Yarl Forum
ஜே.வி.பியின் புதிய கூட்டமைப்பில் இணைய 4 கட்சிகள் முடிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜே.வி.பியின் புதிய கூட்டமைப்பில் இணைய 4 கட்சிகள் முடிவு (/showthread.php?tid=4041)



ஜே.வி.பியின் புதிய கூட்டமைப்பில் இணைய 4 கட்சிகள் முடிவு - MUGATHTHAR - 06-28-2005

ஆழிப்பேரலை நிவாரண சபைக்கு எதிராக ஜே.வி.பியுடன் இணைந்து புதிய கூட்டணியொன்றை ஏற்படுத்த நான்கு முஸ்லிம் கட்சிகள் நேற்று திங்கட்கிழமை முடிவு செய்துள்ளன.


முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜே.வி.பியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கஇ பொதுச் செயலாளர் டில்வின் சில்வாஇ பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோருக்கும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நேற்று நுகேகொடையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஜனநாயக ஐக்கிய கூட்டணியைச் சேர்ந்த ரசீர் அகமட்இ எம்.ஐ.உதுமா லெப்பைஇ மாகாண சபை உறுப்பினர் ஏ.எப்.எம். முஸம்மில்இ ஐக்கிய முஸ்லிம் மக்கள் முன்னணியின் நாசர் மௌலானாஇ என். நவுஸர்இ சிறிலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் மற்றும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரே ஜே.வி.பி பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

இதற்கமைய எதிர்காலத்தில் பொதுக்கட்டமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை எல்லோரும் இணைந்து மேற்கொள்ளவும்இ பொதுக்கட்டமைப்பிற்கெதிராக மக்கள் கருத்துக்களை கட்டியெழுப்பவும் இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்க்காலத்தில் ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் இந்த புதிய கூட்டணியில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் தெரிவித்துள்ளார்

புதினம்