Yarl Forum
தாயும் நீயும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தாயும் நீயும் (/showthread.php?tid=2704)

Pages: 1 2 3

தாயும் நீயும் - kpriyan - 10-29-2005

தன் வயிற்றில் என்னை சுமந்தாள் தாய்
உன் இதயத்தில் என்னை சுமந்தாய் நீ
உன் அன்பும் தாயின் அன்பும் ஒன்றாக
நீயும் என் தாயானாய்!

ஆதரவளித்தாய்.......
அணைத்தாய்..........
தேவைக்கேற்ப கண்டித்தாய்...

என் முகம் சுருங்கும்போதெல்லாம்,
என் நாடி நிமிர்த்தி அழகாக சிரித்துவைத்தாய்,
என் இதயத்தை தினமும் தேன் சுவைக்கவைத்தாய்,
இவ்வுலகின் இருளில் தடுமாறும்போது கைப்பிடித்து நடத்திச்சென்றாய்,
எலியைக்கண்டபோது மட்டும் அழகாக பயந்து என் பின்னால் மறைந்து கொண்டாய்,

என் பெயர் சொல்லி ச்செல்லமாக கூப்பிட்டாய்
என்ன? என்றால்
ச்சும்மா என்று சொல்லி என் இதயம் சுழுக்க சிரித்துவைத்தாய்,

நாடு பிரியும் நேரம் வந்ததும்,
என்தாய் என்னை கட்டியணைத்து அழும்போது,
தூரமாய் ஒளித்து நின்று அழுதுவைத்தாய்.........

- Mathan - 10-29-2005

என்ன அனுபவமோ <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
படித்து நினைத்து பார்க்க இனிமையாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கு

- tamilini - 10-29-2005

Quote:தன் வயிற்றில் என்னை சுமந்தாள் தாய்
உன் இதயத்தில் என்னை சுமந்தாய் நீ
உன் அன்பும் தாயின் அன்பும் ஒன்றாக
நீயும் என் தாயானாய்!
என்ன தான் சொல்லுங்க காதலி என்றா என்ன மனைவி என்றா என்ன. தாய்க்கு ஈடாகாது. தாய் தாய் தாங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 10-29-2005

ஆமா தாய் தாய் தான் மனைவி மனைவி தான் காதலி காதலி தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

காதலி மனைவியான பின்பு சின்ன வேறுபாடு இருக்க தானே செய்யும்,

- tamilini - 10-29-2005

கலியாணத்தின் பின் மனைவியும் காதலிக்கப்பட்டாள் வேறுபாடு இருக்காது என்பது என் கருத்து. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 10-29-2005

ம் நிச்சயமாக மனைவியும் காதலிக்கப்படும் போது வேறுபாடு குறைவாக தான் இருக்கும். ஆனாலும் முன்பு காதலி தனி இடத்தில் சந்திப்பதில் பல சிரமங்கள் நேரக்கட்டுப்பாடுகள் இருக்கும். மனைவியான பின்பு அவை கிடையாது, அதனால் சந்திக்க முயற்சிக்கும் போது உள்ள கஷ்டங்கள் தவிப்புக்கள் என்பன குறையும், அது போல சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்,

- tamilini - 10-29-2005

அதை விட ஆண்கள் காதலிக்கும் போது விழுந்து விழுந்து காதலிப்பாங்க. பிறகு மனைவி தானே என்று ஒரு கவலையீனமாக கூட இருக்கலாம் காதலிப்பது குறைவு. ஆனா பாவம் பெண்கள் எப்பவும் காதலிச்சபடி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 10-29-2005

காதலர்களாக இருப்பதிலும் கணவன் மனைவியாக இருப்பதிலும் உள்ள வேறுபாடு ஆண்கள் பெண்கள் இருவரிடையேயும் தான் இருக்கின்றது, இயற்கையில் பெரும்பாலும் ஆண் தான் பெண்ணை நோக்கி சென்று கவர முயற்சிக்கின்றான், அந்த ஆண் காதலியை கவர்வதற்கு காதலிக்கும் சமயத்தில் பல சித்து விளையாட்டுக்களை காட்டலாம், ஆனால் திருமணமான பின்பு நமக்குரியவள் தானே மனைவியாகிவிட்டாள் தானே என்று அந்த கவர செய்யும் முயற்சிகளை குறைத்து விடுகிறான், காதலனின் குறும்புகளையும் அளவுக்கு மீறிய அன்பையும் சித்து விளையாட்டுக்களையும் பார்த்தும் அனுபவித்தும் வந்த பெண் திருமணத்திற்கு பின்பு அவற்றில் மாற்றம் தென்பட்டவுடன் அவருக்கு என்னை பிடிக்கலையோ அல்லது வேறு யாருடனோ பழகுகிறாரோ என்றூ நினைத்து தன்னை தானே வருத்தி கொள்கிறாள், அவ்வளவு தான்,

- ப்ரியசகி - 10-29-2005

அழகிய கவிதை ப்ரியன்...
நானும் காதலியை தாயாக எண்ணி கவி வடிப்பவர்களை பார்த்திருக்கிறேன். கவிகளும் ரொம்ப..அனுபவமாக இருக்கும். தொடருங்கள்...

- ப்ரியசகி - 10-29-2005

தமிழ் அக்கா உங்கள் கருத்து.. உண்மையானது... அலைபாயுதே படத்தில் கூட..காதலிக்கும் போது 2 மணி நேரம் காத்திருக்கும் மாதவன்...திருமணமான பின் வேலையால் வரும் போது ஒரு 10 நிமிசம் தாமதம் என்று சண்டை போடுவார்..அப்போது சாலினி இதே கருத்தை தான் சொல்லுவார்... :evil: அது எனக்கு கூட பிடிக்காது தான். :evil:
ஆனால் மதன்...ஆண்களின் மனதை சொல்லி இருக்கிறார். அதை வாசிக்கையில்..என்னவோ ஆண்கள்..அப்படி நினைத்தும் செய்யலாம் என்று தோணுகிறது. :roll:
ஆனால் பெண்களுக்கு காதலித்த போது கவர எண்ணி செய்த அதே குறும்புகள் தொடரணும் என்று மனதில் ஆசை இருக்கலாம் தானே.....இனி என்ன, என்ன செய்தாலும் நம்மோடு தானே இருப்பள் என்று விட்டால்...அவர்கள் என்ன செய்வார்கள்?அப்போதும் கவர வேண்டியது காதலியான மனைவியை த்தானே..வேற யாரயும் அல்லவே..:roll: :evil:

மதன் நீங்கள்...சொல்வதை பார்க்கையில் ஆண்கள் எதையுமே கொஞ்ச காலம் தான் செய்வார்கள் போலும் என எனக்கு எண்ணத்தோணுகிறது ..(இப்போ ஒரு பொருள் கிடைக்கவேண்டி போராடுவார்கள் கிடைத்த பின் கிடைத்து விட்டது தானெ என விட்டு விடுவார்கள்) அப்படித்தானே? :roll: :roll:

- Mathan - 10-29-2005

ஆண்கள் எதையும் கொஞ்ச காலம் தான் செய்வார்கள் என்றில்லை. காதலிக்கும் போது கொஞ்சம் அதிகப்படியாக காட்டும் சித்து விளையாட்டுக்களை குறைத்து கொள்கிறார்கள் அவ்வளவு தான். 8)
தவிர மனைவி மேல் வைத்திருக்கு அன்பின் அளவில் குறைச்சல் ஏதுமில்லை.

- kuruvikal - 10-29-2005

நல்ல கவியொன்று...!

பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!

திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 10-29-2005

காதலிக்கப்படுவது ஒரு போதும் குறையாது, காதலன் கணவனான பின்பு அவளை கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகள் குறையலாம், அது வாழ்க்கையில் உள்ளது தான், அதனை மனைவி அன்பு குறைவதாக தவறாக எடுத்து கொள்ள கூடாது, அப்படி எடுத்து கொண்டால் அதுவே மனத்தளவில் விரிசல் உண்டாவதற்கான முதல் காரணியாகிவிடும் Idea

இது கணவனுக்கும் பொருந்தும்

- tamilini - 10-29-2005

Mathan Wrote:காதலர்களாக இருப்பதிலும் கணவன் மனைவியாக இருப்பதிலும் உள்ள வேறுபாடு ஆண்கள் பெண்கள் இருவரிடையேயும் தான் இருக்கின்றது, இயற்கையில் பெரும்பாலும் ஆண் தான் பெண்ணை நோக்கி சென்று கவர முயற்சிக்கின்றான், அந்த ஆண் காதலியை கவர்வதற்கு காதலிக்கும் சமயத்தில் பல சித்து விளையாட்டுக்களை காட்டலாம், ஆனால் திருமணமான பின்பு நமக்குரியவள் தானே மனைவியாகிவிட்டாள் தானே என்று அந்த கவர செய்யும் முயற்சிகளை குறைத்து விடுகிறான், காதலனின் குறும்புகளையும் அளவுக்கு மீறிய அன்பையும் சித்து விளையாட்டுக்களையும் பார்த்தும் அனுபவித்தும் வந்த பெண் திருமணத்திற்கு பின்பு அவற்றில் மாற்றம் தென்பட்டவுடன் அவருக்கு என்னை பிடிக்கலையோ அல்லது வேறு யாருடனோ பழகுகிறாரோ என்றூ நினைத்து தன்னை தானே வருத்தி கொள்கிறாள், அவ்வளவு தான்,

இவை போலிக்காரணங்கள். ஆனால் உண்மை அதெல்ல. நான் கண்ட ஒரு சில இடங்களில். வீனான பிணக்குகள் உருவாவதற்கு காரணமே கலியாணம் முடிஞ்ச உடனை பேச்சுகள் நடைமுறைகள் எல்லாம் மாறிப்போய்விடுகிறது. (ஒரு வேலை அலுத்துப்போயிருக்கலாம் ஒரு சிலருக்கு). அதுவும் குழந்தை பிறந்த உடனை சொல்லவேண்டாம் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். ஆரம்பத்தில் அன்பே ஆருயிரே என்று இருந்த நிலை மாறி பிறகு நாயே பேயே என்றாகிவிடும். இப்படி சின்னச்சின்ன விசயங்கள் கூட வாழ்க்கையில் நின்மதியைக்கெடுக்கும் என்றதை உணர்வதில்லை. ஆகவே பெண்களே எதுக்கும் உசாராக இருங்கள். இப்படி பரிதவிக்க விடுற ஆண்களை கணக்கோட வைச்சிருக்கிறது நல்லது. பாவிக்க விட்டிடாதீங்க பாவிச்சுக்கோங்க. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

kuruvikal Wrote:நல்ல கவியொன்று...!

பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!

திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இது நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. 10 மாசம் சுமந்தது மட்டும் இல்லை. அசைவுகளால் பேசியது முதல்க்கொண்டு உங்கட அசைவைப்புரிஞ்சு உங்கட எண்ணத்தை அறிஞ்சு. உங்களுக்கு வேண்டியதை வேண்டிய நேரம் செய்து. உங்கட வாழ்க்கையில ஆரம்பம் முதல் கடைசிவரை வாறவங்க அம்மா தான். மனைவி இடையில தான் வாறாங்க. இவங்கள விட தாய்க்கு தனித்தன்மை உண்டு. குழப்பாதீங்க இரண்டையும்.

- narathar - 10-29-2005

மதன் எப்ப கலியாணம் செய்தீங்க இப்படி அனுபவப் பட்டவர் மாதிரி சொல்லுறீங்க.வேற யாற்றயோ அனுபவம் எண்டு
நெடுகச் சொல்லுறீங்க எனக் கெண்டா சந்தேகமா இருக்குது.
இன்னும் ஒன்றையும் இங்க சொல்ல வேணும்,காதலிக்கும் போது அனேகமாக அன்றாட பிரச்சினைகள் இருக்காது.வாழத் தொடங்கிய பின் வேலை,குழந்தைகள்,அவர்களின் பாடசாலை விடயங்கள் என்று நேரம் கிடைப் பதே கஸ்டமாக இருக்கும்.இதில் காதலிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கும்.ஆனால் நல்ல புரிந்துணர்வு இருப்பவர்களுக்கிடயில் நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் வருவது குறைவு.மற்றது பொதுவாகவே அதீத எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்களுக்கே ஏமாற்றங்கள் ஏர்படுகிறது.இதில் இந்த தெய்வீகக் காதல்,காதல் இன்றிச் சாதல் என்கின்ற கற்பனைகளில் மிதப்பவர்களே மிகப் பெரிய ஏமாற்றங்களையும்,மனக் கஸ்ட்டங்களுக்கும் ஆளாகிறார்கள்.இது நான் நடை முறயில் பலரது காதல்களைப் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன்.

- Mathan - 10-29-2005

tamilini Wrote:
Mathan Wrote:காதலர்களாக இருப்பதிலும் கணவன் மனைவியாக இருப்பதிலும் உள்ள வேறுபாடு ஆண்கள் பெண்கள் இருவரிடையேயும் தான் இருக்கின்றது, இயற்கையில் பெரும்பாலும் ஆண் தான் பெண்ணை நோக்கி சென்று கவர முயற்சிக்கின்றான், அந்த ஆண் காதலியை கவர்வதற்கு காதலிக்கும் சமயத்தில் பல சித்து விளையாட்டுக்களை காட்டலாம், ஆனால் திருமணமான பின்பு நமக்குரியவள் தானே மனைவியாகிவிட்டாள் தானே என்று அந்த கவர செய்யும் முயற்சிகளை குறைத்து விடுகிறான், காதலனின் குறும்புகளையும் அளவுக்கு மீறிய அன்பையும் சித்து விளையாட்டுக்களையும் பார்த்தும் அனுபவித்தும் வந்த பெண் திருமணத்திற்கு பின்பு அவற்றில் மாற்றம் தென்பட்டவுடன் அவருக்கு என்னை பிடிக்கலையோ அல்லது வேறு யாருடனோ பழகுகிறாரோ என்றூ நினைத்து தன்னை தானே வருத்தி கொள்கிறாள், அவ்வளவு தான்,

இவை போலிக்காரணங்கள். ஆனால் உண்மை அதெல்ல. நான் கண்ட ஒரு சில இடங்களில். வீனான பிணக்குகள் உருவாவதற்கு காரணமே கலியாணம் முடிஞ்ச உடனை பேச்சுகள் நடைமுறைகள் எல்லாம் மாறிப்போய்விடுகிறது. (ஒரு வேலை அலுத்துப்போயிருக்கலாம் ஒரு சிலருக்கு). அதுவும் குழந்தை பிறந்த உடனை சொல்லவேண்டாம் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். ஆரம்பத்தில் அன்பே ஆருயிரே என்று இருந்த நிலை மாறி பிறகு நாயே பேயே என்றாகிவிடும். இப்படி சின்னச்சின்ன விசயங்கள் கூட வாழ்க்கையில் நின்மதியைக்கெடுக்கும் என்றதை உணர்வதில்லை. ஆகவே பெண்களே எதுக்கும் உசாராக இருங்கள். இப்படி பரிதவிக்க விடுற ஆண்களை கணக்கோட வைச்சிருக்கிறது நல்லது. பாவிக்க விட்டிடாதீங்க பாவிச்சுக்கோங்க. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இவை போலிக்காரணங்கள் என்று சொல்லமாட்டேன், ஆனால் திருமணம் முடிந்த பின்பு நீங்கள் குறிப்பிட்டபோல மாறுபவர்கள் சிலர் ஆண்கள் பெண்கள் இரு பகுதியிலும் இருக்க தான் செய்கிறார்கள், தவிர யார் பரிதவிக்க விடுகிறார்கள் என்று திருமணத்துக்கு பிறகு தானே தெரியவருகின்றது எப்படி கணக்கோட வச்சிருக்கிறது :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆண்களை பாவிக்க சொல்லி ஐடியா கொடுக்கிறிங்களே இது நியாயமா :evil:
காதலை அன்பை பாவிக்க முற்படும் ஆண் பெண் இரு தரப்பினரையுமே :evil: :evil: :evil:

- Mathan - 10-29-2005

narathar Wrote:மதன் எப்ப கலியாணம் செய்தீங்க இப்படி அனுபவப் பட்டவர் மாதிரி சொல்லுறீங்க.வேற யாற்றயோ அனுபவம் எண்டு
<b>நெடுகச் சொல்லுறீங்க எனக் கெண்டா சந்தேகமா இருக்குது</b>.
இன்னும் ஒன்றையும் இங்க சொல்ல வேணும்,காதலிக்கும் போது அனேகமாக அன்றாட பிரச்சினைகள் இருக்காது.வாழத் தொடங்கிய பின் வேலை,குழந்தைகள்,அவர்களின் பாடசாலை விடயங்கள் என்று நேரம் கிடைப் பதே கஸ்டமாக இருக்கும்.இதில் காதலிப்பதற்கு எங்கே நேரம் கிடைக்கும்.ஆனால் நல்ல புரிந்துணர்வு இருப்பவர்களுக்கிடயில் நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் வருவது குறைவு.மற்றது பொதுவாகவே அதீத எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்களுக்கே ஏமாற்றங்கள் ஏர்படுகிறது.இதில் இந்த தெய்வீகக் காதல்,காதல் இன்றிச் சாதல் என்கின்ற கற்பனைகளில் மிதப்பவர்களே மிகப் பெரிய ஏமாற்றங்களையும்,மனக் கஸ்ட்டங்களுக்கும் ஆளாகிறார்கள்.<b>இது நான் நடை முறயில் பலரது காதல்களைப் பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன்.</b>

என்ன நாரதர் சந்தேகம் அது இது எண்டு சொல்லி குழப்பத்தை உண்டாக்கி போடுவீங்க போல இருக்கு. என்னை விடுங்க சாமி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது சரி நீங்க மட்டும் பல காதலர்களை பார்த்த அனுபவத்தில சொல்லலாம் நான் சொல்ல கூடாதோ? நானும் உது உங்க அனுபவம் என்று நினைக்கலாம் தானே :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி சரி நான் அப்படி நினைக்க மாட்டன் கவலை வேண்டாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 10-29-2005

tamilini Wrote:
kuruvikal Wrote:நல்ல கவியொன்று...!

பெண்மைக்குள் தான் தாயும் காதலியும் மனைவியும்..! அவள் எல்லாமாகவும் இருக்க வல்லவளே..!

திருமணத்தின் பின் காதலிக்கப்படுவது குறையும் என்றால்..அவர்கள் காதலிச்சது திருமணத்துக்காக என்பதாகவே கொள்ளப்படனும்..! உண்மையாக காதல் என்பது இறப்பு வரைக்கும் தொடரும்... கணவன் மனைவி ஒரு உறவு நிலை.. அது திருமணம் எனும் சடங்கு தருவது...உள்ளம் இணைந்தது இருவரும் ஒருசேர காதலிக்கும் போதுதானே..அதுதான் உண்மை நிலை...அது தொடர வேண்டும்...ஆயுள் வரை..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இது நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது. 10 மாசம் சுமந்தது மட்டும் இல்லை. அசைவுகளால் பேசியது முதல்க்கொண்டு உங்கட அசைவைப்புரிஞ்சு உங்கட எண்ணத்தை அறிஞ்சு. உங்களுக்கு வேண்டியதை வேண்டிய நேரம் செய்து. உங்கட வாழ்க்கையில ஆரம்பம் முதல் கடைசிவரை வாறவங்க அம்மா தான். மனைவி இடையில தான் வாறாங்க. இவங்கள விட தாய்க்கு தனித்தன்மை உண்டு. குழப்பாதீங்க இரண்டையும்.

தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி தான்

- tamilini - 10-29-2005

Quote:ஆண்களை பாவிக்க சொல்லி ஐடியா கொடுக்கிறிங்களே இது நியாயமா
யார் பாவிச்சா என்ன பாதிப்பு பலவிதத்தாலும் பெண்ணுக்கு தான் அது தான் உசார் படுத்தினன்.

Quote:தாயை போல எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பை செலுத்தவது கடினம் தான் என்றாலும் தாய்க்கு அடுத்து அந்த ஸ்தானத்தை வகிப்பவள் காதலி அல்லது மனைவி தான்
_________________
இதைத்தான் நான் சொன்னன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- narathar - 10-29-2005

நான் குழப்பத்துக்குச் சொல்லேல்ல, நல்ல அனுபவஸ்த்தர் மாதிரிச் சொன்னீங்க அது தான் சொன்னேன்.முன்னரும் மகப் பேறு மருத்துவமனை எல்லாம் போனன் எண்டீங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓம் எனது சொந்த அனுபவத்தையும் மற்றவர்களின் அனுபவத்தையும் வைத்துத் தன் சொன்னேன். மற்றது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி அல்ல.இது ஆண்களுக்கும் பொருந்தும்,பெண்களுக்கும் பொருந்தும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->