Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம். என் பெயர் கவிஞர் காவடி. நான் ஒரு கவிஞர் . அதனால் என்னை கவிஞர் காவடி என்பார்கள். ஏனெனில் நான் ஒரு கவிஞர்.
சுமார் 100 க்கும் மேற்பட்ட கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன. எழுதுவது மட்டும் இன்பமில்லை அதை மற்றவர்கள் வாசித்து இன்புறுதலே ஒரு கவிஞனுக் அழகு என இவோன் அண்ணா சொன்னதனால் நானும் ஒரு உறுப்பினராக சேர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வணக்கம் சொல்ல வந்தேன் - தலை
வணங்கா மறத்தமிழர் சபையில்
சுணக்கம் ஏன் இன்னும்
வணக்கம்கூற வரவேற்க
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம் கூறி வந்தேன் - தலை
வணங்கா மறத்தமிழர் சபையில்
சுணக்கம் ஏன் இன்னும் - எனை
வணக்கம் கூறி வரவேற்க
தலைக்கனம் பிடித்த
தருக்கர் படையழிக்க
தளராது போராடும் -யாழ்த்
தளத்தில் நான் இணைந்தேன்.
வல்ல பல கவிகள் எழுதும்
வலைக் கவிஞன் ஞான்
வந்தேன் மனவுந்து கவிகள்தர
வந்தனம் கூற மாட்டீரா?
, ...
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
வணக்கம் கவிஞர் காவடி வாங்க
. .
.
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம ்நித்திலா..
அன்பு செத்திலா வரவேற்பு கண்டு அடைந்தேன்
ஒப்பிலா உவகை
, ...
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
கவிஞரே பெயருக்கேற்ற மாதிரி மாதிரி கவிதையிலேயே நன்றி சொல்லுறீங்க அப்ப தொடர்ந்து உங்கட கவிதைகளை எதிர்பார்க்கலாமா
. .
.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
வணக்கம் காவுதடி /காவடி......... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கவிதையால வணக்கம் சொல்லி வாறியள். உங்கள் கவிதைகளால் களத்தை நிறைத்துவிடுங்கள். உங்கள் தரமான பல கவிதைகளை? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இவோன் இணைத்திருந்தார், வாசித்து மகிழ்ந்தோம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
நிச்சயமாய் நீர் தரும் ஆதரவு கண்டு
எச்சமயம் ஆயினும் இடுவேன் கவிகளை- அச்சமயம்
படிப்பது மட்டும் போதாது - பிடித்திடின்
எடுப்பாய் இடுக இரு வார்த்தை
, ...
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
காவுதடி என்கிறார் காட்டான் சொல் கேட்டு
நோவுதடி நெஞ்சம் நொருங்கிறது.. -யாரேனும்
ஈவிரக்கம் காட்டீரோ இரு வார்த்தை கேளீரோ
பாவிருக்கும் வரையுமைப் பாடுவேன்..
, ...
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
காவடி Wrote:காவுதடி என்கிறார் காட்டான் சொல் கேட்டு
நோவுதடி நெஞ்சம் நொருங்கிறது.. -யாரேனும்
ஈவிரக்கம் காட்டீரோ இரு வார்த்தை கேளீரோ
பாவிருக்கும் வரையுமைப் பாடுவேன்..
ஆகா காவடி என்பது காவுதடி என்பதன் மருவிய வடிவம் கவிஞரே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சுணக்கமாகத்தான் வந்தீர்
எனி சுணங்காமல் வரும் உம் கவிகள்
சுருக்கென தைக்கும் கவிவரிகள் தந்து
காட்டுவீர் உம் கவிப்பெருமை
உமை வந்தனம் கூறி வரவேற்று
நானும் அடைகின்றேன் பெருமை
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
ம். வணக்கம்.
வருக காவடி.
தனியே ஒரு புளொக்கில் எழுதிக்கொண்ருந்தவர் காவடி. இணையத்தில் ஒரு நாய்கூட அவரின் கவிதைகளைத் தீண்டியதில்லை. (என்னைத்தவிர).
எண்டபடியால் உமக்குச் சரியான இடம் இதுதான் எண்டு அவரை யாழ்க்களத்துக்கு இழுத்துவந்தேன்.
சும்மா சொல்லக்கூடாது. ஆளுக்குச் செம வரவேற்புத்தான்.
சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறார். அவரெழுதினா ரெண்டு மூண்டு அதிசிறந்த கவிதைகளை "கவிஞர் காவடியின் கவிதைகள்" எண்ட பேரில ஒரு பதிவாப்போட்டன். சிலரின் வஞ்சகச் சூழ்ச்சியால் அது நகைச்சுவைப்பகுதிக்கு மாற்றப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
------------------------------------------
காவடி,
வெண்பா மாதிரி ஒரு பிளானிலையும் எழுதிற மாதிரிக்கிடக்கு. ஆனா சரியான இலக்கணத்தோட தளைதட்டாமல் எழுதினாத்தான் அது வெண்பா.
எண்டாலும் இப்படியெல்லாம் எழுதிப்போட்டு வெண்பா எண்டு நீங்களே சொல்லாதவரைக்கும் எனக்குச்சரி.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
இவோன் அண்ணா
அழகு பார்ப்பவரின் பார்வையை பொறுத்தது எண்ட மாதிரி கவிஞர் காவடி எழுதுறது வெண்பாவா புதுக்கவிதையா எண்டு ஆராயாமல் ( அந்தளவு இலக்கிய அறிவு கிடையாது எனக்கு) நல்லா இருந்தா பாராட்டுவம் (இல்லாட்டி என்ன செய்யேலும் கணனிக்கா கல்லெறிய முடியும்) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
வருக கவியே
தாருங்கள் உங்கள் கவிதைகளை
வாழ்த்துக்கள்
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
நித்திலா,
அழகு பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது. சரிதான்.
ஆனா சில இடங்களில் சும்மா ஒரு ரெம்பிளேட்டில் எழுதிவிட்டு நான் ஆசிரிப்பா எழுதியிருக்கிறன், நான் வெண்பா எழுதியிருக்கிறன் எண்டு பறைதட்டுறதைப்பாத்திருக்கிறன். அனா சும்மா ஒருவடிவத்தை வைச்சுக்கொண்டுதான் அவைஎழுதப்பட்டிருக்கும். நிறையப் பிழைகள் இருக்கும். யாப்பிலக்கணத்துள் அடங்காது. ஆனாலும் தாங்கள் எழுதியதை குறிப்பிட்ட பெயர்கால் அழைப்பார்கள்.
அதற்குத்தானே இருக்கிறது புதுக்கவிதை. இன்ன விதிகளுக்குட்பட்டுத்தான் எழுதவேணும் எண்டு யாப்பிருக்கிற வடிவங்களை அப்படியப்படித்தானே எழுதவேணும்? இல்லாவிட்டால் அந்தப்பெயரைப் பாவிக்கக்கூடாது.
நான் இங்கு காவடி அப்படித் தவறாக எழுதிவிட்டு யாப்பின்படி எழுதினதாகச் சொல்லவி;ல்லை.
அவரது கவிதையொன்று நேரிசை வெண்பா வடிவத்துக்குக் கிட்டவாக உள்ளது. அதே ரெம்பிளேட்டை (இதற்குத் தமிழ் என்ன?) உயயோகித்து அதை அவர் எழுதியுள்ளார். ஆனால் அதில் நிறையப் பிழைகளுண்டு. ஆனால் காவடி இன்னொரு நேரத்தில் இது வெண்பா எண்டு சொல்லக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் சொன்னேன். இப்படிச் சொன்ன நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன்.
-------------------------------------------------
முன்பு ஈழநாதத்தில் புதுவை இரத்தினதுரை, "கோணேசக் கவிராயர்" என்ற பெயரில் சிலகாலம் கவிதை எழுதினார்.
நாலடிதான் வரும். அதை நேரிசை வெண்பா என்று வெளியிட்டார்கள். ஆனால் அதில் தளைதட்டியது. ஆனால் புதுவையண்ணாவுக்கு மரபில் எழுதத்தெரியும். அந்தாளே சொல்லாதபோது இவர்கள் நேரிசைவெண்பா என்ற பெயரில் அதை வெளியிட்டார்கள். சுட்டிக்காட்டியபின் நிறுத்;தினார்கள். அப்படித்தான் பாடசாலைகளில் கல்லூரிகளில் எல்லாம் சகட்டுமேனிக்கு வெண்பா எழுதுவார்கள். நளவெண்பாவைப் படித்துவிட்டு அதே ஓசையோடு எழுதிவிட்டு வெண்பா என்பார்கள். அந்தக்கொடுமை இங்கு நடக்கக்கூடாதென்பதே என் அவா. வேறொன்றுமில்லை.