![]() |
|
படித்ததும் பிடித்தது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: படித்ததும் பிடித்தது (/showthread.php?tid=4028) |
படித்ததும் பிடித்தது - SUNDHAL - 06-29-2005 காதல் ஒரு ஆச்சரியம்! * அஞ்சல் அட்டை மாதிரி திறந்தே இருக்கிறேன் நீ படிக்கும்படியாக... தபால் உறையாக நீ மூடியே இருக்கிறாய் நான் தவிக்கும்படியாக! * காதல் ஒரு ஆச்சரியம்... அறுபத்திரெண்டு கிலோ எடையை அந்தரத்தில் மிதக்க விட்டிருக்கிறது! * கூட்டமாய் இரை தேடுகிற கோவில் புறாக்களின் குணம் இல்லை உனக்கு... பட்டாம்பூச்சியாக நீ தனித்தே பறப்பது பிடித்திருக்கிறது எனக்கு! * வானம் பார்த்திருக்கும் ஏழை விவசாயி போல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன்; பருவ மழையே எப்போது பெய்வாய் நீ? * கல்கி அவதாரத்தில் கடவுள் வைத்த காலடி போல கவனமாகத்தான் நடக்கிறாய்... அது சரி – எல்லா அடியையும் ஏன் என் தலையில் வைக்கிறாய்! * உண்ட மயக்கத்து உறக்கமாக இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் உன் முகத்தை மனக்கண்ணில் பார்த்து விட்டுத்தான் படுக்கிறேன்; அதுவே நீண்ட உறக்கமாகிப் போனாலும் கடைசியாய் கண்டது உன் முகமாக இருக்கட்டும்! க.சந்திரகலா, அதங்கோடு - tamilini - 06-29-2005 நன்றாய் இருக்கிறது சுட்ட கவிதை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-29-2005 நன்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-29-2005 நன்றாக இருக்கின்றது. அறிய தந்தமைக்கு நன்றி சுண்டல் - kavithan - 06-30-2005 சுட்டாலும் சுண்டல் தான்.. நன்றி சுண்டல் - Niththila - 06-30-2005 நன்றி சுண்டல் - அருவி - 06-30-2005 சுண்டல் சுற்றிய தாளில் வந்த கவிதை அருமை நன்றி சுண்டல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- SUNDHAL - 07-03-2005 <b>ஓசையின்றி</b> * ஓசையின்றி வழிந்தோடிய நீரோடை கண்டேன் வாடிய உன் முகமதில் கரு விழியாளே... ஒரு சொல் கேளாய்... * நம்மில் ஏற்பட்ட காதல் கால் சட்டையில் ஒட்டும் கடற்கரை மணலல்ல தட்டி விட்டுச் செல்ல... * உச்சியில் நிற்கும் சூரியன் சுடத்தான் செய்யும் தலை சாயத் தொடங்கினால் சுட்ட சூரியனும் சுகமாகுமே... சுற்றங்களும் அப்படித்தான்! * காதலர்கள் கட்டுண்டிருப்பது நேற்றல்ல இன்றல்ல என்றும் நிகழும் நிகழ்வுதானே... * உறவுகள் நம்மை ஒருநாளும் உதறித் தள்ளாது நாம் திசை மாறி தீயவற்றை நாடாது வரை! * ஒருவரை ஒருவர் நினைந்து வெம்பி இருப்பதை விட நம்பி இருப்போம் நல்வழி பிறக்குமென்று! * காலம் கனியும் வரை நாம் சந்தித்தாலும் நீ யாரோ நான் யாரோ என ஒதுங்கியே செல்வோம்! * தனியாக இருந்தாலும் நீயும், நானுமாய் கனவுலகில் சஞ்சரிக்க தடையேதுமில்லையே! * நினைவு தானே கனவாகிறது கனவை நிஜமாக்க ஆசையாய் காத்திருப்போம் ஓசையின்றி! ஏ.பி.முருகேசன் - kavithan - 07-03-2005 சுண்டல் சுப்பர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 07-04-2005 நன்றி சுண்டல் - SUNDHAL - 07-25-2005 போய் வா காதலனே! * உன்னையா என் உள்ளத்தில் எழுதினேன்... * கை வளையல் கேட்டதற்கு குரல்வளை தரவா என்றாய்... கண்ணாடி வளையலுக்கே கணக்கு பார்க்கிறவன் என்பது தெரியாமல் உன்னையா என் உயிரென்று கருதினேன்! * புளியை விட புளிப்புதான் என்றாலும் என் உதட்டின் நிறம் என்பதால் ஜாம்பக்கா பிடிக்கும் என்றாய்... * நான் குளிக்கும் தண்ணீரை வேருக்குத் திருப்பி விட்டதால் என் வீட்டு வேப்பங்காய் கூட விதையில்லாத திராட்சையாக இனிக்கிறதென்று சொல்லிச் சொல்லியே என்னைக் கொன்றாய்... * கழுத்து வரையிலும் காசு, நகை ஆசைகளை வைத்துக் கொண்டு வாய் வழியே காதல் பொங்கி வழிந்தவனே... * நான் உடுத்தியிருக்கும் ஒற்றைப் புடவையைத் தவிர மாற்றுத் துணி கூட மறுப்பவன் நீ என்றால் சரியான ஆண்மகன் நீ ஒத்துக் கொள்கிறேன்... * என் வீட்டு உத்திரத்தைப் பிடுங்கித்தான் உன் உடைந்த முதுகுக்கு முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால் போய் வா காதலனே... உன்னை, என் பழைய தோழிகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்! க.சந்திரகலா, - வெண்ணிலா - 07-25-2005 Quote:நான் குளிக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 07-31-2005 நல்ல கவிதைகள் சுண்டல் அண்ணா..வாசிக்க நல்லா அருமையாக இருக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் குளிக்கும் தண்ணீரை வேருக்குத் திருப்பி விட்டதால் என் வீட்டு வேப்பங்காய் கூட விதையில்லாத திராட்சையாக இனிக்கிறதென்று சொல்லிச் சொல்லியே என்னைக் கொன்றாய்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |