![]() |
|
உங்கள் பயண அனுபவங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: உங்கள் பயண அனுபவங்கள் (/showthread.php?tid=2743) Pages:
1
2
|
உங்கள் பயண அனுபவங்கள் - sathiri - 10-27-2005 உங்கள் பயண அனுபவங்கள் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் பல நாடுகளிற்கும் விடுமுறை மற்றும் வேலை சம்பந்தமாக பயணித்திருப்பீர்கள் அப்போது உங்களிற்கு மறக்க முடியாத நகைச்சுவையான நிகழ்ச்சியோ அல்லது பயங்கர அனுபவங்களோ நேர்ந்திருக்கலாம் அதனை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொண்:டால் இனி பயணம் செல்பவர்களிற்கு ஒரு ஆலோசனையாகவும் இருக்கும் அது தாகய பயணமாக இருந்தாலும் சரி எழுதுங்கள் .முடிந்தால் படங்களையும் இணையுங்கள் எனது நகைசுவையானதும் அதேவேளை துன்பமானதுமான ஒரு அனுபவம் நான் பலநாடுகளிற்கும் பல தேவைகளிற்காக பயணித்தது உண்டு குறிப்பாக ஆசிய நாடுகள் அனைத்திற்கும் பெரும்பாலும் போயுள்ளேன் 92ம் ஆண்டு இறுதியில் நானும் எனது நண்பனொருவனும் தாய்லாந்தில் செங் மாய் போனோம் எமது பயண திட்டபடி அங்கிருந்து தொடர் வண்டியில்(றெயின்) கச்சாய்(இது தாய்லாந்து மலேசியா எல்லை நகரம் )ஊடாக நாம் மலேசியா கொலாலம்புர் போய். நான் பிராங் போட்(யெர்மனி) திரும்புவது நண்பன் தொடர்ந்து சிங்கபுர் போவது இதன் திட்டபடி நாம் பயணித்தோம். நான் எப்:பொழுதும் பயணம் செய்யும் போது தோழில் தூக்கும் பெயரிபையில். ஒரு தடித்த தோல் சப்பாத்து ஒரு சாதாரண சப்பாத்து ஒரு செருப்பு மற்றும் மருந்து வகைகள் என்பனவற்றுடன் மற்றும் முக்கிய ஆவணங்களான கடவு சீட்டு பயண சீட்டு எனபவற்றுடன் ஒரு நூறு டொலர் பணத்தையும் சேர்த்து வியர்வையில் நனைந்து விடாமல் நன்றாக பொலித்தீன் பையில் போட்டு எனது இடுப்பில் செருகி வைத்து கொள்வது வழக்கம். காரணம் நான் பயணம் செய்வதெனறால் விமான நிலையத்திலிருந்து நேராக நட்சத்திர விடுதிக்கு காரில் போய் படுத்து விட்டு சுத்தி பாத்திட்டு விமானம் ஏறுவதில்லை. ஒரு இடத்தில் இறங்கி பேருந்து தொடருங்து அவ்வுர் வாகனங்களில் பயணித்து சிறியஊர்களில் உள்ள வசதியில்லாத விடுதிகள் புகையிரத நிலையங்களிலெல்லாம் படுத்தெழும்பி தான் வருவதுண்டு அதனால் முடிச்சு மாறிகளின்(திருடர்) தொல்லைகளும் உண்டு. எனவேதான் முக்கிய ஆவணங்களோடை 100டொலரும் இடுப்பிலை வைச்சிருக்கிறனான் . ஏணெண்டா நான் போகிற சில ஊர்களிலை கடன் அட்டை (கிரெடிட் காட்) எண்டாலே என்ணெண்டு தெரியாது அதாலை அவசரத்திற்கு உதவும். அந்தமுறை தாய்லாந்து எல்லை நகரமான் கச்சாய் என்கிற இடத்தில் நண்பனும் நானும் அன்று மாலை ஒரு வீதியோரத்து கடையில் மீன் சூப் ஒன்று சாப்பிட்டு விட்ட வண்டியேறினோம் மறு நாள் இரவு எனக்கு மலேசியா கொலாலம்புரிலிருந்து விமானமேற வேண்டும். சாப்பிட் மீன் சூப் எனக்கு ஒத்து வரவில்லை வயிற்றை கலக்க தொடங்கியது எனது கஸ்ர காலத்திற்கு கைவசம் வயிற்று போக்கை நிப்பாட்டும் மருந்தும் இருக்கவில்லை தொடர் வண்டியில் கழிவறைக்கு போய் களைத்து விட்டேன் மறு நாள் கோலாலம் புர் வரும்வரை கொக்கா கோலாவை குடிப்பதும் கழிவறை பொவதுமாக களைத்து விட்டேன். மறுநாள் கோலம்புர் வந்ததும் நான் இறங்கி கொள்ள நண்பன் தொடர்ந்து சிங்கபுர் போவதற்காக யோகுர் பாறு போகிற தொடர் வண்டியில் போய் விட்டான். எனக்கு பசி வயிற்றை பிடிங்கியது அங்கிருந்த ஒரு உணவு விடுதியில் போய் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து விமான நிலையம் போக புறப்பட்ட போது மீண்டும் வயிற்றை கலக்கியது உடனே அவசரத்தில் எனது தோள் பையை களற்றி ஒரு கதிரையில் வைத்து விட்டு கழிவறைக்குள் பாய்ந்தேன். விமானத்திற்கு நிறைய நேரமிருந்த படியால் விமான நிலையம் போய் அங்கு ஆறுதலாக குளித்து உடை மாற்றி போகலாம் என எண்ணி; கொண்டு வெளியே வந்து பார்த்தால் எனது பையை காணவில்லை.அது மிகவும் அழுக்டைந்திருந்த படியால் யார் அதை சுட போகிறார்கள் என்கிற எண்ணத்தில்தான் அந்த பாரத்தை என்னத்திற்கு கழிவறைக்குள்ளையும் சுமந்து கொண்டு போவான் எண்டு வெளியிலை கதிரையிலை வைத்து விட்டு போனனான். யாரோ பாத்து வைத்து சுட்டிட்டாங்கள்.அப்பதான் நினைவு வந்தது எனது பண பையும் அந்த பையிக்கை தான் இருந்தது பணம் அதிகமில்லை ஆனால் வங்கி அட்டை அதற்குள் தான் இருந்தது. பிறகென்ன அப்பிடியே விமான நிலையம் போய் எனது அதியுயர் பாது காப்பிலிருந்த டொலரை மாத்தி பிரான்சிற்கு நண்பனுக்கு தொலை பேசியடிச்சு நிலைமையை விளங்க படுத்தி வங்கி இலக்கம் எடுத்து வங்கிக்கும் தொலைபேசி அடிச்சு மட்டை தொலைஞ்சு போட்டு தெண்டு சொல்லிட்டு. உடம்பு ஒரே வியர்வை மாத்த உடுப்பில்லாட்டியும் நாத்தம் போக குளிச்சிட்டு அதே ஊத்தை உடுப்பு காலிலை செருப்புதான் போட்டிருந்தனான். சப்பாத்து ஒண்டு வாங்குவமெண்டு பாத்தால் சப்பாத்து வாங்கினால் விமான நிலைய வரி கட்ட பணம் காணாது எனவெ அப்பிடியே விமான நேரத்திற்கு போய் எனது மலேசியன் விமான நுழைவு வாசலிலை என்ரை கடவு சீட்டையும் பயண சீட்டையும் குடுத்தன் அதிலை இருந்த பெண் என்னை மேலையும் கீழையும் பாத்து கேட்டா எங்கை பொறீர் எண்டு. நான் சொன்னன் ரிக்கற்ரை பாருங்கோ பிராங் போட் எண்டன்.பொதி ஏதும் இல்லை யா? எண்டா நான் இல்லை யெண்ட ஒரு நிமிடம் எண்டிட்டு பெரியவரை( எயார்லைன்ஸ் மனேச்சர்) கூப்பிட்டா எனக்கு விழங்கிட்டுது இப்பிடி ஊத்தையா கையிலை ஒரு பொதியுமில்லாமல் காலிலை செருப்போடை யெர்மன் போறனெண்டா யார்தான் நம்பு வினம். பெரியவர் வந்து என்னை தனியா அழைத்து போய் கடவு சீட்டையும் போட்டு புரட்டி புரட்டி பாத்திட்டு என்னை விசாரித்தார் நானும் அவருக்கு நடந்ததை விழக்கமா சொன்னன் ஆனாலும் அவர் நம்பவில்லை உமக்கு பிரெஞ்சு கடவு சீட்டு ஏன் யெர்மன் போறீர் எண்டு கேட்டார் நான் சொன்னன் அங்கை என்ரை உறவினர் இருக்கினம் அஅங்கை போறது என்ரை விருப்பம் எண்ணட. கடைசியாக எனக்கு பிரெஞ்சு மொழி தெரியுமா எண்று பார்க்க பிரெஞ்சு விமான பணிப்பெண் ஒருவரை கூட்டி வந்தனர் அவர் வந்து என்னுடன் கதைத்து எனது இடம் லெறு சில விடயங்கள் கதைத்து பார்த்தபின்னர் ஏரளவு நம்பிக்கை வந்து எனது கடவு சீட்டை நான் பயணித்த விமான பணி பெண்ணிடம் கொடுத்து அதனை நான் இறங்கும் போது பெற்று கொள்ள சொல்லி வழியனுப்பி வைத்தனர். மெல்லிய சேட்டோடையும் காலிலை செருப்போடையும் கார்த்திகை மாதம் பிராங் போட்டிலை இறங்கினா எப்பிடியிருக்கம் எண்டு நினைச்சு பாருங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-27-2005 சாத்திரி உங்கள் பயண அனுபவங்களை பகிரிந்து கொண்டமைக்கு நன்றி ம்ம்ம் நல்லாத்தான் கஷ்டப்பட்டுடீங்கள் போல. ஒகே நான் எனது அனுபவத்தை பேந்து சொல்கிறேன் - narathar - 10-27-2005 ம் ரசிகை ஏன் இப்ப சொன்னா என்ன? நேரம் இல்லயா? சாத்திரி நல்ல அனுபவம் நல்ல காலம் கொண்டே சிறயில போடேல்ல. நல்ல காலம் மலேசியாவில பையத் தொலைத்தீர் தாய்லாந்தில எண்டா கட்டாயம் கம்பி எண்ணியிருப்பீர். மலேசியாவில லன்காவி என்டொரு தீவிருக்கு, அதுக்கு என்னண்டு லன்காவி எண்டு பேர் வந்தது எண்டு தெரியேல்ல.அதுக்கு படகில போக வேணும்,போற கடல் சில படங்களில வாற மாதிரி இருக்கும்.கடலுக்கு நடுவில கனக்க குட்டி குட்டி தீவுகள் ,குன்றுகள் இருக்கும். நீலக் கடல் வெள்ளை மணற் திட்டுக்கள் ,இடை இடயே பச்சை மரங்களுடன் சிறிய தீவுக் கூட்டம். நானும் நண்பரும் லன்காவியில ஒரு கார வாடைகக்கு எடுத்து முழுத் தீவையும் சுத்தினம். நடுவில காடு,காட்டில நீர்வீழ்ச்சி,ஆசை தீரக் குழிச்சம்.திறந்த யாரு மற்ற காட்டில குழிக்கிறதே ஒரு அலாதியான அனுபவம் .அதுவும் ஒருத் தரையும் தெரியாத ஆள் அரவம் இல்லாத இடத்தில.பிறகு காருக்கயே படுத்துப் போட்டு,அடுத்த நாள் படுகு ஏறினம்.இப்ப நினச்சாலும் என்னண்டு இப்படி ஒரு பிரயாணத்தை துணிவாச் செய்தம் எண்டு ஆச்சரியமா இருக்கும்.அந்தக் காலத்தில தெரியேல்ல. - sOliyAn - 10-27-2005 அது எந்தக் காலம் நாரதர்?! - narathar - 10-27-2005 sOliyAn Wrote:அது எந்தக் காலம் நாரதர்?! அது ஒரு கனாக் காலம் சோழியன், இழங் கன்று பயம் அறியாக் காலத்தில. அது சரி உங்கட பயண அனுபவங்களையும் எழுதிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sankeeth - 10-27-2005 பின்னே நீங்கள் போன இடமெல்லாம் கலகம் செய்வீர்கள். உங்களையும் கலக்கம் செய்ய யாரும் வேணும்தானே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- அனிதா - 10-28-2005 ம்ம்..சாத்திரி அண்ணா..ரொம்ப கஸ்டப் பட்டுத்தான் பிராங் போட்டுக்கு வந்துருக்குறீங்க போல இருக்கு..உங்கள் பயண அனுபவங்களை பகிரிந்து கொண்டமைக்கு நன்றிகள்.. - ப்ரியசகி - 10-28-2005 நன்றி சாத்திரி அங்கிள் உங்கட பயண அனுபவங்களை பகிர்ந்தமைக்கு...... நாரதர்..நீங்கள் சொன்ன இடத்தைப்பற்றி நான் ஒரு புத்தகம் பார்த்தேன். அழகான இடம் என்று அப்போது நினைத்தென். என்னோட பாஸ் லீவுக்கு அங்கு போய் வந்தவர்..சோ, படங்கள் எல்லாம் ஒரு புத்தகமா அடிச்சு காட்டினார். ரொம்ப அழகிய இடம். ஏதோ நூறுக்கு மேல தீவுகள் இருப்பதாக சொன்னார். படங்களை பாத்தப்பொ நினைத்தேன்..போனால் இப்படி ஒரு இடம் போக வேண்டும் என்று..உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு..லக்கி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- narathar - 10-28-2005 உண்மை தான் ஆனா அந்த தீவ இப்ப பாலி மாதிரி ஆக்கிப் போட்டினம் போல, நான் போய் இருக்கேக்க அவ்வளவு உல்லாசப் பிரயாணிகள் இல்ல ,இப்ப எதாவது படம் சுட்டுப் போடுவம் எண்டு பாத்தா கனக்க சுற்றுலா அபிவிருத்தி எண்டு கனக்க கட்டுடங்கள் கட்டிப் போட்டினம் போல, ஆனா இயற்கை அழகு இன்னும் கெடாம இருக்கும் எண்டு நினைகிறன்.மேலும் தகவல்களுக்கு இந்த தளங்களைப் பாக்கலாம். <img src='http://img376.imageshack.us/img376/8437/dataibay9zc.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img363.imageshack.us/img363/4623/durianperinginfalls0qt.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img363.imageshack.us/img363/3458/langkawicave1ns.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img363.imageshack.us/img363/3926/langkawimangroves0df.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img363.imageshack.us/img363/5153/pelangibeach31mz.jpg' border='0' alt='user posted image'> http://www.langkawi.com.my/ http://travel.guardian.co.uk/countries/sto...,972275,00.html - SUNDHAL - 10-28-2005 சூப்பர் நாரதர் சாத்திரி இங்கிள்...ம்;ம்ம்ம்ம் எனக்கும் இப்பிடி எல்லாம் போகனும்னு ஆசைதான்..வசதி இஐந்தும் போக முடியல... ஒருக்கா லங்கன் எயார்லைன்ஸ்ல போய்ட்டு வந்தா பிறகு flight னாலே பயமா இருக்குப்பா... - Mathan - 10-28-2005 லங்காவி இப்போதும் அழகாக தான் இருக்கு நாரதர். அந்த கடலை பார்த்தாலே அப்படி ஒரு ஆசை வரும். என்னிடம் சில படங்கள் இருக்கோணும் தேடிப்பார்த்து போடுறேன், கண்டு பிடிக்க முடியலை என்றால் வழக்கம் போல சுட்டு போடுறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 10-28-2005 <img src='http://img458.imageshack.us/img458/5374/sheratonlangkawi3pn.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img458.imageshack.us/img458/7320/14kk.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img458.imageshack.us/img458/1074/12lz.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img458.imageshack.us/img458/5431/19sr.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img458.imageshack.us/img458/8931/12qj.jpg' border='0' alt='user posted image'> இந்த படங்களும் நீங்க சொல்லுற லங்காவி என்ற இடம் தானாம்.. நான் இன்னும் போய் பார்க்கயில்லை...சுட்ட படம் தான் இது. :wink: - sayanthan - 10-28-2005 சுண்டல்.. அப்பிடியே ஒருக்கா பிஜித்தீவுகள் பக்கம் போயிட்டு வாறது.. ஆகக்குறைந்தது.. ரஸ்மனியாவுக்கெண்டாலும்.. ரஸ்மனியாவுக்கு கப்பல்லை போக வேணும்.. அதுதான் சுப்பராயிருக்கும்.. -ரஸ்மனியா - ஒஸ்ரேலியாவின் தனித்தீவாக இருக்கின்ற ஒரு மாநிலம்.. boys படத்தில அலை அலை...காதல் சொன்ன கணமே பாட்டில வாற இடம் இதுவே.. - SUNDHAL - 10-28-2005 அப்பிடியே காரையும் போட்டிட்டு போகலாம்.. - RaMa - 10-28-2005 SUNDHAL Wrote:அப்பிடியே காரையும் போட்டிட்டு போகலாம்.. எங்கை கடலுக்குள்ளா? அனிதா படங்கள் அருமை... நன்றி இனைத்தமைக்கு - SUNDHAL - 10-29-2005 ஆஆஆ தலையில.. :evil: :evil: :evil: :twisted: - Mathan - 10-29-2005 படங்களுக்கு நன்றி அனிதா, சயந்தன் நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போயிருந்தால் அந்த இடத்தின் படங்களுடன் அதை பற்றி எழுதுங்களேன், - RaMa - 10-30-2005 என்னுடைய இந்த பயண அனுபவம் நகைச்சுவை அல்ல. நானும் மற்றும் எனது 3 உறவினார்களும் 2003ம் ஆண்டு இலங்கைக்கு சென்று இருந்தோம். நாங்கள் பாரிசில் இறங்கி மற்ற பிளைட் எடுக்க வேணும். ஆகவே நாங்கள் பாரிசில் மாறி இலங்கைக்கு காலை 7 மணிக்கு போனோம். எல்லா சேக்கிங் முடித்துக்கொண்டு லாக்கேச் எடுக்கும் பிரிவுக்கு சென்றோம். வழமை போல் 4 சூட்கேஸ் காணவில்லை. வந்தவற்றை எடுத்துக் கொண்டு அங்கு வேலை செய்பவர்களிடம் விசாரித்து கட்டார் எயர்லைன்ஸ் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு இருந்தவர் எல்லா விபரங்களும் எடுத்து விட்டு நாளைக்கு உங்கள் லக்கேச் வருகுது வந்து எடுங்கள் என்றார். அதைக் கேட்டு பலர் ஒக்கேய் என்று போய் விட்டார்கள். நாங்கள் போகவில்லை. என்ன பிரச்சனை என்று கேட்க அதற்கு நாம் எங்களிடம் ஒரு லக்கேச்சும் இல்லை. உடுப்பு மாத்தக் கூட மாற்று உடுப்பு இல்லை அத்தோடு இன்று நாம் யாழ்ப்பாணம் போய் ஆகவேண்டும். இரண்டாம் நாள் கழித்து ஒரு திருமண வீட்டிற்காகத் தான் வந்திருக்கின்றோம். ஆகவே எங்களால் கொழும்பில் நிற்க முடியாது. அத்துடன் எங்களுக'கு பொக்கற் மணி தரவேணும். அப்போ அந்த சிங்கள அலுவலர் நோ அப்படியெல்லாம் செய்ய முடியாது. அந்த ரூல்ஸ் எல்லாம் இங்கு இல்லை என்று வாதடினார். நாங்கள் இல்லை என்று வாதாடி கடைசியாக எங்களுக்கு ஒவ்வொரு லக்கேச்சுக்கும் 2000 ரூபா தந்து அடுத்த நாள் யாழ்ப்பாணத்திற்கு அவர்களுடை செலவில் அவர்களே லக்கேச் கொண்டு வந்து தந்தார்கள். கள உறவுகளுக்கு நான் சொல்ல விரும்புவது உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் ஏற்பாட்டால் அலுவலர்கள் சொல்வதை கேட்டு போகமால் அவர்களிடம் வாதாடி உங்களுக்கு உரியவற்றை வாங்கி செல்லுங்கள். எல்லா எயர்லைன்ஸ்க்கும் ஒரு கடமை உண்டு. லக்கேஸ் அவர்களின் தவறில் ஒரு இடத்தில் விடப்படும் என்றால் அவர்கள் அந்த பயணிக்கு அந்த லக்கேஸ் வரும் வரை பாவிக்க சோப்பிலிருந்து எல்லாமே கொடுக்கவேண்டும். பல நாடுகளில் அதற்காக ஒரு பொதி வைத்திருப்பார்கள். நீங்கள் அவற்றை எடுக்காவிடின் அந்த அலுவலர்கள் தான் உங்களின் பெயரை அதில் இட்டு எடுப்பார்கள். அன்று எம்முடன் வந்தவர்கள் பலர் அந்த ஒபிசரின் பேச்சைக் கேட்டு திருப்பினார்கள். அவர்க்குரிய அந்த பொக்கற் மணி எல்லாத்தையும் அந்த ஒபிசர் எடுத்திருக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்? - Rasikai - 10-31-2005 உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி றமா. - narathar - 10-31-2005 என்ன ரமா, உண்மை எல்லாம் இப்படி எழுதுறீங்க.இது இங்கே மேற்குலகில் நன்கு தெரியப்பட்ட ஒரு விடயம்.இங்கே இப்படியானவற்றிற்கு உடனயே நட்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டுவிடுவார்கள்.அங்கு பாவனையாளர் பாதுகாப்புச்சட்டங்கள் இருந்தும் பலருக்கு இவை தெரியாது.மற்றது யாரு மினக்கெட்டு வழக்குப் போடப் போகினம்.இங்கே இப்படியான வழக்குகளை முற்பணம் இன்றி வாதாடி பின்னர் கிடைக்கும் நட்ட ஈட்டுத் தொகையின் பகுதியை கொடுப்பனவாக வாங்கும் சட்டத்தரணிகள் உண்டு.இவ்வாறு அங்கில்லை என்று நினைகிறேன். ஆனால் விசயம் தெரிந்தவர்கள் மாதிரிக் கதைத்தால் அங்கும் இவ்வாறான நட்ட ஈடுகளைப் பெறலாம். |