| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 302 online users. » 0 Member(s) | 299 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,647
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,507
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242
|
|
|
| ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் |
|
Posted by: வதனா - 10-28-2005, 08:55 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
மது அருந்துபவர்கள் என்னும் போது ஆண்கள் தான் பொதுவாக நினை வுக்கு வருவார்கள் என்றில்லை, அரசல் புரசலாக, அதோ அந்த வீட்டுப் பொம்பள நல்லா தண்ணியடிப்பா.. அந்த வீட்டுப்பொண்ணு ஓட்டல் பார்- கூட போவுதாம்.. அந்த நடிகையா.. தண்ணியடிச்சுட்டா ஒரே கலாட்டா... கச்சேரியா ஆயிடும்..
இப்படி வழக்கத்திற்கு மாறhன நிகழ்வுகளும் கவனத்திற்கு வந்துவிடும். அதுவே பேசப்படும் பொருளாகிவிடும்.
ஆண்கள் தண்ணியடிக்கிறhர்கள் சரி, பெண்கள் தண்ணியடித்தால் என்ன ஆகும்? அந்த குடும்பமே தத்தளிக்கும்...
அதைவிட அவர்கள் உடல் நிலை வெகுவாகப் பாதிக்கும். சரி, நம் பெண்கள் ஏன் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிறhர்கள்?
ஆணும் பெண்ணும் சரி சமம் என்பது தொழில் ரீதியான போட்டிகளில், அறிவு ரீதியில், வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதில் மட்டும் என்றில்லாமல் பழக்க வழக்கங்களிலும் ஏற்படுவதன் விளைவுதான் மதுவே மதுவைக் குடிப்பது என்கிறhர்கள்.
ஆனால், ஆண் தண்ணியடிப்பதற்கும், பெண்தண்ணியடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆணின் உடலமைப்பு பெண்ணின் உடலமைப்பை விட பெரியது. ரத்த நாளங்கள் பெரியவை, நொதிக்கும் தன்மை அதிகம். எனவே, பெண்ணை விட ஆண் அதிக மது அருந்தி னாலும் தாக்குப்பிடிக்க முடியும். பெண்ணுக்கு எளிதில் நொதிப்பு ஏற்படாமல் ரத்தத்தில் ஆல்கஹhல் தங்குவதால் விரைவில் தள்ளாட்டம் வந்துவிடும்.
இவ்வளவுதானா? இதைத் தவிர வேறு பிரச்சினைகள் ஏதேனும் உள்ளனவா?
நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.
மதுவினால் வருவனவற்றில் முக்கியமானவை கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, கருவுறுப்பு பாதிப்பு ஆகியவை. இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
<b>கல்லீரல் பாதிப்பு </b>
ஆணின் உடலை விட பெண்ணின் உடல் கொழுப்புப் பொருட்களை மெதுவாகத்தான் சிதைக்கும். உடல் திரவம் குறைவாக இருப்பது, சிறிய உருவம், ஆல்கஹhலை நொதிக்கும் நொதிகள் குறைவாக இருப்பது ஆகியவை இவற்றுக்குக் காரணம். இதனால் மது பெண்களின் ரத்தத்தில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். இதன் காரணமாக கல்லீரல் பாதிப்புகள் விரைவாகப் பெண்களைப் பிடித்துக்கொள்கின்றன.
கொழுப்பு அமிலங்கள் சிதைக்கப்படாததால் அவை கல்லீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் ஹெபடைடிஸ், கல்லீரல் செதில்படல நோயான சிரோசிஸ் லிவர் போன்றவை வரு கின்றன. இறுதியில் மரணம்தான்.
<b>இதய பாதிப்பு </b>
மது அருந்துவதால் மிகை ரத்த அழுத்தம், இதயம் வீங்கி ரத்தத்தை சரியாக வெளியேற்றhத நிலையான கார்டியோ மயோபதி என்ற நிலை உண்டாகிறது. பக்கவாதம், இதயம் மிக வேகமாகவோ, மெதுவாகவோ ஒழுங்கற்ற லயத்தில் துடிக்கும் அர்ரித்யா, ஹhர்ட் பெயிலியர் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆல்கஹhலில் நிறைய கலோரிகள் உள்ளன. இது உடல் எடையை அதி கரிக்கவும், நீரிழிவு உண்டாகவும், இவற்றின் காரணமாக இதய பாதிப்பு தோன்றவும் வழி வகுக்கிறது.
<b>இனப்பெருக்கத் திறன் பாதிப்பு</b>
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பை மது அதிகரிப்பதாக அமெரிக்க மருத்துவச் சங்க ஆய்வு கூறுகிறது. மது அருந்தாதவர்களைவிட மது அருந்துவோருக்கு 41 விழுக்காடு அதிகமாக மார்பகப் புற்று வரும் வாய்ப்பு உண்டு. வயது முதிர்ந்த பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம். அதிக மது அருந்துவதால் வலியுள்ள மாதப்போக்கு, மாதப்போக்கின்போது அதிக உதிரம், உதிரமே தோன்றhத நிலை, தானாக கருச்சிதைதல், மலட்டுத் தன்மை, முன்னதாக மாதவிலக்கு முற்றுப்பெறுதல் போன்றவை உண்டாகின்றன. மது ஹhர்மோன் செயல்பாட்டைச் சீர்குலைப்பதே இதற்குக் காரணம்.
மதுவினால் நரம்புத் திசுக்கள், குறிப்பாக மூளை நரம்புத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. மூளைச் சிதைவு, மன இறுக்கம், நரம்பு மண்டலக் கோளாறுகள், நடத்தைக் கோளாறுகள் போன்றவை இதனால் தோன்றுகின்றன.
<b>உடற்பருமன் </b>
மதுவை நொதிக்க முடியாததால் கலோரி அதிகமாவதாலும், நொறுக்குத் தீனிகள் நிறைய சாப்பிட வேண்டியிருப்பதாலும், வயிற்று உறுப்புகள் தளர்ந்து தொங்குவதாலும் உடற்பருமன் வரும்.
<b>எலும்பு பாதிப்புகள் </b>
உடலில் எலும்புகளின் உருவாக்கம், வளர்ச்சி மட்டுமின்றி, உடலின் முக்கியத் தேவைகளுக்கும் கால்சியம் தேவை. உடலில் எவ்வளவு கால்சியத்தை சேர்த்து வைக்கலாம், உடல் பயன்பாட்டுக்கு எவ்வளவு செலவழிக்கலாம், உபரிகளை எந்த விகிதத்தில் வெளியேற்றலாம் என்பதை யெல்லாம் ஹhர்மோன்கள் சரியாகச் செயல்படுத்திவரும். மதுவானது ஹhர்மோன்களைக் கெடுப்பதால் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாமல், உடலில் கால்சியம் சேராமல் வெளியேறிவிடும். உணவிலிருந்தும் கால்சியத்தை உடலால் பெற இயலாது. இதனால் எலும்பு மெலிவு, கைகால் குடைச்சல் மூட்டு வலிகள் போன்ற தொல்லைகள் வரும்.
குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே உடலை காத்துக் கொள்ளலாம் என நினைக்காமல், மதுவை முற்றிலும் நிறுத்திவிட்டால் உடல் நலம் தானாகச் சரியாகும்.
-டாக்டர் ந. தமிழ்ச்சித்தன்
குரு சித்தவைத்திய சாலை,
தாம்பரம், சென்னை-45
நன்றி
தினகரன்.கொம்
|
|
|
| பெண்களுக்கு வலி உணர்வு அதிகம் ஏன்? |
|
Posted by: வதனா - 10-28-2005, 08:51 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
பெண்களை மெல்லியர் என்று இலக்கணங்கள் சொல்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் ஒரு சின்ன வலியை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டை ஒரு வழி பண்ணி விடுவார்கள். இதற்கு காரணம் என்ன?
ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு உணர்ச்சி நரம்புகள் அதிகமாக காணப்படுகின்றன. பெண் முகத்தில், ஒரு சதுர சென்டி மீட்டர் பரப்பில் 34 நரம்பு இழைகள் உள்ளன. ஆண்களுக்கு 17 நரம்பிழைகள் மட்டுமே உள்ளன. பெண்கள் அதிகப்படியான வலி உணர்வை வெளிப்படுத்துவதற்கு இதுதான் காரணம். வலியை தாங்கிக் கொள்வதில் ஆண்களுக்கு சமூக மற்றும் உளவியல் ரீதியான பல விஷயங்கள் பக்க பலமாக உள்ளன. பெண்களுக்கு இப்படி இல்லை. அவர்களுக்கு வலியை பொறுத்துக் கொள்ளும் தன்மை குறைவு.
பெண்களுக்கே உhpத்தான இந்த பலவீனத்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை டெக்னிக் ஆகியவற்றில் மாற்றங்களை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் பெண்களின் வலி உணர்வை ஓரளவுக்கு மட்டுப்படுத்த முடியும்.
இன்னொரு விஷயத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளில் பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினகரன்.கொம்
|
|
|
| உலகப்பயங்கரவாதியும் பிராந்தியப்பயங்கரவாதியும் ஒப்பந்தம் |
|
Posted by: வியாசன் - 10-28-2005, 08:47 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
சிறிலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை காலை பயங்கரவாதத்திற்கு எதிரான முக்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையினூடாக சிறிலங்காவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தில் வைத்து சிறிலங்காவின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திலக் ரணவிராஜாவும் அமெரிக்காவின் சார்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டட்டும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கையின் கீழ் சிறிலங்காவிற்கு அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு சம்பந்தமான உதவிகளை வழங்கும். காவல்துறை திணைக்களத்தின் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சிகள்இ விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுகளை வழங்கல்இ உபகரணங்களை வழங்கல் என்பன இதில் அடங்குகின்றன.
அமெரிக்க அதிகாரிகளினால் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கையில்இ தற்போது சிறிலங்காவில் இருக்கும் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை ஆராய்ந்து தேவைக்கேற்ப பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிறிலங்காவின் அரச தலைவர்களுக்குப் பாதுகாப்பளித்தல்இ அரச சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகளை பாதுகாத்தல்இ சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்இ பொதுமக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்தல் இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.
இதேவேளை பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான மேலதிக பயிற்சிகளையும் அறிவூட்டல்களையும் சிறிலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்க காவல்துறையினருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்த அமைச்சரவை அறிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் சிறிலங்கா காவல்துறையினர் அமெரிக்க காவல்துறையினரிடமிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்தல் என்பன தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நவீன பாதுகாப்பு முறைகள் பற்றிய அறிவினையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
|
|
|
| என் எண்ணக்கருவே கலைந்து போகாதே |
|
Posted by: வியாசன் - 10-28-2005, 08:39 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
என்னுள்ளே கருத்தரித்து
நிறைமாதமான
என்குழந்தை வெளியே வரத்
தயங்குகின்றது.
தயங்குகாதே என்
அஞ்சுகமே
மட்டுறுத்துனர் பெருமளவில்
கூரான கத்தியுடன்
கூசாமல் காயடிப்பர் என்றஞ்சி
நீ கருவறையில்
காலமெல்லாம் காத்திருக்க போறாயா?
வறுமையும் சச்சரவும் பெரும்
புலவர்கள் சொத்தென்பதை
மறந்தவர்கள்.
கல்லறையும் கருத்தரிக்கும்
என்றான எம்மவர் சுதந்திரமாய்
கருத்தெழுத மட்டுறுத்துனர்
இறுக்கத்தில் மலடாகி மாண்டிடுவோம்
என்றா நீ கருவறைக்குள்
துயிலுகின்றாய்.. சத்திரசிகிச்சையினால்
முகமிழந்துபோய்விடுமென்று
கருவறைக்குள் கருக்கலைந்து
போகாதே வா வா வெளியே
பீனிக்ஸ் பறவைபோல சாம்பலிலிருந்தும்
உயிர்பெறுவோம்
|
|
|
| திராவிடத் தீரன் நரகாசுரனுக்கு வீர வணக்கம் |
|
Posted by: Nellaiyan - 10-28-2005, 08:25 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (1)
|
 |
5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராய் வந்த ஆரியர், திராவிட மண்ணைப் பறிப்பதற்காகாய் தொடர்ச்சியாய் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிடத் தலைவர்களை அசுராயும், தம்மைத் தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாயும் புராணங்களாயும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு, கடவாய்ப்பல், பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத தெய்வங்களாக்கினர். தம் அடி வருடிய திராவிடர்களை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப்படுத்திய ஆரிய பிராமண குலத்தவரால் இக் கதைகளை எல்லா மொழிகளிலும் உலாவ விட்டனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.
நம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எம் வீரவணக்கங்கள்.
..... நன்றி ஒருபேப்பர், இதழ் 33 ......
|
|
|
| Internet Part II: Return of the geeks? |
|
Posted by: Mind-Reader - 10-28-2005, 08:23 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Internet Part II: Return of the geeks?
By Paul Mason
BBC Newsnight
Imagine your e-mail could only receive and not send. It would not be much fun.
But for the first decade of web browsing it's been just like that. You can read webpages but only if there are special add-ons can you interact with them.
Now somebody has launched a web browser that is designed to let you write to the web just as easily as you read it.
It's called Flock and - while it's only available as a "pre-release" - it's already achieved the business equivalent of headlining at Glastonbury: namely, an article in Business Week.
I met up with the guys who invented Flock at something called a "barcamp" in Amsterdam: they had taken over one floor of an old office building in Amsterdam docks and equipped it with beer, sliced bread, Red Bull and whiteboards.
Sharing information
Attendance was by word of mouth - and within minutes of the first bottle of Amstel being cracked open the place was buzzing with about 50 members of that maligned urban tribe - technology geeks.
A lot of them work for big companies, including one who works for the Pentagon. But they are all dedicated to the idea of free software written through open collaboration, known as open source.
Here is why Flock is interesting: over the past two years, the way we use the internet has started to change.
We've started to use it to share information instead of just consuming it: there are three big businesses based on collaborative models of web use - Google, Amazon and eBay. They don't just sell you information - they use information you provide, aggregated with that of others - as one of the central propositions of the business.
On my Amazon homepage, for example, it is constantly telling me what other people have read who bought books I have bought. Its star rating system for books and its league table of sales are enough to make people in book publishing tremble.
Personal thoughts
The other big thing that has happened is blogging. There are now 20 million blogs being tracked by the website Technorati - it is doubling about every five months: 70,000 a day are being set up, with the Chinese currently piling into this activity just as the US/Europe appetite for blogging plateaus.
Blogs are personal web logs hosted on special websites that make it incredibly easy to write your thoughts, link them to other people's, post your photos, etc. My blog, Newsnig8t.com, during the G8 conference is an example.
A third emerging example of web collaboration is the "Wiki" - a collaborative work space on the web whose best product is Wikipedia, the collective encyclopaedia.
Interactive elements
Now the thing about blogs, and about business sites you can interact with, is that a lot of the "two-way" functionality has had to be bolted on to the main programme we use to look at the internet, Microsoft Internet Explorer.
If I had shown you a modem in 1990 and said 'it allows you to send letters to people all over the world,' you might have said 'why do I want to?'
So, what Flock represents is the first coherent attempt to write a web browsing programme where all the interactive elements are part of the programme, not bolt-ons.
The emergence of Flock is part of a wider movement known as Web 2.0 - when computer programmes are released they always have a version number so this means we are going into "version two" of the internet.
Web 2.0 is getting some of the people I knew during the dotcom boom very excited.
Some of the very same people who were trying to finance dotcom businesses with venture capital are now piling into Web 2.0 - and at a recent Web 2.0 conference in San Francisco, many of the internet's visionaries were to be found.
Does it matter?
Now, the problem with getting your head round Web 2.0, blogging and Flock is that, as Newsnight's deputy editor keeps saying to me as he paces back and forth next to my desk, "What if I don't want to interact?"
My answer is this: if I had shown you something called a modem in 1990 and said: "You will want one of these because it allows you to send letters to people all over the world and even read presentations they've written," you might have said "why do I want to?"
The answer is you don't know until, firstly, you've got used to it, and secondly, there are a lot of like-minded people doing it. This is called the "network effect" - things become more useful the more people adopt them.
I am not predicting Flock will wipe Microsoft Internet Explorer off the world's desktops, but the browser it is built on, Firefox, already has a 10% market share.
I do think the way we look at the internet is about to change dramatically. And with the open source movement getting further into the mainstream of business, programmes like Flock have a better chance than ever of shaping the change.
Paul Mason's report can be seen on Newsnight on Thursday 27 October, 2005 at 10.30pm on BBC Two
Story from BBC NEWS:
http://news.bbc.co.uk/go/pr/fr/-/1/hi/prog...ght/4382626.stm
Published: 2005/10/27 16:08:11 GMT
© BBC MMV
|
|
|
| நீண்ட நேரம் நோட்புக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த |
|
Posted by: Rasikai - 10-28-2005, 07:53 PM - Forum: கணினி
- Replies (1)
|
 |
[b]நீண்ட நேரம் நோட்புக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த.....
அடிக்கடி வெளியூர்கள், வெளிநாடுகள் செல்லுகிற வழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக நோட்புக் கம்ப்யூட்டர்களை வாங்குவார்கள். இரயில்களிலும், விமானங்களிலும் பயணம் செய்யும் பொழுது அந்த நேரங்களை வீணாக்காமல் நோட்புக் கம்ப்யூட்டர்களில் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
வீடுகளில், அலுவலகங்களில் இருக்கும்பொழுது ஏசி கரண்டை நோட்புக் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தும். இரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் நோட்புக் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும்பொழுது பேட்டரி வழங்குகிற டிசி கரண்டை அவை நம்பியுள்ளன.
12 மணி நேரப் பயணத்தில் 6 மணி நேரமாவது நோட்புக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவீர்கள் எனில், உங்கள் நோட்புக் கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி குறைந்தது 6 மணி நேரம் தாக்கு பிடிக்க வேண்டும். பயணத்தின்போது ஒரு சில பழக்கங்களை நீங்கள் கடைப் பிடித்தால், நீண்ட நேரம் பேட்டரியை பயன்படுத்த முடியும்; பயணமும் வெற்றிகரமாக முடியும்.
நீண்ட நேரம் மின்சாரத்தை வழங்குகிற முறையில் பேட்டரியை மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழி முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
மானிட்டரையும் ஹார்ட் டிஸ்க்கையும் ஆப் செய்தல்: பயணம் செய்கையில் கம்ப்யூட்டரை சற்று நேரம் கவனிக்காமல் விட்டுவிட்டு வேறு சிந்தனையில் இருக்கிறீர்கள் என்றால் அந்த நேரத்தில் மானிட்டரையும், ஹார்ட் டிஸ்க்கையும் ஆப் செய்யலாம். இவ்வாறு செய்தால், பேட்டரி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும். இப்படி ஆப் செய்கிற வேலையை விண்டோஸிடம் விட்டு விடலாம்.
விண்டோஸின் கண்ட்ரோல் பேனலில் உள்ள Power Options ஐகானை டபுள்கிளிக் செய்யுங்கள். கிடைக்கிற டயலாக் பாக்ஸில் Power Schemes டேபை அழுத்துங்கள். Running on batteries என்ற நெடுவரிசையில் உள்ள Turn off monitor மற்றும் Turn of hard disks ஆகியவற்றில் நேரங்களை மாற்றுங்கள். பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்துள்ள நேரத்தை மாற்ற வேண்டியதில்லை. எனினும் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்...
ஹைபர்னேஷனைக் கொடுத்தல்::விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஹைபர்னேஷன் என்ற வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தாமல் STANBY வசதியைப் பலர் பயன்படுத்துகின்றனர். ஹைபர்னேஷன் மற்றும் ஸ்டாண்ட்பை ஆகியவற்றிற்கிடையே வேறுபாடு உண்டு. கம்ப்யூட்டரைப் பயன் படுத்தாதபோது இந்த இரண்டையும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் ஹைபர்னேஷனை நீங்கள் தேர்வு செய்தால் அதுவரை நீங்கள் செய்த வேலைகள் பேக்கப் செய்யப்பட்டு நோட்புக் கம்ப்யூட்டர் முற்றிலும் ஆப் செய்யப்படும்; பேட்டரி மின்சாரம் மிச்சம் பிடிக்கப்படும். ஸ்டாண்ட்பை நிலையில் நோட்புக் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் சென்று கொண்டே
இருக்கும்.
முந்தையத் தலைப்பில் கண்ட Power Options Properties டயலாக் பாக்ஸில் உள்ள Hibernate டேபை கிளிக் செய்யுங்கள். Enable Hibernation என்ற செக் பாக்ஸைத் தேர்வு செய்து ஓகே செய்யுங்கள்.[/color]
பயாஸ் செட்டிங்கை மாற்றல்::மின்சாரம் தொடர்பாக பயாஸிலும் நேரத்தை நிர்ணயிக்கலாம். விண்டோஸில் நீங்கள் கொடுத்த நேரம், பயாஸில் நீங்கள் கொடுத்த நேரம் ஆகியவற்றிற்கிடையே வேறுபாடு இருந்தால் பயாஸின் நேரத்தைத்தான் கம்ப்யூட்டர் பின்பற்றும். எனவே பயாஸின் நேரமும், விண்டோஸின் நேரமும் ஒன்றாக வரும்படி ஏதாவது ஒரு இடத்தில் மாறுதல் செய்யுங்கள்.
சில பயாஸ்களில், விண்டோஸில் கொடுத்துள்ள நேரத்தைப் பின்பற்றும்படி பயாஸிற்கான செட்டிங் இருக்கும். அதைக் கொடுங்கள்.[/color]
திரையின் பிரைட்னஸைக் குறைத்தல்::
தேவையற்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைகழற்றி வைத்தல்::.
தேவையற்ற டிவைஸ்களை செயல் இழக்கச் செய்தல்::Wi-Fi ஆண்டெனா, இன்ப்ராரெட் போர்ட் போன்ற பயணத்தின்போது தேவையற்ற டிவைஸ்களை Disable செய்யுங்கள். மெனு மூலமாக அல்லது சிஸ்டம் டிரேயில் உள்ள அவற்றிற்கான ஐகான்களை கிளிக்/ரைட்கிளிக் செய்து அவற்றை செயல் இழக்கம் செய்யுங்கள்.
வைரஸ் சோதனை, உடனடி தகவல் ஷெட்யூலர் போன்றவற்றை நீங்கள் நிறுத்தி விடலாம். இதனால் பேட்டரி மின்சாரம் மிச்சமாகும். பயணம் முடிந்த பின்பு இவற்றை ஓட விடுங்கள்.[/color]
தேவையற்ற புரோகிராம்களை இயக்காமல் இருத்தல்::பயணத்தின்போது பொழுதுபோக வேண்டுமே என்று விசிடி, டிவிடி டிஸ்க்குகளைப் போட்டு திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால் பேட்டரி மின்சாரம் நிறைய செலவாகும். எனவே திரைப்படங்களைப் பார்க்காமல் இருந்தால் பேட்டரி நீண்ட நேரம் தாக்கு பிடிக்கும்.
ஆடியோ சிடி, எம்பி3 சிடி போன்றவற்றில் இருந்து பாட்டு கேட்காதீர்கள். விசிடி, டிவிடி அளவுக்கு பேட்டரி மின்சாரம் செலவாகாவிட்டாலும், பாடல்களை கேட்கும்பொழுது கொஞ்சமாவது பேட்டரி கூடுதல் செலவாகும்.
நன்றி வட்டகச்சிகொம்[/color]
|
|
|
| அதிகம் வேலை பார்த்தால் மாரடைப்பு ஏற்படும் |
|
Posted by: Rasikai - 10-28-2005, 07:40 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
<b>அதிகம் வேலை பார்த்தால் மாரடைப்பு ஏற்படும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் </b>
உயர் பதவிகளில் அதிக வேலை செய்யும் வாலிபர் களுக்கு இருதய கோளாறு ஏற்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்லாந்து நாட்டு டாக்டர் இருதய கோளாறு பற்றி ஒரு ஆய்வு நடத்தினார்.
இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களிடம் அவர்கள் இந்த ஆய்வை மேற் கொண்டனர். இதில் வாலிப பருவத்தி லேயே உயர்ந்த பதவிகள் வகிப்பவர்கள், அதிக வேலை பளு உள்ளவர்களுக்கு இரு தய கோளாறு விரைவில் ஏற்படும் ஆபத்து உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
வேலைப்பளுவால் ஏற்படும் பதட்டம், மன உளைச்சல், காரணமாக இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி விடவும் வாய்ப்பு உள் ளது. மாரடைப்பு ஏற்படும் அபாயமும், அவர்களுக்கு 30 வயதிலேயே ஏற்பட்டு விடுகி றது.
ஆண்களுக்கு தான், பெண்களுக்கு இல்லை.இந்த கோளாறுகள் ஏற்படும் ஆபத்து ஆண்களுக்குத் தான். எந்த பதவியில் இருந்தா லும், அதிக வேலைப்பளு இருந் தாலும் இளம் வயது பெண் கள் அதிக அள வில்பாதிக்கப்படுவதுஇல்லை என்றும் அந்த டாக்டர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
நன்றி வட்டக்கச்சிகொம்
|
|
|
|