![]() |
|
தமிழீழ தேசிய கீதத்தை உருவாக்க.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: தமிழீழ தேசிய கீதத்தை உருவாக்க.... (/showthread.php?tid=2745) |
தமிழீழ தேசிய கீதத்தை உருவாக்க.... - selvanNL - 10-27-2005 <span style='font-size:25pt;line-height:100%'><b>தமிழீழத்திற்கான தேசியப் பண் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகள் வேண்டுகோள்</b></span> [size=16]தமிழீழத் தேசியப் பண்ணினை (தேசிய கீதம்) ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழுறவுகளிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசியல்துறையினர் விடுத்துள்ள அறிக்கை: எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழி காட்டுதலோடும் நெறிப்படுத்தலோடும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தினூடாக ஈழத்தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசு நிறுவப்பட்டுள்ளது. அதை நிலை நிறுத்துகின்ற வகையில் தேசியக் கொடி, தேசிய மலர் என்பன ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆயினும், தேசியப் பண் ஆக்கப்படாத நிலையில், எமது கொடி வணக்கப் பாடலையே தேசியப் பண்ணுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தி வருகின்றோம். தேசியப் பண் இன்றைய சூழலில் காலத்தின் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எதிர்காலத்தில் மீக்குயர் பண்ணாக ஒலிக்கவிருக்கும் தமிழீழத் தேசியப் பண்ணினை ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது இனிய தமிழுறவுகளை அன்புடன் அழைக்கின்றோம். தேசியப் பண்ணினை ஆக்க முன்வருவோர் தேச விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மான மறவர்களினது விடுதலை வேட்கைக்கும் தாயகம் பற்றி அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்க்கைக்கும் உயிர்கொடுக்கும் வகையில், துள்ளல் நடையில் மிடுக்கோடு கூடியதாகத் தேசியப் பண்ணினை ஆக்குதல் வேண்டும். எமது தாயகத்தின் சிறப்பு, பெருமை, வளம் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைக்கப்படும் தேசியப் பண், ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் அதற்கு எம்மினம் கொடுத்த விலைகளையும் எமது வழித்தோன்றல்களின் நினைவில் நிலை நிறுத்தக் கூடியதாக பிறமொழிக் கலப்பற்றதாக அமைதல் வேண்டும். இவ்வாறாக எமது தேசியப்பண் ஆகக்கூடியது பதினெட்டு வரிகளுக்குள் உயர் வீச்சைக் கொண்டதாக அமையவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உருவாக்கப்படும் தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்கள் <b>27.11.2005 ஆம் நாளுக்கு முன்னதாகப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.</b> தாயகத்தில் உள்ளவர்கள் தத்தம் பிரதேச அரசியல்துறை செயலகங்கள் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல்: editorial@viduthalaipulikal.com தொலைபேசி: +94 21 228 5010 தொலைநகல்: நன்றி புதினம்.... - வினித் - 10-27-2005 <b>தமிழீழப் பிரகடனமா????????? LTTE invites poets to compose Thamileelam national anthem [TamilNet, October 27, 2005 15:40 GMT] An invitation has been extended to "Tamil bards and minstrels with patriotic afflatus" to compose a Thamileelam national anthem. The invitation to the poets in the Northeast and among the Tamil diaspora came in an announcement by the Media Unit of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), from its base in Kilinochchi, Thursday. Poets are given time till November 27th, the Tamil Eelam Martyrs Remembrance Day, to give final touches to their composition. Defining the characteristics of the proposed national anthem, the media unit of the LTTE has recommended 18 stanzas in "immaculate Tamil", to extol the "unique qualities of exclusiveness and resourcefulness of the Tamil Homeland and to manifest the resoluteness, dedication and the aspirations of the Tamil People for freedom and dignity." The call for a national anthem comes in the wake of the Thamileelam National Flag and the National Flower already established. The Tiger flag, leaving out the movements name in the flag, was designated as the Thamileelam National Flag by the Tigers fifteen years ago, on the Martyrs Rememberence Day in November 1990. The flower, Gloriosa Lily, was designated as Thamileelam National flower by the LTTE administration during the Martyr rememberence week in November 2003.</b> http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16192 - Netfriend - 10-27-2005 8) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :|
- cannon - 10-27-2005 விடியலுக்கு, தூரம் அதிகமில்லை! தேசியப் பண் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் - தூயவன் - 10-28-2005 Quote:தமிழீழத் தேசியப் பண்ணினை (தேசிய கீதம்) ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழுறவுகளிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்கள உறவுகளும் முயற்சி செய்யலாமே [size=9]ஏற்கனவே இச்செய்தி இணைக்கப்பட்டுள்ளதால் அதை நீக்கியுள்ளேன் - இராவணன் - KULAKADDAN - 10-28-2005 தூயவன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதே, பார்க்கலையா? நீங்க நிச்சயமா பார்த்திருக்க மாட்டீங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->http://www.yarl.com/forum/viewtopic.php?t=7188 - MEERA - 10-29-2005 http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4386382.stm - Mathuran - 10-29-2005 தகவலுக்கு நன்றிகள் பல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதனை கேட்கும்போது உள்ளத்துள் இனம்புரியா உணர்வு ஒன்று எழுகின்றது, உடலும் சிலிர்க்கின்றது. தேசியப் பண்ணினைக் கேட்க ஆவலோடு காத்திருக்கின்றோம். - வினித் - 10-30-2005 <b>தமிழீழ தேசிய கீதம்: விடுதலைப் புலிகள் உருவாக்குகின்றனர் அக்டோபர் 30, 2005 கொழும்பு: தமிழீழத்திற்கான தனி தேசிய கீதத்தை உருவாக்கும் பணியில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழீழம் எனப்படும் யாழப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் விடுதலைப் புலிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு இலங்கை ராணுவத்தால் நுழையக் கூட ¬முடியாத நிலை உள்ளது. இங்கு விடுதலைப் புலிகள் ஒரு அரசு நடத்தும் அளவுக்கு மிகத் திறமையான நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றனர். தனி ரூபாய் நோட்டு, தனி நீதிமன்றம், காவல் நிலையம், சுங்க வரி வசூல், வங்கிகள் என பக்கா நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர் விடுதலைப் புலிகள். இதுதவிர தமிழீழத்திற்கான தேசியக் கொடி, பறவை உள்ளிட்டவையும் உள்ளன. இருப்பினும் தனியாக தேசிய கீதம் என்று இதுவரை எதுவும் இல்லை. அந்தக் குறையையும் தீர்க்கும் பொருட்டு தமிழீழத்திற்கான தேசிய கீதத்தை உருவாக்கும் ¬முயற்சியில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் தமிழ்நெட் இணைய தளத்தில் ஒரு அறிவிப்பை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். அதில், எங்களது சொந்த தேசிய கீதத்திற்கான கவிதை மற்றும் யோசனைகள், கருத்துக்களை உலகத் தமிழர்கள் அனைவரும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் பங்கேற்பவர்கள் தேச பக்தியுள்ள தமிழ்க் கவிஞர்களாக இருக்க வேண்டும். சுத்தமான தமிழில் 18 வரிகளில் தேசிய கீதம் அமைந்திருக்க வேண்டும். இலங்கை மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இதற்கான கவிதைகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். நவம்பர் மாதம் 27ம் தேதிக்குள் இந்தக் கவிதையை அனுப்பி வைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது</b> http://thatstamil.indiainfo.com/index.html - Rasikai - 10-31-2005 தகவலுக்கு நன்றிகள். மிகவும் சந்தோசமான விடயம். - iruvizhi - 10-31-2005 நமது தேசியகீதத்தினை(தமிழீழ தேசியகீதத்தினை) பொதுநிகள்வுகளில் தலைநிமிந்து பாடவேண்டியதுதான். - hari - 11-17-2005 <b>வாழிய ஈழத் தாய்நாடு!</b> வாழிய ஈழத் தாய்நாடு! வான்புகழ் செந்தமிழ்த் திருநாடு! வையகம் எங்கெணும் வாழ்தமிழ் உறவுகள் வாழ்த்திட மலர்ந்த பெருநாடு! தன்னுயிர் தன்னைப் பரிசாகத் தந்தவர் கண்டநல் அரசாக தன்னிக ரற்றவர் முன்னிலை நின்றொரு சாட்சியம் நல்கிய தனிநாடு! உத்தம மறவோர் களமாடி உயிரைக் கொடுத்து விதையாகி முத்தமிழ் காத்தவர் நித்தமும் பேணிய முத்து நிகர்த்த தமிழ்நாடு! செங்கோ லோச்சிய முன்னவரும் செம்மொழி பழகிய மன்னவரும் மங்காப் புகழொடு மீண்டும் வலம்வரும் மாண்பு செறிந்த தமிழ்நாடு! ஆண்டுகள் தோறும் களம்அளந்து அறிவொடு வேங்கைகள் தடம்பதித்து வேண்டிய (இ)லட்சியம் மெய்ப்படக் கண்டவர் வெற்றி முழங்கிடும் வளநாடு! உடைமையை இழந்த வெந்துயரில் உரிமையின் வேள்வித் தீச்சுடரில் புடமிடு பொன்னெனப் புத்தொளி வீசிடப் புகழொடு நடமிடும் பொன்னாடு! எங்களை ஈன்றநல் அன்னையரும் எம்மவர் தம்பியர் தங்கையரும் வெங்களம் மண்டிய சிங்களம் நீங்கிட விடுதலை துய்த்திடும் நன்னாடு! ஈழம் வெற்றியின் அடையாளம்! இனிய தமிழ்க்குலம் அதையாளும்! நாளும் அதன்புகழ் நனிசிறந் தோங்கிட நல்லவர் உழைத்திடும் நன்னாடு! கனவின் நனவாய்த் தமிழீழம்: காலம் வழங்கிய பெருஞாலம்! கனிந்தது சுதந்திரம்: இனிஇது நிரந்தரம்! காணுமின், இன்னொரு தென்னாடு! வாழிய ஈழத் தாய்நாடு! வாழ்க தமிழ்த்தாய் வழிபாடு! வாழிய வாழிய தாயகத் தாகம் வளர்த்தவர் போற்றிய எழில்நாடு!!... தொ. சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com) - வியாசன் - 11-17-2005 மன்னா கவிதை நன்றாக இருக்கின்றது. ஆனால் நான் நினைக்கின்றேன் புலிகள் இதைவிட உணர்வுபூர்வமாக எதிர்பாக்கின்றார்கள் என - Rasikai - 11-17-2005 ம்ம் தேசியகீதத்துக்காய் எழுதிய கவி நன்றாக உள்ளது. |