![]() |
|
என் எண்ணக்கருவே கலைந்து போகாதே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் எண்ணக்கருவே கலைந்து போகாதே (/showthread.php?tid=2728) |
என் எண்ணக்கருவே கலைந்து போகாதே - வியாசன் - 10-28-2005 என்னுள்ளே கருத்தரித்து நிறைமாதமான என்குழந்தை வெளியே வரத் தயங்குகின்றது. தயங்குகாதே என் அஞ்சுகமே மட்டுறுத்துனர் பெருமளவில் கூரான கத்தியுடன் கூசாமல் காயடிப்பர் என்றஞ்சி நீ கருவறையில் காலமெல்லாம் காத்திருக்க போறாயா? வறுமையும் சச்சரவும் பெரும் புலவர்கள் சொத்தென்பதை மறந்தவர்கள். கல்லறையும் கருத்தரிக்கும் என்றான எம்மவர் சுதந்திரமாய் கருத்தெழுத மட்டுறுத்துனர் இறுக்கத்தில் மலடாகி மாண்டிடுவோம் என்றா நீ கருவறைக்குள் துயிலுகின்றாய்.. சத்திரசிகிச்சையினால் முகமிழந்துபோய்விடுமென்று கருவறைக்குள் கருக்கலைந்து போகாதே வா வா வெளியே பீனிக்ஸ் பறவைபோல சாம்பலிலிருந்தும் உயிர்பெறுவோம் - shanmuhi - 10-28-2005 வறுமையும் சச்சரவும் பெரும் புலவர்கள் சொத்தென்பதை மறந்தவர்கள். கல்லறையும் கருத்தரிக்கும் என்றான எம்மவர் சுதந்திரமாய் கருத்தெழுத மட்டுறுத்துனர் இறுக்கத்தில் மலடாகி மாண்டிடுவோம் என்றா நீ கருவறைக்குள் துயிலுகின்றாய்.. கவிதை நன்றாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்... - kuruvikal - 10-28-2005 இக்கவி கள உறவுகளினது மட்டுமன்றி...கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட அனைவரினதும் எண்ணப்பிரதிபலிப்பாகிறது...! நன்றி வியாசன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-28-2005 ம்ம் கவிதை நன்றா இருக்கு வாழ்த்துக்கள் .. குழந்தை எப்ப வருது வியாசன் அண்ணா..? நீங்கள் இப்ப தொடர்ந்து எழுதுங்கள்.. குழந்தை பிறந்து அது எழுதட்டும் . :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . - Rasikai - 10-28-2005 கவி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் - வியாசன் - 10-29-2005 kavithan Wrote:ம்ம் கவிதை நன்றா இருக்கு வாழ்த்துக்கள் .. குழந்தை எப்ப வருது வியாசன் அண்ணா..? நீங்கள் இப்ப தொடர்ந்து எழுதுங்கள்.. குழந்தை பிறந்து அது எழுதட்டும் . :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . அனைவருக்கும் நன்றிகள் கவிதன் நீங்கள் உத்தரவாதம் கொடுத்தால்தான் அந்த பிரசவங்கள் நடைபெறும். - அருவி - 10-29-2005 மட்டுறுத்தினர்களால் இப்படியும் நடக்கிறதா hock: :roll:
- Mathan - 10-29-2005 என்ன பிரச்சனை எனக்கு சொல்லவே இல்லையே வியாசன்? நன்றி - வியாசன் - 11-01-2005 Mathan Wrote:என்ன பிரச்சனை எனக்கு சொல்லவே இல்லையே வியாசன்? நன்றி மதன் ஒருவித பிரச்சனையுமில்லை. சும்மாதான் எழுதினேன். களத்தில் சண்டை சச்சரவு இல்லாவிடின் கருத்துக்கள் பெரிதாக எழுதப்படுவதில்லை. அதனால்தான் - kavithan - 11-02-2005 viyasan Wrote:kavithan Wrote:ம்ம் கவிதை நன்றா இருக்கு வாழ்த்துக்கள் .. குழந்தை எப்ப வருது வியாசன் அண்ணா..? நீங்கள் இப்ப தொடர்ந்து எழுதுங்கள்.. குழந்தை பிறந்து அது எழுதட்டும் . :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . ம்ம் நான் கவிதை எழுத சொன்னேன் மட்டுறுத்தினர்களை பற்றி தான் எழுதணும் என்று இல்லை நாட்டில் எத்தனையோ விடயங்கள் இருக்கு அவற்றில் சில வற்றை உங்கள் கவிகள் மூலம் மற்றவர்களுக்கு புகட்டலாம் தானே. மட்டுறுத்தினர் பற்றி எச்சரிக்கை மட்டும் கவிதையில் விட தெரியுது எல்லா ,அப்படியே கொஞ்ச சமூகத்தை விழிப்பேற்படுத்தும் கவிகளை படையுங்கள். அதுக்கு எல்லாம் ஏன் என் உத்தரவாதம். படைப்பாளி தன் படைப்புக்களில் தான் நம்பிக்கை உடையவனாக இருந்தால் யார் உத்தரவாதமும் அவசியம் இல்லை. - வெண்ணிலா - 11-02-2005 Quote:தயங்குகாதே என் மட்டுறுத்துனரின் கூரான கத்திக்குள் அகப்படாமல் பிரசவிக்கலாம் தானே. :wink: ந்ல்லா இருக்கு கவி - tamilini - 11-02-2005 புரியலப்புரியல ஒன்றும் புரியல அண்ணாவின் கவிதை வெளிவர என்ன தடை அதுவும் தெரியல..
|