Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 290 online users.
» 0 Member(s) | 287 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,647
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,507
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241

 
  தாயும் நீயும்
Posted by: kpriyan - 10-29-2005, 03:11 PM - Forum: கவிதை/பாடல் - Replies (47)

தன் வயிற்றில் என்னை சுமந்தாள் தாய்
உன் இதயத்தில் என்னை சுமந்தாய் நீ
உன் அன்பும் தாயின் அன்பும் ஒன்றாக
நீயும் என் தாயானாய்!

ஆதரவளித்தாய்.......
அணைத்தாய்..........
தேவைக்கேற்ப கண்டித்தாய்...

என் முகம் சுருங்கும்போதெல்லாம்,
என் நாடி நிமிர்த்தி அழகாக சிரித்துவைத்தாய்,
என் இதயத்தை தினமும் தேன் சுவைக்கவைத்தாய்,
இவ்வுலகின் இருளில் தடுமாறும்போது கைப்பிடித்து நடத்திச்சென்றாய்,
எலியைக்கண்டபோது மட்டும் அழகாக பயந்து என் பின்னால் மறைந்து கொண்டாய்,

என் பெயர் சொல்லி ச்செல்லமாக கூப்பிட்டாய்
என்ன? என்றால்
ச்சும்மா என்று சொல்லி என் இதயம் சுழுக்க சிரித்துவைத்தாய்,

நாடு பிரியும் நேரம் வந்ததும்,
என்தாய் என்னை கட்டியணைத்து அழும்போது,
தூரமாய் ஒளித்து நின்று அழுதுவைத்தாய்.........

Print this item

  உங்களுடன் ஒரு சிறிய அறிமுகம்
Posted by: tamilfriend - 10-29-2005, 03:01 PM - Forum: அறிமுகம் - Replies (23)


வணக்கம் நான் இந்த இணையதளத்தின் புதியவன். எனது கருத்துக்களை இந்த இணையதளத்தில் பதிவதற்கு அனுமதி தந்த அனைவருக்கும் என்து நன்றிகள். உங்கள் அனைவருக்கும் என்து திபாவளி நல்வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

Print this item

  கணவன் = கணவி !!!!
Posted by: தூயா - 10-29-2005, 02:59 PM - Forum: போட்டிகள் - Replies (84)

ஒத்த சொல், எதிர் சொல்

என்னடா இது 2ஆம் ஆண்டு தமிழ் வகுப்பு என சலித்துகொள்ளாதீர்கள்.

பெரியவர்களே தப்பு தப்பாய் சொல்கிறார்கள்.

உதாரணத்திற்கு,

மன்னன் = மன்னி
மனைவி = மனவன்
கணவன் = கணவி

இப்படி பல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> [இதெல்லாம் தமிழ் பாடசாலையிலே நான் எழுதியது தான் ]

ஒத்த சொல்லை எடுத்து கொண்டால்,

அம்மா = தாய், அன்னை ...இப்படி இன்னும் பல சொற்கள்.

நாங்கள் பாவிப்பது பெரும்பாலும் கதைக்கும் போது பாவிக்கும் சொற்கள். எங்களுக்கு தெரியாமல் பல நல்ல சொற்கள் இருக்கு. அவற்றை அனைவரும் தெரிந்தவற்றை ஒருவருக்கு ஒருவர் சொல்லலாமே. உங்களிடம் புத்தகங்கள் இருக்கலாம்... தெரிந்தவற்றை சொல்லுங்கள்.

முதலில் யாராவது தொடங்குங்கள் என்றால் தொடங்கமாட்டீர்கள்...

நானே ஆரம்பிக்கிறேன்.

ஒத்தசொல்

1. அன்பு

இதற்குரிய ஒத்த சொற்களை சொல்லுங்கள். சொல்பவர் அடுத்த வார்த்தையை சொல்ல வேண்டும்.

<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சரி சரி தமிழ் படிக்கலாம் வாங்க

பபா

Print this item

  அய்ரோப்பா அகதியெனக்கு
Posted by: sathiri - 10-29-2005, 02:19 PM - Forum: கவிதை/பாடல் - Replies (17)

அய்ரோப்பா அகதியெனக்கு
அதிக வாடகையில்லா வீடு 8)
அதிகாரம் பண்ணாத முதலாளி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதிகம் பேசாத மனைவி :wink:
அடம்பிடிக்காத குழைந்தைகள் :x
அடிக்கடி சடங்கு வைக்காத
அயல் தமிழ் நண்பர்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அர்த்த ராத்திரி தொலைபேசியில்
அவசரமாய் பணம் கேட்காத
அன்பான உறவுகள் Cry
அதிக வசதியில்லா விட்டாலும்
அளவான ஒரு கார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அத்தனையும் வேண்டும் வேண்டும் Idea


என்ன பாக்கிறீங்கள் சின்ன பிள்ளையள் எல்லாம் எவ்வளவு அளகா கவிதை எழுதுகினம் அதுதான் எனக்கும் ரோசம் வந்து என்ரை தேவையையே எழுதினன் பாத்தா கொஞ்சம் கவிதை மாதிரி இருந்தது அதை இஞ்சை போட்டன்

Print this item

  டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்
Posted by: Mind-Reader - 10-29-2005, 01:40 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (15)

இந்திய தலைநகர் டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்.
பலர் மரணம். பலருக்கு பலத்த காயங்கள். தலைநகர மக்களை அமைதியாக இருக்குமாறு அரசு கோரியுள்ளது.

Print this item

  ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? - இறுதிப்
Posted by: MEERA - 10-29-2005, 12:30 PM - Forum: தமிழீழம் - No Replies

ஓயாத அலைகள் - 02 வலிந்த தாக்குதலில் கிளிநொச்சி படைத்தளத்தை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்டமைக்கு காரணம் தமிழீழ தேசியத் தலைவர் வகுத்த தாக்குதல் வியுூகங்களும் திட்டங்களுமேயாகும். அன்று நடந்த உக்கிரமான சமர் இருதரப்பினருக்கும் சவாலாக அமைந்த அந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் இராணுவ வல்லமையின் வெளிப்பாட்டின் ஒரு கட்டம் எதிரியை திணறடித்திருந்தது.

இவ்வாறு நடந்த அந்த சமருக்கான வேவுத்தகவல்களை பல போராளிகள் முன்னர் வெளிப்படுத்தினர். அன்று அவற்றை நெறிப்படுத்தி நடாத்திய விசேட வேவு அணித் தளபதி கேணல் ஜெயம் இச்சமரில் தாம் கையாண்ட தாக்குதல் வியுூகங்களையும் எவ்வாறு வேவுச் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பதையும் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.

வேவு நடவடிக்கையை பொறுத்த வரையில் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஒரு சண்டையை திட்டமிடுவதற்கு முதல் எமக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படுமா என்னும் நோக்குடன் தொடர்ந்து வேவு நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. அந்த வகையில் கிளிநொச்சிப் பகுதியிலும் வேவு நடவடிக்கை நடைபெற்றது. விசேட வேவு அணியினர் வேவு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே மட்டு. அம்பாறை அணியினர் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா.; இந்த நடவடிக்கை மனோ மாஸ்ரரின் தலைமையில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர் தளபதி பால்ராஜ் தனது போராளிகளையும் இப்பகுதி வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தார்.

இவ்வாறு இந்த நடவடிக்கை தொடர்ந்ததனால் கிளிநொச்சி படைத்தளம் தொடர்பான தரவுகள் எமக்கு ஏற்கனவே கிடைத்திருந்தன. ஆனால் அந்தக் காலப்பகுதியில் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் ஜெயசிக்குறுசமர் பெருமெடுப்பில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் வேவு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆகவே வேவு எனும்பொழுது இராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை கண்காணித்துக் கொண்டிருப்பதும் அந்த சூழல் எவ்வாறிருக்கின்றது. இராணுவத்தினரின் நடவடிக்கை எவ்வாறிருக்கின்றது. எங்களுக்கு சாதகமான பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றது போன்ற விடயங்களைக் காலம் காலமாக வேவு அணிகள் செய்து வந்திருக்கின்றன. அடுத்து அத்தரவுகள் பொறுப்பாளர்கள் மூலமாக தலைவரிடம் கிடைக்கப் பெற்றபின் தேவை கருதி தாக்குதலை மேற்கொள்வதாக அமையும்.

வேவினைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நகர்வும் அவர்கள் சாவை எதிர்பார்த்துத் தான் நகர வேண்டும.; வேவுக்காக சென்று திரும்பி வருவோமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் எதிரி விழிப்பாக பார்த்துக் கொண்டுதான் இருப்பான். ஆனால் நாங்களும் கண்டிப்பாக எதிரியின் காப்பரணில் ஏறவேண்டும் அப்போதுதான் சென்ற பாதையில் எத்தனை காப்பரண்கள் இருக்கின்றன எத்தனை தடைகள் இருக்கின்றன, அந்தத் தடைகளை எவ்வாறு கடந்து போகலாம் என்பவற்றை பார்க்கமுடியும் ஆனால் வேவுப் போராளி அந்தத் தடைகள் அனைத்தையும் வெட்டிக் கொண்டு போக முடியாது. அதை ஒருவகையில் எதிரிக்குத் தெரியாமல் கம்பி வேலிகளையும் கடந்து உள்ளே போக வேண்டும.; கிளிநொச்சியைப் பொறுத்த வரைக்கும் தடயம் இல்லாமல் திரும்பி வருவதென்பது பெரும் துன்பமானது. ஏனெனில் நீர் நிலைகளும், புற்தரைகளும் அதிகம் கொண்ட பகுதி. அவற்றினு}டே தடயமின்றி உள்நுழைவதென்பது கடும் சிரமம்.

இந்த சண்டையிலும் தளபதி பால்ராஜ் உள்நுழைந்த பாதைகள் கூட நாங்கள் பார்த்து உறுதிப்படுத்திய பின் நகர்விற்கு முதல் நாள் பாதைகளை சென்று பார்த்த போது எல்லாம் மாறுபட்டிருந்தது. மீண்டும் புதிதாக பாதை எடுத்துத்தான் நகர்த்தினோம.; ஆனால் விசேட வேவு அணியை பொறுத்த வரையில் ஒரே நாளில் பாதையெடுத்து அமைவுகளை குறித்து சரியாக நகர்த்திய சம்பவங்கள் கிளிநொச்சி சண்டையில் உள்ளது. ஏனெனில் சண்டைக்கான திட்டம் இல்லாத நேரத்திலேயே பாதைகளை எடுத்து உட்செல்ல முடியுமென்ற நிலையில் இருந்தபோது, சண்டைக்கான திட்டம் வகுத்த பின் அந்தப் பாதைகளை பார்த்து உறுதிப்படுத்தச் சென்றபோது முதல் பார்த்தது போல் இருக்கவில்லை. மீண்டும் வேறு பாதைகளைத்தான் எடுத்துக்கொடுத்தோம் ஆனால் ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்த வரையில் திட்டம் வகுத்த ஒரு கிழமைக்குள் வேவு வேலைகளை முடித்துக் கொடுத்தோம். இதற்கு போராளிகள் கடுமையாக உழைத்தார்கள். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட தரவுகள் இருந்தபோது அதைப் பார்த்து உறுதிப்படுத்தப்படும் தரவுகள் ஒரு கிழமைக்குள் நடந்தது. ஆகவே சண்டைக்குத்திட்டமிட்டுப் போகும் போது சண்டையின் போக்கு மாறுபட்டால் அதற்குரிய பொறுப்பு வேவு அணிகளைத்தான் சாரும் ஆகவே இந்த ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்தவரை திட்டங்களின்படி சிறப்பாக நடைபெற்றது.

அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. அதன் திட்டம் கிளிநொச்சியுடன் இணைப்பதாக இருந்தது. அதன்படி இதனை விரைவாக செய்ய முடியுமென்ற நம்பிக்கையில் எதிரி ஜெயசிக்குறுவை தொடங்கியிருந்தான். ஆனால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக எதிரி நினைத்தது போல் இணைக்க முடியவில்லை. அவனது நடவடிக்கை மாங்குளப்பகுதியை நெருங்கியதும் தேசியத் தலைவர் அன்று மாங்குளத்திற்கு பொறுப்பாக இருந்த தளபதி தீபனை கிளிநொச்சிக்கு பொறுப்பாக நியமித்து ஏற்கனவே இத்தளத்தின் மீதிருந்த அவதானிப்பை விட கூடுதலாக அவதானிப்பை மேற்கொள்ளச் செய்தார்.

இதன் பின்னர் கிளிநொச்சி மீதான முதலாவது தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது அதற்கும் விசேட வேவு அணி வேவு செயற்பாட்டில் ஈடுபட்டது. எமது வேவுகளை பொறுத்த வரையில் திடீரென ஒரு திட்டத்தினை வகுத்து வேவு பார்க்கும் போது வேவு அணி பாதைகளை எடுத்து தாக்குதலுக்கான ஒரு பாதையை திறந்து கொடுக்கின்ற அதே நேரம் அந்தப்பாதையினு}டாக எந்தப் படையணி சண்டைக்கு இணைக்கப்படுகின்றதோ அந்தப் படையணிப் போராளிகளையும் இணைத்து செயற்பாட்டில் ஈடுபடுத்துவோம். ஏனெனில் தாக்குதலின் முதல் கட்டத்திற்கான நகர்வை நாங்கள் புூர்த்தி செய்து கொண்டு பாதைகளை காட்டினால் தொடர்ந்து சண்டையில் ஈடுபடப்போவது அந்த அணிகள். ஆனால் பாதையை காட்டி உள்ளே அணிகளை நகர்த்திக் கொண்டு செல்வது விசேட வேவு அணிதான். ஆனால் அந்தப் பாதைக்கு திட்டத்தின்படி எந்த அணி இணைக்கப்படுகிறதோ அந்தப் படையணி தொடர்ந்து சண்டையில் ஈடுபடும்.

ஆனால் வேவு பார்ப்பதென்பது ஒரு நாளில் முடிவடையும் வேலை அல்ல. பல நாட்களை வேவு பார்ப்பதற்காக செலவு செய்யவேண்டும.; அது எமக்கு சாதகமாகவும் அமையும் பாதகமாகவும் அமையும் வேவு அணியினுடைய நடவடிக்கையில் அவர்கள் விடும் சிறிய சிறிய தவறுகளும் அவர்களின் உயிருக்கே பாதகமாக அமையும். அதாவது முதல்நாள் சென்று ஒரு பாதையைப் பார்த்து விட்டு வரும் போது தவறுதலாக ஒரு தடயத்தை விட்டு விட்டு வந்திருந்தால் அல்லது எதிரிக்கு ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட்டு மறுநாள் அந்த இடத்தில் நிலையெடுத்திருப்பானாக இருந்தால் இவர்கள் செல்லும் போது இவர்கள் மீது தாக்குதல் இடம்பெறும். ஆனால் அதை எதிர்பார்த்துத்தான் இவர்கள் போகவும் வேண்டும். அந்த வகையில் ஒரு கரும்புலி அணியினுடைய செயற்பாட்டைவிட ஒரு வித்தியாசமான செயற்பாடாக இவர்களின் செயற்பாடு இருக்கும.; கரும்புலிகள் ஒரு வெற்றிக்காக தமது உயிரையே அர்ப்பணித்து விடுவார்கள். இந்த வேவு அணியினரின் நோக்கம் உயிரை அர்ப்பணிப்பதாக இருக்காது ஆனால் எதிரியினுடைய தாக்குதலை முழுமையாக எதிர்பார்த்தபடி தான் செல்வார்கள் வேவு அணியினுடைய செயற்பாடு இவ்வாறு தான் இருக்கும்.

கிளிநொச்சி ஓயாத அலைகள் 02 இலும் நிறையத் தரவுகள் எங்களிடம் ஏற்கனவே இருந்தது. அத்தரவுகள் அனைத்தையும் வைத்துக் கொண்டுதான் திடீரென தலைவர் ஒரு முடிவை எடுத்தார் கிளிநொச்சியை நாங்கள் கைப்பற்ற வேண்டுமென்று. ஏனெனில் அதற்குமுதல் 1998 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் ஒரு தாக்குதலை செய்து முன்னணிப் பகுதிகளை கைப்பற்றினோம். அத்தாக்குதல் எமக்கு முழு வெற்றியளிக்கவில்லை. அப்போதும் எமது திட்டம் உள்ளே ஒரு அணி நகர்ந்து சென்று குறுக்கறுத்து கட்டவுட் போட்டு நிலை கொண்டு கிளிநொச்சியை கைப்பற்றுவதெனும் நோக்கமிருந்தது. ஆனால் திட்டத்தின்படி வேவுக்கேற்ப ஒரு அணிக்கு பாதையை கொடுத்து அந்த அணி பாதையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் பணியும் சரியாக நடைபெற்றது. ஆனால் மீண்டும் அந்தப் பாதையை எதிரி எதிர்த்தாக்குதல் மூலம் மூடியவுடன் உள்ளே சென்ற அணியைக் கூட வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நடவடிக்கையின் விளைவினை கருத்தில் கொண்டு தான் தலைவர் புதிய திட்டத்தினை வகுத்தார். இந்த சமருக்கு கிளிநொச்சியையும் பரந்தனையும் பிரித்து விட்டால் உள்ளே செல்லும் அணிக்கான வளங்கள் தடைபடாது என்ற நோக்கத்தோடு தான் இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை வகுத்தார். அதற்கான வேவு நடவடிக்கையிலும் விசேட வேவு அணியுடன் சேர்ந்து சாள்ஸ் அன்ரனி அணி அந்தந்த பகுதிகளினு}டே உட்செல்ல வேண்டிய அணிகள் அனைத்தையும் அழைத்து சென்று காட்டினோம்.

இவ்வாறு பாதைகளைக் காட்டியது விசேட வேவு அணிகளே. அதிலே தளபதி பால்ராஜூம் அவரது அணிகளும் உள்நுழைவதற்கான பகுதியில் இரண்டு பாதைகளை எடுத்திருந்தோம.; அதிலே கட் அவுட், கட்ஓப் (கு) என பரந்தனையும் கிளிநொச்சியையும் பிரிக்கும் இடத்தில் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். மேற்குப்பகுதியாக 02 பாதைகளையும் கிழக்கு பகுதியால் 02 பாதைகளையும் எடுத்திருந்தோம் இதனு}டாக அணிகளை நகர்த்தி உள்ளே கட்டவுட், கட் ஓப் (கு). என்பவற்றை அமைத்ததால் அந்தப் பாதைகளை இராணுவத்தினர் மீளக்கைப்பற்ற முயற்சிக்கவில்லை. எதிர்ச் சண்டை பரந்தன் பகுதியில் மட்டும் நடந்தது. ஏனைய பகுதியால் எதிரி தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால் ஏனைய பாதைகள் அனைத்தையுமே மீண்டும் எதிரி கைப்பற்றுவதற்கான கடும் சமர் நடந்து கொண்டிருந்தது.

ஓயாத அலைகள் 02ஐப் பொறுத்தவரை 27 ஆம் திகதி மிகக்கடுமையான சமர் நடந்தது எதிரி எல்லாப் பாதைகளையும் கைப்பற்றி ஒரு சில பாதைகளை மட்டுமே தக்கவைக்கப்பட்ட நிலை இருந்ததினால் அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்ற கேள்விக்குறி இருந்தது. அன்று இரவு தலைவர் தளபதிகள் எல்லோரையும் அழைத்து கதைத்து சரியான திட்டங்களை வகுத்து அந்த நாள் எவ்வாறு சமரை நகர்த்த வேண்டும் என்ற ஒழுங்குபடுத்தல்களைச் செய்தார். அன்று தலைவர் போட்ட திட்டத்தின்படி அடுத்த நாள் அதிகாலையிலேயே சண்டையை ஆரம்பித்தோம். அந்தச் சண்டையிலும் பிரதானமான சமர் நடந்த பகுதி தளபதி தீபன் சென்ற பாதையும் தளபதி ராம் சென்ற பாதையும் ராம் சென்ற பாதையினு}டாகத்தான் கனரக ஆயுதங்களை நகர்த்தி சண்டையில் ஈடுபட்டோம் அதோடுதான் எதிரி பின்வாங்கி. ஓடினான்.

ஓயாத அலைகள் 02-ன் வெற்றியென்பது நாங்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட சமரின் போது ஏற்பட்ட தவறுகளையெல்லாம் கருத்தில் கொண்டு தலைவர் இந்த சமருக்காக அமைத்துத் தந்த திட்டம்தான். ஏனென்றால் இந்த சமரிலும் வழமையாகவே நாங்கள் ஓடுபாதையை இரவில் பிடிப்பதும் காலையில் எதிரி மீண்டும் மூடுவதற்கான முயற்சியை எடுத்து மூடியும் இருக்கிறான். அதே வேலையை இந்த சமரிலும் செய்தான். நாங்கள் இரவு நகர்ந்து போய் பிடித்த பாதைகளை எதிரி மீண்டும் நகர்ந்து வந்து சில பாதைகளை மூடினான். ஆனால் எதிரியை நிலைகுலைய வைத்தது தலைவரின் திட்டம்தான் அது என்னவென்றால் ஊடறுத்து கிளிநொச்சியையும் பரந்தனையும் கூறு போட்டது இந்தத் திட்டத்தை எதிரி எதிர்ப்பார்க்கவில்லை அவர்கள் மறுநாட் காலையில் பாதைகளை மூடி தமது நிலைகளை தக்கவைத்து விட்டோம் என்ற நிலை ஏற்பட்ட போது இந்தப் பகுதியை அவர்களால் உடைக்க முடியாது போனது.

இதனால் கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்கு போகவும் முடியவில்லை ஆனையிறவு இராணுவம் கிளிநொச்சிக்கு வரவும் முடியவில்லை. என்னதான் தமது பகுதியை தக்கவைத்த போதும் இந்த நடவடிக்கையால் உளாPதியாக தாக்கமடைந்து 28 ஆம் திகதி மாலை வரை தப்பியோடத்தான் முயற்சியெடுத்தான். சத்ஜெய படையெடுப்பின் போது விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு நடாத்திய தற்காப்பு எதிர்த்தாக்குதல்களையே எதிர்கொள்ள முடியாமல் மூன்று கட்டங்களாக மூன்று படை அதிகாரிகள் தலைமை தாங்கி ஆக்கிரமிக்குபோதே தாம் விடுதலைப் புலிகளுடன் போரிடும் வல்லமை அற்றவர்கள் என்பதை இராணுவத்தினர் வெளிப்படையாக நிரூபித்து விட்டனர். இருந்த போதும் அன்று முல்லைப் படைத்தள இழப்பினால் ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தால் பலிக்கடாக்களாகவே இராணுவத்தினர் கையாளப்பட்டதன் விளைவாகவே கிளிநொச்சி ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு படைத்தளங்களும் அமைக்கப்பெற்று 2000 இற்கும் மேற்பட்ட துருப்புக்களும் நிறுத்தப்பட்டன. இவர்கள் இங்கு நிறுத்தப்பட்ட நாள் தொடக்கம் அரசாங்கம் இவர்களை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்திருக்கலாம.; ஏனெனில் இவர்களை எவ்வேளையிலும் இழக்க நேரிடும் என்ற உண்மை அரசுக்கு அன்று தெளிவாக தெரிந்திருந்தது. அதை ஓயாத அலைகள் 02 இன் மூலம் புலிகள் மெய்ப்பித்தும் காட்டினர்;.

முற்றும்

நன்றி - தமிழ்நாதம்

Print this item

  அனுபவம்..!
Posted by: kuruvikal - 10-29-2005, 12:17 PM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

<b>பனி இரவு தாண்டிய
அழகான காலை நேரம்
அழகி ஒருத்தி
அருகில் வரும் வேளை...
அவதி அவதியாய்
அழகுபடுத்தல் கூட
அலங்கோலமாய் முடிய
அவசரப்பட்டு
அவள் தேடி ஓட
அவள் என்னைவிட்டுத் தூரமாய்....
ஆனால்
ஏமாற்றம் மட்டும் இல்லை
அடுத்தவளுக்காய்
காத்திருப்பு...!
என்னவள் வருகிறாள்
ஏன் "லேட்டு"
அழகி விசயம்
அம்பலமாகிடும்
அடக்கி வாசிக்க
மனம் உளறுது...
இடையில்
அதிருது செவிப்பறை
"ஏன் லேட்டு கேட்கிறனில்ல"
அழகி விடயம்
அம்பலமாகிறது
அதிர்ந்தவள் சொன்னாள்
சாந்தமாய்
பஸ் வேண்டாம்
ரெயிலில் வாங்கோ...!</b>

(யாவும் கற்பனை- உல்டா கவி)

Print this item

  காத்திருக்கின்றேன்.. குடையோடு.
Posted by: kpriyan - 10-29-2005, 08:54 AM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

குடை பிடித்து காத்திருக்கின்றேன்..
நீயும் வந்தால்
நனைந்து கொண்டு செல்லலாம் என..

Print this item

  எழுத நினைத்தேன் ஒரு கவிதை
Posted by: kpriyan - 10-29-2005, 07:31 AM - Forum: கவிதை/பாடல் - Replies (16)

எழுத நினைத்தேன்
ஒரு கவிதை..
இன்று..

Print this item

  புத்து}ரில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் உயிரிழப்பு
Posted by: mayooran - 10-29-2005, 03:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ். புத்து}ர் பகுதியில் படையிரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்புணர்வு முயற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டிலும், கைக்குண்டு வீச்சிலும் ஏழு பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் தர்மராஜா நிரோசன் என்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தர்மராஜா நிரோசன் உட்பட்ட பொது மக்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வந்து கொண்டிருந்த மருத்துவ காவு வண்டியை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக படையினர் தடுத்து வைத்தே அனுப்பியுள்ளனர். இதனாலேயே அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sankathi

Print this item