Yarl Forum
காதலின் பிரிவு...... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதலின் பிரிவு...... (/showthread.php?tid=2748)



காதலின் பிரிவு...... - kpriyan - 10-27-2005

எல்லோர்விடியலும் ஏதோவொன்றுக்காக விடிகின்றது,
ஆனால் எனது விடிவின் தேடல் உனக்காகவேநிகழ்கின்றது.
ஒன்றையடைந்து அது மதிப்பற்றுப் போவதைவிடவும்,
அது கிடைக்காமற்போய் அதற்காக ஏங்குவதில் ஒருதனிச்
சுகமும் இருக்கின்றது.......
சுவையும் இருகின்றது........

காதலின் தோல்வி....காதலியின்/காதலனின் பிரிவு.... இதற்கெல்லாம் விதியா காரணம்?
இல்லை.. இல்லவே இல்லை.
காதலின் தோல்வி சோர்வடைவதல்ல.
நம் மனதுக்கும் எழுகோலுக்கும் கிடைத்த உரம் அது..

சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.

தோல்வியில் ஒரு சுகம்.......
வாழ்க்கை சுவையாக வேண்டுமானால் விரும்பியவள்
விலகிப்போக வெண்டும்.....
நிழலில் கிடைக்கின்ற சுகம் நிஜத்தில் கிடைப்பதில்லை...
அவளை நின்னைத்து ஏங்குவதில் கிடைக்கும் சுகம்,
அவள் மனைவியாகும்போது கிடைப்பதில்லை.

நீ நினைத்தவள் உனக்கு கிடைக்கவில்லையானால்,
உன் உணர்வுகள் புத்துணர்வையும் புதிதாக்கும்.
உன் கற்பன்னைச்சுவை எல்லோரையும் தோற்கடிக்கும்.
அவளின் நினைவுகள் மட்டும் சுகமாகும்.
உன் உணர்வுகளுக்கு உரம் வரும்போது உனது
எழுதுகோல் உனக்குச்சுகத்தை அடையாளம் காட்டும்.

கிடைத்த ஒன்றைப் புறந்தள்ளிவிட்டு கிடைக்காத
ஒன்றுக்காக மனம் ஏங்கும் போது!
ஏக்கம் கலந்த சுகம்மொன்று எனக்குள் ஊடுருவிச்சென்றுகொண்டுதான் இருக்கிறது.

காதலித்தவள் கிடைத்துவிட்டால் உனக்கு கிடைப்பதெல்லாம் சுகமென்று யார் சொன்னது?
நீ அவளை உயிராக நேசித்திருந்தால், அவள் நின்னைவுகளே போதும்.................சுகம் சுகம்

தொல்வியில் துவளு.. துயரைப்பருகு...ஆற்றாமையை
அரவனணத்துக்கொள்....
அதிலும் அவளைகாணு....

நாளைய விடியலில் அவளது நினைவுக்கக காத்திருந்து,
அந்த இனிமையை தினமும்பருகி,
நாளையவள் மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கயுடன் உறங்கி
அந்த உறக்கமும் நடுநிசியில் அவள் நினைவுத்தடமாகி,
அந்த நள்ளிரவில் அவள் நினைவோடு சங்கமித்து
அடைகின்ற அந்தப் பேரின்ப உணர்வு இருக்கின்றதே.
அப்பபா.. அதுவல்லவா சுகம்....

காதலியுங்கள் இன்பம் உண்டு,தடைப்படுங்கள் இன்பவலியும் உண்டு.....
ஆனால் இதற்கெல்லாம் மனத்திடமும் வேண்டும்.
கற்பனை செய்யுங்கள்.. எழுதுங்கள்..
மனவலிமையைப் பெற முயற்சிசெய்யுங்கள்.

ஏமற்றங்கள்தான் வாழ்வின் முதற்கல்.
ஏக்கம் கலந்த இன்ப உணர்வுகளே வாழ்வின் படிக்கல்.
கற்பனை வாழ்வில் கிடைகின்றசுகம்.
நிஜ வாழ்வில் கிடைப்பதில்லை.
கற்பனை என்பது யாரும் கண்டுபிடிக்க இயலாத மாய மந்திரம்.
யாரையும் காட்டிக் கொடுக்காத தனிவழி.
தனிமையை துரத்தும் தனிவகனம்.
கட்டவிழ்ந்தொடும் பரந்த கடற்பரப்பு.
கட்டுபாடற்ற பரந்த புல்வெளி.
தனித்துச்சுவைக்கும் கனித்தோப்பு,
கண்டுகொள்ள இயலாத இந்திர உலகம்....
காதலில் தொல்வியுற்றவனுக்குக் கற்பனை தேன் கலந்த நதி, வெல்லக்கிடங்கு!

இது எல்லோரலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து... பிழையிருந்தால், மன்னிக்க...!!!!


- tamilini - 10-27-2005

Quote:தோல்வியில் ஒரு சுகம்.......
வாழ்க்கை சுவையாக வேண்டுமானால் விரும்பியவள்
விலகிப்போக வெண்டும்.....
நிழலில் கிடைக்கின்ற சுகம் நிஜத்தில் கிடைப்பதில்லை...
அவளை நின்னைத்து ஏங்குவதில் கிடைக்கும் சுகம்,
அவள் மனைவியாகும்போது கிடைப்பதில்லை.

விரும்பியவள் விலகிப்போய்விட விருப்பம் ஒன்று மீண்டும் உருவாகலாம்.
வாழ்க்கை ஒன்டு உங்களுக்காய் அமைந்த பின்னர். உந்த நினைவுகள் எல்லாம் தூசுதட்டிப்பாக்க கூட நேரம் கிடையாமல் போய்விடும். அன்பு பாசம் காதல் என்றது. பிரித்துப்பாப்பதில் சுகம் இருக்காது. அதால வியாதி தான் வரும். சேந்திருக்கையில் தான் சொர்க்கம். வித்தியாசமான வரிகள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு சில எழுத்துப்பிழைகள் உண்டு கவனிங்க.


- sankeeth - 10-27-2005

சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.


இவ்வரிகள் நன்று. கவிதை சூப்பர்.


- RaMa - 10-28-2005

ஏமற்றங்கள்தான் வாழ்வின் முதற்கல்.
ஏக்கம் கலந்த இன்ப உணர்வுகளே வாழ்வின் படிக்கல்.
கற்பனை வாழ்வில் கிடைகின்றசுகம்.
நிஜ வாழ்வில் கிடைப்பதில்லை.


இந்த வரிகள் மிகவும் உண்மையானது.. வாழ்த்துக்கள் நல்ல கவிதை


- ப்ரியசகி - 10-28-2005

சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.
.......

<b>கற்பனை வாழ்வில் கிடைகின்றசுகம்.
நிஜ வாழ்வில் கிடைப்பதில்லை. </b>

அழகிய வரிகள்...வித்யாசமான கவி..வாழ்த்துக்கள்..


- jeya - 10-28-2005

கவிப்பிரியன் வாழ்த்துக்கள்
எனக்கு பிடித்தமான கருத்தை கூறியிருக்கிறீங்கள் அழகாக கூறியதற்கு நன்றிகள்.........


- kuruvikal - 10-28-2005

கவிப்பிரியன்..கவிதை பேசும் பொருள் நன்று..! காதல் எதற்காவும் தோற்காது...! மனிதர்கள் தான் அதற்கு தோல்வியையும் வெற்றியையும் தருகின்றனர்..! தோல்விக்கு வாய்ப்பளிக்கும் போது வெற்றிக்கு முயற்சி என்பது இல்லாமலே போய்விடும்...!!!!

நினைவுகளை மறைக்கலாம்...மறக்கலாம்..ஆனால் எவரும் எப்பவும் அழிக்க முடியாது...காதலும் நினைவில் மலர்ந்து நிஜத்தில் வாழ்வது...! பிரிவுகளை மனிதர்களே தாங்களாக தருகின்றனர்..அதை நிச்சயமாக எவரும் தடுக்கலாம்...ஆனால் பலர் தடுக்க முயற்சிப்பதில்லை...காரணம்..பிரிவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுவதால்...சுயநலத்தால்....! பொது நலன் கருதிய காதல்...சுயநலத்தால் பொசுங்கிப் போவதே யதார்த்தம்..!

உங்கள் கவி நடையில் கவனம் சொலுத்துங்கோ... உரை நடையாகவும் படிக்கக் கூடியதாக இருக்கிறது...இன்னும் ஓசை சேர்க்க பத ஒழுங்கு செய்து கொள்வது சிறப்பாக இருக்கும்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- இவோன் - 10-28-2005

கவிப்பிரியன்! கவிதைப் பகுதியில் போட்டிருக்கின்ற படியால் இது கவிதை தான் என்று நினைக்கின்றேன்.

ஓசை நயம் சேர்த்து.. உதாரணத்ததிற்கு நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா என்ற ஓசை சந்தத்திற்கு ஏற்றவாறோ அல்லது எல்லா வரியையும் ஒரே எழுத்தில் தொடங்கினாலோ இது கவிதை போல இருக்கும்.

சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை. ..

இந்த வரிகள் சே இல் ஆரம்பித்ததால் இது கவிதை போல எனக்கு படுகிறது.. எதுவோ எப்பிடியோ..

கவிதை சூப்பர்.. நல்லாயிருக்கிறது. வித்தியாசமாயிருந்தது.. நல்ல பேசு பொருள் .. அழகிய வரிகள்.. உண்மையான வரிகள்.. இன்னும் ...


- kuruvikal - 10-28-2005

கவிதைக்கு ஓசை சேர்ப்பது எதுகை மோனை மட்டுமல்ல... இவை சார்ந்த எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற மரபுக் கவி இலக்கணப் புகுத்தலும் முக்கியம்..! புதுக்கவிதை என்பது வெறும் உரை நடை என்பதாக மட்டும் பார்க்க முடியாது...அதற்குள் மரபுக்கவி வடிவங்களும் இருக்கின்றன..!

ஒரு வெண்பா உதாரணம்...சீர் அடிக்கு...

<img src='http://img468.imageshack.us/img468/6431/500pxparsetreeforkural14fx.png' border='0' alt='user posted image'>


- kpriyan - 10-28-2005

நன்றி குருவிகள்.. உங்களிடம் நிறைய விடய ஞானம் உள்ளது!. உங்கள் விளக்கத்தில் இறுதியில் இலக்கங்களூடாக காட்டப்படுவது என்ன என விளங்க வில்லை.. விளக்கவும். நன்றி


- kuruvikal - 10-28-2005

நீங்கள் இதைக் கண்டு பயப்பிடாதேங்கோ... கவிதை எழுதுவிட்டு வாசிங்கோ... ஓசை பிறக்கும்..அப்படிப் பிறந்தால் இந்த கவி இலக்கணப்ப பண்புகள் தன்பாட்டில் அங்கு புகுத்தப்பட்டிருக்கும்..!

இதை விளக்க முற்பட்டால் நிறைய அடிப்படை இலக்கணத்தை உச்சரிக்க வேண்டி வரும்..பிறகு அதை விளக்க...நிறையப் பேச வேண்டி வரும்...! ஆனால் இங்கு அடி சீர் இவற்றை மட்டும் கவனியுங்கோ...!

குறள் ஈரடிக் கவிதை... அங்கு இரண்டு வரிகள் இருக்கும் அல்லவா..! அதன் அடிப்படையில் அடிகளையும்... சீர் எவை என்பதையும் நோக்குங்கள்..நேர் நிரை என்பதெல்லாம் குறில் நெடில் எழுத்துக்களின் கூட்டு தனி ஒலிப்பண்புகள் சார்ந்து வருபவை...! குறிப்பாக எதுகை மோனை இவற்றை இயல்பாகச் செய்துவிடுவதால் நாம் மரபு இலக்கண வடிவத்தை தெளிந்துதான் கவிதை புனைய வேண்டும் என்றில்லை...! எனவே அச்சப்படாமல்..உங்கள் நாவால் ஓசை பிறக்க வரிகள் பொருளுக்கு ஏற்ப விழுகின்றனவா என்று பாருங்கள்...அதுபோதும்...! இதைத்தான் எங்களுக்கு எங்கள் தமிழ் ஆசிரியர் சொல்லித் தந்தார்...! அதையே உங்களுக்கு சொல்கின்றோம்..! இவற்றை ஆராயமுற்பட்டால் கவிதை வராது...இவற்றின் ஒரு விளைவுதான் கவிதை...அது இயல்பாய் பிறந்துவிடும்...! எனவே தொடர்ந்து எழுதுங்கோ...! தொடர்ந்து முயற்சியுங்கோ..! விமர்சனங்களை கண்டு அஞ்சாதேங்கோ... வாங்கி வைச்சுக் கொள்ளுங்கோ..தேவையானதை எடுத்திட்டு மீதியைக் கழிச்சிடுங்கோ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

( உதாரணத்துக்கு திருவரங்கத்து அந்தாதியில் இருந்து ஒரு மரவுக் கவிதை... அல்லது பாட்டு

<b>தாளத் தனத்தத்தைச் சொல்லிய ரால்வருந் தாழ்மலபா
தாளத் தனத்தத்தைத் தப்பநிற் பீர்புடை தங்கியவே
தாளத் தனத்தத்தைத் தீர்த்தா னரங்கன் சகடுதைத்த
தாளத் தனத்தத்தை யாயுதன் பாதந் தலைக்கொண்மினே</b>.)

இதில் பெண் அங்க ரீதியாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறாள்...ஒரு இடத்தில்.. தெரியுதா அது....இல்லை அல்லவா...காரணம்...இது சாதாரண தமிழ் நடையில் இல்லை...என்பதால்..! இதை உணரும் பக்குவமுள்ள...புலவனுக்கு... பெண்ணை அல்லது ஆணை கலைநயத்தோடு பார்ககத் தெரியும் என்று கவிஞன் எண்ணினான் போலும்..<b>???!</b> நளவெண்பாவில் புகழேந்தி பெண்ணை மட்டுமல்ல...ஆணையும் வர்ணித்திருக்கிறான்...! அவன் அப்பவே சமத்துவம் கண்டுவிட்டான்...<b>??!</b> சரி கவிதைக்கு கற்பனை அழகு என்றால் வர்ணிப்பதில் தப்பில்லை...அதை விரசமாக்குவதுதான் தப்பு...அப்படியா...??! இதுதான் கவித் தமிழ்...!

இப்பாடலை இப்படி ஒருவர் தருகிறார்....

<b>தாளத் தனத் தத்தைச் சொல்லியரால் வரும் தாழ்
மலபாதாளத்து அனத்தத்தை தப்ப நிற்பீர்
புடை தங்கிய வேதாளத்து அனத்தத்தைத் தீர்த்தான் அரங்கன்
சகடுதைத்த தாளத்தன் அத்தத்தை ஆயுதன் பாதம் தலைக்கொண்மினே</b>

தகவல் ஆதாரம் ஹரிமொழி இணையத்தளம்..!


- kpriyan - 10-28-2005

குருவிகள்
எனக்கு தேமா புளிமா உட்பட்ட சீர்கள் எல்லாம் தெரியும்.
அது வடிவா விளங்கீட்டுது
அந்தப்படத்தில கடசியா குறிப்பிட்ட சில இலக்கங்கள் போட்டிருக்கு. அது என்ன சாமான் எண்டு சொல்லுங்கோ. அது மாத்திரைகளையும் குறிக்கேல.

தேவையில்லாமல் அந்த இலக்கங்களைக் கொடுத்திருக்கிறீர்களோ எண்டு யோசிக்கிறன். அதின்ர விளக்கம் கிடைச்சா நல்லம்.
தெரிஞ்சாச் சொல்லித்தாங்கோ. அறியிற ஆர்வம்தான். திரும்பவும் சொல்லிறன். அந்த இலக்கங்கள் என்ன சாமான் எண்டதை மட்டும் சொல்லுங்கோ.


- kuruvikal - 10-28-2005

உங்களுக்கு மேல் உள்ள அனைத்தும் புரிகிறது என்றால்... இலக்கங்கள் குறிப்பதைத் தருவதில் பிரச்சனை இல்லை..! நாங்கள் அடி சீர் பற்றிக் காட்டத்தான் அதை இட்டோம்..! இதோ உங்கள் ஆர்வத்தைத் தீர்க்க...

0 - குறிப்பது... குறிலையும்
1- குறிப்பது நெடிலையும் ஆகும்
2 - மெய்..!

புரிகிறதா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kpriyan - 10-28-2005

நன்றி குருவி.
இப்போது அந்த இலக்கங்களுக்கான விளக்கம் புரிந்தது.


- இவோன் - 10-28-2005

பிரியன்,
அந்த இலக்கங்களை மாத்திரைகளோடு பொருத்திப்பார்த்துக் குழம்பிக்கொள்ளாதீர்கள். அவை மாத்திரைகளைக் குறிப்பவையல்ல. மாத்திரைகளைக் குறிப்பவையாயின் அனைத்தும் பிழையென்று வந்துவிடும். அவை குறில், நெடில், குற்றெழுத்துக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள். அவ்வளவே.


- காவடி - 10-28-2005

Quote:பிரியன்,
அந்த இலக்கங்களை மாத்திரைகளோடு பொருத்திப்பார்த்துக் குழம்பிக்கொள்ளாதீர்கள். அவை மாத்திரைகளைக் குறிப்பவையல்ல. மாத்திரைகளைக் குறிப்பவையாயின் அனைத்தும் பிழையென்று வந்துவிடும். அவை குறில், நெடில், குற்றெழுத்துக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள். அவ்வளவே.

ஈவோன்.. அதனைதானே குருவிகளும் சொன்னார்.. பிறகெதற்கு இன்னுமொரு விளக்கம்! தேவையில்லைதானே!


- kuruvikal - 10-28-2005

அவர்களுக்கு ஏக்கம்.. இங்கு மரபுக்கவிதைகள் இல்லையே என்று..! மரபுக் கவிதைகள் வரட்டும்.. புதுக்கவிதைகள் என்ன வடிவில் வேறுபடுகின்றன...எனபதை அவர்களே புரிந்து கொண்டு... வளர்ந்து வரும் இளம் புதுக்கவிகளை கொஞ்சைப்படுத்துவதையேனும் தவிர்ப்பார்கள்..!

பண்பட்ட புலவர்களின் மரபுக்கவிதைகளுக்குள்ளேயே பல கவி இலக்கண விமர்சனங்கள் இருக்கும் போது சிறியவர் (மொழி அனுபவத்தால்) வடிக்கும் புதுக்கவிதைகளை எள்ளி நகையாடுதல்...ஒரு தெளிவான மொழியறிவாளனுக்கு உள்ள பண்பல்ல...!

எனவே புதுக்கவிதை படைக்கும் கவிகளே பயமின்றீச் செல்லுங்கோ...தொடருங்கோ..உங்கள் உங்கள் வடிவத்தில்...! புலவர்களின் சொத்தான கவித் தமிழை... பாமரனினதும்...உங்களதும்... சொத்தாக்கியவன் புரட்சிக்கவி பாரதி...அவன் செய்துகாட்டினான்..நீங்கள் தொடருங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 10-28-2005

சிறந்த ஒரு கவிதைக்கு அழகு நன்கு கற்றவன் முதல் பாமரன் வரை இலகுவாக புரியக்கூடியதாக அமைதலே. விவசாயி நடுவராக இருந்த கதை ஒன்று நினைவில் வருகிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 10-29-2005

கடைசி பாடலை சுட்டவும்

http://www.tamilsongs.net/page/build/album...lvam/index.html


- Rasikai - 10-31-2005

உங்கள கவிதை நன்று