![]() |
|
புத்து}ரில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் உயிரிழப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புத்து}ரில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் உயிரிழப்பு (/showthread.php?tid=2713) |
புத்து}ரில் படையினரால் சுடப்பட்ட இளைஞன் உயிரிழப்பு - mayooran - 10-29-2005 யாழ். புத்து}ர் பகுதியில் படையிரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்புணர்வு முயற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டிலும், கைக்குண்டு வீச்சிலும் ஏழு பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் தர்மராஜா நிரோசன் என்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தர்மராஜா நிரோசன் உட்பட்ட பொது மக்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வந்து கொண்டிருந்த மருத்துவ காவு வண்டியை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக படையினர் தடுத்து வைத்தே அனுப்பியுள்ளனர். இதனாலேயே அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Sankathi |