![]() |
|
ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் போட்டி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் போட்டி (/showthread.php?tid=2747) |
ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் போட்டி - AJeevan - 10-27-2005 <b>சிறந்த வெளிநாட்டுப் படம் ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் கலந்து கொள்கிறது </b> லாஸ் ஏஞ்சல்ஸ், அக். 27- ஆங்கிலப் படங்கள் தவிர, சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்தியா உள்பட 58 நாடுகளைச் சேர்ந்த படங்கள் போட்டியிடுகின்றன. <b>78-வது விருது வழங்கு விழா</b> சினிமாப் படங்களுக்கும், கலைஞர்களுக்கும் கிடைக்கும் விருதுகளில் மிக உயர்ந்தது ஆஸ்கார் ஆகும். இந்த விருது பெறுவதை உலக முழுவதும் உள்ள திரைப்படக் கலைஞர்கள் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறார்கள். 78-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி நடக்க இருக்கிறது. <b> 58 படங்கள்</b> ஆலிவுட் படக்கலைஞர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது என்ற போதிலும் வெளிநாடுகளில் தயாரான படங்களில் சிறந்த படத்துக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான போட்டியில், கலந்து கொள்ளும்படி 91 நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. இதை ஏற்று 58 நாடுகள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள படங்களை அனுப்பி உள்ளன. <b>இந்திப்படம்</b> இந்தியாவில் தயாரிக்கப்பட்ட `பஹேலி' என்ற இந்திப்படம் இந்தப்போட்டியில் கலந்து கொள்கிறது. இதை அமோல் பலேகர் இயக்கி இருக்கிறார். திருமணம் முடிந்து வீடு திரும்பும்போது மணமகள் ஒரு ஆவியைச் சந்திக்கிறாள். கடைசியில் அந்த ஆவியையே தன் காதலனாக வரித்துக்கொள்கிறாள் என்பது தான் பஹேலி படத்தின் கதை. <b>ஈராக் படம்</b> ஈராக் நாட்டில் தயாரான `ரீக்குயியம் ஆப் ஸ்நோ' என்ற குர்திஷ் மொழிப்படமும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறது. வறட்சிப் பகுதியில் வாழும் குர்து மக்கள் மழைக்காக ஏங்கித் தவிப்பதை இந்தப்படம் சித்தரிக்கிறது. <b>பிஜித் தீவுப்படம்</b> பிஜித் தீவில், தயாரிக்கப்பட்ட "தி லாண்ட் ஹேஸ் ஐஸ்'' என்ற படம் போட்டியிடுகிறது. பிஜித் தீவின் பூர்வீகக் குடிமக்களைப் பற்றிய முதல் பிஜிப்படம் இது. ஒவ்வொரு நாடும் ஒரு படத்தை மட்டுமே போட்டிக்கு அனுப்ப முடியும் என்பது ஆஸ்கார் விருதுக்கான விதிமுறை ஆகும். தினத்தந்தி - vasisutha - 10-27-2005 [size=13]அஜிவன் அண்ணா.. ஒஸ்கார் விருது அமெரிக்கப்படங்களுக்கு மட்டும் தானே வழங்குகிறார்கள். மற்றநாட்டு படங்களுக்கு கிடைப்பது சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதே.. மற்றும்படி சிறந்த நடிப்புக்கோ இயக்கத்துக்கோ கலைக்கோ பரிசு கொடுப்பதில்லை. இதெல்லாம் கிடைப்பது ஹொலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமே தான். அப்படியிருந்தும் இதை வாங்க ஏன் இத்தனை போட்டி? அமெரிக்க விருது என்பதாலா? :roll: - AJeevan - 10-27-2005 சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது மட்டுமே கிடைக்கிறது என நீங்கள் சொல்வது சரி வசிசுதா. தலைப்பே அது தானே? <b>சிறந்த வெளிநாட்டுப் படம் ஆஸ்கார் விருதுக்கு 58 நாடுகளின் படங்கள் கலந்து கொள்கிறது</b> தவிர பணமும் புகழும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந் நிலைகள் மாறலாம்..............? போட்டிக்கு பங்கு பற்றும் படங்கள் மூலம் இந் நாடுகள் மற்றும் அந்நாட்டினரது வாழ்வு பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகிறது. உண்மையில் சர்வதேச விருதாக கேன்ஸ் திரைப்பட விருது (பிரான்ஸ்) முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மையில் இயக்குனர் விமுக்தி இயக்கிய இலங்கைத் திரைப்படத்துக்கு விருது கிடைத்தது. அது பற்றிய தகவல்கள்: http://www.blogomonster.com/jeevan/31441/ இத் திரைப்படம் தொடர்பாக இலங்கை இராணுவம் இவருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுத்தது பற்றிய செய்தி ஏற்கனவே யாழில் வந்தது நினைவிருக்கலாம். http://www.yarl.com/forum/viewtopic.php?t=6482 |