Yarl Forum
டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள் (/showthread.php?tid=2708)



டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள் - Mind-Reader - 10-29-2005

இந்திய தலைநகர் டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள்.
பலர் மரணம். பலருக்கு பலத்த காயங்கள். தலைநகர மக்களை அமைதியாக இருக்குமாறு அரசு கோரியுள்ளது.


- Mathan - 10-29-2005

தில்லியில் பயங்கர குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

புதுதில்லி, அக்.29} தில்லியில் இன்று 2 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர்.

பஹர்கஞ்ச், சரோஜினி நகர் ஆகிய இடங்களில் உள்ள மார்க்கெட் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.

மக்கள் தீபாவளி திருநாளையொட்டி மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க மிக அதிகளவில் கூடியிருந்தனர். வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திலேயை 20க்கும் அதிகமானோர் பலியாகினர்.

காயமடைந்தவர்கள் பஹர்காஞ்ச் அருகிலுள்ள லேடி ஹாடின்ஞ் மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைக்கும் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இது தீவிரவாதிகளின் நாசவேலை என்று தில்லி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நன்றி தினமணி


- MEERA - 10-29-2005

http://www.ndtv.com/topstories/showtopstor...tegory=National


- Mathan - 10-29-2005

தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள்

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051029154722indiablast203ap.jpg' border='0' alt='user posted image'>

இந்தியத் தலை நகர் தில்லியில் அடுத்தடுத்துக் குண்டுகள் வெடித்துள்ளன. பல குண்டுகள் வெடித்தன என்றும், குறைந்தது 30 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

முலாவது குண்டு பஹர் கான்ஜ் பகுதியில் நடந்தது. இரண்டாவது சரோஜினி நகர் பகுதியில் நடந்தது.

குண்டு வெடிப்புகள் நடந்த இடங்கள் அனைத்தும் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க மக்கள் அதிகம் திரண்டிருந்த கடை கண்ணிப் பகுதிகள்.

இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யாரென்று அறிந்து கூற நேரம் தேவை என்று அரசு கூறுகிறது.

பாகிஸ்தான் அரசு இக் குண்டுத்தாக்குதல்களை காட்டுமிராண்டித் தனமான செயல் என்று கூறிக் கண்டித்துள்ளது.

BBC Tamil


- Mathan - 10-29-2005

<b><img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/south_asia_delhi_explosions/img/7.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/south_asia_delhi_explosions/img/5.jpg' border='0' alt='user posted image'>

குண்டு வெடிப்புக்குள்ளான பகுதி பொலீசாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது,

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/south_asia_delhi_explosions/img/3.jpg' border='0' alt='user posted image'>

குண்டு வெடிப்பில் சிறிய அளவில் காயமடைந்தோர்

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/south_asia_enl_1130597929/img/1.jpg' border='0' alt='user posted image'>

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பெருமளவில் இந்த இடத்தில் கூடியிருந்தனர்,

படங்கள் நன்றி - பிபிசி</b>


- vasisutha - 10-29-2005

தகவல்களுக்கு நன்றி

யாரென்று கூறுவார்கள்.. பாகிஸ்தான் என்றுதான்
:roll:


- Netfriend - 10-29-2005

<img src='http://www.imgbin.net/image_uploads/%7B4E8E9AA3-6792-45DD-BFB9-58FC458C2D33%7D_mind-reader1.jpg' border='0' alt='user posted image'>
இப்படித்தான்..... யாவருமே... நான் சொல்லவருவது விளங்துகுபவருக்கு மட்டுமே.... :wink:

பாமினியில் எழுதப்பட்டதை யூனிக்கோட்டிற்கு மாற்றியுள்ளேன் - மதன்


- Mathan - 10-29-2005

ஒவ்வொருத்தரும் மற்றவர்களே குற்றம் சாட்டுவார்கள் அல்லது குறை சொல்வார்கள் என்று சொல்கிறீர்களா ?


- அனிதா - 10-29-2005

தகவல்களுக்கு நன்றிகள்..


- AJeevan - 10-29-2005

<b>குண்டுவெடிப்பை அடுத்து அமைதி காக்கும்படி இந்தியப் பிரதமர் வேண்டுகோள்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051029143215delhiblast203.jpg' border='0' alt='user posted image'>
இந்திய தலைநகர் புதுதில்லியில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

எண்பதுக்கும் அதிகமனோர் காயம் பட்டுள்ளனர்.

இன்றைய குண்டுவெடிப்புகளில் ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அரசு, இதை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கண்டித்திருக்கிறது. பாகிஸ்தான் அரசு இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று கூறி கண்டித்துள்ளது.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/10/20051029143105blast203.jpg' border='0' alt='user posted image'>
காயமடைந்தவர்கள்
இன்றைய குண்டு வெடிப்புகள் பொதுமக்கள் பெருமளவில் கூடும் சந்தைப்பகுதிகளில் நடந்துள்ளன.

அதனால் இந்தியாவின் பெருநகரங்களில் பாதுகாப்பு எற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்கும்படி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- பீபீசி தமிழ்


- AJeevan - 10-29-2005

<span style='font-size:22pt;line-height:100%'><b>தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் தொடர் குண்டு வெடிப்பில் சாவு 200 டெல்லியில் பயங்கரம் தீவிரவாதிகள் வெறியாட்டம்</b>
<img src='http://www.dinakaran.com/daily/2005/Oct/30/general/Blast17.jpg' border='0' alt='user posted image'>
புதுடெல்லி, அக். 30- டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகளில் நேற்று அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் 200 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.
டெல்லி தொடர் குண்டு வெடிப்புக்கு லஸ்கர்-இ- தொய்பா இயக்கத்தின் தீவிரவாதிகள் தான் காரணம் என்று தொpய வந்துள்ளது.

அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதி அடைந்து சிதறி ஓடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்தனர்.

டெல்லியின் மையப் பகுதியில் ரெயில் நிலையத்தை ஓட்டி உள்ளது பாஹர்கஞ்ச் மார்க்கெட். இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. தீபாவளி நேர மானதால் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் புற்றீசல் போல அலை மோதிக் கொண்டு இருந்தனர்;.

மோட்டார் சைக்கிளில் குண்டு வெடித்தது

அப்போது மார்க்கெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து காதை செவிடாக்கும் சத்தத்துடன் பயங்கர குண்டு வெடித்தது. இதில் அந்த மார்க்கெட்டே அதிர்ந்தது. குண்டு வெடித்ததில் அங்கிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர்.; கைகால் சிதைந்து குற்றுயிராக கிடந்தனர். குண்டு சத்தம் கேட்டதும் பயந்து ஓடியதில் நொpசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்த போது நேரம் மாலை 5.30 மணி. தகவல் அறிந்ததும் தீயணைக்கும் படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்பு மணியில் ஈடுபட்டனர்.

குண்டு வெடித்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்தப் பகுதியில் இருந்த கடைகள் இடிந்து கிடந்தன. சில கடைகளில் தீயும் பிடித்தது. அதை தீயணைப்பு படையினர் அணைத்தனர். மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன.

பஸ்ஸில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது

பாஹர்கஞ்ச் மார்க்கெட்டில் குண்டு வெடித்த 35 நிமிடங்களில் சரோஜpனி நகர் மார்க்கெட் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அது ஒரு பஸ்சில் வைக்கப்பட்டு இருந்தது. அது வெடித்ததில் அங்கே நின்ற 60 பேர் உடல் சிதறி செத்தனர். மற்றவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடித்ததில் மார்க்கெட்டில் இருந்த கடைகள் சிதைந்து சின்னா பின்னமாயின. தீயணைப்பு படையினரும், போலீசாரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குண்டு வெடிப்பில் உடல் சிதறி செத்தவர்களின் தசைகள் கடைகளின் கூரைகளில் தெறித்து விழுந்தன. அந்த காட்சி பார்க்க கொடூரமாக இருந்தது. அதை பார்த்தவர்கள் மிரண்டு போய் இருந்தனர்.

3-வது குண்டு வெடித்தது

சரோஜpனி நகர் மார்க்கெட்டில் குண்டு வெடித்த சில நிமிடங்களில் தெற்கு டெல்லியில் ஒக்லா பகுதியில் உள்ள கோவிந்தபுhpயில் மற்றெhரு குண்டு வெடித்தது. அதில் அந்த பகுதியில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அதில் 20 பேர் உடல் சிதறி செத்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதியில் சென்ற, நின்று கொண்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அங்குள்ள கட்டிடங்கள் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் பீதியில் அலறி அடித்து ஓடினார்கள்.

கோல் மார்க்கெட்டில் குண்டு வெடித்தது

மத்திய டெல்லியில் உள்ள கோல் மார்க்கெட்டில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

வெடிக்காத குண்டு

டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் வெடிக்காத ஒரு குண்டு கிடந்தது. அந்த பகுதியில் இருந்த மக்களை அப்புறப்படுத்தி விட்டு அதை போலீசார் செயல் இழக்க செய்தனர்.

4 குண்டு வெடிப்புகளிலும் 200 பேர் பலியானார்கள். அவர்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலர் கைகால்களை இழந்தனர். காயம் அடைந்தவர்கள் லேடி ஹhர்டிங், சப்தர்ஜங், ஆர்.எம்.எல். ஆகிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறhர்கள்.

மருத்துவமனைகளில் கூட்ட நெரிசல்

இறந்தவர்களின் உடல்களும் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து உடல்களை பார்த்து மார்பில் அடித்து அழுது புரண்டனர். மருத்துவமனை முழுவதும் காயம் அடைந்தவர்களின் மரண ஓலம் கேட்கிறது.1993-ஆம் ஆண்டு மும்பையை உலுக்கிய தொடர் வெடிகுண்டு சம்பவம் போல இந்த வெடிகுண்டு சம்பவம் நேற்று டெல்லியை கலக்கிவிட்டது.

ஆர்.டி.எக்ஸ் குண்டுகள்

4 இடங்களிலும் வெடித்தது சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ். குண்டு என்று தெரிய வந்துள்ளது.

முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து டெல்லி முழுவதும் உஷhர் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. முக்கிய அலுவலகங்கள், கட்டிடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மக்கள் விழிப்புடன் இருக்கும்படி டெல்லி நகர போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டார். கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை யாரும் தொடக்கூடாது என்றும் அவைப்பற்றியும் சந்தேகப்படும்படி திரிபவர்கள் பற்றியும் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கும்படியும் அவர் கூறினார்.

டெல்லி நகர எல்லைக்கு சீல்

இந்த குண்டு வெடிப்பினால் டெல்லி நகர மக்கள் அச்சம் பீதியில் உறைந்து போனார்கள். அடுத்து எங்கு குண்டு வெடிக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து டெல்லி நகர எல்லைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டது. குண்டு வைத்த தீவிரவாதிகளுக்கு நகரம் முழுவதும் வலை விரிக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் நின்ற மக்கள் பீதியுடனும், மிரட்சியுடனும் காணப்பட்டனர்.

குண்டு வெடிப்பு பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறும்போது, இது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி செயல். அது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றார்.</span>


- RaMa - 10-30-2005

தகவலுக்கு நன்றிகள்


- Mathan - 10-31-2005

குண்டு வெடிப்பை அடுத்து தில்லி மிகவும் தாமதமாகவே வழமைக்குத் திரும்புகிறது

இந்தியத் தலைநகர் தில்லியில் 60 பேர் பலியாகக் காரணமான நேற்றைய குண்டு வெடிப்புகள் குறித்து பொலிஸார் புலனாய்வுகளைத் தொடரும் அதே சமயம் அந்த நகர் மிகவும் தாமதமாகவே வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

தெருக்களில் காணப்படும் மக்களின் எண்ணிக்கை வழமையை விட மிகவும் குறைவாக காணப்படுவதாக ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இந்திய மக்கள் பண்டிகைக்களுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த நேரம் மிகவும் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் தமது கடைகளில் வியாபாரம் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தமது தங்கும் அறைகளுக்காக பதிவுகளை ரத்துச் செய்து வருவதாக குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள விடுதிக்காரர்கள் கூறுகிறார்கள்.

விசாரணைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டேல் கூறியுள்ளார்; ஆனால் மேலதிக தகவல்களைத் தர அவர் மறுத்து விட்டார்.

இஸ்லாமி இன்குலாபி மஹஷ் என்று தம்மை அழைத்துக்கொள்ளும், இதுவரை அறிமுகமாகியிராத குழு ஒன்று, காஷ்மீர் குறித்த தமது இலக்கின் மேலதிக முன்னேற்றத்துக்காக இந்த தாக்குதலை செய்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த உரிமை கோரல் ஆதாரபூர்வமானதா என்பது குறித்து தெளிவாகவில்லை.

BBC Tamil


- Mathan - 10-31-2005

<b><img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/south_asia_delhi_grieves/img/4.jpg' border='0' alt='user posted image'>

அன்புக்குரியவர்களை இழந்த சோகம் தாளாமல் கதறும் மக்கள்

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/south_asia_delhi_grieves/img/3.jpg' border='0' alt='user posted image'>

காயமடைந்தோர்

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/south_asia_delhi_grieves/img/9.jpg' border='0' alt='user posted image'>

குண்டு வெடிப்பை அடுத்து பெருமளவிலான சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

படங்கள் பிபிசி இணையத்தளம்</b>


- RaMa - 10-31-2005

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- Rasikai - 10-31-2005

Cry Cry Cry Cry