Yarl Forum
இப்படியும் காதலாம்...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இப்படியும் காதலாம்...?! (/showthread.php?tid=4017)



இப்படியும் காதலாம்...?! - kuruvikal - 06-30-2005

<b>44 வயது பேராசியருடன் வாழ 19 வயது மாணவிக்கு கோர்ட் அனுமதி!</b>

சென்னை:

44 வயதான கல்லூரிப் பேராசியரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்ட 19 வயது மாணவி, அவரது விருப்பப்படி காதல் கணவருடன் வாழ சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் பூர்ணிமா. 19 வயதான பூர்ணிமா, சேலத்தில் உள்ள நேஷனல் கம்ப்யூட்டர் அகாடமியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பில் படித்து வந்தார்.

பூர்ணிமாவுக்கும், தர்மபுரி மாவட்டம் தங்காபுதூரைச் சேர்ந்த பழனியப்பன் என்ற கல்லூரி பேராசியருக்கும் காதல் ஏற்பட்டது. பழனியப்பனுக்கு 44 வயது. ஏற்கனவே சகுந்தலா என்ற பெண்ணுடன் கல்யாணமாகி அவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.

இருப்பினும் சகுந்தலாவின் வீட்டார் பழனியப்பன் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு தொடர்ந்ததால், கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந் நிலையில், பழனியப்பனின் வயது, அவரது குடும்பப் பின்னணி குறித்து கவலைப்படாமல் அவரை தொடர்ந்து காதலித்து வந்த பூர்ணிமா, கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி பழனியப்பனுடன் சென்றார்.

இதையடுத்து பூர்ணிமாவின் தந்தை அர்ஜூன் லால்சிங், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகளை பழனியப்பன் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டதாகவும், பிப்ரவரி 17ம் தேதி முதல் தனது மகளைக் காணவில்லை என்றும், அவரை பழனியப்பனிடமிருந்து மீட்டுக் கொடுக்குமாறும் கோயிருந்தார்.

இதுதொடர்பாக இருவரையும் கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பூர்ணிமாவைக் கண்டுபிடித்தனர்.

அவர் நேற்று (புதன்கிழமை) நீதிபதிகள் சதாசிவம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் பூர்ணிமா கூறுகையில், நான் விரும்பித் தான் பழனியப்பனுடன் சேர்ந்து வாழ்கிறேன். நாங்கள் இருவரும் பிப்ரவரி 18ம் தேதி மாணியம்பாடி என்ற ஊரில் உள்ள கோவிலில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்டோம்.

ஆனால் கல்யாணத்தை முறைப்படி இன்னும் பதிவு செய்து கொள்ளவில்லை. எனக்கு பழனியப்பனை சிறு வயதிலிருந்தே தெரியும், அதாவது நான் 9வது வகுப்பு படித்து வந்த நாள் முதலே தெரியும். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததால் தான் காதலித்தேன்.

பழனியப்பனின் குடும்பப் பின்னணி, அவரது வயது குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் மீது எனக்கு தூய காதல் ஏற்பட்டதால் இவை எல்லாம் எனது கண்ணில் படவில்லை. நான் அவருடன் தான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். என்னை யாரும் மிரட்டவில்லை, கடத்தவில்லை.

பழனியப்பனுடன் வாழ்ந்தால் தான் எனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். எனவே என்னை அவருடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றார் பூர்ணிமா.

இதையடுத்து பழனியப்பனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரும், பூர்ணிமா தனது மனைவி என்றும் அவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். பூர்ணிமாவின் வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதிகள், இதற்கு மேல் இந்த வழக்கில் எதுவும் இல்லை.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணே மிகத் தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டார். கோவிலில் கல்யாணம் செய்து கொண்டதற்கான ரசீதையும் காட்டியுள்ளார். இருவரும் மனமொத்துத் தான் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. பெண் கடத்தப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.

எனவே ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மாணவி பூர்ணிமா, பழனியப்பனுடன் சேர்ந்து வாழலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பூர்ணிமாவும், பழனியப்பனும் சந்தோஷமாக நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர்.

thatstamil.com


- Niththila - 06-30-2005

:roll: :roll: :roll:


- kuruvikal - 06-30-2005

என்ன முழிக்கிறீங்க...கோட் ஓடர்....அது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 06-30-2005

Quote:பழனியப்பனின் குடும்பப் பின்னணி, அவரது வயது குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் மீது எனக்கு தூய காதல் ஏற்பட்டதால் இவை எல்லாம் எனது கண்ணில் படவில்லை. நான் அவருடன் தான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். என்னை யாரும் மிரட்டவில்லை, கடத்தவில்லை.
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> காதல்


- kuruvikal - 06-30-2005

காதலுக்கு கண்ணில்லை என்பது இதுதானே...?! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Confusedhock:


- Niththila - 06-30-2005

நான் கோட் ஓடரைப் பாத்து முழிக்கேல்லை அண்ணா பொதுவாக வழக்குகளில சம்பந்தப்பட்ட ஆள் கோட்டில கொண்டு வரப்பட்ட பிறகு வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்புகள் அமையும்.

ஆனா இங்க 19 வயசு பெண்ணுக்கு 44 வயசு ஆளோட காதல் வருகுதே எண்டுதான் முழிச்சனான்

இது காதலா இல்லை infatuation ஆ :roll: :roll:


- kuruvikal - 06-30-2005

இங்கதான் எங்கள் பொதுவான பார்வையில தப்பிருக்கு...நாங்க வயது..சாதி...மதம்..நிறம்.. பின்னணி...மூஞ்சி...அந்தஸ்து...படிப்பு...பணம்..வசதி வாய்ப்பு...இப்படியான மனிதன் உருவாக்கிய செயற்கைக் கவர்ச்சிகளுக்கு எங்களை அறியாமலே அடிமையாகி அதன் மூலம் எங்கோ ஓர் இடத்தில் எழும் செல்வாக்கின் நிமித்தமே காதல் என்றதை அங்கீகரிக்கிற நிலையில் இருந்து கொண்டிருக்கிறம்....பட் இங்க கருத்தில எடுக்க வேண்டிய அந்த ஆணைவிட அந்தப் பெண்ணின் வாக்குமூலம்... அது அவளுடைய உண்மையான தூய உணர்வாகக் கூட இருக்கலாம் எல்லா...ஏன் 44 வயது ஆணுக்கும் 19 வயது பெண்ணுக்கும் காதல் வரக் கூடாது என்று இயற்கையில விதிப்பு இருக்கா...???! இல்லையே...!

பட்.. என்ன விவாகமாகி... வாழ்ந்து.. குழந்தை பெற்ற ஒருவர்...விவாகரத்தே பெறாத ஒருவர்.. எப்படி சட்டப்படி இரண்டாம் திருமணம் செய்யலாம்..???! அதற்கு முதல்..அவர் முதல் மனைவியோட..ஏன் காதல் இன்றி வாழ்த் தலைப்பட்டார்...??! அதற்கு யார் பொறுப்பு...சமூகமா..அவரா...அதுதான் குடும்பப் பிரச்சனைக்கு காரணமா...அந்த வகையில்... உண்மையில் அவரைப் பொறுத்தவரை இது தூய காதலா...??! இப்படி பல வினாக்கள் தொக்கு நிக்கின்றன...! இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்...! பல குடும்பவியல் சமூகப் பிரச்சனைகளின் அத்திவாரம் இங்கிருந்துதான் எழுகிறது குறிப்பாக கீழைத்தேய நாடுகளில்...!

மேற்கில 54 19 காதலிக்கிறது சகஜம்....அதற்கு அவங்கள் விஞ்ஞான பூர்வ விளக்கமும் அளிப்பாங்கள்..அரபாத்...நம்ம கதிர்காமர்...இப்படி பலரும் 60 க்குப் பிறகுதான் காதலிச்சு மணம் முடிச்சவை...! ஆனா கீழத்தேய சமூகத்துக்கு அது இன்னும் ஆச்சரியமான விடயம்...! பட் காதல் மனம் சார்ந்த விடயம்... ஆரம்ப பருவ வயசுக்கு அப்பால் அதற்கு எல்லை இருப்பதாகக் கருத முடியாது...! காமத்துக்கு கூட எல்லை இருக்கும்...கீழ் நிலை உயர் நிலை என்று...காதலுக்கு இருக்க வாய்ப்பில்லை...மனம் - மூளை செழிப்பாக இருக்கும் வரை என்றே பொதுவில் கருதப்படுகிறது...! கொஞ்சம் சிந்தித்தால் இதில் ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- வெண்ணிலா - 06-30-2005

:roll:


- kuruvikal - 06-30-2005

எதுக்கு முழிகிறீங்க தங்கையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 06-30-2005

Niththila Wrote:நான் கோட் ஓடரைப் பாத்து முழிக்கேல்லை அண்ணா பொதுவாக வழக்குகளில சம்பந்தப்பட்ட ஆள் கோட்டில கொண்டு வரப்பட்ட பிறகு வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்புகள் அமையும்.

ஆனா இங்க 19 வயசு பெண்ணுக்கு 44 வயசு ஆளோட காதல் வருகுதே எண்டுதான் முழிச்சனான்

கணவனோ மனைவியோ நீண்ட காலம் பிரிந்து வாழ்ந்தால் அவர்களால் அதனை காரணமாக வைத்து சட்டப்படி விவாகரத்து பெறலாம். அது தவிர முதல் மனைவி எதிர்க்காதவரை இரண்டாவது திருமணம் சட்டவிரோதம் அல்ல. இந்நிலையில் திருமணம் செய்ய விருப்ம்பிய இருவரும் மேஜர் என்பதால் நீதிமன்றம் சட்டப்படி திருமணம் செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றது.

இது சட்டப்படி தான் மற்றும்படி சட்டம் வேறு மனசாட்சி வேறல்லவா?


- Mathan - 06-30-2005

kuruvikal Wrote:அதற்கு முதல்..அவர் முதல் மனைவியோட..ஏன் காதல் இன்றி வாழ்த் தலைப்பட்டார்...??! அதற்கு யார் பொறுப்பு...சமூகமா..அவரா...அதுதான் குடும்பப் பிரச்சனைக்கு காரணமா...அந்த வகையில்... உண்மையில் அவரைப் பொறுத்தவரை இது தூய காதலா...??! இப்படி பல வினாக்கள் தொக்கு நிக்கின்றன...! இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்...! பல குடும்பவியல் சமூகப் பிரச்சனைகளின் அத்திவாரம் இங்கிருந்துதான் எழுகிறது குறிப்பாக கீழைத்தேய நாடுகளில்...!

தூயகாதலை எப்படி வரைவிலக்கணம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் காதல் எப்போது எங்கு யார் மேல் ஏற்படும் என்று நிச்சயமாக கூற முடியாது. அந்த 19 வயது பெண் அன்புக்காக ஏங்கும் நிலையில் இருக்கும் போது இவர் காட்டிய பரிவு கவனிப்பு பிடித்து போக அது பின்பு காதலாக பரிணமித்திருக்கலாம். இது ஒரு கோணம் தான் இதனை போல வேறு விதமான பார்வைகளும் இருக்கலாம்.

மற்றது அந்த நபர் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தமையால் மனதில் இரண்டாவது திருமணம் செய்வது குறித்த நினைப்பை ஏற்படுத்தியிருக்கலாம். திருமணம் செய்தால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் அவ்வாறு செய்யாமல் பிரிந்து வாழ்வதே பல திருமணங்கள் உடைவதற்கும் சமுதாய சீர்கேடுகளுக்கும் முக்கிய காரணம்.


- வெண்ணிலா - 06-30-2005

kuruvikal Wrote:எதுக்கு முழிகிறீங்க தங்கையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உலகத்தின் போக்கை நினைத்துத்தான்


- kuruvikal - 06-30-2005

vennila Wrote:
kuruvikal Wrote:எதுக்கு முழிகிறீங்க தங்கையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உலகத்தின் போக்கை நினைத்துத்தான்

குறிப்பிட்டுச் சொல்லுங்களன்...உலகின் எந்தப் போக்கு முழிக்க வைக்குது என்று...அப்பதான் உலகத்துக்குப் புரியும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->