம் தெரிந்தவர்கள் யாராவாது கூறுவீர்களா------------------------------------------------------------------------ஸ்ராலின் - nirmalan - 06-28-2005 தேவையான பொருட்கள்: 1 சுண்டு உழுத்தம் பருப்பு 1 சுண்டு அவித்த கோதுமை மா 1 சுண்டு அவிக்காத கோதுமை மா செத்தல் மிளகாய் கிறஸ் (அதாவது அறுவல் நொறுவலாக இருத்தல் வேண்டும்) 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் அளவாக உப்பு சிறிது சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை விரும்பினால் 2 தேக்கரண்டி எள்ளு செய்முறை: உழுத்தம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நீர் நன்கு வடிய விட்டு ஒரு பத்திரிகையில் அல்லது வெள்ளைத் துணியில் காய வைக்கவும். பின்னர் உழுத்தம் பருப்பு, அவித்த கோதுமை மா, அவிக்காத கோதுமை மா, எள்ளு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுடு நீரில் உப்பை கலந்து இடியப்பத்திற்கு மாக் குழைப்பது போன்று இறுக்கமான நிலையில் அடித்துக் குழைக்கவும். பின்னர் முழு நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக பிடித்து அதனை சான்ட்விச் பாக் (அதாவது சொப்பிங்க் பாக் போன்று இருப்பது நல்லது) ஒரு பேணியை எடுத்து அதில் தட்டித், தட்டி எண்ணெயில் பொரிக்கவும். - Mathan - 06-28-2005 படிக்க வாயூறுகின்றது. இனி தமிழ் கடைக்கு தான் போகணும். வடை செய்யும் பொருள் வாங்க அல்ல வடை வாங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 06-29-2005 நன்றிகள் நிர்மலன் பருத்தித்துறை வடைக்கு----------நிர்மலனுக்கு பருத்தித்துறை வடை செய்யும் ராணுவ ரகசியம் தெரிந்திருக்கிறது------நிர்மலன் பருத்தித்துறை வெள்ளையப்பம் செய்யும் முறையும் தெரிந்திருக்குமென்று நம்புகிறேன். பல மைல் தூர இடங்களிருந்து மாலை நேரங்களில் வெள்ளையப்பம் வாங்க பருத்தித்துறை செல்வார்கள்--------------நிர்மலன் இதைப்பற்றி சொல்லமுடியமானால் சொல்லவும் .சிலர் பகிடியெடுத்தாலும் பராவாயில்லை உந்தவிசயங்களும் வரலாற்று பொக்கிஸங்கள் தான் அழியவிடகூடாது--------------------------------------------------------------------------------ஸ்ராலின் - SUNDHAL - 06-29-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 06-29-2005 பருத்துதுறை வெள்ளையப்பம் பற்றி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இது கொழும்பு பகுதியில் சிங்கள்/முஸ்லீம் கடைகளில் கிடைக்கும் பால் விடாத சம்பலுடன் சாப்பிடும் அப்பம் போலவா? - Niththila - 06-29-2005 வெள்ளையப்பம் ?? நான் இப்பதான் கேள்விப் படுறன் - stalin - 06-29-2005 Mathan Wrote:பருத்துதுறை வெள்ளையப்பம் பற்றி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இது கொழும்பு பகுதியில் சிங்கள்/முஸ்லீம் கடைகளில் கிடைக்கும் பால் விடாத சம்பலுடன் சாப்பிடும் அப்பம் போலவா?மதன் நீங்கள் சொல்லுவது போல்தான் கிட்டதட்ட தமிழ் கடைகளிலும் கிடைத்தது---வெள்ளையப்பம் என்றால் என்ன என்ற கேள்வியே புலத்திலுள்ளவர்கள் தங்கள் மண்வாசனையை மெல்ல மெல்ல இழந்துவிடுவார்களோன்று அச்சத்தை ஏற்படுத்துகிறது--------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின் - Mathan - 06-29-2005 ம் கவலை தான் நான் யாழில் இருக்கும் போது பயமின்றி பருத்திதுறை செல்ல கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. வல்லை பாலத்தினூடான பயணம் குறித்த அச்சத்தினால் யாழில் தனியாகவோ நண்பர்களுடனோ இருந்து வடமராச்சி செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை. நான் எனக்கு நினைவு தெரிந்து வடமராச்சி சென்றது இரண்டு அல்லது மூன்று முறைதான் என்று நினைக்கின்றேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 06-30-2005 Mathan Wrote:படிக்க வாயூறுகின்றது. இனி தமிழ் கடைக்கு தான் போகணும். வடை செய்யும் பொருள் வாங்க அல்ல வடை வாங்க <!--emo&அட பருத்துறை வடை நல்லா இருக்குமே. அப்படியே எனக்கும் ஒன்று மதன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |