Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 371 online users.
» 0 Member(s) | 368 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,326
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,648
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,082
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,471
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,508
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242

 
  போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவரை புலிகள் சந்திப்பு
Posted by: Rasikai - 10-28-2005, 07:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<b>இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவரை விடுதலைப் புலிகள் சந்திப்பு </b>

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும்; இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. மூன்று மணிக்கு உலங்குவானூர்தி மூலமாக கிளிநொச்சியை வந்தடைந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரை சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் வரவேற்றார். சமாதான செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் காவல்துறைப் பொறுப்பாளர் திரு பா.நடேசன் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய சந்திப்பில் போர் நிறுத்த உடன்பாடு வவுனியாவுக்கு வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சிறிலங்கா படையினரின் வேவு விமானம் விழுந்து நொருங்கியமை சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிற்பகல் 3:30 மணிமுதல் மாலை 6:30 வரை இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பை முடித்துக்கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவர் தொடர்ந்தும் கிளிநொச்சியிலேயே தங்கியிருக்கின்றார்.


<img src='http://img499.imageshack.us/img499/9060/lttekankanippukulu28100516fk.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img499.imageshack.us/img499/3510/lttekankanippukulu28100520mj.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img499.imageshack.us/img499/8969/lttekankanippukulu28100534cu.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img499.imageshack.us/img499/6370/lttekankanippukulu28100540xy.jpg' border='0' alt='user posted image'>

நன்றி (http://www.newstamilnet.com/)[/b]

Print this item

  யாழ் இளம் ஊடகவியளாளர்கள் இனவாதிகளிடம் விலை போவார்களா ?
Posted by: spyder12uk - 10-28-2005, 07:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

யாழ் இளம் ஊடகவியளாளர்கள் இனவாதிகளிடம் விலை போவார்களா ?


Friday, 28 October 2005
<img src='http://img390.imageshack.us/img390/779/mtrc7qs.jpg' border='0' alt='user posted image'>

இனவாதிகளான மகிந்த, விமல் வீரவன்ச உடன் படம் எடுப்பதில் பெருமையா ?



http://sooriyan.com/index.php?option=conte...id=2470&Itemid=


இனவாதிகளான மகிந்த, விமல் வீரவன்ச உடன் படம் எடுப்பதில் பெருமையா ?

.

Print this item

  இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு முயற்சி
Posted by: mayooran - 10-28-2005, 05:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>புத்தூரில் பெண்மீது இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு முயற்சி: மக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்கள்</b>
யாழ். புத்தூர் வாதரவத்தையில் வீடொன்றிற்குள் புந்து அங்கிருந்த பெண்மீது சிறிலங்கா இராணுவ வீரர்கள் சிலர் பாலியல் வல்லுறவை மேற்கொள்ள முயன்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவு முகாமிற்கு முன்னால் திரண்ட பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


யாழ்ப்பாணத்தின் வடகிழக்கே 13 கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் புத்தூர் வாதரவத்தை கிராமத்திலுள்ள வீடொன்றிற்குள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த சிவில் உடையணிந்த இராணுவ வீரர்கள் சிலர் அங்கிருந்த பெண்மீது பாலியல் வல்லுறவினை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

வீட்டிலிருந்த அப்பெண் எழுப்பிய கூச்சலைக்கேட்டு அங்கு ஓடிவந்த அயலவர்கள் அவர்களை விரட்டியதால் ஓடிய இராணுவ வீரர்கள் அருகிலிருந்த முகாமிற்குள் புகுந்துள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

படைமுகாமிலிருந்த வீரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். அங்கு பதற்றகரமான சூழ்நிலை ஏற்பட்டதையடுதது கலகம் அடக்கும் சிறிலங்கா காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

புத்தூர் கிழக்கிலிருக்கும் ஆலயத்திற்கருகில் இருக்கும் பாக்கியம் என்பவரின் வீட்டிற்குள்ளேயே இராணுவத்தினர் புகுந்துள்ளனர். அங்கு அவரும் அவரின் 3 மகள்களும் இருந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து இன்று காலை சுமார் நூறு பெண்கள் பொல்லுகளுடன் முகாமைச் சுற்றிநின்றனர். பிரதேச இளைஞர்கள் பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். காவல்துறையினரால் தாக்கப்பட்டவர்களுள் 60 வயது வயோதிபர் ஒருவரும் அடங்குகிறார். கே.நல்லையா (வயது 60), எஸ்.பார்த்தீபன் (வயது 30), ரி.றீகன் (வயது 35), கே.கோவிந்தன் (வயது 40), எஸ்.தனீஸ் (வயது 25), பி.ஆனந்தன் (வயது 40) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

இதே முகாம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இராணுவத்தினரால் தாக்கப்பட்டு வெளியே போடப்பட்டிருந்த வயோதிபர் ஒருவர் பின்னர் உட்காயங்களால் உயிரிழந்தார். மதுபோதையிலிருந்த வயோதிபர் இராணுவத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாலேயே அவர் தாக்கப்பட்டார்.

puthinam

Print this item

  நடிகர் நடிகை வீடுகளில் சோதனை ரூ.50 கோடி சொத்துக்கள் பறிமுதல்
Posted by: mayooran - 10-28-2005, 04:06 PM - Forum: சினிமா - No Replies

நடிகர் நடிகைகள் வீட்டில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் பணம் ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நடிகர்கள் விஜய் விக்ரம் சிம்பு எஸ்.ஜெ. சூர்யா ஜெயம் ரவி விவேக் நடிகைகள் திரிஷா சினேகா இசையமைப் பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான் யுவன்சங்கர்ராஜா ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திர சேகரன் விஜய டி.ராஜெந்தர் ஆஸ்கர் ரவிச் சந்திரன் இயக்குநர் ஷங்கர் பாடகர்கள் மனோ சீனிவாஷ் பைனான்சியர்கள் சஞ்சய் தத்வானி சுபாஷ் நாகர் பங்கஜ் மேத்தா ஆகியோர் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலையில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது 50 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதி ஆவணங்கள் வீடு மனைகளுக்கான பத்திரங்கள் ரொக்கப்பணம் நகைகள் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வங்கி லாக்கர்களின் சாவிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். வங்கி லாக்கர்கள் திறந்து பார்க்கப்பட்ட பிறகுதான் அவற்றில் எவ்வளவு நகைகள் பணம் ஆவணங்கள் இருக்கி றது என்பது தெரியவரும். அதன் பிறகுதான் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும் என வருமான வரித்துறை தலைமை இயக்குநர் சந்தோஷ் தத்தா தெரிவித்தார்.

நடிகர் நடிகைகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவிகளைக் கொண்டு நேற்று வங்கிகளுக்குச் சென்று லாக்கர்கள் திறந்து பார்க்கப்படும் என்று சந்தோஷ் தத்தா தெரிவித்திருந்தார். ஆனால் மழை காரணமாக வங்கிகளுக்குச் சென்று லாக்கர்களைத் திறந்து பார்க்க முடிய வில்லை என்று வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்தது.

புதன்கிழமை காலை தொடங்கிய அதிரடி சோதனை நேற்று காலை 9 மணி வரை நீடித் தது என்றும் அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சில நடிகர் நடிகைகளின் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப் பட்ட தாகவும் வருமானவரித்துறை வட்டாரம் தெரிவித்தது. இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய தடாலடி சோதனையால் தமிழ்த்திரை உலகம்பெரும் அதிர்ச்சிக்குள் ளானது.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை தொடரப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
dinakaran.com

Print this item

  இதயத்தின் காயம்.....
Posted by: kpriyan - 10-28-2005, 02:45 PM - Forum: கவிதை/பாடல் - Replies (32)

சேருவதற்கு விதி ஒருங்கிசைக்கவில்லை...
மறப்பதற்கு மனம் ஒருங்கிசைக்கவில்லை...
சேரச்சொல்லி மனமும் பிரியச்சொல்லி விதியும்
தினம் நடத்தும் போராட்டத்தில்...
காயப்படுவது என்னவோ என் இதயம்தான்..
முடிவு என்னவோ விதியின் கையில் இருந்தாலும்.
என்னவள் என்றும் என் மனதினிலே...

Print this item

  என் பெயர் கவிஞர் காவடி
Posted by: காவடி - 10-28-2005, 12:23 PM - Forum: அறிமுகம் - Replies (54)

வணக்கம். என் பெயர் கவிஞர் காவடி. நான் ஒரு கவிஞர் . அதனால் என்னை கவிஞர் காவடி என்பார்கள். ஏனெனில் நான் ஒரு கவிஞர்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன. எழுதுவது மட்டும் இன்பமில்லை அதை மற்றவர்கள் வாசித்து இன்புறுதலே ஒரு கவிஞனுக் அழகு என இவோன் அண்ணா சொன்னதனால் நானும் ஒரு உறுப்பினராக சேர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வணக்கம் சொல்ல வந்தேன் - தலை
வணங்கா மறத்தமிழர் சபையில்
சுணக்கம் ஏன் இன்னும்
வணக்கம்கூற வரவேற்க

Print this item

  கல்விக்கும் உண்டோ வயது..??!
Posted by: kuruvikal - 10-28-2005, 07:34 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (5)

<img src='http://img485.imageshack.us/img485/4630/bernardtutor5nl.jpg' border='0' alt='user posted image'>

இங்கிலாந்தில் உள்ள கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் (University of East London) 96 அகவை நிரம்பிய ஒரு மாணவன் (Bernard Herzberg) தனது முதலாவது முதுகலைமானிப் பட்டத்துக்காக (MA) கல்வியை முடித்து இரண்டாவது முதுமானிப்பட்டத்துக்காக கல்வி கற்க ஆரம்பித்துள்ளார்..!

ஏற்கனவே தனது ஓய்வின்பின் 83 வயதில் இளமானிப் பட்டத்துக்கான படிப்புடன் இக் கல்விப் பயணத்தை ஆரம்பித்த பேர்னாட் தற்போது இந்த இரண்டாவது முதுமானிப்பட்டத்துக்காக தன்னை மீண்டும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தினூடு பதிவு செய்து கல்வி கற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்..!

ஏதோ ஒரு இயலாமைக்குள் வாழும் தனிமனிதர்கள் அல்லது தனிமனிதக் கூட்டம் படைக்கும் சமுதாய இறுக்கங்கள் பழிப்புகள் என்பனவற்றை ஒருவன் தனக்குள் அநாவசியமாக உள்வாங்குவதால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையே பல அநாவசிய கட்டுப்பாடுகளுக்கு காரணம்..! அதேவேளை மனிதனுக்கு என்று அமைந்த சிறப்பான வாழ்வியலுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்..! ஆனால் அநாவசியங்களை இனங்கண்டு தகர்ப்பதற்கு தனி மனிதன் தன் சிந்தனைக்களுக்கு தானே செயல்வடிவம் கொடுப்பவனாக தன்னையே உதாரணமாக்கி காட்ட வேண்டும்..! அந்த வகையில் 96 வயதில் வீட்டுக்குள் முடங்கிவிடும் கோடிக்கணக்கான முதியவர்கள் மத்தியில் ஜேர்மனியப் பின்னணி உள்ள இந்த பேர்னாட் கல்விகாக தன்னை அற்பணித்ததன் மூலம் தன்னை ஒரு புரட்சியாளனாக சாதனையாளனாக கூட இனங்காட்டி உள்ளார்..! சமூக இறுக்கங்கள் கல்வியல் இறுக்கங்கள் என்று பலவற்றைத் தகர்த்திருக்கிறார் இந்த பேர்னாட்..!

தமிழர் சமூகத்தில் கல்வியும் பட்டங்களும் தனி மனித அளவுகோல்களாகவே பயன்படுத்தப்படுகின்றன..!

ஒரு பரதநாட்டிய மேடையில் கூட அல்லது ஒரு கலாசார மேடையில் கூட இவர் இன்னது படித்தார் என்று பேசிப் புகழும் அநாவசிய சமூக சிந்தனைகளே எம்மவர் மத்தியில் வளர்ந்து வருகிறது...! சிந்தனைக்கான அறிவுக்காக அதன் ஊற்றாக பெறப்படும் கல்வி கருதப்படுவதில்லை..! கல்வி என்பதற்கும் இன்னும் பல வாழ்வியல் அம்சங்களுக்கும் வயதைக் காட்டி மனதை இறுக்குபவர்கள் எங்கள் சமூகத்தில் பலர்...ஏன் மேற்குலகில் கூட இந்தப் பிரச்சனை இருக்கிறது...! இருந்தாலும் அவர்கள் பல இடங்களில் இவற்றை நாகரிகமுறையில் தகர்ப்பதை இந்த உதாரணம் மூலமும் கண்டு கொள்ளலாம்..!

<b>England's oldest learner honoured at University of East London</b>

Bernard Herzberg, a 96-year-old man from East Finchley, has been awarded the title of England's Oldest Learner at a ceremony held at the University of East London's (UEL) Docklands campus.

The ceremony took place on Tuesday 18th October and marked the culmination of a major nationwide search by the National Institute of Adult Continuing Education (NIACE), in which Bernard emerged as the eldest of around 50 nominees.

Bernard recently completed his Masters degree (MA) in Refugee Studies at the University of East London (UEL) and has now begun another MA in African Economics and Literature at the School of Oriental and African Studies (SOAS).

source - UEL web

http://www.uel.ac.uk/news/latest_news/stories/96.htm

Print this item

  ஒரு கவிதை
Posted by: Eelavan - 10-28-2005, 02:18 AM - Forum: (தீவிர) இலக்கியம் - Replies (16)

வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி
-சன்னாசி

இந்தக் கவிதையின்
குரல்வளை அறுத்துக்
குருதி குடிப்பதும் மழைவாசங்காணும்
புற்களின் உதட்டு நுனிகளில்
தாவரங்கள் மேய்வதுமெனத்
தரையோடு அறையப்படும்
விழிகளை அறுப்பது
நீ குறுக்காய் ஓடிய வானவில்.

* * *

நாம் குழந்தைகள்
நமக்கேதும் தெரிவதில்லை; இருப்பினும்
அதன் நிறங்களைக் கற்பனை செய்கிறோம்
கொதித்துத் தளரும் பால்மேல் திரளும் ஆடையின்
வன்முறை போதிக்கிறததன் நிறங்களை
நிறங்களை எழுதுகிறோம், நம் விழிகளைத் தாண்டும்
நிறமொன்றை வார்த்தையால் கொணர்கிறோம்
குறிப்பாய்
நமது நோய்க்கென்றொரு
நிறத்தை விளிக்கிறோம்
அந் நிறமொரு ஆடு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹேஹேஹே
என்கிறது
மறுபடி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹே
என்கிறது
ஆட்டுக்குப் பற்கள் முளைக்கின்றன
ஆடற்ற பற்களும்; இவ்வாக்கியத்தை
ஆடற்றவைகளுக்கும் சொல்லமுயன்று
தோல்வியடைகிறேன்.

* * *

இக்கவிதை முடிவுற,
நம்மைப் பிரிக்கும் வானவில்
இரக்கமின்றி அறுக்கிறது வானத்தை
கண்சிமிட்டாமல் கருப்பை அறுக்கும்
ஹிரண்யக் கத்தியொன்றுபோல் அதனொரு
சோப்பு நுரைக்குமிழ் தவறவிடாவொரு
பிரதிபலிப்பு போல்; சோப்பு நுரையெனும்
எதிருன்னதத்தின் அணு பிளந்த வானவில்
சிதைந்து வீழ்கிறது
பொடிகிறது
உன் காலடியில்.

* * *

உனது கண் நீலத்தில்
எறிகின்றேன் என் பாவனைகளை
பிரயத்தனங்களை
எடையுள்ள போலிகளை; நீலம் குழம்பிக்
கருமையடைகிறது குளிரெடுக்கும் காலத்தில்
ஆட்டினொரு கொடூரப் பிளிறல்போல்
பிளிறும் அதன் வாய்க்கு இரண்டங்குலம் முன்
அறையப்பட்ட கண் போல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,

* * *

நமக்கு அனைத்தும் வாக்கியங்கள்
வெடித்துச் சிதறும் சொற்குமிழிகள்
இடையறாது கிறுக்கும் காகிதங்கள்
வெடித்துச் சிதறும் மூளை நரம்புகள்;
பிரயத்தனமில்லா
காலிக் கோர்வைகள்; காலிக் கோர்வைகளில்
வழிந்து நிரம்பும் காளான்கள் இவற்றைப்
பெயர்க்க முனைகையில் அதிர்ந்து
குமைந்து
அவமானப்பட்டுத் தன்வடிவம் குலைத்துச்
சிதறித் தன்னைச் சிதைத்து மடியும்
வானவில்

* * *

இப் பிரயாசைகள் களைக:
பெயர்க்கப்பட்ட விழிகளில் உருக்கி வார்த்த
பீடங்கள் பிரதிபலிக்கின்றன - முன்பும்
பின்னர் பின்பும்
உள் வெளியாகவும்
வெளி யுள்ளாகவும்
கண்களும் அவையான பிறவும்
பரஸ்பரம்
தோண்டிக்கொண்டன.
தோண்டிப் படையலின் உக்கிர அமைதியில்
மௌனத்தைக் கிழிக்கும் வானவில்லை
நோக்குகிறேன்; உன்னை நினைத்துத்
தாண்டுகிறேன்
என்னைக் கடக்கும் வர்ணங்களை
எண்ணத் தொடங்குகிறேன்

* * *

உன்னைக்குறித்துச் சொல்ல விழையும்
ஓர் வார்த்தையின் பாதங்களும்கூட
இருப்பைத் தகர்த்து வழியும்
உகுப்புத் துளிப் பாதுகைகளணிந்து கடக்கின்றன
கருணையின்றி
வில்லின் மறுபுறம்.

நன்றி சன்னாசி http://dystocia.weblogs.us/archives/175

இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.

Print this item

  வவுனியா தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர்
Posted by: mayooran - 10-28-2005, 01:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வவுனியா தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வவுனியாவில் தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வு வவுனியா நகரசபை விளையாட்டரங்கில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு 'வவுனியா பிரகடனத்திற்கு" வலுச் சேர்த்துள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி சர்வதேச சமூகத்திற்கு வவுனியா மக்கள் முழுமையும் அணிதிரண்டு பிரகடனப்படுத்திளார்கள்.

யுூலை 27 வவுனியா பிரகடனத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழர் தாயக மாவட்டங்கள் தோறும், மக்கள் அணிதிரண்டு தமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் வவுனியா முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அணிதிரண்டு எழுச்சி புூர்வமாக பிரகடனம் செய்தனர்.

வவுனியா தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வு வவுனியா நகரசபை விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் பொதுச்சுடரினை மகேந்திரனின் துணைவியார் இராஜேஸ்வரி ஏற்றி வைக்க, தமிழீழ தேசியக் கொடியினை மாவீரர் லெப். கேணல் குமணனின் தந்தையார் திரு. கந்தையா ஏற்றி வைத்தார். தொடர்ந்து 18பேர் ஈகைச் சுடர்களை ஏற்றினார்கள்.

வவுனியா எழுச்சிப் பிரகடன ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற்றது. ஆசியுரைகளைத் தொடர்ந்த சிறப்புரைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன், சிவநாதன் கிசோர், அரியநேந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், பாடசாலை முதல்வர் அல்ஹஜ் முகமது செரிப், புதுக்குளம் மாதர் சங்கத் தலைவர் கமலாதேவி ஆகியோர் நிகழ்ததினர்.

இறுதியாக மக்கள் அனைவரும் கைகளை உயர்த்தி பேரெழுச்சியுடன் தமது பிரகடனத்தை வெளிப்படுத்தினார்கள்.

வாழ்வுரிமையையும், சுதந்திர வாழ்வையும் ஏற்றுக் கொண்டு எமது மரவுவழித் தாயகம், தேசியம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும், எமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கிகரிக்க வேண்டுமென்று வவுனியா மக்கள் இன்று பிரகடனம் செய்தனர்.



இலங்கைத் தீவு பண்டைக்காலம் தொடக்கம் தமிழ் அரசுகளைக் கொண்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு. தமிழரின் தாயக புூமியான வடக்கு, கிழக்குப் பிரதேசம், தமிழரின் புூர்வீக புூமியாக இருந்துள்ளது. ஐரோப்பிய தேசம் ஏற்படுத்திய காலணித்துவம், அதனு}டாக பிரித்தாளும் தந்திரம் ஆகியன தமிழர்களின் பண்டைய அரசுகளையும், தன்னாட்சி உரிமைகளையும், தமிழ் அரசிற்குரிய இறைமையையும் இல்லாமல் செய்தது.

சிங்கள தேசம் தமிழீழத்தின் மீது மேற்கொண்ட உக்கிரமான போர் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்கவேண்டிய காலத்தின் கட்டாயம் மக்களிற்கு ஏற்பட்டது. மக்களோடு மக்களாக புலிகள் இந்த இராணுவ அடக்குமுறைகளிற்கு எதிராக தங்களைத் தயார் படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விரைவு படுததினர்.



சிங்கள தேசத்தின் இராணுவ பலத்தையும், சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் எதிர்த்துப் போரிட்டு, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களையும் தேசவிடுதலைப் போரில் விதைத்து விடுதலையை நோக்கி விரைந்து நிற்கின்றோம்.

22.02.2002ம் நாள் சிறீலங்கா அரசிற்கும், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமிடையில் நோர்வே அரசின் அனுசரணையுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சரத்துக்கள் இன்றுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

இயற்கை அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டமை, எனவே மூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கின்ற யுத்த நிறுத்த ஒப்பந்தம் கேள்விக் குறியாகி நிற்கின்றது.

தமிழீழ மக்களாகிய நாம் சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றோம். சர்வதேசமே இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தரவேண்டியுள்ளது. எனினும் கடந்த மாத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வரவேற்புத் தடுப்பானது தமிழ் மக்கள் மீதான தடையே எனக் கருதுகின்றோம். இவை எமக்கு கவலையையும். வேதனையையும் தருகின்றது ஆதலால் உலக அரங்கில் ஏற்பட்டு வருகின்ற அரசியல் மாற்றங்கிளிற்கு ஏற்ப தமிழீழ தேசத்தையும், தமிழீழ அரசியல் புூர்வீகத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அங்கிகரிக்க வேண்டுமென சர்வதேச சமூத்தை இந்நேரத்தில் நாம் வேண்டி நிற்கின்றோம்.

இந்த நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் பேசும் மக்களிற்கு நியாயமான எந்தவொரு தீர்வையும், முன்னெடுக்க மாட்டார்கள் என்பதையும், அவர்களே மீண்டும் சமகால அரசியல் அரங்கில் உறுதிப்படுத்தி வருகின்றனர். இந்த உண்மைநிலை காரணத்தால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாக சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நிர்ப்பந்தப்பட்டிருக்கின்றோம்.



எனவே எமது தாயக தேசத்தை ஆக்கிரமித்து நிற்கின்ற சிறீலங்கா இராணுவம், எமது தாயகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும், எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும். என்றும் அந்த உன்னதமான, உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணிதிரண்ட படியே உள்ளோம் என்பதையும், இந்த எழுச்சிப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கும் அதேவேளை, தமிழ் பேசும் மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமையையும், சுதந்திர வாழ்வையும் ஏற்றுக் கொண்டு, எமது மரபுவழித் தாயகம், தேசியம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும், எமது இறைமைக்கான போராட்டத்தையும், அங்கிகரிக்க வேண்டுமென்று நாம் சர்வதேச சமூகத்திடம் கோரி நின்கின்றோம் என்று வவுனியா மக்கள் பேரெழுச்சியுடன் பிரகடனம் செய்தனர்.
sankathi

Print this item

  உங்கள் பயண அனுபவங்கள்
Posted by: sathiri - 10-27-2005, 04:55 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (25)

உங்கள் பயண அனுபவங்கள் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் பல நாடுகளிற்கும் விடுமுறை மற்றும் வேலை சம்பந்தமாக பயணித்திருப்பீர்கள் அப்போது உங்களிற்கு மறக்க முடியாத நகைச்சுவையான நிகழ்ச்சியோ அல்லது பயங்கர அனுபவங்களோ நேர்ந்திருக்கலாம்

அதனை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொண்:டால் இனி பயணம் செல்பவர்களிற்கு ஒரு ஆலோசனையாகவும் இருக்கும் அது தாகய பயணமாக இருந்தாலும் சரி எழுதுங்கள் .முடிந்தால் படங்களையும் இணையுங்கள்

எனது நகைசுவையானதும் அதேவேளை துன்பமானதுமான ஒரு அனுபவம்

நான் பலநாடுகளிற்கும் பல தேவைகளிற்காக பயணித்தது உண்டு குறிப்பாக ஆசிய நாடுகள் அனைத்திற்கும் பெரும்பாலும் போயுள்ளேன் 92ம் ஆண்டு இறுதியில் நானும் எனது நண்பனொருவனும் தாய்லாந்தில் செங் மாய் போனோம்

எமது பயண திட்டபடி அங்கிருந்து தொடர் வண்டியில்(றெயின்) கச்சாய்(இது தாய்லாந்து மலேசியா எல்லை நகரம் )ஊடாக நாம் மலேசியா கொலாலம்புர் போய். நான் பிராங் போட்(யெர்மனி) திரும்புவது நண்பன் தொடர்ந்து சிங்கபுர் போவது இதன் திட்டபடி நாம் பயணித்தோம். நான் எப்:பொழுதும் பயணம் செய்யும் போது தோழில் தூக்கும் பெயரிபையில்.

ஒரு தடித்த தோல் சப்பாத்து ஒரு சாதாரண சப்பாத்து ஒரு செருப்பு மற்றும் மருந்து வகைகள் என்பனவற்றுடன் மற்றும் முக்கிய ஆவணங்களான கடவு சீட்டு பயண சீட்டு எனபவற்றுடன் ஒரு நூறு டொலர் பணத்தையும் சேர்த்து வியர்வையில் நனைந்து விடாமல் நன்றாக பொலித்தீன் பையில் போட்டு எனது இடுப்பில் செருகி வைத்து கொள்வது வழக்கம்.

காரணம் நான் பயணம் செய்வதெனறால் விமான நிலையத்திலிருந்து நேராக நட்சத்திர விடுதிக்கு காரில் போய் படுத்து விட்டு சுத்தி பாத்திட்டு விமானம் ஏறுவதில்லை. ஒரு இடத்தில் இறங்கி பேருந்து தொடருங்து அவ்வுர் வாகனங்களில் பயணித்து சிறியஊர்களில் உள்ள வசதியில்லாத விடுதிகள் புகையிரத நிலையங்களிலெல்லாம் படுத்தெழும்பி தான் வருவதுண்டு அதனால் முடிச்சு மாறிகளின்(திருடர்) தொல்லைகளும் உண்டு.

எனவேதான் முக்கிய ஆவணங்களோடை 100டொலரும் இடுப்பிலை வைச்சிருக்கிறனான் . ஏணெண்டா நான் போகிற சில ஊர்களிலை கடன் அட்டை (கிரெடிட் காட்) எண்டாலே என்ணெண்டு தெரியாது அதாலை அவசரத்திற்கு உதவும்.

அந்தமுறை தாய்லாந்து எல்லை நகரமான் கச்சாய் என்கிற இடத்தில் நண்பனும் நானும் அன்று மாலை ஒரு வீதியோரத்து கடையில் மீன் சூப் ஒன்று சாப்பிட்டு விட்ட வண்டியேறினோம் மறு நாள் இரவு எனக்கு மலேசியா கொலாலம்புரிலிருந்து விமானமேற வேண்டும்.

சாப்பிட் மீன் சூப் எனக்கு ஒத்து வரவில்லை வயிற்றை கலக்க தொடங்கியது எனது கஸ்ர காலத்திற்கு கைவசம் வயிற்று போக்கை நிப்பாட்டும் மருந்தும் இருக்கவில்லை தொடர் வண்டியில் கழிவறைக்கு போய் களைத்து விட்டேன் மறு நாள் கோலாலம் புர் வரும்வரை கொக்கா கோலாவை குடிப்பதும் கழிவறை பொவதுமாக களைத்து விட்டேன்.


மறுநாள் கோலம்புர் வந்ததும் நான் இறங்கி கொள்ள நண்பன் தொடர்ந்து சிங்கபுர் போவதற்காக யோகுர் பாறு போகிற தொடர் வண்டியில் போய் விட்டான். எனக்கு பசி வயிற்றை பிடிங்கியது அங்கிருந்த ஒரு உணவு விடுதியில் போய் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து விமான நிலையம் போக புறப்பட்ட போது மீண்டும் வயிற்றை கலக்கியது உடனே அவசரத்தில் எனது தோள் பையை களற்றி ஒரு கதிரையில் வைத்து விட்டு கழிவறைக்குள் பாய்ந்தேன்.

விமானத்திற்கு நிறைய நேரமிருந்த படியால் விமான நிலையம் போய் அங்கு ஆறுதலாக குளித்து உடை மாற்றி போகலாம் என எண்ணி; கொண்டு வெளியே வந்து பார்த்தால் எனது பையை காணவில்லை.அது மிகவும் அழுக்டைந்திருந்த படியால் யார் அதை சுட போகிறார்கள் என்கிற எண்ணத்தில்தான் அந்த பாரத்தை என்னத்திற்கு கழிவறைக்குள்ளையும் சுமந்து கொண்டு போவான் எண்டு வெளியிலை கதிரையிலை வைத்து விட்டு போனனான்.

யாரோ பாத்து வைத்து சுட்டிட்டாங்கள்.அப்பதான் நினைவு வந்தது எனது பண பையும் அந்த பையிக்கை தான் இருந்தது பணம் அதிகமில்லை ஆனால் வங்கி அட்டை அதற்குள் தான் இருந்தது.
பிறகென்ன அப்பிடியே விமான நிலையம் போய் எனது அதியுயர் பாது காப்பிலிருந்த டொலரை மாத்தி பிரான்சிற்கு நண்பனுக்கு தொலை பேசியடிச்சு நிலைமையை விளங்க படுத்தி வங்கி இலக்கம் எடுத்து வங்கிக்கும் தொலைபேசி அடிச்சு மட்டை தொலைஞ்சு போட்டு தெண்டு சொல்லிட்டு.

உடம்பு ஒரே வியர்வை மாத்த உடுப்பில்லாட்டியும் நாத்தம் போக குளிச்சிட்டு அதே ஊத்தை உடுப்பு காலிலை செருப்புதான் போட்டிருந்தனான். சப்பாத்து ஒண்டு வாங்குவமெண்டு பாத்தால் சப்பாத்து வாங்கினால் விமான நிலைய வரி கட்ட பணம் காணாது எனவெ அப்பிடியே விமான நேரத்திற்கு போய் எனது மலேசியன் விமான நுழைவு வாசலிலை என்ரை கடவு சீட்டையும் பயண சீட்டையும் குடுத்தன்

அதிலை இருந்த பெண் என்னை மேலையும் கீழையும் பாத்து கேட்டா எங்கை பொறீர் எண்டு. நான் சொன்னன் ரிக்கற்ரை பாருங்கோ பிராங் போட் எண்டன்.பொதி ஏதும் இல்லை யா? எண்டா நான் இல்லை யெண்ட ஒரு நிமிடம் எண்டிட்டு பெரியவரை( எயார்லைன்ஸ் மனேச்சர்) கூப்பிட்டா எனக்கு விழங்கிட்டுது இப்பிடி ஊத்தையா கையிலை ஒரு பொதியுமில்லாமல் காலிலை செருப்போடை யெர்மன் போறனெண்டா யார்தான் நம்பு வினம்.

பெரியவர் வந்து என்னை தனியா அழைத்து போய் கடவு சீட்டையும் போட்டு புரட்டி புரட்டி பாத்திட்டு என்னை விசாரித்தார் நானும் அவருக்கு நடந்ததை விழக்கமா சொன்னன் ஆனாலும் அவர் நம்பவில்லை உமக்கு பிரெஞ்சு கடவு சீட்டு ஏன் யெர்மன் போறீர் எண்டு கேட்டார் நான் சொன்னன் அங்கை என்ரை உறவினர் இருக்கினம் அஅங்கை போறது என்ரை விருப்பம் எண்ணட.

கடைசியாக எனக்கு பிரெஞ்சு மொழி தெரியுமா எண்று பார்க்க பிரெஞ்சு விமான பணிப்பெண் ஒருவரை கூட்டி வந்தனர் அவர் வந்து என்னுடன் கதைத்து எனது இடம் லெறு சில விடயங்கள் கதைத்து பார்த்தபின்னர் ஏரளவு நம்பிக்கை வந்து எனது கடவு சீட்டை நான் பயணித்த விமான பணி பெண்ணிடம் கொடுத்து அதனை நான் இறங்கும் போது பெற்று கொள்ள சொல்லி வழியனுப்பி வைத்தனர். மெல்லிய சேட்டோடையும் காலிலை செருப்போடையும் கார்த்திகை மாதம் பிராங் போட்டிலை இறங்கினா எப்பிடியிருக்கம் எண்டு நினைச்சு பாருங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item