![]() |
|
இலங்கை பெண் சின்னத்திரையில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: இலங்கை பெண் சின்னத்திரையில் (/showthread.php?tid=4024) |
இலங்கை பெண் சின்னத்திரையில் - Mathan - 06-29-2005 இலங்கை பெண் சின்னத்திரையில் <img src='http://www.dinakaran.co.in/vasantham/article/2005/jun/30/Page-2.jpg' border='0' alt='user posted image'> சிதம்பர ரகசியம் தொடரில் ஐயங்கார் வீட்டு அழகியாக நடிக்கிற அபிராமிக்குப் பூர்வீகம், இலங்கையில் சர்ச்சைக்குரிய ஜாப்ப்னா. சின்ன வயசுலேர்ந்தே டான்ஸ், தியேட்டர்னு என் ஈடுபாடு கலைத் துறைல வேர் விட்டது. சிலோன்ல நடக்கிற விசேஷமான தமிழ் தினப் போட்டில தொடர்ந்து மூணு வருஷங்கள் சிறந்த டான்ஸருக்கான அவார்ட் வாங்கியிருக்கேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டான்ஸ் டிராமா, நவீன நாடகம்னு என் எல்லை விரிய ஆரம்பிச்சது. அங்க என் நடிப்பையும், திறமையையும் பார்த்துட்டு, தமிழ் சேனல் கள்லேர்ந்து நிறைய வாய்ப்புகள் டான்ஸ், டிராமானு நான் பிரபலமா இருந்தாலும், சினிமா, சீரியல்ல நடிக்க அனுமதிக்கிற அளவுக்கு வீட்ல யாருக்கும் பரந்த மனசில்லை. அப்புறம் என் காதலர் (இப்ப கணவர்) காண்டிபன்கிட்ட அனுமதி கேட்டேன். நான் நடிக்க அவர் ஓ.கே. சொன்னார். அந்த நேரம் பார்த்து நாகா சாரோட அறிமுகம் கிடைச்சது. நம்பிக்கையே இல்லாம என் ஃபோட்டோ கொடுத்துட்டு வந்தா, கொஞ்ச நாள்லேயே …சதம்பர ரகசியம் தொடரில நடிக்க அழைப்பு* நம்பவே முடியலை. சிலோன் பெண்ணான எனக்கு அதுல பிராமண பாஷை பேசி நடிக்கிற கேரக்டர். பிரமாதமான அனுபவம். இப்ப மெல்ல என் பேர் வெளிய தெரிய ஆரம் பிச்சுப் பரவலா நிறைய சீரியல்ல கூப்பிடறாங்க. செலக்டிவா நடிக்க ஆரம்பிச்சிருக்கேன் என்கிறவருக்கு இந்தியா எந்தளவுக்குப் பிடித்திருக்கிறதாம்? இந்தியா ஓ.கேதான். ஆனா என் ஹஸ்பெண்ட் ஸ்ரீலங்கால வேலை பார்க்கிறார். கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகுது. ரெண்டு மாசம் இங்கயும், ரெண்டு மாசம் சிலோன்லயுமா போயிட்டிருக்கு. அது மட்டும் தான் இப்போதைக்குக் கஷ்டம் என்கிறார் அபிராமி. நன்றி - தினகரன் - Vasampu - 06-29-2005 ஏற்கனவே சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் சுகன்யாவின் தங்கையாக வந்தவரும் நம்ம ஊரு பெண்ணு தானுங்க. - Mathan - 06-29-2005 ஓ எனக்கு தெரியாது - kavithan - 06-30-2005 Quote:சர்ச்சைக்குரிய ஜாப்ப்னா தினகரன் எழுதுவதே சர்ச்சையா இருக்கே :twisted: |