![]() |
|
இதயத்தின் காயம்..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இதயத்தின் காயம்..... (/showthread.php?tid=2738) Pages:
1
2
|
இதயத்தின் காயம்..... - kpriyan - 10-28-2005 சேருவதற்கு விதி ஒருங்கிசைக்கவில்லை... மறப்பதற்கு மனம் ஒருங்கிசைக்கவில்லை... சேரச்சொல்லி மனமும் பிரியச்சொல்லி விதியும் தினம் நடத்தும் போராட்டத்தில்... காயப்படுவது என்னவோ என் இதயம்தான்.. முடிவு என்னவோ விதியின் கையில் இருந்தாலும். என்னவள் என்றும் என் மனதினிலே... - இவோன் - 10-28-2005 நல்லா கதைக்கிறீர்.. ஏதோ டொக்டரிடம் வருத்தம் சொல்வது போல இருக்கிறது. தொடர்க.. - kuruvikal - 10-28-2005 என்ன கவிப்பிரியன் முன்னதில் இருந்து கருத்தால் முரண்படுகிறீர்கள்..இப்போ விதியை சாட்சிக்கு இழுக்கிறீர்கள்..! பிரிவுக்கான காரணங்களை கண்டறிய வலியுறுத்துக்கள்..! சிலர் அப்பா அம்மாவுக்காகப் பிரிவதாகச் சொல்வர்..இன்னும் சிலர் என்னென்னவோ காரணங்களைச் சொல்வர்.. காதலித்த பின் பிரிவு என்பதற்கு இடமில்லை...! பிரிகிறார்கள் என்றால் பொய்யாக நடந்திருக்கிறார்கள் என்பது பொருள்..இல்லை.. காதலை கேலியாக்குகிறார்கள் என்று பொருள்..! காதலில் விழுந்து பிரிவால் வாழ்வைப் பாழாக்கியவர்கள் சிலரை சந்தித்த வகையில்....எங்கள் கருத்து...! என்ன எல்லாமே சோகமா இருக்கு...என்ன நடந்தது...??! :wink: 8) - kpriyan - 10-28-2005 வணக்கம் குருவி.... என்னதான் கவித எழுதி என்னை சமாதனப்படுத்தி கொண்டாலும். சில நேரங்களில் இப்படியும் எழுத வேண்டியிருகிறது. - kpriyan - 10-28-2005 குருவி.... நீங்கள் கூருவது சரிதான் .சிலர் அப்பா அம்மாவுக்காகப் பிரிவதாகச் சொல்வர்..இன்னும் சிலர் என்னென்னவோ காரணங்களைச் சொல்வர்.. அவர்கள் கதலிக்கும் தொடங்கும் முன்பே அவர்களுக்கு அம்மா அப்பா இருப்பது தெரியாதா ? - tamilini - 10-28-2005 காதல் கவிதை சோகமாய் எழுதிறதில ஒரு சுகம் இருக்கு என்றாங்களே உண்மையா?? :wink: - Mathan - 10-28-2005 சோகத்தில் சுகம் உண்டு என்று தான் சொல்லுறாங்க, ஆனா அது ரணத்தில் கிளறி அனுவிக்கும் சுகம் போல் இல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->காதலித்தவர்கள் இணைவதை சில சமயங்களில் அவர்களை மீறிய சக்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எல்லாம் தோற்கடித்து காதலர்களால் இணைய முடியும் என்றாலும் அப்படி தோற்கடிக்கும் போது வரகூடிய இழப்புகளுக்காக சேராமல் தவிர்க்கின்றார்கள், - kuruvikal - 10-28-2005 Mathan Wrote:சோகத்தில் சுகம் உண்டு என்று தான் சொல்லுறாங்க, ஆனா அது ரணத்தில் கிளறி அனுவிக்கும் சுகம் போல் இல்லையா <!--emo& தவிர்க்கின்றனரா..அதை சந்தர்ப்பம் ஆக்குகின்றனரா..அல்லது உருவாக்கின்றனரா தங்களுக்காக அந்தச் சந்தர்ப்பத்தை..! ஏனெனில் எங்கள் நண்பன் ஒருவனை காதலித்தவர் வெளிநாடு போய் சிறிது காலத்தின் பின் அவரை மறந்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதற்காய் அப்பா அம்மா விடவில்லை என்று சொல்லிவிட்டார்..! ஆனால் அவர் திருமணம் செய்ய இருந்தவர் யாரென்று கண்டுபிடித்து.. காதலித்தவர் விபரம் கேட்டபோதே உண்மை வெளியானது..! வசதிக்காக செய்கிறார்கள் என்பது..! இது உண்மைச் சம்பவம்..! இவைதானா எல்லைக்கு மீறிய அந்த சக்திகள்..! ஒன்றே ஒன்றுதான் எல்லை மீறிய சக்தி மரணம்..அதைத்தவிர வேறு எதுவும் காதலர்களைப் பிரிக்க முடியும் என்றால்..அங்கு உண்மைத் தன்மை இல்லை...என்பதே பொருள்...! அத்தோடு சுயநலமே காதலின் மொத்த எதிரி...! :wink:
- Selvamuthu - 10-28-2005 குருவிகளின் கூற்றில் உண்மை இருக்கின்றது. பொழுதுபோக்குக்காகக் காதலித்தவர்கள் பணம், பொருள், வசதிகளைக் கண்டதும் பிரிந்ததைக் கண்டேன். உயிருக்கு மேலாகக் காதலித்தவர்கள் ஒன்றுசேர முடியாதபோது தம் உயிர்களை அர்ப்பணித்தததையும் கண்டேன், தனிமரமாக வாழ்வதையும் காண்கிறேன். காதலித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற பலரின் காதல்தான் கைகூடாமல் போயிருக்கின்றது என்பது என் கருத்து. இங்கே சந்தர்ப்பம், சுூழ்நிலைகளால் காதல் தோல்வியைத் தழுவலாம். ஆனால் உண்மைக் காதல் ஒருபோதும் தோற்காது. இதற்குரிய மனவலிமை எல்லோருக்கும் வருமா? - kpriyan - 10-29-2005 <b>"தவிர்க்கின்றனரா..அதை சந்தர்ப்பம் ஆக்குகின்றனரா..அல்லது உருவாக்கின்றனரா தங்களுக்காக அந்தச் சந்தர்ப்பத்தை..! "</b> காதலித்தார்கள்...... அவளின் தந்தைக்கு விடயம் தெரியவந்தது.உடனே அவர் அவளை அடித்து அவனன மறந்துவிடுமாறு சொன்னார். அவளோ தன்னால் அடியையும் வலியயும் தாங்க முடியும் என்று காட்டுவதற்காக,கத்தியை எடுத்து அவள் கையையே அழமாக் வெட்டிகொண்டாள்.தந்தையால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட,அந்த பொறுப்பை அவளின் தாய் ஏற்று,நீ அவனை மறக்காவிடில் உன்னையும் உன்ன் தங்கையயும் ஏதும் கிராமத்திற்கு கூட்டிச்சென்றுவிடுவேன்,உன் தங்கயின் படிப்பு கெட்டலும் எனக்கு பரவயில்ல.... என்று அவளை பயமுறுத்தினார்.அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் அவனிடம் நடந்ததை கூற...... அவனோ உனக்காக உன்னை பிரிகிறேன் என்று கூறி பிரிந்தான்......... இதுவும் உண்மைக்கதை தான்......... என் கண்முன்னால் நடந்தது...எல்லொருடய கதலும் இப்படித்தான் என்று நான் சொல்லவரவில்லை.யாரோ செய்யும் தவறிற்காக எல்லோரும் சுயனலதிற்காகவே தான் பிரிகிறார்கள் என்று சொல்லாமல் தவிர்ப்போமே!!!!!!!!!!!!!!!! - Rasikai - 10-31-2005 kpriyan Wrote:குருவி.... அநேகமான காதலர்களுக்கு காதலிக்கும் போது தெரிவதில்லை. கலியாணம் கட்ட போகும் போதுதான் தெரிகின்றது. :evil: - ப்ரியசகி - 11-01-2005 சோகக்கவி அழகு ப்ரியன்.. Quote:தவிர்க்கின்றனரா..அதை சந்தர்ப்பம் ஆக்குகின்றனரா..அல்லது உருவாக்கின்றனரா தங்களுக்காக அந்தச் சந்தர்ப்பத்தை..! ஏனெனில் எங்கள் நண்பன் ஒருவனை காதலித்தவர் வெளிநாடு போய் சிறிது காலத்தின் பின் அவரை மறந்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதற்காய் அப்பா அம்மா விடவில்லை என்று சொல்லிவிட்டார்..! ம்ம் இது சிலர் செய்வது :twisted: . ஆனால் நிறையக்காதலர்கள்...காதலித்து விட்டு பின்னால் வரும் எதிர்ப்புகள் தாங்க முடியாமல் தடுமாடுகிறார்கள்..அதுவும் ஒரு பெண்ணாக..உணர்வுகளையும் பார்த்து...குடும்பத்தையும் பார்த்து..வாழ்வது என்னவோ ரொம்ப கஷ்டம். ஆணகளுக்கும் தான். - kpriyan - 11-02-2005 <b>"ஆனால் நிறையக்காதலர்கள்...காதலித்து விட்டு பின்னால் வரும் எதிர்ப்புகள் தாங்க முடியாமல் தடுமாடுகிறார்கள்..அதுவும் ஒரு பெண்ணாக..உணர்வுகளையும் பார்த்து...குடும்பத்தையும் பார்த்து..வாழ்வது என்னவோ ரொம்ப கஷ்டம். ஆணகளுக்கும் தான்."</b> உண்மைதான், அழகிய குடும்பமா அல்லது அன்புக்காதலா என்று வருகையில்....... ஒன்றும் செய்ய முடியும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Nitharsan - 11-02-2005 Quote:என்ன கவிப்பிரியன் முன்னதில் இருந்து கருத்தால் முரண்படுகிறீர்கள்..இப்போ விதியை சாட்சிக்கு இழுக்கிறீர்கள்..! பிரிவுக்கான காரணங்களை கண்டறிய வலியுறுத்துக்கள்..! சிலர் அப்பா அம்மாவுக்காகப் பிரிவதாகச் சொல்வர்..இன்னும் சிலர் என்னென்னவோ காரணங்களைச் சொல்வர்.. காதலித்த பின் பிரிவு என்பதற்கு இடமில்லை...! பிரிகிறார்கள் என்றால் பொய்யாக நடந்திருக்கிறார்கள் என்பது பொருள்..இல்லை.. காதலை கேலியாக்குகிறார்கள் என்று பொருள்..! காதல் பிரிவுகள் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவை என்பதால் அனைவரும் விதி மீதே பழியைப் போடுவார்கள். காதலர்கள் எவரும் பிரிவை விரும்புவதில்லை. ஆனால் சில நேரம் ஏன் பிரிகின்றோம்எ ன்று தெரியாமல் பிரிவு வரம் அதனால் அந்த காதல் போலியேன்றே உண்மையற்றதென்றோ சொல்லி விட முடியாது. காதலனுக்காக காதலை விட்டுக் கொடுக்கும் காதலியும் அவளுக்காக தனது காதலை விட்டுக் கொடுக்கும் குணமுடைய காதலர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் பிரிவக்கு யார் காரணம்? இவர்கள் பிரிவால் அவர்களே வெற்றியடைவரர்கள். காதலர்கள் பிரிவார்கள்..காதல் பிரிவதில்லை..அதே போல தான் காதலர்கள் தோற்பதண்டு..காதல் எப்போதும் எதற்காகவும் தோற்காது..... - இவோன் - 11-02-2005 Quote:காதலர்கள் தோற்பதண்டு..காதல் எப்போதும் எதற்காகவும் தோற்காது..... புதுசா ஏதாச்சும் சொல்லமாட்டீங்களா.. ப்ளீஸ்் கேட்டு கேட்டு புளித்து விட்டது.. - kuruvikal - 11-02-2005 புதிசாக் கேட்கிறாங்கப்பா..கொடுத்திட்டாப் போச்சு... தமிழை அரபில பாத்திருக்கிறேளோ..இருக்காது... இது புதிசு..புரட்சி... .....தோற்காது எதற்காகவும் எப்போதும் காதல்..தோற்பதண்டு காதலர்கள்... இதுதான் புதிசு.! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - inthirajith - 11-02-2005 காதலியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று மனதை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு நடைப்பிணமாக தான் நானும் வாழ்கிறென் மனதால் பிரியமுடியவில்லை மனதை மதிக்காதவர்களை காதலிப்பதும் தற்கொலைக்கு சமன் தான் தனியாகவே வாழ்கிறேன் நண்பர்களே உண்மையாக காதலிப்பவர்கள் யார் சொல்லுங்கள் ? - இவோன் - 11-02-2005 Quote:தோற்காது எதற்காகவும் எப்போதும் காதல்..தோற்பதண்டு காதலர்கள்...தோற்காது! எதற்காகவும் எப்போதும் காதல்.. தோற்பதண்டு காதலர்கள்... நல்ல கவிதை! வாழ்த்துக்கள். எண்டு தனிய சொல்ல முடியாத சூழ்நிலையில இந்தக் கவிதை பல அர்த்தங்களை தொட்டும் முட்டியும் செல்கிறது. ஒரு சின்னத் தீப்பொறியாய் பட்ட விடயத்தை பெரு நெருப்பாய் வார்த்தைகளில் பரவ விட்டிருக்கும் உங்களது கவித்திறமையை மெச்சுகிறோம்.. தவிரவும்.... உங்களது ஓசையும் சந்தமும் தேமாவும் புளிமாவும் கறுத்தக் கொழும்பானும் இணைந்த கவிதைகளில் இருந்து நீங்கள் தமிழ்க் கவியில் பயிற்சியும் முயற்சியும் உள்ளவர் என்று தெளிவாகிறது. (.... களைச்சிட்டுது.. வலைஞன் போதுமா..? - kpriyan - 11-02-2005 "காதலியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று மனதை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு நடைப்பிணமாக தான் நானும் வாழ்கிறென் மனதால் பிரியமுடியவில்லை மனதை மதிக்காதவர்களை காதலிப்பதும் தற்கொலைக்கு சமன் தான் தனியாகவே வாழ்கிறேன் நண்பர்களே உண்மையாக காதலிப்பவர்கள் யார் சொல்லுங்கள் ?" பல உண்மைக்காதல்களுக்கு சந்தோசமான முடிவு இருக்காதாம்........என்காதலும் அப்படியே. சுயனலம் அல்ல காதல். ஒருவரின் நன்மைக்காக விட்டுக்கொடுப்பதே காதல்.என்ன சில வேளைகளில் உயிரக்கூட விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. :!: - Nitharsan - 11-03-2005 Quote:புதுசா ஏதாச்சும் சொல்லமாட்டீங்களா.. ப்ளீஸ்் கேட்டு கேட்டு புளித்து விட்டது..சீ....இது புளிக்காது குளிரூட்டிக்குள் வையுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இது பிராஸ்சா இருக்கும்... :wink:
|