| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 371 online users. » 0 Member(s) | 368 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,082
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,471
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242
|
|
|
| தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? |
|
Posted by: selvanNL - 10-27-2005, 02:21 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (29)
|
 |
[size=14]அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?:
|
|
|
| தமிழீழ தேசிய கீதத்தை உருவாக்க.... |
|
Posted by: selvanNL - 10-27-2005, 01:58 PM - Forum: தமிழீழம்
- Replies (13)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>தமிழீழத்திற்கான தேசியப் பண் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகள் வேண்டுகோள்</b></span>
[size=16]தமிழீழத் தேசியப் பண்ணினை (தேசிய கீதம்) ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழுறவுகளிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அரசியல்துறையினர் விடுத்துள்ள அறிக்கை:
எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழி காட்டுதலோடும் நெறிப்படுத்தலோடும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தினூடாக ஈழத்தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசு நிறுவப்பட்டுள்ளது.
அதை நிலை நிறுத்துகின்ற வகையில் தேசியக் கொடி, தேசிய மலர் என்பன ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
ஆயினும், தேசியப் பண் ஆக்கப்படாத நிலையில், எமது கொடி வணக்கப் பாடலையே தேசியப் பண்ணுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
தேசியப் பண் இன்றைய சூழலில் காலத்தின் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எதிர்காலத்தில் மீக்குயர் பண்ணாக ஒலிக்கவிருக்கும் தமிழீழத் தேசியப் பண்ணினை ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது இனிய தமிழுறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.
தேசியப் பண்ணினை ஆக்க முன்வருவோர் தேச விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மான மறவர்களினது விடுதலை வேட்கைக்கும் தாயகம் பற்றி அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்க்கைக்கும் உயிர்கொடுக்கும் வகையில், துள்ளல் நடையில் மிடுக்கோடு கூடியதாகத் தேசியப் பண்ணினை ஆக்குதல் வேண்டும்.
எமது தாயகத்தின் சிறப்பு, பெருமை, வளம் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைக்கப்படும் தேசியப் பண், ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் அதற்கு எம்மினம் கொடுத்த விலைகளையும் எமது வழித்தோன்றல்களின் நினைவில் நிலை நிறுத்தக் கூடியதாக பிறமொழிக் கலப்பற்றதாக அமைதல் வேண்டும்.
இவ்வாறாக எமது தேசியப்பண் ஆகக்கூடியது பதினெட்டு வரிகளுக்குள் உயர் வீச்சைக் கொண்டதாக அமையவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
உருவாக்கப்படும் தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்கள் <b>27.11.2005 ஆம் நாளுக்கு முன்னதாகப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.</b> தாயகத்தில் உள்ளவர்கள் தத்தம் பிரதேச அரசியல்துறை செயலகங்கள் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.
மின்னஞ்சல்: editorial@viduthalaipulikal.com
தொலைபேசி: +94 21 228 5010
தொலைநகல்:
நன்றி புதினம்....
|
|
|
| சுட்டியின் சுட்டித்தனம் |
|
Posted by: suddykgirl - 10-27-2005, 01:57 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (28)
|
 |
ஏன் இந்த சலனம் என்னுள்?
சஞ்சலமின்றி சந்தோச வானில் சிறகடித்துப் பறந்து திரிந்த -
என் மனதில் ஏன் இந்த தயக்கம்?
இது ஏற்படுவதற்கு காரணமானவன் - அவன் யார்?
அவனுக்கும் எனக்கும் என்ன உறவு?
எத்தனையோ ஆண்களுடன் பழகிய எனக்கு
ஏன் இவனில் மட்டும் ஒரு மயக்கம்?
இவன் என் மனதை மயக்க வந்த மந்திரவாதியா?
இவன் குரலில் அப்படி என்ன மயக்கம் எனக்கு?
ஆம் தொலைபேசியில் கணீர் என ஒலித்தது அவனது இனிமையான குரல்
அதை நான் கேட்டதுண்டு, ரசித்ததுண்டு ஏன் அவன் அன்பில் மூழ்கியதுண்டு- ஆனால் என் வாழ்வில் இவ்வாறு பலபேரை சந்தித்த போது ஏற்படாத சலனம்- ஏன்
இப்போது இவனில் மட்டும் ஏற்பட்டது?
அவனை நான் நேரில் பார்த்ததில்லை -
அவனுடன் தொலைபேசியில் கூட அதிகம் பேசியதில்லை
அப்படி இருக்க ஏன் என் தூக்கத்தை கலைத்தான்?
அவன் யார்? அவன் தானா என் உயிர்மூச்சு? - அல்லது இதற்குப் பெயர் தானா காதல்?
[size=10]எழுத்து பிழைகளை திருத்தியுள்ளேன் - மதன்
|
|
|
| ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் போட்டி |
|
Posted by: AJeevan - 10-27-2005, 01:38 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
<b>சிறந்த வெளிநாட்டுப் படம்
ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் கலந்து கொள்கிறது </b>
லாஸ் ஏஞ்சல்ஸ், அக். 27-
ஆங்கிலப் படங்கள் தவிர, சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்தியா உள்பட 58 நாடுகளைச் சேர்ந்த படங்கள் போட்டியிடுகின்றன.
<b>78-வது விருது வழங்கு விழா</b>
சினிமாப் படங்களுக்கும், கலைஞர்களுக்கும் கிடைக்கும் விருதுகளில் மிக உயர்ந்தது ஆஸ்கார் ஆகும். இந்த விருது பெறுவதை உலக முழுவதும் உள்ள திரைப்படக் கலைஞர்கள் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்.
78-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி நடக்க இருக்கிறது.
<b>
58 படங்கள்</b>
ஆலிவுட் படக்கலைஞர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது என்ற போதிலும் வெளிநாடுகளில் தயாரான படங்களில் சிறந்த படத்துக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கான போட்டியில், கலந்து கொள்ளும்படி 91 நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதை ஏற்று 58 நாடுகள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள படங்களை அனுப்பி உள்ளன.
<b>இந்திப்படம்</b>
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட `பஹேலி' என்ற இந்திப்படம் இந்தப்போட்டியில் கலந்து கொள்கிறது. இதை அமோல் பலேகர் இயக்கி இருக்கிறார்.
திருமணம் முடிந்து வீடு திரும்பும்போது மணமகள் ஒரு ஆவியைச் சந்திக்கிறாள். கடைசியில் அந்த ஆவியையே தன் காதலனாக வரித்துக்கொள்கிறாள் என்பது தான் பஹேலி படத்தின் கதை.
<b>ஈராக் படம்</b>
ஈராக் நாட்டில் தயாரான `ரீக்குயியம் ஆப் ஸ்நோ' என்ற குர்திஷ் மொழிப்படமும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறது.
வறட்சிப் பகுதியில் வாழும் குர்து மக்கள் மழைக்காக ஏங்கித் தவிப்பதை இந்தப்படம் சித்தரிக்கிறது.
<b>பிஜித் தீவுப்படம்</b>
பிஜித் தீவில், தயாரிக்கப்பட்ட "தி லாண்ட் ஹேஸ் ஐஸ்'' என்ற படம் போட்டியிடுகிறது. பிஜித் தீவின் பூர்வீகக் குடிமக்களைப் பற்றிய முதல் பிஜிப்படம் இது.
ஒவ்வொரு நாடும் ஒரு படத்தை மட்டுமே போட்டிக்கு அனுப்ப முடியும் என்பது ஆஸ்கார் விருதுக்கான விதிமுறை ஆகும்.
தினத்தந்தி
|
|
|
| காதலின் பிரிவு...... |
|
Posted by: kpriyan - 10-27-2005, 12:37 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (19)
|
 |
எல்லோர்விடியலும் ஏதோவொன்றுக்காக விடிகின்றது,
ஆனால் எனது விடிவின் தேடல் உனக்காகவேநிகழ்கின்றது.
ஒன்றையடைந்து அது மதிப்பற்றுப் போவதைவிடவும்,
அது கிடைக்காமற்போய் அதற்காக ஏங்குவதில் ஒருதனிச்
சுகமும் இருக்கின்றது.......
சுவையும் இருகின்றது........
காதலின் தோல்வி....காதலியின்/காதலனின் பிரிவு.... இதற்கெல்லாம் விதியா காரணம்?
இல்லை.. இல்லவே இல்லை.
காதலின் தோல்வி சோர்வடைவதல்ல.
நம் மனதுக்கும் எழுகோலுக்கும் கிடைத்த உரம் அது..
சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.
தோல்வியில் ஒரு சுகம்.......
வாழ்க்கை சுவையாக வேண்டுமானால் விரும்பியவள்
விலகிப்போக வெண்டும்.....
நிழலில் கிடைக்கின்ற சுகம் நிஜத்தில் கிடைப்பதில்லை...
அவளை நின்னைத்து ஏங்குவதில் கிடைக்கும் சுகம்,
அவள் மனைவியாகும்போது கிடைப்பதில்லை.
நீ நினைத்தவள் உனக்கு கிடைக்கவில்லையானால்,
உன் உணர்வுகள் புத்துணர்வையும் புதிதாக்கும்.
உன் கற்பன்னைச்சுவை எல்லோரையும் தோற்கடிக்கும்.
அவளின் நினைவுகள் மட்டும் சுகமாகும்.
உன் உணர்வுகளுக்கு உரம் வரும்போது உனது
எழுதுகோல் உனக்குச்சுகத்தை அடையாளம் காட்டும்.
கிடைத்த ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு கிடைக்காத
ஒன்றுக்காக மனம் ஏங்கும் போது!
ஏக்கம் கலந்த சுகம்மொன்று எனக்குள் ஊடுருவிச்சென்றுகொண்டுதான் இருக்கிறது.
காதலித்தவள் கிடைத்துவிட்டால் உனக்கு கிடைப்பதெல்லாம் சுகமென்று யார் சொன்னது?
நீ அவளை உயிராக நேசித்திருந்தால், அவள் நின்னைவுகளே போதும்.................சுகம் சுகம்
தொல்வியில் துவளு.. துயரைப்பருகு...ஆற்றாமையை
அரவனணத்துக்கொள்....
அதிலும் அவளைகாணு....
நாளைய விடியலில் அவளது நினைவுக்கக காத்திருந்து,
அந்த இனிமையை தினமும்பருகி,
நாளையவள் மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கயுடன் உறங்கி
அந்த உறக்கமும் நடுநிசியில் அவள் நினைவுத்தடமாகி,
அந்த நள்ளிரவில் அவள் நினைவோடு சங்கமித்து
அடைகின்ற அந்தப் பேரின்ப உணர்வு இருக்கின்றதே.
அப்பபா.. அதுவல்லவா சுகம்....
காதலியுங்கள் இன்பம் உண்டு,தடைப்படுங்கள் இன்பவலியும் உண்டு.....
ஆனால் இதற்கெல்லாம் மனத்திடமும் வேண்டும்.
கற்பனை செய்யுங்கள்.. எழுதுங்கள்..
மனவலிமையைப் பெற முயற்சிசெய்யுங்கள்.
ஏமற்றங்கள்தான் வாழ்வின் முதற்கல்.
ஏக்கம் கலந்த இன்ப உணர்வுகளே வாழ்வின் படிக்கல்.
கற்பனை வாழ்வில் கிடைகின்றசுகம்.
நிஜ வாழ்வில் கிடைப்பதில்லை.
கற்பனை என்பது யாரும் கண்டுபிடிக்க இயலாத மாய மந்திரம்.
யாரையும் காட்டிக் கொடுக்காத தனிவழி.
தனிமையை துரத்தும் தனிவகனம்.
கட்டவிழ்ந்தொடும் பரந்த கடற்பரப்பு.
கட்டுபாடற்ற பரந்த புல்வெளி.
தனித்துச்சுவைக்கும் கனித்தோப்பு,
கண்டுகொள்ள இயலாத இந்திர உலகம்....
காதலில் தொல்வியுற்றவனுக்குக் கற்பனை தேன் கலந்த நதி, வெல்லக்கிடங்கு!
இது எல்லோரலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து... பிழையிருந்தால், மன்னிக்க...!!!!
|
|
|
| விமான நிலையத்தில் தமிழ் இளைஞர்கள் கடத்தல் |
|
Posted by: mayooran - 10-27-2005, 05:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்காவின் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
தங்களது நண்பர் ஒருவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக 4 பேரும் விமான நிலையத்திற்கு வந்த போது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
யாழ். நெல்லியடியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் 4 பேரும் செவ்வாய்க்கிழமை காலை கொழும்புக்கு வந்து வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். பின்னர் வான் ஒன்றில் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற வானை மறித்த இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் நால்வரையும் மற்றொரு வானில் வலுக்கட்டாயமாகத் ஏற்றி கடத்திச் சென்றுள்ளது.
இந்தச் சூழலிலும் கடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் தனது கைபேசி மூலம் உறவினருக்கு தாங்கள் தடுக்கப்பட்டு மற்றொரு வானில் ஏற்றப்படுவது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நான்கு இளைஞர்களின் உறவினர்களும் காவல்துறையிடம் இந்தக் கடத்தல் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
<span style='font-size:14pt;line-height:100%'>puthinam</span>
|
|
|
| களம் தொடர்பான பிரச்சனைகள் / தவறுகள் |
|
Posted by: ragavaa - 10-27-2005, 02:08 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (24)
|
 |
புதிய களப்பிரிவுகள் உருவாக்கப்பட்ட பின்பு கருத்துக்களை பார்க்கவோ பதிலளிக்கவோ முயற்சித்தால் சிலவேளை இப்படியான பிழைச் செய்தி வருகிறதே?
phpBB : Critical Error
Error clearing sessions table
DEBUG MODE
SQL Error : 1034 Incorrect key file for table: 'phpbb_sessions'. Try to repair it
DELETE FROM phpbb_sessions WHERE session_time < 1130374896 AND session_id <> '<span style='color:red'>******'
Line : 326
File : sessions.php </span>
வேறு யாரேனுக்கும் இப்படி வந்ததா?
|
|
|
| எழுத்தில் படங்கள் |
|
Posted by: ragavaa - 10-27-2005, 01:55 AM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
எழுத்தினால் உருவாக்கப்பட்ட சில படங்கள்
கணனித் திரையிலிருந்து சில அடி து}ரம் (>5') தள்ளி நின்று பார்க்கவும்
<img src='http://img137.imageshack.us/img137/291/aish3fc.png' border='0' alt='user posted image'>
<img src='http://img137.imageshack.us/img137/4026/asin9sz.png' border='0' alt='user posted image'>
<img src='http://img137.imageshack.us/img137/2357/asin17ec.png' border='0' alt='user posted image'>
<img src='http://img137.imageshack.us/img137/4773/jo6wu.png' border='0' alt='user posted image'>
|
|
|
| காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு |
|
Posted by: AJeevan - 10-26-2005, 09:01 PM - Forum: கலைகள்/கலைஞர்கள்
- Replies (2)
|
 |
[size=15]<b>காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு</b>
<b>ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது! </b> என்கிறார் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன்.
தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் அலையும் ஒவ்வொரு ஈழத் தமிழனும், இந்த உணர்ச்சிக் கவிஞரின் கவிதைகளுடன்தான் வாழ்கிறான். விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை பலவீனப்படுத்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை ராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ... துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது கட்அவுட்களை நிற்க வைத்து, சிங்கள ராணுவத்தினர் சுட்டுப் பழகியதாகவும் ஒருகாலத்தில் சொல்வார்கள்.
<img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p106aaa.jpg' border='0' alt='user posted image'>
இன்றும், உலகெங்கும் தன் உணர்ச்சிக் கவிதைகளால் ஈழத் தமிழர்களுக்கான விடுதலை விளக்கை எடுத்துச் செல்லும் இந்தக் கவிஞர், இப்போது தமிழகத்தில் முடக்கப்பட்ட அகதி வாழ்வு வாழ்கிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, விகடனுக்காக தன் மௌனம் கலைக்கிறார் காசி ஆனந்தன். உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த விடுதலைப் புலி திலீபன் பற்றிப் பேச்சு வந்ததும், நொடிப் பொழுதில் கவிஞரின் கண்கள் குளமாகின்றன...
<img src='http://www.vikatan.com/av/2005/oct/30102005/p106aa.jpg' border='0' alt='user posted image'>
திலீபனின் தியாக மரணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம். ஈழத்தின் விடுதலை உணர்வு தமிழகத்திலும் தீயாகக் கொந்தளித்த நேரம் அது. அங்கே நல்லூர் முருகன் கோயிலில் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். நான்தான் அந்தத் தம்பியை அழைத்துப் போய், விரத மேடையில் அமர வைத்தேன். 12 நாட்கள், சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் வீர மரணம் அடைந்தான் தம்பி. உடல் துவண்டு, உயிர் அடங்கும் நேரத்திலும் கண்களில் ஒளி குன்றாத அந்தத் தம்பி, Ôஎன் கடைசித் தறுவாயில் காசி அண்ணாவின் கவிதை வரிகள் என் இதயத்தை நிரப்ப வேண்டும்Õ என்று ஆசைப்பட்டான்.
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்...
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!Õ என்ற எனது வரிகளைக் கேட்டபடியே திலீபனின் மூச்சு அடங்கியது. மரணத்தைத் தன் பக்கத்திலேயே வைத்து நேசித்தவன் திலீபன். அவனுடைய தியாகத்தை நினைக்கும்போது, ஈழத்துக்குள் காலடி எடுத்துவைக்க முடியாமல் இங்கே அகதி வாழ்க்கை வாழ்கிற எனது துயரம் ஒரு பொருட்டாக எனக்குத் தோன்றுவதில்லைÕÕ என்கிறார் காசி ஆனந்தன்.
அன்று முதல் இன்று வரையிலான தனது வாழ்க்கையின் ஓட்டத்தையும் மெதுவாக நினைவு கூர்கிறார்...
ஈழம் இன்று உலகின் முற்றத் தில் நிமிர்ந்து நிற்கிறதென்றால், அதற்குப் புலிகளும் ஈழ மக்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சம் அல்ல. தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிற வேலையை காலங்காலமாகச் செய்து வருகிறது சிங்கள அரசு. சிங்களக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில்கூட வெறுப்பைக் கக்கி, பிஞ்சு உள்ளங்களிலும் தமிழர் களுக்கு எதிரான நஞ்சை விதைக்கும் அரசு அது.
நான் சிறுவனாக இருந்தபோது தமிழர்களை 'தமிழ் பள்ளோ' என்று தான் சிங்களர்கள் அழைப்பார்கள். 'பள்ளோ' என்றால் 'நாயே' என்று சிங்களத்தில் பொருள். பள்ளோ என்று அழைத்தவர்களை 'கொட்டியா' என்று அழைக்க வைத்தோம். கொட்டியா என்றால், 'புலி' என்று பொருள்!
எழுபதுகளின் துவக்கத்தில் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தது சிங்கள ராணுவம். என் தம்பிகள் சிவஜெயம், சுதர்சனையும் (பின்னர் சயனைட் அருந்தி இறந்தார்) என் தங்கை சிவமலரையும் சிறையில் அடைத்தார்கள். நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன்.
பத்துத் தடவை பாடை வராது. பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா... செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்... சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!' என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதைதான் Ôஎன்னைÕயே இலக்காக வைத்து அவர்கள் சுட்டுப் பழகும் அளவுக்கு அவர்களின் கோபத்தைப் பெரிதாக மூட்டிவிட்டது!
என்னோடு சேர்ந்து என் மனைவி சரோஜினிதேவியும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டாள். அப்போதுதான் நாங்கள் அங்கிருந்து அகதியாக இன்னும் சிலருடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். மீண்டும் நான் அங்கே போனபோது, மிகப் பெரிய பொறுப்புகள் ஒப்படைக் கப்பட்டன. அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு நிலைமை மோசமடைய, மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். இதோ, இப்போது பதினைந்து வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். இப்போது நான் ஈழம் செல்ல விரும்பினால்கூட அரசு அனுமதிக்காது. நான் கண் காணிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இருக் கிறேன்" என்கிற காசி ஆனந்தனின் சிரிப்பில் சிலிர்ப்பு வழிகிறது.
<b>
"இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?" </b>
"அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சுகவீன மாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக் காரியங்கள் செய்யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை.
இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம். எங்களுடையநோக்கம் ஒன்றுதான்... இந்தியா & ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும், ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப் பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசார ணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டுள்ளது.
'ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு' என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?ÕÕ
<b>"இப்போது இலங்கை யில் நிலவும் அமைதி நிலை யானதா, நிஜமானதா?"</b>
"சிங்களர்களுக்கும் தமிழர் களுக்குமான மோதல் என்பது இன்று நேற்றல்ல... 1500 ஆண்டு காலமாக நடந்து வரும் மோதல். சிங்களர்களின் நோக்கம், சிக்கலைத் தீர்ப்பதல்ல... தமிழர்களைத் தீர்ப்பதாக இருக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வேயைக்கூட சிங்கள அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நார்வே அரசுக்கு எதிரான போராட் டங்களை சிங்கள பிக்குகளைத் தூண்டிவிட்டு சந்திரிகா செய்கிறார். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளை தடை செய்யக் கோரி உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதுகிறார் சந்திரிகா.
ஒன்று தெரியுமா... வியட்நாம் தன்னுடைய விடுதலைக்குப் போராடியபோது சீனாவும் ரஷ்யாவும் வியட்நாமுக்கு உதவின. பாலஸ் தீனத்துக்கு அரபு நாடுகளின் ஆதரவு இருந்தது. பங்களாதேஷ் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தியா தன் கைகளில் தாங்கிப் பிடித்தது. ஆனால், 28 ஆண்டு காலமாக விடுதலைப்புலிகள் எந்த நாட்டின் தயவும் இல்லாமல் வீரம் செறிந்த ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான புலிக¬ளைச் சிங்கள ராணுவம் கொன்று குவித்துள்ளது. இதனால், நிலவுவது அமைதியா போரா என்ற ஐயம் தமிழர்கள் மத்தியில் எழுந் துள்ளது. சுனாமிக்குப் பிறகு, உயிரையும் உடைமைகளையும் வீட்டையும் இழந்த தமிழர்களுக்கு, உலக நாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட கொடுக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்க வந்த கிளிண்டனைக்கூட ஈழப் பகுதிகளுக்குச் செல்ல, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் தமிழர்களை யுத்த முனைக்குக் கொண்டு செல்வதே சிங்கள அரசின் விருப்பமாக இருப்பதுதான் வேதனை!"
<b>விடுதலைப்புலிகள் தங்கள் பெயரை சர்வதேச சமூகத்திடம் கெடுத்து வைத்திருக்கிறார்களே? </b>
புலிகளை ஒரு போராளி அமைப்பாகப் புரிந்துகொண்டால் இந்த அவப்பெயரின் மீது இருக்கும் அரசியல் புரியும். உலகெங்கிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்கள் மீது சுமத்தப்படும் குற் றச்சாட்டுதான் இது. ஈழ மக்கள் நிராயுதபாணிகளாக நின்றபோது, எமது மக்களைப் பாதுகாக்க ஆயுதம் எடுத்தவர்கள் புலிகள்.
புலிகள் இல்லையென்றால், இலங்கையில் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அமைதிப் படையுடனான மோதல்கூட தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத் தப்பட்டதுதானே தவிர, இந்தியாவை எதிர்த்து அல்ல!
ஈழ மக்கள் கேட்பதெல்லாம் ஒன்று தான்...பாலஸ்தீனப் போராட்டத்தைப் புரிந்துகொண்டதைப்போல, ஈழப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கட்டும். புலிகள் தங்கள் மீது சுமத்தப்படுகிற எல்லா களங்கத்தையும் துடைத்தெறிவார்கள்.
<b>எம் மண்ணின் விடுதலையை நாங்கள் மீட்டெடுப்போம். ஏனெனில், சுதந்திரம் என்பது சலுகை அல்ல... உரிமை! </b>
நன்றி: விகடன் \ டி.அருள்எழிலன்
படங்கள்: என்.விவேக்
|
|
|
|